WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Bush condemns protests against anti-Muslim
cartoons
முஸ்லீம்-எதிர்ப்பு கேலிச்சித்திரங்களுக்கு எதிரான எதிர்ப்புக்களை புஷ் கண்டிக்கிறார்
By Patrick Martin
10 February 2006
Use this version to
print |
Send this link by email |
Email the author
ஐரோப்பிய பத்திரிகையில், முஸ்லீம்-எதிர்ப்பு கேலிச் சித்திரங்கள் வெளியிட்டமை
தொடர்பக புஷ் நிர்வாகம் தனது நிலையை மாற்றிக் கொண்டது முஸ்லீம் உலகத்தை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்ற
கண்டனங்களை கண்டித்திருக்கிறது மற்றும் அந்த கண்டனப் பேரணிகள் ஈரான் சிரியா மற்றும் ஆப்கனிஸ்தானிலுள்ள தலிபானால்
தூண்டிவிடப்பட்டுக் கொண்டு வருகின்றன என்று கருத்துரைத்திருக்கிறது.
நபிகள் நாயகத்தை ஒரு பயங்கரவாதி என்று சித்தரித்து ஒரு டென்மார்க் செய்தி
பத்திரிகை கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்கு தொடக்கத்தில் வருத்தம் தெரிவித்த பின்னர் வெள்ளை மாளிகையும்
மற்றும் வெளியுறவுத்துறையும் இப்போது எந்த விமர்சனத்தையும் கைவிட்டு விட்டன மற்றும் "பத்திரிகை சுதந்திரம்"
என்ற போர்வையின் கீழ் இனவாத அவதூறுகளை மூடிமறைக்க முயன்று வருகிறது அதேநேரத்தில் வளர்ந்து கொண்டு
வரும் அரசியல் நெருக்கடியை வாஷிங்டன் சொந்த புவிசார்-அரசியல் நோக்கங்களை முன்னெடுத்துச்செல்ல
சுரண்டிக்கொள்கிறது.
வியாழனன்று வாஷிங்டன் போஸ்ட் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு
கட்டுரையில், "வெள்ளை மாளிகை உதவியாளர்களின்படி, அண்மை நாட்களில் வன்முறை மீது குவிமையப்படுத்துவதில்
ஒரு திட்டமிட்ட முடிவை புஷ் செய்துள்ளார்" என்று குறிப்பிட்டிருக்கிறது. இது "ஆத்திரமூட்டும் ஓவியங்களை விமர்சித்தமை
உள்ளடங்கிய ஆரம்ப கூற்றுக்களுக்கு மாறான வகையில்-----பல நாடுகளில் முஸ்லீம் கண்டனங்களின் போது கொலைகள்
மற்றும் நாச வேலைகள் மீதாக குவிமையப்படுத்துவதற்கான வெள்ளை மாளிகையின் மூலோபாயத்தில் ஒரு திருப்பத்தை
பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இந்த விவகாரத்திற்கு சென்ற வெள்ளிக் கிழமையன்று வெளியிடப்பட்ட வெளியுறவுத்துறையின்
ஆரம்ப பதில் "மதவாத அல்லது இன வெறுப்புக்களை இந்த முறையில் தூண்டிவிடுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல"
என்ற அறிவிப்போடு தொடங்கியது. வியாழனன்று போஸ்ட் அறிக்கை, ''இந்த பதில் மிகக் கடுமையாக
உள்ளது என்று சில அமெரிக்க அதிகாரிகள் கருதினர் என்றாலும், பேச்சு சுதந்திரத்தை போதுமான அளவிற்கு
ஆதரிப்பதாக இல்லை" என்று குறிப்பிட்டிருந்தது.
புஷ், டென்மார்க் பிரதமர் ஆண்டர்ஸ் போக் ராஸ்மசென்னை தொலைபேசியில்
அழைத்து டென்மார்க்குடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியபொழுது செவ்வாயன்று அந்த மாற்றம் தொடங்கியது.
