World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSRUkraine: Constitutional crisis deepens as Orange parties jostle for power உக்ரைனில் ஆரஞ்சுக் கட்சிகள் அதிகாரத்திற்கு நெருக்கியடிக்கையில் அரசியலமைப்பு நெருக்கடி அதிகரிக்கிறது By Niall Green பிராந்தியக் கட்சி, கம்யூனிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்டுகளின் கூட்டணி உக்ரைன் பாராளுமன்றத்தில் (Rada) பெரும்பான்மையை கொண்டிருப்பது, ஜனாதிபதி விக்டர் யுஷ்செங்கோவ் மற்றும் யூலியா திமோஷிங்கோ என்னும் "ஆரஞ்சுப் புரட்சியில்" தலைவர்களால் ஒரு அரசாங்கம் அமைப்பதை தொடர்து தடுக்கின்றது. பிராந்தியக் கட்சி என்பது பாராளுமன்றத்திற்கு மார்ச் மாதம் நடந்த தேர்தல்களில் 32 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி அடைந்தது. திமோஷெங்கோவின் (அதே பெயருடைய?) கட்சி 22 சதவிகிதத்தை பெற்று இரண்டாவது இடத்தையும், யுஷ்செங்கோவின் எமது உக்ரைன் (Our Ukraine) மிகவும் குறைந்த வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தன. அரசியலமைப்பின்படி, ஜூலை 24 நள்ளிரவு வரை பிராந்தியக் கட்சி தலைவர் விக்டர் யானுகோவிச்சை நாட்டின் பிரதம மந்திரியாக ஒப்புதல் அளித்தல் அல்லது நிராகரித்தல் என்பதற்கு யுஷ்செங்கோவிற்கு கால அவகாசம் இருந்தது. ஆனால் புதிய அரசாங்கத்திற்கு ஒப்புதல் அளித்தல் அல்லது பாராளுமன்றத்திற்கு புதுத்தேர்தல்கள் நடத்துவது பற்றி முடிவெடுக்க தனக்கு ஆகஸ்ட் 2 வரை அதிகாரம் உள்ளது என்று யுஷ்செங்கோவ் கூறிய வகையில் முதல் காலகெடு முடிவடைந்துள்ளது. ஜனாதிபதியின் விசுவாசியும் முன்னாள் பிரதம மந்திரியுமான யூரி யெகனுரோவ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். நமது உக்ரைன் கட்சி பிராந்திய கட்சியுடன் ஒரு "பெரும் கூட்டணியை" அமைக்கக் கூடும். ரோமன் ஸ்வாரிச் என்னும் நமது உக்ரைன் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷ்ய சார்புடைய வட்டாரங்கள் கட்சி இன்னும் கூடுதலான மேற்குநாடுகள் சார்பான செயற்பட்டியலை கொண்டுள்ள யுஷ்செங்கோவை ஏற்க விரும்பினால், பின் இரு கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். "நாடு தன் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கையில் தொடர்ந்து செயல்படவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நாங்கள் ஒத்துழைக்கத் தயார்" என்று அவர் கூறினார். 2006 முடிவிற்குள் உலக வர்த்தக அமைப்பிலும், ஐரோப்பிய ஒன்றிப்பிலும் சேர்வதற்கு தொடர்ந்து உக்ரைன் முயல வேண்டும் என்றும் நேட்டோ உடன் நெருக்கமான உறவுகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பின்னர் அக்கூட்டில் சேரவேண்டும் என்றும் அவர் விளக்கினார். அதாவது இருவருக்கும் இடையே எப்படிப்பட்ட உடன்பாடு வந்தாலும் அது பிராந்திய கட்சி தேர்தல்களில் உறுதியாக நிராகரிக்கப்பட்ட கொள்கைகளை ஏற்க வேண்டும் என்பதற்கு ஒப்பாகும். 2004 தேர்தல்களில் ஜனாதிபதி வேட்பாளராக நின்று தோற்கடிக்கப்பட்ட யானுகோவிச் தலைமையில் எவ்வித அரசாங்கமும் அமைக்கப்படுவது திமோசெங்கோவினால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது; இவ்வம்மையார் தானே பிரதமராக வேண்டும் என்றும் கோரியுள்ளார். யானுகோவிச் தலைமையிலான கூட்டணி அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவதை தடுக்கும் வகையில், ஜூலை 24ம் தேதி திமோசெங்கோவின் கட்சி பாராளுமன்றத்தில் இருந்து இராஜிநாமா செய்துவிட்டது. அவர்கள் நமது உக்ரைன் கட்சியில் இருந்து 26 பிரதிநிதிகளால் வலுப்படுத்தப்பட்டால், பின் பாராளுமன்றத்திற்கு