:
ஐரோப்பா :
ரஷ்யா
மற்றும் முந்தைய USSR
Russian gas supplies resume, but relations with Georgia
and Armenia remain tense
ரஷ்ய எரிவாயு அளிப்புக்கள் மீண்டும் தொடக்கம், ஆனால் ஜோர்ஜியா மற்றும் ஆர்மீனியாவுடனான
உறவுகள் தொடர்ந்து இறுக்கம்
By Simon Whelan
9 February 2006
Use this version to
print |
Send this link by email |
Email the author
ரஷ்ய குழாய்வழி பாதைகளின் மீதான தாக்குதல் ஆர்மீனியா மற்றும் ஜோர்ஜியா
ஆகிய இரு நாடுகளுக்கு எரிவாயு அளிப்புக்களை துண்டித்திருந்த ஒரு வாரத்திற்கு பின்னர், ஜனவரி 30 அன்று எரிவாயு
அளிப்புக்கள் மீண்டும் தொடங்கியது.
தெற்கு ரஷ்ய எல்லப்பகுதியான வட ஓசிடியாவில் உள்ள
Mozdok-Tbilisi
எரிவாயுக் குழாய் திட்டத்தின் முக்கிய கிளை, மற்றும் சேர்மஇருப்புக் கிளை ஒன்றில் ஜனவரி 22ம் தேதி இரண்டு
வெடிப்புக்கள் நிகழ்ந்தன. சில மணி நேரத்திற்குள்ளாகவே, ரஷ்யாவின் மற்றொரு தெற்கு எல்லைப் பகுதியான
Karachayevo-Cherkessiya
விலும் மின்சாரம் எடுத்துச் செல்லும் கேபிள் ஒன்றும் வெடிப்பு ஒன்றினால் செயலிழந்தது.
இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்க எந்த அமைப்பும் முன்வரவில்லை; ஆனால்
ரஷ்ய அதிகாரிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகளை குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு பதில் கூறும் வகையில் ஜோர்ஜிய
ஜனாதிபதி மிகைல் சாக்காஷ்விலி "எரிவாயு நாச வேலை"க்கு ரஷ்யாதான் காரணம் என்று குற்றம்
சாட்டியதோடு, ஜோர்ஜியாவை மீட்புப் பணம் கொடுப்பதற்கு ஆளாக்கியிருப்பதாக கிரெம்ளின் மீது குற்றம்
சாட்டியுள்ளார். ஜோர்ஜிய அரசாங்கம் "வெறிபிடித்து இழிந்து குரல் கொடுப்பதாக" ரஷ்ய அதிகாரிகள் பதிலுக்கு
குற்றம் சாட்டினர். குழாய்கள் வெடிப்பிற்கு சில நாட்கள் முன்புதான் சாக்காஷ்விலி வாஷிங்டன் டைம்ஸில்
தலையங்கத்திற்கு எதிர்ப்பக்கத்தில் உள்ள கட்டுரை ஒன்றில் மேற்கு நாடுகள் ரஷ்ய ஆற்றலை நம்பியிருத்தலுக்கு முற்றுப்புள்ளி
வைக்குமாறும், ரஷ்யாவில் இருந்து வாங்குவதற்கு பதிலாக காஸ்பியன் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கலாம்
என்றும் வலியுறுத்தி எழுதியிருந்தார்.
2003ல் ரோஜாப் புரட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சி மாற்றத்தில் எடுவர்ட்
ஷேவர்ட்நட்சே பதவிநீக்கம் செய்யப்பட்டு சாக்காஷ்விலி அமெரிக்க ஆதரவுடன் பதவிக்கு வந்ததில் இருந்து,
ஜோர்ஜியா, ரஷ்யா இருநாடுகளுக்கும் இடையே அழுத்தமான சூழ்நிலைதான் நிலவுகிறது.
