World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Berlin and Strasbourg protests oppose the EU-Bolkestein Directive

ஐரோப்பிய ஒன்றியம் -போல்க்ஸ்டெய்ன் கட்டளையை எதிர்த்து பேர்லின் மற்றும் ஸ்ட்ராஸ்பேர்க்கில் ஆர்ப்பாட்ட கண்டனங்கள்

By our correspondents
13 February 2006

Back to screen version

ஐரோப்பிய ஒன்றியம் - போல்க்ஸ்டெய்ன் கட்டளைக்கு எதிராக சனிக்கிழமையன்று பேர்லினில் 40,000 பேர் வரை கண்டனப்பேரணி நடத்தினர். இந்தக் கட்டளை ஐரோப்பிய சேவை உத்தியோக நிலைமைகளை சுதந்திர சந்தையின் நாசாமாக்குதலுக்கு திறந்து விடுவதை நோக்கமாகக் கொண்டதுடன், பாரியளவு வேலை இழப்புகளையும் நலன்புரி வெட்டுகளுக்கு வழிவகுப்பதையும் தவிர்க்கமுடியாது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைமை இடமான பிரான்சிலுள்ள ஸ்ட்ராஸ்பேர்க்கிலும் 15,000 பேர் கலந்து கொண்ட ஒரு பேரணி நடைபெற்றது. இந்த கண்டனப் பேரணிகளில் சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்கள் ஒரு அறிக்கையை விநியோகித்தனர். அதன் தலைப்பு: ''போல்க்ஸ்டெய்ன் கட்டளை: ஐரோப்பிய ஒன்றிய தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு தேவை'' என்றிருந்தது.

பேர்லினில் நடைபெற்ற பேரணியில் ஜேர்மனியின் தொழிற்சங்கங்களுக்கான கூட்டமைப்பு (ஞிமீutsநீலீமீக்ஷீ நிமீஷ்மீக்ஷீளீsநீலீணீயீtsதீuஸீபீஞிநிஙி) கலந்து கொண்டதுடன், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புக்களும் அவற்றுடன் SPD (சமூக ஜனநாயகக் கட்சி) பசுமைக் கட்சிக்காரர்கள், இடது கட்சி மற்றும் CDU வின் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்) சமூகக்குழு (CDA) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ''ஐரோப்பாவை ஏற்றுக் கொள்கிறோம். சமூகத்தை குப்பைத் தொட்டியில் போடுவதை ஏற்றுக் கொள்ளவில்லை'' என்ற முழக்கத்தின் கீழ் இந்த பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் DGB ன் தலைவர் மைக்கேல் சோமர் மற்றும் தனிநபர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மேம்பாட்டு உதவிக்கான அரசாங்கத்தின் அமைச்சர் கிதேமரி விக்சோரக் சியல் மற்றும் ஜேர்மனி நாடாளுமன்றத்தின் (Bundestag) துணைத் தலைவர் உல்ப்கேங் தியர்சே -----இருவரும் SPDயை சேர்ந்தவர்கள்----- மற்றும் பசுமைக் கட்சி தலைவரான ரெய்ன்ஹோல்ட் படிகோபர், பசுமைக் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவரான ரினேட் குனாஸ்ட் போன்ற பல்வேறு முன்னணி அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

சென்ற வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள சமூக ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றக் குழு, சில நிபந்தனைகளின் கீழ் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு சம்மதிக்க விருப்பத்துடன் உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. பழமைவாத EVP நாடாளுமன்ற குழு (ஐரோப்பிய மக்கள் கட்சி) உறுப்பினர்களுடன் ஒன்று சேர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒரு பணிக்குழுவில் உள்ள பிரதிநிதிகளால் இந்த நிபந்தனைகளின் கீழ் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று இந்த சமரச தீர்மானத்தின் மீது இரண்டு நாடாளுமன்றக் குழுக்களும் வாக்களிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

