WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
With cabinet changes, India's UPA government tilts
still closer to Washington
அமைச்சரவையில் மாற்றங்களுடன், இந்தியாவின்
UPA
அரசாங்கம் வாஷிங்டனுக்கு இன்னும் நெருக்கமாகச் சரிகிறது
By Kranti Kumara and Keith Jones
3 February 2006
Use this
version to print |
Send this link by email |
Email the author
இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் ஜனவரி 29ம் தேதி ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி (UPA)
அமைச்சரவையின்
மாற்றத்தை அறிவித்தார்.
19 மந்திரிகள் அமைச்சர் குழுவில் சேர்க்கப்பட்டதற்கு (ஏழு பேர் துறைத் தலைவர்களாகவும்
மற்றவர்கள் இணை அமைச்சர்கள் என்ற முறையிலும்) வெளிப்படையாக கூறப்பட்ட காரணம் வட்டாரப் பிரதிநிதித்துவத்தை
விரிவாக்குதல் என்பதாகும். இது ஒரு காணம் என்பதில் ஐயமில்லை: சில முக்கிய மாநிலங்களில் வரவிருக்கும் மாதங்களில்
தேர்தல்கள் நிகழ உள்ளன. இரண்டாவது காரணம் நேரு-காந்தி குடும்பத்திற்கு துதி பாடுபவர்களுக்கு பரிசளித்தல்
என்பதாகும். மே 2004 பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதமாக காங்கிரஸ்-தலைமையிலான
UPA வெற்றி
அடைந்தபோது சோனியா காந்தி பிரதம மந்திரிப் பதவியை மறுத்த போதிலும்கூட, காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமற்ற
ஆளும் குடும்பத்தின் தலைவர் கட்சித் தலைவராக இருப்பதுடன், அரசு கட்டிலுக்கு பின்னணியில் பெரும் சக்தியுடன் செயல்படுகிறார்.
அவ்வாறு இருப்பினும் கூட, அமைச்சரவையில் மாற்றங்கள் என்பது அரசாங்கத்தை
இன்னும் கூடுதலான வகையில் வாஷிங்டனுன் நெருக்கமாகச் சாயும் நோக்கத்தையும், பெருவணிகத்திற்கு
UPA அதன் தேவைகளை
பூர்த்தி செய்வதில் முழுமையாகச் செயல்பட்டு புதிய-தாராளவாத சீர்திருத்தத்தின் வேகத்தை விரைவுபடுத்தும்
என்பதை தெரிவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைச்சரவையில் மாற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு முக்கியமான வளர்ச்சிகள்
பெட்ரோலியத் துறை அமைச்சர் மணி சங்கர் அய்யரை பதவி இறக்கத்திற்கு உட்படுத்தியதும், மன்மோகன் சிங் வெளியுறவு
அமைச்சரகத்தை தன் கைகளிலேயே தக்க வைத்துக் கொளவதற்கான முடிவுகளும் ஆகும்.
இந்த இரண்டு நடவடிக்கைகளும்
UPA அரசாங்கத்திற்குள்ளும்,
இந்தியாவின் உயர் மேல்தட்டிற்குள்ளும் எந்த அளவிற்கு இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்
என்பது பற்றி நடந்து கொண்டிருக்கும் போராட்டத்துடன் பிணைந்துள்ளவையாகும். மன்மோகன் சிங்கும், காங்கிரஸ்
தலைமையில் ஒரு சிறிய குழுவும், உலக அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒழுங்கிற்குள்ளே அமெரிக்கா வழங்கும் ஒரு சிறப்புத்
தகுதியை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முயலுகின்றன -- இத்தகைய தகுதி அமெரிக்க அணுசக்தி
தொழில்நுட்பம் அங்கிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாவதற்கு வகைசெய்யும் மற்றும் அது இந்தியா உலக சக்தி
என்னும் அந்தஸ்தை அடைவதில் புஷ் நிர்வாகத்தின் "உதவி" என்பதற்கான ஸ்தூலமான வெளிப்பாட்டை அர்த்தப்படுத்தும்.
