ஸ்பெயின்: சபடேரோ அரசாங்கத்திற்கு எதிராக மேலும் இராணுவ அச்சுறுத்தல்கள்
By Paul Stuart
28 January 2006
Back to screen version
ஸ்பெயினில் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக மேலும் இராணுவ அச்சுறுத்தல்கள்
விடுக்கப்பட்டிருக்கின்றன. கட்டலானியாவிற்கு அதிக தன்னாட்சி உரிமை வழங்குகின்ற ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதை எதிர்ப்பதற்கு
இராணுவத்தை அனுப்பப்போவதாக ஸ்பெயின் தளபதி மேனாவின் விடுத்த அச்சுறுத்தலை
பிரதம மந்திரி
யிஷீsங லிuவீs ஸிஷீபீக்ஷீணரீuமீக்ஷ் ஞீணீஜீணீtமீக்ஷீஷீ, ஒரு ஒழுங்கற்ற செயல்களுக்கான
நடவடிக்கை என்று அமுக்கி வாசிக்க முயன்றார். ஆனால் பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி இழிபுகழ்மிக்க
லீஜியனரிசின் (Legionnaires)
கப்டன் கன்சாலேஸ் தற்போது சபடேரோவை தாக்கி ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கின்றார், அதில் கட்டலான் சட்டத்திற்கு
இராணுவத்தில் பரந்தரீதியான விரோதப்போக்கு நிலவுவதாக வர்ணித்திருக்கிறார் அது ஸ்பானிய "தந்தை நாட்டின்" ஐக்கியத்திற்கு
அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.
கன்சாலேஸ் தனது துருப்புக்களை மாட்ரீட்டுக்கு அணி வகுத்து வரச்செய்து, அந்தக்
கடிதத்தை நேரில் கொடுக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். கடைசியாக, தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ
தலைமையில் 1936 ஜுலை மாதம் இராணுவ/பாசிச எழுச்சி மாட்ரீட்டில் நடைபெற்றபோது அந்த லீஜியோனரிசினர்
மாட்ரீட்டுக்கு அணிவகுத்து வந்தனர். பாசிஸ்ட்டுக்களின் இந்த முன்னேற்றம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பெரிய எழுச்சியால்
தடுத்து நிறுத்தப்பட்டது, ஆனால் அவ் எழுச்சி PSOE
மற்றும் ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சி
(PCE) ஆகியன ஆதிக்கம்
செலுத்திய மக்கள் முன்னணி அரசாங்கத்தால் நாசப்படுத்தப்பட்டது.
ஒரு மூத்த இராணுவத் தலைவரினால் சில வாரத்துக்குள் வெளியிட்டப்பட்ட இதுபற்றிய இரண்டாவது
அறிக்கை கன்சாலேஸ்-னது
ஆகும். ஜனவரி 7 இல் ஓய்வுபெறும் லெப்டினட்-ஜெனரல் ஜோஸ் மேனா அக்காடோ; ஒரு ''தேசம்'' என்ற அந்தஸ்த்தையும்
அவற்றின் சொந்த வருவாய் தொடர்பாக கட்டலானுக்கு தன்னாட்சி அரசாங்க அதிகாரத்தையும் வழங்குகின்ற கட்டலான்
சட்டத்தை PSOE
அரசாங்கம் இயற்றுமானால் ஸ்பெயினின் 50,000
தரைப்படையினரை கொண்டு இராணுவ தலையீட்டிற்கான அச்சுறுத்தலை விடப்போவதாக
குறிப்பிட்டார்.
PSOE பாதுகாப்பு அமைச்சர் ஜோஸ்
பானோ, ஜோஸ் மேனாவின் அறிக்கையை இராணுவ ''கட்டுப்பாடற்ற'' ஒரு செயல் என்று தள்ளுபடி செய்தார்.