உண்மையிலேயே இந்த சமரசம் மூல நகலில் இருந்து மிக முக்கியத்துவம் இல்லாத அளவிற்கு வேறுபட்டுள்ளது. இதில் சில தீர்மானங்கள் மாற்றப்பட்டுள்ளதுடன், அவைகளில் ஒரு பகுதி தளர்த்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பழைமைவாத ஆஸ்திரிய நாடாளுமன்ற உறுப்பினரான ஒதாமர் கராஸ் ஸ்டாண்டர்டு நாளிதழுக்கு, மிக அதிகமான தகராறுக்குரிய அம்சங்களில் ஒன்று பற்றி விளக்கம் அளித்த போது ''தொடக்க நாடு என்ற சொல் இனி பயன்படுத்தப்படமாட்டாது. ஆனால் அடிப்படைக் கொள்கை அப்படியே உள்ளது'' என்றார்.

இந்த ''சமரசத்தை'' ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தினால் ஆதரிக்கப்படுவது மட்டுமல்லாமல் தொழிற்சங்கங்களும் ஆதரிக்கின்றன. பேரணி பற்றி குறிப்பிட்ட மைக்கேல் சோமர், உருவாக்கப்பட்டு விட்ட முன்னேற்றம் குறித்து ''குறிப்பாக நன்றி தெரிவித்தார்''. தனது கோரிக்கைகள் பலவற்றிற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டிருக்கும் நகல் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்த சமரசம் EVP யினாலோ அல்லது கமிஷனாலோ தாமதப்படுத்தப்படாமல் அல்லது தடுக்கப்படாமல், செவ்வாய் கிழமையன்று இந்த சமரசத்தை உண்மையில் ஏற்றுக்கொள்ள உறுதி செய்யப்படுவதற்கு சனிக்கிழமையன்று நடைபெற்ற பேரணி அவசியம் என்று அவர் கருதினார்.

எனவே, இந்த கண்டன பேரணிகளை ஏற்பாடு செய்தவர்கள், போல்க்ஸ்டெய்ன் கட்டளையை புறக்கணிப்பது மற்றும் / அல்லது அவற்றை செயல்படுத்துவதை சிறிது மாற்றப்பட்ட வடிவத்தில் அமைப்பது என்பதோடு கோரிக்கைகளை மட்டுப்படுத்திக்கொண்டனர். அதில் எந்த பரந்த பிரச்சனைகளும் விலக்கப்பட்டன. பல ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அமைப்புக்களும் சமூக நலன்புரி மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு வழிவகையாக, அதன் முன்னேற்றத்திற்கு உத்திரவாதம் தருபவைகளாக சித்தரித்துக் காட்டப்பட்டன. பூகோளமயமாக்கல் எதிர்ப்பு இயக்கமான அற்றாக் (Attac) மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைப்பான BUND ன் (கூட்டமைப்பு) சார்பிலும் பேசிய மார்ட்டின் ரோக்கோல் தனது முடிவுரையில் ''ஐரோப்பிய ஒன்றியம் சமாதானம், அதிக சகிப்புத் தன்மை, அதிக ஜனநாயகம், கூடுதலான சமூக பாதுகாப்பு, நுகர்வோர் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அதிகரிப்பு மற்றும் கூடுதல் சட்ட உரிமைகளுக்கான நம்பிக்கையை'' ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய DGB ன் தலைவர் கடந்த பல வாரங்களாக நூரம்பேர்க்கிலுள்ள AEG தொழிலாளர்கள் உறுதியாக மேற்கொண்டுள்ள தொழிற்துறை நடவடிக்கை குறித்தும் கடந்த 14 ஆண்டுகளில் மிகப் பெரும் பொது சேவை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்தும் கணநேரத்தில் குறிப்பிட்டார். மற்றும் அந்தப் பேரணி நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னர் ஜேர்மனியில் 20,000 வேலைகளை இழப்பதற்கான திட்டத்தை வோல்க்ஸ்வேகன் அறிவித்தது. அந்த உண்மை பற்றி எதுவும் கூறாமல் அவர் மவுனம் சாதித்தார்.

