ஐரோப்பா
:
பிரான்ஸ்
திக்ஷீணீஸீநீமீ: யிuபீரீமீ ஙிக்ஷீuரீuவீகக்ஷீமீutவீறீவீsவீஸீரீ ணீஸீtவீ-tமீக்ஷீக்ஷீஷீக்ஷீவீsனீ
ணீs ணீ ஜீஷீறீவீtவீநீணீறீ வீஸீstக்ஷீuனீமீஸீt
பிரான்ஸ்: நீதிபதி புரூகியேர் - பயங்கரவாத எதிர்ப்பை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறார்
By Antoine Lerougetel
26 January 2006
Back to screen
version
ஜனவரி 9ல் நீதிபதி ஜோன்-லூயி புரூகியேர்
(Jean-Louis Bruguière)
கட்டளைகளின் படி நிசார் சசி (Nizar Sassi)
சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இளம் பிரெஞ்சுக்காரரான அவர் மீது
எந்தக் குற்றமும் சாட்டப்படாது, அமெரிக்க அதிகாரிகள் அவரை இரண்டரை ஆண்டுகளும் அதற்கு பின்னர் பிரான்ஸ்
ஒன்றரை ஆண்டுகளும் சிறையில் வைத்திருந்தன.
கியூபா குவாண்டநாமோ வளைகுடாவில் உள்ள அமெரிக்க சிறையிலிருந்து திரும்பிய பிரெஞ்சு
பிரஜைகள் 7 பேரில் அவரும் ஒருவர். 2001 கடைசியில் அவர் ஆப்கனிஸ்தானில் பிடிக்கப்பட்டார். அமெரிக்கர்கள்
2004 ஜீலை 26ல் சக கைதிகளான இமாத் அக்கப் கமவுனி, மொராத் பென்செல்லாலி மற்றும் பிராஹிம் யாதேல்
(Imad Acheb Kamouni, Mourad Benchellali
and Brahim Yadel) ஆகியோருடன் பிரான்சு அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டனர்.
புரூகியேரின் சிறைகளில் ஒன்றிலிருந்து ஓராண்டிற்கு பின்னர் 2005 ஜூலையில் குற்றச்சாட்டுக்கள்
எதுவுமில்லாமல் இமாத்தும் விடுதலை செய்யப்பட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு அவர்களை தான்தோன்றித்தனமாக கைது
செய்ததற்கான அவர்களின் வக்கீல்கள் நீதி விசாரணையை தொடக்கினார்கள்.
காலித் பென் முஸ்தபாவும், ரிடோயுவேனே காலித்தும் மார்ச் 7ல் பிரான்சிற்கு திரும்பி
வந்தனர் அவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன. குவாண்டாநாமோ
முன்னாள் பிரெஞ்சு கைதிகள் 4 பேர் விசாரணைக்காக சிறைகளில் இன்னும் உள்ளனர்.
ஜனவரி 13ல் Le Monde
பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியில் ''முற்றிலும் சட்ட
நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட முறையில் குவாண்டாநாமோவில் பெறப்பட்ட தகவலை புலன் விசாரணை செய்யும்
நீதிபதிகள் (juges d'instruction)
பயன்படுத்துவதால், அந்த ஏழு பேர் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணை நடைமுறைகளின் சட்டபூர்வதன்மை குறித்து
அந்த கைதிகளின் வக்கீல்கள் ஆட்சேபனை கிளப்பினர்''. இதன் விளைபயன் என்னவென்றால் புரூகியேர் மற்றும் அவரது
குழுவினர் அமெரிக்க அதிகாரிகள் ''சான்று'' என்று தந்த எந்த தகவலாக இருந்தாலும் அவற்றை விமர்சனமற்று
ஏற்றுக்கொள்கின்றனர். அவற்றில் சில சித்திரவதை மூலம் பெறப்பட்டவை.
