World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பாDenmark and Jyllands-Posten: The background to a provocationடென்மார்க்கும் ஜில்லான்ட்-போஸ்ட்டனும்: ஒரு ஆத்திரமூட்டலுக்கான பின்னணி By Peter Schwarz டென்மார்க் மற்றும் ஐரோப்பிய செய்தித்தாள்களினால் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை வெளியிட்டது பற்றிய சர்ச்சையில் உள்ள அடிப்படைப் பொய், இந்த மோதல் பேச்சு சுதந்திரம் மற்றும் மதவாத முன் தணிக்கைக்குமிடையில் அல்லது மேற்கு நாடுகளின் அறிவொளிக்கும் இஸ்லாமிய மத வெறிக்கும் இடையிலான மோதல் என்ற கூற்றாகும். ஜேர்மனியின் பசுமைகளோடு நெருக்கமான உறவுகளை வைத்திருக்கன்ற taz செய்தித்தாள் இந்த தகராறு கிறிஸ்தவ மதம் உட்பட அனைத்து மதங்களின் செல்வாக்கையும் ``ஒரு சகித்துக் கொள்ளும் அளவிற்கு`` தாழ்த்துவது பற்றிய மோதல் என்று அறிவித்தது. Spiegel.online-ல் ஹென்ரிக் எம். பிராடர் அந்த டென்மார்க் தினசரியான கேலி சித்திர சர்ச்சையைக் கட்டவிழ்த்து விட்ட ஜில்லான்ட்-போஸ்ட்டன் வெளியீட்டாளர்களால் அரைகுறை மனதோடு கேட்கப்பட்ட மன்னிப்பை "எப்படி ஜனநாயக பொதுக்கருத்து ஒரு சர்வாதிகார நிலைப்பாட்டிற்கு கீழ்ப்படிந்து விடுகிறது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு" என்று கண்டித்தார். டென்மார்க்கில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகளை ஒரு ஆய்வு செய்வது அத்தகைய வாதங்கள் எவ்வளவு மோசடியானவை என்பதை அம்பலப்படுத்துகின்றன. கடந்த சில ஆண்டுகளில்அரசியல் மாற்றம் ஒரு தெளிவான----மற்றும் வெறுத்து ஒதுக்கத்தக்க வெளிப்பாடாக அமைந்த மற்றொரு ஐரோப்பிய நாட்டை காண்பது மிகக் கடினமாகும். சகிப்புத் தன்மைக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் புகழ்பெற்ற ஒரு நாட்டில் சமூக நெருக்கடிகளும் பழைய தொழிலாள வர்க்க அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட காட்டிக்கொடுப்புகளும் திட்டமிட்டு இன வெறியையும் இனவாதத்தையும் தூண்டிவிடுகின்ற அரசியல் சக்திகள் உதித்தெழுவதற்கு ஒரு வழியை திறந்து விட்டன. இந்த நடைமுறையில் ஜில்லான்ட்-போஸ்ட்டன் செய்தி பத்திரிகை ஒரு முன்னணிப் பங்கை வகிக்கிறது. சென்ற இலையுதிர்காலத்தில் ஜில்லான்ட்-போஸ்ட்டன் நபிகள் நாயகத்தை வரைவதற்கு 40 முன்னணி டென்மார்க் கேலிசித்திரக்காரர்களுக்கு பணிகளை ஒதுக்கியது. அவர்களில் 12 பேர் பதிலளித்தனர் மற்றும் அதன் முடிவுகள் செப்டம்பர் 30-ல் வெளியிடப்பட்டன. இந்த செயற்திட்டம் ஆத்திரமூட்டுவதற்கு வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டது. இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் என்று வருகின்றபோது "டென்மார்க் பொதுமக்களிடையே சுய தணிக்கைகளின் வரம்பை சோதிப்பதை`` நோக்கமாகக் கொண்டு