WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
அயர்லாந்து
How deep does the state penetration of Sinn Fein go?
Northern Ireland: the Donaldson affair and the threat to
democratic rights
சின் ஃபைன் இனுள் அரசு ஊடுருவல் எவ்வளவு ஆழமாக செல்கின்றது?
வடக்கு அயர்லாந்து: டொனால்ட்சன் விவகாரமும் ஜனநாயக உரிமைகள் மீதான
அச்சுறுத்தலும்
By Steve James and Chris Marsden
19 January 2006
Use this
version to print |
Send this link by email |
Email the author
சின் ஃபைனின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
வடக்கு அயர்லாந்து சட்டசபையின் டெனிஸ் டொனால்ட்சன் 20 ஆண்டுகளாக பிரிட்டனின் புலனாய்வு ஏஜெண்டாக
பணியாற்றி வந்தார் என்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. வடக்கு அயர்லாந்து மற்றும் பிரிட்டனில் நடத்தப்பட்டுவரும்
அரசியலுக்கு பின்னணியாக அமைந்துள்ள ஒரு ஜனநாயக போர்வையில் ஒரு ஓட்டையை உருவாக்கியுள்ளதுடன் பிரிட்டிஷ்
அரசாங்கமும் அதன் புலனாய்வு அமைப்பின் ஒரு அணிகளும் ஜனநாயக உரிமைகள் மீது கொண்டிருக்கின்ற உண்மையான
அணுகுமுறையை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இரண்டாவதாக அது சின் ஃபைன் மற்றும்
ஐரிஸ் விடுதலை இராணுவத்தினுள் (IRA) புலனாய்வுகளின்
ஊடுருவல் ஒரு வியப்பூட்டும் மட்டத்திற்கு அம்பலமாகிறது. தசாப்தங்களுக்கு மேலாக அவை நடைபெற்றது குறித்து
கலவரமூட்டும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த பிரச்சனைகள் தொடர்பாக பிரிட்டிஷ் ஊடகங்கள் ஏறத்தாழ
மெளனம் சாதிப்பது ஜனநாயக உரிமைகளை பாதிக்கின்ற இது போன்ற அடிப்படை பிரச்சனைகளில் அவற்றின்
சொந்த அலட்சியத்தை எடுத்துக்காட்ட சேவைசெய்கிறது.
வடக்கு அயர்லாந்தின் முதலாவது அமைச்சர் டேவிட் டிரிம்பிள் தலைமையிலான
அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி (Ulster Unionist
Party-UUP), அயன் பைஸ்லேயின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியிலிருந்து
(DUP) கடுமையான அரசியல்
அழுத்தங்களுக்குட்பட்ட சூழ்நிலைகளில் 2002ம் ஆண்டு வட அயர்லாந்தின் புதிய பாராளுமன்றம் பிரிட்டிஷ்
அரசாங்கத்தால் மூடிவிடப்பட்டது.
அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் சபை, 1998இல் பெரிய வெள்ளிக்கிழமை
உடன்படிக்கைக்கு (Good Friday Agreement)
பின்னர் 1999ல் ஸ்தாபிக்கப்பட்டது. பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆறு பிராந்தியங்களிலும் அரசியல்
வாழ்வை ஸ்திரப்படுத்துவதற்கு இது அவசியமானதுடன், மற்றும் அதிக செலவு பிடிக்கும் இராணுவ மோதல்களுக்கு
முற்றுப் புள்ளி வைத்துவிட்டு முதலாளித்துவ தேசியவாத சின் ஃபைன் மேற்கொண்ட ஓரளவு அரசியல் அதிகாரத்தின்
நடவடிக்கைக்கு அனுமதித்தது. தெற்கிலுள்ள அயர்லாந்து குடியரசுடன் பொருளாதார ஒத்துழைப்பிற்கான அந்த
உடன்படிக்கை அனுமதித்தது மற்றும் வடக்கில் சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதற்கு தேவையான ஸ்திரத்தன்மையை
உருவாக்கியது.
வடக்கில் ஜனநாயக ஆட்சிக்கான ஒரு புதிய சகாப்தத்தின் விடியல் என்று
இப்பாராளுமன்றம் பாராட்டப்பட்டது. அதில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தில் இரண்டு
சமுதாயங்களுமே சம்மந்தப்பட்ட ஒன்றிய (unionist)
அல்லது தேசியவாதக் கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கருதப்பட்டது.
DUP
மட்டுமே ஒப்பந்தத்தை எதிர்த்தது. ஒரு மிகக்குறுகலான புரட்டஸ்டன்ட் பெரும்பான்மை உட்பட
அயர்லாந்து முழுவதிலும் மிக பரவலான பெரும்பான்மை வாக்காளர்கள் அந்த ஒப்பந்தத்தை ஆதரித்தனர்.
தசாப்தங்களாக குறைந்த அளவிலான உள்நாட்டுப் போரினால் வறுமையும்
சமத்துவமின்மையும் தீவிரமடைந்துவிட்டதை சமாளிப்பதற்கு ஒரு வழியாக பாராளுமன்றத்தை ஊடகங்கள் சித்தரித்துக்
காட்டின. அப்படியிருந்தும் முன்னதாக மூன்று முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட பின்னரும் 2002ல்
பிரிட்டிஷ் அரசாங்கம் ஒட்டுமொத்தமாக அப்பாராளுமன்றத்தை மூடிவிட்டது. மேலெழுந்த வாரியாக பார்க்கும்
போது அப்படிச் செய்தது டேவிட் டிரிம்பிளின் அரசியல் வாழ்வை காப்பாற்றுவதற்கு தான்.
