World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Students mobilise against destruction of working conditions for youth

பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்

By Antoine Lerougetel
31 January 2006

Back to screen version

பிரான்சின் பல்கலைக் கழகம் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் (lycéens) மாணவர்களுடைய அமைப்புக்கள் பெப்ரவரி 7ம் தேதி முன்மொழியப்பட்டுள்ள முதல் பணி ஒப்பந்தத்திற்கு (CPE--Contrat premiere embauche) எதிரான தேசிய ஆர்ப்பாட்டத்திற்கு தயார் செய்யும் வகையில், பிரான்ஸ் முழுவதும் ஜனவரி 30 தொடங்கி ஒரு வாரகால பொதுக் கூட்டங்களுக்கும், அணிதிரளல்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் மூன்று வாரங்கள் நாட்டை உலுக்கிய வகையில் நிகழ்ந்த இளைஞர் போராட்டங்களுக்கு விடைகாணும் வகையில் உள்ளது என்று கூறப்படும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன்னுடைய செயல்திட்டமானது, வேலைக்கு அமர்த்திக்கொள்பவர், இளம் தொழிலாளர்களை முதல் இரண்டு ஆண்டுகளில் எவ்வித காரணமும் இன்றி பணியில் இருந்து நீக்கும் உரிமையை அளித்துள்ளது.

CPE ஐ நிறுவும் சட்ட வரைவானது, பல்கலைக்கழகம், உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றின் மாணவர்களும் தொழிலாளர்களும் கொடுக்கவிருக்கும் அச்சத்திற்குரிய மிகப் பெரிய எதிர்ப்பு இயக்கத்தை முன்னரே தடுத்து தனக்கு சாதகமாக்கி கொள்வதற்காக பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்கு ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்னரே கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதி பாராளுமன்றத்தில் சட்டவரைவு தாக்கல் செய்யப்படுகிறது. பெப்ரவரி 4ல் இருந்து மார்ச் 6 வரை வெவ்வேறு பகுதிகளில் வேறு தேதிகளில் விடுமுறைகள் பதினைந்து நாட்களுக்கு வருவதால் மாணவர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது என்ற கருத்தில் இது இவ்வாறு அறிமுகப்படுத்தப்படுகிறது, அக்கால முடிவில் அரசாங்கம் சட்டத்தை இறுதிவடிவில் இயற்றிவிட முடியும் என எதிர்பார்க்கிறது.

பள்ளி ஒன்றியங்கள் இரண்டில் ஒன்றான FIDL (Independent and Democratic Federation of High School Students - உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் சுதந்திர மற்றும் ஜனநாயகக் கூட்டமைப்பு) கூறியுள்ளதாவது: "எதிர்ப்பு இயக்கத்தை தவிர்க்கும் வகையில் அரசாங்கம் விடுமுறை நாட்களை பயன்படுத்தும் என்பதை உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நன்கு அறிவர். எனவேதான் பெப்ரவரி 4ம் தேதிக்கு முன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் திரண்டு எழுவர்."

20 பேருக்கு மேல் பணியில் இருத்தும் தொழில்களுக்கு பொருந்தும் CPE யின் படி, வேலை 26 வயதிற்கு உட்பட்டோர் தேடுவோர் இரண்டு ஆண்டு "ஒருங்கிணையும் காலம் (Consolidation period)" என்பதற்கு கட்டுப்பட வேண்டும்; இக்கால கட்டத்தில் ஒப்பந்தம் எந்த விதிகளுக்கும் உட்படுத்தப்படாமல் மீறப்படலாம், ஆகையால் முறையீடு அல்லது பரிகாரங்கள் ஆகியவை கிடைக்கப்படமாட்டாது. ஒப்பந்தம் முடிவின்றி இருக்கிறது - அதாவது, அதற்கு முடிவு தேதி கிடையாது - ஆனால், வேலைகொடுப்பவர்கள் தொழிலாளர்களை தற்பொழுதுள்ள தொழிலாளர் சட்டங்களின் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பின் கீழ் வைத்திருப்பதை தவிர்க்க பயன்படுத்திக்கொள்ளலாம்.

