ஐரோப்பா
:
பிரான்ஸ்
French Ligue Communiste Révolutionnaire
turns further to the right
பிரெஞ்சு புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் மேலும் வலதுநோக்கி செல்கின்றது
By Peter Schwarz
4 February 2006
Use this version
to print |
Send this link by email |
Email the author
ஜனவரி 19-22 வரை பாரிசின் புறநகரான சென்ட்-டெனிசில் இடம்பெற்ற புரட்சி
கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR- Ligue Communiste
Révolutionnaire) 16வது மாநாடு, ட்ரொஸ்ட்கிச கட்சி
என கூறிக்கொள்ளும் இக்கட்சி முதலாளித்துவ ஆளும் கட்டமைப்பினுள் தன்னை இணைத்துக்கொள்ளும் முன்னோக்கிய
நிலையை எடுத்துக்காட்டுகின்றது.
இம்மாநாட்டின் மத்திய புள்ளியாக இருந்தது, மதிப்பிழந்துபோயுள்ள உத்தியோகபூர்வமான
இடது கட்சிகளை பலப்படுத்தும் ஒரு அரசியல் கூட்டினை கட்டியெழுப்பவதாகும். இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட
ஒரு தீர்மானத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது ''ஒரு அடிப்படை கொள்கை ரீதியான தீர்மானத்திற்கான
நேரம் வந்துவிட்டது என்பது பகிரங்கமாக தெரிகின்றது. ஐரோப்பிய அரசியலமைப்புக்கு எதிரான பிரச்சார காலகட்டத்தில்
தாராளவாத எதிர்ப்பு மற்றும் பூகோள மயமாதலுக்கான எதிர்ப்பு போன்றவற்றை ஒழுங்கமைத்த அரசியல், தொழிற்சங்கங்கள்,
பூகோளமயமாக்கலுக்கு எதிரான சக்தி போன்றவற்றின் மீது பலர் இன்று கவனம் செலுத்துவதுடன், எதிர்வரும் தேர்தலிலும்
நாம் ஒருங்கிணைந்து இருக்கலாம் என விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பு நியாயமானதுடன், நாமும் அதை பகிர்ந்துகொள்கின்றோம்.
இதனை பூர்த்திசெய்வதற்கு நாம் ஒரு ஒருமைப்பாடான கூட்டு இயக்கத்தை கட்டியெழுப்பவேண்டும்''.
இவ்வாறான ஒரு கூட்டமைப்பின் நோக்கம், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான
அரசியல் இயக்கத்தை தடுப்பதும், தற்போதுள்ள வலதுசாரி அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகுமானால்,
சிக்கலுக்குள்ளாகும் பிரெஞ்சு பூர்சுவாசிக்கு ஒரு புதிய இடதுசாரி ஊண்டுகோலை வழங்குவதுமாகும்.
முன்னாள் சோசலிஸ்ட் கட்சி பிரதமர் லியோனல் ஜொஸ்பனின் தலைமையிலான
சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் இயக்கம், முதலாளித்துவ இடது தீவிரவாதிகளை கொண்ட கூட்டின்
''பன்முகப்பட்ட இடதுகளின்'' 5வருடகால ஆட்சி 2002ல் தேர்தல் தோல்வியுடன் முடிவடைந்தது. அந்த
ஜனாதிபதி தேர்தலின்போது ஜொஸ்பன், பாசிச ஜேன்-மரி லு பெனுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை
அடைந்தார். தற்போது புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் மீண்டும் அரசு அதிகாரத்தை அடைவதற்கான ஒரு அரசியல்
கட்டமைப்பை உருவாக்க முனைகின்றது.
இம்மாநாட்டின் ஒரு தீர்மானம் ''புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்திற்கு சமூக-தாராளவாதிகளுடன்
இணைந்து ஒரு மாற்றீட்டை கட்டியெழுப்புவதோ அல்லது ஒரு அரசாங்க வேலைத்திட்டத்தை உருவாக்கும்
நோக்கமோ இல்லை எனவும், ஒன்றுடன் ஒன்று எதிராக உள்ள ''இரண்டு இடதுகள்'' உள்ளன. ஒரு ''முதலாளித்துவ
எதிர்ப்பு'' இடது, மற்றையது ''சமூக-தாராளவாத'' இடது (இங்கு தாராளவாதம்-சுதந்திர சந்தை
பொருளாதார கொள்கைகளை குறிக்கின்றது)'' எனவும் கூறுகின்றது. இது ஒரு வெறும் ஏமாற்றாகும். புரட்சி
கம்யூனிஸ்ட் கழகம் நீண்டகாலமாகவே உத்தியோகபூர்வ இடது அணியில் தனது இரண்டுகால்களையும் பதித்து நிற்கின்றது.