ஸ்டோர்மொண்ட் பாராளுமன்றத்தை யார் வீழ்ச்சியடையச்செய்தது என்பதில்
அதிகாரபூர்வ மெளனம்
அந்த நேரத்தில் பாராளுமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை ஒரு உளவு
மோசடியின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டது. ஸ்டோர்மொண்டில் சின் ஃபைன் அங்கத்தவர்கள் பெருமளவில்
பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து பாதுகாப்பு சேவைகளின் உறுப்பினர்கள் குறித்து தகவல்களை திரட்டும்
நடவடிக்கையை எடுத்துவந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இருபது கணக்கில் போலீஸ் அதிகாரிகள் சின் ஃபைன்
அலுவலகங்களில் சோதனைகளை நடத்தினர் மற்றும் அதன் மூன்று உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அதில்
ஒருவர் டெனிஸ் டொனால்ட்சன். டிரிம்பிலின் வார்த்தைகளில் சொல்வதென்றால் சின் ஃபைன் ''வாட்டர் கேட்டை
விட படுமோசமான'' ஒரு செயலை செய்ததாக ஒன்றிய அரசியல்வாதிகள் கண்டித்தனர். டிரிம்பிள் தனது
UUP உறுப்பினர்களுடன் ஸ்டோர்மொண்டிலிருந்து வெளியேறி
விடப்போவதாக அச்சுறுத்தினார் மற்றும் பிளேயர் பாராளுமன்றத்தை சரியான நேரத்தில் தற்காலிகமாக நிறுத்தி
வைத்தார்.
தற்பொழுது வெளிப்பட்டிருப்பது என்னவென்றால் போலீஸ் திடீர் தாக்குதல்களின்
நடவடிக்கையில் 1200 இரகசியமான தகவல்களை கண்டுப்பிடித்தது அல்லது டெனிஸ் டொனால்ட்சன் வைத்திருந்த
இவ்வாறான ஆவணங்களை கண்டுபிடித்தனர். போலீசார் குறி வைத்த மூன்று அதிகாரிகளில் டெனிஸ் டொனால்ட்சன்
உம் ஒருவராவார். அந்த ஆவணங்களில் ஒன்று பாதுகாப்பு சேவைகளினால் வைத்திருக்க வேண்டும் அல்லது
டொனால்ட்சன் அவர்களிடம் ஒரு முந்திய காலகட்டத்தில் தனக்கு அந்த ஆவணங்களை பார்வையிட எங்கு
பயன்படுத்தப்பட்டது என்பதை கூறியிருக்க வேண்டும். அது அவர் அரசு அமைப்புக்களோடு தொடர்புகள்
வைத்திருந்தால் கிடைத்ததாகும்.
சின் ஃபைன் தனது எதிரிகள் தொடர்பான தகவல்களை திரட்ட முயன்றதா இல்லையா
என்பதை விட உண்மையான ''ஸ்டோர்மொன்ட்கேட்'' மோசடி என்பது அயர்லாந்து வாக்களிக்கும் மக்களின்
மிகம்பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு அமைப்பை பெயர் குறிப்பிடப்படாத தேர்ந்தெடுக்கப்படாத
புலனாய்வு நிறுவனங்கள் ஒரு வெளிக்குறிப்பிடாத செயல்திட்டத்தின் மூலம் கவிழ்த்து விட்டன என்பதுதான்
உண்மையானதொரு மோசடியாகும்.
"Irish Abroad" என்ற
அயர்லாந்து புலம்பெயர்ந்த வலைத்தளம் இந்த விவகாரத்தின் ஜனநாயக விரோத விளைபயன்களை சுருக்கமாக
கூறியிருக்கிறது. ''ஸ்பைகேட்சர் விவகாரத்திற்கு பின்னர்
M15 ஏஜெண்டு பீட்டர் ரைட் அதே பெயரில் எழுதியுள்ள ஒரு
நூலில் தனது நண்பர்கள் 30 பேர் இரகசியமாக அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் ஹரோல்ட் வில்சனுக்கு கரும்புள்ளி
குத்தி அவரை பதவியிலிருந்து கட்டாயமாக வெளியேற்றுவதில் வெற்றி பெற்று விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்,
அவர்கள் அத்தகையதொரு கடுமையான குற்றச்சாட்டை வெளியிட்டனர்.''
அந்த நேரத்து அவர்களுடைய கருத்துக்கள் டோனால்ட்சனின் அம்பலப்படுத்துதலை
நிரூபித்துக்காட்டியது என்று சின் ஃபைன் வலியுறுத்தியது. ஸ்டோர்மொன்ட்கேட் பாராளுமன்றத்தை சீர்குலைப்பதற்கு
''பாதுகாப்பு அதிகாரிகாரிகளால்'' உருவாக்கியதாகும். பெரிய வெள்ளிக்கிழமை உடன்படிக்கையை சிதைத்து விட
வேண்டும் என்ற நம்பிக்கையோடும் அல்லது எப்படியாவது உருவாக இருந்த அரசாங்கத்தில் சின் ஃபைன்
பங்குகொள்வதை செயல்படவியலாத நிலையை உருவாக்க வேண்டுமென்று பழைய ஒன்றிய பாதுகாப்பு அமைப்பின்
பிரிவுகள் குறிப்பாக வடக்கு அயர்லாந்து போலீஸ் சேவையின்
(PSNI) சிறப்பு
புலனாய்வுக்குழுவும் செயல்பட்டு வந்ததாக அது கூறுகிறது.
உளவுப் பிரிவுகளுக்கிடையே மோதல்?
Irish Sunday Business Post,
டிசம்பர் 25ல் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில் டோம் மெக்கர்க் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவெனில், 2002
மார்ச் 17ல் கேஸ்டில்ரேக் போலீஸ் நிலையத்தில் PSNI
சிறப்பு பிரிவுகளில் IRA
நடத்தியதாக கூறப்படும் சோதனை நடவடிக்கைகளை சுற்றியுள்ள வியப்பூட்டும் சூழ்நிலைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
அதில் சிறப்புப்பிரிவு தகவல்கொடுப்பவர்கள் மற்றும்
PSNI உறுப்பினர்கள் பற்றிய கோப்புகள் திருடப்பட்டுவிட்டன
என்று குற்றம் சாட்டப்பட்டது. ஸ்டோர்மொன்ட்கேட் சம்பவங்கள் வெடிப்பதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னர்
IRA
இச்சோதனையை மறுத்தது.
