World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா The sudden end of the New York transit strike: A preliminary assessmentநியூயோர்க் போக்குவரத்து வேலைநிறுத்தம் திடீரென முடிவு: ஒரு ஆரம்ப மதிப்பீடு By the World Socialist Web Site Editorial Board நியூயோர்க் நகரத்தின் பாரிய போக்குவரத்து பிரிவில் நிகழ்ந்த மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் திடீரென முடிவுற்றமை உலக முதலாளித்துவத்தின் இதயத்தானமாகிய அமெரிக்காவில் எழுச்சியுற்று வரும் பாரிய வர்க்க பதட்டங்களையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தலைமை, முன்னோக்கு தொடர்பான ஆழ்ந்த நெருக்கடி இரண்டையும் அடிக்கோடிட்டுக்காட்டியுள்ளது. நியூயோர்க் நகர போக்குவரத்து தொழிலாளர்கள் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவிற்கு ஆளாகியிருக்கின்றனர் என்ற உண்மையை மறுப்பதற்கான எவ்வித காரணங்களுமில்லை. நகரத்தின் பொருளாதாரத்தில் வேலைநிறுத்தம் ஒவ்வொரு மணி நேரமும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தபோதிலும் கூட, எந்த இலக்குகளும் அடையப்படாமல் போக்குவரத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் லோக்கல் 100இன் (Transport Workers Union Local 100) டொசய்ன்ட் தலைமையிடம், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குச் செல்லுமாறு பணித்துள்ளது. டெய்லர் சட்டத்தின் கீழ் சுமத்தியிருந்த அபராத தொகைகளும் தள்ளுபடி செய்யப்பனவில்லை. நகரத்தின் 34,000 பஸ் மற்றும் சுரங்கப் போக்குவரத்து தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் லோக்கல் 100, அரசு மூலமாக மாநகர போக்குவரத்து ஆணையத்துடன் (MTA) மத்தியஸ்தம் செய்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடரவேண்டும் என்று உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவற்றின் உறுப்பினர்கள் தனது வேலைநிறுத்தத்தை கைவிட்டு நியூயோர்க் முழுவதும் பஸ் நிலையம் மற்றும் இரயில் துறைகளிலிருந்து உடனடியாக வேலைக்கு திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டது. புதிய ஊழியர்களின் ஓய்வூதிய உரிமைகளை தாக்கும் நிர்வாகத்தின் கோரிக்கை----வேலைநிறுத்தம் தூண்டிவிட்ட அந்த மையப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் காணப்படாமலேயே தொழிலாளர்கள் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வேலைக்கு மீண்டும் திரும்புகின்றனர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொதுமன்னிப்பு கிடையாது. இவர்கள் வேலையில் இருந்து வெளிநடப்பு செய்ததற்கு அபராத கட்டணம் செலுத்த வேண்டும். சுருங்கக் கூறின் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. ஒரு நியூயோர்க்கின் மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி ப்ரூக்லின் நீதிமன்ற அவை கூட்ட வழக்கில் தொழிற்சங்க அதிகாரிகள் கைதுபற்றியும் தனிப்பட்ட வேலைநிறுத்தக்காரர்கள் மீது பாரியளவு அபராதம் விதிப்பதற்காக செயல்பாடுகளை மேற்கொண்டதை அடுத்து காலை 11 மணி அளவில் உடன்பாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. இந்த அபராதங்கள் நாள் ஒன்றுக்கு 25,000 டாலர் முதல் நாளும் அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் இரட்டிப்பாக