WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Cut-throat wheat war behind Australian "oil-for-food"
scandal
ஆஸ்திரேலியாவின் ''உணவுக்கு எண்ணெய்'' மோசடி பின்னணியில் ஈவிரக்கமற்ற கோதுமைப்
போர்
By Rick Kelly and Nick Beams
6 February 2006
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஆஸ்திரேலியாவின் கோதுமை விற்பனை அமைப்பான
AWB மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸில் பெரிய அமெரிக்க கோதுமை உற்பத்தியாளர்களும் அவர்களது
பிரதிநிதிகளும் மிக அதிகமாக கூக்குரலிட்டு கோரிக்கைகளை விடுத்து வருவது, உணவுக்கு- எண்ணெய் என்றழைக்கப்பட்ட
மோசடி தொடர்பாக ஹோவார்ட் அரசாங்கம் விசாரணைக்கு நடத்துவதற்கான பின்னணிக் காரணிகளை தெளிவுபடுத்துவதாக
உள்ளது.
2003 மார்ச்சில் அமெரிக்க தலைமையிலான படையெடுப்பு நடத்தப்பட்ட காலத்திற்கு
பின்னரும் முன்னரும் ஈராக் சந்தைக்கான ஆஸ்திரேலிய ஏற்றுமதியாளர்களுக்கு எதிராக கழுத்தறுப்பு போட்டியில்
ஈடுபட்டிருக்கும் அமெரிக்க கோதுமை நலன்கள் உள்ளவர்களிடமிருந்து வரும் அழுத்தங்களை திசைதிருப்புவதற்கு விசாரண
அமைக்கப்பட்டது. ஆனால் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருப்பதும், சதாம் ஹுசேனின்
முன்னாள் அரசாங்கத்திற்கு ஏறத்தாழ 300 மில்லியன் டாலர்கள் வரை லஞ்சமாகவும் கமிஷனாகவும் கொடுக்கப்பட்டதில்
மத்திய அரசாங்கமும் AWB
இன் உயர்மட்டத்தை சேர்ந்தவர்கள் உடந்தையாக செயல்பட்டிருப்பது
அம்பலப்படுத்தப்பட்டிருப்பதன் சான்றுகளும் ஆவணங்களும் பகிரங்கமாக வெளியிடப்பட்டதால் இந்த முயற்சிகள்
தோல்வியுற்றன.
விசாரணை இரண்டு வாரங்கள் நடைபெறுவதற்குள்ளேயே பிரதமர் ஜோன் ஹோவார்ட்
உட்பட மூத்த அரசாங்க அமைச்சர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டு தடைகளை மீறி ஈராக்குடன்
கோதுமை ஏற்றுமதி பேர பேச்சுவார்த்தையில் AWB
ஈடுபட்டிருந்தது ஒன்று அவர்களுக்கு நேரடியாக தெரியும் அல்லது
அந்த நடவடிக்கைகள் தொடர்பாக கண்டும்காணமலும் விட்டிருந்தனர் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
இது ஹோவார்ட் அரசாங்கத்தின் அடையாளமான அகந்தைப் போக்கையும்
இரட்டைவேடத்தையும் அம்பலப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. ஈராக்கின் பேரழிவுகரமான ஆயுதங்கள் பற்றியும்
அல்-கொய்தாவுடன் பாக்தாத்தின் தொடர்புகள் பற்றியும் மற்றும் ஹுசேன் ஆட்சி ஐ.நா. தீர்மானங்கள் ஏற்றுச்
செயல்படுத்த மறுத்து விட்டது பற்றியும் புஷ் நிர்வாகம் கூறி வந்த அனைத்து பொய்களையும் கிளிப்பிள்ளை போல்
திரும்ப திரும்பக்கூறிக்கொண்டு வந்த அதேநேரத்தில், ஈராக் கோதுமை சந்தையில் இலாபம் தருகின்ற பெரும்
பங்கை ஆஸ்திரேலிய கோதுமை உற்பத்தியாளர்கள் பறித்தெடுக்கின்ற வகையில் ஐ.நா.சபையை கவனத்திற்கெடாது
AWB
இன் நடவடிக்கைகளின் நோக்கங்களுக்கு ஹோவார்ட் அரசாங்கம் அங்கீகாரமளித்தது.