கேஸ்டில்ரேக் அதிரடி சோதனையில் முதன்மையாக சந்தேகப்படுபவராக
உருவாக்கப்பட்டவர் லரி செயிட்செக். நியூயோர்க்கில் பிறந்த சமையல்காரர் டெனிஸ் டொனால்ட்சன்னுடன் ஒரு
நெருக்கமான உறவு வைத்திருந்தார்.
மேக்கர்க் தந்துள்ள தகவலின் படி டொனால்ட்சன் நியூயோர்க்கில் பணியாற்றும்போது
சைட்செக்குடன் நண்பரானார். அவர் குடியரசு அனுதாபி என்பது டொனால்ட்சனை கட்டுப்படுத்தியவர்களுக்கு
தெரிந்திருக்கவேண்டும். அதற்குப் பின்னர் உயர் பாதுகாப்புள்ள கேஸ்டில்ரேக் பாதுகாப்பு வளாகத்தில் அவருக்கு
ஒரு பணி கிடைத்தது. ''டொனால்ட்சனை கையாளுபவர்களினால் துவக்கிய கேஸ்டில்ரேக் அதிரடி சோதனையில்
சிறிய பங்களிப்பவர்களாக செயிட்செக்கும் டொனால்ட்சனும் இடம் பெற்றனர் என்று மெக்குர்க் தெரிவிக்கிறார்.
கேஸ்டில்ரேக் அதிரடி சோதனையில் சம்மந்தப்பட்டிருந்தாலும் எந்த விதமான
குற்றச்சாட்டுக்களும் தாக்கல் செய்யப்படவில்லை. இதுதான் ஸ்டோர்மொன்ட்கேட் அதிரடி நடவடிக்கையில்
கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் மூலாதாரம் என்று கருதப்படுபவையாகும்
MI5 மற்றும் பிரிட்டனின் இராணுவ
புலனாய்வு கருவிகள் மற்றும் RUC/PSNI
சிறப்பு குழு போன்ற உளவுத்துறைகளுக்கிடையே நடைபெற்றுக் கொண்டிருந்த மோதலின் ஒரு பாகம்தான் அதன்
கேஸ்டில்ரேக் அதிரடி சோதனை ஒரு பகுதிதான் என்று மெக்குர்க் கோடிட்டுக்காட்டுகிறார்.
மெக்குர்க் முடிவுரையாக ''அண்மை கால சம்பவங்களின் அசாதாரணமான
தன்மைகளை பார்க்கும் போது பிரிட்டனின் பாதுகாப்புப் படைகளுக்குள் ஒரு தனிப்பட்ட மோதலுக்கு சான்றாக
கேஸ்டில்ரேக் அதிரடி சோதனை மற்றும் ஸ்டோர்மொன்ட்கேட் ஆகியவற்றை ஒரு சாட்சியமாக எடுத்துக் கொள்வது
மித மிஞ்சிய கற்பனைக்கு எட்டாததாக உள்ளதா? சிறப்பு பிரிவிற்கு தொந்தரவளிக்கவேண்டும் என்பதற்காக
உண்மையிலேயே கேஸ்டில்ரேக் நடத்தப்பட்டதா மற்றும் ஸ்டோர்மொன்ட் அந்த பிரிவின் பழிவாங்கும்
நடவடிக்கையா?'' என கூறியுள்ளார்.
இத்தகையதொரு மோதலுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது ஸ்டொர்மொண்ட்டை
மீண்டும் உயிர்பெறச்செய்ய போட்டி அமைப்புக்களுக்கு இடையில் நிலவிய அணுகு முறைகளின் வேறுபாட்டை
குறிப்பதாகும். பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் இராணுவ ஸ்தாபனங்கள் ஊகமாகக்கொண்ட
M15 உட்பட
PSNI
யை மேற்பார்வையிடும் உள்ளூர் போலீஸ் வாரியங்கள் உட்பட வடக்கு அயர்லாந்து அரசாங்கத்தில் சின் பெயின்
இணைக்கப்பட வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தன.
இராணுவத்தை பொறுத்தவரை வடக்கு அயர்லாந்தில் ஒரு புதிய உடன்பாடு ஏற்பட்டு
அதில் சின் ஃபைன்ன் மற்றும் DUP
உடன்பாட்டிற்கு வரும்போது வடக்கு அயர்லாந்தில் அனுப்பப்பட்டுவரும் உளவு வளங்களையும் துருப்புக்களின்
எண்ணிக்கையையும் மேலும் குறைக்கின்ற அனுகூலத்தை அனுமதிக்கும். ஈராக் படையெடுப்பிற்கு பின்னர் பிரிட்டிஷ்
இராணுவம் அளவிற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அது தனக்கு வருகின்ற அழுத்தங்களை
குறைத்துக் கொள்வதில் ஆர்வமாக உள்ளது என்று தெரியவருகிறது.
MI5 யை பொறுத்தவரை ஜீலை 7
குண்டு வீச்சுக்களைத் தொடர்ந்து குறிப்பாக பிரிட்டனில் உள்நாட்டு ''நாசவேலைகளை'' எதிர்த்து தாக்குவதற்கு
பிரிட்டனில் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பிரிட்டனின் மையப்பகுதியில் தனது அரசியல்
கட்டுப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. அந்த அமைப்பின் நடவடிக்கைகள் ஒரு பாரியளவிற்கு
விரிவாக்கப்பட்டிருப்பதன் ஓர் அங்கமாக நூற்றுக்கணக்கான கையாட்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சுருக்கமாக
சொல்வதென்றால் பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பொறுத்தவரை வடக்கு அயர்லாந்து நேற்று
நடந்த போர் என்று (கடந்த காலத்தில்) கருதி வருகின்றன.