''சகிப்புத் தன்மையின் முக்கியத்துவத்தையும் அனைத்து மத நம்பிக்கைகளையும் பத்திரிகை சுதந்திரத்தையும்''
மீண்டும் மீண்டும் வற்புறுத்திக்கூறுவதாக அழைப்பின் நோக்கத்தை வெள்ளை மாளிகை பேச்சாளரான ஸ்கோட்
மெக்கல்லன் குறிப்பிட்டார்.
ராஸ்மசன்ஸ் அரசாங்கம் டென்மார்க் மக்கள் கட்சியின் அரசியல் ஆதரவை
சார்ந்திருக்கிறது, அது ஒரு இனவாத புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு கட்சி, அது சென்ற ஆண்டு இலையுதிர்காலத்தில்
கேலிச் சித்திரங்களை வெளியிட்டு இந்த மோதலை தூண்டி விட்ட டென்மார்க் செய்திப்பத்திரிகையான ஜில்லான்ட்
போஸ்டனுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பதாகும். அண்மைய பத்திரிகை தகவல்களின்படி கேலிச் சித்திரங்கள்
வெளியிடப்பட்டமை குறித்து வருத்தம் தெரிவித்து 17,000 டென்மார்க் முஸ்லீம்கள் கையெழுத்திட்டு தந்த ஒரு மனுவை
ஏற்றுக்கொள்ள அப்போது அவர் மறுத்தபொழுது ராஸ்மசன் அந்த உள்ளூர் தகராறை ஒரு சர்வதேச சம்பவமாக
மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் அதைத் தொடர்ந்து தங்களது கவலைகளை தெரிவிக்க விரும்பிய ஒரு
டசின் முஸ்லீம் நாடுகளின் தூதர்களை சந்திக்க மறுத்தார்.
செவ்வாய்க்கிழமையன்று துணை ஜனாதிபதி டிக் செனியும் பொது தொலைக் காட்சி
ஒளிபரப்பிற்கான நிகழ்ச்சியான நியுஸ்ஹவருக்கு அளித்த பேட்டியில் அவர் அறிவித்தார் "பேச்சு சுதந்திரத்தில்
மிகவும் ஆழமாக நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். வெளிப்படையாகவே, நாங்கள் நினைப்பது உங்களுக்கு
தெரியும், மற்றவர்களது மதங்களை ஒவ்வொருவரும் மதிக்கவேண்டும் என்பது மக்களுக்கு
பொருத்தும், ஆனால் அந்த கேலிச்சித்திரங்களை
வரைந்தமை நாம் பார்த்திருக்கின்ற வன்முறையை நியாயப்படுத்துகிறது என்று நான் நம்பவில்லை.
ஜோர்டானின் மன்னர் அப்துல்லா விஜயத்திற்கான புதன்கிழமை வெள்ளை மாளிகை விழாவில்
புஷ் வழக்கத்திற்கு மாறாக முஸ்லீம்-எதிர்ப்பு கேலிச்சித்திரத்திற்கு பதில் மீது குவிமையப்படுத்தியிருந்தாரே தவிர
அந்த ஆத்திரமூட்டல் மீது எதுவும் குறிப்பிடவில்லை "ஒரு சுதந்திரமான பத்திரிகையில் என்ன அச்சிடப்படலாம் என்பது
தொடர்பான அதிருப்தியை தெரிவிப்பதற்கு வன்முறை ஒரு வழி என்பதை நாங்கள் நிராகரிக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
"ஈரானும், சிரியாவும் தங்களது வழிக்கு அப்பால் சென்று, உணர்வுகளை
தூண்டுவதற்கு செயல்பட்டன என்பதில் சந்தேகத்திற்கு
இடமில்லை மற்றும் இதை தங்களது சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
என்று அறிவித்து, ஒரு சில மணி நேரம் கழித்து வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டாலிசா ரைஸ் அமெரிக்க
அரசாங்கத்தின் உண்மையான இலக்குகளை விளக்கினார். அது தொடர்பாக அவர்களிடம் கேட்பதற்கு உலகம்
கடமைப்பட்டிருக்கிறது."
தொடக்க ஆத்திரமூட்டலிருந்து முஸ்லீம்களின் பதில்மீது குவிமையத்தை திருப்புவதற்கான
முடிவிற்கு இரண்டு பிரதான காரணங்கள் உந்து சக்தியாக உள்ளன. மற்றும் அவற்றில் எதுவும் பேச்சு சுதந்திரத்திற்கான
அக்கறையோடு எந்த வகையிலும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை.