இப்பொழுது திட்டமிடப்பட்டுள்ள பாக்கு-டிபிலிசி-சேஹன் (Baku-Tbilisi-Ceyhan)
எண்ணெய் குழாய்த்திட்டம் ரஷ்ய நிலப்பகுதியை சுற்றி வரும்
வகையில் உள்ளது, தெற்கு காகசஸ் மற்றும் பரந்த காஸ்பியன் பகுதியில் பதட்டங்களை அதிகரித்துள்ளது. ஏற்கனவே
சிக்கல் நிறைந்த நிலை இப்பொழுது கூடுதலான வகையில் அதையொட்டிய எரிவாயுக் குழாய் திட்டம் அதேபோன்ற
பாதையில் அஜெர்பைஜான், ஜோர்ஜியா மற்றும் துருக்கியை ஒட்டிப் போடப்பட்டதில் அதிகமாகிவிட்டது. ஆனால்
Erzzurum
ல் முடிவடைந்து விடுகிறது.
அஜெர்பைஜான் அரசாங்கத்தை வாஷிங்டனுக்கு நெருக்கமாக இழுக்கும் வகையில்,
குழாய்த்திட்டம் ஆர்மீனிய அரசாங்கத்தை இன்னும் கூடுதலான வகையில் ரஷ்ய, ஈரான் சுற்று வட்டத்திற்குள்தான்
தள்ளியுள்ளது போல் தோன்றுகிறது. தற்பொழுது ரொபேர்ட் கோஷரைனுடைய நிர்வாகத் தலைமையின் கீழ்
இருக்கும் ஆர்மீனியா முன்னோள் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்பு நடந்ததில் இருந்து ரஷ்ய
அரசாங்கத்திற்கு நெருக்கமான நட்புடைய நாடாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் திட்டமிடப்பட்டுள்ள எண்ணெய்
விலை இருமடங்காக்கப்படுவதும், ஆர்மீனியாவிற்கு ரஷ்ய எரிவாயு வழங்கும் குழாய்கள் தகர்ப்பும், யேரவான் (Yerevan
ஆர்மீனிய தலைநகரம்)
அரசாங்கம் மேலை நாடுகளுடன் புதிய சர்வதேச உறவுகளை காண முற்படாலம் என்று வட்டார
வர்ணனையாளர்களை ஊகிக்க வைத்துள்ளன.
இராணுவ வகையில், ஆர்மீனியா இன்னும் ரஷ்யாவுடன் பிணைந்துதான் உள்ளது; ஆனால்
துருப்புக்கள் தளத்தில் இருந்து செல்லுவது, அண்டை நாடான ஜோர்ஜியாவில் தளத்தைக் கொண்டிருந்த முகாம்களில்
இருந்து முடியாது என்று இப்பொழுது ஏற்பட்டுள்து. ஆனால் யேரவான் வாஷிங்டனில் இருந்து பெரும் நிதியங்களையும்
பெற்று வருகிறது.
பெரும் காஸ்பியன் பகுதியில் ஆர்மீனியா, அஜெர்பைஜன் மற்றும் ஜோர்ஜியா
நாடுகளுக்கு 2002-04 நிதியாண்டுகளின் புஷ் நிர்வாகம் இராணுவ, பொருளாதார உதவிகளை பெருக்கியுள்ளது.
$1.5
பில்லியனுக்கும் மேலாக போகும் இந்தப் பணம், இதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளைவிட 50 சதவிகிதம்
அதிகமாகும். இப்பகுதிக்கு மூத்த அதிகாரிகள் வருகை தருவதும் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற
போர்வையில் பெருகிவிட்டது; ஆனால் எண்ணெய் நலன்களும், பகு-டிபிலிசி-சேகன் குழாய்த் திட்டமும்தான்
வாஷிங்டனுக்கு மிகவும் முக்கியமான நலனாகும்.