தொடரும் என்றும் உத்தரவாயிற்று. போக்குவரத்து தொழிலாளர்களை முறியடித்து அவர்கள் வீடிழக்கும் வகையிலும் அவர்களை வறுமையில் தள்ளும் வகையிலும் இப்படிப்பட்ட பாரிய தொகைகள் நகர நிர்வாகத்தால் கோரப்பட்டது. மாநில உச்சநீதிமன்ற நீதிபதி தியோடோர் ஜோன்ஸ் வழக்கை ஜனவரி 20ம் தேதி வரை ஒத்திவைத்தார் பேச்சுவார்த்தைகளில் குறுக்கிடும் வகையில் சட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டாம் என்று அவர் அறிவித்தார். குடியரசுக்கட்சி கவர்னர் ஜோர்ஜ் படாகி ஒரு செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி மாநிலத்தில் தொழிலாளர் விரோத டைலர் சட்டத்தின்படி, பொதுத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்று கூறியிருப்பதற்கேற்ப, அது அமலாக்கப்படும் என்று அறிவித்தார். இச்சட்டத்தின்படி ஒவ்வொரு வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளியும், ஒவ்வொரு வேலைநிறுத்த நாளுக்கும் இரண்டு நாட்கள் ஊதியத்தை கொடுக்க வேண்டும் அதாவது ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிட்டத்தட்ட 2,000 டாலர் இழப்பு ஏற்படும் அதைத்தவிர வேலையின்றி மறியலில் ஈடுபடும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,000 டாலர் கொடுக்க வேண்டும். "இதிலிருந்து ஒரு படிப்பினை கற்றறியவேண்டும். எவரும் சட்டத்தைவிட உயர்ந்தவர் அல்லர். நீங்கள் சட்டத்தை மீறினால், விளைவுகள் உண்மையாக விளையும். இதை விட்டுக்கொடுப்பதற்கில்லை." என்று படாகி கூறினார். தொழிலாளர்கள் மீது கடுமையாக இருப்பதாக படாகி காட்டிக் கொள்ளுவது, 2008 ஜனாதிபதிக்கான குடியரசுக்கட்சி வேட்பாளர் நியமனத்தில் நியமனத்திற்கான அவருடைய முயற்சிக்கான பாகமாகும். இதுதான் வேலைநிறுத்தால் உருவாக்கிய பிரச்சனையை மோசமாக்கிய அரசியல் காரணி ஆகும். இவருக்குப் பின் நியூயோர்க் கவர்னர் பதவிக்கு விழையும் இரண்டு முன்னணி குடியரசுக் கட்சி வேட்பாளர்களும் தாங்களும் இத்தகைய முறையில் வேலைநிறுத்தத்தில் இருந்த தொழிலாளர்களை வேலையை வீட்டு நீக்கி, அவர்களுக்கு பதிலாக மாற்றுத் தொழிலாளர்களை நியமித்திருப்போம் என்று அறிக்கை விட்டனர். ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளரும் மாநில தலமை வக்கீலுமான எல்லியட் ஸ்பிட்சர் அத்தகைய கோரிக்கையை விடாததற்காக அவரைக் கண்டிக்கவும் செய்தனர். இந்த தாக்குதலுக்கு விடையிறுக்கும் வகையில் ஸ்பிட்சரின் செய்தித் தொடர்பாளர் தலைமை வக்கீலிடம் ''நாங்கள் தொடர்ந்து கூடுதலான அபராதங்கள் கோருகிறோம் மற்றும் அதை அடைவதற்கு சில கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று குறிப்பிட்டார். எங்கள் நடவடிக்கைளே அவற்றைப் பற்றிக் கூறும்" என்று கூறினார். இந்த அபராதத் தொகைகளில் நாளொன்றுக்கு 1 மில்லியன் டாலர் அபராதம் TWU லோக்கல் 100 மீது விதிக்கப்பட்டுள்ளதும் அடங்கும். ஆளுனர், நகரசபை தலைவர் மற்றும் நியூயோர்க் நகர நிதி மற்றும் பெருவணிக செல்வந்த தட்டின் சக்திவாய்ந்த பிரிவுகளின் ஆதரவைக் கொண்டுள்ள MTA வேண்டுமேன்றே வேலைநிறுத்தத்தை தூண்டியதற்கான எல்லா குறிப்புக்கள் உள்ளன. இதன் நோக்கம் தொழிற்சங்கங்களை முறியடித்தமை மற்றும் ஓய்வூதிய சலுகைகளை திருப்பி சுருட்டுவதற்காக பயன்படுத்திய பின்னர் பொதுத்துறையிலும் தனியார்துறையிலும் மொத்த ஓய்வூதிய நலன்கள் அனைத்தையுமே பரந்த