World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president demands media toes the line on the war

இலங்கை ஜனாதிபதி ஊடகங்களை யுத்த பாதையில் அடியெடுத்து வைக்குமாறு கோருகிறார்

By K. Ratnayake
19 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, "நாட்டின் தற்போதைய நிலைமையை" வெளிவேடமாக விளக்குவதற்காக புதன் கிழமையன்று ஊடக அமைப்புக்களின் ஆசிரியர்களையம் மற்றும் தலைவர்களையும் அழைத்து கூட்டமொன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தின் முக்கிய காரணம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாம் விரிவுபடுத்தி வரும் யுத்தம் பற்றிய அரசாங்கத்தின் பிரச்சாரத்தை நம்பிக்கையுடன் மீள் பிரசுரம் செய்யுமாறு அங்கு வருகை தந்திருந்தவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதேயாகும்.

தீவிரமான பதற்றம் இருந்துகொண்டுள்ளது என்பதே இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கான உண்மை ஆகும். இலங்கையில் ஊடகங்கள் ஏற்கனவே இந்தப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளன. ஏறத்தாழ எல்லா செய்திகளும் அரசாங்கப் பேச்சுக்கள் மற்றும் இராணுவ அறிக்கைகளையே நேரடியாக அடிப்படையாகக் கொண்டுள்ளன. யுத்தப் பிராந்தியங்களில் இருந்து வரும் நேரடி அறிக்கைகள் மிகச் சிறியதாக இருப்பதோடு ஆசிரியர் தலைப்புகளிலோ விரிவான கட்டுரைகளிலோ யுத்தத்திற்கு எதிர்ப்புக் காட்டப்படவில்லை.

இராணுவத்தின் அட்டூழியங்கள் மற்றும் பொது மக்கள் மீதான இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்கள், சாதாரணமாக புலிகளுக்கு சார்பான செய்திகளில் இருந்து மட்டுமன்றி இலங்கை கண்காணிப்புக் குழு மற்றும் பல அரச சார்பற்ற அமைப்புகளின் மூலமும் கொழும்பு மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கும் கசிந்து வருகின்றன. இதன் விளைவாக, பிரச்சார யுத்தத்தை இழப்பது பற்றிய கவலை இராணுவ வட்டாரங்களில் இருந்து வருவதோடு, "புலிகள் சார்ந்த செய்திகள் வெளியிடப்படுவதை" நசுக்குவதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனக்குத் தகுந்தவாறு தனது கூட்டத்தை ஒரு பொய்யுடன் ஆரம்பித்த இராஜபக்ஷ, இராணுவம் கலப்படமின்றி ஒரு தற்காப்பு நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளது என வலியுறுத்தினார். "இங்கு யுத்தம் இல்லை. ஆனால் எமது நிலைகளைப் பாதுகாக்கும் தேசிய நலனுக்காக படையினரின் சார்பில் பதில் தாக்குதல்கள் மட்டுமே நடத்தப்படுகின்றது," என அவர் பிரகடனம் செய்தார். யுத்தம் ஒன்று நடந்தால் "அரசாங்கப் படைகள் போராடி முன்செல்லும்" என்றும் அவர் தெரிவித்தார்.

இராணுவம் ஏற்கனவே போராடியுள்ளதோடு முன்செல்லவும் முயற்சித்துள்ளது. இராஜபக்ஷ ஜூலை 26 அன்று புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தொடக்கி வைத்தார். அவர், 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை வெளிப்படையாக மீறும் வகையில், மாவிலாறு அணைக்கட்டின் மதகைக் கைப்பற்றுமாறு இராணுவத்திற்கு கட்டளையிட்டார். இந்த நடவடிக்கைகள் "மட்டுப்படுத்தப்பட்டவை" என்றும் "மனிதாபிமான முறையிலானவை" என்றும் ஜனாதிபதி கூறிக்கொள்ளும் அதே வேளை, புலிகள் மதகைத் திறந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கிய பின்னரும் கூட, ஏனையப் பிரதேசங்களிலும் விமானப் படை புலிகளின் இலக்குகள் மீது குண்டு வீசுவதோடு மோதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இராஜபக்ஷவின் "தண்ணீருக்கான யுத்தமானது," புலிகள் பலவீனமடைந்துள்ள பிரதேசமாக இராணுவம் கருதும் கிழக்குப் பிரதேசத்தை கைப்பற்றுவதற்கான ஒரு பரந்த எதிர்த்தாக்குதலுக்கான ஒரு வெறும் சாக்குப்போக்கேயாகும். தவிர்க்க முடியாமல் மோதல்கள் ஏனைய பிரதேசங்களுக்கும் பரவுகின்றன. இராணுவம் எவ்விடத்திலும் "முன்நோக்கி செல்லவில்லை" எனில், அதற்கான காரணம் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தனது முன்னரண்களை ஆராய்ந்த அளவில் இராணுவம் குறிப்பிடத்தக்க பின்னடைவைக் கண்டதேயாகும்.