PSNI விஷேட பிரிவில் இடம்
பெற்றுள்ள அதிகாரிகள் அவ்வாறு நினைக்கவில்லை. சிறப்பு பிரிவில் பலர் இழிபுகழ் கொண்ட ரோயல் அல்ஸ்டர்
போலீஸ் படையில் (Royal Ulster
Constabulary) இதற்கு முன்னர் பணியாற்றியவர்கள்
இப்போது அவர்களுக்கு
PSNI என்று மறு
பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர்கள் ''சமாதான முன்னெடுப்பை'' முற்றிலுமாக எதிர்க்கின்றனர். சிலர் சரியான
காரணத்திற்காக ரோஸ்மேரி நெல்சன் மற்றும் வழக்குரைஞர் பாட் பைனக்கேனின் கொலைகள் போன்று
''தொந்தரவளிப்பதன்'' மிகவும் இழிவுபகழ்பெற்ற கொலைகளின் சிலவற்றில் புலன் விசாரணையின் விளைவாக
வழக்கு தொடரலாம் என்று அஞ்சுகின்றனர். பன்கேன் மற்றும் நெல்சன் கொலைகள் நீண்டகால தாமதத்திற்கு பின்
இப்போது புலனாய்வு துவங்கியுள்ளது. இந்த இரண்டிலுமே பிரிட்டிஷ் படைகளுக்கும் சிறப்பு பிரிவிற்கும் அந்த
படுகொலைகளில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் கூட்டு சதி பற்றிய பிரச்சனைகளை எழுப்பும். சில முன்னால் சிறப்பு
பிரிவு உறுப்பினர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது மற்றும் பலர் அவர்களுக்கு
கசப்பளிக்கும் வகையில் முன் கூட்டியே ஓய்வு பெறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
மேலும் பிரிட்டிஷ் படைகளைப் போல் அல்லாமல் ஸ்டோர்மொண்ட்
உயிர்பிக்கப்பட்டால் PSNI
உம் மற்றும் அதில் மிகப் பெருமளவிற்கு இடம் பெற்றுள்ள புரட்டஸ்டண்ட்
மற்றும் ஒன்றிய (Union)-சார்பு
அதிகாரிகள் ஸ்டோர்மொண்ட்டிற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் அதில் சின் ஃபைன் அரசாங்கத்தின் ஓர்
அங்கமாக இடம் பெற்று முன்னாள் எதிரிகளை கண்காணிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
பிரிட்டன் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அரசாங்கங்களும் மற்றும் யூனியனிஸ்டுகள்(Unionists)
ஒரு பிரிவினரும் புதிய முதலீட்டிலிருந்து பயன்பெற நிற்கின்றனர். அவர்கள் சின் ஃபைன் அதிகாரத்தில்
இடம்பெறுவதற்கு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவினரையும்
சுரண்டுவதற்கு உருவாக்கிவிட முடியும் என்று உறுதி செய்யும் சூழ்நிலைகளின் சிறந்த வழியாக கருதுகின்றனர். ஆனால்
1921 முதல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சார்பில் புரட்டஸ்டன்ட் அல்ஸ்டரை அரசாண்டு வந்த பழைய மற்றும்
பெருகியுள்ள பாதுகாப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள கணிசமான பிரிவுகள் புதிய ஏற்பாடுகளின் படி இலாபம்
பெறுவதற்கு ஒன்றுமில்லை மற்றும் இழப்பு அதிகமாக இருக்கும்.
எல்லா வகையான ஆத்திரமூட்டல்களுக்கும் சாத்தியமுண்டு. அவற்றில் இனவாத
மோதல்களை கிளப்பி விடும் முயற்சிகளும் அடங்கும் அவை தொழிலாள வர்க்கத்திற்கு கடுமையான ஆபத்துக்களை
உண்டாக்குவதாகும்.
அதே காரணத்தினால் தான் டொனால்ட்சன் விவகாரத்தில் என்ன நடந்தது என்ற முழு
விவரம் தருமாறு பிரதமர் டோனி பிளேர் வடக்கு அயர்லாந்து செயலர் பீட்டர் ஹெய்ன் அல்லது
PSNI தலைவர்
ஹூக் ஓர்டே ஆகியோருக்கு நிரந்தர கோரிக்கைகளை தூண்டுவிடுவதாக அமைந்திருக்கிறது. இதற்கு மாறாக
யூனியனிஸ்ட் கட்சிகளைத் தவிர வேறு எல்லாக் கட்சிகளும் மிகவும் அக்கறையில்லாத கோரிக்கைகளை விடுத்ததோடு
இந்த பிரச்சனையை முற்றிலுமாக விட்டுவிட்டன.
பிரிட்டிஷ் அரசாங்கம் உடனடியாக எந்த விசாரணையும் நடக்காது என்று
அறிவித்துவிட்டது. மற்றும் அதற்கு பின்னர் முற்றிலும் மெளனமாகிவிட்டது. அயர்லாந்தின் பிரதம மந்திரி (Taoiseach)
பெர்டி அகன் இந்த மாதம் ஸ்டோர்மொண்ட் கருத்து வேறுபாடுகளிலிருந்து அனைத்து கட்சிக்களும் விலக்கி கொள்ள
வேண்டும் என்று வலியுறுத்தினார். '`வடக்கில் சமுதாயம் சாதாரண நிலையை அடைய முயற்சிப்பதை நாம்
தொடருவோமானால் அது உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறைன் அங்கு எவரும் கண்காணிக்கவில்லை. வட
பகுதியில் நாம் முறையான அரசியல் கட்சிகளையும் முறையான போலீஸ்
[garda] நடைமுறைகளையும் வைத்திருக்கிறோம் அதே
மனப்பாங்கோடு நாம் அனைவரும் முன்னேறிச் செல்ல வேண்டும்.
''யார் யார் மீது வேவு பார்க்கிறார் என்று சோதிக்க தொடங்குவது அல்லது
இரண்டு ஒற்றர்கள் அல்லது மூன்று ஒற்றர்கள் ஒருவருக்கொருவர் வேவு பார்ப்பது இப்படியே போய்
கொண்டிருந்தால். வடக்கு அயர்லாந்தில் சமாதான முன்னெடுப்பை தீர்வு காணும் முன்னர் நான் வாழ்வதற்கு ஒரு
நீண்ட காலம் தேவை நான் பயப்படுகிறேன்'' என்று அவர் கூறினார்.