குறுகிய காலக்கட்டத்தில், குறிப்பாக அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்கா
நியமித்துள்ள அதிபர் ஹமீத் கர்சாயின் பொம்மை அரசாங்கம் தலைநகர் காபூலுக்கு வெளியில் தட்டுத்தடுமாறி
சிறிதே அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கும் ஆப்கனிஸ்தானில் வெடித்தெழும் எதிர்த்தாக்குதல்களினால்
கலவரமடைந்துள்ளனர். வளர்ந்து வருகின்ற கவலை எதுவென்றால் முஸ்லீம்களது எதிர்ப்புக்கள் எதிர்க்கட்சியின் பரந்த
இயக்கத்தை பற்றவைத்துவிடக் கூடும், அது அந்த நாட்டை நிர்வாகம் செய்ய முடியாததாக ஆக்கிவிடும் அல்லது
அமெரிக்க ஆக்கிரமிப்பு படை ஈராக்கில் ஏற்கனவே இராணுவம் மெல்லியதாய்
பரவியுள்ள நிலையில் அமெரிக்க ஆக்கிரமிப்புப்
படைகளை கூடுதலாக அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படலாம்
என்று வாஷிங்டனில் அதிகரிக்கும் கவலை உள்ளது.
காபூலில் மற்றும் அமெரிக்க மற்றும் நேட்டோ தளங்களுக்கு வெளியில் அமெரிக்க
நேட்டோ மற்றும் ஆப்கான் துருப்புக்கள் குறைந்த பட்சம் டசின் ஆர்பாட்டக்காரர்களை கொன்றிருக்கின்றன.
நாட்டின் தென் பகுதியிலுள்ள குவலாத்தில் கடைசியாக அட்டூழியம் நடந்திருக்கிறது, அங்கு புதன் கிழமையன்று ஒரு
அமெரிக்க இராணுவத் தளத்தை நோக்கிச் சென்ற ஒரு கூட்டத்தின் மீது ஆப்கான் போலீசார் சுட்டதில் 4 பேர்
கொல்லப்பட்டனர்.
ஆப்கனிஸ்தானிலுள்ள ஒரு அமெரிக்க இராணுவ பேச்சாளர்
CBS நியூசிற்கு கொடுத்த ஒரு அறிக்கையில் தலிபான்
கொரில்லாக்கள் அல்லது அல்-கொய்தாவே இந்த வன்முறைக்கு காரணம் என்று தொடக்கத்தில் குறிப்பிட்டார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஆதரிப்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று பின்னர் ஒப்புக்
கொண்டார். இஸ்லாமிய அடிப்படைவாதிகளான ஒரு சிறிய மற்றும் செல்வாக்கிழந்த சிறுபான்மையினர்களுக்கு ஆதரவு
குறைந்து கொண்டு வருவதாக வழக்கமாக கூறிக் கொண்டு வருவதால் இந்த வெகுஜன கண்டனங்களில் தாலிபானுக்கு
ஒரு பெரிய பங்கு இருப்பதாக கூறுவதன் மூலம் பென்டகன் ஒரு தெளிவான தர்மசங்கடமான நிலையை
எதிர்க்கொண்டிருக்கிறது.
நீண்டகால அடிப்படையில் --மற்றும் இது ஆண்டுகளை விட மாதங்களில் கணக்கிடப்படலாம்--
மத்திய கிழக்கில் முதலில் ஈரானையும் சிரியாவையும் குறிவைத்து மேலும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கான அதன் திட்டங்களுக்கு
அரசியல் ஆதரவின் புதிய தளத்தை வழங்கும்பொருட்டு புஷ் நிர்வாகமானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய இரண்டு
நாடுகளில் முஸ்லீம்-எதிர்ப்பு உணர்வுகள் வளர்வதை ஊக்குவிக்க முயல்கிறது. அத்தகைய இராணுவ நடவடிக்கைக்கு பிரிட்டனுடன்
சேர்த்து ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவு ஒரு தவிர்க்க முடியாத தேவை
என்று வெள்ளை மாளிகையும் வெளியுறவுத்துறையும் நம்புகின்றன.