செயலாற்றுவதற்கு தேவையான மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை என்ற குறைந்த நிலைப்பாடு இல்லாமல் போய்விடும்; இதையொட்டி மறு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை யானுகோவிசை பிரதம மந்திரி பதவிக்கு வராமல் நிராகரிக்க தன்னுடைய ஜனாதிபதி அதிகாரங்களை இதுகாறும் வெற்றியின்றி பயன்படுத்திவரும் யுஷ்செங்கோ மீது மிக அதிகமான அழுத்தத்தை கொடுக்கும் ஆகும். ஒரு பல மில்லியன் உரிமையாளரும், செல்வாக்கும், செல்வமும் படைத்த தன்னலார்வ சிறுகுழுவை சேர்ந்தவரான திமோசெங்கா, 1990களில் எரிவாயு வழங்கும் சந்தை தனியார்மயமாக்கப்பட்ட நேரத்தில் செல்வத்தை சேர்த்தார். பிராந்திய கட்சி இழப்பில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலாமல் போனால் அது அவருக்கு ஒரு தனிப்பட்ட தோல்வியாகவும் அரசியல் தோல்வியும் ஆகிவிடும். பிராந்திய கட்சி தலைமையிலான அரசாங்கம் அரசியலிலும், வணிகத்திலும் பல குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை செய்திருப்பதாக அவர்மீது வழக்குத் தொடுக்கும் நிலையை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட பிளவுகளுக்கு இடையே அகப்பட்டுக் கொண்டிருக்கும் யுஷ்செங்கோ அரசியலில் ''பொறி22'' (Catch22) நிலையில் இவ்வாறு மார்ச் தேர்தல்களுக்கு பின்னர் அவருடைய கட்சி மிக மட்டமான வகையில் மூன்றாம் இடத்தை பெற்ற வகையில் தள்ளப்பட்டுள்ளார். பெரும்பாலான உக்ரைனிய வர்ணனையாளர்கள் யுஷ்செங்கோ, டிமோசெங்காவின் கோரிக்கையை ஏற்று புதிய தேர்தல்களை நடத்தினால், நமது உக்ரைன் கட்சியின் வாக்கு பங்கு விகிதம் மார்ச்சில் கிடைத்த 14 சதவிகிதத்தில் இருந்து 9 அல்லது 10 சதவிகிதமாகக் குறைந்து போகும் என்று கணித்துள்ளனர்; ஆதரவாளர்களில் பலர் தங்களுடைய வாக்குகளை பிராந்திய கட்சிக்கு அல்லது யூலியா திமோசெங்கோவின் முகாமிற்குப் போடக்கூடும் என்பது அவர்கள் கணிப்பு. அல்லது யானுகோவிச் தலைமையில் அரசாங்கம் வருவதற்கு ஜனாதிபதி ஆதரவு கொடுத்தால், அவர் ஆரஞ்சுப் புரட்சியை "காட்டிக் கொடுத்துவிட்டதாக" டிமோசிங்கோவால் சித்தரிக்கப்படுவார். இதையும்விட முக்கியமாக, யுஷ்செங்கோ ரஷ்ய சார்பு உடைய வட்டாரங்கள் கட்சியை அரசாங்கம் அமைக்க அனுமதித்தால் தன்னுடைய முக்கிய ஆதரவாளராகிய அமெரிக்காவின் ஒத்துழைப்பை இழந்து விடுவார். மேலை செய்தி ஊடகத்தில் உக்ரைனின் "ஜனநாயகச் சக்திகளுக்கு" வெற்றி என்று பாராட்டப்பட்ட ஆரஞ்சுப் புரட்சி, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பகுதிகள் அனைத்திலும் ரஷ்யாவின் செல்வாக்கை குறைக்கும் வகையில் வாஷிங்டனுடைய கருத்துக்களை ஏற்கக்கூடிய நாட்டின் உயர் தட்டினரின் பிரிவு ஒன்றை அதிகாரத்திற்கு கொண்டுவர அமெரிக்காவும் மற்றய மேலைநாடுகளும் நிதியுதவி வழங்கியும் மற்றும் அரசியல் சதியையும் ஏற்படுத்தியதை தவிர வேறு ஒன்றும் இல்லை. யானுகோவிச் அரசாங்கத்தை யுஷ்செங்கோ ஏற்பது என்பது வாஷிங்கடனுக்கு உகந்தது அல்ல; ஏனெனில் அது இப்பொழுது திமோசெங்கோதான் உக்ரைனுக்கான தன்னுடைய மூலோபாயத்தை செயல்படுத்துவதில் முக்கிய புள்ளியாக இருப்பார் என்று அடையாளம் கண்டுள்ளது. இவர் பாராளுமன்றத்தை விட்டு நீங்கிவிடுவேன் என்று எடுத்துள்ள முடிவு புஷ் நிர்வாகத்தின் ஒப்பதலை பெற்றுள்ளது என்பதற்கு இதுகாறும் எந்த நேரடிச் சான்றும் இல்லை. ஆனால் ஜனாதிபதி 2005ல் பிரதம மந்திரிப் பதவியில் இருந்து இவரை வெளியேற்றியதில் இருந்தே யுஷ்செங்கோ மற்றும் திமோசெங்கோ இருவரும் கடுமையான விரோதிகளாகத்தான் இருந்து