ஜோர்ஜியா
இப்பொழுது வந்துவிட்ட நெருக்கடி ஏற்கனவே சிதைந்துள்ள ஜோர்ஜியாவின்
பொருளாதாரத்தை கிட்டத்தட்ட முழுத் தேக்க நிலைக்கு கொண்டுவந்துவிட்டது. அநேகமாக ரஷ்யாவையே முற்றிலும்
எரிவாயுவிற்காக நம்பியிருக்க வேண்டிய நிலையில், ஜோர்ஜிய அரசாங்கம் நீண்டகாலமாக கஷ்டத்தில் இருக்கும்
தனது மக்களுக்கு மண்ணெண்ணெய் மற்றும் விறகு வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எரிவாயு அளிப்பில் ஏற்பட்டுள்ள
தடை வெப்பப்படுத்துவதில் வாடிக்கையாக தடைகளையும், தவறுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது; மேலும்
மருத்துவமனைகள், மற்றும் ஏனைய முக்கிய பணிகளுக்கும் மின்வெட்டுக்கள் வழக்கமாகிவிட்டன. தொலைவில் உள்ள சில
கிராமப்பகுதிகளுக்கு இந்நெருக்கடிக் காலத்தில் எவ்வித ஆற்றல் அளிப்புக்களும் கொடுக்கப்படவில்லை.
காகசஸ் பகுதி இப்பொழுது இதுவரை இல்லாத கடுங்குளிரை சந்தித்துள்ளது; வெப்பம்
அளக்கும் கருவி -7 டிக்ரி சென்டிகிரேடை (19 டிக்ரி பாரன்ஹீட்டை) தொட்டுவிட்டது; இது 1980களில்
நடுப்பகுதிக்கு பின்னர் மிகக் குறைவான வானிலை ஆகும்.
சாக்காஷ்விலி ஆட்சி இந்த அதிருப்தியை தேசியவாத வழிவகைகளில் திசை
திருப்புவதற்கு முயன்றுள்ளது; ஜனாதிபதி தேசிய தொலைக்காட்சியில் தோன்றி "அரசாங்க அதிகாரிகள்
போர்க்கால அடிப்படையில் செயல்படுவது போல் உழைக்க வேண்டும். நம்முடைய எதிரிகளுக்கு நாம் ஒரு வலுவான
நாடு என்பதை காட்ட வேண்டும்." என்று பிரகடனம் செய்தார்.
ஜோர்ஜியா நிதிநிலையை பொறுத்தவரையில் திவாலாகிவிட்டது; சாக்காஷ்விலியின்
நிர்வாகம் நாட்டின் நீண்டகால பொருளாதார, ஆற்றல் சிக்கல்களை தீர்க்க இரண்டு ஆண்டு கால ஆட்சியில்
முடியாததை, நெருக்கடியை பயன்படுத்தி திசை திருப்ப முயல்கின்றது.
மாஸ்கோவிற்கும் டிபிலிசிக்கும் (ஜோர்ஜிய தலைநகர்) நடக்கும் சொற்போருக்கு
இடையே, ஜோர்ஜிய தலைநகரில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு எரிவாயு அளிப்பை ஜோர்ஜிய அதிகாரிகள்
நிறுத்திவிட்டனர். இதற்கு விடையிறுக்கும் வகையில் மாஸ்கோவிலுள்ள ஜோர்ஜிய தூதரகத்திற்கான எரிவாயு அளிப்பை
ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் நிறுத்திவிட்டது. ஜோர்ஜிய வான்வழியே ரஷ்ய இராணுவ விமானங்களையும் சிறிது
காலத்திற்கு ஜோர்ஜிய அதிகாரிகள் தடை செய்தனர்.
