World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

After the Hamas election win

Daniel Pipes denounces democracy for Muslims

ஹமாஸ் தேர்தல் வெற்றிக்குப்பிறகு

முஸ்லீம்களுக்கான ஜனநாயகத்தை டானியல் பைப்ஸ் கண்டிக்கிறார்

By Rick Kelly
2 February 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஜனவரி 25-ல் பாலஸ்தீனிய பாராளுமன்ற தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து வலதுசாரி கட்டுரையாளர் டானியல் பைப்ஸ் புஷ் நிர்வாகத்திற்கு விடுத்திருக்கின்ற அழைப்பில் அமெரிக்க நலன்களுக்கு ஆதரவாக அவர்களின் முடிவுவரும் என்று உறுதி செய்து தரப்படும்வரை மத்திய கிழக்கில் மேலும் தேர்தல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

வாஷிங்டனில் உள்ள பல வெளியுறவுத்துறை கொள்கை அதிகாரிகளின் சிந்தனைகளை பைப்ஸ் பண்பற்ற பாணியில் வெளிப்படுத்தியிருக்கிறார். மத்திய கிழக்கிற்குள் ஜனநாயக ஆதரவிற்கான புஷ் நிர்வாகத்தின் வாய்வீச்சு வெளிப்பாடுகளின் விளைபயன்கள் தொடர்பாக அமெரிக்காவின் ஆளும் வட்டங்களுக்குள்ளே ஹமாஸ் இன் வெற்றி ஒரு விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது.

"ஜனநாயகத்தின் கசப்பான பழம்" என்று பைப்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரை ஜனவரி 27-ல் கனடாவின் நேஷனல் போஸ்டில் வெளியிடப்பட்டிருந்தது மற்றும் ஜனவரி 30-ல் ஆஸ்திரேலியனில் "ஜனநாயகத்திற்காக கனியாத பிராந்தியம்" என்ற தலைப்பில் மீண்டும் அச்சிடப்பட்டிருக்கிறது.

மத்திய கிழக்கில் ஜனநாயகத்திற்கான நகர்விற்கு புஷ் நிர்வாகம் கவனம் செலுத்துவதில் பொறுமையிழந்து செயல்படுவது நமது மிக கொடூரமான எதிரிகளை அதிகாரத்திற்கு கொண்டு வருவதால் நிலையாக திருப்பி தம்மை தாக்கிக்கொண்டிருக்கிறது மற்றும் ஸ்திரத்தன்மை பாராட்டுவது மட்டுமே முற்றுப்பெற்ற குறிக்கோள் ஆகாது, ஆனால் அது இல்லாதிருப்பது குழப்ப நிலைக்கும் தீவிரவாதத்தன்மைக்கும் இட்டுச் சென்றுவிடும்" என்று அந்த கட்டுரை ஆலோசனை கூறியிருக்கிறது.

பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்கு சேவை செய்வதற்கு இராணுவ வாதத்தை பயன்படுத்துவதை முன்னிலைப்படுத்தும் ஒரு வலதுசாரி சிந்தனைக் குழுவான மத்திய கிழக்கு மன்றத்தின் இயக்குனராக பைப்ஸ் பணியாற்றி வருகிறார். இந்த அமைப்பு ஈராக் போரை ஆதரித்தது மற்றும் சிரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைக்காக இதற்கு முன்னர் கேட்டுக்கொண்டது. மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கைகளையும் மற்றும் இஸ்ரேலை விமர்சிக்கின்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களை இலக்குகளாக கொண்டு மெக்கார்தே-பாணி அமைப்பான கேம்பஸ் வாட்சிற்கும் பைப்ஸ் தலைவராவர். அந்த கட்டுரையாளர் முஸ்லீம்களுக்கு எதிரான விரோதப்போக்கில் இழிபுகழ் பெற்றவர் மற்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் ஆக்கிரமிப்பை அவர் ஆதரிப்பவர்.

பைப்ஸ் தனிமைப்படுத்தப்பட்ட வலதுசாரியின் ஒரு வாய்வீச்சாளரல்ல. அவர் குடியரசுக்கட்சியின் பிரிவுகளோடு நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளார். பயங்கரவாத தொழில்நுட்பம் தொடர்பான சிறப்பு பணிக்குழுவில் 2001 நவம்பரில் நியமிக்கப்பட்டார், பாதுகாப்புத் துறையினால் அவை ஆதரிக்கப்பட்டது மற்றும் அமெரிக்க சமாதான கழகத்தில் பணியாற்ற அந்த கட்டுரையாளர் 2003-ல் ஜனாதிபதி புஷ்ஷால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மத்திய கிழக்கில் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதிலும் மற்றும் ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் பணியாற்றி வருவதாக புஷ் நிர்வாகம் வெளிப்படுத்திய கூற்றை எதிரொலித்தவாறு பைப்ஸ் பாலஸ்தீன தேர்தல்கள் குறித்து தமது கட்டுரையை ஆரம்பிக்கிறார். அவர் எழுதுகிறார்: "வாஷிங்டன் தலைமையில் ஏறத்தாழ ஒவ்வொரு மேற்கு அரசாங்கமும் மத்திய கிழக்கு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு ஒரு இரு-முனை அணுகுமுறையை பின்பற்றின" இதில் "எதிர்மறை" முனை பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவது, அதே நேரத்தில் "ஆக்கபூர்வமான" முனை ஜனநாயகத்தை வளர்ப்பது.

பிராந்தியத்தில் அதன் ஏகாதிபத்திய நோக்கங்களை அமெரிக்கா முன்னெடுத்துச்செல்வதற்கான வழியாக மத்திய கிழக்கில் ''ஜனநாயகத்திற்காக'' வாஷிங்டனால் அழுத்தம் கொடுப்பது மற்றும் "பயங்கரவாதத்தின் மீதான போர்'' ஆகிய இரண்டுமே உண்மையிலேயே முடிவற்றதாகும். ஜரோப்பா மற்றும் ஆசியாவில் அதன் போட்டி நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் நிலைப்பாட்டை பெருக்கிக்கொள்வதற்கும் பிராந்தியத்தில் முக்கியமான எரிசக்தி வளங்களை தங்களது கட்டுப்பாட்டில் நிலைநாட்டிக்கொள்வதற்கும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் படையெடுப்பிற்கு முன்னரே ஸ்தாபிக்கப்பட்ட திட்டங்களை தொடக்குவதற்கு செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களை கையில் எடுத்துக்கொண்டது.

"சுதந்திரம்" மற்றும் "ஜனநாயகம்" பற்றிய புஷ் நிர்வாகத்தின் முன்னிலைப்படுத்தலானது புஷ் நிர்வாகம் ஈராக்கின் பேரழிவுகரமான ஆயுதங்கள் பற்றிய அதன் பொய்கள் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்ட பின்னர் ஈராக்கின் சட்டவிரோதமான படையெடுப்பிற்கு பின்னோக்கி அமலுக்கு வருகின்ற ஒரு நியாயப்படுத்தலை வழங்கிய. பயங்கரவாத அல்லது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்படுகின்றன என்று காட்ட முடிந்தாலும் அல்லது முடியாவிட்டாலும் உலகம் முழுவதிலும் உள்ள குறிவைக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக அமெரிக்கா ஆக்கிரமிப்பிற்கு ஒரு சாக்குப்போக்கை வழங்குவதற்கு அது தற்போது உதவி செய்கிறது.

இந்த பிராந்தியத்தில் ஜனநாயகத்தை வளர்ப்பதாகக் கூறும் வாஷிங்டன் கூற்றின் வெறுப்புமனப்பான்மை பல சந்தர்ப்பங்களில் விளக்கிக்காட்டப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பு படைகளின் மேற்பார்வையில் ஆப்கானிஸ்தானிலும் மற்றும் ஈராக்கிலும் நடத்தப்பட்ட மோசடி தேர்தல் நாடகம் ஜனநாயகத்திற்கு முன்மாதிரிகள் என்று பாராட்டப்பட்டன அதே நேரத்தில் பாலஸ்தீனத்தில் ஹமாசின் வெற்றி உடனடியாக சட்டவிரோதமானது என்று கண்டிக்கப்பட்டிருக்கிறது.

என்றாலும், பைப்சை பொறுத்தவரை புஷ் நிர்வாகத்தின் மூலோபாயம் வெளிவேஷம் பற்றிய பிரச்சனையல்ல, ஆனால் அதற்கு மாறாக கருதிய பயனைத் தரத்தக்க அதன் திறமை ஆகும். அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் பல அமெரிக்காவிற்கு பாதகமான முடிவுகளை வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார். "பாலஸ்தீனிய ஆணையத்தில் முதலாவதாக நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்தல் ஹமாசை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது. 2005 டிசம்பரில் எகிப்தில் வாக்காளர்கள் ஒரு தீவிரப்போக்குடைய இஸ்லாமிய கட்சியான முஸ்லீம் சகோதரத்துவத்திற்காக வலுவாக முன்வந்தனர், தாராளவாத சக்திகளுக்காக அல்ல. ஈராக்கில் சதாம் ஹூசேனுக்கு பிந்திய காலத்து வாக்காளர்கள் ஈரான்-சார்பு இஸ்லாமியரை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கின்றனர். லெபனானில் இருந்து சிரிய துருப்புக்கள் விலகிக்கொண்டதை கொண்டாடுகின்ற வகையில் ஹெஜெபொல்லா அரசாங்கத்திற்கு வருவதற்கு வாக்களித்துள்ளனர். அதேபோன்று சவுதி அரேபியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெற்ற தேர்தல்களில் தீவிரப்போக்குடைய இஸ்லாமிய சக்திகள் வெற்றிபெற்றிருக்கின்றன.

ஜேர்மனி மற்றும் ஜப்பானை போன்று நடைபெறாமல், இரண்டாம் உலகப்போருக்கு பின் மத்திய கிழக்கில் நடக்கின்ற தேர்தல்கள் அமெரிக்க-சார்பு கட்சிகளை அதிகாரத்திற்கு கொண்டுவரவில்லை என்று பைப்ஸ் புகார் கூறுகிறார். "இந்த வேறுபாட்டிற்கு காரணமாக அமைந்திருப்பது இஸ்லாம் அல்லது வேறு கலாச்சார காரணி அல்ல, மாறாக மத்திய கிழக்கில் கருத்தியல் எதிரிகள் இன்னும் முறியடிக்கப்படவிடவில்லை என்ற உண்மையை அது காட்டுகிறது" என்று அவர் எழுதுகிறார். "ஜேர்மனி, ஜப்பான் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் அந்த மக்கள் சர்வாதிகார உலைக்களத்தில் வேதனைகளை தாங்கிய பின்னர் ஜனநாயகமயமாக்குதல் தொடங்கப்பட்டது. 1945-லும் மற்றும் 1991-லும் அந்த மக்கள் பாசிசமும் மற்றும் கம்யூனிசமும் எத்தகைய பேரழிவுகளை கொண்டு வந்தன என்பதை உணர்ந்து கொண்டனர் மற்றும் வேறொரு பாதையை முயல்வதற்கு அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டனர். மத்திய கிழக்கில் அப்படி நடக்கவில்லை, அங்கு ஒரு சர்வாதிகார மனப்பான்மை இன்னும் வலுவாக நிலைபெற்றிருக்கிறது."

இந்த குறுகிய பகுதிக்குள் அடங்கியிருக்கும் அனைத்து வரலாற்றுரீதியான திரித்தல்கள் பொய்யுரைகள் மற்றும் கலப்படங்களை அம்பலப்படுத்துவதற்கு இது இடமல்ல. அமெரிக்காவின் குறிக்கோள்களை அடைவதற்கு இராணுவப் படையை பயன்படுத்துவதில் ஜேர்மனியையும், ஜப்பானையும், கவர்ச்சி நிறைந்த எடுத்துக்காட்டுகளாக பைப்ஸ் பார்க்கிறார் என்று சொல்வதே போதுமானது. சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச ஆட்சியை பொறுத்தவரை----அதற்கு கம்யூனிசத்தோடு எந்த தொடர்பும் இல்லை---- பைப்ஸ் போன்ற கம்யூனிசவிரோதிகளின் நிலையான கருத்து என்னவென்றால் "ஜனநாயகமயமாக்கலுக்காக" மக்களை தயார்படுத்துவதற்கும் அது வீழ்ச்சியுற நிர்பந்தித்ததிலும் 1980களில் அமெரிக்க மூர்க்கத்தனமாக ஆயுதங்களை உருவாக்கியது தீர்க்கமானதாக அமைந்துள்ளது.

ரஷ்யா தற்போது ஜனநாயகமயமாக்கப்பட்டுவிட்டது என்று பைப்ஸ் வலியுறுத்துவது, "எதேச்சாதிகாரத்திற்கும்" மற்றும் "ஜனநாயகத்திற்கும்" இடையில் அவர் வேறுபடுத்திக்காட்டுகின்ற உண்மையான அர்த்தத்தை அம்பலப்படுத்துகிறது. ரஷ்யாவில் தற்போது எதேச்சாதிகார அதிபரான விளாடிமிர் புட்டின் தலைமையில், சோவியத் ஒன்றியத்தின் அரச பொருளாதாரத்தை சூறையாடி தங்களை வளப்படுத்திக்கொண்ட பில்லியனர் ஒருசிலவராட்சிகளின் ஒரு குறுகிய அடுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பைப்ஸை பொறுத்துவரை, "ஜனநாயகம்'' சாதாரண மக்களது ஜனநாயக உரிமைகளோடு எந்த வகையிலும் சம்மந்தப்பட்டதல்ல ஆனால் மாறாக, ஒரு சந்தைப் பொருளாதாரம் மேலாதிக்கம் செலுத்துவதற்கு இணையானதாகும், மற்றும் முதலாளித்துவ உறவுகளை நிலைநிறுத்துகின்ற ஒரு அரசியல் முறையை ஸ்தாபிப்பதும் அமெரிக்காவின் நலன்களுக்கு அதை கீழ்படியச்செய்வதுமாகும்.

"மத்திய கிழக்கில் கருத்தியல் எதிரிகள் இன்னும் முறியடிக்கப்பட்டுவிடவில்லை" என்று பைப்ஸ் புகார் கூறுகிறார். புஷ் நிர்வாகம், "தீவிர இஸ்லாமை'' முறியடிப்பதற்கு பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார், "அந்த வழி தோல்விக்கு இட்டுச்செல்லக் கூடியது என்பதை முஸ்லிம்கள் உணர்கின்ற போதுதான் மாற்றீடுகளை கடைபிடிப்பதற்கு அவர்கள் தயாராவார்கள்" என்று அவர் வலியுறுத்துகிறார்.

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பாலஸ்தீனிய சமுதாயம் மண்டியிட வேண்டும் என்று பைப்ஸ் கோருகிறார். ஹமாசின் தேர்தல் வெற்றி- ஒரு உருத்திரிந்த வடிவமாக இருப்பினும் ---பாலஸ்தீனிய மக்கள் இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருப்பதை எதிர்த்து நிற்பதன் வெளிப்பாட்டை பிரதிநிதித்துதவப்படுத்துகிறது. பைப்சை பொறுத்தவரை இந்த பொதுமக்களது எதிர்ப்பை அமெரிக்காவும் மற்றும் இஸ்ரேலும் முன்னுரிமை கொடுத்து நசுக்கியாக வேண்டும் என்பதாகும்.

எதேச்சாதிகார கவர்ச்சியின் காரணமாக இஸ்லாமியவாதிகள் வெற்றிபெறவில்லை ஆனால் தங்களது தற்போதைய தலைவர்களுக்கு எதிராக பாலஸ்தீனிய மக்களின் எதிர்ப்பானது, இஸ்ரேலிய ஒடுக்குமுறை மற்றும் சமாதான முன்னெடுப்பு என்றழைக்கப்படுவது இவற்றினால் ஆகும். மேற்கு கரையிலும் காசாவிலும் தற்போது பொதுமக்களது உணர்வில் ஜனாதிபதி மஹமூத் அப்பாசின் தலைமையிலான பாலஸ்தீனிய நிர்வாகம் (PA) மற்றும் ஃபத்வின் கோழைத்தனம் மற்றும் ஊழல் மீது வெறுப்பும் விரக்தியும் மேலோங்கி நிற்கிறது.