போருக்கான சாக்குப்போக்கை வழங்கிய பொய்கள் அம்பலப்படுத்தப்பட்ட பின்னர்
ஹோவார்ட் அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் குரலை பின்பற்றி ஒரு ஆபத்தான ஆட்சியை நீக்கிவிட்டு ஜனநாயகத்தை
வழங்கியிருக்கிறது என்று சட்ட விரோதமான படையெடுபை நியாயப்படுத்தியது.
இத்தகைய நியாயப்படுத்துதல்களும் பிரசாரமும் மாறியிருக்கக் கூடும் ஆனால்
ஆஸ்திரேலியா பங்கெடுத்ததற்கான ஜடரீதியான பொருளாதார நலன்கள் இன்னும் மாறாமல் இருக்கின்றன
என்பதையே கோடிட்டுக்காட்டுகின்றது. ஈராக்கில் உடனடியாக ஆஸ்திரேலிய பொருளாதார நலன்களை
பெறுவதற்கும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதன் ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை
பெறுவதற்கும் கன்பெர்ரா கொண்டிருந்த உறுதிப்பாடுதான் படையெடுப்பிற்கான ஆதரவில் பிரதான உந்துசக்தியாக
செயல்பட்டது. ஆஸ்திரேலியா துருப்புக்களை வழங்காவிட்டால் அமெரிக்க கோதுமை விவசாயிகள் ஹூசேன்
அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின்னர் ஈராக் சந்தையில் மேலாதிக்கம் செலுத்துவர் என்பதை ஹோவேர்டு
அறிந்திருந்தார்.
வளைகுடாவில் அமெரிக்க மற்றும் கனடா ஏற்றுமதியாளர்களை தடுத்து நிறுத்துவதற்கான
ஆரம்ப கட்ட முயற்சிகள் வெற்றி பெற்றன ஆனால் தற்போது அவை திருப்பித் தாக்குகின்றன.
1996 இற்கும் 2003 இற்கும் இடையில் ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் ''உணவுக்கு
எண்ணெய்'' திட்டத்திற்குள் ஊழல்குற்றச்சாட்டு குறித்து சென்ற ஆண்டு வோல்கர் அறிக்கை வெளியிடப்பட்டதை
தொடர்ந்து அந்த மோசடி தொடர்பான விசாரணை ஜனவரி 20ல் தொடங்கியது. ஐ.நா மற்றும் அதன்
பொதுச்செயலாளர் கோபி அன்னன் மீது அமெரிக்க குடியரசு கட்சி பிரிவுகளின் விரோதப்போக்கினால் இந்த விசாரணை
உந்தப்பட்டது.
ஈராக் ஆட்சிக்கு மிகப் பெருமளவில் இலஞ்சத்தையும் பிரதி உபகாரங்களையும்
கொடுத்த பெரிய தனித்த நிறுவனம் AWB
ஆகும். அந்த கோதுமை ஏற்றுமதியாளர் ஜோர்டானிலுள்ள டிரக்குகள்
நிறுவமான அலியாவிற்கு 290 மில்லியன் டாலர்களுக்கு மேல் செலுத்தியது. அது பாக்தாத்திற்கான ஒரு முன்னணி
நிறுவனமாக செயல்பட்டது. இந்தப் பணம் ஈராக்கில்
AWB ஏற்றுமதிச் சந்தைக்கு ஒரு முக்கிய பாதுகாப்பை
வழங்கியதன் மூலம் 1997 இற்கும் 2003 இற்கும் இடையில் 2.3 பில்லியன் டாலர் மதிப்பளவு கிடைத்தன.
வெளிவிவகாரங்கள் மற்றும் வர்த்தகத் துறையில்
(DFAT) மூத்த
அமைச்சர்களினால் பங்கு வகித்ததை எந்த விசாரணையும் நடைபெறாத வகையில் திசைதிருப்புவதற்காக
அரசாங்கம் விசாரணைக்கான வரம்புகளை மிகக் குறுகலாக
நிர்ணயித்தது.