ஆயினும், இந்திய மேல்தட்டிற்குள்ளே பெருகிய முறையில் ஒரு கவலை உள்ளது, அதாவது
அமெரிக்க அணுவாயுத விவகாரத்தையும், பெருகிவரும் இராணுவ பங்ககாண்மையையும் பயன்படுத்தி இந்தியா அமெரிக்காவை
சார்ந்திருக்கும் உறவில் பொறியில் சிக்கவைப்பதற்கான மற்றும் உலக அரங்கில் வாஷிங்டன் இடும் கட்டளைகளை இந்தியா
செயல்படுத்தும் நிலைக்குப் பிணைக்கப்பட்டு, அமெரிக்காவை நம்பியிருக்க வேண்டிய உறவாகி விடுமோ என்பதே
அது. இந்த அக்கறைகள் ஈரானுக்கு எதிராகவும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக இந்தியா
கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச அணுவாயுத அமைப்பு (IAEA)
கூட்டத்தில் வாக்களித்ததில் வெளிப்பட்டது. இந்த வாக்கு இந்தியாவின் மரபார்ந்த நிலைப்பாடான சர்வேதச அரங்குகளில்
"கூட்டுச் சேரா" சக்திகள், ரஷ்யாவுடன் சேர்ந்து வாக்களிக்கும் பாரம்பரிய நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டது
மட்டும் இல்லாமல், இந்தியாவின் ஈரானுடனான "மூலோபாய பங்காண்மை" வளர்ச்சிக்கு எதிராகவும் போய்விட்டது.
மன்மோகன் சிங்கும் மற்ற உயர்மட்ட இந்திய அதிகாரிகளும் ஈரானுக்கு எதிராக அணுக்கரு
ஆற்றல் பேரத்தில் வாக்களித்தல் என்பது வாஷிங்டனுடைய கட்டாயத்தினால் என்பதை உறுதியாக மறுத்துள்ளனர்; ஆனால்
அமெரிக்க அதிகாரிகளும் மூத்த அமெரிக்க தேசிய சட்ட மன்ற உறுப்பினர்களும் பல முறையும் இந்தியா ஈரான்
விஷயத்தில் அமெரிக்க தலைமையை பின்பற்றாவிட்டால், பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பலமுறை கூறியுள்ளனர்.
உண்மையில் கடந்த வாரம்தான் இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதர் டேவிட் மம்போர்ட் பெப்ரவரி 2-3
IAEA கூட்டத்தில்
அணுவாயுத விரிவாக்க ஒப்பந்தத்தினை மீறுவதற்காக ஈரான் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்கு,
அனுப்பி வைப்பதற்கான வாக்கெடுப்பில் அமெரிக்கா விரும்பும்படி வாக்களிக்காவிட்டால், இந்திய அமெரிக்க ஒப்பந்தம்
"மடிந்துவிடும்" என்று கூறினார்.
இந்தியாவின் முக்கிய செய்தித்தாள்களில் பலவும்
UPA அமைச்சரவையில்
மிகத் திறமையான உறுப்பினர் மணி சங்கர் அய்யர் என்று குறிப்பிட்டுள்ளன. ஆயினும்கூட அவர் பெட்ரோலியம், இயற்கை
எரிவாயு அமைச்சரக பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக குறைந்த மதிப்புடைய இளைஞர்கள்,
விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்; அதே நேரத்தில் பஞ்சாயத்து ஆட்சி (தல சுய ஆட்சி)
என்ற துறையில் மந்திரிப் பொறுப்பையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
பத்திரிகை தகவல்களின்படி, காங்கிரஸ் தலைமையிடத்தின் சில கூறுபாடுகள் அய்யர் வெளியுறவுத்
துறையில் அதிகம் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளன. ஈரானிய எரிவாயு பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும்
இடையே வழங்கப்படுவதற்கான குழாய்த்திட்டம் அமைத்திடுவதற்கு பெரிதும் அவர் குரல் கொடுத்தார் என்பது
மறுப்பதற்கில்லை. ஈரானிய ஆட்சியை ஒதுக்கி வைக்கும் முயற்சியை அடியிலிருந்து வெட்டும் அத்தகைய குழாய்த்திட்டத்திற்கு
தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாக புஷ் நிர்வாகம் பல முறை தெளிவாக்கியுள்ளது.
