:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: Biggest public service strike for
14 years
ஜேர்மனி: 14 ஆண்டுகளில் மிகப் பெரிய பொதுச்சேவை வேலைநிறுத்தம்
By Ludwig Niethammer and Ulrich Rippert
9 February 2006
Back to screen version
பாடன்-வூட்டன்பேர்க் மாநிலத்தில் பெப்ரவரி 6 திங்களன்று பல்லாயிரக்கணக்கான
பொதுச்சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். குப்பையை அகற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
மருத்துவமனைகள், பாலர் பள்ளிகள், நூல் நிலையங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பல இதர உள்ளூராட்சி நிலைய
தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தென்மேற்கு ஜேர்மனியின் இந்த தொழிற்துறை நடவடிக்கை
நாடுமுழுவதும் நடைபெறவிருக்கின்ற ஒரு காலவரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஒரு முன்னோடியாகும்.
பொதுச்சேவை தொழிற்சங்கமான
Verdi தந்துள்ள தகவலின்படி அந்த வேலைநிறுத்தம் எதிர்வரும்
வாரத்தில் ஹம்பேர்க் மற்றும் லோயார் சாக்சோனிக்கு விரிவுபடுத்தப்படும். பவேரியா, சாக்சோனி, சிலேஸ்விக்-ஹோல்ஸ்ரைன்
நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா மற்றும் சார்லாந்தில் வேலை நிறுத்தம் நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுவருகிறது.
நகரசபை ஊழியர்கள் வாரத்திற்கு 38.5மணி நேரத்திலிருந்து 40மணி நேரம் வரை நீடிக்கப்படுவதையும் அத்துடன்
இணைந்த ஊதிய குறைப்பையும் தடுப்பதை இந்த வேலைநிறுத்தம் நோக்கமாகக்கொண்டது.
ஹெல்முட் கோல் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தின் கீழ் 14
ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கு முந்திய நாடுதழுவிய பொதுச்சேவை வேலைநிறுத்தம் இடம்பெற்றது.
இந்த வேலைநிறுத்தம் ஏற்கனவே உள்ளூர் நகரசபைகளின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள்
சங்கங்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் கடுமையான விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளது. தற்போது பிராந்திய
அரச வேலைவழங்குனர் சங்கத்திற்கு தலைமை வகிப்பவரும், லோயர் சாக்சோனி நிதியமைச்சருமான ஹார்முட் மோலிங்
(கிறிஸ்தவ ஜனநாய யூனியன்--CDU)
கூறியிருப்பது என்னவென்றால் உள்ளூர் மட்டத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் உட்பட அனைத்து பொதுச்சேவை
தொழிலாளர்களும் பொதுநிதிகளின் மோசமான ஏழ்மை நிலையை கருத்திற்கொண்டு ஊதிய வெட்டுக்களுக்கு சம்மதிக்க
வேண்டும். பாடன்-வூட்டன்பேர்க்கின் சக அமைச்சரான ஹெகார்ட் ஸ்டிராட்கவுஸ் (CDU)
மாநில அளவிற்கு வேலை நிறுத்தத்தை விரிவுபடுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அரசாங்க ஆலோசனை குழுவின் தலைவரான பெர்ட் ரூறுப் நிருபர்களுக்கு பேட்டியளித்த
போது அந்த வேலைநிறுத்தத்திற்கு எந்த அடிப்படையும் இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று கூறினார்.
பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களும் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும் என்று வாதிட்டார்.
மேலும் ஜேர்மனியின் பலவீனமான பொருளாதார நிலையில் இந்த வேலைநிறுத்தம் ஒரு எதிர்மறையான விளைவை
ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்தார்.
ஜேர்மன் முதலாளிகளின் மத்திய கூட்டமைப்பு தலைவரான டீற்றர் ஹுண்ட் தொழிற்சங்கம்
உடனடியாக வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த வேலை நிறுத்தம் பொறுப்பற்றதும்
மற்றும் ஜேர்மனிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று ஹுண்டு அறிவித்தார். கிறிஸ்தவ சமூக யூனியன்
(CSU) அரசியல்வாதி
மாக்ஸ் ஸ்ரவ்பிங்கர் இந்த கருத்துக்களை எதிரொலித்தார். பொதுச்சேவை பாதுகாப்பான வேலையை வழங்குகின்றதன்
காரணமாக வேலைநிறுத்தத்தின் மீது தமக்கு எந்த அனுதாபமும் இல்லை அது உடனடியாக கைவிட வேண்டும் என்று
Berliner Zeitung
பத்திரிகைக்கு அவர் தெரிவித்தார்.