ஜேர்மனியின் பெரிய கூட்டணி அரசாங்கம் (SPD-CDU மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியன்) பொதுமக்கள் மீது மிகப்பரந்த தாக்குதல் திட்டங்களை மேற்கொண்டிருக்கிறது. எண்ணிறந்த நிறுவனங்கள் வேலை வெட்டுக்களை அறிவித்திருக்கின்றன. புதிய போர்களை நடத்துவதற்கு ஜேர்மனி தயாரிப்புகளை செய்து வருகிறது. இந்த சூழ்நிலைகளில் தொழிற்சங்கங்கள் சனிக்கிழமையன்று தாங்கள் உடன்பட்டிருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைக்கு எதிராக முற்றிலும் பயனற்ற ஒரு கண்டனப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தன. கடந்த காலங்களில் அவர்கள் அடிக்கடி செய்து வந்ததைப் போல், தொழிற்சங்கங்கள் விசிலடித்து கூட்டத்தை திரட்டி அவற்றின் உறுதியான குரலை செயல்பாட்டில் காட்ட அனுமதி அளித்து விட்டு ஜேர்மனியில் தற்போது இடம் பெற்றுவரும் சமூக சீர்கேட்டிற்கான பரந்தரீதியான எதிர்ப்பை துண்டிக்கவும் பண்பாடற்றவகையில் நோக்கம் கொண்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் பழைய கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளிலிருந்து சமூக வெட்டிற்கான எதிர்ப்பு சுயாதீனமாக வளர்ச்சியுற்றுள்ளன. ஜேர்மனியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நாளில் SPD - பசுமைக்கட்சி அரசாங்கத்தின் சமூக நலன்புரி-எதிர்ப்பு கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன பேரணிகள் ஏற்பாடு செய்து ஒரு கண்டன இயக்கம் நடைப்பெற்றது. அதற்குப் பின்னர், சென்ற ஆண்டு பிரான்சிலும் நெதர்லாந்திலும் அரசியல் நிறுவனத்தில் இருந்து பாரியளவு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதற்கு அப்பாலும் பெரும்பாலான பொது மக்கள் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சட்டத்தை, தமது வாக்குரிமைகள் மூலம் தோற்கடித்தனர். அதே நேரத்தில் ஐரோப்பா முழுவதிலும் தொழிலாளர்களின் பாரிய விவாதங்கள் இடம் பெற்றுள்ளன. போல்ஸ்டெய்ன் கட்டளை மேலும் தீவிரமான கண்டனத்திற்கான ஒரு குவிமையமாக உருவாவதற்குரிய உள்ளார்ந்த பிரச்சனை என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

மாறாக DGB நாடகத்திற்கான ஒரு கண்டனத்தை ஏற்பாடு செய்தது. இப்பேரணியில் கலந்து கொண்ட 40,000 பேரில் 30,000 பேர்கள் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த 600 பேருந்துகளில் ஜேர்மனி முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்டனர். அவர்கள் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்திற்கு எதிரில், ஒரு பேரணியாக தொப்பிகள் அணிந்தும் விசில்கள், கொடிகளுடனும் வந்திருந்தனர். அவர்களுக்காக போப் இசையும், இலவச பழச்சாறும் வழங்கப்பட்டது. அதற்குப்பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் குடியரசு மாளிகையை நோக்கி ஊர்வல நிறைவிற்காக அணி வகுத்தனர். ஊர்வலத்தில் பெரும் இரைச்சல் கொண்ட இசை நிறைந்திருந்தது. மற்றும் அங்கு அரசியல் இலக்கிய வெளியீடுகளை விட சிற்றுண்டிக் கடைகளே அதிகமாக காணப்பட்டன.