இது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (றிணீக்ஷீtவீ
நீஷீனீனீuஸீவீstமீ யீக்ஷீணீஸீஃணீவீsறிசிதி) இவ்வாறான கூட்டு
அமைப்பில் ஒரு முக்கிய கூட்டாளியாக முன்னுரிமை வழங்கப்படுவதில் இருந்தே எடுத்துக்காட்டப்படுகின்றது. பிரெஞ்சு
கம்யூனிஸ்ட் கட்சி, 1930 களில் மக்கள் முன்னணி அரசாங்கத்தில் உள்புகுந்ததில் இருந்தும் அதன் தலைவர்
Maurice Thorez
ஜெனரால் டு கோலின் யுத்தத்திற்கு பின்னான முதலாவது அரசாங்கத்தில்
இணைந்து கொண்டதில் இருந்தும் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் முக்கிய ஊண்டுகோலாக இருந்து வந்துள்ளது. 1981ல்
இருந்து சோசலிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட பல அரசாங்கங்களில் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர்கள் இடம்
பெற்றுள்ளனர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய தலைவைரான
Marie-George Buffet
ஜொஸ்பனின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்ததுடன், அவ்வரசாங்கத்தின்
சமூக-தாராளவாத கொள்கைக்கு முற்றுமுழுதாக பொறுப்பானவராவார். இதனை புரட்சி கம்யூனிஸ்ட் கழகம்
மறைக்க முனைகின்றது.
2002ல் இருந்து புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தினதும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியினதும்
தலைமை மிகவும் நெருக்கமாக இணைந்து இயங்குகின்றன. இவர்கள் தமது பொதுவான முயற்சி மற்றும்
நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட ஒழுங்காக சந்திப்பதுடன், பொதுக்கூட்டங்களில் ஒன்றாக இணைந்தே
கலந்துகொள்கின்றர்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தனது பங்கிற்கு சோசலிஸ்ட் கட்சித் தலைமையுடன்
நெருக்கமான தொடர்புகளை வைத்திருப்பதுடன், புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தினை இவ்உறவினுள் உள்இழுக்க
முனைகின்றது. 2007ன் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களில் இணைந்து இயங்குவது குறித்து கலந்துரையாடும்
முன்னாள் ''பன்முக இடது'' கட்சிகளின் கூட்டம் ஒன்றிற்கு சோசலிஸ்ட் கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியிலும்
Marie-George Buffet
புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்திற்கு பெப்பிரவரி 8ற்கு அழைப்புவிடுத்திருந்தார்.
Marie-George Buffet
இன் முயற்சிகள் குறித்து
le monde
பத்திரிகை ''புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தினுள் உள்ள ட்ரொட்ஸ்டுகளின் சிறந்த
பாதுகாவலராக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி திடீரென மாறிவிட்டதா? என ஏளனம் செய்தது.
தான் இக்கூட்டத்தில் கலந்துகொள்வில்லை என கூறியதன் மூலம் புரட்சி கம்யூனிஸ்ட்
கழகம் தானே இப்பிரச்சனையை முடித்துவைத்தது. ஒரு பொதுவான அரசாங்க கொள்கை தொடர்பாக விவாதிக்க
நிராகரிப்பதாக குறிப்பிட்ட புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் தொடர்ந்தும் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து இயங்கவும்
தயாராக இருப்பதாக குறிப்பிட்டது.
L'Express பத்திரிகைக்கு
கருத்து தெரிவித்த புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் பேச்சாளரான
Olivier Besancenot
''அவர்கள் கொண்டுள்ள திமிர்த்தனத்துடன், சோசலிஸ்டுகள் பொதுவான
அரசாங்க கொள்கை பற்றி மட்டுமே கலந்துரையாட விரும்புகின்றனர். ஆனால், நாங்கள் முன்னர் போலவே
இப்போதும் பன்முக இடதுகள்-II
இன் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாததுடன், ஒரு வெற்று
காசோலையை வழங்கத்தயாராக இல்லை. வலதுசாரிகளுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட பொதுவான முன்னெடுப்புகள்
தொடர்பாக தயாரிப்புசெய்ய உதவ அழைப்புவிடப்பட்டால் நாம் போகத்தயாராக உள்ளோம்''.
மாநாட்டு தீர்மானத்திலும் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் தயார் நிலைமை குறிப்பிடப்படுகின்றது''
வலதுசாரிகளையும், தாராளவாதிகளையும், முதலாளிகளையும் எதிர்ப்பதற்காக தொழிலாளர் இயக்கத்திலும், தொழிற்சங்கங்களிலும்,
கட்சிகளிலும், அமைப்புகளிலும் (அதாவது சோசலிஸ்ட் கட்சியுடனும்) உள்ள சகல சக்திகளுடன் இணைந்து இயங்க தயாராக
இருக்கின்றோம். இவ் அழைப்பின் மூலம் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், கடந்த காலங்களில் தமது பிரதிநிதிகளுடன்
தொழிலாளர்களின் எந்தவொரு ஆர்ப்பாட்டங்களிலும் கலந்தகொள்ளாத சோசலிஸ்ட் கட்சியை மீள் மதிப்பீடு செய்துள்ளது.
புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் வார்த்தையளவில் தம்மை ''சமூக- தாராளவாதத்தில்''
இருந்து ஒதுங்கியிருப்பதாக காட்டிக்கொண்டாலும், கடந்த வருடம் மே மாதம் 29ல் ஐரோப்பிய அரசியலமைப்பிற்கான
சர்வஜன வாக்கடுப்பில் இல்லை என வாக்களித்த அனைவருடனும் முதலாளித்துவ எதிர்அணியில் இருப்பதாக
காட்டிக்கொள்கின்றன. புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் எப்பொழுதுமே ''இடதுகளின் இல்லை'' என்பதில் இருந்து ''இடதுகளின்
ஆம்'' என்பதை வித்தியாசப்படுத்தி காட்டிவருகின்றது.
உண்மையில், ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிரான பல அரசியல் போக்குகளிடம்
முதலாளித்துவ எதிர்ப்பு என்பதை தவிர அவர்களிடம் வேறொன்றுமில்லை. இல்லை என வாக்களிக்க கோரிய
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன், இன்னுமொருவர் கேடுகெட்ட வலதுசாரி சோசலிஸ்ட் கட்சியாளரான
Laurent Fabius
உம் உள்ளடங்குவார். ஆம் என வாக்களிக்க கோரிய சோசலிஸ்ட் கட்சி
பாராளுமன்ற பெரும்பான்மையுடன் முறித்துக்கொண்டு, இவர் இல்லை என வாக்களிக்ககோரியது எதிர்வரும் வருட
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு தனக்கு சாதகமாக இருக்கும் என்பதாலாகும்.
மிகவும் எடுத்துக்காட்டானது என்னவெனில், தற்போது புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்துடன்
இணைந்து இயங்கத்தயாராக உள்ள சோசலிஸ்ட் கட்சியினரின் அணியிலேயே
Laurent Fabius
அடங்குகிறார். 8 பெப்ரவரி சந்திப்பில் அவர் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தை
அழைப்புவிட வேண்டும் என்று Buffet
இன் சார்பாக நின்றார். ''ஒன்றாக அரசாள விரும்பும்'' கட்சிகளுக்கு
மட்டுமே சோசலிஸ்ட் கட்சி தலைமை அழைப்புவிட விரும்பியபோது, ''எவரையுமே ஒதுக்கி வைக்காத'',
''இடதுகளின் ஒரு கூட்டு'' தேவை என்றார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் வேட்பாளர்
Olivier Besancenot
12 இலட்சம் வாக்குகளை பெற்றார். இந்த வாக்காளர்களை
Fabius தனக்கு
சாதகமாக பார்க்கின்றார். இதேயளவான வாக்குகள் ட்ரொஸ்கிஸ்டுகள் என கூறிக்கொள்ளும் இன்னொரு கட்சியான
Lutte Ouvrière
இன் வேட்பாளரான
Arlette Laguiller
இற்கும் கிடைத்தது.