கடந்த ஆகஸ்ட் மாதம், CPE ஐ போன்ற விதிகளைக் கொண்டிருந்த CNE (CNEசிஷீஸீtக்ஷீணீt ஸீஷீuஸ்மீறீறீமீs மீனீதீணீuநீலீமீs- புதிய வேலையாட்கள் நியமன ஒப்பந்தம்) என்ற 20 பேருக்கு உள்ளே வேலைகொடுக்கும் நிறுவனங்களுக்கு இயற்றப்பட்ட சட்டத்திற்கு, தொழிற்சங்கங்களில் இருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட எதிர்ப்பு இல்லாத காரணத்தால், அரசாங்கம் தொழிலாளர்கள்மீது தற்போதைய தாக்குதல் சட்டத்தையும் கொண்டுவர ஊக்குவிக்கப்பட்டுள்ளது. CGT (General Confederation of Labour எனப்படும் பிரான்சின் மிகப் பெரிய தொழிற்சங்கம்) ஒப்புக் கொண்டுள்ளதாவது: "CNE ஐ தடைப்படுத்துவதற்கு எங்களால் முடியவில்லை; ஏனெனில் அக்டோபர் 4ம் தேதி ஐக்கிய நாள் நடவடிக்கையை தொடர்ந்து நாங்கள் எதையும் செயல்படுத்த முடியவில்லை" (Le Monde, January 17). தொழிலாளர்களை தடையின்றி முதலாளிகள் சுரண்டுவதற்கு தடைகளை அகற்றும் வகையில் தொழிலாளர்கள் சட்டங்களை முற்றிலும் திருத்துவதற்கு கதவுகளை திறந்துவிடும் வகையில்தான் CNE உள்ளது என்று பலரும் கருதினர் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழில் உறவுகளில் சற்று அமைதியைக் காண இயலச் செய்யும் என்றும் நினைத்தனர்.

CPE, CNE ஆகியவற்றுடன் அரசாங்கம் மற்றுமொரு முதியவர்களுக்கான குறுகிய கால ஒப்பந்தம் (Short-tem Contract for Seniors) என்று 57 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கான திட்டம் ஒன்றையும் முன்வைத்துள்ளது; இதன்படி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத் தொகை இழப்பின்றி குறைவூதியத்திற்கு வேலை செய்யலாம்; இவை இரண்டுமே வேலையின் நிரந்தரத்தன்மையை மறுத்துவிடுகின்றன. இந்நடவடிக்கைகளில் முதலாளிகளுக்கு ரொக்க ஊக்கத்தொகைகளும் அடங்கியுள்ளன; இதன்படி சமூகப்பாதுகாப்பு கட்டண பங்களிப்பில் அவர்களுக்கு ஆண்டு ஒன்றிற்கு 20 பில்லியன் யூரோக்கள் தள்ளுபடி செய்யப்படும். இது அவர்களுக்கு ஒரு பரிசு மழை போல் ஆகும்.

உண்மையில், MEDEF (பிரெஞ்சு முதலாளிகளின் அமைப்பு) என்னும் பெரு வணிக அமைப்பு அத்தகைய ஒப்பந்தங்கள் பொதுவாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோருவதோடு, பிரத்தியேக ஒப்பந்தத்திற்காக இன்னும் கூடுதலான உரத்தகுரலில், தவறான, நியாயமற்ற பணிநீக்கங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், வேலையில் இருந்து நீக்கப்பட்டால் எவ்வித முறையீடும் கூடாது என்றும் கோரியுள்ளது. MEDEF தலைவரான Laurence Parisot, தொழிலாளர் நல விதிகளை "ஒழுங்குபடுத்தப்படாத குப்பைகூழம்" என வர்ணித்துள்ளார்.

இப்புதிய ஒப்பந்தங்களின்படி வேலைக்கு சேர்க்கப்படுபவர்கள் நிர்வாகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை ஏற்க வேண்டியிருக்கும்; மிகக் குறைந்த சட்டபூர்வ ஊதியங்கள், நலனற்ற பணி நிலைமைகள், ஊதிய விகிதத்தை எதிர்க்க முடியாத நிலை, ஆபத்தான சூழ்நிலை, கூடுதல் நேரத்திற்கு ஊதியமின்மை ஆகியவற்றையும் அவர்களுடைய ஊதிய காலம் குறைந்ததாக இருந்தாலும் ஏற்க வேண்டியிருக்கும்.