என்றாலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக குற்றம்சாட்டும் ஆவணங்கள் ஓர்
அருவி போல் அம்பலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. அலியாவிற்கு கொடுத்த பணம் ஹூசேன் அரசாங்கத்திற்கு
சென்றதா என்பது குறித்து எதுவும் தெரியாது என்று AWB
வெளியிட்ட மறுப்பு அறிக்கை இப்போது பொய் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
AWB இன் பல
நிர்வாக அதிகாரிகளும் ஊழியர்களும் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும்.
விசாரணை மேலும் ஸ்தாபிக்கப்பட்டியிருப்பது என்னவென்றால் ஹோவார்ட் மற்றும்
DFAT
உட்பட அரசாங்க அமைச்சர்கள் ஈராக்கில் கோதுமை ஏற்றுமதிக்கான நடவடிக்கைகளை நெருக்கமாக கண்காணித்து
வந்தனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை பலவற்றின் அம்பலப்படுத்துதல்கள் 2002 நடுப்பகுதியில்
மையப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது ஈராக் அரசாங்கம் ஆஸ்திரேலிய கோதுமை இறக்குமதிகளை பாதியாக
குறைத்து விட அச்சுறுத்தியது ஏற்கனவே தெற்கு ஈராக் துறைமுகங்களில் தங்கியிருந்த தானிய கொள்கலங்களை திருப்பி
அனுப்பவும் கடந்த கால இறக்குமதிகளுக்கான 500 மில்லியன் டாலர் கடனை ரத்துச் செய்துவிடுவதாகவும் அச்சுறுத்தியது.
ஹோவார்ட் இந்த அச்சுறுத்தலை அறிந்து கொண்ட அவர் பின்னர்
AWB தலைமை
நிர்வாகி ஆண்ரூ லிண்ட்பெர்கிற்கு ஒரு கடிதத்தை ஹோவார்ட் அனுப்பினார் என்பதை அதிகாரபூர்வமான விசாரணை
அம்பலப்படுத்தியுள்ளது. ''இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி'' ஹோவார்ட் "நீண்ட கால அடிப்படையில்
திருப்தி தருகின்ற ஒரு முடிவை அடைவதற்காக அரசாங்கமும்
AWB நிறுவனமும்
நெருக்கமான உறவு கொண்டிருக்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூறுகிறேன்`` என்று எழுதினார்.
ஆஸ்திரேலிய கோதுமை இறக்குமதிகளை தற்காலிகமாக நிறுத்தி விடுவதாக 2002ல்
ஈராக் எடுத்த ஒரு முடிவு ஹோவார்ட் அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் நெருக்கடியை கிளறிவிட்டிருக்கும். படையெடுப்பு
நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கம்பி மேல் நடக்கும் வித்தையை நடத்தி வந்தது. ஈராக்கில் ஆஸ்திரேலியாவின்
ஸ்தாபிக்கப்பட்ட பொருளாதார நலன்களை நிலை நாட்டுவதற்கு அந்த அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டிருந்தது
அதே நேரத்தில் அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்ட ஈராக்கில் மேலும் முதலீட்டு வாய்ப்பிற்கான சாத்தியக்கூறையும்
கருதி பார்த்தார்.
ஹோவார்டின் கடிதம் கிடைத்தவுடன்
AWB இன் மூத்தநிர்வாகி
பாக்தாத்திற்கு பறந்தார். ஆஸ்திரேலியாவின் கோதுமை ஏற்றுமதிகள் தொடர்வதற்கு ஒரு 2 மில்லியன் டாலர்
லஞ்சத்தை கேட்ட ஈராக் வர்த்தக அமைச்சரிடம் ஒரு இறுதி எச்சரிக்கயை அவர் விடுத்தார். தரப்பட்ட பணம்
எதிர்கால கோதுமை விலைகள் உயர்விற்கான ஒரு ஒப்பந்தத்தின் வடிவத்தில்
மூடிமறைக்கப்பட்டது. ஹோவார்ட் மற்றும் வர்த்தக அமைச்சர் மார்க் வைலி உட்பட மூத்த அமைச்சர்கள் அவர்களது
பணிகளுக்காக AWB
இன் அதிகாரிகளை பகிரங்கமாக பாராட்டினார். குற்றத்தை
சுட்டிக்காட்டுகின்ற கடிதம் வெளியிடப்பட்ட பின்னரும் ஈராக் அரசாங்கத்திற்கு
AWB பிரதி உபகாரம்
வழங்கியது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று தொடர்ந்து ஹோவார்ட் வலியுறுத்திக்கொண்டிருக்கிறார். அதே
போன்ற மறுப்புக்களை வைலியும் வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் டவுனரும் வெளியிட்டிருக்ன்றனர். ''ஆஸ்திரேலிய
விவசாயிகளுக்கு மரியாதை காட்டுவதற்காக'' ஈராக் வர்த்தக அமைச்சர் ஏற்றுமதிகளை வெட்டுவது என்ற தனது
அச்சுறுத்தலை கைவிட்டுவிட்டதாக AWB
இனால் வெளியிட்ட பொது அறிக்கையை 2002 இல் ஒப்புக்கொண்டதாக
கன்பெரா வலியுறுத்தியுள்ளது.