பிரிட்டன் ஊடகங்கள் உடந்தை
டொனால்ட்சன் அம்பலத்திற்கு வருவதால் பல இரகசியங்கள் வெளியில் வந்து விடும்
என்பதால் அவற்றை மூடி மறைப்பதற்கு பிரிட்டிஷ் ஊடகங்கள் முயன்று வருவது அவை உடந்தையாக செயல்பட்டு
வருவதை காட்டுவதாகும். பெரும்பாலும் டொனால்ட்சன் விவகாரம் வெளியிடப்படுவதில்லை ''பரபரப்பான
தலைப்பாக'' கருதப்படுவது இல்லை ஆரம்பத்தில் பரபரப்பாக நான்கு நாட்களுக்கு செய்திகள் வெளியிடப்பட்டன.
இதில் ஒரே ஒரு விதிவிலக்கு புத்தாண்டு தொடர்பான செய்திகளாகும். அதில் சின்
ஃபைனுள் இதர முகவர்கள் செயல்படுவதற்கான சாத்தியக் கூறு அல்லது மாற்றீடாக கட்சியை
ஸ்திரமற்றதாக்குவதற்கு பாதுகாப்பு சேவைகளினால் ஒரு தொடர் முயற்சி என்பது மட்டுமே.
டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 25ல்
PSNI துப்பறிவு அதிகாரிகள் மூன்று முன்னணி
குடியரசுக் கட்சிக்காரர்களை விசாரித்தனர். மற்றும் அவர்கள் சிறப்பு பிரிவிற்கோ அல்லது
MI5 விற்கோ நீண்டகாலமாக தகவல்
கொடுப்பவர்களாக செயல்பட்டார்கள் என்று அம்பலப்படுத்தப்படும் ஆபத்தில் அவர்கள் உள்ளனர் என்று செய்திகள்
விளக்கின.
BBC தனக்கு பிரபலமான இரண்டு
குடியரசு கட்சிக்காரர்களின் பெயர்களை வழங்கியது அவர்கள் தகவல் கொடுப்பவர்கள் என்ற சந்தேகத்தில்
உள்ளதாக போலீசார் எச்சரிக்கை செய்ததாக கூறப்படுகிறது என்று சின் ஃபைன் பேச்சாளர் ஒருவர்
தெரிவித்ததாக டைம்ஸ் எழுதியது. அவர் அந்த இருவரையும் அணுகிய போது அதை அவர்கள் மறுத்ததாக சின்
ஃபைன் அதிகாரி குறிப்பிட்டார். அவர் அந்த இருவரது பெயரையும் வெளியிட்டார் ஒருவர் முன்னாள் பெல்பாஸ்ட்
நகர கவுன்சிலர் டாம்ஹர்ட்லி மற்றும் ஒரு முன்னாள் IRA
நடவடிக்கை அதிகாரி ரிச்சர்ட் ''டிக்கி'' கிளண்ஹோல்மஸ் என்று
தகவல் தந்தார்.
டைம்ஸ் செய்தியின் படி ''கிளண்ட்ஹோல்ம்ஸ் பிரிட்டனில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை
அனுபவித்தவர், அவர் பிரிக்ஷான் சிறையிலிருந்து கடத்தப்பட்ட ஒரு ஹெலிகாப்டர் மூலம் ஒரு முன்னாள்
IRA தலைமை
தளபதி பிரையன் கீனனை கொண்டு வருவதற்கு முயன்றார். கிளண் ஹோல்மசின் மகள்
Eibhlin (Evelyn)
ஒளிந்து திரியும் IRA
பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவராவார். அவரை வழக்கிலிருந்து
விடுவிக்க சின் ஃபைன்ன் முயன்று வருகிறது.
பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்புக்களும் போலீசாரும் தவறான வதந்திகளை பரப்பிக்
கொண்டிருப்பதாக சின் ஃபைன் குற்றம் சாட்டியது. சமாதான முன்னெடுப்புகளை சீர் குலைப்பதற்காக குடியரசு
தொண்டர்களிடையே உட்பூசலை ஏற்படுத்துவதற்காக மற்றும் சின் ஃபைனை இழிவுபடுத்துவதற்காக
IRA
நடவடிக்கைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன என்ற வதந்தியை பரப்பினர்-----சுதந்திர கண்காணிப்பு குழுவின்
(IMC)
அறிக்கை தருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்த வதந்திகள் பரப்பப்பட்டன. சின் ஃபைன் அரசாங்கத்தில்
மீண்டும் சேர்ந்து கொள்வதற்கு ஒரு முன் நிபந்தனையாக
IRA நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக
IMC
உறுதிபடுத்த வேண்டும் என்று யூனியனிஸ்டுகள் வற்புறுத்தினர்.
டிசம்பர் 24-25 சம்பவங்கள் தொடர்பாக ஜனவரி 1 இல்
Observer
வெளியிட்டிருந்த செய்தியில் டிசம்பர் கடைசிவாரத்தில்
IRA உறுப்பினர்கள் பலர் தொடர்பு கொண்டதாகவும் அவர்கள்
குடியரசு தலைமைக்குள் ஒரு குழு முகவர்கள் செயல்பட்டு வருவது குறித்து கவலை கொண்டிருந்ததாகவும்
தெரிவித்தது.....டெனிஸ் டொனால்சன் இரண்டு தசாப்தமாக ஒரு பிரிட்டீஸ் முகவராகவும் ஸ்டோர்மொண்டிலுள்ள
சின் ஃபைன் முதன்மை நிர்வாகியாக இருந்தவரின் சமீபத்திய இரகசிய செய்திகள் அம்பலமானது தொடர்பாக
IRA
"முற்றிலும் குழப்பத்தில்" இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஒரு மேலும் மூன்று முகவர்கள் இருப்பதும்
IRA உறுப்பினர்
குழுவால் உறுதிப்படுத்தப்பட்டது. கிறிஸ்துமஸ் காலத்தில் அவர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றி போலீசாருடன்
தொடர்பு கொண்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்''.