சமூக ஜனநாயகக் கட்சி (SPD)
தொழிலாளர் சந்தை பேச்சாளரான கிளவுஸ் பிரண்ட்னர் போன்ற சில சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் மிகவும்
சமரச தொனியில் கடந்த பல ஆண்டுகளாக தொழிற்சங்கம் பாரியளவிற்கு ஊதிய கட்டுப்பாட்டிற்கு ஏற்கனவே
சம்மதித்திருப்பதாக தெரிவித்தார்.
பொதுச்சேவை தொழிலாளர்கள் இன்னும் வேலைப் பாதுகாப்புக்களையும் இதர
சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு வருவதால் வேலைநிறுத்தம் சட்ட விரோதமானது என்று கூறுவது முற்றிலும் அடிப்படை
இல்லாதது. பொதுச்சேவை அந்தஸ்த்து உள்ளவர்கள் தவிர்த்து இதர சாதாரண தொழிலாளிகளுக்கும் மற்றும்
உத்தியோகத்தர்களுக்கும் நீண்டகாலமாக வேலைப்பாதுகாப்பு இல்லை. 1990களின் தொடக்கத்திலிருந்து நகரசபை
பணிகளில் மூன்றிற்கு ஒன்று என்ற அளவிற்கு வெட்டு விழுந்திருக்கிறது. அவை தனியார்மயமாக்கப்பட்டிருக்கிறது அல்லது இதர
சிக்கன நடவடிக்கைகளுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக 2.2 மில்லியன் பொது சேவை
வேலைகள் பேரழிவிற்குட்பட்டுவிட்டன.
மேலும் புதிதாக வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள் காலவரைக்குள்ளான வேலைஒப்பந்தங்கள்
அல்லது பகுதி நேரப்பணி என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இது மிக கூடுதலாக வேலை வாங்குவதற்கு
தொழிலாளர்களை பயன்படுத்தி கொள்வதற்கும் மற்றும் படுமோசமான அளவிற்கு ஊதியம் வழங்குவதாகவும்
அமைந்திருக்கிறது.
இன்றைய வேலைநிறுத்தம் ஜேர்மனியின் தற்போதைய சமூக நிலைமைகளை கூர்மையாக
வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக கோல் அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சமூக
வெட்டுக்கள் சமூக ஜனநாயகக் கட்சி-
பசுமைக் கட்சி நிர்வாகத்தின் கீழ் கணிசமான அளவிற்கு முடுக்கிவிடப்பட்டன.
தற்போதைய வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு நகரசபை மற்றும் மாநில கருவூலங்கள் காலியாக இருப்பது
தான் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுவது திட்டமிட்டு சமுதாயத்தின் அடித்தளத்திலிருந்து செல்வம் மேல்மட்டத்தில் குவியும்
வகையில் மறுவிநியோகம் செய்யப்பட்டதன் விளைவாகும். பணக்காரர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் அவர்களுடன்
சேர்த்து பெருவர்த்தக நிறுவனங்களுக்கும் வரிகளை தளர்த்தப்பட்டு பொது கருவூலங்களுக்கு வருகின்ற வரி வருவாய்
குறைந்த கொண்டே சென்றதால் பெருகி வரும் நிதிச்சுமை மத்திய அரசாங்கத்திலிருந்து மாநிலங்களுக்கும்
நகரசபைகளுக்கும் மாற்றப்பட்டது.
பல பெரு நிறுவனங்கள் ஒரு காசு கூட வரி கட்டுவதில்லை என்று பெருமையடித்துக்
கொள்கின்றன. வளர்ந்து கொண்டு வருகின்ற நிதி நெருக்கடிச்சுமை மாநிலத்தின் மீதும் உள்ளூர் நிர்வாகத்தின் மீதும்
திட்டமிட்டு மாற்றப்பட்டு பொதுப் பணியாற்றுவோர் தோளில் சுமத்தப்படுகிறது. எனவே தான் வேலைநிறுத்தத்திற்கு
பரவலான ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாடன்-வூட்டன்பேர்க்கில் தொழிற்சங்க உறுப்பினர்களில் 95% பேர்
வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்திருக்கின்றனர்.
ஊடகங்களில் பேட்டி காணப்பட்ட வேலைநிறுத்தம் செய்து வரும் ஒவ்வொரு ஊழியரும் ஒரு
நாளைக்கு ஊதியமில்லாமல் 18 நிமிடங்கள் பணியாற்றுவதற்கு எதிராக மட்டுமே வேலைநிறுத்தம் செய்யவில்லை என்றும்
ஆனால் அதிகாரிகளது முடிவு பணியாற்றும் நேரத்தில் அதிகரிப்பது என்ற முடிவு முதுகெலும்பை முறிக்கின்ற கடைசி துரும்பு
என்று கூறினர். பல ஆண்டுகளாக ஊதியங்களும் நிலைமைகளும் படுமோசமடைந்து கொண்டே வருகின்றன.
''ஒரு கட்டத்தில் எல்லாமே போதும். திணிக்கப்படுகின்ற ஒவ்வொன்றையும் நாங்கள்
விழுங்க முடியாது'' என்று மான்ஹைம் பகுதியில் குப்பை அகற்றும் தொழிலாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்ற
ஊக்கோ கிரான் என்ற தொழிலாளி ஒரு தொழிற்சங்க பேரணிக்கு செல்லும் போது தெரிவித்தார். மற்றும் அவரது
நண்பர் கடந்த பல ஆண்டுகளாக தங்களது பணி எவ்வாறு மாறியிருக்கிறது என்று வர்ணித்தார். கடந்த காலத்தில் தனது
நகர சுத்திக்குழுவில் நான்கு பேர் பணியாற்றினர் என்றும் ஆனால் இப்போது மூன்று பேர் மட்டுமே பணியாற்றுவதாகவும்
தெரிவித்தார். வேலைப்பளூ நிரந்தரமாக அதிகரித்து விட்டாலும் இடைவேளைகள் கடுமையாக வெட்டப்பட்டிருக்கின்றன.
''ஒரு வேலை நிறுத்தம் ஏறத்தாழ 95 சதவீதம் ஆதரவை பெற்றிருக்கிறது என்றால்
உண்மையிலேயே அவர்களிடம் ஆத்திரம் உள்ளது''. இதில் எங்களுக்கு முதலாளிகள் எங்களது உழைக்கும் சக்தியை வேறுபட்ட
அளவில் குறைத்து மதிப்பிடுவது தான் அவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறாகும். பல ஆண்டுகளாக எங்களுக்கு
கிடைக்கின்ற ஊதியங்கள் வெட்டப்பட்டு வருகின்ற வேலைச்சுமை அதிகரித்து வருகிறது, வேலைகள் வெட்டப்பட்டு வருகிறது.
அதற்குப் பின்னர் இந்த 18 நிமிடங்கள் பணி நேர உயர்வு என்பது தாங்கிக் கொள்ளவியலாத நடவடிக்கையாகும்'' என்றுFrankfurter
Rundschau பத்திரிகையிடம் அஸ்டிரைட் ஹோல்சர் என்ற
ஊழியர் குறிப்பிட்டார்.
பொதுச்சேவை வேலைவழங்குனர் மற்றும் அரசாங்கம் மட்டுமே வளர்ந்து வரும் ஊழியர்களது
ஆத்திரத்தை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொரு சமூக வெட்டையும் ஏற்றுக் கொண்ட
தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் ஆத்திர உணர்வை குறைத்து மதிப்பிட்டு விட்டன. சென்ற ஆண்டு கடைசியில்
விட்டுக்கொடுப்புகளை தந்து ஒரு புதிய ஒப்பந்தத்தை தனது தொழிற்சங்க உறுப்பினர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதில்
Verdi
தொழிற்சங்கம் பெரிதும் சிரமப்பட்டது.
