WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
European-wide dock workers strike against port deregulation
துறைமுகங்கள் கட்டுப்பாட்டில் இருந்து அகற்றப்படுவதற்கு எதிராக ஐரோப்பா முழுவதும்
துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
By Antoine Lerougetel
18 January 2006
Use this version
to print |
Send this link by email |
Email the author
பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் 10,000 துறைமுகப் பணியாளர்களின் ஆர்ப்பாட்டம்
ஜனவரி 16ல் நிகழ்ந்தபோது, அது போலீசாருடன் வன்முறையான மோதலில் முடிவுற்றது. துறைமுகத் தொழிலாளர்கள்
ஐரோப்பியப் பாராளுமன்றத்தை நோக்கி Port
Package II என்னும் சட்டவரைவிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து
அணிவகுத்துச் சென்றனர். இந்தச் சட்டவரைவு ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து துறைமுகங்களை
அகற்றுவது, வேலையிழப்புக்கள், கடினமான வேலைச் சுமைகள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றின்மீது கடுமையான
தாக்குதலுக்கு வழிவகை செய்யும்.
போலீசார் கண்ணீர்ப் புகையையும், நீரைப் பீச்சியடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக்
கலைக்க முயன்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களோ பட்டாசுகளையும், கற்களையும் பாராளுமன்றக் கட்டிடத்தின் மீது
எறிந்து 100 சதுர அடி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து
பிரதிநிதிகள் வந்திருந்தனர். பிரான்ஸ், பெல்ஜியம் ஆகியவற்றில் இருந்து நிறைய தொழிலாளர்கள் வந்திருந்ததைத்
தவிர, 1,700 ஸ்பெயின் நாட்டுத் துறைமுகத் தொழிலாளர்களும் ஸ்ட்ராஸ்போர்க் தெருக்களில் குழுமியிருந்தனர்.
இதைத்தவிர ஜேர்மனி, போலந்து, கிரேட் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்தும் துறைமுகத் தொழிலாளர்கள்
வந்திருந்தனர்.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் (MEPs)
மீது, இந்த சட்ட வரைவிற்கு எதிராக வாக்களிக்க அழுத்தம்
கொடுப்பதற்காக ஐரோப்பிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் கூட்டமைப்பினால் அழைப்புக் கொடுக்கப்பட்ட
இந்த எதிர்ப்பு மிகப் பெரிய அளவில் ஆதரவைப் பெற்று பல ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி,
துறைமுக நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்தது. பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களும் வேலநிறுத்தங்களும் சோசலிஸ்ட்,
கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த தொழிற்சங்கங்களின் ஆதரவைக் கொண்டிருந்தன.
பிரான்சில், மார்சே துறைமுகம் முற்றிலும் முடக்கம் அடைந்து 10 கப்பல்கள்
வெறுமே நின்றிருந்தன. Bordeaux, La
Rochelle, Rouen, Brest, Saint Nazaire ஆகிய
அட்லான்டிக் பகுதித் துறைமுகங்கள் முற்றிலும் அல்லது பெரும்பாலும் ஸ்தம்பித்திருந்தன. முழு வேலைத் தொகுப்பிலும்
இருந்த 2,000க்கும் மேற்பட்ட துறைமுகப் பணியாளர்கள் பிரான்சின் இரண்டாம் பெரிய துறைமுகமான
Le Havre இல்
48 மணி நேர வேலை நிறுத்தத்தை ஆரம்பித்திருந்தனர். வடக்குத் துறைமுகமான டன்கிர்க்கில் ஓரளவு வேலை
நிறுத்தம் இருந்தது. இந்து சமுத்திர பிரெஞ்சு தீவான
Reunion ல் 600 துறைமுகத் தொழிலாளர்கள் தங்கள்
ஐரோப்பியத் தொழிலாள நண்பர்களுடன் ஒற்றுமை கருதி வேலை நிறுத்தம் செய்தனர்.
ஸ்பெயினில், சோசலிஸ்ட் கட்சி
UGT (General Labour Union)
மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவுடைய CC.OO (தொழிலாளர்கள்
குழுக்கள்) ஆகியன, இந்த கண்டன எதிர்ப்பிற்காக அணிதிரண்டவர்களுடன் இணைந்து செயலாற்றியது. நாட்டின் 28
துறைமுகங்களிலும் வேலைநிறுத்தம் கிட்டத்தட்ட 100 சதவிகிதமும் முழுமையாக இருந்ததாக
UGT உடைய
செய்தித் தொடர்பாளர் அறிவித்தார். Barcelona
and Tarragona என்னும் ஸ்பெயினின் முக்கிய தானிய
ஏற்றுமதி, இறக்குமதித் துறைமுகத்தில் அனைத்து வேலைகளும் நின்று போயின.
