:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Army court martial conceals CIA involvement in death of former Iraqi general
முன்னாள் ஈராக் தளபதி மரணத்தில்
CIA தொடர்பை மூடி மறைத்த இராணுவ நீதிமன்றம்
By Andre Damon
30 January 2006
Back to screen version
ஈராக்கிய இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல்களில் ஒருவரான அபெத் ஹமீத்
மெளஹவுஸ் ஜனவரி 22ல் கவனக்குறைவாக கொலையில் முடியும் செயலை செய்ததாக அமெரிக்க இராணுவ நீதிமன்ற
தலைமை கட்டளையிடும் அதிகாரியான லூயிஸ் E.
வெல்ஸ்ஹேவரை தண்டித்திருக்கிறது.
மெளஹவுஸின் உடலைச் சுற்றி கயிற்றால் கட்டி, தூங்கும் பையில் அடைத்து, அவரது உடைந்து
விட்ட விலா எலும்புகளில் அடித்து, அவரது வாயையும் வெல்ஸ்ஹேவர் மூடிவிட்டதால் அவர் இறந்தார். வெல்ஸ்ஹேவருக்கான
தண்டனையில் சிறை தண்டனை எதுவுமில்லை. 16 நாட்களுக்கு மேல் சித்திரவதை செய்யப்பட்டதால் மெளஹவுஸ் மடிந்தார்
என்று சான்றுகள் வெளிவந்திருக்கின்றன. மற்றும் அவர் மீதான புலன் விசாரணையில்
CIA உட்பட பல புலனாய்வு அமைப்புக்கள் சம்மந்தப்பட்டிருந்தன.
மெளஹவுஸ் 2003 நவம்பர் 10ல் ஈராக் நகரமான குவாய்மிலுள்ள ஒரு அமெரிக்க இராணுவ
தளத்திற்கு பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் தனது நான்கு புதல்வர்களையும் விடுதலை செய்து விட முடியும் என்ற
நம்பிக்கையில் அங்கு சென்றார். மெளஹவுஸின் புதல்வர்களில் ஒருவர் வாஷிங்டன் போஸ்டிற்கு தெரிவித்தது
ஜனவரி 25ல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ''எனது தந்தை வராவிட்டால் நீ உனது
குடும்பத்தை பார்க்க திரும்பிச் செல்ல முடியாது என்று அவர்கள் -
[அமெரிக்க இராணுவத்தினர்]
குறிப்பிட்டார்கள்''. அமெரிக்க படையெடுப்பை தொடர்ந்து மாதங்களில்
அதிகரித்த ஈராக் கிளர்ச்சிகளுக்கு மெளஹவுஸ் நிதி திரட்டுவதில் உதவுகிறார் என்று அமெரிக்கப் படைகள் சந்தேகித்தன.
அவர்களது சொந்தக்காரர்கள் சரணடைய வேண்டும் என்பதற்காக கைதிகளாக சிறைப்பிடிக்கும் தந்திரம் சர்வதேச சட்டப்படி
சட்டவிரோதமானது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் அமெரிக்க இராணுவம் அதை பயன்படுத்தியிருக்கிறது.
அவர் சிறையிலிருந்தபோது மெளஹவுஸ் ஒரு நோய் வாய்பட்ட 56 வயது மனிதர் உதவியின்றி
நடக்க முடியாத அளவிற்கும் மற்றும் மூச்சுவிடுவதற்கு சங்கடப்படுகின்ற அளவிற்கு அடிக்கப்பட்டார். ''அவர்
களைத்துவிட்டார் மற்றும் அவரது உடலில் நான் காயங்களை பார்த்தேன்... அந்த அளவிற்கு அவர்கள் அவரை
தாக்கியிருப்பதுதான் அதற்குக் காரணமாகும். அவர் மீது அவருக்கு மிகவும் மோசமாக அடித்திருந்ததால் பெரும் வலியின்
காரணமாக அவர் என்னிடம் பேசக் கூட இயலவில்லை'' என்று அவரது மகன் போஸ்டிடம் தெரிவித்தார்.
வெல்ஸ்ஹேவர் மீதான விசாரணை அமெரிக்காவின் சித்திரவதை கொள்கை அமெரிக்க
இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் அனைத்து பிரிவிலும் பரவலாக ஊடுருவியிருப்பதை மழுங்கடிப்பதற்காக
நடத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. மெளஹவுஸின் மரணம் தொடர்பாக எல்லா பழிகளையும் வெல்ஸ்ஹேவர்
மீது இராணுவ நீதிமன்றம் ஒப்படைத்தது. ஆனால் அப்படியிருந்தும் அவருக்கு சிறைத்தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை.
வெல்ஸ்ஹேவர் முதலில் கொலைக்குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டார், ஆனால் அதற்குப் பின்னர் அவர் மீது
கவனக்குறைவாக நடந்து விட்ட மரணத்திற்கும் மற்றும் கடமை தவறியதாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு முறையே
மூன்று ஆண்டுகளும் மூன்று மாதங்களும் சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டது.
இறுதியாக ஜனவரி 23ல் அவர் தண்டிக்கப்பட்டபோது அவருக்கு அபராதமும் மற்றும் தனது
படைத்தளத்திலேயே தங்கியிருந்து மற்றும் 90 நாட்கள் வரை அவரது வழிபாட்டு இடத்திலேயே இருக்க வேண்டும் என்று
விதிக்கப்பட்டது. சித்திரவதையில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவம் கடுமையான விசாரணைகளை நடத்தாது என்பதற்கு
தெளிவானதொரு அடையாளம் தான் இந்த புறக்கணிக்கத்தக்க தண்டனையாகும். மெளஹவுஸ் மீது சித்திரவதை முறைகளை
பயன்படுத்துவதற்கு அதிகாரமளித்த மற்றும் ஊக்குவித்த வெல்ஸ்ஹேவரின் மேலதிகாரிகள் மீது அதைவிட கடுமையான நீதியை
மீறியவர்கள் என்று குற்றச்சாட்டுக்களே தாக்கல் செய்யப்படவில்லை என்ற உண்மை நீதியை மேலும் மீறுவதாகும்.
வெல்ஸ்ஹேவரின் மேலதிகாரிகள் மீதான இராணுவ நீதிமன்ற விசாரணை அமெரிக்க இராணுவம்
திட்டமிட்டு சித்திரவதையை பயன்படுத்துவதையும் மிகவும் குறிப்பாக மெளஹவுஸ் மீது விசாரணைகள் மற்றும் சித்திரவதை
நடத்தப்பட்டதில் CIA
பங்கெடுத்துக் கொண்டதை மூடி மறைப்பதாகவும் அமைந்திருக்கிறது. மெளஹவுஸ்
மரணம் ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் அந்த நிகழ்ச்சியை மூடி மறைப்பதற்கான அதிகாரபூர்வமான நடவடிக்கை
தொடங்கிவிட்டது. அப்போது இராணுவ அதிகாரிகள் ஒரு அப்பட்டமான மோசடி அறிக்கையை வெளியிட்டனர். அதில்
அவர்கள் மெளஹவுஸ் ''இயற்கையான காரணங்களால்'' மடிந்தார் என்று கூறினர். அதற்குப் பின்னர் ஊடகங்கள் பெற்ற
இரகசிய ஆவணங்கள் அந்தக் கூற்றை மறுப்பதாக அமைந்தன.
CIA, சிறப்புப்படைகள், இராணுவம்
மற்றும் CIA
நிதியளித்து ஈராக்கில் உருவாக்கப்பட்டுள்ள Scorpions
என்றழைக்கப்படும் சிறப்பு நடவடிக்கை குழுவினர் ஆகியோர் பிளாக்ஸ்மித் உணவு விடுதி என்று அழைக்கப்படும் ஒரு இராணுவ
காவல் முகாமில் மெளஹவுஸ் மீது திட்டமிட்டு சித்திரவதைகளை செய்தார்கள் என்பதை கசியவிடப்பட்ட ஆவணங்களும் கூட
வெளிப்படுத்தின. இவை அம்பலத்திற்கு வந்து விட்ட மிகமுக்கிய தகவல்களாகும். நன்கு அறிந்த ஒரு கைதியை சித்திரவதை
செய்வதிலும் மற்றும் அதற்கு பின்னர் கொலை செய்ததிலும் பலதரப்பட்ட முகவர்கள் நேரடியாக பங்கெடுத்துக்
கொண்டதை அவை சுட்டிக் காட்டுகின்றன.
2005 ஆகஸ்ட் 3 தேதியிட்ட ஒரு கட்டுரையில் வாஷிங்டன் போஸ்ட்
வெல்ஸ்ஹேவர் விசாரணை தொடர்பான இரகசிய ஆவணங்களில் அதிகளவிற்கு திருத்தி ஒழுங்கமைக்கப்பட்ட விவரங்களை ஒரு
கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் ''நவம்பர் 24ல்
CIAம்
Scorpion பிரிவுகளில் நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவும்
மெளஹவுஸை புலன் விசாரரைண செய்தது''. போஸ்ட் புலன் விசாரணை செய்த ஆவணங்கள் இராணுவ சிறப்பு
அதிகாரியான குர்டிஸ் ரியான் தெரிவித்த சாட்சியத்தை வெளியிட்டிருக்கிறது. ''அவர் கேள்விகளுக்கு பதிலளிக்காத அல்லது
பதில் தர விரும்பாத நேரத்தில் முதலில் (திருத்தப்பட்டது) மெளஹவுஸ் கன்னத்தில் அறைந்தார்கள் மற்றும் ஒரு சிலதடவை
அறைந்த பின்னர் குத்துக்களை விட்டார்கள். மற்றும் அந்த குத்துக்களுக்கு பின்னர் ஒரு குழாயை பயன்படுத்தி
(திருத்தப்பட்டது) விசாரணை செய்தார்கள்'' என்று ரியான் சாட்சியமளித்தார்.
CIA இனால் சித்திரவதை செய்யப்பட்ட
பின்னர் ''நான்கு இராணுவ காவலர்கள் மெளஹவுஸை அவரது சிறை கொட்டடிக்கு தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது''
என்று ஒரு இராணுவ பொலிஸ் அதிகாரி தந்த அறிக்கையை போஸ்ட் மேலும் தகவலாக தந்திருக்கிறது.
ஒரு போரில் பிடிக்கப்பட்ட கைதிகளை சித்திரவதை செய்வது ஜெனீவா ஒப்பந்தங்களின் கீழ்
ஒரு போர்க்குற்றமாகும். அது போர்புரிபவர்கள் கைது செய்யப்பட்ட எல்லா போர் வீரர்களையும் மனித நேய
அடிப்படையில் நடத்தவது அவசியம் என்று கூறுகின்றன. பின்னாளில் போர் குற்றங்களுக்கான நீதிமன்றங்கள்
அமைக்கப்படுமானால் வழங்குதொடுனர்களின் தரப்பு வக்கீல்களின் கைகளுக்கு மெளஹவுஸின் கொலை ஒரு மிகவும்
சக்திவாய்ந்த ஆயுதமாகும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. மெளஹவுஸின் மரணம் தொடர்பாக பெருமளவிற்கு
ஆவணங்கள் திரட்டப்படுவது மட்டுமல்லாமல் அவற்றில் புலனாய்வு முகவர்களும் மற்றும் அதிகாரத்துவத்தினரும் அவரது
வழக்கில் குற்றம்சாட்டப்படுவதற்கு உரியவர்கள். ஆனால் கைதிகளை சித்திரவதை செய்வதில் பரந்த முகவர்களுக்கிடையில்
ஒத்துழைப்பிற்கான சாட்சியத்தை தருவதன் மூலம் இந்த சம்பவம் பென்டகன் மற்றும்
CIAல் தலைமை அதிகாரங்களில் இருந்தவர்களையும்
போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக்குகிறது.
இந்த காரணத்தினால் தான் இந்த சம்பவத்தை இராணுவம் அசாதாரணமான இயல்புக்கு
மாறான கவனத்தோடு வெல்ஸ்ஹேவரின் இராணுவ நீதிமன்ற விசாரணையை ஒரு நாடகம் தயாரிப்பதைப்போல்
கையாண்டிருக்கிறது. CIA
இன் பங்களிப்பை பற்றி விவாதம் நடப்பதற்கு ஒரு தடை விதிப்பது உட்பட இந்த
வழக்கு ஒரு விரிவான அடிப்படையில் அம்பலத்திற்கு வந்துவிடாது தடுப்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில்
அனைத்தையும் செய்துகொண்டது. Forbes
ஜனவரி 22ல் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின் படி அந்த விசாரணையின் போது எதிர் தரப்பு வக்கீல் வாய் தவறி இரண்டு
முறை CIA
பற்றி குறிப்பிட்டார்.
தான் யார் என்று அடையாளம் கண்டு கொள்ளாதிருப்பதற்காக திரைமறைவிலிருந்த ஒரு
சாட்சியை விசாரிக்கும் போது இந்த நிகழ்ச்சி நடந்தது. மெளஹவுஸ் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்தில் தினசரி
புலனாய்வு தொடர்பான இராணுவ வழிகாட்டி நெறிமுறைகள் மீறப்பட்டு வந்ததாக தான் நம்புவதாக வெல்ஸ்ஹேவர்
தன்னிடம் சொன்னதாக அந்த சாட்சி திரைமறைவிலிருந்து எதிர்தரப்பு வழக்கறிஞர் பிராங்க் ஸ்பின்னருக்கு பதிலளித்தார்.