"நியாயமான தகுதிகாண் காலம், பணிநீக்கத்திற்கான நியாயப்படுத்தல் இவை இரண்டும் தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் [ILO- International Labour Organisation] பேரவை 158ல் ஏற்கப்பட்ட அடிப்படைக் கோட்பாடுகளுக்கு CPE ஒத்துப்போகவில்லை.... அதன் பின்னே உள்ள நிரந்தர ஒப்பந்தம் பற்றிய கோட்பாடு மற்றும் வேலைப்பாதுகாப்பின் தர்க்கம் தெளிவாகவே அரசாங்கத்தின் பார்வைகளில் இருக்கிறது" என்று இடது Magistrates' Union கூறியுள்ளது. லியோனல் ஜொஸ்பன் (1997-2002)ன் முந்தைய பன்மை இடது அரசாங்கத்துடன் தொடங்கிய கூட்டுப் பேரம்பேசலுக்கான கட்டமைப்பின் தகர்ப்பின் தொடர்ச்சியாகவும், 35 மணி நேர வாரம் என்ற சட்டத்தை தகர்ப்பதாகவும், பின்னர் ஜோன் பியர் ரஃபரன் உடைய கோலிச அரசாங்கம் நலன்கள் தகர்ப்பை விரிவுபடுத்தியதின் தொடர்ச்சியாகவும்தான் இவை உள்ளன.

CPE க்கு எதிரான ஆர்ப்பாட்ட இயக்கம், ஆளும் மேற்தட்டு தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தின் மீதான அதன் தாக்குதல்களை துணிவாய் மேற்கொள்வதற்கு எதிராக மற்ற தொழிலாளர்கள் முறையாக எதிர்ப்பை தனித்தனியே தொடங்கியுள்ள நேரத்தில் வெளிவந்துள்ளது. ஜனவரி 31 அன்று பாராளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் என்று அரசாங்கத்தின் சமூக கொள்கைகளுக்கு எதிராக CGT அழைப்பு விடுத்துள்ளதில், மாணவர்களும் இணைகின்றனர். CPE க்கு எதிரான அவர்களுடைய பிரச்சாரத்திற்கு CGT தலைவர் Thibault ஒப்புதல் அளித்துள்ளார்; அவர் UNL (National Union of High School Students - தேசிய உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் சங்கம்) நடத்திய பேரவையில் கடந்த சனியன்று பேசுகையில், அவருடைய உரை பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த இலையுதிர்காலத்தில் நிகழ்ந்த இளைஞர்களின் பூசல்களின்போது பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் ஒன்றான Seine-Saint-Denis ல் இருந்து கிட்டத்தட்ட 60 சதவிகித ஆசிரியர்களும், கல்விப் பணியாளர்களும் வியாழனன்று நடந்த வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றனர்; கற்கும் சிரமங்கள் உள்ள மாணவர்களை முழுநேரக் கல்வியில் இருந்து அகற்றி அவர்களை துணைப் பணியாளர்களாக (Apprenticeships) நியமிக்கும் வில்ப்பனுடைய திட்டத்திற்கு எதிராக அந்த வேலைநிறுத்தம் நடந்தது; அம்முறையில் திட்டமிட்டு பல பள்ளிகளின் வளங்கள் குறைக்கப்படுவதற்கு வழி செய்ப்பட்டுள்ளது; கல்விப் பகுதி முன்னுரிமை என்ற பெயரில் (Zones of Education Priority ZEP) பள்ளிகளுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை மாற்றப்படுவதற்கு அது வழிவகை செய்கிறது. வேலைநிறுத்தம் செய்தவர்கள், பள்ளிகளில் பெருகி வரும் வன்முறையை கட்டுப்படுத்த மேலதிக வளங்கள் தேவை என்ற கோரிக்கையை விடுத்தனர்.

அரசாங்க தொழிலாளர்களும், ஆட்சிப் பணியாளர்களும் தங்கள் ஊதியங்களின் வாங்கும் சக்தி அரிக்கப்பட்டமை, வேலை வெட்டுக்கள் இவற்றுக்கு எதிராகவும் பொதுப் பணி துறைகளை காத்தல் ஆகியவற்றிற்காகவும் ஒரு-நாள் வேலைநிறுத்தத்தோடு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் பெப்ரவரி 2ம் தேதி நிகழ்த்த உள்ளனர்.