போர்த்துகல்லில் வேலைநிறுத்தம் பரந்திருந்தது. ஆனால், தொழிற்சங்கத் தலைவர்
Joai Alves
செய்தியாளரிடம் தெரிவிக்கையில், தலைமைப்பீடம் ஒரு பெயரளவுப் பணியை பாதுகாப்பு நிமித்தம் ஏற்பாடு
செய்திருந்தது என்றும், Oporto
வில் உள்ள Leixoes
துறைமுகம் செயல்படும் என்றும் அதிற்குக் காரணம் சரக்குகள் மற்ற துறைமுகங்களுக்குத் திருப்பப்பட்டுவிடும் என்ற
அச்சம் இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
பெல்ஜியத்தில், ஐரோப்பாவின் இரண்டாம் சுறுசுறுப்பான துறைமுகமான
Antwerp TM,
2000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். ஒரு மிகப்
பெரிய பிரதிநிதிகள்குழு ஸ்ட்ராஸ்பேர்க் ஆர்ப்பாட்டத்திற்குப் பங்கு பெறப் பயணம் செய்தனர்.
ஹாலந்தில், ஐரோப்பாவின் பெரிய துறைமுகங்களான
Rotterdam
மற்றும் Amsterdom
ஆகிய இரண்டும் வேலைநிறுத்தத்தில் இருந்தன.
கிரேக்கத்தில், வணிக கடல்பிரிவு அமைச்சகம் மிகப் பெரிய துறைமுகமான
Piraeus மற்றும்
வடக்கில் உள்ள Thessaloniki,
Heraklion
ல் உள்ள Cretian
ஆகிய துறைமுகங்கள் இரண்டும் 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
ஜேர்மனியில் ஜனவரி 11 அன்று 4,500 துறைமுகத் தொழிலாளர்கள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். Port Packhage
II க்கு எதிரான இயக்கத்தில் ஹாம்பேர்க்கும்
பாதிப்பிற்குள்ளாயிற்று.
ஸ்வீடனில் 1,500 துறைமுகத் தொழிலாளர்கள் ஒரு நான்கு மணி நேர வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
டென்மார்க்கில் 1,300 துறைமுகத் தொழிலாளர்கள் கோபென்ஹகனில்
வேலைநிறுத்தம் செய்தனர்.
இப்பொழுது திட்டமிடப்பட்டுள்ள சட்டம் ஐரோப்பிய பெருவணிகத்தினால்
மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய உந்துதல் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் துறைமுகங்கள் தடையற்ற வகையில்
முதலாளித்துவச் சந்தைக்கு ஏற்ப, பாரிய ட்ரான்நாஷனல் நிறுவனங்களின் நலன்களுக்கேற்ப நடக்க வேண்டும் என்று
கூறுகிறது. French Libération
பத்திரிகைக்கு
டிசம்பர் 16 அன்று ஹாம்பேர்க் துறைமுகத் தொழிலாளி
Jorg Wessels
கூறியதாவது: "ஐரோப்பாவில் தொழிற்சங்கங்கள் இன்னும் கடுமையான
போராட்டம் நடத்தக்கூடிய கடைசிக் கோட்டைகளாக தொழில்துறை துறைமுகங்கள் உள்ளன. கப்பல்
உரிமையாளர்களுக்கு தொழிலாளர்களின் வேலை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றிக் கவலை இல்லை. பணத்தை
அள்ளத்தான் அவர்கள் முயலுகின்றனர்."
துறைமுகத் தொடர்புகள் சட்டவரைவு, ஐரோப்பிய மந்திரிசபையினால் இசைவிற்கு
உட்பட்டுள்ளது. இது துறைமுகப் பணிகள் (செலுத்துதல், இழுத்துச்செல்லல், துறைமுகத்திற்குள் கொண்டுவருதல்,
சரக்கு ஏற்றுதல், இறக்குதல்) போட்டிக்கு விடப்படும் என்ற திட்டத்தைக் கொண்டிருந்தது. மார்ச் 10ல்
ஐரோப்பா-தழுவிய துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வணிக
நிறுவனங்களின் எதிர்ப்புக்கள் பல துறைமுகங்களிலும் ஏற்பட்டது. மற்றும், சமூக வெடிப்புக்கள் ஏற்படுமோ என்று
கவலைப்பட்ட அரசியல் ஸ்தாபனங்கள் சிலவற்றின் சங்கடமான நிலைமை ஆகியவை ஐரோப்பிய பாராளுமன்றத்தை
2003, நவம்பர் 20ல் சட்டவரைவை நிராகரிக்க வைத்தது. மந்திரிசபை, போக்குவரத்துக் குழு இவற்றின்
விருப்பத்திற்கு எதிராக 20 உறுப்பினர்களின் ஆதரவில்லை என்ற குறுகிய அளவில் சட்டவரைவு நிராகரிக்கப்பட்டது.