வந்துள்ளனர்; அமெரிக்காவிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகத்தான் பிராந்திய கட்சியை அதிகாரத்திற்கு வராமல் பார்த்துக் கொள்ளும் வகையில் திமோசெங்கோ தலைமையிலான அரசாங்கம் பொறுப்பையே ஏற்றிருந்தது. உக்ரைனில் உள்ள நெருக்கடி அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளது. வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில், ஆரஞ்சுப் புரட்சி எண்ணெய், எரிவாயு இருப்புக்கள், எரிபொருள் கடத்தப்படும் முக்கிய வழிகள் உள்ள இந்தப் பகுதியில் ரஷ்ய செல்வாக்கிற்கு பெரும் அடி என்று கருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குள், உக்ரைனில் வாஷிங்டன் கொண்டுள்ள திட்டங்கள் அனைத்துமே சிதறிப் போயுள்ளன. 2004ல் ஆரஞ்சுப் புரட்சியை பற்றி பெரும் புகழாரம் சூட்டிய அமெரிக்க, ஐரோப்பிய செய்தி ஊடகங்கள் இப்பொழுது உக்ரைனில் நிலவும் நெருக்கடி பற்றிக் கிட்டத்தட்ட மெளனமே சாதிக்கின்றன. Financial Timesல் எழுதும் New America Foundation இன் மூத்த ஆராய்ச்சியாளரான அனடோல் லீவென் தற்போதைய நிகழ்வுகள் "அமெரிக்க செய்தி ஊடகத்தின் பெரும்பாலான பிரிவுகளில் மிகக்குறைவாகவே வர்ணிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, தகவல்கள்கூட பெறாமல்தான் உள்ளன. பழைய சோவியத் ஊடகம் கூட நடந்து கொண்ட விதத்தை பற்றி பெருமை கொள்ளக்கூடிய விதத்தில் இந்த மெளனம் சித்தாந்த, பூகோள-அரசியலில் பெரும் சங்கடத்தை பிரதிபலிக்கின்றது." என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய மெளனம் இருந்தபோதிலும்கூட, கீவில் எந்தப் புதிய ரஷ்ய சார்புடைய அசாங்கத்தையும் தடைக்கு உட்படுத்துவதற்கு வாஷிங்டன் ஏற்கனவே தயாராகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுடன் உயர்ந்த தொடர்புகளை கொண்டுள்ள Stratfor வலைத்தளம், ஜூலை 24ல் திமோசெங்கோவின் பணி தன்னுடைய ஆதரவாளர்களை "புதிய தேர்தலுக்கு பின்னரோ உடனடியாகவோ வரக்கூடிய, ஒரு விரோதப் போக்குடைய அரசாங்கத்திற்கு எதிராக" நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கும் என்று எழுதியுள்ளார். இக்கட்டுரை தொடர்ந்து கூறுவதாவது: "திமோசெங்காவின் ஆதரவாளர்கள் மிகுந்த ஆர்வத்தை கொண்டிருந்து பெரும்பாலும் இளைஞர்களாக இருந்தாலும், அவர்கள் மேற்கு உக்ரைன், கீவ் ஆகிய இடங்களில் மட்டுமே குவிந்துள்ளனர். இவ்வம்மையாருக்கு ரஷ்ய சார்பு அதிகம் உடைய கிழக்கில் ஏறத்தாழ எவ்வித ஆதரவும் இல்லை. அரசாங்கத்தில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு அவர் தள்ளப்படுவாரேயானால், பொதுஆர்ப்பாட்டங்கள், சாலைத் தடுப்புக்கள், வேலைநிறுத்தங்கள் அல்லது அரசியலமைப்பிற்கு முரணான ஏமாற்றுக்கள் மூலம் உக்ரைனின் அரசியல் முறையை மிகப்பெரிய வகையில் மதிப்பிழக்க செய்யும் வேலையில்தான் அவர் ஈடுபட வேண்டியிருக்கும்." இதைவிட திமோசெங்காவின் அடிப்படையிலேயே ஜனநாயக விரோத குணநலனை பற்றிய வெளிப்படையான விவரிப்பு கொடுக்கப்பட முடியாது; இதன் விரிவாக்கம்தான் அமெரிக்காவின் ஆதவுடனும், ஏற்பாடுடனும் நிகழ்ந்த ஆரஞ்சுப் புரட்சியின் தன்மையும் ஆகும். Stratfor , ''இவ்வம்மையாருடைய நடவடிக்கைகள் "உக்ரைனை ஐரோப்பிய வழியில் செலுத்தும் பாதையை அமைக்கும் உந்துதலையும் கொண்டிருக்காது, எரிபொருள் அல்லது பொருளாதாரக் கொள்கையில் சலுகைகள் பெறுவதிலும் இருக்காது. இது ஒரு தனிப்பட்ட நோக்கம். பிரதம மந்திரிப் பதவியை இழந்த வகையில், தான் மீண்டும் உயரிடத்தை பெறும் வரை அவரும் அமைதியாக இருக்க மாட்டார்; தன்னுடைய தொண்டர்களையும் அமைதியாக இருக்கவிட மாட்டார்" என்று எழுதியுள்ளது. |