கைது மற்றும் காவலில் வைக்கும் தான்தோன்றித்தனமான அதிகாரங்கள்
அமெரிக்க சட்டத்தின் கட்டுப்படுத்துதல்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகள்
ஆகியவற்றிற்கு வெளியில் ஆப்கனிஸ்தானில் பிடிக்கப்படும் மக்களை சிறையில் வைப்பதற்காக 2002 ஜனவரி 11ல் புஷ்
நிர்வாகம் குவாண்டாநாமோவில் X-Ray
முகாமை அமைத்தது. பிரெஞ்சு பயங்கரவாத-எதிர்ப்பு சாதனங்கள்
(Anti-terror apparatus)
கைது மற்றும் காவலில் வைக்கும் தான் தோன்றித்தனமான அதிகாரங்களுடன்
செயல்பட்டு வருகிறது. டிசம்பர் 23ல் Le Monde
தந்துள்ள தகவலின்படி ''தற்போது 99 பேர் இஸ்லாமிய
நடவடிக்கைகளுக்காக பிரெஞ்சு சிறைச்சாலைகளில் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்''. அந்தச் செய்தியின் படி
எவ்வளவு காலமாக அவர்கள் சிறைகளில் இருக்கின்றனர் என்று தெரிவிக்கவில்லை. அத்துடன் சேர்த்து தற்போது
பயங்கரவாத குற்றங்களுக்காக 39 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
பிரெஞ்சு பயங்கரவாத-எதிர்ப்பு நீதிபதிகள் சந்தேகத்திற்குரியவர்களை சிறையில்
வைத்திருப்பதும், தண்டனை விதிப்பதும் மட்டுமன்றி உத்தரவின்றி கைதுசெய்யும் உரிமை பற்றியும் மற்றும் வழக்கமான
சாட்சிய தரங்கள் பற்றியும் எவ்வித கவனமுமில்லாதுள்ளனர். இந்த அதிகாரங்கள் பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கைகளை
சமூக மற்றும் அரசியல் கட்டுப்பாட்டிற்கு ஒரு வழியாகவும் வெளியுறவுக் கொள்கையின் ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்த
சாத்தியமாகும்.
1986 முதல் பிரெஞ்சு அரசின் பயங்கரவாத-எதிரப்பு சாதனத்தின் தலைவராக புரூகியேர்
செயல்பட்டு வருகிறார். அவரது குழுவில் உள்ள ஐந்து புலனாய்வு நீதிபதிகளும் விசாரணை நடைபெறுவதற்கு இடையில் கைது
செய்வதற்கும் காவலில் வைப்பதற்கும் அனைத்து பிரெஞ்சு
புலன்விசாரணை நீதிபதிகளையும் போல் பெரும் அதிகாரங்களை
பெற்றிருக்கின்றனர். 1998ல் பிரான்சின் சிறைகளில் இருந்த அனைத்து கைதிகளிலும் 40 சதவீதம் பேர் விசாரணைக்காக
காத்திருக்கின்றனர்.
கோலிச உள்துறை அமைச்சராக இருந்த சார்லஸ் பஸ்குவா 1986ல் இயற்றிய சட்டம்,
பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை புலனாய்வு செய்வது தேடிக் கண்டு பிடிப்பது மற்றும் தீர்ப்பளிப்பது ஆகிய
அதிகாரங்களை பாரிஸில் குவித்து வைப்பதாக அமைந்து விட்டது. அது பாரிஸ் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் புரூகியேரின்
14வது சிறப்பு பிரிவிற்கு பிரான்சின் அனைத்து பயங்கரவாதத்திற்கு எதிரான வழக்குகளையும் அல்லது வெளி நாடுகளிலுள்ள
பிரெஞ்சு மக்கள் தொடர்பான வழக்குகளையும் அந்த நீதிமன்றத்திற்கு மாற்றியாக வேண்டும் என்று ஏற்பாடு
செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அந்த நீதிமன்றத்திற்கு தொடர்ந்து வந்த பிரெஞ்சு
அரசாங்கங்கள் மேலும் அதிகாரங்களை வழங்கின. சென்ற ஆண்டு டிசம்பர் 22ல் உள்துறை அமைச்சர் நிக்கோலா
சார்க்கோசி இயற்றிய பயங்கரவாதத்திற்கு எதிரான மசோதா இந்த அதிகாரங்களை விரிவுபடுத்துவதிலும் மற்றும்
வலுப்படுத்துவதிலும் ஒரு பிரதானமாக அமைந்தது. (''பிரான்ஸ்: சிவில் உரிமைகளை மிதித்து துவைக்கும்
பயங்கரவாரத்திற்கு எதிரான சட்டம்'' என்ற நமது கட்டுரையை காண்க).