IRA குழுவைச் சார்ந்த ஒருவர்
கூறியதை அந்த செய்தி பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. ''அந்த அமைப்பை சேர்ந்த எவரும் கூட்டங்களில் கலந்து
கொள்வது பற்றி இனி கவலைப்படுவதில்லை ஏனெனில் யாரை நம்புவது என்று எவருக்கும் தெரியவில்லை.
தொண்டர்கள் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை தெரியாமலும் அடுத்து யார் ஒரு தகவல்
கொடுப்பவர் என்று வெளியேற்றப்படுவார் அல்லது எவ்வளவு நாட்களாக இது நடைபெற்று கொண்டிருக்கிறது என்று
தெரியாமல் உள்ளனர்''.
அந்த மூவரும் ''குடியரசு-சார்பு பத்திரிகைகள் கிறிஸ்மஸ் தினத்திலும் கிறிஸ்மஸ்
முன்னரும் தங்களது விஜயம் பற்றி வெளியிட்டிருந்த செய்தி, குடியரசு இயக்கத்தை மேலும் ஸ்திரமற்றதாக்குவதற்கு
PSNI
இனால் மேற்கொண்ட விரிவானதொரு சதித்திட்டமாகும்'' என்று
Observer
தெரிவித்தது.
அரசு ஊடுருவல் தொடர்பாக சின் ஃபைன் மெளனம்
பிரிட்டனின் ஊடகங்கள் சின் ஃபைனை இழிவுபடுத்துவதற்கு உண்மையில் பயன்படும்
சம்பவங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது, ஸ்டோர்மொண்ட் வீழ்ச்சியின் விளைபயனை நுணுக்கமாக ஆராய்வதற்கு
தவறிவிட்டதற்கும் மற்றும் இதற்கு அரசாங்கத்தான் பொறுப்பு என்று கோரிக்கை விடுவதிலும் இருந்து தவறியதற்கு
எதிர்மாறாக உள்ளது. எப்படியிருந்தாலும் சின் ஃபைனிலும் மற்றும்
IRA இனுள்ளும் அரசு ஊடுருவியிருப்பது அயர்லாந்து மற்றும் பிரிட்டன் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக
உரிமைகளுக்கு ஒரு ஆபத்தான அச்சுறுத்தலாகும். மற்றும் சின் ஃபைனின் எதிரிகள் இந்த பிரச்சனையை
சுரண்டிக்கொள்வதற்கு அந்த இயக்கத்தின் சாக்குப்போக்கு சரியானதல்ல -இந்த ஒட்டு மொத்த விவகாரமும்
வெறுமனே மாசுபடுத்தும் பிரச்சாரம் என்றும் ஒவ்வொருவரும் கண்டிப்பதற்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் உயர்
மட்டங்களில் ஊடுருவலுக்கு சாத்தியமில்லை என்றும் அது மீண்டும் மீண்டும் கூறிவந்தது.
IRA உள்நாட்டு பாதுகாப்பு துணை
தலைமை அதிகாரி பிரெட்டி ஸ்காப்பாடிசி ஒரு பிரிட்டனின் முகவர் என்ற தகவல் வெளி வந்து இரண்டு ஆண்டுகளுக்கு
பின்னர் டொனால்ட் சென் விவகாரம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. டொனால்டுசென்னும் ஸ்காப்பாடிசியும்
இருவருமே அயர்லாந்து குடியரசு இயக்கத்தில் முன்னணி பதவிகளை வகித்தவர்கள் அதே நேரத்தில் பிரிட்டனின்
உளவாளகிளாக பல தசாப்தங்களாக செயல்பட்டு வந்திருக்கிறார்கள். ஸ்காப்பாடிஸ்ஸி தகவல் கொடுப்பவர்களை
களை எடுக்கும் பொறுப்பில் இருந்ததாக கருதப்பட்டது. டொனால்ட்சன் அந்த அமைப்பின் முன்னணி கட்டமைப்பு
மற்றும் சிந்தனையாளர் குழுமத்தில் ஓர் அங்கமாகவே செயல்பட்டு வந்தவர் அவற்றின் தற்போதைய தலைமையுடனும்
அமெரிக்க மற்றும் சர்வதேச அவற்றின் தலைவர்களோடு நெருக்கமாக கூட்டணியினராக உள்ளவர். அப்படியிருந்தும்
அந்த இருவரும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சம்பள பட்டியலில் இருந்தனர்.
தெற்கு பெல்பாஸ்டின் ஒரு முன்னாள்
IRA
தலைவர் அந்தோனி மெக்கின்டயர் கூறியதாக டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்: '' நான்
IRA இல்
சேர்ந்தபோது நான் சில நேரங்களில் பிரிட்டன் இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு ஒன்றில் நான் சேர்ந்தது போன்ற
உணர்விற்கு உட்பட்டேன். Loyalists
களிடையே நடைபெற்றது போன்று
IRA இனுள்
விரிவான ஊடுருவல் நடைபெற்றது தெளிவானதாகும்.
IRA இனுள் முகவர்களை கையாண்டு
வந்த ஒரு முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியான மார்டின் இங்கிராம் டைம்சிடம் கூறியது: ''
சின் ஃபைன் தலைவர்களான மார்டின் மேக்கின்னஸ் மற்றும் ஜெர்ரி ஆடம்ஸூம் பல ஆண்டுகளுக்கு மேலாக
IRA இனுள் பிரிட்டனின் முகவர்களை அலட்சியமாக வளர்த்து வந்தனர்.
தான் பணியாற்றி வந்த படை ஆராய்ச்சி பிரிவு (Force
Research Unit) குடியரசுகட்சியின் தலைமை அடிப்படை
பாதுகாப்பு நடைமுறைகளை புறக்கணித்து விட்டது என்ற உண்மையை திறமையாக சுரண்டிக்கொண்டார்'' என்று அவர்
குறிப்பிட்டார்.
IRA இன் புலனாய்வுத் துறையை
ஒரே ஒரு முகவரான பிரெட்டி ஸ்காப்பாடிசி 20 ஆண்டுகளுக்கு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு ஆடம்சும்
மேக்கின்னசும் அனுமதித்து விட்டனர் என்று இங்கிராம் தெரிவித்தார்.