உண்மையிலேயே தொழிற்சங்கங்களால், தங்களது நேரடி செல்வாக்குட்பட்டுள்ளவர்களை தவிர, வெளியில் எவரையும் அணிதிரட்ட முடியவில்லை. கடந்த காலங்களில் நடைபெற்ற சமூக நலன்புரிகள் வெட்டிற்கு எதிரான பேரணிகளுக்கு மாறுபட்டவகையில், வேலையில்லாதவர்கள், சாதாரண தொழிலாளர்கள் அல்லது இளைஞர்களை ஆதரிக்கின்ற அமைப்புக்களை சேர்ந்த சில உறுப்பினர்களை ஒருவர் வியப்பூட்டும் வகையில் காணமுடியும்.

இதில் ஒரு விதிவிலக்காக, போஸ்ட்டாம்மை சேர்ந்த 25 வயது அரசியல் விஞ்ஞான மாணவர் தோமஸ் என்பவர் பத்திரிகைகள் மூலம் பேரணி நடப்பதை அறிந்து கொண்டு, நவீன-தாராளவாத கொள்கைகளை எதிர்த்து மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக இந்த கண்டன பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். போல்க்ஸ்டெய்ன் கட்டளையை தடுத்து நிறுத்துவதற்கு தொழிற்சங்க முன்னோக்கு தகுதியானதல்ல என்று அவர் கருதுகிறார். ''பூகோள முதலாளித்துவத்தின் தர்க்கத்திற்கு எதிராக அரசாங்கத்தை செயல்படச் செய்வதற்கு பேரணிகளால் இயலாது. அத்தகைய ஒரு முதலாளித்துவ தர்க்கத்தை முறியடிப்பதற்கு நமக்கு ஒரு சர்வதேச முன்னோக்கு தேவை'' என்றார்.

பேரணி தொடங்கிய சற்று பின்னர் அதில் கலந்து கொண்டவர்கள் மிக வேகமா கலைந்து சென்று விட்டனர். பேச்சாளர்களின் உரைகளை கேட்பதற்கு வெறும் 3,000 பேர் மட்டுமே அங்கிருந்தனர்.

ஸ்ட்ராஸ்பேர்க்கில் ஆர்ப்பாட்ட கண்டனம்

ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் ஏறத்தாழ 15,000 பேர்கள் பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் பெல்ஜியத்திலிருந்து பெரிய பிரிவுகளாக வந்து கலந்து கொண்டர். அற்றாக் போன்ற அமைப்புடன் கூட்டு சேர்ந்த பல குழுக்கள், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), ஜேர்மன் மாவோயிச MLPD மற்றும் தொழிற்சங்கவாதிகளின் ஒரு சில குழுக்களும் அதில் இடம்பெற்றன.

பேர்லினில் கலந்து கொண்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் காபினட் அமைச்சர்கள் போல்க்ஸ்டெய்ன் கட்டளையில் உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச மாற்றங்களை ஒரு வெற்றி என்று சுட்டிக்காட்டினர் மற்றும் திருத்தப்பட்ட வழிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டனர் என்றாலும், ஸ்டார்ஸ்போர்க் பேரணியில் கலந்துகொண்ட பேச்சாளர்கள் கடந்த கால சலுகைகள் போதுமானவை அல்ல என்று புறக்கணித்துவிட்டனர். அந்தக் கட்டளையை முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும் என்று பல பேச்சாளர்கள் கோரினர்.

இருந்தபோதிலும், அவர்களில் எவருமே தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் பங்களிப்பை சீரியசாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. எவரும் துணிச்சலோடு ஒரு எளிய அம்சத்தை வலியுறுத்தவில்லை அது என்னவென்றால் போல்க்ஸ்டைன் கட்டளை ஐரோப்பிய ஒன்றிய கொள்கையில் ஒரு முக்கியமான அம்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் அவற்றிற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு அவசியமாகும், அது EU கொள்கைகளின் தனிப்பட்ட அம்சங்களுக்கு எதிராக செல்வதாக மட்டும் இருக்காமல் அவர்களது முதலாளித்துவ அஸ்திவாரங்களுக்கு சவால்விடுவதாக இருக்க வேண்டும்.