"ஆசிய ஆற்றல் தொகுப்பு சட்டம்" (Asian
energy grid) என்பது கட்டமைக்கப்பட வேண்டும் என்றும்
அய்யர் விழைந்தார்; அது மேற்கின் தளத்தை கொண்ட எண்ணெய் நிறுவனங்கள் மீது ஆசியா நம்பியிருக்க வேண்டிய
நிலையை குறைக்கும் என்றும் இந்தியா, சீனா இரண்டும் வெளிநாட்டு எரிபொருள் தேடுதல், உற்பத்தி செய்தல்
ஆகியவற்றில் நெருக்கமாக ஒத்துழைக்க உதவும் என்றும் அவர் கூறினார். இத்தகைய முயற்சிகள் சிலவற்றில் வாஷிங்டனுக்கு
சிறிதும் விருப்பம் கிடையாது. இந்து பத்திரிக்கையின்படி, கடந்த மாதம் அமெரிக்க அரசாங்கம் முறையாக அய்யரின்
முயற்சியில் இரு பெரிய அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவிலும் சீனாவிலும் கூட்டாக சிரியாவில் எண்ணெய்,
எரிவாயு உரிமங்களை வாங்கியதில் பங்கு கொண்டதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தது என்று எழுதியுள்ளது (See
"China and India manoeuvre to secure energy supplies")
மணி சங்கர் அய்யரை மாற்றிய வகையில், ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா
குழாய்த்திட்டத்தின் வளர்ச்சியை முற்றிலும் கைவிடுதல் என்றில்லாவிடின் வளர்ச்சியின் வேகத்தை குறைத்தல் என்ற முடிவிற்கு
வந்துள்ளதைத்தான் காங்கிரஸ் தலைமை அடையாளம் காட்டியுள்ளதாக தோன்றுகிறது. "அமெரிக்க நிர்வாகம் ஈரான்-பாகிஸ்தான்-இந்திய
குழாய்த்திட்டத்தை எதிர்க்கிறது; ஈரானை ஒதுக்கும் பாதையை விரும்புகிறது; (மேலும்) இந்த பெட்ரோலியத்
துறை தலைமையில் மாற்றம் வேறுவிதமான வற்புறுத்தலையும் காட்டக்கூடும்" என்று ஓர் இந்திய பெட்ரோலிய பகுப்பாய்வாளர்
கூறியதாக The Financial Times
மேற்கோளிட்டு எழுதியுள்ளது.
கடந்த மாதம் செளதி அரேபியாவின் அரசர் அப்துல்லா இந்தியாவிற்கு வருகை புரிந்ததில்
இருந்தே இத்தகைய மாற்றத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டதாகக் கூற முடியும். கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவிற்கு
வருகை புரியும் முதல் செளதி அரேபிய மன்னர், இந்தியாவின் குடியரசுத் தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக
கெளரவிக்கப்பட்டார். இந்தியாவுடன் ஒரு பெரிய பங்குதாரர் நாடாகத் தன் நாடு வரவேண்டும் எனத் தான்
விரும்புவதாக செளதி மன்னர் தெரிவித்தார்; எந்த அளவிற்கு செளதிக்கள் இந்திய நட்பை விரும்பிகிறார்கள்
என்பதைக் காட்டுவதற்கு
இஸ்லாமிய நாடுகள் அமைப்பில் (Organization
of Islamic Countries) இந்தியாவிற்கு பார்வையாளர்
அந்தஸ்து கிடைப்பதற்கு ரியாத் ஆதரவு கொடுக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
இந்தியாவின் மரபார்ந்த, அமெரிக்காவுடன் எச்சரிக்கையாக இருக்கும், "கூட்டு
சாரா" நிலைப்பாட்டை தொடர வேண்டும் என்று கூறி கடந்த நவம்பர் மாதம் வாஷிங்டனின் எரிச்சலை
சம்பாதித்திருந்த, மற்றொரு அமைச்சர் நட்வர் சிங், ஈராக்கிய உணவிற்கு-எண்ணெய்த் திட்ட ஊழல் என்று கூறப்பட்ட
வோல்க்கர் அறிக்கையின் பிற்சேர்க்கையில் இடம் பெற்றபின், பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை அடுத்து,
மன்மோகன் சிங்கே வெளியுறவுத் துறையின் பொறுப்பையும் நிர்வகிக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் மிகப் பெரிய அமைச்சரவை மாறுதல்களை
ஏற்படுத்திய பின்னரும் மன்மோகன் சிங்கே வெளியுறவு அமைச்சராகவும் தொடர்ந்திருப்பது என்பது
அசாதாரணமானது என்பதோடு, இந்திய வெளியுறவுக் கொள்கை சிக்கலும், பூசலும் நிறைந்துவிட்டது என்பதற்குத்
தெளிவான அடையாளமாக உள்ளது. ஏனெனில் அமெரிக்காவுடன் நெருக்கமான பிணைப்புக்களை தொடரும்போதே,
புது டில்லி சீனா, ரஷ்யா என்பவற்றுடனும் உறவுகளை முன்னேற்ற விழைகிறது; இத்துறையை பிரதம மந்திரி
எவரிடமும் கொடுப்பதற்கு தற்பொழுது முன்வரவில்லை.