பிரான்சின் அரசியல் உயரடுக்கின் முதலாளித்துவ சார்புடைய திட்டங்களுக்கு எதிராக அரசியல் போராட்டத்தில் தொழிலாளர்களை திரட்டுவதற்கு தொழிற்சங்கங்கள் காட்டும் மறுப்பு, மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரே ஒரு நாள் மட்டும் வேலைநிறுத்தம், தனித்தனிப் பிரிவுகளாக எதிர்ப்புக்கள் என்று அரசாங்கத்தின் மீது அழுத்தும் கொடுக்க முன்வருவது, "பொறுப்பான தொழிற்சங்கவாதம்" என்ற பெயரை தொடர்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது; இந்த வகையான நடவடிக்கைகள்தான் இடது, வலது அரசாங்கங்களை தங்களுடைய பெருவணிக நலன்களுக்கு ஆதரவான தடையற்ற சந்தை நடவடிக்கைகளை ஊக்கத்துடன் முன்னெடுக்க உதவியுள்ளது.

ஓய்வூதியத்திற்காக 2003ல் தெருக்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மிகப் பெரிய வேலைநிறுத்த இயக்கம் ஆகியன CGT மற்றும் FSU (Federation of Unitary Unions, கல்வித்துறையில் முக்கிய கூட்டமைப்பு), இரண்டாலும் நெரிக்கப்பட்டமையும் சமீபத்திய இவ்வகை உதாரணங்களாகும். அதேபோல் வேலைபறிப்புக்கள், தனியார்மயம் இவற்றிற்கு எதிராக படகுத்துறை தொழிலாளர்கள் அக்டோபர் 4ம் தேதி, மார்சேயில் நிகழ்த்திய பரந்த தேசிய வேலைநிறுத்த அணிதிரளல்களானது, சர்ச்சைக்கு மத்தியில், CGT, SNCM (National Corsica-Mediterranean Company) இவற்றால் கைவிடப்பட்டு, ஒரு நாள் எதிர்ப்பாக குறைக்கப்பட்டுவிட்டது.

CPE, CNE இரண்டுமே பிரான்சில் நீடித்து இருக்கும் வேலையின்மை வீதத்தை குறைப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது; மொத்தத்தில் 10 சதவீத வேலையின்மையும், 26 வயதிற்குட்பட்டோரிடையே 23 சதவிகிதமாகவும் வேலையின்மை உள்ளது. அரசாங்கம் மற்றும் அதன் பெருவணிக ஆதரவாளர்களின் கருத்தின்படி, நிறுவனங்கள் தாங்கள் விரும்பும்போது தொழிலாளர்களை நீக்கம் செய்ய முடியுமாயின், இன்னும் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க தயாராக இருக்கின்றன. CPE ஒரு "நிரந்தர ஒப்பந்தம்" (CDI) என்பதால், குறுகிய கால ஒப்பந்தங்களை விட இது முன்னேற்றம் உடையது என்று அரசாங்கம் கூறுகிறது; இளைஞர்களுக்கு இது பொறுத்தக் கொள்ளக்கூடியதுதான் என்றும் அது கூறுகிறது. உண்மையில் இப்போதுள்ள சட்டத்தின்படி, வேலை ஒப்பந்தக்காலத்தில் தொழிலாளர் சட்டத் தொகுப்பின் பாதுகாப்பிற்கு உட்பட்டு தொழிலாளர்கள் உள்ளனர்; குறுகிய காலத்திற்கும் பாதுகாப்பு உண்டு. ஆனால் CPE, CNE இரண்டிலுமே எந்தக் காரணமும் கொடுக்கப்படாமல் இரு வாரங்கள் முன்னறிவிப்பில் தொழிலாளரை வெளியேற்ற முடியும்.