Port Package II
சட்டவரைவில் உள்ள தற்போதைய முன்மொழிவுகளானது முதல் சட்டவரைவின் உருமாற்றம் செய்யப்பட்ட
பதிப்பாகும். முதற்பதிப்பு கப்பல் உரிமையாளர்களுக்கு, அவர்களே கப்பல் தலைவர் மற்றும் உறுப்பினர்களைப்
பயன்படுத்தி சரக்குகளை ஏற்றி இறக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. தற்போதைய வரைவு ஐரோப்பிய
ஒன்றியம் அல்லாத வழித்தடங்களை விலக்குவதன் மூலம் சரக்குகளைக் கையாளுவதற்கான கப்பலின் பணியாளர்களின்
உரிமையைக் கட்டுப்படுத்தும். முன்மொழிவுகளை மாற்றி அமைப்பதில், சந்தைகள் திறப்பு "கூடுதலான வணிகத்தை
துறைமுகங்களுக்குக் கொண்டுவரும்" மற்றும் "அது துறைமுகங்களில் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும்" என்று குழு
கூறியது.
ஐரோப்பியப் பாராளமன்றத்தில் மிகப் பெரிய பிரிவான கிறிஸ்துவ
ஜனநாயகவாதிகளை சேர்ந்த MEP
ஆன Georg
Jarzembarski, ஸ்ட்ராஸ்பேர்க்கில் இந்தச் சட்டவரைவைச்
செலுத்தும்போது, புதிய விதிகள் பொது நிர்வாகங்களின் "நிதியைப் பெருக்கும்" என்றும் அதையொட்டி
துறைமுகங்களுக்கு அரசாங்க உதவி கொடுப்பது குறையும் என்றும் அதனால் இவற்றிற்கிடையே தேவையற்ற போட்டி
தடுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த சட்டம் தங்களுக்குப் பதிலாக குறைவூதிய, நிரந்திரம் இல்லாத
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் தன்மையைக் கொண்டுள்ளது என்றும், அது பணி நிலைமைகளையும், வேலைப்
பாதுகாப்பையும் அழித்துவிடும் என்றும் துறைமுகப் பணியாளர்கள் சரியாக எடை போட்டுள்ளனர். ஆன்ட்வெர்ப்பில்
உள்ள துறைமுகத் தொழிலாளர்களின் இனையத் தளம் விடுத்துள்ள எச்சரிக்கையாவது; "கோட்பாட்டளவில்,
ஐரோப்பியக் குழு தன்னுடைய திட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், குழுவிற்கு இது ஒரு முக்கிய
பிரச்சினை. இதில் 2000ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட லிஸ்பேன் உத்தி முற்றிலுமாகப் பிணைந்துள்ளது.
வேறுவிதமாகக் கூறினால், ஐரோப்பியப் பொருளாதாரத்தின் அடித்தளக் கொள்கை உள்ளது." அந்தக் கொள்கை
பெருவணிகம் மற்றும் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் இலாப நோக்கில் உள்ள அனைத்துத் தடைகளும்
அகற்றப்பட வேண்டும் என்பதேயாகும்.
இந்த இனையத் தளம் தொடர்கிறது: "துறைமுகங்களிலும், முழுமையான
பொருளாதார தாராளவாதக் கொள்கை மற்றும் போட்டி என்பது லிஸ்பேன் திட்டத்தை அடைய கண்டிப்பாக
இருக்க வேண்டும். அதாவது அமெரிக்காவை விட 2010ல் பொருளாதார வலிமை பெறுவதற்கு தொழிலாளர்களின்
வேலை நிலமைகள் தகர்க்கப்பட வேண்டும்."
"பெல்ஜியத்தில், 1972ம் ஆண்டு
Major Law
அங்கீகரிக்கப்பட்ட, பயிற்சி பெற்ற துறைமுகத் தொழிலாளர்கள்தாம் துறைமுகப் பணிகளில் ஈடுபடலாம் என்று
வலியுறுத்தியுள்ளது. ஊதியங்களும், வேலை நிலைமைகளும் கூட்டு ஒப்பந்தங்களின் மூலம் ஏற்பட்ட அனைத்துத் துறைமுகப்
பணியாளர்களுக்கும் பொருந்தும். ஐரோாப்பாவில் எல்லா இடங்களிலும்,
ILO (சர்வதேசத்
தொழிலாளர் அமைப்பு) ஒப்பந்தம்தான் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு நாடும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட
துறைமுகப் பணி பற்றியும் பதிவேட்டை வைத்திருக்க வேண்டும். தற்போதைய துறைமுகத் தொடர்புச் சட்டம் இவை
அனைத்தையும் அகற்றிவிடும்" என்று இந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருவணிகச் செயற்திட்டத்திற்கு எதிரான
ஐரோப்பா-தழுவிய இயக்கத்தின் வளர்ச்சி முற்றிலும் வரவேற்கத்தக்கது ஆகும். கடந்த ஆண்டு திட்டமிட்ட
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அரசியலமைப்பு பிரான்சின் வாக்கெடுப்பிலும்,. நெதர்லாந்திலும் "வேண்டாம்" என்று
நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது வந்துள்ளது. அது "தடையற்ற போட்டி, சிதைவற்ற போட்டி என்ற உள்
சந்தையை" ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்க வேண்டும் என்றும், "மிகப் போட்டி நிறைந்த சமூகச் சந்தைப்
பொருளாதாரம்" நிறுவப்பட வேண்டும் என்றும் விதித்திருந்தது.
இருந்தபோதிலும், கடந்த ஆண்டின் அதிகாரபூர்வ "வேண்டாம்" பிரச்சாரத்தில்
இருந்தது போலவே, ஜனவரி 16 எதிர்ப்பின் முன்னோக்குகள், ஐரோப்பிய போக்குவரத்துத் தொழிலாளர்கள்
கூட்டமைப்பின் அறிவிப்பில் வெளிவந்தவை, 39 ஐரோப்பிய நாடுகளின் 2.5 மில்லியன் போக்குவரத்துத்
தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிபலிக்கிறது. இது இப்பொழுதுள்ள தேசியப் பொருளாதாரக் கட்டுப்பாடு காக்கப்படவேண்டும்
என்று ஸ்ட்ராஸ்பேர்க்கிற்கு அழைப்பு விடுக்கிறது.
இதன் விளைவாக நல்ல நிலைமையில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராக, ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு வெளியே உள்ள குறைவூதியத் தொழிலாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் மிக
ஏழைத் தொழிலாளர்களின் மோதலுக்கு வகைசெய்யப்படுகிறது. கிழக்கு ஐரோப்பாவில் இருந்த பல தொழிலாளர்களுக்கு
வேலைநிறுத்தங்களை உடைப்பதற்காகத் தற்காலிக நியமனம் கொடுக்கப்பட்டு, மாற்றுத் தொழில் தொகுப்பாகப்
அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதுதான் கடந்த மாதம் ஐரிஸ் படகுத்துறைகளில் நடைபெற்றது. அங்கு ஐரிஸ்
தொழிலாளர்களைக் காட்டிலும் பாதி ஊதியம் கொடுக்கப்பட்டு மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து படகு
செலுத்தும் குழுத் தொழிலாளர்கள் கொண்டுவந்து பயன்படுத்தப்பட்டனர்.
SIPTP தொழிற்சங்கம்
இறுதியில், ஐரிஸ் படகுப் பிரிவினரோடு ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி அதன் உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானவர்களின்
வேலைகள் தியாகம் செய்யப்பட்டன. இருவித ஊதிய விகிதங்களும் ஏற்கப்பட்டன.
மேற்கு ஐரோப்பிய துறைமுகப் பணியாளர்களுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள்,
ஆசியா இவற்றின் தொழிலாளர்களுக்கும் இடையே பிளவுகளைக் கொண்டுவரும் துறைமுகத் தொழிற்சங்கங்களின்
கொள்கை இதே பேரழிவு விளைவுகளைத்தான் கொண்டுவரும். அனைத்துத் தொழிலாளர்களையும் தடையற்ற சந்தை
முறைக்கு எதிராகவும், சர்வதேச நிறுவனங்களுக்கு எதிராகவும் ஒரு சோசலிசத் திட்டத்தின் கீழ் ஒற்றுமைப்படுத்தும்
முன்னோக்குத்தான் இப்பொழுது அவசியமாகத் தேவையாகும். இதன் பொருள், சர்வதேச சோசலிச அடித்தளத்தில்
ஒரு இயக்கத்தை கட்டியெழுப்பி, இலாபத்திற்காக என்றில்லாமல், தேவைகளின் பூர்த்திக்காக, சமூகத்தின்
பொருளாதார இருப்புக்கள் அனைத்தும் திட்டமிட்டு அமைக்கப்பட்டு, ஐக்கிய சோசலிச ஐரோப்பா என்ற அமைப்பிற்காகக்
கொண்டுவரப்பட வேண்டும்.
Top of page
|