இந்த நெருக்கடியின்போது நூற்றுக்கணக்கான ஜோர்ஜிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
டிபிலிசியில் இருக்கும் ஒரு ரஷ்ய இராணுவ கட்டுப்பாட்டிற்கு எதிரே கூடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை
ஹிட்லர்-மீசையுடன் சித்தரித்து "காஸ்புடின்" ("GasPutin")
என்று எழுதப்பட்ட அட்டைகளை வைத்துக் கொண்டு கோஷம்
எழுப்பினர். இந்த எதிர்ப்புக்கள் சர்வதேச செய்தி ஊடக வசதிக்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கோஷ அட்டைகள்
உட்பட சாக்காஷ்விலி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அஜெர்பைஜனி குழாய்கள் மூலம் ஜோர்ஜியாவிற்கு ஈரான் எரிவாயுவை கொண்டு
வருவதற்கான முயற்சிகளையும் சாக்காஷ்விலி தூண்டிவிட்டுள்ளார். ஜனவரி கடைசியில், ஜோர்ஜிய அரசாங்கம்
தெஹ்ரானுடன் இயற்கை எரிவாயு வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் நுழைந்தது. டிபிலிசியில் உள்ள அதிகாரிகள்
என்ன விலை கொடுத்து வாங்கப்படுகிறது என்பதை கூற மறுத்துள்ளனர்; அதேபோல் அஜெர்பைஜான் அப்பகுதியின்
வழியாக இது வருவதற்கு என்ன கட்டணம் வசூலிக்கிறது என்பதை கூறவும் மறுத்துள்ளனர். ஒரு நாளைக்கு 2 மில்லியன்
கன மீட்டர்கள் என்பது ஜோர்ஜியாவின் தேவைகளில் கிட்டத்தட்ட பாதியளவு ஆகும்.
ஜோர்ஜியாவிற்கு நெருக்கடி காலத்தில் கூடுதலான எரிவாயுவை கொடுத்து
அஜெர்பைஜான் உதவினாலும் கூட, அடுத்த ஆண்டு பாக்கு-டிபிலி-சேஹன் குழாய்த்திட்டம் முடிவடையும் வரை இந்த
இடைக்கால உதவியை நீடிக்கும் திறன் அதற்கு உள்ளதா என்பது சந்தேகம்தான்.
இந்த புதிய குழாய் பாதை அஜெர்பைஜானின் முக்கிய எரிவாயுக் கண்டுபிடிப்பான
Shah Deni
ல் இருந்து எரிவாயுவை அளிக்கும். 673 bcm (பில்லியன்
கனமீட்டர்கள்) அளிக்கக்கூடிய திறனை ஷா டெனிஸ் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டபோதிலும், இதில் பெரும்பகுதி
2033 வரை எடுக்கப்படுவது இயலாததாகும். இதற்கிடையில் ஜோர்ஜியா 300
mcm (மில்லியன்
கனமீட்டர்கள்) ஆண்டு ஒன்றுக்கு இடைவழிக் கட்டணமாக பெறும்; ஆனால் இந்த அளவிற்குமேல் கூடுதலான
வழங்குதல்களை ஜோர்ஜியா கொடுக்க முடியுமா என்பது பற்றி வல்லுனர்கள் வினாவைத்தான் எழுப்பியுள்ளனர்.
ஆர்மீனியா
ரஷ்யாவையும் ஆர்மீனியா, ஜோர்ஜியாவையும் தொடர்புபடுத்தும் எரிவாயு
குழாய்வழிகள் வெடிப்பிற்கு உட்பட்ட அன்றே, ஆர்மீனிய ஜனாதிபதி
Kocharian இரு
நாடுகளுக்கும் இடையே புதிய ஆற்றல் ஏற்பாடுகள் பற்றி விவாதிக்க
மாஸ்கோவிற்குப் பயணம் செய்தார்.
இதே விவாதத்தை அடுத்து இரு நாடுகளின் இராணுவ உடன்பாடு பற்றிய ஒப்பந்தமும்
விவாதிக்கப்பட்டது.