''மெக்கின்னஸ் அண்மையில்
IRA இல் சேர்ந்த மற்றொரு முகவரான பிராங் ஹெக்கார்டியை
இதர மூத்த IRA
உறுப்பினர்களின் ஆலோசனைக்கு எதிராக ஆயுதங்களுக்கு பொறுப்பு வகிக்கும் ஒரு உயர் பதவியை
கொடுத்தார்.''.
குடியரசுக்காரர்கள் உட்பட இதர பல விமர்சகர்கள்
தனது சொந்த பாதுகாப்பை ஒரு சிறிய மாறாத குழு தலைமை
தாங்க IRA
அனுமதித்தை IRA
இன் முட்டாள்தனத்தை காட்டுவதாக குறிப்பிட்டிருக்கின்றனர். இதனால் அந்த
குழு பிரிட்டனின் ஊடுருவலுக்கு ஒரு முக்கிய இலக்காயிற்று என்றனர்.
ஒரு செய்தி பத்திரிகை தந்துள்ள தகவலின்படி நீண்டகாலமாக குடியரசு இயக்கத்தில்
செயல்பட்டு வருகின்ற 15 பேர் இன்னும் அம்பலத்திற்கு வரவிருக்கின்றனர் மற்றும் பல குடியரசு இயக்க
வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளதைப் போல் உச்சாணியில் இருக்கும் எவரையோ பாதுகாப்பதற்காக
டொனால்ட்சன் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார் என்று கூறின.
Sunday Tribune இல்
ஜனவரி 8 அன்று வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரை சந்தேகங்கள் குடியரசு இயக்க தலைமை வரை எந்த
அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள ஸ்கொட்லான்ட் யார்ட் மற்றும் பழைய பெய்லியில் 1973 இல்
நடைபெற்ற கார் குண்டு வெடிப்புகளில் பங்கெடுத்துக் கொண்டதாக மரியன் மற்றும் டோலர்ஸ் பிரைஸ் ஆகிய
இரண்டு இளம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது மரியன் பிரைஸ் 32வது பிராந்திய இறையாண்மை
குழு என்கிற தீவிர குடியரசு இயக்கத்தின் ஒரு ஆதரவாளர்
Tribuneக்கு
அளித்த பேட்டியில், 1973இல் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக தனது சந்தேகங்களை
வெளிப்படுத்தியிருக்கிறார். தனக்கும் தனது சகோதரிக்கும் மற்றும் இதர மூன்று பேரும் அறிந்திருக்கக் கூடிய தகவல்
பிரிட்டனின் போலீசாருக்கு தெரிந்திருக்கிறது.
''ஒருவரை உடனடியாக நாங்கள் தள்ளுபடி செய்துவிட முடிந்தது. இரண்டாவதாக
இடம் பெற்றிருந்தவர் ஜெர்ரி ஆடம்ஸ் மற்றும் அவர் ஒரு தகவல் கொடுப்பவர் என்று நம்ப மறுத்தோம்.
மூன்றாவது நபர் டிக்கி கிளன்ஹோல்ம்ஸ்''என்று பிரைஸ் குறிப்பிட்டார்---- கிறிஸ்துமஸ் காலத்தில் போலீசார்
விசாரணை நடைபெற்றப்பொழுது சின் ஃபைன் ஒரு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக இவர்களில் ஒருவர்
குறிப்பிட்டதை மேற்கோள்காட்டினார்.
''ஒரு மத்தியஸ்தர் மூலம் எங்களது சந்தேகங்களை ஆடம்சுக்கு நாங்கள்
தெரிவித்தோம்'' என்று தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கிளன்ஹோல்மஸ் ஒரு உளவுகொடுப்பவராக
இருந்தார் என்று தான் குற்றம் சாட்டவில்லை என்பதை வலியுறுத்தி, ஆனால் தனது கவலைகளை ஏன் ஆடம்ஸ்
மறைத்தார் என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டார்.
அயர்லாந்திலும் சர்வதேசரீதியாகவும் டொனால்ட்சனின் சொந்த பங்களிப்பு
தொடர்பாக மேலும் தகவல்கள் வந்துள்ளன. அதே
Tribune கட்டுரை
South Downலிருந்து
வந்த சின் ஃபைன் ஒரு முன்னாள் உறுப்பினர் மார்டின் கன்னிங்ஹாம் கூறியதை வெளியிட்டிருக்கிற சுதந்திர
சிந்தனையுள்ள எவரையும் அல்லது கேள்விகள் எழுப்புகின்ற எவரையும் அல்லது தலைமையிலிருந்து வருகின்ற
கட்டளைகளை எதிர்க்கின்ற எவரையும் டொனால்ட்சன் ஓரங்கட்டிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
''டொனால்ட்சனும் அவரது குழுவினரும்
South Down
பகுதியில் 40 பேரை கட்சியிலிருந்து விரட்டி விட்டனர். அவர் ஒரு சர்வாதிகரத்தை நடத்தி வந்தார் மற்றும்
முன்னாள் உண்ணாவிரதமிருந்த ஒருவர் உட்பட ஏராளமான நல்லவர்களை படுமோசமாக நடத்தினார். அவர் ஊட்டி
வளர்த்த மற்றும் பரிந்துரைத்த பலர் இப்போது பெருமளவில் சந்தேகத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்"
டிசம்பர் 24இல், வெளியிடப்பட்ட
Irish Times
அமெரிக்காவிலுள்ள சில அயர்லாந்து குடியரசு ஆதரவாளர்கள், முற்றிலுமாக டொனால்ட்சன் னின் பங்களிப்பு பற்றி
வியப்படையவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. பிரிட்டீஷாரோடும், யூனியனிஸ்டுகளோடும் அதிகாரங்களை பகிர்ந்து
கொள்வது நோக்கி எதிர்கால பேரங்கள் தொடர்பாக சின் ஃபைன் தலைமையின் நிலைப்பாட்டை
எடுத்துரைப்பதற்காக, 1980களின் கடைசியில் டொனால்ட்சன் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். அந்த
காலகட்டம் முழுவதிலும் டொனால்ட்சன் தலையிட்டு, ஆயுத போராட்டம் தொடரவேண்டும் என்று விரும்பிய
தீவிரவாத குடியரசு இயக்கத்தினரை தனிமைப்படுத்தினார். டொனால்ட்சனின் கட்டளைப்படி ஒட்டுமொத்த அமெரிக்க
இயக்கம் மறுசீரமைக்கப்பட்டது.