முதல் தடவையாக தொழிற்சங்கம் செய்யும் வேலை திறனின் அடிப்படையில் ஊதியம்
வழங்குவதையும் மற்றும் பரவலான மேலதிக வருமானங்களை வெட்டுவதற்கு சம்மதித்து கையெழுத்திட்டது. ஊதியங்களும்
மாதச் சம்பளமும் 2007 வரை முடக்கப்பட்டது. மேலும் வெளி நாடுகளுக்கு பணிகள் மாற்றப்படுவதை தடுக்க
விரும்புவதாக வாதிட்டு Verdi
புதிய குறைந்த ஊதிய ஊழியர் பிரிவை அறிமுகப்படுத்த சம்மதித்தது அதன் மூலம் கூட்டு உடன்பாடு அடிப்படையில் மலிவு
ஊதிய பணி அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த நேரத்தில் உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் நகர சபைகளுக்கான சங்க இயக்குனர்
கெர்ட் லன்ட்ஸ்பேர்க் புதிய ஒப்பந்தத்தை பின்வரும் வார்த்தைகளில் பாராட்டினார். ''மாநகராட்சிகள் மற்றும் நகர
சபைகளில் 13,000 ஊழியர்களை ஈடுபடுத்துவதற்கு ஒரு கட்டுப்படியாகக் கூடிய பொதுச்சேவைக்கான வழி தற்போது
தெளிவாகிவிட்டது''. மேற்கு ஜேர்மன் பகுதியில் 38.5 மணி நேரம் மற்றும் கிழக்கு பகுதியில் 40 மணி நேரம் என்பது
தொடர்பான ஒப்பந்தத்தின் மீது கூட ஒரு கேள்விக் குறியை வைத்திருக்க
Verdi தயாராக
இருந்தது.
புதிய ஒப்பந்தத்திற்கு தொழிற்சங்கம் சம்மதித்த சில மாதங்களில் ஒப்பந்தத்தில் கண்டுள்ள
தெளிவுபடுத்தப்படாத உட்பிரிவை பயன்படுத்தி வாராந்தர பணி நேரத்தை தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நீடிக்க தொழிலதிபர்கள்
முயன்றனர்.
இப்போது தொழிற்சங்கம் இந்த வேலைநிறுத்தத்தோடு ஆரம்பித்து வளர்ந்து கொண்டு
வருகின்ற தீவிரவாதப் போக்கை கட்டுப்படுத்த முயலுவதில் ஊன்றி கவனம் செலுத்தி வருகிறது. பேரணிகள் நடக்கும்போது
அவர்கள் தொழிலதிபர்கள் ''ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக'' கண்டிக்கின்றனர். வேலைநிறுத்தம் 1992ல் நடைபெற்றதை
விட அதிக தீவிரமான வடிவங்களை எடுக்கும் என்று கூறுகின்றனர். அதே நேரத்தில்
Verdi இன் தலைவர்கள்
அந்த வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளாக கட்டுப்படுத்த முயலுவதுடன் மற்றும் நாடு தழுவியதொரு
தொழிலாளர் வேலைநிறுத்தமாக மாறாது தடுக்க முயலுகின்றனர்.
இதற்கெல்லாம் மேலாக, நூரெம்பேர்க்
AEG நிறுவனத்தில் ஏற்கனவே
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதுபோல் தொழிற்துறையின் பல கிளைகளில் பாரியளவிற்கு ஆட்குறைப்பு நடந்து கொண்டிருப்பதை
எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்கள் பயப்படுவது என்னவென்றால் பொதுத்துறையில் நடைபெறுகின்ற ஒரு நீடித்த வேலைநிறுத்தம்
இதர தொழிற்துறைகளிலும் பரவலான நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டுவிடும் என்பது தான்.
இதுவரை அரசாங்கம் இந்த தகராறிலிருந்து தன்னை தவிர்த்துக்கொள்ள அறிக்கைகளை வெளியிட்டு
வருகிறது. இந்தக் கோடை காலத்தில் நடைபெறவிருக்கின்ற உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு ஆயுதப்படைகளை பயன்படுத்துவது என்ற தமது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தை உள்துறை
அமைச்சர் வொல்ப்காங் ஷொபிள (CDU)
செயல்படுத்துவார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை என்றாலும் தொழிற்சங்க தலைவர்களினால் வேலைநிறுத்தத்தை
கட்டுப்படுத்த இயலவில்லை என்றால் அவர் மிகக் கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பார். |