இராஜபக்ஷவின் கூட்டம் நடைபெற்று அடுத்தநாள், வடக்கு குடாநாட்டிலும் சேர்த்து முன்னைய வாரத்தில் நடந்த மோதல்களில்106 படையினர் உயிரிழந்துள்ளதாக இராணுவம் ஏற்றுக்கொண்டது. புலிகளின் போராளிகளை விரட்டுவதற்காக இராணுவத்தின் யுத்த விமானங்கள் மீண்டும் மீண்டும் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் தொடுக்கின்றன. ஐ.நா அறிக்கையின்படி, தீவின் வடக்கில் 41,000 பேர் உட்பட 150,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மோதல்கள் நேற்றும் தொடர்ந்தன.

"யுத்தம் இல்லை" என்று கூறிக்கொள்வது கேலிக்கூத்தாகும். இராணுவம் தற்காப்பு நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றது என பிரகடனம் செய்வதானது, தீவை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளிச் செல்வதில் அரசாங்கத்தின் பொறுப்பை மூடிமறைப்பதற்காக தீட்டப்பட்ட படு மோசமான பொய்யாகும். "பேச்சுவார்த்தைகளுக்கு கதவு திறந்துள்ளது" எனக் கூறி இராஜபக்ஷ தன்னை சமாதான விரும்பியாக காட்டிக்கொள்வதானது, பாசாங்கு மற்றும் சிடுமூஞ்சித்தனத்தின் துர்நாற்றத்தை கிளறிவிட்டுள்ளது. ஜனாதிபதியின் சொற்கள் அடுத்த நாள் எல்லா ஊடகங்களிலும் கடமையுணர்ச்சியுடன் வெளியிடப்பட்டிருந்ததுடன், அவற்றில் எந்வொரு விமர்சனக் கருத்தையும் காணக் கிடைக்கவில்லை.

அரசாங்கத்தின் போக்கை யுத்தத்தின் மீது இருத்தியுள்ள இராஜபக்ஷ, கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் மிகவும் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றார். "நான் எப்பொழுதும் ஊடகங்களின் நண்பனாக இருப்பதோடு புறநிலை விமர்சனங்களையும் வரவேற்கின்றேன். ஆயினும், தேசிய மற்றும் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பொறுப்பற்ற ஊடகவியலுக்கு நான் மன்னிப்பு வழங்குவதில்லை," என அவர் பிரகடனம் செய்தார். தான் தணிக்கையை விரும்பவில்லை என அவர் தெரிவித்த போதிலும், ஊடகங்கள் சுயக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தற்போதைய அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஊடகத் தணிக்கையை அமுல்படுத்தும் பரந்த அதிகாரம் இராஜபக்ஷவிற்கு உண்டு.

இராஜபக்ஷ ஏற்றுக்கொண்டது போல், "ஊடகங்களுடன் கடுமையாக நடந்துகொள்ளக் கோரும் பெரும் அழுத்தத்திற்கு" ஏற்கனவே அரசாங்கம் உள்ளாகியுள்ளது. முன்னைய ஜனாதிபதி கடுமையான தணிக்கையை விதித்ததை சிலர் தனக்கு ஞாபகமூட்டியதாக அவர் தெரிவித்தார். அண்மைய பத்திரிகை அறிக்கைகளின்படி, சில ஊடகப் பிரிவுகள் புலிகளுக்கு "தேவைக்கு அதிகமான பிரபல்யத்தைக்" கொடுப்பதாக பல உயர்மட்ட ஜெனரல்கள் தேசியப் பாதுகாப்புக் கூட்டத்தில் கடந்த மாதம் முறைப்பாடு செய்துள்ளனர். ஜனாதிபதி பொறுப்பானவர்களை உடனடியாக அழைத்து தமது செய்திகளை திருத்துமாறு கட்டளையிட்டார்.

பொறுப்புவாய்ந்த செய்தி வெளியீடு என இராணுவம் எதனைக் கருதுகிறது என்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையம் ஒரு உதாரணமாகும். கடந்த திங்கட் கிழமை, புலிகளின் கட்டுப்பாட்டிலான முல்லைத் தீவு மாவட்டத்தில் ஒரு பழைய அநாதைகள் இல்லத்தின் மீது குண்டு வீசிய விமானப்படை 61 பாடசாலை மாணவர்களை கொன்றது. புலிகளின் படி, இந்த மாணவர்கள் இரண்டு நாட்களாக பயிற்சிப் பட்டறையில் ஈடுபட்டிருந்தனர். கண்காணிப்புக் குழு மற்றும் சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் (யுனிசெஃப்) பிரதிநிதிகளும் ஸ்தலத்திற்கு சென்றிருந்ததோடு உயிரிழந்தவர்கள் பிரதானமாக இளம் பாடசாலை சிறுமிகள் என்பதையும் உறுதிப்படுத்தினர். இராணுவ உபகரணங்களோ அல்லது பயிற்சிக்கான ஆதாரங்களோ அங்கு கிடைக்கவில்லை.