வெடிப்புக்களுக்கு முன்பு,
GasProm என்னும் ரஷ்யாவின் அரசாங்கத்திற்குச் சொந்தமான
எரிவாயு வழங்கும் நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஒப்பந்தத்தின் வருங்காலம் பற்றி முன்னிழலிட்டுக் காட்டியது;
ஏனெனில் எரிவாயு விலை 1,000 கனமீட்டர்கள் 56 அமெரிக்க டாலர்கள் என்பதில் இருந்து 110 டாலர்களுக்கு
அது உயர்த்தப்பட்டது. கிரெம்ளின் சுமத்தும் முன்னிபந்தனைகளை ஒப்புக் கொண்டால், ஆர்மினியாவிற்கு விலையேற்றம்
பொருந்தாது என்றும் ஆலோசனை கூறப்பட்டது. மற்ற பல விதிகளுடன், இந்த நிபந்தனைகள் ஈரானிய-ஆர்மீனிய
எரிவாயுக் குழாய்த்திட்டத்தில் ரஷ்யாவிற்கும் நலன்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
கென்ட்ரான் தொலைக்காட்சியில் பேசிய ஆர்மீனிய பிரதம மந்திரி அந்த்ராணி
மார்கேரியன் இந்தத் திட்டமிடப்பட்டுள்ள விலையேற்றத்திற்கு விடையிறுக்கும் வகையில், இரண்டு நாடுகளுக்கும்
இடையே உள்ள "மூலோபாய பங்காண்மையின்" தன்மை பற்றி வினா எழுப்பினார். "பங்காண்மை" பற்றி பேசுவது
ஓரளவு தவறாக இருக்கலாம். தெற்கு காகஸஸ் அரசு முற்றிலும் திவாலாக உள்ளது; மக்கட்தொகை ஒன்றில்
இருந்து இரண்டரை மில்லியன் மக்கள்தான் உள்ளனர்.
காஸ்ப்ரோமின் கோரிக்கைகள் பற்றி ஆர்மீனிய அரசாங்கம் குறிப்பிடத்தக்க வகையில்
எரிச்சல் கொண்டுள்ளது; ஏற்கனவே ஆர்மீனிய அரசு ஆண்டு வரவுசெலவுத் திட்டம் டிசம்பர் வரை உள்ள நிலையில்
இது கூடுதலான தொந்திரவு ஆகும். பலரும் யேரவான், மாஸ்கோவிற்கு இடையே உள்ள நெருக்கமான நட்பு ஆர்மீனியாவை
கூடுதலான செலவினங்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் என்று நினைத்தனர். ஆர்மீனியாவின் எரிபொருள்
தேவை அனைத்தும் அதன் வடக்கு அண்டை நாட்டில் இருந்து வருகிறது; அதன் மின்விசை வலைப்பின்னல் உள்கட்டுமானத்தில்
70 சதவீதம் ரஷ்யாவிற்கு உரிமையானது ஆகும்.
ஆனால் இந்தக் கூட்டத்திற்கு பின்னர் கோச்சரியனோ, புடினோ அதிகாரபூர்வ
அறிக்கையில் விலையேற்றத்தை பற்றிக் குறிப்பிடவில்லை. சந்தை தரத்திற்கும் குறைவாகவே ஏப்ரல் 2006 வரை
விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன; ஆனால் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஜோர்ஜியா,
அஜெர்பைஜான் மீது சுமத்தப்பட்டுள்ள அதிக விலையைவிட தங்கள் மீது குறைவான விலையேற்றம்தான் இருக்கும் என்று
ஆர்மீனிய அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். இறுதி உடன்பாடு இம்மாதத்தில் ஏற்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னுடைய எல்லைக்குள் ரஷ்ய இராணுவ தளங்கள் வைத்துள்ளது பற்றியும் ஆர்மீனியாவில்
வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. தலைநகர் யேரவானில் இருந்து 70 மைல்களுக்குள் இருக்கும்
Gyumri தளம்,
சாக்காஷ்விலி அரசாங்கத்தின் வற்புறுத்தலில் இருந்து அண்டை நாடு ஜோர்ஜியாவில் இருந்து மாற்றப்படும் ரஷ்ய
தளவாடங்கள் இறுதியாகச் சேர்ப்பிக்கப்படும் இடமாக உள்ளது. ரஷ்யா இந்த வசதிக்கு ஒரளவு வாடகை
கொடுக்கத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல அரசியல்வாதிகள் முன்வைத்துள்ளனர்; ஆர்மீனிய மண்ணில்
துருப்புக்களை நிறுத்திவைக்க அனுமதிக்கப்படுவதற்கும் கட்டணம் வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இதுவரை ஆர்மீனியாவில் ரஷ்யாவின் பால் மக்கள் கொண்டுள்ள அணுகுமுறை
சாதகமாகத்தான் உள்ளன. பல ஆர்மீனியர்களும் ரஷ்ய மொழி பேசுகின்றனர்; பெரும்பாலன குடும்பங்கள்
ரஷ்யாவில் உழைத்து, வாழ்ந்து கொண்டிருக்கும் தங்கள் உறுப்பினர்கள் அனுப்பும் பணத்தைத்தான் முக்கியமாக
நம்பியிருக்கின்றன.