வானொலி செவ்வி ஒன்றில் அவர் "ஆயுதப்படைகள் அளவிற்கு எந்த அமைப்பும் முற்றிலுமாக தன்னை ஜனநாயகத்திற்கு
ஏற்றதாக மாற்றிக் கொள்ளவில்லை" என இராணுவத்தை புகழ்ந்தார்.
பிரிவினைவாத கட்டலான் குடியரசு இடது தலைவர் ஜோஸப் பர்காலோ பெரும்பான்மை
கட்டலன் PSOE-வுடன்
கூட்டணி சேர்ந்திருப்பவர் அவர் போனோவின் நிலைப்பாட்டை எதிரொலித்தார். பிராங்கோவின் ஆவிகள் இன்னும் உலவிக்
கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்ட பின்னர் அவர் அறிவித்ார்: "இது இருபத்தியோராம் நூற்றாண்டு ஐரோப்பா.
இப்போது நமக்கு இராணுவ கிளர்ச்சிகள் வேண்டாம்.''
மேலில்லாவின் ஸ்பானிய ஆபிரிக்க காலனித்துவ சமுதாயத்தின் ஒரு தினசரியான மேலில்லா
ஹோய்யில் கன்சாலேஸின் கடிதத்தில் பிரசுரிக்கப்பட்டிருப்பதை விளக்கிய பைனான்சியல் டைம்ஸ், இராணுவத்தில்
கிளர்ச்சி எதுவுமில்லை என்று குறிப்பிட்டிருந்தது.
"நல்லது திரு. பிரதமர் அவர்களே உங்களது ஆலோசகர்கள் உங்களுக்கு அந்த உண்மையைச்
சொல்லவில்லை. எப்படி ஸ்பெயின் துண்டு துண்டுகளாக சிதைக்கப்படுகிறது, தேசியக் கொடி பகிரங்கமாக
எரிக்கப்படுகிறது, பயங்கரவாதிகள் பேரணிகளையும் சமூக நிகழ்ச்சிக்களையும் நடாத்த அனுமதிக்கப்படுகிறார்கள் மற்றும்
எப்படி ஒரு தலைமுறையைச் சார்ந்த ஸ்பெயின் மக்கள் தங்களது தந்தை நாட்டை உணர்ந்து கொள்ளாது
வளர்ந்திருக்கின்றனர் என்பது தொடர்பாக ஆயுதப்படைகளுக்கு உள்ளேயும் மற்றும் வெளியிலும் ஒரு பெருமளவிலான அதிருப்தி
நிலவுகின்றது." என்று குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் வெளியிட்ட செய்திகளில் பைனான்சியல் டைம்சும் கூட ஜெனரல்
மேனாவின் அறிக்கையை அமுக்கி வாசிக்க முயன்றது.
"pronunciamento" அல்லது இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு என்பது
கடந்த சகாப்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் என்று குறிப்பிட்டது. இது ஸ்பெயின் பத்திரிகைகளிலும் திரும்ப
வெளியிடப்பட்டது. என்றாலும் கப்டன் கன்சாலேசிற்கு பதிலளிக்கின்ற வகையில் பைனான்சியல் டைம்ஸ் உள்நாட்டு
போருக்கு முந்திய சம்பவங்களின் வரலாற்று நிகழ்ச்சிகளை ஒப்புநோக்க வேண்டி வந்தது: ``கப்டன் கன்சலேஸ்
சொன்னது அவரது சந்தேகம்- தான் தனது லீஜியனரிஸ்களை அணி வகுத்து தனது கடிதத்தை கொடுப்பதற்கு நேரில்
செல்வதா அல்லது பத்திரிகைகளில் அதனை வெளியிடுவதா என்பதேயாகும். 1936 ஜூலையில் ஜெனரல் பிரான்சிஸ்கோ
பிராங்கோ தலைமையிலான இராணுவக் கிளர்ச்சி மொரோக்கோ காலனித்துவத்தில் ஸ்பெயின் படைப்பிரிவின் ஒரு
கிளர்ச்சியோடு தொடங்கியது என்பதில் உள்ள வரலாற்றுரீதியான ஒப்புவமையை ஒரு சில ஸ்பெயின் மக்கள் கவனிக்க
தவறியிருப்பார்கள்.
ஜனவரி 24-ல் நியூயார்க் டைம்சும் ஜனநாயக அமைப்புக்களை வலுப்படுத்துவதற்கு
அதேபோன்ற நோய்கொல்லி மருந்துகளை தந்திருக்கின்றது. ஆனால் அதற்குப் பின்னர் ஸ்பெயின் வரலாற்றிலிருந்து
இணையான விவாதங்களை தந்திருக்கிறது.
``நாடாளுமன்றத்தின் முடிவுகளை இரத்து செய்வதற்கு தலைநகருக்குள் துருப்புக்களை அணி
வகுத்து செல்வதுப்பற்றி பேசுவது அல்லது சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சவால் விடாமல் நடந்து
கொள்வது இராணுவ அதிகாரிகளின் செயல்பாடு தொடர்பான அடிப்படை ஜனநாயகக் கொள்கையாக இருக்கிறது.
அப்படியிருந்தும் இந்த மாதம் இரண்டுமுறை அந்த அடிப்படைக் கொள்கைக்கான சம்பவங்கள் ஸ்பெயினில் நடந்திருக்கின்றன.
அந்த நாட்டின் இருபதாம் நூற்றாண்டு வரலாறு அத்கைய அச்சுறுத்தல்களை கடுமையாக எடுத்துக் கொள்ள
கட்டாயப்படுத்துகின்றது... இது உள்நாட்டு போரின் கொடூரங்கள் மற்றும் அதற்கு முந்திய கொடூரமான
சர்வாதிகாரத்தை மறப்பதும் எளிதானது என்கின்றது. வலதுசாரி இராணுவ அதிகாரிகள் தாங்கள் சட்ட விரோதமானது
என்று கருதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இடது அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் பிராந்திய பிரிவினைவாதிகளை
சகித்துக் கொள்ள முடியாமலும் கிளர்ச்சி செய்த நேரத்தில் இந்த சிம்மசொப்பனங்கள் தொடங்கின.
சோசலிஸ்ட் கட்சி தேர்தலை,
PP
செனட்டர் ஒரு ஆட்சிக் கவிழ்ப்போடு ஒப்பிடுகின்றார்
இதன் பின்னர் டைம்ஸ் இன்றைய நிலவரத்தோடு நேரடியாக ஒப்புநோக்கையில்,
மக்கள் முன்னணியானது சோசலிஸ்ட் கட்சி
அரசாங்கம் மற்றும் 2004 மார்ச் 14-ல் நடைபெற்ற பொதுத்தேர்தல்
முடிவுகளை சட்டபூர்வமற்றது என நிலைநாட்டும் தனது முயற்சிகளின் ஒரு தொடர்ச்சியாக இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு
பின்னணி ஆதரவினை கொடுத்துவருகின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த ஆசிரியர் தலையங்கம் தொடந்தது; "ஸ்பெயின் சமுதாயம், ஸ்பெயின்
அரசியல்வாதிகள் மற்றும் பெரும்பாலும் ஸ்பெயின் இராணுவ அதிகாரிகள் அந்த யுகத்திலிருந்து நீண்டகாலம் கடந்து
வந்திருக்கின்றனர், தங்களது கருத்துக்களை மிதப்படுத்திக்கொண்டிருக்கின்றனர் மற்றும் ஜனநாயகத்தில் விட்டுக்கொடுக்கும்
போக்கை உறுதியாக பற்றி நிற்பதை ஆழமாக்கி கொண்டிருக்கின்றனர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த
மாட்ரீட் ரயில்களில் பயங்கரவாத குண்டு வெடிப்பு நடந்து ஒரு சில நாட்களுக்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட
தோல்வியை பாப்புலர் கட்சி ஜீரணிப்பதற்கு இன்னும் திணறுகிறது. அந்த வாக்குப்பதிவு உண்மையிலேயே ஜனநாயக முறையில்
சட்டபூர்வமாக நடைபெற்றது என்பதை அக்கட்சி ஒருபோதுமே உண்மையில் ஒப்புக்கொள்ளவில்லை. பாப்புலர் கட்சி
முன்னேறிச்செல்ல வேண்டிய தருணம் இது. ஸ்பெயின் ஜனநாயகத்திற்கு இருகட்சி முறை ஆதரவு தேவைப்படுவது தகுதியுடையது
ஆகும்."
சென்ற ஆண்டு நடைபெற்ற தேர்தல் முடிவை
PP கட்சி
புறக்கணித்துவிட்டது மற்றும் ஜோஸேமரியா அஸ்னரின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக போர் எதிர்ப்பு இயக்கத்தை
நடத்தியது என்று PSOE-யை
குற்றம் சாட்டியது. ஜனவரி 17-ல் அக்கட்சி பல்வேறு வகைப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது, மேலில்லாவின்
PP செனட்டர்
கார்லோஸ் பேனேட், சோசலிஸ்ட் கட்சி
அரசாங்கத்தின் தேர்தல்களை 1874 மற்றும் 1981-ல் நடைபெற்ற இராணுவ
ஆட்சிக்கவிழ்ப்போடு ஒப்புநோக்குகிறார்.
2004 மார்ச்சில் எப்படி தேர்தல் நடைபெற்றது என்பதை தமது ஆதரவாளர்கள்
எப்போதுமே மறந்துவிடக்கூடாது என்று பெனட் வற்புறுத்திக்கூறினார். 1874-ல் ஜெனரல் பாவியா ஒரு குதிரையில்
நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். 1981-ல் லெப்டினட் கேர்னல் அன்டானியோ தெஜோரஸ் ஒரு கைத்துப்பாக்கியுடன்
நாடாளுமன்றத்தில் நுழைந்தார் மற்றும் சப்பட்டிரோ 2004 மார்ச்சில் ஒரு புறநகர் ரயிலில் நாடாளுமன்றத்திற்கு
வந்தார். அவர் 2004 மார்ச் 11 அன்று மாட்ரீட்டில் குண்டு வெடிப்புக்களை மேற்கோள்காட்டி குறிப்பிட்டார்.
ஈராக் போரில் ஸ்பெயின் பங்கெடுத்துக்கொண்டதற்கு எதிர் வினையாக இஸ்லாமிய
அடிப்படைவாதிகள் புரிந்த ஒரு குற்றத்தை பிரிவினைவாத ETA
பாஸ்க் குழுவினர் மீது பழிபோட PP
மேற்கொண்ட முயற்சியில் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து PP-க்கு
பொதுமக்கள் எதிர்ப்பு தூண்டிவிட்டு PSOE-யை
ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. இந்த தேர்தல் வெற்றியை ஒரு ஆட்சி கவிழ்ப்பு என்று அறிவித்து
PP ஒரு பிரச்சாரத்தை
நடத்தியது. பெனட்டின் அறிக்கை ஒரு பழைய தீவிர வலதுசாரி அணியின் தந்திரமாகும்,
சோசலிஸ்ட் கட்சி அந்த குற்றத்தை புரிந்ததாக தானே செய்வதற்கு
தயாராக இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
1874 ஜனவரி 3-ல் ஜெனரல் பாவியா குறுகிய காலம் ஆட்சியிலிருந்த குடியரசு
அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு அந்த இடத்தில் ஜெனரல் செர்ரானோவின் இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவினார்.
1981, பிப்ரவரி 23-ல் நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த நேரத்தில், லெப்டினட்
கேர்னல் அன்டானியோ டெஜோரஸ், கூரையை நோக்கி சிலமுறை சுட்டு அமைச்சர்களை கைது செய்தார். சோசலிச
புரட்சியின் அச்சத்தின் காரணமாக அந்த ஆட்சி கவிழ்ப்பு கருச்சிதைக்கப்பட்டது. சதிகளின் வெளிப்பாடாகயிருந்த அந்த
இரண்டு சம்பவங்களுக்கும் காரணமாய் அமைந்த அதே சமூக சக்திகள்தான்
PP-ன் இன்றைய
பிரசாரத்திற்கும் பின்னணியாக உள்ளன.
PP செனட்டரும், (காலிசியாவிலுள்ள)
லூகோ நகரசபை தலைவருமான பிரான்சிஸ்கோ கச்சாரோ, பெனட் கூறிய கருத்தை ஆதரித்தார், அவர் "ஒரு
கருத்தை உரத்த சிந்தனையில் வெளியிட்டிருக்கிறார், அதை மில்லியன் கணக்கான ஸ்பெயின் மக்கள்
பகிர்ந்துகொள்ளுகின்றனர்" என்று குறிப்பிட்டார். "பெனட் ஒரு உண்மையே பேசினால், ''அதை ஒவ்வொருவரும்
ஏற்றுக்கொள்ளுகின்றனர் ஆனால் அதைப்பற்றி எவரும் பேசமுடியாமல் இருப்பதற்குக் காரணம் அதனை நிரூபிப்பதற்கான
ஆதாரம் எதுவும் இல்லாததே" என்று கச்சாடோ அறிவித்தார்.
ஒரு ஸ்பெயின் காலனியான பகுதியிலுள்ள---கனாரிசின்
PP தலைவர் ஜோஸ்
மானுவல் சோரியா, பெனட்டிற்கு தமது ஆதரவை தெரிவித்தார்; "தெஜோராவிற்கு பின்னர் ஸ்பெயின் ஜனநாயகத்தில்
நிகழ்ந்துவிட்ட படுமோசமான சம்பவம்தான்" சப்பாட்டிரோ என்று வர்ணித்தார்.
மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று சோசலிஸ்ட் கட்சி மிகவும் மந்தமாக
கேட்டுக்கொண்டது. பெனட் அரைகுறை மனதோடு மன்னிப்புக் கேட்டார் அந்த சம்பவத்தை ஒரு கெட்ட உணர்வோடு வெளிப்படுத்திய
கிண்டல் என்று முடித்துக்கொண்டார்.
2004 மார்ச் 13-ல் PP
தலைமை அலுவலகங்களுக்கு வெளியில் கண்டனப்பேரணிகளுக்கு ஏற்பாடு செய்ததாக அஸ்னார் சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராக
குற்றம் சாட்டியதை தொடர்ந்து PP-ன்
பிரசாரம் அண்மைய இராணுவ அச்சுறுத்தல்கள் மூலம் திடீரென்று அதிகரித்திருக்கின்றது. ஒரு பொதுத் தேர்தலுக்கு முன்னர்
முந்திய நாளில் அரசியல் பிரச்சாரம் நடத்துவதற்கு சட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அது அரசியல் சட்டத்திற்கு முரணானது
என்று அவர் வர்ணித்தார்.
இந்த கோரிக்கையை அஸ்னரும் மற்றும்
PP-யும்,
சோசலிஸ்ட் கட்சி மீது ஒரு கிரிமினல் விசாரணையை கோருவதற்கு பயன்படுத்திக்கொண்டதுடன்
இறுதியாக அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கும் அடிப்படையாக எடுத்துரைக்க முயன்றன. தொழிலாள வர்க்கத்தின்
ஒரு பொதுமக்கள் கிளர்ச்சி மூலம் ஒரு அரசாங்கத்தை நீக்க அனுமதித்ததாக சோசலிஸ்ட் கட்சியை அவர் கண்டித்தார்.