அரசாங்கமும் இராணுவமும் தாம் புலிகளின் பயிற்சி முகாம் மீதே குண்டு வீசியதாகவும் உயிரிழந்தவர்கள் "சிறுவர் போராளிகள்" எனவும் இன்னமும் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றன. அதன் இணையத்தில், "உயர்ந்தளவில் வகைப்படுத்தப்பட்ட வீடியோ படத்தை" இராணுவம் வெளியிட்டுள்ளது. இது "சீருடை அணிந்த புலி உறுப்பினர்கள் பயிற்சிபெறுவதையும், பெருமளவிலான காயமடைந்த புலி உறுப்பினர்களை காப்பாற்றுவதற்காக உருமறைப்புச் செய்யப்பட்ட வாகனங்களும் ஏனைய வாகனங்களும் உள்ளேயும் வெளியேயும் விரைவதையும் தெளிவாகக் காட்டுவதாக" இராணுவம் கூறிக்கொள்கின்றது. இந்த மங்கலான ஒளி தொகுப்பைப் பார்க்கும் ஒருவரால், இந்த அறிக்கை கேலிக்கூத்தானது என்பது புரியும். கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ஃப் ஹென்ரிக்சன் அடக்கமாக குறிப்பிட்டது போல், "வீடியோ படங்கள் முடிவற்றவையாக இருந்தன."

இராணுவம் இன்னமும் இந்த அட்டூழியத்தை மறுப்பதோடு விமானத் தாக்குதல்களில் 300 க்கும் அதிகமான புலி உறுப்பினர்களைக் கொன்றதாகவும் கூறிக்கொள்கின்றது. இந்த இணைய அறிக்கையின் ஒரு கொடுமையான நோக்கு என்னவெனில், அதனது பொய்களை மறுக்கும் எல்லா முயற்சிகளையும் அது "புலிகளுக்கு சார்பான பிரச்சாரத்தின் போலிக் கூற்றுக்கள்," என வகைப்படுத்துகிறது. நம்பத்தகுந்த வகையில், கண்காணிப்புக் குழு, யுனிசெஃப் மற்றும் உறுதியான அணுகுமுறை அற்ற அறிக்கையை வெளியிட்ட ஐ.நா. வாலும் வழங்கப்பட்ட ஆதாரங்களுக்கும் இந்தக் கருத்து சேரும். இராணுவம் கருதுவது போல், அதனது பிரச்சாரத்தை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளாத எவரும் எதிரிகளின் முகாமில் உள்ளவர்கள் ஆவர்.

இராணுவம் மற்றும் பலவித புலி விரோத ஆயுதக் கும்பல்களில் உள்ள அவர்களின் பங்காளிகள் மற்றும் சிங்கள தீவிரவாதிகளும், வாய்மூலமான அச்சுறுத்தல்களோடும் கடுமையான தணிக்கைக்கு அழைப்புவிடுப்பதோடும் நின்றுவிடப் போவதில்லை. ஊடகங்கள் மீதான, குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மீதான சரீர ரீதியான தாக்குதல்களும் உக்கிரமடைந்துள்ளன.

செவ்வாயன்று, தமிழ் நாளிதழான உதயன் பத்திரிகையின் விநியோகஸ்தரான சதாசிவம் பாஸ்கரன், கடுமையான ஊரடங்கு சட்டம் ஒரு மணிநேரம் சுருக்கமாகத் தளர்த்தப்பட்டிருந்த போது யாழ்ப்பாண நகரில் செய்தித்தாளை விநியோகித்துக் கொண்டிருந்த வேளை சுட்டுக்கொல்லப்பட்டார். நகரம் ஏறத்தாழ இராணுவச் சட்டத்தின் கீழ் இருக்கும் நிலையில், இந்தப் படுகொலை பெரும்பாலும் நிச்சயமாக படையினரால் அல்லது அதன் பங்காளிகளாலேயே நடத்தப்பட்டிருக்கக் கூடும். பாஸ்கரன் இந்தாண்டு கொலை செய்யப்பட்ட நான்காவது உதயன் ஊழியராவார். அதே தினம், உதயன் பத்திரிகையின் கொழும்பு பதிப்பான சுடர் ஒளி அலுவலகத்திலும் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஊடக சுதந்திரத்தின் மீதான இத்தகைய கீழ்த்தரமான தாக்குதல்கள் பற்றி, ஊடகப் பிரதிநிதிகளுடனான இராஜபக்ஷவின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் கிடையாது. இந்தக் கூட்டத்தை அடுத்து ஊடகங்களில் விமர்சனக் கருத்துக்கள் மிகக் குறைவாக இருப்பதானது எவரும் இந்தப் பாதையில் இருந்து வெளியேறப் போவதில்லை என்பதையே தெளிவுபடுத்தியுள்ளது.

Top of page