பிரதம மந்திரி பொறுப்பை தவிர, ஏற்கனவே ஏராளமான துறைகளின்
பொறுப்புக்களையும் மன்மோகன் சிங் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில், ஆட்சிப் பணியாளர்,
பொதுக் குறைகள், ஓய்வூதியம், திட்ட அமைச்சகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை ஆகியவை உள்ளடங்கும்.
வெளியுறவுத் துறையை தன் சொந்தக் கைகளில் தக்கவைத்துக் கொள்ளுவதற்கான
சிங்கின் முடிவு, "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தேவைகளை அறிவதற்கு காங்கிரஸ் .... தன்னுடைய
சொந்த அணிகளில் எவரையும்கூட நம்பவில்லையா?" என்று
The Indian Express
ஏட்டை உரத்த குரலில் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நிதி மந்திரி பழனியப்பன் சிதம்பரம் கூட்டரசு பட்ஜெட்டை இம்மாதக் கடைசியில்
சமர்ப்பித்த பின்னர் அவருக்கு வெளியுறவு மந்திரிப் பதவி கொடுக்கப்படலாம் என்று வதந்திகள் உலவுகின்றன. இது
உண்மையாக போனாலும், இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிய பூசல்கள் கடுமையாக உள்ளன என்பதைத்தான்
இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; பல ஆண்டுகளும் நெருக்கமாக இருந்தவரிடம்தான் மன்மோகன் சிங் இத்துறையை
ஒப்படைக்கத் தயாராக இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. (சிதம்பரமும், பிரதம மந்திரியும் கடந்த 15
ஆண்டுகளாக தனியார் மயமாக்குதல், கட்டுப்பாடுகளை தளர்த்துதல், ஏற்றுமதி வளர்ச்சி மூலோபாயக் கொள்கை
இவற்றில் ஒன்றாக இணைந்து செயலாற்றியுள்ளனர்.)
மணி சங்கர் அய்யர் பதவிக் குறைப்பு ஒரு கொள்கை மாற்றத்திற்கு அடையாளம்
என்பதை மன்மோகன் சிங் காட்ட விரும்பியதில் சந்தேகம் ஏதேனும் இருந்தால், அய்யருக்குப் பின்
பொறுப்பேற்றுள்ள முரளி தியோராவின் அரசியல் தொடர்புகளைப் பார்த்தால் அது தீர்ந்துவிடும். ஒரு ராஜ்யா
சபா உறுப்பினராகவும், மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பையும் கொண்டுள்ள தியோரா
மும்பையின் (இந்தியாவின் வணிகத் தலைநகர்) பெருவணிக உயரடுக்குகளுடன் சிறந்த தொடர்பு உடையவர் என்பது
தெரிந்ததே; மேலும் இன்னும் நெருக்கமான அமெரிக்க -இந்திய உறவுகள் வேண்டும் என்றும் விரும்புகிறவர்.
அவருடைய வலைத் தளத்தின்படி, இக்குழு "உலகில் இரு பெரும் ஜனநாயக நாடுகளுக்கு இடையே" உறவுகள்
வலுப்படுத்துப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு இந்திய-அமெரிக்க பாராளுமன்ற குழுவின் இணைத்
தலைவராக அவர் உள்ளார்.