அதிகாரபூர்வமான விசாரணை கமிஷன் மாட்ரீட் குண்டு வெடிப்புகள் தொடர்பாக விசாரணையை தொடக்குவதற்கு
முதல்நாள், 2005 ஜூலை 5-ல் அஸ்னார் அறிவித்தார்; "பயங்கரவாதிகள் தங்களது குறிக்கோளை இந்த அரசாங்கத்தை
கவிழ்த்ததன் மூலம் சாதித்துக்கொண்டனர். மார்ச் 13 போன்று மிக மோசமாக ஜனநாயக விரோத நடவடிக்கைகள்
நடத்த இன்னொரு நாளை நினைவுபடுத்துவது மிகவும் கடினமானது... இதற்கு பொறுப்பானவர்கள் இடதுசாரிகளின் ஒரு
பகுதியினர், அவர்களது கழுத்தைச் சுற்றி படுமோசமான அழுக்கு சேர்ந்திருக்கிறது."
2004 நவம்பர் 29-ல் கமிசனுக்கான அஸ்னாரின் சாட்சியம் சோசலிஸ்ட் கட்சியை
கண்டிக்கும் வடிவத்திலிருந்தது. அவர் தனது நிர்வாகம் ''தகவலை மூடி மறைத்து வருவதாக'' ''கற்பனையான'' ஒரு
கருத்தின் அடிப்படையில் ''ஒரு அரசாங்கம் முன்னொருபோதுமில்லாதவாறு தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டது என
வர்ணித்தார்." மற்றவர்கள்தான் பொய் கூறினார்கள்... அவர்கள் உண்மையை புரட்டினார்கள் மற்றும் நமது
ஜனநாயகத்தில் விதிமுறைகளை மிகவும் கடுமையாக மீறுவதற்கு சக்திவாய்ந்த வகையில் ஆதரவு தந்தார்கள்." என்று
அறிவித்தார்.
சென்ற கோடைகாலத்தில் PP
ஒரு பிரச்சாரப் படத்தை வெளியிட்டது, அதன் தலைப்பு
படுகொலைக்கு பின்னர் என்று இருந்தது. அது சோசலிஸ்ட் கட்சியின் தேர்தல் வெற்றியை
"இடதுகளும்" மற்றும் நிர்வாக-எதிர்ப்பு அமைப்புகளும் நடாத்திய ''ஜனநாயக-எதிர்ப்பு நெருக்குதல்களின்'' ஒரு
நடவடிக்கை என்று கண்டித்தது. அந்த திரைப்படத்தை PP-ன்
சிந்தனையாளர் குழுவான சமூக ஆய்வுகளுக்கான அறக்கட்டளை (FAES)
"சுதந்திர தேர்தல்களும் மற்றும் அவற்றில் எதிரிகளும்: பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத கிளர்ச்சி" என்ற தலைப்பில்
நடைபெற்ற இரண்டு நாள் எழுச்சி நிகழ்விற்காக தயாரித்திருந்தது. ''இடதுகள்'' வாக்களிக்கும் குடிமக்களது எண்ணத்தை
மாற்றியமைக்கின்ற நோக்கில் அரசியல் போராட்டத்தை நடத்தினர் எனவும் மற்றும் ''பல மாதங்களுக்கு முன்னரே
நாடக பாணியில் ஒத்திகை நடாத்தி'' ''தெருக்களில் வெறுப்பை விதைப்பதற்கும்,'' மற்றும் படுகொலைகளுக்கு
அரசாங்கத்தின்மீது பழிபோடுவதற்கும் ஜனநாயக விரோத முறைகளை கையில் எடுத்துக்கொண்டு கண்டன பேரணிகளை
ஒழுங்கமைத்தார்கள்'' என்றும் அந்த திரைப்படம் குற்றம் சாட்டியுள்ளது. |