ஆனால் சமீபத்தில் Yelk
Social Reforms Center நடத்திய வாக்கெடுப்பின்படி,
1000 ஆர்மீனியர்களில் குறைந்தது 75 சதவீதத்தினராவது (வெவ்வேறு நகரங்களில் வசிப்பவர்கள்)
GazProm
விலையை உயர்த்தினால் ரஷ்யாவை பற்றி எதிர்மறைக் கருத்துக்களைத்தான் கொள்ளுவர் என்று தெரிகிறது. இன்னும்
கூடுதலான 80 சதவீத எண்ணிக்கையினர் ரஷ்யா இறுதியில் அத்தகைய உயர்ந்த கட்டணங்களைத்தான் வசூலிக்கும் என்று
நம்புகின்றனர்.
ரஷ்யா
சமீபத்திய வருடாந்தர செய்தியாளர் மாநாட்டில், சாக்காஷ்விலி நிர்வாகம்
தொடரும் ரஷ்ய-எதிர்ப்புக் கொள்கைகளை புட்டின் கண்டனத்திற்கு உட்படுத்தினார். ரஷ்யாவில் பல ஜோர்ஜிய
மக்கள் வேலையில் உள்ளார்கள் என்றும் சாக்காஷ்விலி நிர்வாகம் இன்னும் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால்,
இவர்கள் பணத்தை நம்பியிருக்கும் ஜோர்ஜியா இன்னல்களுக்கு உட்பட்டுவிடும் என்றும் அவர் அச்சுறுத்தினார்.
தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் காஸ்ப்ரோம் நிர்வாகியாக இருக்கப்
போவதில்லை என்று புட்டின் கூறினார்; ஆனால் காஸ்ப்ரோம் முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் உலகின்
பரந்த பகுதிகளில் ஆற்றல் அளிப்புக்கள் கொடுப்பதில் கிரெம்ளின் கொண்டுள்ள முயற்சிகளில் காஸ்ப்ரோம் பெருகிய
முறையில் மைய பங்கை கொண்டுள்ளது.
காஸ்ப்ரோமின் தலைவரும் புட்டினுடைய நெருங்கிய ஆலோசகருமான
Alexander Medvedev
அண்மையில் BBC
யில், நிறுவனத்தின் விழைவுகளில் ஒன்று உலகில் மிகப் பெரிய ஆற்றல் நிறுவனமாக வேண்டும் என்பதாக உள்ளது என்று
கூறினார். பிரிட்டிஷ் எரிவாயு தலைமைக் குழுவான
Centricas வை விலைக்கு வாங்குவதற்கான திட்டத்தை அது
அண்மையில் அறிவித்துள்ளது. காஸ்ப்ரோமின் ஏற்றுமதிப் பிரிவான
Gazexport
உடைய துணைத் தலைவர், Centrica
எடுத்துக் கொள்ளப்படுவது என்பது இப்பொழுது "ஆய்விற்கும், விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ள" கட்டத்தில்
இருக்கிறது என்றார். பங்கு விலைகள் இந்த GazProm
உடைய ஆர்வ அறிக்கை வந்த பின் 9 சதவீதம் உயர்ந்தன.