எதிர்வரும் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்களிப்பில் உத்தியோகபூர்வ இடதுகளின்
வேட்பாளருக்கு ஆதரவளிக்க புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் ஏற்கனவே முடிவுசெய்துள்ளது. மாநாட்டின்
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில், ''எதிர்வரும் தேர்தலில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் தனது பாரம்பரிய
கொள்கைக்கு விசுவாசமாக இருக்கும். எமது கட்சி சமூக-தாராளவாதத்தின் வரையறைகள் (அல்லது
நப்பாசைகள்) குறித்து உணர்வுபூர்வமாக இருந்தாலும், இரண்டாவது கட்ட வாக்களிப்பில் அதிதீவிர வலதுசாரிகளுக்கு
எதிராக ஏதாவது ஒரு இடதுகளின் வேட்பாளர் எதிராக நின்றால் அவருக்கு வாக்களிக்க கோரும்'' என
குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறிருந்தபோதிலும், 2002 ஜனாதிபதி தேர்தலில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம்
''சமூக-தாராளவாத'' கட்சிக்கு வாக்களிக்ககோராது, வலதுசாரி கோலிஸ்டுகளுக்கு வாக்களிக்க கோரியது.
ஜாக் சிராக் இரண்டாவதுகட்ட வாக்களிப்பில் தேசிய முன்னணியின் வேட்பாளரான ஜோன்-மரி லு பென்னுக்கு
எதிராக நின்றபோது, சிராக் மீண்டும் தேர்ந்தெடுக்க தீவிரமாக ஆதரவளித்தனர். அடுத்துவரும் தேர்தலில்
பழைமைவாத அரசாங்க கட்சியின் சார்பில் தற்போதைய உள்நாட்டு அமைச்சர் நிக்கோலா சார்க்கோசி
போட்டியிலாம் என எதிர்பார்க்கப்படுகையில், புரட்சி கம்யூனிஸ்ட்
கழகம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது மிகவும் தெளிவானது. லு பென்னின் கொள்கைகளில் பலவற்றை
Sarkozy
எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், இரண்டாவதுகட்ட வாக்களிப்பிலாவது
புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் ''சமூக-தாராளவாத'' வேட்பாளருக்கு தீவிரமாக ஆதரிக்கலாம்.
புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் உருவாக்க முயலும் கூட்டானது ''பன்முக இடதுகள்''
மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியாகும். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு
அடுத்ததாக புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் பிரெஞ்சு முதலாளித்துவத்தை பாதுகாத்த நீண்ட பாரம்பரியத்தை கொண்ட
தொழிற்சங்கங்கள் மற்றும் ''பூகோளமயமாக்கல் எதிர்ப்பு'' என அழைக்கப்படும் சக்திகளை இவ்வமைப்பிற்கு
வென்றெடுக்க முனைகின்றது.
''பூகோளமயமாக்கல் எதிர்ப்பு'' என அழைக்கப்படும் சக்திகள் முதலாளித்துவத்தை
நிராகரிக்கவில்லை. மாறாக தமது ஒரு சில சர்வதேச நடவடிக்கைகள் மூலம் முதலாளித்துவத்தை ஒரு தேசிய
சீர்திருத்தவாத முன்னோக்கினால் பிரதியீடு செய்ய விரும்புகின்றனர். முக்கியமாக அட்டாக் (Attac)
சோசலிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான தொடர்புகளை
வைத்திருக்கின்றது. இன்னுமொரு முக்கிய ''பூகோளமயமாக்கல் எதிர்ப்பு சக்தியான''
José Bové இன்
விவசாயிகள் தொழிற்சங்கமும் தனது தீவிர அமெரிக்க எதிர்ப்பு மூலம் புகழ் தேடிக்கொண்டது.
José Bové உம்
இவ் இடது கூட்டினது சாத்தியமானதொரு ஜனாதிபதி வேட்பாளராவர்.
