World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government and LTTE agree to hold talks

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த உடன்பட்டுள்ளன

By Sarath Kumara
30 January 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கமும் தமிழழீ விடுதலைப் புலிகளும், கணிசமான சர்வதேச அழுத்தங்களை அடுத்து 2003 ஏப்பிரலுக்குப் பின்னர் முதற் தடவையாக அடுத் மாதம் ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த கடந்த புதனன்று உடன்பட்டுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தைகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையை "பலப்படுத்துவதை" இலக்காக்க கொண்டிருக்கும். 2002 பெப்பிரவரியில் கைச்சாத்திடப்பட்ட இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம், கடந்த நவம்பரில் மஹிந்த இராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து ஏறத்தாழ ஒரு நடைமுறையில் இல்லாத உடன்படிக்கையாகிப் போனது. கடந்த இரு மாதங்களாக தொடர்ச்சியாக மறைந்திருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், குண்டு வீச்சுக்கள் மற்றும் படுகொலைகளால் இராணுவ சிப்பாய்கள், பொதுமக்கள் உடன்பட 200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க நெருக்குவதற்காக நோர்வே மத்தியஸ்தர் எரிக் சொல்ஹெயிம், அமெரிக்க துறைசார் இராஜாங்கச் செயலாளரான நிக்கலஸ் பேர்ன்ஸ் ஆகியோர் கடந்த வாரம் இலங்கை வந்திருந்தனர். பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் அல்லது ஐரோப்பிய நாடொன்றில் நடத்தப்பட வேண்டும் என புலிகளும், இலங்கையில் அல்லது ஏதாவதொரு ஆசிய நாட்டில் நடத்தப்பட வேண்டும் என இராஜபக்ஷவும் வலியிறுத்தி வந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கான இடமே அதிகரித்த உடன்பாடின்மைக்கான விவகாரமாகியது.

கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன் இரஜபக்ஷ மட்டுட்டாக வெற்றிபெற்றார். இந்த இரு கட்சிகளும், இராணுவத்தின் நிலைகளை பலப்படுத்துவதற்காக யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்தல் மற்றும் மத்தியஸ்தராக இருக்கும் நோர்வேயை மாற்றுதல் உட்பட புலிகளுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என இராஜபக்ஷ உடனான தமது தேர்தல் உடன்படிக்கையில் வலியுறுத்தியிருந்தன. நோர்வேயும் சொல்ஹெயிமும் புலிகளுக்கு பக்கச் சார்பாக இருப்பதாக ஜே.வி.பி யும் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டி வந்துள்ளன.

இரு சாராருக்கும் இடையில் எந்தவொரு உடனடி உடன்பாடுகள் எட்டப்படுவது நிகழ்தற்கரியதாகும். புலிகள் இலங்கை இராணுவத்தின் மீதான தக்குதல்களுக்கு முடிவுகட்ட உடன்பட்டுள்ள அதேவேளை, யுத்த நிறுத்த உடன்படிக்கையை எந்தவகையிலும் திருத்தம் செய்வதை எதிர்க்கின்றனர். கடந்த நவம்பர் பிற்பகுதியில், புலிகளின் தலைவல் வே. பிரபாகரன், தமிழ் மக்களின் அபிலாஷைகளை திருப்திபடுத்தும் வகையில் "ஒரு பொருத்தமான அரசியல் வரைவை" முன்வைக்குமாறும் அல்லது புதிய யுத்தத்தை எதிர்கொள்ளுமாறும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

சொல்ஹெயிம் கடந்த வாரம் ரூய்டருக்கு வழங்கிய கருத்துக்களில் வாய்ப்புகளைப் பற்றி எச்சரிக்கையாக இருந்தார். "இந்த முன்னெடுப்புகளில் பொறுமை முக்கியமானதாக இருந்ததுடன் இன்னமும் அதுவே முக்கியமானதாக உள்ளது. அது ஒரு சில மாதங்களில் தீர்க்கக் கூடியதல்ல," என அவர் பிரகடனம் செய்தார். சமாதனத்திற்கான "ஆர்வம்" உள்ள போதிலும், "அவசியமான சமரசத்திற்கான உண்மையான உத்வேகம் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த முன்னேற்றமான முயற்சிகளை கீழறுக்க வன்முறைகளை மேற்கொள்ள முயற்சிக்கும் நாசகாரர்களே பெரும் ஆபத்தானவர்கள்" என அவர் எச்சரித்தார்.

அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு இரு சாராரில் எவரும் பொறுப்பேற்காத அதே வேளை, புலிகளும் மற்றும் இலங்கை இராணுவமும் தங்களுடன் சம்பந்தப்பட்ட ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்து, கடந்த இரு மாதங்களாக பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்திற்கு சமமான தாக்குதல்களை மேற்கொண்டன. இராணுவ உயர் மட்டத்தின் சில பிரிவுகள் ஆரம்பத்தில் இருந்தே யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக இருந்த்தோடு முன்னர் 2003ல் முன்னர் இடம்பெற்ற பேச்சுக்கள் முரிவதற்கு பங்களிப்பு செய்த தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களிலும் தலையீடு செய்திருந்தன.

அமெரிக்க இராஜாங்க திணைக்கள பிரதிநிதி பேர்ன்ஸ், இரு சாராரையும் சமமாகக் கருதுவதாக பாசாங்கு கூட காட்டவில்லை. அவர் "நாட்டை யுத்தத்தின் விளிம்பில் தள்ளியதற்கு" "பொறுப்பான குழு" என புலிகளை அகுற்றம்சாட்டிய தேவேளை, "கட்டுப்பாட்டுடன் இருப்பதற்காக" கொழும்பு அரசாங்கத்தை பாராட்டினார். மீண்டும் யுத்தம் தொடங்கினால் புலிகளே அதற்கனா "முழு பொறுப்பாளிகளாக" இருப்பர் எனவும் அவர் பிரகடனம் செய்தார். புலிகள் சமாதானத்திற்கும் மற்றும் அதனது "கடந்த ஒன்றரை தசாப்த கால வெறுப்பூட்டும் கொள்கைகளுக்கும்" இடையில் ஒன்றை தெரிவு செய்துகொள்ள வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த மாத முற்பகுதியில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரான ஜெஃப்ரி லன்ஸ்டட், மீண்டும் யுத்தத்திற்குத் திரும்பினால் புலிகள் பெரும் விலை கொடுக்க நேரிடும் என எச்சரித்தார். "புலிகள் மிகவும் திறமையான மற்றும் மிகவும் உறுதியான இராணுவத்தை" எதிர்கொள்வர் எனத் தெரிவித்த அவர், எந்தவொரு மோதலின் போதும் அமெரிக்கா இலங்கை ஆயுதப் படைகளுக்கு செயல்திறனுடன் ஆதரவளிக்கும் என்பதை பலம்வாய்ந்த முறையில் சமிக்ஞை செய்துள்ளார்.

அமெரிக்கா தனது சர்வதேச இராணுவக் கல்வி மற்றும் பயிற்சித் திட்டத்தின் கீழ், இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சியளிப்பதற்காக வருடாந்தம் 500,000 அமெ. டொலர்களை ஏற்கனவே செலவு செய்து வருகின்றது. கடந்த வார ஏசிய டைம்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்கா ஆயுதப் படைகளுக்கு 2004ல் 2.5 மில்லியன் அமெ. டொலர்களும் 2005ல் 496,000 டொலர்களும் மற்றும் இந்த ஆண்டு 1 மில்லியன் டொலர்களும் கடனாகவும் கொடுத்து வந்துள்ளது.

அது பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் அதே வேளை, புஷ் நிர்வாகமானது மீண்டும் ஒட்டு மொத்த யுத்தத்திற்கு சென்றால் தமது தேர்வு என்ன என்பதையிட்டும் அக்கறைகொண்டுள்ளது. பல வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தை நிராகரித்து வந்த வாஷிங்டனைப் பொருத்தளவில், இந்தியத் துணைக் கண்டத்தில் வளர்ச்சிகண்டு வரும் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த மோதல் இரண்டில் ஒரு வழியில் முடிவுக்கு வர வேண்டும்.

அரசியல் பதட்டநிலைமைகள்

இராஜபக்ஷ, பேச்சுவார்த்தைகள் கொழும்புக்கு சாதகமாக அமைவதை உறுதி செய்துகொள்ள அமெரிக்க ஆதரவின் பின்னால் அணிதிரள்கின்றார். கட்ந்த திங்கள் வெளியான புலிகளுக்கு சார்பான தமிழ் செய்தியிதழான சுடர் ஒளி பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில், பேச்சுக்களுக்கு உடன்படுமாறு புலிகளுக்கு அழைப்புவிடுத்தார். "என்னை நம்புங்கள். நான் தமிழ் மக்களுக்கு உண்மையானவாக இருக்க விரும்புகிறேன். சமாதானத்தை அடைய எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள். நான் யதார்த்தவாதி என்பதை நிறுவிக்காட்ட என்னுடன் ஒத்துழையுங்கள்," என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி எதிர்மாறான அழுத்தங்களை எதிர்கொள்கின்றார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் மற்றும் பூகோள உற்பத்தி முன்னெடுப்பில் இலங்கையையும் இணைத்துக்கொள்ளவும் ஒரு தடையாக உறுவெடுத்துள்ள இந்த யுத்தத்திற்கு முடிவுகட்ட கொழும்பில் உள்ள கூட்டுத்தாபன தட்டுக்கள் விரும்புகின்றன. சமாதான பேச்சுக்கள் பற்றிய செய்தியை அடுத்து, கொழும்பு பங்குச் சந்தையானது என்றுமில்லாத வகையில் கடந்த வியாழனன்று மிக உயர்ந்த 7 வீதத்தை எட்டியது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் தேவா ரொட்ரிகோ, "சில காலங்களின் பின்னர் எனக்கு கிடைத்த நல்ல செய்தி" என பேச்சுவார்த்தைகளை ஆர்வத்துடன் வரவேற்றார்.