அமெரிக்காவில் "பத்திரிகை சுதந்திரம்" என்ற முழக்கம் ஒரு மிக ஆழ்ந்த
பிற்போக்கு மற்றும் ஜனநாயக-விரோத ஆத்திரமூட்டலுக்கு ஆதரவாக தாராளவாத மத்திய தர வர்க்கத்தின்
பிரிவுகளை ஏமாற்றுவதற்கு கையாளப்படுகிறது. இந்த பிரசாரத்திற்கு இடம் கொடுப்பவர்கள் ஜனநாயக
உரிமைகளின் மிகக் கொடூரமான எதிரியான, புஷ் நிர்வாகத்துடனான தங்களின் கூட்டின் மீது தயக்கம் காட்ட
வேண்டும்.
"பேச்சு சுதந்திரம்" மற்றும் "பத்திரிகை சுதந்திரத்தை" பாதுகாப்பவர்களாக
காட்டிக்கொள்வது யார்? 9/11-க்கு பின்னர் ''தாங்கள் சொல்வதை கவனிக்க வேண்டும்'' என்று அதன்
விமர்சகர்களை எச்சரித்த, ஈராக் போரில் மடிந்தவர்கள் உடல்கள் அமெரிக்காவிற்கு திரும்பி வருகின்ற சவப்
பெட்டிகளை படம் பிடிப்பதைத் தடுத்த, பத்திரிகை தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் வழக்கமாக வரும்
கோரிக்கைகளை மறுத்து வருகின்ற மற்றும் தற்போது தனது சட்ட விரோதமான வேவுபார்க்கும் நடவடிக்கையை
அம்பலப்படுத்துவதை ஒரு சாக்குப் போக்காக கொண்டு பத்திரிகை சுதந்திரத்தை முன் தணிக்கை செய்வதற்காக
NSA வேவு பார்க்கும் கதையை நியூ யோர்க் டைம்சிற்கு
கசியவிட்டவர்களை கண்டு பிடிப்பதற்காக ஒரு பாதுகாப்பு புலன் விசாரணையை மேற்கொண்டிருக்கின்ற
அரசாங்கம் ஆகும்.
ஆத்திரமூட்டும் கேலிச் சித்திரங்களை வெளியிடுவது ஜனநாயக உரிமைகள் என்று வலியுறுத்துகின்ற
கூற்று முட்டாள்தனமானது. போர்-ஆதரவு வாஷிங்டன் போஸ்ட் கூட செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட
ஒரு தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: "ஐரோப்பாவில் பேச்சு சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும்
இல்லை----எந்த பத்திரிகையும் கேலிச் சித்திரங்களை வெளியிடுவது தடுக்கப்படவில்லை. மற்றும் அத்தகைய முன்
தணிக்கை முறையை கொண்டு வர வேண்டும் என்று முஸ்லீம்கள் விடுத்த கோரிக்கைகளை ஐரோப்பிய அரசாங்கங்கள்
உடனடியாக தள்ளுபடி செய்து விட்டன. அந்த ஓவியங்களை ஐரோப்பா மறுபதிப்பு செய்தமை அவர்கள் சுதந்திரத்தை
நேசிப்பதை விளக்கிக்காட்டவில்லை, மாறாக அவர்களது உணர்வற்ற தன்மையை---- அல்லது தங்களது சொந்த
சமுதாயங்களில் பன்முகத்தன்மை வளர்வதற்கு குரோதப்போக்கைக் காட்டுகிறது. அத்தகைய அணுகுமுறைகள் தான்
இஸ்லாத்திற்கு எந்த அவதூறையும் விட மேற்கு நாடுகள் மீது முஸ்லீம்களின் எதிர்ப்பு உணர்வை அதிகம் தூண்டி விட்டதாகும்
மற்றும் ஐரோப்பாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லீம்களுக்கு பெருகி வரும் கோபத்தை தூண்டிவிட்டதாகும்."
தாராளவாத மற்றும் பழமைவாத ஐரோப்பிய பத்திரிகையில் முஸ்லீம்-எதிர்ப்பு கேலி
சித்திரங்களை வெளியிடும் ''உரிமை'' உண்டு என்ற அறிவிப்பில் மிகுதியாகக் காணப்படும் ஒற்றுமை ஒரு தீங்கான
அரசியல் வளர்ச்சியைக் காட்டுவதாகும். ஐரோப்பிய ஆளும் செல்வந்தத் தட்டை சேர்ந்த அனைத்து பகுதிகளும் உள்
நாட்டில் இனவாத மற்றும் புலம்பெயர்ந்தோர்-எதிர்ப்புகளை தூண்டிவிடும் ஒரு கொள்கைக்கு பின்னணியாகவும் வெளிநாடுகளில்
இராணுவ பலத்தை பயன்படுத்துவதில் அதிக விருப்பம் கொள்ளச் செய்வதற்கும் அணிதிரளுவதை அது சுட்டிக்காட்டுகிறது.
இந்த சம்பவத்தை மத்திய கிழக்கு நாடுகளின் இரத்தக்களரி வரலாற்றிலிருந்து பிரித்துப்
பார்க்க முடியாது. அவற்றில் மிகப் பெரும்பாலானவை நமது நினைவில் நிற்கும் காலத்திலேயே ஐரோப்பிய வல்லரசுகளான
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்றவற்றால் ஏற்படுத்தப்பட்ட கொடூரமான காலனித்துவ ஆட்சிகளால்
ஆளப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய கால கட்டத்தில் பெயரளவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னரும்
அந்த ஒட்டு மொத்த பிராந்தியமும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தால் மேலாதிக்கம் செய்யப்பட்டது-எண்ணெய்
மற்றும் எரிவாயு வளங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரமாண்டமான பெரு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தியதே
தவிர நேரடி அரசியல் ஆட்சி மூலம் அல்ல. மற்றும் இன்றைய தினம் ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தானை அமெரிக்கா வெற்றிகொண்டதன்
மூலம் நேரடி காலனித்துவ-பாணி கட்டுப்பாடு மீண்டும் மீட்கப்பட்டிருக்கிறது.
இந்த ஜடரீதியான நலன்கள் - அதற்கெல்லாம் மேலாக எண்ணெய் மற்றும் எரிவாயு
வளங்களை கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் - தற்போதைய மோதலுக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் மத
நம்பிக்கை அல்லது கலாச்சார பிரச்சனைகளை கேள்ளிவிக்குள்ளாக்கவில்லை. அது ஏகாதிபத்திய வல்லரசு மற்றும் ஓடுக்கப்பட்ட
மற்றும் சுரண்டப்படுகின்ற மக்கள் எதிராக மோதும் ஒரு மோதலை தவிர நாகரீகங்களுக்கு இடையில் நடைபெறுகின்ற
ஒரு மோதல் அல்ல. உலகின் பெட்ரோலிய இருப்புக்களில் முக்கால் பங்கு இடம் பெற்றுள்ள எல்லைகளில்
முஸ்லீம்களுக்கு பதிலாக ஹிந்துக்கள் குடியிருந்து வருவார்களானால், மேற்கு நாட்டு பத்திரிகைகள் பசுவதைத் தடைச்
சட்டத்திற்கு எதிராகவும் அல்லது ஹிந்து ஜாதி முறைகளுக்கு எதிராகவும் கூக்குரல்களை எழுப்பிக் கொண்டிருக்குமே
தவிர, நபிகள் நாயகத்தை சித்தரிக்கும் படங்களை வெளியிடக் கூடாது என்று தடை விதிக்கக் கோரும்
கோரிக்கைக்கு எதிராக கூக்குரல்களை எழுப்பியிருக்காது.
See Also :
டென்மார்க்கும் ஜில்லான்ட்-போஸ்ட்டனும்: ஒரு ஆத்திரமூட்டலுக்கான பின்னணி
ஐரோப்பிய செய்தி
ஊடகம் முஸ்லீம்-எதிர்ப்பு கேலிச் சித்திரங்களை வெளியிடுகிறது: ஒரு இழிந்த மற்றும் முன்னேற்பாட்டுடன் செய்யப்பட்ட
ஆத்திரமூட்டலாகும்
Top of page |