சங்கடமூட்டும் வகையில் அதன் பொய்கள் அம்பலத்திற்குவரும்போது வழக்கமாக
கையாளப்படுகின்ற நடைமுறைகள் அனைத்தையும் அரசாங்கம் பின்பற்றி வருவது ஹோவார்ட் அரசாங்கத்தின்
தனிச்சிறப்பாகும்----முதலில் தெரியாது என்று மற்றும் அதற்கு பின்னர் அவசியமானால் அரசாங்க ஊழியர்களை
அல்லது கீழ் நிலை ஊழியர்களை பலிகடா ஆக்குவது.
என்றாலும் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற நிலை அதிகரித்து
வருகிறது. ஈராக் உணவிற்கு எண்ணெய் நடவடிக்கைகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் பரவலாக ஊழல்
நடைபெற்றது என்பது தெரியும். ஈராக் அரசாங்கம் போக்குவரத்து செலவுகள் என்ற பெயரில் கனடாவில்
கோதுமை ஏற்றுமதியாளர்களிடம் பிரதி உபகாரம் பெற கேட்கிறது என்று 2000 ஜனவரியில் ஒரு ஐ.நா. சுங்கத்
தீர்வை நிபுணர் ஆஸ்திரேலிய தூதர்களுக்கு ஆலோசனை கூறினார். பத்து மாதங்களுக்கு பின்னர்
DFAT,
AWBக்கு வழங்கிய
ஆலோசனையில் ஜோர்டானின் டிரக் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தருவதில் சட்டப் பிரச்சனை எதுவுமில்லை என்று
குறிப்பிட்டிருந்தது.
2003 மார்ச்சில் ஈராக் படையெடுப்பு நடந்து ஒரு வாரத்திற்கு பின்னர் ஹூசேன்
அரசாங்கம் லஞ்சம் வாங்கியதாக ஹோவார்ட் கண்டனம் செய்தார். ''சதாம் ஹூசேனால் எண்ணெய்க்கு-உணவு
திட்டத்தை தார்மீக நெறிக்கு முரணாகவும் வெட்கக்கேடாகவும் பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை
தனக்கு ஆயுதங்கள் வலிமையை ஏற்படுத்தவும் அதை ஆதரிக்கவும் பயன்படுத்திக்கொள்கிறார்'' என்று குறிப்பிட்டார்.
ஈராக் சந்தைக்காக போட்டியிடும் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய விவசாய வர்த்தகங்கள்
AWB மோசடியை தூண்டிவிட்ட கடுமையான
போட்டி அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய கோதுமை ஏற்றுமதியாளர்களுக்கிடையே ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு
முன்னரே தொடங்கி விட்டது. 1991 வளைகுடா போருக்குப்பின்னர் ஈராக்கில் அமெரிக்க விவசாய வர்த்தகங்கள்
மூடிவிடப்பட்டன மற்றும் அவை படையெடுப்பிற்கு பின் சந்தையில் ஒரு பங்கை வழங்க வேண்டும் என்று புஷ்
நிர்வாகத்தை கேட்டுக் கொண்டன. என்றாலும் வாஷிங்டன்
AWB இன் மேலாதிக்கநிலையும்,
நடைமுறையிலுள்ள ஒப்பந்தங்களும் நடைமுறையில் இருக்கும் எனவும் கூறி உடனடியாக அவற்றிற்கு சவால் விடுவதில்லை
என்று முடிவு செய்தது.