அமெரிக்காவை தளமாகக்கொண்ட முன்னாள் குடியரசு கேபிரியேல் மெகாஹி
Timesசிற்கு
தெரிவித்ததன்படி தங்களது ஒரு முக்கிய அரசியல் வளர்ச்சி கட்டத்தில் குடியரசினரிடையே நடைபெற்ற சூடான
விவாதங்களில் தவிர்க்க இயலாத, பல சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக, சுட்டிக்காட்டியுள்ளார். பிராங்க்சில்
FBI
அதிகாரிகளுக்கு டொனால்ட்சன், மதுபானங்களை வாங்குவதை பார்த்த மெகாஹி: "அந்த நிமிடத்திலிருந்து ஏதோ
தவறு நடந்திருக்கிறது, என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது." என்று அவர் விளக்கியுள்ளார்.
நொராய்டில் முன் பின் அறிந்திராத புதிய உறுப்பினர்களை டொனால்ட்சன் கண்டு
பிடித்தார், அவர்கள் சின் ஃபைனிற்கு நிதி திரட்டினர். அவர்கள் காட்சிக்கு தோன்றிய வேகத்தில் மறைந்து
விட்டனர். நம்பகத்தன்மையில்லாதவர்கள் என்று தெரிந்த குடியரசு இயக்கத்தினரோடு பணியாற்றுமாறு மெகாஹியை
டொனால்ட்சன் கேட்டுக்கொண்டார்-----அதற்குப் பின்னர்
IRA இராணுவ கவுன்சிலில் அந்த நம்பகத்தன்மையில்லாத
நபர்களை பயன்படுத்தியதாக மெகாஹியை கண்டித்தார்.
டொனால்ட்சனை ஒரு கார் நிறுத்தும் இடத்தில் மெகாஹி எதிர்கொண்டார்:
"இங்கே, நீங்கள் வந்திருப்பது ஏதோ ஒரு இரகசிய செயல்திட்டத்திற்காக... அது என்ன என்று எனக்கு
தெரியாது."
அத்தகையதொரு சூழ்நிலையில் பலதசாப்தங்களாக, தனது இயக்கத்தில் விரிவான
அடிப்படையில் ஊடுருவல் நடந்திருக்கிறது என்பது தொடர்பான குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக கடுமையாக
எடுத்துக்கொள்ள சின் ஃபைன் இயக்கம் மறுத்துவருவது மன்னிக்கக்கூடியதுதான். புலன் விசாரணைகள்
நடைபெற்றுவருவதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் கண்டுபிடிக்கப்படுகின்ற எந்த முகவர்களும் மூச்சுவிடாமல்
ஓரங்கட்டப்பட்டுவிடுவார், சின் ஃபைன் நம்பகத்தன்மை மேலும் பாதிக்கப்படாது தவிர்ப்பதற்காக பெயர்குறிப்பிட்டு
கண்டிப்பதற்கு பதிலாக கண்டுபிடிக்கப்படுகின்ற எந்த முகவர்களும் மூச்சுவிடாமல் ஓரங்கட்டப்பட்டுவிடுவர்.
டொனால்ட்சன் விவகாரம் ஜனநாயக உரிமைகள் மிகவும் ஆபத்தான அளவிற்கு சிதைக்கப்பட்டு
வருவது குறித்து கவலைப்படுபவர்கள் அனைவரும் முக்கியமான பிரச்சனைகளை எழுப்புகின்றனர் மற்றும்
தொழிலாளவர்க்கத்திற்கு எதிராக அரசு படைகளினால் மேற்கொண்டுவரும் சதிச்செயல்கள் பற்றியும் பிரச்சனைகளை
எழுப்புகின்றனர். அவற்றை மூடிமறைத்துவிட அனுமதித்துவிடக்கூடாது. சின் ஃபைனிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டு
வந்த தந்திரங்கள் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அனைவருக்கும் எதிராகவும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும்.
பிரிட்டன் ஆக்கிரமித்துள்ள ஈராக்கில் அதே தற்போது போன்ற தந்திரோபாயங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன
என்பதில் உண்மையிலேயே சந்தேகத்திற்கு இடமில்லை.
இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, மேலும் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்காத
அளவிற்கு முடிந்தவரை சின் ஃபைன் இயக்கம் கீழ்கண்ட வினாக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமும் அவசரமும்
ஆகும்.
* தங்களது அதிகாரிகளில் எவர் இன்னும் பிரிட்டன் முகவர்களாக உள்ளனர்?.
* ஸ்கப்பாடிசியின் முக்கிய பங்கை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, வேவு
பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மற்றும் பாதுகாப்பு சேவைகள் சுட்டிக்காட்டிய எத்தனை
குற்றமற்ற உள் பாதுகாப்பு ஊழியர்கள் கொலை செய்யப்பட்டனர்?
* தனது மேலதிகாரிகளுக்கு IRA
இல் மட்டுமல்ல, அவர் தொடர்பு கொண்டிருந்த மற்ற அமைப்புக்கள் பற்றியும் டொனால்ட்சன் எந்தத் தகவல்களை
தந்தார்?
*இனவாத பதட்டங்களை தூண்டிவிடும் நோக்கிலும் மற்றும் அரசு ஒடுக்குமுறையை சட்டபூர்வமாக
நியாயப்படுத்தும் வகையிலும், எந்த IRA பயங்கரவாத
நடவடிக்கைகள் நீடிக்க அனுமதிக்கப்பட்டது அல்லது பிரிட்டனின் முகவர்களால் தூண்டிவிடவும் பட்டன?
Top of page |