இந்த அர்த்தத்தில் பேர்லினை சேர்ந்த அரசியல் அறிவியல் பேராசிரியர்களில் ஒருவரான பீட்டர் கரோட்யன், போல்க்ஸ்டெய்ன் கட்டளையின் எந்த சமரசத்தையும் ஏற்றுக்கொள்வதற்கு எதிராக எச்சரித்தார். மற்றும் ''போல்க்ஸ்டெய்ன் கட்டளைகளை எவரும் சீர்திருத்த முடியாது. அதை ஒழித்துக் கட்டியே ஆக வேண்டும்'' என்று அறிவித்தார். என்றாலும் அவரது ஒட்டு மொத்த முன்னோக்கு ''ஐரோப்பிய ஒன்றியத்தின் நவீன தாராளவாதக் கொள்கைக்கு'' எதிராக ஒரு ''உற்பத்திகள் மற்றும் சேவைகளை புறக்கணிப்பதற்கு'' ஏற்பாடு செய்யும் அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டது.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு முன்னணி உறுப்பினரும் ஐக்கிய ஐரோப்பிய இடது/ வடக்கு பசுமை இடதுகளின் ஐரோப்பிய நாடாளுமன்றக்குழுக்களின் தலைவருமான பிரான்சிஸ் வூர்ட்ஸ் ஒலி பெருக்கியை பிடித்தபொழுது இந்தப் பேரணியின் சந்தர்ப்பவாத நிலைநோக்கு மேலும் தெளிவானது. "அந்த கட்டளையை ஆதரிப்பவர்களை நாம் பாதுகாப்பு குறித்து நிர்பந்திக்கிறோம். பல பகுதிகள் ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டு விட்டன. இந்த மாற்றங்களை நாம் குறைத்து மதிப்பிட வேண்டாம் இதில் நாம் ஏராளமாக சாதித்திருக்கிறோம்." "இந்த ஒட்டு மொத்த வழி காட்டிகளின் தீவிரமான சுதந்திரச் சந்தை தன்மை மிகப்பெரும் அளவிற்கு இந்த மாற்றங்களால் பாதிக்கப்படவில்லை மற்றும் "இந்த சலுகைகள் நீடிக்கும் என்பதற்கு உறுதி மொழிகள் முற்றிலும் இல்"ை, ஆனால் ''முற்போக்கு சக்திகளின் கூட்டணி'' முக்கியமான வெற்றிகளை ஏற்கனவே வென்றெடுத்திருக்கிறது.

அந்த கட்டளை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலுவாக வலியுறுத்தி வருகின்றவர்களான சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பின்னணியில் பிரஸ்ஸல்ஸ் அதிகாரத்துவத்தின் பிற்போக்கு கொள்கைக்கு எதிராக உருவாகும் உயர்ந்தளவு எதிர்ப்பிற்கு ஒரு முயற்சியாக தீவிரவாத சொற்களை ஸ்ட்ராஸ்பேர்க் பேரணிகளை ஒழுங்கமைத்தவர்கள் பயன்படுத்தியது அடிப்படையில் பிரான்சிஸ் உர்ட்சின் உரையில் தெளிவாகியது.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்கள் ஜேர்மனியிலும் பிரான்சிலும் விநியோகித்த துண்டுப்பிரசுர அறிக்கையின் ஒரு பகுதி வலியுறுத்தியிருப்பது: ''பேர்லினிலும் ஸ்ட்ராஸ்பேர்க்கிலும் பேரணிகளை நடத்தியவர்களின் முன் உள்ள முக்கியமான பிரச்சனை ஒரு சோசலிச முன்னோக்கை ஏற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியம்தான். இந்தக் ஆர்ப்பாட்ட கண்டனங்களை தொடக்கப் புள்ளியாக்கி ஐரோப்பாவிலுள்ள பரந்த வெகுஜனங்களை ஒரு பரந்த அரசியலில் அணிதிரட்டவேண்டும். இலாப நலன்களுக்கு மேலாக பொது மக்களது தேவைகள் இடம்பெற உறுதி செய்து தருவதற்கு சமுதாயத்தை மிக ஆழ்ந்தமுறையில் மறுசீரமைப்பதற்கான ஒரு போராட்டத்தின் நிலைப்பாட்டிலிருந்து அரசாங்கங்கள் மற்றும் பிரசல்சிலுள்ள ஐரோப்பிய அதிகாரிகளை ஆதரிக்கும் பெரு நிறுவனங்கள் ஆகியவற்றை சவால் விடுவதாக அது அமைய வேண்டும்.''