இந்திய ஆசிய செய்திப் பிரிவுகள் (The
Indo Asian News Services) தேவ்ரா நியமனத்தையும்
இன்னும் இரு அமைச்சர்களின் நியமனங்களையும் அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை விரைவுபடுத்த
விரும்புவதை குறிப்பதாக உள்ளது என்று வரவேற்றுள்ளன; இதன் பொருள் ஒப்பந்த வேலைகளில் இருக்கும் வரம்புகள்
அகற்றப்படும் என்றும், ஆலைகள் மூடப்படலாம் என்றும் ஆவதோடு, தனியார்மயம், முதலீட்டுக் குறைப்பு, வருமான
-ஆதரவு வேலைத்திட்டங்களுக்கு கொடுக்கப்படும் அரசாங்க செலவுகளை இராணுவ, பெருவணிகம் கோரும்
கட்டுமானத் திட்டங்களுக்கு செலுத்துதல் இவை விரைவுபடுத்தப்படும் என்பதாகும். செய்திச் சேவை கூறுவதாவது:
"முரளி தியோரா மற்றும் சுசில் குமார் ஷிண்டே, தொழில்நுட்ப மேலாளர் ஜெயராம் ரமேஷ் ஆகியோரை மந்திரிகளாக
நியமித்தது பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பெரும் உந்துதல் கொடுக்க வேண்டும் என்னும் பிரதம மந்திரி
மன்மோகன் சிங்கின் விருப்பத்திற்கு தெளிவான அடையாளங்களாகும்; நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக
இருக்கும் சிலவற்றை அகற்றுவதற்கு காட்டப்படும் ஆர்வமாகும்."
ஏனைய நடைமுறைக் குரல்களும் புதிதாக நியமனம் பெற்றவர்கள் காந்தி குடும்பத்தின்
துதிபாடுபவர்கள் என்று குறைகூறியுள்ளன. (காங்கிரசின் வாக்காளர் வலிமையை பெருக்குவது பற்றி மிகவும் கவலைப்படுவதாக
சோனியா காந்தி மீதே குறைகூறல் வந்துள்ளது; ஏனெனில் அவர் பொருளாதார சீர்திருத்தங்கள் சுமாரான சமூக
நலச் செலவுகளுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறப்படுகிறது.)
"சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் எண்ணெயில்தான் தடுமாறவில்லை" என்று
வலதுசாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவிக்கிறது. "மணி சங்கர் அய்யருக்கு பதிலாக முரளி தியோராவைக்
கொண்டுவந்தது உண்மை அரசியலை அறிந்ததற்கு தக்க வரவேற்பாகும்; அய்யர் சிக்கல் நிறைந்த ஈரான்
குழாய்த்திட்டம் பற்றி சற்று அதிகமான ஆர்வத்தையே காட்டினார்; அதையொட்டி இருக்கும் பகுதி வெளிநாட்டுக்
கொள்கை பற்றியும் கருத்துக் கொண்டிருந்தார். இம்மாற்றம் உள்ளுணர்வில் பொருளாதார தாராளக் கொள்கையுடைய
காங்கிரஸ்காரர் ஒருவருக்கு தக்க பரிசாகும்; இத்தகையவர்கள் கட்சியில் வருந்தத்தக்க வகையில் அரிதாகத்தான்
உள்ளனர்."
அமைச்சரவை மாற்றங்களுக்கு செய்தி ஊடகம் எதிர்கொண்டவிதம் காங்கிரஸ் கட்சி
எப்படி வெளியுறவுக் கொள்கையில் தீவிர உட்பூசல்களை எதிர்நோக்கியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது
மட்டும் இல்லாமல், இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத் துறை பிரிவுகளை தனியார் மயமாக்குதல் உட்பட
தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரில் பல வலதுசாரி நடவடிக்கைகள் மூலம், அது அதிகாரத்தை தக்க
வைத்துக் கொள்ள தேவையான வாக்குளை கொடுத்துள்ள இடது முன்னணியுடன் மோதுமாறு பெருகிய முறையில் பெருவணிகத்தில்
இருந்து அழுத்தம் பெறுவதையும் காட்டுகிறது.
மன்மோகன் சிங்கும் உயர்மட்ட காங்கிரஸ் தலைவர்களும் பலமுறையும் அதைத்தான்
தாங்கள் செய்ய விரும்புவதாக குறிப்புக் காட்டியுள்ளனர். ஜனவரி 21ல் இருந்து 23 வரை ஹைதராபாத்தில்
நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பேரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை மிகவும்
குறைகூறவேண்டாம் என்று தங்கள் தோழமை கட்சிகளை எச்சரித்தனர்; மேலும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளில்
வேகம் விரைவுபடுத்தப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Top of page
|