இரகசிய தகவல் வெளியிடுவதிலிருந்து ஜூரர்கள் தடுப்பதற்காக ஜூரர்களிடமிருந்து வரும்
அனைத்து கேள்விகளுக்கும் எழுத்து மூலம் முன்கூட்டியே ஒப்புதல் பெறப்பட்டது. அந்த சாட்சியை ஒரு
CIA முகவர் அல்லது ஒரு
துணை ஒப்பந்தக்காரர் என்று கவனக்குறைவான அடிப்படையில் சுட்டிக் காட்டி ஸ்பின்னர் கேட்டார். ''அதை நீங்கள்
CIA இற்கு
தெரிவிக்கவில்லையா?''. தனது தவறை உணர்ந்து கொண்டு அவர் அந்த கேள்வியை திரும்பப் பெற்றார் மற்றும்
நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார். அந்த விசாரணையின்போது கடுமையான முன்தணிக்கை முறை நிலவியதுடன் அந்த
விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களும் ''இரகசியம்'' என்று முத்திரை குத்தப்பட்டு மூடப்பட்ட ஒரு மூன்று அடி
நீள பெட்டிக்குள் வைக்கப்பட்டடிருந்தது. அது ஒவ்வொரு நாளும் நீதிமன்ற அறைக்கு அதற்கு பொறுப்பான ஒரு
பாதுகாப்பு அதிகாரி தள்ளிக் கொண்டு வந்தார் என்று போர்பஸ் பத்திரிகை தகவல் தந்தது. இரகசிய
தகவல் வெளியிடுவதிலிருந்து ஜூரர்கள் தடுப்பதற்காக ஜூரர்களிடமிருந்து வரும் அனைத்து கேள்விகளுக்கும் எழுத்து மூலம்
முன்கூட்டியே ஒப்புதல்பெறப்பட்டது
பத்திரிகை செய்திகளின்படி அவரது தலைமை அதிகாரியால் ஒப்புக்கொள்ளப்பட்ட தூங்கும்
பை நடைமுறையை ''புகுத்தி'' இராணுவ நடைமுறையின் உடன்படிக்கையில் உள்ள செயல்பாட்டில் வெல்ஸ்ஹேவர்
அப்பொழுது மெளஹவுஸ் கொன்றார். ஆகஸ்ட் 3ல் வெளியிடப்பட்ட கட்டுரை மேலே சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது
வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டிருந்த செய்தியில் ''அப்போது மூன்றாவது கவச வாகன காலாட் படைப்பிரிவிற்கு
தளபதியான கேர்னல். டேவிட் A.
டீபில்ஸ் நீதிமன்றத்தில் சட்சியமளித்தபோது ''மரண பயமூட்டும் நடைமுறையை'' ஒப்புதலளிக்கப்பட்ட மற்றும் பயனுள்ள
ஆகிய இரண்டு வகைகளிலுமே தாம் நம்புவதாக குறிப்பிட்டார். இவ்வாறான விசாரணைகள் தொடர்பாக அறிந்தவர்களின்
தகவல்களின்படி மெளஹவுஸ் மரணத்திற்கு முன்னரும், சிறிது காலத்திற்கு பின்னரும் பயன்படுத்தப்பட்டது'' என குறிப்பிட்டது.
அமெரிக்க அரசாங்கம் மறைமுகமாக வெளிநாட்டு கொள்கையின் ஒரு கருவியாக சித்திரவதையை
ஏற்றுக் கொண்டிருந்த நிலைப்பாட்டை ஒட்டி ஈராக் போரின் நடவடிக்கை முழுவதிலுமே கைதிகள் நடத்தப்படும் விதம்
தொடர்பாக இராணுவ அதிகாரிகளுக்கு தரப்பட்ட கட்டளைகள் மிகவும் தெளிவில்லாதவையாக அல்லது முறைகேடுகளை
மறைமுகமாக ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது. 2003 ஆகஸ்டில் வெல்ஸ்ஹேவருக்கு தனது மேலதிகாரிகளிடமிருந்து
பாக்தாத்திற்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இதுவரை கைதிகளை புலன் விசாரணை செய்வது தொடர்பாக எந்த
விதிகளும் இல்லை ஆனால் ''கையுறைகள் நீக்கப்பட்டு விட்டன'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குவாண்டாநாமோ
வளைகுடா டெல்டா முகாம் சிறைச்சாலையின் முன்னாள் தளபதியான ஜெனரல் ஜோபிரே மில்லர் ஈராக்கில் அதிக
''மூர்க்கத்தனமான'' நடைமுறைகளை குவாண்டாநாமோ வளைகுடாவில் பயன்படுத்தப்பட்டது போல் செய்ற்படுத்த
வேண்டும் என்று பாதுகாப்புத்துறை கட்டளையிட்ட பின்னர் ஈராக்கிற்கு விஜயம் செய்து விட்டு திரும்பிய மூன்று மாதங்களுக்கு
பின்னர் மெளஹவுஸின் மரணம் நடந்திருக்கிறது. அபு கிரைப் சிறைச்சாலையில் சித்திரவதைகள் நடைபெற்ற அதே காலத்தை
ஒட்டி தான் இந்த சம்பவமும் நடந்திருக்கிறது.
புஷ் நிர்வாகத்தின் கட்டளைப்படி படையினர் கைதிகளை சித்திரவதை செய்வதற்கு, உதைப்பதற்கும்
மற்றும் பலரை கொல்வதற்கும் குறிப்பிடத்தக்க விளைவுகள் பற்றி பயப்படாமல் செயல்படுகின்ற சூழ்நிலையை அமெரிக்க
இராணுவம் உருவாக்கியது. அதே நேரத்தில் தனிப்பட்ட இராணுவ மற்றும் புலனாய்வு அதிகரிகள் திட்டமிட்டு சித்திரவதை
பயன்படுத்தப்பட்டதை அவற்றை பயன்படுத்தியதற்கு வெளிப்படையாக அதிகாரம் கொடுக்கவில்லை என்று கூறி தாங்கள் உடந்தையாக
செயல்பட்டதை மறுக்க முயன்றனர்.
மெளஹவுஸ் கொலையை அரசாங்கம் கையாண்ட விதம் அபு கிரைப் சித்திரவதை மோசடிகளின்
போது அது கையாண்ட அதே வகையை சார்ந்தது தான். என்றாலும் அபு கிரைப் வழக்கில் பல கீழ்மட்ட படையினர் குற்றம்
சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்றனர் மற்றும் அவர்களில் இருவர் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அபு கிரைப்பிலிருந்து
சித்திரவதை புகைப்படங்கள் வெளிவந்ததால் சர்வதேச அளவில் பாரியளவில் பொதுமக்களது ஆத்திரத்தை உருவாக்கியிருந்த
காரணத்தினால் அமெரிக்க அரசாங்கம் ஒரு சில பலிகடாக்களை தண்டிக்க வேண்டிய கட்டாயக் கடமை ஏற்பட்டது அதே
நேரத்தில் உயர் மட்ட அதிகாரிகளையும் அரசியல் அதிகாரிகளையும் தண்டிக்காமல் விட்டு விட்டது.
இதற்கு மாறாக ஈராக் ஜெனரலின் கொலை மிகச் சிறிய அளவிற்கே ஊடகங்களில்
தாக்கத்தை ஏற்படுத்தியது இதற்கு பெரும் பகுதி காரணம் அவரது மரணத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகள் தொடர்பாக எந்த
புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களும் இல்லை என்ற உண்மை தான். எனவே ஒரு நோய் வாய்ப்பட்ட மனிதர் மடிகின்ற
நேரத்தில் புலனாய்வு அதிகாரி ''அந்த வழியில் குறுக்கிட்டார்.'' என இது தற்செயலாக நடந்து விட்ட ஒரு சம்பவம்
போல் சித்தரிக்க முடிந்தது.
தண்டனைக்குள்ளானவர் ஈராக் இராணுவத்தில் ஒரு உயர் இடத்தில் இருந்திராவிட்டிருந்தாலும்,
மற்றும் அந்த பகுதி முழுவதிலும் பிரபல்யமானவராக இருந்திராவிட்டால் புலன்விசாரணை அல்லது வழக்கு தாக்கல்
செய்திருக்கவும்மாட்டார்கள் மற்றும் அந்த சம்பவம் பற்றிய செய்தியும் வந்திருக்காது. ஊர் பேர் தெரியாது ஈராக்
சிறைகளில் நிரம்பியிருக்கும் கைதிகள் தொடர்பான வழக்குகளை அமெரிக்க இராணுவம் மூடி மறைத்து விட்டதைப்போல்
இந்த தளபதியின் கொலையை மறைக்க முடியவில்லை. எனவே அடுத்த கட்ட சிறந்த நடவடிக்கை என்னவென்றால் ஒரு
நாடகபாணியில் இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தி மெளஹவுஸின் மரணம் தொடர்பான சூழ்நிலைகளை மேலும் மறைத்து
அது தொடர்பான உண்மை வெளிவராமல் செய்வதாகும்.
|