அதே சமயம், இராஜபக்ஷ தனது ஸ்திரமற்ற சிறுபான்மை அரசாங்கத்தை தூக்கி நிறுத்துவதற்காக ஜே.வ.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவில் தங்கியிருக்கின்றார். ஜெனீவாவில் பேச்சுக்கள் நடத்துவதை உடனடியாக எதிர்த்த ஜாதிக ஹெல உறுமய செயலாளர் சம்பிக ரணவக்க, "இந்த இடம் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்கும்" என பிரகடனம் செய்தார். "அரசாங்கமும் புலிகளும் சம பங்காளிகளாக அடையாளப்படுத்தப்படுவதோடு பேச்சுவார்த்தைகள் சட்டப்பூர்வமான அரசாங்கத்திற்கும் ஒரு பயங்கரவாத குழுவுக்கும் இடையிலானதாக நோக்கப்படாது " என அவர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க் கிழமை, பேச்சுவார்த்தை அறிவிக்கப்படுவதற்கு முதல் நாள், ஜாதிக ஹெல உறுமயவுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கமானது கொழும்பு பூராவும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது. பில் லாடனுடன் பிரபாரகனின் படமும் அச்சிடப்பட்ட அந்த சுவரொட்டிகள் புலிகளுக்கு எதிராக அமெரிக்காவை இராணுவ ரீதியில் தலையிடத் தூண்டியது. "ஆமாம் திரு. பேரன்ஸ் அவர்களே, பயங்கரவாதத்திற்கு பதில் ஒன்றுதான்," என அது பிரகடனம் செய்தது.

ஜே.வி.பி தலைமையிலான தேசாபிமான தேசிய இயக்கம், புலிகளின் படுகொலைகளை நிறுத்துமாறும் யுத்த நிறுத்தத்தை மீளாய்வு செய்யுமாறும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது. பி.பி.சீ உடன் பேசிய ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக, எந்தவொரு பேச்சுவார்த்தையும் "ஒற்றை ஆட்சி அமைப்பை" அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திறம்பட திட்டங்களை வகுக்க இராஜபக்ஷவிற்கு ஒரு சிறிய வாய்ப்பே உள்ளது. சிங்களப் பேரினவாதத்தின் சங்கேத மொழியில் "ஒற்றை ஆட்சி" என்பது பெளத்தத்தை அரச மதமாகக் கொண்டு சிங்களப் பெரும்பான்மையின் அரசியல் மேலாதிக்கத்தை பேணிக் காப்பதை குறிக்கின்றது. ஒற்றை ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட பேச்சுக்களுக்கு முதலில் ஆதரவளித்ததன் மூலம், இராஜபக்ஷ முதலில் யுத்தத்திற்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் சிறுபான்மையினருக்கு ஒரு குறிப்பிடத் தக்க சுயாட்சியை அனுமதிக்கும் சமஷ்டித் தீர்விற்கான அடிப்படையை விளைபயனுள்ள வகையில் நிராகரித்தார்.

இராஜபக்ஷ சிங்கள வகுப்புவாதத்தில் முழுமையாக ஊறிப்போயுள்ள இராணுவ உயர் மட்டத்தினர் மத்தியிலும் எதிர்ப்புக்கு முகங்கொடுக்கின்றார். அவர் தேர்வு செய்யப்பட்ட உடன், யுத்த நிறுத்தத்தை மீளாய்வு செய்வதற்கான பிரேரணைகள் அடங்கிய ஒரு பட்டியலையே ஜனாதிபதிக்கு ஆயுதப் படைகள் கையளித்தன. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, யுத்த நிறுத்த உடன்படிக்கை புலிகளுக்கு ஏற்றதாகவே எழுதப்பட்டுள்ளதோடு தற்போதைய நிலையில் சமாதானப் பேச்சுக்களுக்கான அடிப்படைகள் கிடையாது என பகிரங்கமாக பிரகடனம் செய்தார்.