காஸ்ப்ரோமின் பிரதிநிதிகள் கார்டியன் செய்தித்தாளிடம், தாங்கள்
பிரிட்டனின் மொத்த எரிவாயுத் தேவைகளில் 20 சதவீதத்தை 2015 ஆண்டிற்குள் வழங்கமுடியும் என்ற விருப்பத்தை
தெரிவித்தனர். சீர்குலைவிற்குட்பட்டுள்ள ஸ்கொட்டிஷ் ஆற்றல் நிறுவனமும் வாங்கப்படுவதற்கான சாத்தியமுள்ள
ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜோர்ஜியாவிற்கு எதிரான கிரெம்ளினுடைய ஆற்றல் போர், சர்வதேச எரிவாயு
அளிக்கும் நிறுவனங்களை திட்டமிட்டு எடுத்துக் கொள்ளுதல், என்பது உலக அரங்கில் தன்னுடைய பொருளாதார
எடையின் தன்மைக்கும் மேலாக இடிக்கும்திறன் கொள்ள உதவும் என்று நினைக்கும் புட்டின் ஆட்சியின்
ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்களின் பகுதியாகும். மகத்தான அளவில் எண்ணெய், எரிவாயு இருப்புக்களை
கொண்டிருப்பதால் கிரெம்ளின் தன் புவிசார் அரசியலில் ஆற்றலைத் துருப்புச்சீட்டாக அடையாளம் கண்டுள்ளது.
ரஷ்ய கொள்கையின் மற்றொரு அடித்தளம் அதன் இராணுவ வலிமையாகும்.
கிரெம்ளினுடைய "ஆற்றல் போர்" இன்னும் கூடுதலான வகையில் ஜோர்ஜியாவின் பிரிந்து சென்ற மாநிலங்களுக்கு
காட்டப்படும் முறையை இணைத்துள்ளது. அப்காஜியா, தெற்கு ஓசேடியா என்னும் பிரிவினை ஜோர்ஜிய மாநிலங்கள்
பற்றி தீர்வு காணப்படாது பூசல்கள் "அனைவருக்கும் பொருந்தும் கோட்பாடுகளின்" அடிப்படையில் தீர்க்கப்பட
வேண்டும் என்று புட்டின் வலியுறுத்தியுள்ளார். கோசோவாவை பற்றிக் குறிப்பிடுகையில், முன்னாள் யூகோஸ்லாவிய
நாட்டின் பகுதி சேர்பிய, மொன்டிநெக்ரோ கூட்டமைப்பில் இருந்து சுதந்திரம் கொடுக்கப்படும் என்றால், பின்னர்
ரஷ்யா ஜோர்ஜியாவின் நிலப்பகுதி முழுமைக்கு கொடுக்கும் ஆதரவை ஒருவேளை திரும்பப்பெற்றுக் கொள்ளலாம்
என்று கூறினார். voanews.com
மேற்கோளிடப்பட்டு கூறிய கூற்றின்படி, புடின் "ரஷ்யா
உடனடியாக அப்காஜியா, தெற்கு ஓசேடியாவை சுதந்திர நாடுகள் என்று அங்கீகரிக்கும் என்று நான் கூற
விரும்பவில்லை; ஆனால் அதற்கான முன்னோடிகள் உள்ளன."
சில நாட்களுக்கு பின்னர், சாக்காஷ்விலியின் அலுவலகம் இதற்கு விடையிறுக்கும் வகையில்
ரஷ்யாவுடன் இராணுவப் பிணைப்புக்களை விரிவாக்கிக் கொள்ள விரும்பும் முன்னாள் சோவியத் குடியரசுக் குழுக்கள்
சிலவற்றில் இருந்து ஜோர்ஜியா விலகக் கூடும் என்று அறிவித்தது. இதற்கு பதிலாக 2008ற்குள்
NATO வில்
சேருமாறு அழைப்புப் பெறுதலை இலக்காகக் கொள்ளும் என்றும் அறிவித்தது.
சில நூறு மக்கள் தொடர்பு கொண்டிருந்த ஒரு சிறிய போக்குவரத்து பாதிப்பில்,
பெப்ரவரி 1ம் தேதி
தெற்கு ஓசெடியாவில் ரஷ்யா மற்றும் ஜோர்ஜியா படைகளுக்கு
இடையே வெடித்த சண்டைகள் எந்த அளவிற்கு கடும்பதட்டங்களை உருவாக்கியுள்ளது என்பதை தெரிவிக்கிறது.
Top of page |