அளவில் திருப்பி சுருட்டுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதாகும். இதன் விளைவாகத்தான் வேலைநிறுத்தம் ஏற்பட்டு நகரத்தில் பொருளாதார செயற்பாடுகள் பலவும் முடக்கத்தைக் கண்டன. மேயர் மைக்கல் ப்ளூம்பேர்க்கின் சொந்த மதிப்பீடுகளின்படி 1 பில்லியன் டாலருக்கும் மேலான இழப்புக்கள் ஏற்பட்டன. வேலைநிறுத்தமே நகரத்தின் போக்குவரத்து தொழிலாளர்களிடம் எழுச்சியுற்று இருந்த ஆழ்ந்த சீற்றம் மற்றும் போர்குணத்தின் வெளிப்பாடாகும். இருபத்தி ஐந்து ஆண்டுகளில் இப்பொழுதுதான் அவர்கள் முதன்முதலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் போக்கில் இந்தச் சீற்றம் பரந்தளவில் நகரம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த உணர்வுகளைத்தான் வெளிப்படுத்தியுள்ளது. இது, உலகின் மிகப் பெரியளவில் குவிந்துள்ள பில்லியனர்களையும், பலமடங்கு மில்லியனர்களையும் கொண்டிருக்கிறது என தற்புகழ்ச்சியை கொண்டுள்ளது. இங்குத்தான் கணக்கிலடங்காத குறைவூதிய தொழிலாளர்கள் உள்ளனர் அவர்களில் பலர் உலகின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வந்துள்ள குடிப்பெயர்ந்தவர்களும் உள்ளனர். அனைத்து பெரிய போராட்டங்களை போலவே போக்குவரத்து வேலைநிறுத்தமும் இப்பொழுதுள்ள சமூக உறவுகளை தெளிவுபடுத்த உதவியது. ஒரு வாக்கிற்கு 100 டாலர் என்று விலை கொடுத்து தேர்தலில் வாங்கிய ஒரு பில்லியனர் மேயர் பகிரங்கமாக தொழிலாளர்களை "பேராசை பிடித்தவர்கள்" "குண்டர்கள்" என்று கண்டிக்கிறார். செய்தி ஊடகமும் சேர்ந்து ஒத்திசைக்கிறது வேலைநிறுத்தக்காரர்களை இழிவாகப் பேசுவதுடன் அவர்களுடைய தலைவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கோருகிறது. ஊடகத்தில் பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்த அதே தினத்தன்று, Wall Street Journal, நியூயோர்க் நகரத்தை தளமாகக் கொண்டுள்ள பல மில்லியனர் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEOs) அவர்களுடைய நிறுவனங்கள் செலுத்துமதிகளை செலுத்தாததுபோல் அவர்களும் வரிகளை கூடச் செலுத்தவில்லை என்று தெளிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. Wall Street Journalலிடம் ஒரு முக்கிய நிதி ஆலோசகர் கூறினார் "இந்த நடவடிக்கை தவிர்க்கமுடியாத வாழ்வின் அனுபவங்களில் இருந்து வரியை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சமூக உயர் தட்டில் இருப்பவர்களை அப்படியை இறக்கவிடுவதுதான்'' என்று கூறினார். போர்குணம் அவர்களிடம் இருந்தபோதிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர். மக்களுடைய ஆதரவு கிடைக்காமற் போனதால் இந்நிலை என்று இல்லை. செய்தி ஊடகம் தொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான தாக்குதலை நடத்தியிருந்தபோதிலும் பல கருத்துக் கணிப்புக்கள் ஏற்கனவே MTA தான் வெளிநடப்பை தூண்டிவிட்டது என்று பெரும்பாலான மக்கள் கூறியதாகக் காட்டியுள்ளன. அவர்கள் தொழிலாளர்களிடம் அனுதாபம் கொண்டிருந்தனர். இதற்கு மாறாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் விலைபோகும் தன்மையால்தான் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். TWA உம் அதன் சர்வேதச தலைவரும் வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்று முத்திரை இட்டதுடன், அனுமதியளிக்கத்தக்கது