கடந்த வியாழன் கல்லூரி விழா ஒன்றில் உரையாற்றிய பொன்சேகா, ஆயுதப் படைகள் ஒரு "கெளரவ சமாதானத்தை" அடைவார்கள் என தெரிவித்தார். அது புலிகளை முழுமையாக அடிபணியச் செய்வதை மட்டுமே அர்த்தப்படுத்தும். அவரது கருத்துக்கள் இராணுவம் ஜெனீவா பேச்சுக்களை அலட்சியம் செய்யலாம் அல்லது கீழறுக்க செயற்படலாம் என்பது பற்றிய தெளிவான சமிக்ஞை ஆகும் .

அதே தினம், புலிகளின் மட்டகளப்பு அரசியல் துறை பொறுப்பாளரான மேஜர் கபிலன் இனந்தெரியாத நபர்கள் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டார். புலிகள் இராணுவத்தினரையும் அவர்களோடு சேர்ந்து செயற்படும் துணைப்படைகளையும் குற்றஞ்சாட்டியதோடு கொழும்பு "இரட்டை வேடம்" போடுவதாகவும் குற்றம் சுமத்தினர். இதற்குப் பிரதிபலித்த இராணுவம், மட்டக்களப்புக்கு அருகில் உள் ஒரு காவலரன் மீது ரொக்கட் குண்டுகளை ஏவியதாக புலிகள் மீது குற்றம் சுமத்தியது.

செவ்வாயன்று, சுடர் ஒளி பத்திரிகையின் திருகோணமலை நிருபர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அதற்கு முதல் நாள், இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து செயற்படும் துணைப்படை கும்பல்களின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து எழுதியிருந்தார். இந்தப் படுகொலையை அடுத்து, இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலைவரான ஹக்ருப் ஹக்லன்ட், "இது பைத்தியக்காரத்தனம். இந்த நாட்டில் யுத்தத்தைத் தவிர வேறு எதையும் விரும்பாதவர்கள் உள்ளனர்," எனக் கூறத் தள்ளப்பட்டார்.

இராணுவம் ஜெனீவா பேச்சுவார்த்தைகளை குழப்பலாம் என தெளிவான கவலைகள் காணப்படுகின்றன. வியாழக்கிழமை, இராஜபக்ஷ உடனடியாக பாதுகாப்பு, பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டத்திற்கு அழைப்புவிட்டார். ஜனாதிபதி பாதுகாப்பு படைகளின் தலைவர்களுக்கு ''இந்த அர்த்தமுள்ள மற்றும் நல்ல விளைபலன்களை கொண்ட சமாதான பேச்சுவார்த்தகளை குழப்பும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கவேண்டாம்'' என பணித்துள்ளதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சண்டே டைம்ஸ் பத்திரிகையின் நேற்றைய வெளியீட்டில் ''நிலைமைகள் தொடர்பான அறிக்கை'' இக்கூட்டத்தைப்பற்றி தெளிவான வடிவத்தில் குறிப்பிட்டிருந்தது. இராஜபக்ஷ அக்கூட்டத்திற்கு சமூகமளித்தவர்களிடம் ''உங்களின் முக்கியமான பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது எவ்விதமான தாக்குதல் நடத்துவதை தடுப்பதை உறுதிப்படுத்துவதாகும். நீங்கள் அரசாங்கத்தின் சமாதான முன்னெடுப்புகளுக்கு உண்மையானவர்களாக இருக்கவேண்டும். அரசியல் நோக்கங்களை கொண்ட பிரிவினரால் செய்யப்படும் குழப்ப முயற்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் மற்றும் அவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்களை எச்சரித்தார்.''

பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவர் தயா சந்தகிரி மற்றும் இராணுவத் தளபதி பொன்சேகாவையும் வெள்ளியன்று மட்டகளப்புக்கு விமானத்தில் பயணிக்குமாறும் இராஜபக்ஷ பணித்தார். சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ள படி, ''அவர்கள் இராணுவத்தின் மத்தியில் இப்புதிய சமாதான முன்னெடுப்புகள் பற்றியும், எவ்விதமான ஆத்திரமூட்டும் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் சூழ்நிலையை பாதுகாத்துக் கொள்ளுமாறும் உரையாற்றவுள்ளார்கள்''. வேறுவார்த்தைகளின் கூறுவதானால், இராணுவத்தின் சகலவிதமான மறுப்புக்களின் மத்தியிலும், இவ்வாறான விடயங்களில்தான் கடந்தமாதங்களில் அது ஈடுபட்டிருந்தது.

ஜெனீவாவில் எவ்விதமான உடன்பாடுகள் அடையப்படுமா, அல்லது இப்பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமா என்பது ஒரு பதிலளிக்கப்படாத கேள்வியாகவே உள்ளது.

Top of page