France: Anti-terrorism legislation tramples on civil liberties")
ஒரு கிரிமினல் குற்ற நடவடிக்கைக்கான அமைப்பில் சேர்ந்திருக்கின்ற இந்தக் குற்றத்திற்காக
1996 குற்றவியல் சட்ட தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ள பயங்கரவாதச் செயல்களில் ஒன்றிற்கு அல்லது பல
நடவடிக்கைகளுக்கு முன்னேற்பாடுகளை செய்வது அந்த விளக்கத்தில் இடம்பெற்றது.
1996ல் பிரான்சின் குற்றவியல் சட்ட தொகுப்பில் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டு அது
''பயங்கரவாத செயல்'' என்பதற்கு ஒரு அமைக்கப்பட்ட குழுவில் பங்கெடுத்துக் கொள்வது அல்லது ஒரு சதி
ஆலோசனையில் பங்கெடுத்துக் கொண்டு குற்றவியல் சட்ட தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத செயல்களில்
ஒன்றிற்கு அல்லது பல நடவடிக்கைகளுக்கு முன்னேற்பாடுகளை செய்வது அந்த விளக்கத்தில் இடம் பெற்றது. ஒரு கிரிமினல்
குற்ற நடவடிக்கைக்கான அமைப்பில் சேர்ந்திருக்கின்ற இந்தக் குற்றத்திற்காக 1996 குற்றவியல் சட்டத் தொகுப்பில் 10
ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வகை செய்யப்பட்டது சார்க்கோசியின் புதிய சட்டம் அந்த தண்டனையை இரட்டிப்பாக்கியது.
1996ல் அரசியலமைப்பு குழுவில் ''ஒரு சட்ட விரோதமான வெளிநாட்டவருக்கு உதவிகள் புரிவதற்கும்'', பயங்கரவாத
நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்டது என்று ஊகிக்கப்படுவதற்கும் இடையிலான தொடர்பு ''தானாகவே'' அரசியல்
சட்டத்தை மீறுவதாகும் என்று தீர்ப்பளித்தது. என்றாலும் அது ஒரு சட்டவிரோதமான ஒரு வெளிநாட்டவருக்கு மனிதநேய
அடிப்படைகளில் உதவிகளை செய்பவர்கள் இலாபநோக்கில் செயல்டுகின்ற தொழில் முறை கடத்தல்காரர்களது அமைப்பிற்கு
விதிக்கப்படுவது போன்ற தண்டனையை விதிப்பதற்கு வகைசெய்யும் சரத்தை அந்த தீர்ப்பு கண்டிக்கவில்லை.
14ம் பிரிவும் நீதிபதி புரூகியேர் குழுவும் செயல்பட்டு வந்தது தொடர்பான ஒரு விரிவான
அறிக்கை 1999ல் மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பின்
(IFHR) சர்வதேச
சட்ட நிபுணர்களும் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரெஞ்சு லீக்கும்
(IFHR) ஒரு விரிவான அறிக்கையை சதி ஆலோசனை சட்டத்தில் இந்த
கிரிமினல் தொடர்பு பற்றிய உள்ளார்ந்த நடைமுறைகளை விவரித்திருக்கிறது:
* நீதிபதிகள் கிரிமினல் அல்லது பயங்கரவாத நடவடிக்கை என்று அனுமானிக்கும் போது
அதில் பொதுவான நோக்கங்கங்களை ஏற்றுக் கொள்வதில் சந்தேகிக்கப்படுபவர்களின் ''தார்மீக'' ஒப்புதல் பற்றி
நீதிபதிகள் ஊகத்துடன் செயல்படுகின்றனர்.
* பிரதானமாக சந்தேகிக்கப்படுபவர்களுடனான தற்செயலான தொடர்புகள்
''பங்கெடுத்துக் கொண்டதற்கு'' சான்றாக கருதப்படுகிறது. (கூட்டாக சேர்ந்து குற்றத்தில் பங்கெடுப்பது)
* புலனாய்வு செய்பவர்களோடு ஒத்துழைக்க ஒரு சந்தேகத்திற்குரியவர் தவறிவிடுவதை
எடுத்துக்காட்டாக; இணைந்த குற்றவாளி மீது உடந்தையாக்குவது அதாவது அந்த குறிப்பிட்ட ஆண்கள் அல்லது பெண்
குறிவைக்கப்பட்ட அமைப்பிற்கு ஆதரவு தருவது.