30 வயதிற்குட்பட்ட தொழிலாளர்களை இள வயது தொழிலாளர்கள் என்று வகைப்படுத்தும் L'Expansion சஞ்சிகை இந்தப் பிரிவில் வேலையின்மை 18.1 சதவீதமாக உள்ளது என்றும் அது கூடிவருகிறது என்றும் கூறியுள்ளது. உழைப்பவர்களில் ஐந்தில் ஒரு பங்குதான் தற்காலிக வேலையை பெறமுடியும். 2003ல் மொத்த உழைக்கும் மக்கள் தொகையான 77 சதவீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் முந்தைய ஆண்டின் நான்கு கால்பகுதிகளில் 58 சதவீத இளவயதினர் மட்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட, நிரந்தர வேலைகளில் இருந்தனர். அதே காலத்தில், வேலைகளில் இருந்த அந்த இளைஞர்களில் 28 சதவீதத்தினர் வேலையில்லா காலகட்டத்தை அனுபவித்தனர், இது மொத்தத் தொகுப்பில் 17 சதவீத நிலை ஆகும். 50 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுடைய வேலையின்மை வீதமும் அதிகமாகும்.

தக்க தகுதியற்ற இளவயது தொழிலாளர்களில் 20 சதவீதம் எந்த வேலையையும் பார்த்ததில்லை; 25 சதவீதத்தினர் வேலைக்கும் வேலையின்மைக்கும் இடையே முந்தைய ஆண்டை விடக் கூடுதலாக தடுமாறினர். இளவயது தொழிலாளர்களில் 2003ல் வேலை பார்த்தவர்களில் 40 சதவீதத்தினர் ஓராண்டிற்கு பின் வேலையிழந்து நின்றனர்.

அனைத்து பட்டதாரிகளில், நான்கு ஆண்டுகள் உயர்நிலை பள்ளி முடித்த பின் பட்டம் வாங்கியவர்களில், 21 சதவீதத்தினர் தங்கள் படிப்பு முடித்து ஒன்பது மாதங்களுக்கு பின்னர் இன்னமும் வேலை தேடிக் கொண்டிருக்கையில், சராசரியாக ஒரு இளவயது தொழிலாளிக்கு நிரந்தர வேலை கிடைக்க அவர் 8ல் இருந்து 11 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது; அதன் பின்னர்தான் கடன் வாங்கமுடியும், ஓரளவு பாதுகாப்போடு குடும்பத்திற்காக திட்டமிடமுடியும். இளைஞர்களில் 70 சதவீதத்தினர் குறுகிய கால ஒப்பந்தம், தற்காலிக வேலை என்றுதான் வேலைப் போக்கை தொடங்குகின்றனர்.

CPE, CNE முன்மொழிவுகளானது, தொழிலாளர் விதிமுறைகள் (Labour code), தொழிலாளர்கள் உரிமைகள் மீதான ஏராளமான தாக்குதல்களில் சமீபத்தியவையாகும், இத்தாக்குதல்களில் பல குறைவூதிய இளைஞருக்கான திட்டங்கள், தற்காலிக ஒப்பந்தங்கள் ஆகியவை உள்ளன; இவை 2002ல் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய UMP (Union for a Popular Movement) அரசாங்கம் உள்பட இடது, வலது அரசாங்கங்களால் கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, வேலையில்லாக்கால ஊதியத்தின் மீது பெரும் வெட்டுக்கள் கொண்டுவரப்பட்டு விட்டன. தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் ("சமூகப் பங்காளிகள்" என்று அழைக்கப்படுபவர்கள்) இடையிலான அண்மைய பேச்சுவார்த்தைகள் மேலும் கூடுதலான வகையில் வேலையற்றோர் வறுமையில் வாடும் நிலையைத்தான் வெளிப்படுத்துகின்றன.

இந்த நடவடிக்கைகளின் நோக்கமானது இலாப பெருக்கத்தை அதிகரிக்கவும் பெருவணிகங்களிடையே போட்டியை அதிகரிக்கவும் முதலீட்டாளர்களுக்கு பிரான்சை மிகவும் ஈர்க்கும்படி செய்யவும் தொழிலாளர்கள் உரிமைகள், பாதுகாப்புக்கள் ஆகியவற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் மிக அதிகரித்த வகையில் உழைப்புச் செலவீனங்களை மலிவாக்குவதில் இருக்கும் தடைகளை அகற்ற வேண்டும் என்பதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved