World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Growing disquiet in Israel over Lebanon war

லெபனான் மீதான போரைப் பற்றி இஸ்ரேலில் வளர்ந்துவரும் அமைதியின்மை

By Mike Head
28 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

70 அமெரிக்க யூதத்தலைவர்களுடன் தன்னுடைய ஜெருசலேம் அலுவலகத்தில் ஜூலை 25 அன்று நடத்திய தனிக் கூட்டத்தில், இஸ்ரேலியப் பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் தன்னுடைய அரசாங்கம் லெபனான் போரில் இருந்து "ஓடிப் போய்விடாது" என்று சபதம் கூறினார். ஒன்றுபட்ட யூதர் சமூகங்களின் ஒற்றுமைப் பணி (United Jewish Communities Solidarity Mission) என்னும் அமைப்பினரிடம், இரண்டு மில்லியன் இஸ்ரேலியர்கள் குண்டுப்பாதுகாப்பு கூடங்களில் வாழ்ந்தாலும், நாட்டின் வடக்கில் இயல்பான வாழ்வு பாதிப்பிற்குட்பட்ட நிலையில், போர் "பெரும் வேதனையைத் தருவதாகும்" என்று ஓல்மெர்ட் கூறினார். ஆனால் நாட்டின் யூத மக்களில் 95 சதவிகிதத்தினர் போரை ஆதரித்ததாக கூறிய கருத்துக் கணிப்பையும் அவர் மேற்கோளிட்டார்.

ஓல்மெர்ட்டின் பிரகடனங்கள் ஒருபுறம் இருந்தாலும், இஸ்ரேலில் பெருகிய அமைதியின்மையின் அடையாளங்கள் காணப்படுகின்றன. 1982ல் இருந்தது போல் இதுவரை லெபனான் படையெடுப்பை எதிர்த்து வெகுஜன இயக்கம் ஏதும் இதுவரை நடைபெறவில்லை. ஆனால் போர் எதிர்ப்புக் குரல்கள் அன்றாடம் எழுகின்றன; போரின் முதலாவது மனசாட்சியினின்று பிறழாத ஆட்சேபனையாளரின் அறிவிப்பு, மற்றும் போரின் நெறி பற்றி கேள்வி எழுப்பும் செய்தி ஊடகத்தின் வர்ணனைகள் அல்லது இது பேரழிவிற்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற எச்சரிக்கைகளும் எழுகின்றன.

பாதுகாப்பற்ற லெபனிய மக்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றிய உண்மையான அச்ச உணர்வு உள்பட சில காரணிகள் இந்த அமைதியற்ற தன்மைக்கு இடமளிக்கின்றன. ஹெஸ்போல்லா போராளிகளின் எதிர்பாரா உறுதியான எதிர்ப்பு, ஹெஸ்பொல்லாவை நசுக்குவதற்கான இஸ்ரேல் விமானத் தாக்குதலின் தோல்வி, தரைப்படை போரை தேவையானதாக்கியது மற்றும் இஸ்ரேலிய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கையை அதிகமாக்குகிறது இவை பற்றி அதிர்ச்சி நிலவுகிறது. சாதாரண இஸ்ரேலியர்பால், குறிப்பாக வடக்கில், போரின் பொருளாதார சமூக தாக்கம் தொடர்பாக பூசல்களும் எழுந்துள்ளன.

லெபனானில் நிகழ்ந்த முதல் இரு வாரத் தாக்குதல்களில் ஒப்புமையில் சிறிய, ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த போர் எதிர்ப்பு அணிகளும் டெல் அவிவ், ஜெருசலம் மற்றும் ஹைபாவில் நடத்தப்பட்டன. இந்த வாரம் லெபனான் மற்றும் பாலஸ்தீனியப் பகுதிகளில் உடனடியாகப் போர் நிறுத்தம் வேண்டும் என்று கோரும் மற்றொரு ஆர்ப்பாட்டமும் ஹைபாவில் நடத்தப்பட்டது.

ஹீப்ரூ, அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட கோஷங்களை அணிவகுத்தவர்கள் எடுத்துச் சென்றனர். "போரை நிறுத்துக", "உடனடியான போர்நிறுத்தம் தேவை" மற்றும் "கல்லறைகளை தோண்டுவதைவிட கைதிகளை பறிமாற்றம் செய்யவும்" போன்ற கோஷங்கள் அவற்றில் இருந்தன. எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தவுடன் உள்ளூர் போலீசார் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்துவிடுமாறு அறிவுறுத்த, அதில் பங்கேற்ற நால்வரை காவலில் வைத்தனர். போருக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், "அரேபியர்களுக்கு மரணம்" போன்ற இனவெறி சொற்றொடர்களை உரக்கக் கூவி, ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது கல்லெறிந்தனர்; இருந்தபோதிலும் பிந்தையவர்கள்தாம் கைது செய்யப்பட்டனர்.

எதிர்ப்புக்கள் பிரதம மந்திரி இல்லத்திற்கு முன்பாகவும் நாள்தோறும் நடத்தப்பட்டன; இஸ்ரேல், காசா, மேற்குக்கரை, லெபனான் ஆகிய இடங்களில் இறப்பு எண்ணிக்கை பற்றி மகளிர் உரக்கக் கூவினர். மற்றொரு குழு ஹைபாவில் ஒவ்வொரு நாளும் கூடியது; பல நகரங்களிலும் வெள்ளியன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்தக் குழுக்களில் பல, வருகை புரியும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸிற்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டன; அவ்வம்மையாருக்கு "லெபனான் போரை உடனே முடித்திடுக" என்று அழைப்பும் விடுத்தனர். "எமது பகுதியில் நிலவும் வன்முறைக்கு அடிப்படைக் காரணம் பாலஸ்தீனிய பகுதிகளில் இஸ்ரேல் ஆக்கிரதித்துள்ளதும், ஆக்கிரமிப்பு பகுதிகளில் சிவில் சமூகம் முழுவதும் நசுக்கப்படுவதும்தான்" என அவர்கள் எழுதினர்.

இந்த வாரம் 40 இஸ்ரேலிய படத் தயாரிப்பாளர்கள் "தோழமை மற்றும் ஒற்றுமை" செய்தி ஒன்றை பாரிசில் அரேபிய திரைப்பட ஈராண்டு விழாவிற்குக் கூடியிருந்த அரபுத் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்தனர். "சந்தேகத்திற்கு இடமின்றி நாங்கள் இஸ்ரேலிய மிருகத்தனமான மற்றும் கொடூரமான கொள்கையை எதிர்க்கிறோம்; இப்பொழுது அது சமீப வராங்களில் புதிய உயரங்களை எய்தியுள்ளது. தொடர்ந்த ஆக்கிரமிப்பு, அடைப்புக்கள், ஒடுக்கப்படுதல் என்று பாலஸ்தீனத்தில் நடத்தப்படுவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. லெபனானிலும் காசாவிலும் சாதாரண மக்கள் மீது குண்டுவீசுதல் மற்றும் உள்கட்டுமானங்களை அழிப்பது எவ்விதத்திலும் நியாயமாகாது."

ஸ்டாப் சார்ஜென்ட் இட்ஜிக் ஷப்பாட் என்னும் 28 வயது தொலைக்காட்சி தயாரிப்பாளர் பாலஸ்தீனிய பகுதிகளுக்கு தயார் பணிக்கு வருமாறு நெருக்கடிக்கால உத்தரவின் பேரில் அழைக்கப்பட்டதற்கு அடிபணிய மறுத்துவிட்டபொழுது, கடந்த வாரம் முதாவது மனச்சான்றினின்றும் பிறழாத ஆட்சேபனையாளரை இப்போர் உருவாக்கியது. அங்கிருந்த படைகள் லெபனிய முன்னணிக்கு செல்ல வேண்டியிருந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராக்கெட் தாக்குதல்களை தாங்கியுள்ள ஸ்டெரோட் சிறுநகரத்தில் வாழும் ஷப்பாட் ஹாரெட்சிடம் கூறினார்:

"கசாம்ஸ் எனது சொந்த ஊரிலும் வடக்கேயுள்ள நகரங்களில் கத்யுஷாக்களும் கொல்லப்படுகையில் நான் ஏன் இப்போரில் பங்கு பெறக்கூடாது என்று மக்கள் என்னைத் தாக்குவார்கள் என்பதை நான் அறிவேன். என்னுடைய கருத்தில், நான் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகையிலான எதிர்ப்புத்தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்; ஏமாற்றுத்தனமாக கருத்துக்களை அடிப்படையாக கொண்ட, இந்த தேவையற்ற போருக்கு உள்நாடு முழுவதும் ஆதரவைத் தருகிறது என்ற போலி உணர்வை உடைக்கும்."

மறுக்கத் துணிவுகொள் எனும் இயக்கத்தில் உறுப்பினராக இருக்கும் ஷப்பட் இதற்கு முன்பு பாலஸ்தீனியப் பகுதிகளில் பணி புரிய வேண்டும் என்ற உத்தரவை மீறியதற்காக 28 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்க ஆதரவு போருக்கும் போலிக்காரணமான சிறைபிடிக்கப்பட்ட மூன்று துருப்புக்களின் குடும்பங்களும் வெளிப்படையாக பேசியுள்ளனர். ஹெஸ்பொல்லாவால் பிடிக்கப்பட்டுள்ள சிப்பாய்களில் ஒருவரின் தாயாராகிய மிக்கி கோல்ட்வாசெர் நேற்று சமாதானப் பேச்சு வார்த்தைகள் வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார். ஜூலை 18ல் குடும்பங்களின் கூட்டம் நடைபெற்ற பின், ஹமாஸால் கைப்பற்றப்பட்ட கிலட்டின் தந்தை நோவம் ஷலிட் ஜெருசலேம் போஸ்ட்டிடம் கூறினார்; "செயற்பட்டியல் வேறு திசையில், போரின் பக்கம் சென்று கொண்டிருக்கிறது. மக்கள், சாதாரண மக்கள் கொல்லப்படுகிறார்கள், அதிக சிப்பாய்கள் கொல்லப்படுகின்றனர்; ஆனால் எங்களை பற்றி மறந்துவிட மக்களை அனுமதியோம்." ஜூலை 6ம் தேதி கைதிகள் பரிவர்த்தனை நடத்தப்பட வேண்டும் என்று முதலில் ஷலிட் அழைப்பு விடுத்தார்; ஆனால் ஓல்மெர்ட் அரசாங்கம் அவருடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இந்தப் போர் சமூக அழுத்தங்களையும் தீவிரமாக்கிக் கொண்டுள்ளது; இடம் பெயர்ந்தவர்கள் அல்லது வேலை செய்ய இயலாதவர்களுக்கு ஊதியங்கள், இழப்புத் தொகை ஆகியவற்றிற்கு அரசாங்கம் உத்தரவாதம் கொடுக்க மறுத்ததை அடுத்தும் பூசல்கள் வெடித்துள்ளன. போரின் சுமை தொழிலாள வர்க்கம் மற்றும் வறியவர்மீதுதான் அதிகமாக விழுகிறது. அவர்கள்தான் தங்களுடைய வேலைகளை இழக்க நேரிடும்; அவர்கள்தான் நிலவறையில் ஆழ்ந்திருக்க வேண்டும்; ஏனெனில் அவர்களால் வீடுகளில் இருந்து வெளியேறிச் செல்லவும் முடியாது, தொலைவில் உள்ள ஓட்டல்களிலும் தங்க முடியாது.

தற்போது பாதுகாப்பு மந்திரியாக இருக்கும் தொழிற்கட்சி தலைவர் அமிர் பெரட்ஸ் கடந்த தேர்தல்களின் போது இராணுவத்தில் இருந்து இஸ்ரேலின் பல சமூகப் பிரச்சினைகளான வறுமை, சமூகப் பொருளாதாரச் சமத்துவமின்மை, வேலையின்மை, குழந்தையின் பாதுகாப்பிற்கு தேவையானது செய்யப்படுவததில் பற்றாக்குறை, வயதானவர்களுக்கு போதாத ஆதரவு, வசதியற்ற பள்ளிகள் ஆகிய பிரிவுகளுக்குச் செலவிடப்படும் என்று கொடுத்த உறுதிமொழிகள் வசதியாக கிழித்து போடப்பட்டுவிட்டன. மாறாக தலைமைத் தளபதி டான் ஹாலுட்ஸ் பாதுகாப்புச் செலவுகளில் குறைப்பு இருக்கும் திட்டங்கள் கைவிடப்படவேண்டும் என்று கூறிய இராணுவக் கோரிக்கைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன.

சமூக ஜனநாயகக் கட்சி என்று அழைத்துக் கொள்ளும் "இடதின்" தலைவரான மெரெட்ஸ் யாசெட் இப்பொழுது போருக்கு முழு ஆதரவு தருகிறார்; அதிருப்தியை திசைதிருப்பும் வகையில் அரசாங்கம் அதிகாரபூர்வமாக போரை அறிவிக்க வேண்டும் என்றும் நெருக்கடிக் கால நிலைமை அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்; இதையொட்டி போர் தொடர்புடைய நிதிய நஷ்டங்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

ஜூலை 23 அன்று ஹாரெட்ஸில் வந்துள்ள "இப்பொழுது, உடனடியாக நிறுத்துக" என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரையில் கிடியன் லெவி எச்சரித்தார்: "இதுகாறும் பெரும் வளைந்து கொடுக்கும் தன்மையை வெளிப்படுத்தியுள்ள இஸ்ரேல் அணியின் பின்தொகுப்பு பாதுகாப்புக் கூடங்கள் பற்றி இனி பொருட்படுத்தாமல் இருக்காது. மெதுவாக விரிசல்கள் ஏற்பட்டு குடிமக்கள் நாம் ஏன் இறந்து கொண்டிருக்கிறோம், எதற்காக நாம் கொன்று கொண்டிருக்கிறோம் எனக் கேட்கத் தலைப்பட்டுவிடுவர்."

சர்வதேச விமர்சனம், மற்றும் விரோதப் போக்கும் இஸ்ரேல் மீது பெருகிய முறையில் எழும் என்றும் லெவி எச்சரித்துள்ளார். இஸ்ரேலிய பார்வையாளர்களுக்கு பேரழிவுக் காட்சிகள் காட்டப்படவில்லை என்றாலும், "முழு அண்மைப் பகுதிகளும் அழிக்கப்பட்டது பற்றி உலகம் முழுவதும் காண்கிறது; நூறாயிரக்கணக்கான மக்கள் பெரும் பீதியில், வீடுகளை இழந்து ஓடுவதையும், நூற்றுக்காணக்கான குடிமக்கள் இறந்துபடுவதையும், காயமடைந்துள்ளதையும், ஹெஸ்பொல்லாவுடன் தொடர்பற்ற பல குழுந்தைகள் உட்பட இப்படி அகப்பட்டுக் கொண்டிருப்பதை காண்கிறது."

Top of page