காலங்கடந்த சீர்திருத்தவாத, தேசியவாத கொள்கையை கொண்ட இவ்வாறான
சகல வர்ணங்களும் கொண்ட ஒரு இயக்கத்தினால், பிரான்சிலோ அல்லது சர்வதேச ரீதியாகவோ தொழிலாள
வர்க்கம் எதிர்நோக்கும் சமூக, அரசியல் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை வழங்முடியாது.
கடந்த வருடங்களின் போராட்டங்களில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முக்கிய
படிப்பினை என்னவென்றால், பழைய சீர்திருத்தவாத தொழிலாளர் இயக்கங்களின் முற்றுமுழுதான வங்குரோத்தாகும்.
சமூக ஜனநாயக கட்சி, ஸ்ராலினிச கட்சி, தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒவ்வொரு சமூக போராட்டத்திலும்
இன்னும் வலதுநோக்கியே சென்றுள்ளன. பிரான்ஸில் ஜொஸ்பனினதும், பிரித்தானியாவில் பிளேயரினதும், ஜேர்மனியில்
ஷ்ரோடரினதும், இத்தாலியில் டி அலேமாவினது அரசாங்கங்கள் எந்தவொரு பழைமைவாத அரசாங்கங்களும்
தொழிலாள வர்க்கத்துடன் ஒரு பகிரங்கமான வர்க்கமோதலுக்கு செல்லத் துணியாத சமூக தாக்குதல்களை
தொழிற்சங்கங்களின் உதவியுடன் தீவிரமாக்கின.
இத்தகைய அமைப்புகளில் இருந்து உடைத்துக்கொண்டு, ஒரு சர்வதேச சோசலிச
முன்னோக்கை நோக்கி திரும்பாது தொழிலாள வர்க்கம் ஒரு அடியேனும் முன்னோக்கி செல்ல முடியாது.
இதனைத்தான் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் தடுக்க முனைகின்றது.
இதற்காக பகிரங்கமாகவே தங்களை சமூக-தாராளவாதிகள் என
அழைத்துக்கொள்ளும் சக்திகளுடன் நெருக்கமாக இணைந்து இயங்குகின்றது. கடந்த அக்டோபர் 4ம் திகதி
சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக்கட்சி மற்றும் இடது தீவிரவாதிகளுடன் இணைந்து ஒரு தொழிற்சங்க
ஊர்வலத்தில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் கையெழுத்திட்டிருந்தது. 2 மாதங்களுக்கு பின்னர் புரட்சி கம்யூனிஸ்ட்
கழகத்தின் தலைவர் Alain Krivine
உம், சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரிப் பிரிவை சேர்ந்த
Dominique Strauss-Kahn
உம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் இணைந்து பிரெஞ்சு அரசாங்கம் தனது
காலனித்துவ ஆட்சியை புகழ்ந்து வெளியிட்ட ஒரு சட்டத்திற்கு எதிராக மனு ஒன்றை சமர்ப்பித்தனர்.
இந்த கூட்டுழைப்பானது மிகவும் முக்கியமான மதிப்புடையது. இதற்கேற்ப மாதிரி
செய்தித் துறையினராலும் கவனத்திற்கெடுக்கப்பட்டது. பிரான்ஸில் அரசியல் நெருக்கடி கூர்மையடைகையில் தனது
இறுதி அடியை எடுத்துவைக்க, அதாவது முதலாளித்துவ அரசாங்கத்தின் நுழைவதற்கு தயாராக இருப்பதை தெளிவாக
எடுத்துக்காட்டுகின்றது. பிரேசிலில் இவர்களது சகசிந்தனையாளர்கள் அவ்வாறான அடியை ஏற்கனவே
எடுத்துவைத்துவிட்டார்கள். புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் இணைந்துள்ள ஐக்கிய செயலகத்தின் அங்கத்தவர் ஒருவர்
பிரேசிலில் அமைச்சராக உள்ளார்.
புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் வலது திருப்பமானது உள்முரண்பாடுகள் இல்லாது
சுமுகமாக நடைபெறவில்லை. மாநாட்டின் 180 பிரதிநிதிகள் 5 வித்தியாசமான போக்குகளை
பிரநிதித்துவப்படுத்துவதுடன், ஒவ்வொருவரும் தமக்கென பிரிவுகளை முன்வைத்துள்ளனர். இவ்வித்தியாமான போக்குகள்
இடையிலான கருத்துவேறுபாடானது அரசியல் கொள்கைகள் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக ஒரு இடது கூட்டினை
உருவாக்குவதில் அவர்களிடையே ஒரு பரந்த உடன்பாடு காணப்படுகின்றபோதிலும் எவ்வளவு வேகத்தில் இதனை
செய்துமுடிப்பது என்பது தொடர்பாகவே கருத்துவேறுபாடு நிலவுகின்றது.
2002 ஜனாதிபதி தேர்தலில்
Besancenots
இற்கு கிடைத்த பாரிய வாக்குகளின் பின்னர், அவர்களின் தகவலின்படி அங்கத்தவர் தொகை 3000 ஆக இரட்டித்துள்ளது.
புதிய அங்கத்தவர்களை பொறுத்தவரையில் இந்த ஒழுங்கற்ற இடது கூட்டினுள் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தை
கரைத்துவிடுவது விரைவாக நடக்கவில்லை என்ற கருத்தே உள்ளது. இவர்களின் பலர் ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்புக்கு
எதிரான பிரசாரத்தின்போது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக்கட்சி மற்றும் வேறுபட்ட பூகோளமயமாக்கலுக்கு
எதிரானவர்களுடன் இணைந்து புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் இயங்கும்போதே அதனை சந்தித்தனர். இவ்வமைப்புகள்
ஒன்றிணைவதற்கு தடையாக உள்ள அனைத்தையும் இவர்கள் எதிர்க்கின்றனர்.
இப்போக்கின் பேச்சாளராக இருப்பவர், அரசியல்குழு அங்கத்தவரான
Christian Picquet
ஆவார். இவரின் பிரிவு 25% மாநாட்டு பிரதிநிதிகளால் ஆதரவளிக்கப்படுகின்றது.
இதே திசையில் செல்லும் Léonce Aguirre
இன் பிரிவை 9% ஆதரவளிக்கின்றது.
புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் வரலாற்றில், இவ்வியக்கத்தின் வரலாற்று தலைவரான
Alain Krivine
இனதும் Olivier Besancenot
இனதும் பிரிவு முதல்தடவையாக சிறுபான்மையாகியுள்ளது. இவர்கள் மாநாட்டு
பிரதிநிதிகளில் 49% வாக்குகளையே பெற்றனர். இது கடந்த மாநாட்டைவிட 9% குறைவாகும்.
Alain Krivine
உம் Olivier
Besancenot உம் ஓரளவு அமைப்புரீதியான சுயாதீனத்தை
பாதுகாத்து கொள்வதாக காட்டிக்கொள்ள முயல்கின்றனர். இதன்மூலம் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தினது தீவிரவாத
தோற்றத்தையும் மற்றும் இடது போலித்திரை போன்ற அதன் பங்கையும் விரைவில் இழந்துவிடத்தயாராக இல்லை.
இறுதியாக, இவ்வேறுபட்ட பிரிவுகள் இடையிலான முரண்பாடுகள் ஒரேயொரு கேள்வியை
சுற்றியே உள்ளது. அதாவது 2007 ஜனாதிபதி தேர்தலில் தமது சொந்த வேட்பாளருடன் தலையிடுவதா அல்லது
சாத்தியமான ஒரு ஐக்கியப்பட்ட இடது வேட்பாளருக்காக அதனை விட்டுக்கொடுப்பதா என்பதுதான். சொந்த
வேட்பாளருடன் கலந்துகொள்வதா என்ற தேர்வு பற்றி
Krivine முடிவெடுக்காது விட உள்ளபோது, அவ்வாறான
வேட்பாளருடன் கலந்துகொள்வது ஒரு பரந்த இடது கூட்டு இயக்கத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என
Picquet
கருதுகின்றார்.
இறுதியில் அவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். வேட்பாளர் தொடர்பான கேள்வி
பிற்போடப்பட்டுள்ளது. 6 மாதத்திற்கு பின்னர் நடைபெறவுள்ள ஒரு விஷேட மாநாடு இதுபற்றி முடிவெடுக்கும்.
Top of page |