அந்தப் போருக்கு கன்பெர்ராவின் ஆதரவிற்கு கைமாறாக தொடக்கக் கட்டங்களில்
ஆக்கிரமிப்பை மேற்பார்வையிட்ட கூட்டணி இடைகால ஆணையத்தில்
(CPA) இரண்டு முன்னாள்
AWB நிர்வாகிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் AWB
தலைவரான டிரேவோர் பிளக்கி CPA
இன் விவசாயப் பிரிவு "மூத்த ஆலோசகராக" நியமிக்கப்பட்டார் அதே நேரத்தில்
மற்றொரு முன்னாள் நிர்வாகியான மைக்கேல் லாங் ஆஸ்திரேலிய உதவித் திட்டத்தின் கீழ்
CPA இல்
சேர்ந்தார்.
அதற்குப் பின்னர் அமெரிக்க கோதுமை ஏற்றுமதியாளர்கள் தாக்குதலில் இறங்கி
விட்டனர். AWB
மேசாடியை பயன்படுத்தி அமெரிக்க விவசாய வர்த்தகங்கள் ஈராக்
சந்தையிலிருந்து ஆஸ்திரேலியாவை விரட்டி விட முயலுகின்றன. சென்ற அக்டோபருக்கு பின்னர் ஈராக் துணை பிரதமர்
அஹமது சலாபி ஈராக் ஒரு மில்லியன் டன்கள் கோதுமையை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை பெறுவதில்
அமெரிக்க உற்பத்தியாளர்களிடம் ஆஸ்திரேலியா தோற்றுவிட்டதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவிற்கும் ஈராக்கிற்கும்
இடையே வெற்றிகரமானதொரு கோதுமை வர்த்தக உறவு மீண்டும் நிலை நாட்டபடுவதை ''மறை முக சக்திகள்''
விரும்பவில்லை என்று முன்னாள் ஈராக்கின் வர்த்தக அமைச்சர் முஹமது அல் - ஜிபுரி குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க கோதுமையை வாங்குவது ஒரு திருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
2004 கடைசியில் ஆஸ்திரேலிய தூதரான மைக்கேல் தவாலே பிரதிஉபகாரம் செய்தது தொடர்பாக
AWB இற்கு எதிராக அமெரிக்காவின் நகர்வு ஒன்றை வலுவிழக்க
செய்தார். அந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியா ஈராக்கிற்கு ஒரு மில்லியன் டன்கள் கோதுமையை ஏற்றுமதி
செய்வதற்கான ஒரு ஒப்பந்தத்தை வென்றெடுத்தது.
AWB போன்று ஈராக்கின் முக்கிய
அதிகாரிகளை அணுகி கண்டுபிடிக்க முடியாத நிலையிலுள்ள அமெரிக்க கோதுமை உற்பத்தியாளர்கள்
AWB ஊழல்
தொடர்பாக நீண்ட காலமாக கூறப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்களை புலன்விசாரணை செய்யுமாறு வாஷிங்டனை
வற்புறுத்தினர். அந்த விவகாரத்தை கைவிட்டு விடுமாறு செனட்டின் புலனாய்வு தொடர்பான நிரந்தர துணைக்
குழுவின் தலைவரான செனட்டர் நாம் கோல்மேனை வெற்றிகரமாக தவாலே ஆளுமை செய்தார்.
இந்த முடிவு இந்தப் போரில் ஆஸ்திரேலியா பங்கெடுத்துக் கொண்டதற்கு மற்றொரு
அமெரிக்க கைமாறாகும். சிட்டினி மோர்னிங் ஹெரால்டு செயித வெளியிட்டிருந்ததைப் போல்:
''ஆஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் செனட்குழு ஊழியர்கள் சம்மந்தப்பட்ட ஒரு கூட்டமும் கூட
நடைபெற்றது. மற்றும் அமெரிக்க ஆஸ்திரேலிய கூட்டணி மற்றும் விருப்பக் கூட்டணியில் ஆஸ்திரேலியாவின் பங்களிப்பு
பற்றியும் எழுப்பப்பட்டது.