* நீண்டகால தான்தோன்றித்தனமாக காவலில் வைத்திருப்பது ஒப்புதல் வாக்குமூலங்களை
சந்தேகத்திற்குரிய முறையில் பெறுவது
IFHR அறிக்கை விளக்கியிருப்பதைப்
போல் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவாக உள்ளது: ''புலனாய்வு செய்யும் மற்றும் வழக்கு தொடரும் அதிகாரிகள்
- நீதித்துறை போலீஸ் பரிசீலனை செய்யும் நீதிபதி மற்றும் பொது வழக்குத்தொடர்பவர் ஆகியோர் ஒரு பயங்கரவாதச்
செயலை செய்ததற்கான தொடர்பு பற்றியோ அல்லது அத்தகைய ஒரு செயலை செய்வதற்கான திட்டத்தை
உறுதிப்படுத்துவது சம்பந்தமாகவோ பொருட்படுத்த வேண்டியதில்லை''.
மனித உரிமைகள் வலைத் தளமான ''ஐரோப்பாவின் கோட்டை?----- சுற்றுக்கு
விடப்பட்ட கடிதம்'' (FECL)
(மார்ச் 1999ல்) சுட்டிக்காட்டியது: ''பங்கெடுத்துக் கொள்வதை கிரிமினல் நடவடிக்கையாக ஆக்கும் நோக்கத்தின்
உள்ளார்ந்த அம்சமாக சான்று (proof)
பற்றிய பிரச்சனை உள்ளது. அதன் நோக்கமே சட்ட அமலாக்க மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட கிரிமினல்
அல்லது பயங்கரவாத செயல்களை தூண்டிவிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதிக்கும் ஒரு கருவியாக
மட்டுமல்லாமல், எவ்விதமான கடுமையான குற்றங்கள் செய்யாதபோதிலும் ஆனால் ஆதரவாளர்களாக அல்லது
அனுதாபிகளாக இருக்கக்கூடியவர்களின் ஒரு தெளிவாக குறிப்பிடமுடியாத ''பிரிவு'' (பின்னணியினர்) மீது நடவடிக்கை
எடுக்க அனுமதிக்கின்றது''.
FECL எச்சரித்திருப்பது என்னவென்றால்
ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு அரசுகளும் ஒரு ''கிரிமினல் அமைப்பில் பங்கெடுத்துக் கொள்வது'' ஒரு
கிரிமினல் குற்றமாக்க உள்ளன. association de
malfaiteurs என்பதன் நேரடி மொழி பெயர்ப்பான இது
1997 ஜூனில் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் அது ஒப்புக் கொள்ளப்பட்டது.
சலாபி வழக்கு
பிரெஞ்சு அரசாங்கம் ஆதரவு அளித்த அல்ஜீரியாவின் இராணுவ ஆட்சி கவிழ்ப்பில், 1991ல்
அல்ஜீரிய நாடாளுமன்ற தேர்தல்களில் இஸ்லாமிய மீட்பு முன்னணி (FIS)
வென்றெடுத்ததை நிராகரித்தது. இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பை பிரான்சில் இருந்த வட ஆபிரிக்க வம்சா வழியைச்
சேர்ந்த பல மக்கள் எதிர்த்தனர். பிரான்சில் நடைபெற்ற குண்டு வீச்சுத் தாக்குதல்களில் 1995ம் ஆண்டு 13 பேர்
கொல்லப்பட்டனர். இதற்கு அரசாங்கத்திற்கு எதிரான அல்ஜீரியாவின் ஆயுதந்தாங்கிய இஸ்லாமியக் குழு (GIA)
காரணம் என்று கூறப்பட்டது. பலர் அல்ஜீரியாவின் இராணுவ சதிகாரர்கள் தான் பொறுப்பு என்று நினைக்கின்றனர்.
GIA வில் அல்ஜீரிய
இராணுவம் பெருமளவில் ஊடுருவியது மற்றும் அல்ஜீரியாவில் அது நடத்தியதாக கூறப்படும் பல அட்டூழியங்களை புரிந்தவர்கள்
இராணுவத்தில் இடம் பெற்றிருந்த உளவுப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் தான்.