அது வெளியிடப்பட்டதாக அந்த பத்திரிகையின் கலாச்சார ஆசிரியர் பிளமிங் ரோஸ் தெரிவிக்கிறார். "ஒரு மதச்சார்பற்ற சமுதாயத்தில் எள்ளி நகையாடப்படுவது, கேலி பேசப்படுவது அபத்தமாக தோன்றும்படி செய்வது ஆகியவற்றை சகித்துக் கொண்டுதான் முஸ்லீம்கள் வாழ வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். அவர்கள் எதிர்பார்த்த விளைவு முஸ்லீம்கள் சமுதாயத்திலேயே ஏற்படத் தவறிவிட்டது என்றதும் அந்த செய்தித்தாள் தொடர்ந்து அதன் பிரசாரத்தை நடத்தியது ஒரு முழுமையான அளவில் மோசடியை உருவாக்க உறுதியோடு செயல்பட்டது. எந்த விதமான கண்டனமும் இல்லாமல் ஒரு வாரம் சென்றதும், பத்திரிகையாளர்கள் அடிப்படைவாத கருத்துக்களை தெரிவிப்பதில் நன்கு பிரபலமான டென்மார்க் இஸ்லாமிய மதத்தலைவர்கள் பக்கம் திரும்பினர் மற்றும் அவர்களிடம் கோரினர்: "நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை? "இறுதியாக பிந்தையவர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்தனர் மற்றும் மத்திய கிழக்கிலுள்ள சக சிந்தனையாளர்களை விழிப்படைய செய்தனர். இந்தக் கட்டத்தில் டென்மார்க் அரசாங்கத்தின் தலைவர் ஆண்டிரஸ் போக் ரஸ்மசனும் ஆளும் கூட்டணியில் ஒரு பகுதியாக உள்ள இனவெறிகொண்ட டென்மார்க் மக்கள் கட்சியும் செயல்படத் தொடங்கின. பாக் ராஸ்மசன் கவலைகொண்ட அரபு தூதர்கள் பிரச்சனையை தெளிவுபடுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்த விடுத்த வேண்டுகோள்களை திட்டவட்டமாக தள்ளுபடி செய்தார். இஸ்லாமிய அரசுகளின் பிரதிநிதிகளுடன் விவாதங்களை நடத்துவதற்காக பிரதமருக்கு 22 முன்னாள் டென்மார்க் தூதர்கள் அழைப்பை விடுத்தும், ராஸ் முஸ்சன் அவர் நிலைப்பாட்டில் தொடர்ந்திருந்தார், "பத்திரிகைகளின் சுதந்திரம்" ராஜதந்திர விவாதங்களில் ஒரு விவாத பொருளாக இருக்க முடியாது என்று வாதிட்டார். டென்மார்க் மக்கள் கட்சியின் அவைத்தலைவரான பியா கஜேஸ்காட் அந்த கேலிச் சித்திரங்கள் பற்றி புகார் செய்த டென்மார்க் முஸ்லீம்களை அவதூறு செய்தார். பகிரங்கமாக அவர்களை தேசத் துரோகிகள் என்று கண்டித்தார் ஏனெனில் பேச்சு சுதந்திரத்திற்கு மேலாக அவர்களது மத நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்றார். ஆரம்பத்திலிருந்தே "பேச்சு சுதந்திரத்திற்கும்" அந்த பிரச்சாரத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை மற்றும் டென்மார்க் மக்கள் கட்சியோடு சேர்ந்து, வலதுசாரி நவீன-தாராளவாத கூட்டணிகள் மற்றும் பழைமைவாதிகள் அடங்கிய, போக் ராஸ்மசன் அரசாங்கத்தின் அரசியல் செயற்பட்டியலோடு அவற்றின் ஒவ்வொரு அம்சமும் சம்மந்தப்பட்டிருந்தன. அப்போது ஆட்சி நடத்திய சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்கள் உட்பட, நாட்டின் அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் ---- பெருகி வரும் சமூக நெருக்கடிக்கு இன வெறுப்பு பிரசாரங்களை விடையாக அளித்தபொழுது பின்னவர் 1990களில் முன்னணிக்கு வந்தார். அந்த நேரத்தில் மக்கள் கட்சி இஸ்லாம் ஒரு "புற்று சீழ் புண்" என்றும் "பயங்கரவாத இயக்கம்" என்றும் குறிப்பிட்டது. இனவெறி வெடிவுரைகளில் இழிபுகழ் பெற்ற கிசர்ஸ்கார்ட் இஸ்லாமிய உலகம் நாகரீகமானது என்ற கருத முடியாது என அறிவித்தார். "ஒரே ஒரு நாகரீகம் தான் உண்டு மற்றும் அது நமது நாகரீகம் தான்" என்று அவ்வம்மையார் கூறினார். அந்த நேரத்தில் பாக் ராஸ்மசன் வலதுசாரி அணியைச் சேர்ந்த வென்ஸ்டர் கட்சியின் தலைவராக இருந்தார், மக்கள் கட்சியின் பெரும் பகுதி இனவாத வாய்வீச்சை ஏற்றுக் கொண்டார். 2001 தேர்தல் பிரச்சாரத்தில் இதர பிரச்சனை பலவற்றுள் "குற்றமுடைய வெளிநாட்டவர்களை" 48 மணி நேரத்திற்குள் நாட்டிலிருந்தே தூக்கி எறிந்து விட வேண்டும் என்று கோரினார். அனைத்து முஸ்லீம்களுமே வன்முறையில் ஈடுபடுபவர்கள் என்று குறிப்பிடுவதற்காக அவரது பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு தேர்தல் சுவரொட்டியில் முஸ்லீம் குற்றவாளிகளின் படங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்தலில் வென்ஸ்டர் வெற்றி பெற்றது மற்றும் பாரம்பரிய பழமைவாதக் கட்சியுடன் சேர்ந்து ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தது, அதனை தீவிரவாத மக்கள் கட்சி ஆதரித்தது. டென்மார்க் அரசியல் வலது பக்கம் சாய்ந்தது. நாட்டின் புலம்பெயர்ந்தோருக்கான சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டன அதே நேரத்தில் வளர்ச்சி உதவிக்கான செலவினங்கள் வெட்டிக்குறைக்கப்பட்டன. ஈராக் போரை டென்மார்க் மக்களில் மிகப் பெரும்பாலோர் எதிர்த்தனர். போக் ரஸ்மசன் புஷ் நிர்வாகத்தின் பின்னால் அணி வகுத்தார் மற்றும் அந்த நாட்டை ஆக்கிரமிப்பதில் உதவுவதற்கு டென்மார்க் துருப்புகளின் ஒரு படைப்பிரிவை அனுப்பினார். அரசாங்கத்தின் இன வெறுப்புக் கொள்கைகளை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அதன் ஆதரவை வலுப்படுத்துவதற்கும் நோக்கமாகக் கொண்டு ஜில்லான்ட்ஸ் போஸ்ட்டனால் இந்த பிரச்சாரம் கட்டவிழ்த்து விட்டிருப்பது இந்த பிற்போக்கு வளைவரைபாதையை தொடர்வதற்கும் தீவிரமாக்குவதற்குமாகும். அந்த கேலிச்சித்திரங்களே அப்பட்டமான இனவாதத்தை கொண்டவை. ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு பயங்கரவாதியாக ஆகக் கூடியவர் என்று குறிப்பிடுகின்றன மற்றும் அவர்களது தீர்க்கதரிசியை அவதூறு செய்யப்பட்ட படத்தை கண்டிக்கும் முஸ்லீம்களின் அறிக்கைகளும் படங்களும் இந்த அவதூறை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஐரோப்பா முழுவதிலும் ஊடகங்களும் அதிகாரபூர்வமான அரசியலும் அத்தகைய கிளர்ச்சியில் முன்னீடுபாடு கொள்வது அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு அதில் எந்த பொறுப்பும் இல்லை என்றாலும் பயங்கரவாதக் குழுக்கள் முன்னெடுக்கின்ற செயல்களுக்கு முஸ்லீம்கள் ஒட்டுமொத்தமாக பொறுப்பு என்று கூறப்படுகின்றனர். ஜேர்மனியிலுள்ள மாநிலமான பாடன்- வூட்டம்பேர்க்கில், நாட்டில் தங்கவிருக்கும் முஸ்லீம்கள், கேள்விகள் அடங்கிய ஒரு பட்டியலுக்கே பதிலளித்தாக வேண்டும் அவற்றில் அவர்களது மத நம்பிக்கைகள் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. முகம்மதை இழிவுபடுத்துவதற்கு எதிராக கண்டனங்களை தயாரிப்பு செய்வதற்கு முஸ்லீம் தீங்குகளை வழக்கமாக தொலைக்காட்சி செய்தியாளர்கள் வழங்கிவருகின்றனர் ஆனால் பயங்கரவாதக் குழுக்கள் இஸ்லாமின் பெயரால் முன்னெடுக்கின்ற செயல்களுக்கு எதிராக எழவில்லை என்றும் அவர்கள் இரகசியமாக அத்தகைய செயல்களை ஆதரிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். "மேற்கு நாடுகளின் மதிப்புகளோடு" உடன்பாடற்ற ஒரு மட்டகரமான கலாச்சாரம் போல இஸ்லாத்தை சித்தரிக்கும் ஒரு பிரச்சாரம் தோன்றியுள்ளது. 1930களில் பாசிச செய்திப் பத்திரிகைகளான நாஜி ஸ்ருர்மர் போன்றவை செமிட்டிச-எதிர்ப்பு கேலிச்சித்திரங்களை பரப்பியதற்கு இணையாக இப்போது செயல்பட்டு வருகின்றன. யூதர்களை மனித இனத்தில் கீழ் நிலைப்பட்டவர்கள் என்று சித்தரித்தது. இன அழிப்புக்கான கருத்தியலை தயாரிப்பதற்கு உதவியது. இன்றைய தினம் முஸ்லீம்களை திட்டமிட்டு இழிவுபடுத்துவது சிரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக புதிய போர்களுக்கான பொது மக்கள் கருத்துக்களை முன்னேற்பாடு செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது------ இந்தப் போர்கள் ஈராக் போரை விட மிகக் கொடூரமான தன்மை கொண்டதாக அமையும் மற்றும் அணு ஆயுதங்களும் அதில் பயன்படுத்துவதும் சம்மந்தப்படலாம். இந்த முயற்சியை ஜில்லான்ட்-போஸ்ட்டன் எடுத்திருப்பது தற்செயலாக நடந்து விட்ட ஒன்றல்ல. 1930களில் நாஜிக்களுக்கு ஆதரவாக அறிவிப்புக்களை வெளியிட்டதில் இந்த செய்தித்தாள் இழிபுகழ்பெற்றது மற்றும் டென்மார்க் அண்மையில் வலது பக்கம் திரும்பி இருப்பதில் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கிறது. ஹார்கஸ் கிராமப்புறப் பகுதிகளில் ஆசிரியர் அலுவலகங்களை வைத்திருக்கும் ஜில்லான்ட்- போஸ்ட்டன் 1980களின் தொடக்கம் வரை முக்கியத்துவம் இல்லாத ஒரு மாகாண செய்தித்தாளாகவே இயங்கி வந்தது. அந்த நேரத்தில் ஒரு மூர்க்கத்தனமான விரிவுபடுத்தும் கொள்கையை அது தொடங்கியது. சிறிய பிராந்திய மற்றும் உள்ளூர் பத்திரிகைகளை அது விலைக்கு வாங்கியது மற்றும் டென்மார்க் தலைநகரத்தில்----Berlingske Tidende மற்றும் Politiken-----என்று நிலைபெற்றுவிட்ட இரண்டு பத்திரிகைகளோடு ஒரு விலைப் போரில் ஈடுபட்டது மற்றும் அதன் சுற்றை 1,70,000 பிரதிகளாக விரைந்து உயர்த்திக் கொண்டு, நாட்டில் மிகப்பெரிய சுற்றுக்குவிடப்படும் செய்தித்தாளாக உருவாகியது. 1990களில் திட்டவட்டமான பழமைவாதப் பத்திரிகையான இது பகிரங்க இன வெறுப்பு வலதுசாரி சக்திகளுக்கான ஒரு ஒலி பெருக்கியாக தன்னை பெருமளவில் வளர்த்துக்கொண்டது. ஆசிரியர் குழுவில் ஏறத்தாழ கால்வாசிப்பேர் நீக்கப்பட்டனர் மற்றும் அது மூர்க்கமாக அதிகரிப்பதற்கு ஏற்ப அதன் தரம் வீழ்ச்சியடைந்தது. முகம்மதுவின் கேலிச்சித்திரங்கள் வெளியிடப்படுவதற்கு சற்று முன்னர் ஜில்லான்ட்-போஸ்ட்டன் "இஸ்லாம் மிகப்பெரிய போர் வெறி கொண்டது" என்ற ஒரு தலைப்புடன் செய்தியிதழை வெளியிட்டது. "யூதர்கள் பெயர்களை கொண்ட, முஸ்லீம்களின் கொலைப்பட்டியல் என்று கூறப்படும் ஒன்றை, அம்பலப்படுத்தும் தகவல் ஒன்றை அந்த செய்தித்தாள் வெளியிட்டது - அது முழு கற்பனை என்று தகவல் வெளிரும்வரை அதனை வெளியிட்டது. ஓராண்டிற்கு முன்னர் அந்த செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் இடையில் தஞ்சம் கோருபவர்களால் நலன்புரி உரிமைகள் திட்டமிட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருவதாக குற்றம் சாட்டி ஒரு செய்தி வெளியிடப்பட்டதன் காரணமாக இராஜினாமா செய்தார். இந்த பரபரப்பான குற்றச்சாட்டுக்கள் அவரின் விருப்பத்திற்கு விரோதமாக வெளியிடப்பட்டதால் அவர் இராஜினாமா செய்தார். ஜில்லான்ட்-போஸ்ட்டனின் இழிபுகழ், மிக்க வலதுசாரிகளால் அனுதாபங்கொண்டதில் இரகசியம் எதுவுமில்லை. "அந்த செய்தித்தாள் ஏறத்தாழ ஒரு அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு டென்மார்க் சமுதாயத்தில் இடதுசாரிஅணி தாராளவாதிகளின் அரசியல் மற்றும் கருத்தியல் பிடிப்பை வெற்றிகரமாக சிதைத்து விட்டதாக பெருமையடித்துக் கொண்டது" என Süddeutsche Zeitung வர்ணித்துள்ளது. ஜில்லான்ட்-போஸ்ட்டனை மக்கள் கட்சியோடு சமமாக கருதப்படுவதை ''அனுமதிக்க முடியாத அளவிற்கு மிகவும் எளிமைப்படுத்துவது'' என்று எடுத்துக் கொண்டாலும் நிச்சயமாக இரண்டும் பரந்த அர்த்தத்தில் சக போராளிகள் என்று Süddeutsche Zeitung கூறியுள்ளது. ஒரு மாறுபட்ட கருத்தை எடுத்து வைக்கின்ற எவரையும் வழக்கமாக கண்டித்து ஒழித்துக் கட்டும் அளவிற்கு பிரசாரம் செய்யும், டென்மார்க் பத்திரிகைகளிலேயே மிகத் தீவிரமான வலதுசாரி அணியை சேர்ந்த இந்த பத்திரிகை ஜில்லான்ட் - போஸ்ட்டன் இன்றைய தினம் பேச்சு சுதந்திரத்திற்கு ஒரு கலங்கரை விளக்கம் என்று கருதப்படுவதை, துல்லியமாக ஜில்லான்ட் - போஸ்ட்டனை டென்மார்க் ஊடகங்களை ஆராய்பவர்கள் எதிர்ப்பொருளில் குறைவில்லா வகையில் குறித்துக்கொள்வர், என்று FrankfurtRundshau எழுதுகிறது. |