அமெரிக்க விவசாயிகளிடமிருந்து வருகின்ற அழுத்தங்களை திசை திருப்வுதற்கும் இந்த
விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்வதற்கும் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற விசாரணை
பயன்படும் என்று அரசாங்கம் நம்பியது. ஈராக் படையெடுப்பை தொடர்ந்து பல மாதங்கள் புஷ் நிர்வாகம்
அமெரிக்க கோதுமை ஆளுமைக்குழு கட்டுப்படுத்தி வந்தது என்றாலும் இன்றைய தினம் அத்தகைய கட்டுப்பாடு எதுவும்
இருப்பதாக தெரியவில்லை.
இந்த வாரம் தவாலேக்கு செனட்டர் கோல்ட்மன் ஒரு கடிதம் எழுதினார் 2004
இல் அவரது செயல்பாடுகள் குறித்து தனக்கு விளக்கம் தர வேண்டும் என்று கோரியிருக்கிறார் இதன் விளைபயன்
என்னவென்றால் தூதர் - தவாலே தன்னை தவறான வழியில் இட்டுச் சென்று விட்டார் என்பது தான். அந்தக்
கடிதத்தில் செனட்டர் கூறியிருப்பது என்னவென்றால் வெளிவிவகார அதிகாரிகள் ''சட்ட விரோமாக லஞ்சம்
கொடுக்கப்பட்டதில் அவர்கள் உடந்தையாக செயல்பட்டார்கள் மற்றும் அதை அறிந்திருந்தார்கள்''. 'ஹோவேர்டு
ஒரு மன்னிப்பு கோரியிருக்கிறார். ''அமெரிக்கர்கள் பற்றி நாம் மித மிஞ்சிய கற்பனைகள் செய்து கொள்ள
வேண்டாம். அவர்கள் தங்களது கோதுமை வர்த்தக நலன்களை காப்பதற்கு கடுமையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்''
என்று அவர் அறிவித்தார்.
அமெரிக்காவின் ஏற்றுமதி கடன்திட்டங்கள்
AWB நிறுவனத்திற்கு
கிடைப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாஷிங்டனின் விவசாயத் துறை செயலாளர் மைக்
ஜொகான்சை வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட ஏழு ஜனநாயகக் கட்சி செனட்டர்களின் கோரிக்கைகளையும்
கோல்ட்மன் ஆதரித்துள்ளார்.''தற்போதுள்ள ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த விவகாரத்தை புலன் விசாரணை செய்வதற்கு
ஒப்படைத்திருப்பது போதுமான அளவிற்கு அரசாங்கத்திலிருந்து சுதந்திரமாக செயல்படக் கூடியதா'' என்ற கேள்வியை
அந்தக் கடிதத்தில் செனட்ர்கள் எழுப்பியுள்ளனர். ஆஸ்திரேலிய நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில்
விசாரணைத் தலைவரான டெர்ரன் கோல் ஒரு பதில் அறிக்கையை வெளியிடுவதற்கு அந்தக் கடிதம் ஆத்திரமூட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் பாத்திரத்தை புலன் விசாரணை செய்வதை விரிவுபடுத்தி
விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆஸ்திரேலியன் சிட்னி மார்னிங் ஹெரால்டு மற்றும்
ஏஜ் உட்பட பெரிய செய்தி பத்திரிகைகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. கன்பெராவில் உள்ள
அமைச்சர்களும் வாஷிங்டனிலுள்ள அதிகாரிகளும் இந்த மோசடி உறவுகளுக்கு சேதம் ஏற்படுத்தாது என்று உடனடியாக
அறிவித்திருந்தாலும் கடந்த காலத்தைப் போல் கோதுமை நலன்குழுவை கட்டுப்படுத்த புஷ் நிர்வாகம் தவறிவிட்டது
என்பது தெளிவாக தெரிவதால் அவரது அரசாங்கம் ஸ்திரமற்றதாகக்கூடும் என்பதனால் ஹோவார்ட்டிற்கு ஒரு பெரிய
சங்கடத்தை உருவாக்கியுள்ளது.
Top of page
|