இந்த பிரச்சனைகள் தொடர்பாக பேரணியில் கலந்து கொண்டவர்களோடு பல விவாதங்கள் நடைபெற்றன. பாரிஸ் அருகிலுள்ள ருவாசி பிரெஞ்சு CGT தொழிற்சங்க உறுப்பினரும், அற்றாக் இயக்கத்தில் தீவிரமாக செயலாற்றுபவருமான ஜோன் லூயி இரண்டு நண்பர்களுடன் பேரணிக்கு வந்திருந்தார்.

''ஐரோப்பிய தொழிற்சங்க கூட்டமைப்பு (EGB) நடத்திய பேரணியில் செவ்வாய்க் கிழமையன்று கலந்து கொள்ளாமல் இங்கு ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடைபெறுகின்ற பேரணியை நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் அந்தக் கூட்டமைப்பு ஐரோப்பிய ஒன்றிய கருத்தெடுப்பில் ''வேண்டும்'' என்று வாக்களித்தது. EGB ன் அந்த நிலையோடு நான் உடன்படவில்லை. மற்றும் போல்ஸ்டெய்னுக்கு எதிராக இதர சமூக இயக்கங்களுடன் சேர்ந்து இன்றைய தினம் பேரணியில் கலந்து கொள்வதை நான் விரும்புகிறேன்.

''மே 29ல் இடம்பெற்ற அரசியல் சட்ட கருத்தெடுப்பை புறக்கணிப்பதன் தொடர்ச்சி தான் போல்ஸ்டெய்னுக்கு தெரிவிக்கப்படும் இந்த 'இல்லை'. ஆக நாங்கள் இன்றைய தினம் பிரான்சின் கப்பல் கட்டும் தளங்கள் முழுவதிலும் நடைபெறும் நடவடிக்கைகளை எதிர்க்கிறோம். எடுத்துக்காட்டாக, அட்லாண்டிக் சமுத்திர கரையிலுள்ள செயிண்ட் நாசைர் அல்லது அல்ஸ்டோம் பகுதிகளில் உள்ள தளங்களில், குறைந்த ஊதிய தொழிலாளர்களையும் துணை ஒப்பந்தக்காரர்களையும் ஒரு பெரும் எடுப்பில் பயன்படுத்தி வருகிறார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார்.

பிரெஞ்ச கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இணைந்துள்ள CGT தொழிற் சங்கத்தின் (தொழிலாளர்களின் பொது கூட்டமைப்பு) பாத்திரம் பற்றி கேட்கப்பட்டபோது, ஜோன் லூயி, ஏப்ரலில் தொழிற்சங்க மாநாடு நடைபெறவிருப்பதற்கான தயாரிப்பில் வன்முறை தகராறுகள் மேலாதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.

''நாங்கள் சில தலைவர்களை கட்டுப்படுத்தியாக வேண்டும். CGT யிலிருந்து மாற்றப்பட வேண்டியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பேர்னார்ட் திபோ [பொதுச் செயலாளர்], மற்றும் குறிப்பாக [பொருளாதார விவகாரங்களுக்காக பொறுப்பான தேசிய செயலாளர்] ஜோன் கிரிஸ்டோப் லீ கூய்கோ ஆவார். அவர்கள் கருத்தெடுப்பில் ''ஆம்'' என்று வாக்களித்து போல்க்ஸ்டெய்னை கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். அத்துடன் வீழ்ச்சி கண்டு வரும் எரிசக்தி இருப்புக்கள் மற்றும் சுற்றுப் புறச் சூழல் பிரச்சனைகளில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.'' என்று அவர் குறிப்பிட்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved