ஐரோப்பா
:
பிரான்ஸ்
Fight vs. CPE requires independent political struggle
by French workers
CPE க்கு எதிரான
போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை
Statement of the World Socialist Web Site Editorial
Board
6 February 2006
Use this
version to print |
Send this link by email |
Email the author
பெப்ரவரி 7ம் தேதி பிரான்ஸ் முழுவதும் உயர்நிலைப் பள்ளி, பல்கலைக் கழக மாணவர்களின்
அமைப்புக்கள், பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் (Contrat
première embauche - CPE) முதல் வேலை ஒப்பந்தத்திற்கு
எதிராக நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்து கீழ்க்கண்ட அறிக்கை வெளியிடப்படுகின்றது.
இந்த அறிக்கை உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்களால் ஆர்ப்பாட்டக் கூட்டங்களில் வினியோகிக்கப்படுகிறது.
CPE எனப்படும் முதல் வேலை
ஒப்பந்தம், அதில் விதித்துள்ள இரண்டாண்டு "வலுப்படுத்தும் காலம்" என்பதில் தொழிலாளர்கள் எந்த காரணமும்
இன்றி வேலையில் இருந்து அகற்றப்படலாம் என்பதை எதிர்த்து உயர்நிலை, மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும்
போராட்டம், குறைவூதிய உழைப்பு மற்றும் அனைத்து பணி உரிமைகள் அழிப்பு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம்
ஆகும். முழுத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களை குறைக்க வேண்டும் என்ற, சிராக்-வில்ப்பன்-சார்க்கோசி
ஆகியோரின் அரசாங்கத்தின் மையக் கொள்கைக்கு எதிராக இளைஞர்களை அணிதிரட்டியுள்ளது. அரசாங்கம் மற்றும்
அது காக்கும் பெருவணிக நலன்களுக்கு ஏதிரான அரசியல் போராட்டமாக இது உள்ளது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களின் இளைஞர் கிளர்ச்சிகள், 20 ஆண்டுகளுக்கும்
மேலாக நிலவி வரும் பெருகிய வேலையின்மை, வேலைப்பாதுகாப்பற்ற தன்மை இவற்றின் விளைவு ஆகும். இளைஞர்கள்
மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்; அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களுடைய குழந்தைகள் ஆவர்.
இக்கிளர்ச்சிகள் இனப்பாகுபாடு மற்றும் பொலீசாரின் தொந்திரவு மீதான கோபம் மற்றும் வலது மற்றும் இடது
கட்சிகளிலிருந்து ஆழ்ந்த அந்நியப்படலையும் எதிரொலித்தன. இளைஞர்களுக்கு மிக அவசரமாக ஒரு புதிய அரசியல்
முன்னோக்கின் தேவையை விளக்கிக் காட்டின.
மாணவர்களை கல்விமுறையில் இருந்து 14 வயதிலேயே அகற்றிவிடுதல்,
ZEP க்காக
(கல்வி அடிப்படையிலான முன்னுரிமை பகுதிகளில் சிறப்பு தேவை
பள்ளிகள்) நிதி ஒதுக்கீடு செய்வது அகற்றப்படுதல், மற்றும் போலீஸ் ஒடுக்குமுறையை அதிகரித்தல் ஆகிய
முன்மொழிவுகள் CPE
தான், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நிகழ்ந்தவற்றிற்கு பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் இன்
அரசாங்கம் எதிர்கொள்ளும் முறையானது இத்தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்பதாகும். இளைஞரிடையே 23
சத விகித வேலையின்மையை குறைப்பதற்கும் அதேபோல் ஒரு நிரந்தர வேலை கிடைப்பதற்கு சராசரியாக 8
முதல் 11 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை பற்றியும் அது ஏதும் செய்யவில்லை.
சோசலிஸ்ட் கட்சியினால் பெரிதும் ஆதரிக்கப்பட்டிருந்த அவசரகாலநிலை மற்றும்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் கிட்டத்தட்ட வரம்பில்லாத அதிகாரங்களை போலீசாருக்கு கொடுத்துள்ளமை,
முதலாளித்துவ இலாபமுறையினால் ஏற்பட்டுள்ள சமூக நெருக்கடிக்கு அரசியல் மேற்தட்டுக்கள் கொடுத்துள்ள ஒரே
விடையாகும்.
புதிதாக வேலையில் சேர்க்கப்படுபவர்களுக்கான ஒப்பந்தம்
(Contrat Nouvelle Embauche -CNE),
பற்றிய சட்ட வரைவு கடந்த ஆகஸ்டில் பாராளுமன்றத்தில்
இயற்றப்பட்டபோது தொழிற்சங்கங்களிடமிருந்து எதிர்ப்பு இல்லாததால் அரசாங்கம் வேலை உரிமைகள் மீதாக
அதன் தாக்குதல்களில் ஊக்கப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அச்சட்டம், 20க்கும் குறைவாக தொழிலாளர்களை
கொண்டிருக்கும் நிறுவனங்களை பற்றி CPE
கொண்டுள்ளது போன்ற விதிமுறைகளை கொண்டிருக்கிறது.
தொழிற்சங்கங்களின் பங்கு பற்றிய அதிருப்தியை நன்கு உணர்ந்திருந்த தொழிலாளர்
பொதுக் கூட்டமைப்பின் (CGT -General
Confderation of labour -- பிரான்சின் மிகப் பெரிய
தொழிற்சங்கம்) Bernard Thibault
ஒப்புக் கொண்டதாவது: "CNE
ஐ தடுக்க நாங்கள் முற்படாத காரணம், அக்டோபர் 4ம் தேதியன்று நிகழ்ந்த ஒற்றுமை தின நடவடிக்கைக்கு பின்
என்ன செய்வது என நாங்கள் முடிவுசெய்யவில்லை." அன்று மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அன்றைய
பேரணி ஆர்ப்பாட்டங்களில் தனியார் மயமாக்குதல் மற்றும்
CNE, இன்னும் பிற
தொழிலாளர் எதிர்ப்பு சட்டங்களுக்கு எதிராக திரளாக பங்கு பெற்றிருந்தனர்.
SNCM (National Corisca-Mediterranean Company)
படகுத்துறை தொழிலாளர்கள் இதே பிரச்சினைகளை ஒட்டி மூன்று வாரம் வேலை நிறுத்தம் மேற்கொண்ட
இடைக்காலத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது. CGT
வேண்டுமேன்றே வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி, இல்லாமலும் செய்துவிட்டது; சட்டத்தை எதிர்த்து போராடுவது
சாத்தியமில்லாதது என்று கூறியது.
கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி, பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் கல்வி
மந்திரி Francois Fillon
இன் கல்வி சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர். இரண்டு நாட்களுக்கு பின்னர், மாணவர்கள் 35 மணி
நேர வாரம் அகற்றப்படுதல், தொழிலாளர்களுடைய வாங்கும் திறனில் சரிவு ஆகியவற்றை எதிர்த்து தனியார் மற்றும்
பொதுத் துறைகளில் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றில்
சேர்ந்திருந்தனர்.
அரசாங்கம் தொழிற்சங்கங்களுக்கு ஊதியம் பற்றிய பேச்சு வார்த்தைகளுக்கு அழைப்பு
விடுத்திருந்தது; தொழிற்சங்கங்கள் அணிதிரண்டிருந்ததை கலைத்து, கல்விக்கூடங்களின் நிலையை கைவிட்டுவிட்டன;
அவையோ தொழிலாளர்களுடன் ஒற்றுமை இருந்தால் தங்களுடைய இயக்கம் வெற்றிபெறும் என்ற பெரும் நம்பிக்கையில்
இருந்தன.
CPE மற்றும்
CNE முன்மொழிவுகள்
தொழிலாளர் சட்டங்கள் மற்றும் ஊழியர்கள் உரிமைகள் மீதான தாக்குதலில் சமீபத்தியவைதான்; அவற்றில் குறைவூதிய
உழைப்பு இளைஞர் திட்டங்கள், தற்காலிக ஒப்பந்தங்கள் உள்பட பல கடந்த இருபது ஆண்டுகளாக இடது, மற்றும்
வலது அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டன.
CPE, CNE இவற்றுடன் அரசாங்கம்
57 வயதான மூத்த தொழிலாளர்களுக்கு என்று குறுகிய கால ஒப்பந்த திட்டம் ஒன்றையும் தயாரித்துள்ளது; இதன்படி
ஓய்வு பெற்றவர்கள் தங்கள் ஓய்வூதியங்களுடன் குறைந்த ஊதியங்களை இணைத்துக் கொண்டு வேலைபுரியலாம். இந்த
திட்டங்களில் பங்கு பெறுவதற்கு ஊக்குவிக்கும் நிதித் தொகை கிட்டத்தட்ட 20 பில்லியன் யூரோ பரிசு மழையாக முதலாளிகளுக்கு
செல்கின்றது. MEDEF (Movement of
Enterprises of France பிரான்சின் தொழில் முயற்சிகளின்
இயக்கம்) என்னும் பெருவணிக அமைப்பு CPE, CNE
ஆகியவை அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும் விதியாக இருக்க வேண்டும் என விழைகிறது: அதாவது தனிச்சிறப்பான
ஒப்பந்த முறை வேண்டும் என்று கூறுகிறது.
இந்த நடவடிக்கைகளின் நோக்கம் தொழிலாளர் ஊதியச் செலவினங்கள் செய்வதில்
இருக்கும் தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, பெருவணிகத்தின் போட்டித்தன்மை, இலாபகரத்தன்மை ஆகியவற்றை
அதிகரித்து, பிரான்சை மீண்டும் முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமாக ஆக்குவது ஆகும். சிராக்கும் பன்முக இடது
பிரதம மந்திரி ஜொஸ்பனும் 2000ல் வந்த "லிஸ்பொன் செயல்முறைகளுக்கு" உதவினர்; அதன்படி ஐரோப்பிய ஒன்றிய
அரசாங்கங்கள் தொழிலாளர் செலவினங்கள், சமூக நன்மைகள், பணிகள், குறிப்பாக ஓய்வூதியங்களை குறைப்பதன்
மூலம் தங்கள் பொருளாதாரங்களை அமெரிக்காவுடன் போட்டியிடுவதற்கு உதவும் வகையில் போட்டிமிக்கதாக செய்ய
உறுதி கொண்டன. இப்பொழுது இந்தியாவும், சீனாவும் வணிகப் போட்டியாளர்கள் என்று வந்துள்ள நிலையில்,
அடித்தளத்திற்கு செல்வதற்கான போட்டி தொடங்கிவிட்டது.
பிரெஞ்சு முதலாளித்துவத்தின் நலன்களை காப்பதில் தங்கள் அரசாங்கம் கொண்டிருந்த
நிலைப்பாட்டை மறைக்கும் பொருட்டு CPE
க்கு எதிரான போராட்டத்தில் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கு பெறுகின்றன மற்றும் அவை ஒரு இரண்டாம்
பன்முக இடது நடைமுறைக்கு நம்பகத்தன்மையை பெற முயலுகின்றன. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR),
இத்தகைய இழிந்த சுழ்ச்சிக்கையாளல்களை அம்பலப்படுத்துவதற்கு
பதிலாக, இடது மற்றும் தொழிற்சங்கங்களின் ஒற்றுமையை அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான திறமையான
தடை என்று பாராட்டியுள்ளது. LCR,
SNCM
மார்சேய்ல்ஸ் படகுத்துறை சர்ச்சையில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சூழ்ச்சிக்கையாளல்களுக்கு விமர்சனமற்ற
ஆதரவை கொடுத்தது.
கடந்த ஆண்டு ஐரோப்பிய அரசியலமைப்பு ஒப்பந்தம் பிரான்ஸ், டச்சு
வாக்கெடுப்புக்களில் தோல்வியடைந்தது, இது ஐரோப்பிய மற்றும் நாடுகடந்த நிறுவனங்களால் ஐரோப்பா
முழுவதும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு தொழிலாள வர்க்கத்தாலான நிராகரிப்பு ஆகும். ஆனால்
அப்பொழுது "வேண்டாம்" வாக்கெடுப்பிற்கு பிரச்சாரம் செய்திருந்த எந்த அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும்
(LCR, CP,
பசுமைக்கட்சியினரில் ஒரு சிறுபான்மையினர், சோசலிஸ்ட் கட்சியில் ஒரு
சிறுபான்மை, ATTAC, Copernicus
Foundation) ஆகியவை உண்மையில் ஐரோப்பாவின்
முதலாளித்துவ அரசாங்கங்கள், முதலாளிகள் ஆகியோரை எதிர்க்கவில்லை.
மாறாக, "புதிய தாராண்மைவாதம்" அல்லது "ஆங்கிலோ-சாக்சன்
முன்மாதிரியைத்தான்" --அதாவது கடுமையான மோதல் கொண்ட இறக்குமதியைத்தான் தாங்கள் எதிர்ப்பதாக
கூறினர். பிரெஞ்சு அல்லது ஐரோப்பிய முன்மாதிரியில், சமூக சீர்திருத்தங்களுக்காக சமூக பங்காண்மை மற்றும்
வர்க்க ஒத்துழைப்பையும் கொண்ட, மற்றொரு விதமான முதலாளித்துவம் சாத்தியமானது என்று அவை கூறின; அதில்
தாங்கள்தான் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்துபவர்களாக
இருப்பர் என்றும் அவை கூறின. இந்த இலக்கை கருத்தில் கொண்டு, அவர்கள் சோசலிஸ்ட் கட்சியின் "வேண்டாம்"
வாக்குப் பிரச்சார தலைவரான Laurent Fabius
உடன் சேர்ந்து கொண்டனர், அவரோ இப்பொழுது மீண்டும் சோசலிஸ்ட் கட்சியின் பெரும்பான்மை பிரிவில்
"வேண்டும்" என்பவர்களுடன் சேர்ந்துவிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள்
தொழிலாளர்கள் உரிமை, வாழ்க்கைத் தரங்கள், சமூகப் பணிகள் ஆகியவற்றை பாதுகாக்க அழுத்தம் கொடுக்கப்பட
முடியும் என்பது பொய் கூற்றாகும். அவை பெருமூலதனத்திற்கு - எல்லாவற்றிற்கும் மேலாக எவ்விதக் கருத்து உடைய
அரசாங்கமாயினும், அது தொழிலாளர் செலவினங்களை குறைத்து, சுரண்டுவதற்கு உதவவேண்டும் என்ற கோரிக்கைகளை
வைக்கும் நாடுகடந்த நிறுவனங்களுக்கும், நிதிய சிறு தன்னலக்குழுக்களுக்கும் கடப்பாடுடையதாக இருக்க வேண்டும்
என்றுதான் விழைகின்றன.
இத்தன்னல சிறுகுழுவானது, ஐரோப்பாவில் சமூக சீர்திருத்தவாதம் மற்றும் சமூக
நலன்புரி அரசு நடவடிக்கைகள் என்ற ஒரு தீவுத்தன்மையை சகித்துக்கொள்ளத்தகாதது; ஏனெனில் அவற்றை
தன்னுடைய இலாபங்களில் இருந்து கழிக்கப்படும் நிதியாக பார்க்கிறது மற்றும் அவை உலகம் முழுவதும் தொழிலாள
வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் குறைக்கப்படுவதற்கு ஏற்கமுடியாத தடையாக அமைக்கின்றது. சர்வதேச
முதலீட்டை ஈர்ப்பதற்கும், ஐரோப்பிய பெருநிறுவனங்கள் உலகளவில் போட்டி தன்மையை தக்க வைத்துக்
கொள்ளுவதற்கும், ஐரோப்பாவின் சமூக நலன் செயல்முறைகள் கட்டாயம் அழிக்கப்பட்டு, வாழ்க்கையின் ஒவ்வொரு
கூறுபாடும் சந்தையின் கட்டாய தேவைகளுக்கு தாழ்த்தப்பட வேண்டும் என்று அது கருதுகிறது.
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் விளக்கிக்காட்டப்பட்டது போல், உலகின்
வளங்கள், சந்தைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் இறுதியில் புதிய காலனித்துவ போர்கள்
வெற்றியடைவதில் அரசுகள் இராணுவ வலிமையை திரட்டுவதல்தான் இடம்பெறும். இது ஒன்றும் "ஆங்கிலோ-சாக்சன்"
முன்மாதிரி அல்ல. இது ஐரோப்பா, மற்றும் உலகம் முழுவதிலும் நிலவும் நவீன முதலாளித்துவத்தின் முகமாகும்.
முந்தைய சோசலிஸ்ட் கட்சிப் பிரதம மந்திரியான லியோனல் ஜொஸ்பன்,
Michelin ல்
நடைபெற்ற ஏராளமான பணிநீக்கங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுப்பாரா என்று கேட்கப்பட்டதற்கு, சந்தை
விதிகளை எதிர்ப்பது சாத்தியமல்ல என்று பதில் கொடுத்தார். இந்த கொள்கைதான் 2002 தேர்தலில்
தொழிலாள வர்க்கம் பன்முக இடதில் இருந்த கட்சிகளை நிராகரித்ததற்கு மிகப் பெரிய அளவில் பங்களிப்பு
செய்தது, அது சிராக்கையும் கோலிச அரசாங்கத்தையும் பதவிக்கு கொண்டுவந்தது.
சிராக் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு முழு இடதும் பொறுப்பை கொண்டுள்ளது:
இதுதான் மறு தேர்தலில் பாசிச லூ பென்னுக்கு எதிராக சிராக்கிற்கு வாக்களிக்குமாறு கோரியதாகும்.
LCR மற்றும்
Lutte Ouvriere
இரண்டும் உலக சோசலிச வலைத் தளம் விடுத்த அழைப்பான வாக்கெடுப்பை தீவிரமாகப் புறக்கணிக்கவேண்டும்
மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், அரசியல் மேற்தட்டுக்களில் இருந்து சுயாதீனமான தொழிலாள
வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை நிராகரித்தன.
பிரான்சின் அரசியல் மேற்தட்டுக்களுக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தில்
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு மறுப்பானது, அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக
வடிவமைக்கப்படும் ஒரு நாள் நடவடிக்கை, சில பிரிவுகளின் எதிர்ப்பு என்று நடவடிக்கையை மட்டுப்படுத்திக் கொள்ளும்
நிலை, அவர்களின் தேசியவாத, வர்க்க ஒத்துழைப்பு முன்னோக்கிலிருந்து ஊற்றெடுக்கிறது, இது இடது, வலது அரசாங்கங்கள்
தங்கள் "தடையற்ற சந்தை" நடவடிக்கைகளை பெருவணித்திற்கு ஆதரவான முறையில் செயல்படுத்த அனுமதிக்கின்றது.
தொழிலாளர் விரோத சட்டங்கள் நீக்கப்பட வேண்டும், கெளரவமான, முறையாக
நிதி ஒதுக்கப்பட்ட கல்விமுறை வேண்டும் என்று கோருவதற்கும், குறைவூதிய உழைப்புத் திட்டங்களை அகற்றுவதற்கும்,
சமூகத்தின் செல்வம் அனைத்து மக்களுடைய நல்ல வாழ்க்கைத் தரம், சமூகப் பணிகள் ஆகியவற்றை பெறுவதற்கு பயன்படுத்தப்படுவதற்கும்
இளைஞர்களும், தொழிலாளர்களும், பெருவணிகம் மற்றும் அதன் பிரதிநிதிகளுக்கு எதிரான ஓர் அரசியல்
போராட்டத்தை தொடர்வதற்கு தங்களுடைய சொந்த சோசலிச கட்சியைக் கட்டியமைக்க வேண்டும். இந்த இலக்கை
அடைவதற்கு ஐரோப்பிய இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றுபடுத்துவதற்கும் அதேபோல் உலகம் முழுவதிலும்
இருக்கும் இளைஞர்கள், தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த கட்டாயம் முயற்சிக்க வேண்டும்.
தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீனமான அரசியல் நலன்களுக்காக ஒரு ஐக்கியப்பட்ட
சர்வதேச சக்தியாக போராடுவதன் மூலம் மட்டுமே, பெரும் செல்வம் கொழிக்கும் பல மில்லியன்களையுடைய
சிறிய அளவிலான செல்வந்தர்கள் இன்னும் செல்வக்குவிப்பு அடைவதற்கு பதிலாக, மனிதகுலத்தின் தேவைகளை பூர்த்தி
செய்யும் வகையில் முதலாளித்துவத்தின் பிடியை உடைத்து உற்பத்தி சக்திகளை விடுவிக்க முடியும். உலக சோசலிச
வலைத் தளத்தின் வாடிக்கையான வாசகர்களாகும்படியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரெஞ்சு பிரிவை
கட்டியமைப்பதில் பங்கு பெறுமாறும் நாங்கள் இளைஞர்களையும் தொழிலாளர்களையும் அழைக்கிறோம்.
See Also:
பிரான்ஸ்: இளைஞர்களின்
வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்
Top of
page |