"சமாதான முன்னெடுப்பின்" படி இஸ்ரேலின் குடியிருப்புக்கள் கிழக்கு ஜெருசலேத்திலும் மேற்கு கரையிலும் காசாவிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது மற்றும் போராளிகள் படுகொலை, வீடுகள் இடிப்பு மற்றும் குடிமக்கள் பகுதிகளில் குண்டு வீச்சு மற்றும் விமானத்தாக்குதல்கள் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளில் எண்ணிறந்த இஸ்ரேலிய இராணுவ அதிரடி நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. இஸ்ரேலின் பிரிவினை சுவர் மூலம் மேற்குக்கரையில் ஒரு பெரும்பகுதியை சட்டவிரோதமாக இணைத்துக்கொண்டார்கள் மற்றும் எந்த இதர பாலஸ்தீனிய பகுதியிலிருந்தும் கிழக்கு ஜெரூசலேத்தை துண்டித்துவிட்டார்கள். PA இஸ்ரேல் முன்னரும் மற்றும் ஏகாதிபத்திய வல்லரசுகள் முன்னரும் மண்டியிட்ட செயலானது தோற்றுவிட்ட நம்பிக்கைகள், ஊழல் மற்றும் சாதாரண பாலஸ்தீனிய மக்களை பொறுத்தவரை ஆழ்ந்த வறுமையில் தள்ளியிருக்கிறதேதவிர வேறு ஒன்றையும் சாதித்துவிடவில்லை. இவை அத்தனைக்கும் பின்னரும் பொதுமக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைக்கு அடிபணிவதற்கு விருப்பம் இல்லாமல் எழுந்து நிற்கின்றனர். பைப்சின் கருத்துப்படி இதைத்தான் மாற்றியாக வேண்டும்.

"1933-ல் ஜேர்மானியர்கள் ஹிட்லரை தேர்ந்தெடுத்தது போன்று நாகரீக கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு ஆபத்தான முடிவை பாலஸ்தீனியர்கள் எடுத்துவிட்டார்கள் என்பதை மேற்கு நாடுகளின் தலைநகரங்கள் பாலஸ்தீனிய மக்களுக்கு காட்ட வேண்டியது அவசியமாகும். ஹமாஸ் தலைமையிலான பாலஸ்தீன நிர்வாகம் தனிமைப்படுத்தப்பட்டாக வேண்டும் மற்றும் அது ஒவ்வொரு திருப்பத்திலும் புறக்கணிக்கப்படவேண்டும் அதன்மூலம் பாலஸ்தீனியர்கள் தங்களது வழியில் செய்துள்ள தவறைப் பார்க்குமாறு ஊக்குவிக்க வேண்டும்." என்று பைப்ஸ் எழுதுகிறார்.

மீண்டும் ஒருமுறை வரலாறு வசதியாக திருப்பி எழுதப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். நாஜிக்கள் ஆட்சிக்கு வந்ததை முதலாவதாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்த முதலாளித்துவ அரசாங்கங்கள் ஐரோப்பாவில் சோசலிச புரட்சி அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு அரணாக பரவலாக வரவேற்றன என்ற உண்மையை முதலில் குறிப்பிட்டாக வேண்டும்.

"தங்களது வழிகளில் செய்துவிட்ட தவறை உணருமாறு பாலஸ்தீனியர்களை ஊக்குவிக்க வேண்டும்" என்ற பைப்சின் கோரிக்கை மேற்குக்கரையிலும் காசாவிலும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய வல்லரசுகளும் குண்டாந்தடியால் தாக்க வேண்டும் என்பது இடக்கரடக்கலாகும் (மறைபொருள் ஆகும்). பாலஸ்தீனிய அமைப்புக்களுக்கான அனைத்து வெளிநாட்டு நிதியுதவிகளுக்கும் ஒரு தடைவிதிப்பது குறித்து தற்போது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன, அது ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப்பகுதிகளில் ஒரு பேரழிவுத் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கான மற்றும் பாலஸ்தீன மக்களை மண்டியிடச்செய்வதற்கு கடுமையான முறைகளை கையாள வேண்டும் என்பதற்கான ஒரு கூரற்ற வாதம்தான் பைப்சின் கட்டுரை ஆகும்.

Top of page