FIS அனுதாபிகள் மீதும் இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்த மற்றவர்கள்
மீதும் ஒடுக்கு முறை நடவடிக்கைகளை மேற்கொள்வதை நியாயப்படுத்துகின்ற நோக்கில் பிரான்சில் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கக்
கூடும் என்று கருதப்பட்டது.
1994 இலிருந்து போலீசார் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளை
வடக்கு ஆபிரிக்க சமுதாயம் வாழ்கின்ற பகுதிகளில் நடத்தினர். பாரிசில் தெற்கு புறநகர் பகுதிகளிலிருந்து பிரபலமான
ஒரு குழுத் (gang)
தலைவர் முஹமது சலாபி மற்றைய 90 பேருடன் கைது செய்யப்பட்டார். ''சலாபி வலைபின்னல்களின்'' உறுப்பினர்கள்
என்று கூறப்பட்ட இதர வலைபின்னல்களையும் 1995 மற்றும் 1996ல் கைது செய்தனர். 1998 ஆகஸ்ட் 31ல்
புளுரி-மெரோஜிஸ் சிறை விளையாட்டு அரங்கை 10 மில்லியன் பிராங்குகள் செலவில் ஒரு நீதிமன்றமாக மாற்றி
சந்தேகிக்கப்பட்ட 138 பேரும் ஒட்டு மொத்மாக விசாரிக்கப்பட்டனர்.
IFHR விளக்கியிருப்பது என்னவென்றால்
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான வக்கீல்களுக்கு சாதகமற்ற நிலைமைகள் இருந்தாலும் அரசுத் தரப்பு ஆவணங்கள்
கிடைப்பது பெரும்பாலும் மறுக்கப்பட்டாலும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் எவரும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக
தண்டிக்கப்படவில்லை. ஆனால் 87 பேர் கிரிமினல் குற்ற அமைப்பில் பங்கெடுத்துக் கொண்டதாக தண்டிக்கப்பட்டனர்.
அவர்கள் 87 பேரில் 39 பேர் இரண்டு ஆண்டுகளுக்கு குறைந்த சிறை தண்டனை பெற்றனர் மற்றும் பிரதானமாக
சந்தேகிக்கப்பட்டவர்கள் ஆறு முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றனர். அந்த நேரத்தில் நடைமுறையில்
இருந்த அதிகபட்ச 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு குறைவான கால அளவிற்கே தண்டிக்கப்பட்டனர். கிரிமினல் அமைப்பில்
சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தால் 51 பேர் விடுதலை செய்யப்பட்டனர். சில
வழக்குகளில் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்த பின் விடுதலை செய்யப்பட்டனர்.
பயங்கரவாதிகளை உண்மையிலேயே கைது செய்தது என்ற வகையில் அந்த விசாரணை என்பது
ஒரு படுதோல்வியாகும். என்றாலும் அது புலம்பெயர்ந்த முஸ்லீம்கள் பயங்கரவாதிகளாக இருக்கக் கூடும் என்ற கெட்ட
பெயரை கொடுத்து, மக்களில் சில பிரிவுகளை அச்சுறுத்தி இனவெறியை உசுப்பிவிட்டு மற்றும் இளம் வட ஆபிரிக்கர்களை
பெருமளவில் தனிமைப்படுத்த உதவியது. அதன்மூலம் அவர்களில் சிலரை அடிப்படைவாத இஸ்லாமிய குழுக்களுக்கு ஒரு
தீனியாக்கிவிட்டது.
அல்ஜீரிய இராணுவ அரசாங்கம் அந்த ஆட்சியின் எதிரிகளை அடக்கி ஒடுக்குவதற்கான
முயற்சியில் பிரான்ஸ் ஆதரவை தருவதற்கு உதவும் வகையில் புரூகியேரின் பணி அமைந்தது. பிரெஞ்சு
Réseau Voltaire
வலைத் தளத்தில் போல் லபாரிக் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் 1995 செப்டம்பர்
15ல் அன்றைய உள்துறை அமைச்சர் ஜோன்-லூயி டுப்ரே தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டியுள்ளது: ''தங்களுக்கு
தொந்தரவு கொடுக்கின்றவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக ஒரு மூர்க்கத்தனமான வேட்டையை நடத்துவதில் நாம் ஈடுபட
வேண்டும் என்று அல்ஜீரிய பாதுகாப்பு சேவைகள் விரும்பின''.
இந்த வகையில் பிரான்சிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையில் நிலவிய உடந்தை போக்கை
விளக்குகின்ற பிரான்சு/அல்ஜீரியா - அரசு குற்றங்கள் மற்றும் பொய்கள் (Françalgérie,
crimes et mensonges d'état) என்ற தலைப்பில்
Jean-Baptiste Rivoire
மற்றும் Louis
Aggoun விவரித்திருக்கின்றனர். அந்த நூல் 1994 ஜீலை 12ல்
Libération
பத்திரிகையில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
புரூகியேர் தான் தோன்றித்தனமான அதிகாரங்களை அரசியல் அடிப்படையில்
பயன்படுத்தினார் என்பதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு சென்ற ஆண்டு வெளிவந்தது. உள்துறை அமைச்சர் நிக்கோலா
சார்க்கோசியுடன் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட ஒரு தொலைகாட்சி பேட்டியில் அவர் புதிய பயங்கரவாத-எதிர்ப்பு
சட்டம் முன்மொழியப்பட்டிருப்பதை நியாயப்படுத்தினார். அவர் அன்றைய தினம் நடைபெற்ற கைதுகளை
குறிப்பிட்டார்----அதாவது ஐந்து நாட்கள் கழித்து ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் பற்றியதாகும். புரூகியேர் தனது
வழக்குப்படி ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்து தான் ஒன்பது சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளை கைது செய்திருக்கும்
செய்தியை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார் அந்த நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது. ஒரு போலீஸ் அரசை
உருவாக்குகின்ற சார்க்கோசியின் முயற்சியை ஊக்குவிக்கின்ற வகையில் அது ஒரு தெளிவான முயற்சியாகும். அதற்குப் பின்னர்
உடனடியாக எந்த விதமான குற்றச்சாட்டும் கூறப்படாமல் சந்தேகத்திற்குரியவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள்
விடுதலை செய்யப்பட்டனர்.
யார் இந்த புரூகியேர்?
1943ல் 11 தலைமுறைகளுக்கு முன்னர் பதின்மூன்றாவது லூயி மன்னர் காலத்தில் ஒரு
நீதிபதிகள் அடங்கிய குடும்பத்தில் வாரிசாக Tours
இல் பிறந்தார். புரூகியேர் 1982ல் பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கைகளில்
சிறப்பு கவனம் செலுத்தத் தொடங்கினார் மற்றும் 1986ல் பாரிஸ் அரச வழக்குதொடுனர் அலுவலகத்தின் 14ஆவது
பிரிவின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டார். வலதுசாரி அணியை சார்ந்த கோலிச உள்துறை அமைச்சர் சார்ல்ஸ்
பாஸ்குவாவின் பயங்கரவாத-எதிர்ப்பு சட்டம் முதலில் வரையப்பட்டது.
Action Directe
இனால் தொடர் குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கை, அதேபோல் பாஸ்க் மற்றும் கோர்சிக்கன்
குழுக்களால் நடைபெற்ற தாக்குதல்கள் இந்த சட்டங்களை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டன.
புரூகியேருக்கு Légion
d'honneur மற்றும் திறமைக்கான தேசிய விருது
அளிக்கப்பட்டது. அவர் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு உலக நிபுணர் என்று கருதப்படுகிறார்.
2002ல் ஐரோப்பிய சபையில் நடைப்பெற்ற 9/11-க்கு பின்னர் ''பயங்கரவாத அச்சுறுத்தலின் தோற்றமும்
வளர்ச்சியும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார். 2003 மே மாதத்தில்
வாஷிங்டனில் புரூக்கிங்ஸ் கழகத்தில் அவர் ஆற்றிய உரை அவரது சிந்தனையை சிறப்பாக சுருக்கிக் கூறுவதாக
அமைந்திருந்தது. அவர் தனது இருபது ஆண்டுகள் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்ட அனுபவத்தை அடிப்படையாக
கொண்டிருந்தது மற்றும் அந்த ஒரு பங்களிப்பு பாரம்பரிய கண்ணோட்டமான ஒரு நீதிபதி, அரசின் நிர்வாக மற்றும்
அரசியல் அங்கங்களுக்கு அப்பால் நின்று நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று கருதப்பட்டு வந்ததாகும். அவர்
''பயங்கரவாதத்ற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு இடையே நிலவிய வலுவான
உறவுகளையும் மற்றும் ஒற்றுமைகளையும் சிறப்பு நீதிபதிகள் தொடர்புடைய சட்ட அமுலாக்க அமைப்புக்கள், புலனாய்வு
சேவைகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மிகவும் பாரம்பரியமிக்க வெளியுறவு கொள்கையின் அமைப்பு சாதனங்கள்
மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றிற்கு இடையே நிலவிய உறவுகளை'' மேற்கோள்காட்டினார்.
ஈராக் போரில் அமெரிக்கர்களின் உறவிற்கு மேலாக தனது புலனாய்வு வலைப்பின்னல்
உயர்வான அறிவை பெற்றிருப்பதாக பெருமையடித்துக் கொண்டார்: ''ஈராக்கில் இராணுவ வெற்றி மகத்தான ஒரு
சாதனையாகும். ஆனால் அந்த வெற்றி ஒரு ஒடுக்குமுறை மற்றும் வெறுக்கத்தக்க ஆட்சியை உலகத்திலிருந்து
ஒழித்துக்கட்டியது என்றாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அதன் பங்களிப்பு எதுவுமில்லை. மற்றும்
உண்மையிலேயே அமெரிக்காவிலும் மற்றும் ஐரோப்பாவிலும் இந்த இரண்டு பகுதிகளிலுமே பயங்கரவாத செயல்கள்
தொடர்பான ஆபத்தை அதிகரித்திருக்கக் கூடும். இது ஏனென்றால் ஈராக் ஆட்சிக்கும் மற்றும் அல்-கொய்தாவிற்கும்
அல்லது ஈராக்கிற்கும் மற்றும் பரவலான இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் இல்லை.
ஈராக் போர் நடத்தப்பட்ட விதமும் மற்றும் பொதுமக்களுக்கு அது தெரிவிக்கப்பட்ட விதமும் பயங்கரவாதத்தை
அதிகரிக்கும் ஆபத்தை உருவாக்கிவிட்டது.'' என கூறினார்.
பிரெஞ்சு புலனாய்வு பிரிவு, அரபு உலகத்தோடு தொடர்பு கொண்டு வந்தது
சீர்குலைந்துவிட்டது என்று புரூகியேர் தெரிவிக்கிறார்: ''ஈராக் நெருக்கடியால் உருவாக்கப்பட்ட சர்வதேச பதட்டங்கள்
அரசியல் தலைவர்களின் கவனத்தை திசை திருப்பி மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் உயிர்
நாடியான சர்வதேச ஒத்துழைப்பு முறையை ஆபத்தில் தள்ளியிருக்கக் கூடும்.''
இராணுவ வழிமுறைகளை அமெரிக்கா வலியுறுத்தி வருவதை அவர் விமர்சிக்கிறார்: ''இதர
வளங்களான இராஜதந்திர, புலனாய்வு மற்றும் சட்டம் ----அந்தப் போராட்டத்திற்கு வளர்க்கப்பட்டாக வேண்டும்.
அத்தகைய வளங்களை தனிப்பட்ட ஒரு அரசு திரட்டி விட முடியாது. ஆனால் ஒரு பன்னாட்டு பிரதிச்செயல்
தேவைப்படுகிறது. அத்தகைய ஒரு பாதையில் பிரான்ஸ் வலுவாக உறுதிக்கொண்டிருக்கிறது''.
தெளிவற்ற பயங்கரவாத அச்சுறுத்தல்
ஈராக் தொடர்பாக வாஷிங்டனுடன் பிரான்சிற்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தனக்கு
பாதகமாக மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை பெறுவதற்கான ஒரு முயற்சி என்று பிரான்ஸ் கருதினாலும்
புரூகியேர் இன்னமும் அமெரிக்க புலனாய்வு சேவைகளோடு தனது நெருக்கமான ஒத்துழைப்பை பெருமையாகவே கருதுகிறார்.