அல்ல என்று கூறி மற்றும் நியூயோர்க் நகரம், மற்றும் நாடுரீதியாகவும் தொழிலாளர் இயக்கம் என்று அழைக்கப்படும் அனைத்தையும் வேலைநிறுத்தத்தை உடைக்குமாறு கூறினர். நியூயோர்க் நகரத்தில் உள்ள அதிகாரபூர்வ தொழிலாளர் தலைமையிடத்தால் தொழிலாள வர்க்கம் முழுவதையும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக அணிதிரட்ட முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை ஊடகம் வெளியிட்ட கொடூரமான பொய்களை எதிர்க்கவும் முயற்சி செய்யப்படவில்லை. காட்டுமிராண்டித்தனமான மாநில அரசதாக்குதல்களை எதிர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த வேலைநிறுத்தம் நடவடிக்கை ஒருபுறம் இருக்க, இந்த வேலைநிறுத்தத்தை பாதுகாத்து வேறு எந்தத் தொழிற்சங்கமும் ஒரு துண்டுப் பிரசுரம் அல்லது ஆர்ப்பாட்டங்கள்கூட வெளியிடவில்லை. தன்னுடைய பங்கிற்கு தேசிய AFL-CIO ஒரு கல் போல் மெளனம் சாதித்தது. ஆளும் செல்வந்த தட்டைப்போலவே, சலுகைமிக்க தொழிற்சங்க அதிகாரத்துவம் வேலைநிறுத்தத்தை அச்சத்துடனும் வெறுப்புடனும் விடைகாண முற்பட்டது. தலைவர் ரோகர் டொசய்ன்டினால் தலமைதாங்கப்பட்ட லோக்கல் 100 தலைமையிடம் மாற்றீடான முன்னோக்கையும் கொண்டிருக்கவில்லை. MTA-க்கும் நகரத்தின் ஆளும் தட்டிற்கும் பின்னணியாக முழு நிறைவாய் நின்று டைலர் சட்டத்தினதும் நீதிமன்றங்கள் மூலமாக முழுப்பலத்தையும் அரசு அணிதிரட்டியிருப்பதை போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்கொண்ட இந்த நிலமையின் கீழ் லோக்கல் 100 தலைமை இவ்வேலைநிறுத்தத்தை வெறும் சாதாரண தொழிற்சங்க போராட்டமாக நடத்தியது. போர்குணமிக்க வாய்வீச்சுகள் இருந்தபோதிலும் டொசன்ட் தலைமையிடம் வேலைநிறுத்தத்திற்கு ப்ளூம்பேர்க் நிர்வாகம் விடையிறுத்த கொடுஞ்செயலுக்கு முற்றிலும் தயாராக இருக்கவில்லை என்றுதான் தோன்றியது. TWU லோக்கல் 100 இற்கு நகர மற்றும் மாநில அளவில் ஜனநாயகக் கட்சி அமைப்பின் சில பிரிவுகள் சிறிதேனும் அரசியல் பாதுகாப்பு கொடுக்கும் என்று டொசன்ட் எதிர்பார்த்திருக்கக் கூடும். அவ்வாறு ஆதரவு கிடைக்காத வகையில் டொசன்ட் மோதலில் இருந்து தப்பிக்க ஏதேனும் வழி இருக்குமா என்றுதான் பார்த்தார்.அவருடைய எண்ணங்கள் எப்படியிருந்தாலும் ஜனநாயகக் கட்சியின் மீது டொசன்ட் சார்ந்திருப்பது பெருந்தீமை நிறைந்த அரசியல் தவறாகும். இதற்கு போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் மிக அதிகமான விலையைக் கொடுக்க நேர்ந்துள்ளது. "தொழிலாளர்களுடைய நண்பர்கள்" என்று அழைத்துக் கொள்ளுபவர்களிடம் லோக்கல் கடந்த காலத்தில் கவனம் செலுத்தியது எவ்விதத்திலும் தொழிலாளர்களை பாதுகாக்கவில்லை. நியூயோர்க் செனட்டரான ஹில்லாரி கிளின்டன் தான் "நடுநிலைமை" வகிப்பதாக அறிவித்துவிட்டார் அதேநேரத்தில் டைலர் சட்டத்திற்கு தன்னுடைய ஆதரவையும் உறுதிப்படுத்தினார். கடந்த மாதம் லோகல் 100 ஆதரித்து மேயர் தேர்தலுக்கு நின்ற பெர்னான்டோ பெரேர் எங்கேயும் தென்படவில்லை. இறுதியில், லோக்கல் தலைமை போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நியூயோர்க்கில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை திரட்டும் ஒரு சமூகப் பொருளாதார முன்னோக்கை கொண்டிருக்கவில்லை. ப்ளூம்பேர்க் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டம் என்பது