அவை (அமெரிக்க புலனாய்வு சேவைகள்) உதவிக்கும் மற்றும் ஆலோசனைக்கும் அடிக்கடி அவரிடமே அணுகுகின்றன.
Politique Internationale
க்கு (2004 மார்ச் 1ல்) ஒரு விரிவான பேட்டியளித்திருக்கிறார்.
அதில் அமைப்பு ரீதியில் இல்லாத பூகோள வலைபின்னல் குழுக்களின் ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றி பேசுகிறார்.
ஜிஹாத்திச வெறியூட்டப்பட்ட ஒரு மக்களிடமிருந்து மற்றும் குறிப்பாக மேற்காசிய, வட ஆபிரிக்க பகுதிகளில் பேரழிவை
ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நெருக்கடிகளால் கொந்தளிப்படைந்துள்ள மக்களிடையே அவர்களது எண்ணிக்கை எல்லா நேரங்களிலுமே
வளர்ந்து கொண்டு வருகிறது என்று கூறுகிறார். அவர் கூறுகின்ற புகார் ''கண்டுபிடிக்கும் படி மாதிரி மரபாய்வுத்துறை
(Typology) நம்மிடமில்லை.'' ஒரு சம்பவத்திற்கு பின்னர்தான்
சூழ்நிலைகளும் இடங்களும் மாறுவதை நாம் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கிறோம்.''
பேட்டி கண்டவர் ''அப்படி என்றால் நிலைமை நம்பிக்கையற்றதாக உள்ளதா?'' என
கேட்டார்.
நீதிபதி தானே சிக்கிக் கொண்ட நிலையில் ''ஐரோப்பாவிற்கு உள்ளேயும் சர்வதேச
அளவிலும் அற்புதமான ஒத்துழைப்பு நிலவுவதன் சிறப்பையும் ஆற்றலையும் பாராட்டுகிறார்..... அவை ஆபத்துக்களை ஒரு
குறைந்த அளவிற்கு நிலை நாட்ட நமக்கு உதவுகிறது''. அவர் சொல்கிறார் ''அமெரிக்கா மீது சிந்தனையற்ற ஒரு மாற்றமுடியாத
வெறுப்பை ஜிஹாத்திஸ்டுக்கள் தங்களது போராட்டம் மூலம் ஊட்டி வளர்க்கிறார்கள்``
புரூகியேர் ஒரு தெளிவற்ற பயங்கரவாத அச்சுறுத்தலை சித்தரிக்கிறார். சமுதாயத்தின் பரந்த
பிரிவுகளை எதிரிகள் ஆகக் கூடிய வல்லமையுள்ளவர்கள் என்று அடையாளப்படுத்துகிறார். முஸ்லீம்கள் மட்டுமல்ல ஆனால் இராணுவவாதத்திற்கும்
மற்றும் ஏகாதிபத்திய வல்லரசுகளின் காலனித்துவத்தையும் எதிர்க்கின்ற அனைவரையும் மற்றும் அவற்றால் வாழ்க்கைத்தரமும்
மற்றும் ஜனநாயக உரிமைகளும் நசுக்கப்படுவதை எதிர்ப்பவர்களையுமாகும். எனவே தான் புதிய பயங்கரவாத-எதிர்ப்பு
சட்டத்தில் ஒட்டு மொத்த மக்களையும் கண்காணிப்தற்கு முன்னேற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பயங்கரவாத அனுதாபங்கள் உருவாகின்ற வகையில் நிலவுகின்ற அரசியல் மற்றும் சமூக
நிலைப்பாடுகள் பற்றி போகின்ற போக்கில் குறிப்பிட்டாலும் புரூகியேருக்கு வறுமை, காலனித்துவம் மற்றும் போரினால்
தங்களது வாழ்வு சிதைந்து விட்டவர்களது நிலை பற்றி அக்கறையில்லை. இதில் அவர் எதிர்கால ஜனாதிபதி
வேட்பாளராகவும் ஆளும் UMP (பொதுமக்கள்
இயக்கத்திற்கான ஒன்றியம்) தலைவராகவும் உள்ள நிக்கோலா சார்க்கோசியின் சிந்தனை வழியை முழுமையாக ஏற்றுக்
கொள்கிறார். விரைவில் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்ற புரூகியேர் 2007ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற
தேர்தலில் UMP
வேட்பாளராக போட்டியிடுகிறார்.
|