சாராம்சத்தில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும். Wall Street ஆதவு கொடுக்கும் தற்போதைய பொருளாதார முறையின் பொருளாதார தர்க்கம் ப்ளூம்பேர்க்கின் கோரிக்கையின் அடித்தளத்தில் உள்ளது, அதாவது போக்குவரத்து தொழிலாளர்கள் "புதிய உலகிற்கேற்ப" தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் அங்கு தொழிலாளர்களுடைய ஓய்வூதியங்கள் சுகாதார நலன்கள் தனியார் செல்வம் பெருநிறுவன இலாபத்தின் காரணமாக குறைக்கப்படும் என்பதாகும். இந்தப் போராட்டம் முழுத் தொழிலாள வர்க்கத்திற்கான முக்கிய படிப்பினையாகும். முதலாவதாக, தொழிலாள வர்க்கம் என்று ஒன்று இல்லை அல்லது அது போராட விரும்பவில்லை என்று ஊடகங்களினால் வளர்த்து வந்த கருத்துக்களின் அனைத்து சாயமும் வெளுக்கப்பட்டுவிட்டது. போக்குவரத்து வெளிநடப்பு தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக எடையை மற்றும் அவற்றின் மிகப்பெரிய போராட்டதை எடுத்துக்காட்டிவிட்டது. இரண்டாவதாக, இப்பொழுதுள்ள தொழிற்சங்கங்கள் சமூகப் போராட்டத்திற்கு நம்பிக்கையற்ற பொருத்தமற்ற கருவியாக உள்ளன என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் அடக்குமுறையில் இவை நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், TWU இன்டர்நேசனல் மற்றும் AFL-CIO மொத்தமாக செய்துகொண்டிருப்பது போல் ஒரு மாற்றீடான அரசியல், சமூக, பொருளாதார முன்னோக்கும் வேலைதிட்டமும் இல்லாதது அரசின் தாக்குதல்களுக்கு எதிராக அவர்களை பாதுகாப்பு அற்றவர்களாக விட்டுள்ளது. அரசியல்ரீதியாக பிற்போக்கு அதிகாரத்துவம் ஒன்று ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து ஆதிக்கத்தை கொண்டிருக்கும் வரை தொழிலாள வர்க்கத்தின் மீது ஆளும் தட்டுக்கள் சுமத்தும் கோரிக்கைகளை அனைத்தையும் செயல்படுத்தும் நிலைக்கு இவை தவிர்க்க முடியாமல் மாற்றப்பட்டுவிட்டன. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், ஒரு சமரசத்திற்குட்படாத, முதலாளித்துவ-எதிர்ப்பு அரசியல் வேலைதிட்டத்தை தளமாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஆற்றல் படைத்த ஒரு புதிய சோசலிச இயக்கம் உருவாக்க வேண்டிய உடனடித் தேவையை நிரூபணம் செய்துள்ளது. இத்தகைய இயக்கத்தைத்தான் சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் கட்டியெழுப்ப போராடுகின்றது. இன்று எவ்வித தீவிரபோராட்டத்தையும் பெருநிறுவனங்கள் மற்றும் நிதியாதிக்க கும்பலின் இலாப உந்துதலைவிட மக்கட்தொகையில் பெரும்பாலானவர்களாக உள்ள தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் இடம்பெறக்கூடிய சமுதாய மாற்றத்திற்கான வேலைதிட்டம் ஒன்றை முன்வைக்காமல் நடத்துவது என்பது இயலாததாகும். இதன் பொருள் பொருளாதார வாழ்வு சோசலிச வழியில் மறுஒழுங்கமைக்கப்பட வேண்டும். நியூயோர்க்கை எதிர்கொண்டதன் படிப்பினைகள் போக்குவரத்து தொழிலாளர்களால் மட்டுமின்றி தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவும் கற்றுக்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். இத்தகைய போராட்டங்கள் முடிவிற்கு வந்துவிட்டன என அர்த்தப்படவில்லை; மாறாக இன்னும் கூடுதலான அளவில் முதலாளித்துவ முறையுடன் மோதலுக்குவரும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்திவாய்ந்த இயக்கத்திற்கான ஆரம்பமாகும். |