World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The Iraq war and the eruption of American imperialism

ஈராக்கியப் போரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பும்

பகுதி 1 | பகுதி 2

By Nick Beams
14 April 2006

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க தலைமையிலான ஈராக்கிய படையெடுப்பு ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளதை குறிக்கும் வகையில் ஏப்ரல் 4 அன்று சிட்னியிலும், ஏப்ரல் 11அன்று மெல்போர்னிலும் நடந்த பொதுக் கூட்டங்களில் நிக் பீம்ஸ் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (ஆஸ்திரேலிய) சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளரான பீம்ஸ் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் ஆவார்.

சோவியத் ஒன்றியத்தின் சரிவு மற்றும் பனிப்போர் மோதல்கள் முடிவுற்ற நிலையில் அணு ஆயுங்கள் பயன்படுத்தப்படும் ஆபத்துக்கள் விலகிவிட்டன என்று நம்பிக்கை கொள்ளுவது பெறும் தவறாகிவிடும். மாறாக, ஆபத்து பெருகியுள்ளது.

பாதுகாப்பான, நம்பகத்தனைமையுள்ள மற்றும் அணுசக்தி உள்ளடங்கலான "அதிகூடிய பலத்தை பயன்படுத்தல்", மற்றும் "மூர்க்கமான தாக்குதல் முறைகளை" அபிவிருத்தி செய்தல் என்று புஷ் நிர்வாகத்தின் 2005 தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தில் குறித்துள்ளவற்றின் உட்குறிப்புக்கள் Foreign Affairs இதழின் மார்ச்-ஏப்ரல் பதிப்பின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளன.

இக்கட்டுரையின் ஆசிரியர்கள் பனிப்போர் முடிவுற்ற காலத்தில் இருந்து, ரஷ்யாவின் மூலோபாய அணுகரு படைக்கலங்கள் கூர்மையாக சரிவுற்றுள்ளன என்றும் அதே நேரத்தில் அமெரிக்க அணுக்கரு படைக்கலங்கள் "கணிசமாக முன்னேற்றம் அடைந்துள்ளன" என்றும் உலகம் "அமெரிக்க அணுகரு மேலாதிக்க நிழலின்கீழ் பல ஆண்டுகளுக்கும் இருக்கும்" என்றும் முடிவுரையாக கூறியுள்ளனர்.

பனிப்போர் காலத்தில், MAD- ஒருவரை ஒருவர் பரஸ்பரரீதியாக அழித்துவிடும் தன்மை (Mutually Assured Destruction) என்ற கோட்பாட்டின்கீழ் அணுகரு வல்லரசுகளுக்கிடையில் உறவுகள் நெறிப்படுத்தப்பட்டிருந்தது. எந்த வல்லரசும் முதலில் தாக்க முடியாது; ஏனெனில் அத்தாக்குதல் வெற்றி பெற்றாலும், மற்ற வல்லரசுகள் தன்னுடைய ஆயதங்களை பயன்படுத்தி எதிரியை அழித்துவிட முடியும் என்று இருந்தது. அந்தக் கோட்பாடு நீண்டகாலத்திற்கு செயல்படுத்தமுடியாது, ஏனெனில் அமெரிக்கா இப்பொழுது மேலாதிக்க நிலையில் உள்ளது.

தங்களுடைய ஆய்வின் முடிவுரையில் கட்டுரையாளர்கள் கீழ்க்கண்டபடி சுருக்கிக் கூறியுள்ளார்கள்:

"அமெரிக்க அணு ஆயுத நவீனப்படுத்தப்படுதல் முயற்சிகள் பயங்கரவாதிகள் அல்லது போக்கிரி அரசுகளைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றனவா எனச் சிலர் வியக்கின்றனர். பயங்கரவாதத்தின் மீதான போரை அமெரிக்கா தொடுத்துள்ளதை வைத்தும், பூமிக்கடியில் ஆழமான நிலவறைகளில் உள்ள ஆயுதங்களை அழிப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையையும் காணும்போது, (இது புஷ் நிர்வாகத்தின் முயற்சியான நிலவறை இலக்குகளை அழிக்கும் அணுவாயுதத்தை வளர்த்தலில் பிரதிபலிக்கிறது), W-76 [அணுவாயுதக் கருவி] மேம்படுத்தப்படும் தன்மைகள் போக்கிரி அரசுகளின் பேரழிவுகரமான ஆயுதங்களின் கிடங்கு அல்லது பயங்கரவாதிகள் குகைகளில் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை இலக்காகக் கொண்ட திறனை பெற்றுள்ளன. ஆனால் இவ்விளக்கம் போதுமானது அல்ல. அமெரிக்கா ஏற்கனவே நிலவறை மற்றும் குகைகளை தாக்கும் திறனுடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணுக்குண்டுகளை தாங்கிய ஆயுதங்களை கொண்டுள்ளது. அமெரிக்காவின் அணு ஆயுத நவீனப்படுத்தப்படுதல் போக்கிரி அரசுகள் அல்லது பயங்கவாதிகளை உண்மையில் இலக்கு கொண்டுள்ளது என்றால், நாட்டின் அணு ஆயுத நவீனப்படுத்தப்படும் திட்டமான W 76 இனால் கிடைக்கும் கூடுதலான ஆயிரம் நிலந்தகர்க்கும் ஆயுதங்கள் தேவைப்படாது. தற்போதைய, வருங்காலத்திய அமெரிக்க அணு ஆயுத சக்தி, வேறுவிதமாக கூறினால் ரஷ்யா அல்லது சீனாவிற்கு எதிராக ஒரு முன்கூட்டியே நிராயுதபாணியாக்கும் தாக்குதல்களை முன்னெடுக்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

"மேலும், அணு ஆயுத முதன்மை இடத்தை சர்வதேசரீதியாக பின்தொடருவதற்கு தன்னுடைய பூகோள ஆதிக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கொள்கையுடன் முற்றிலும் ஒத்திருப்பதாகத்தான் இருக்கிறது. புஷ் நிர்வாகத்தின் 2002ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு மூலோபாயம் அமெரிக்கா இராணுவ மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்தை கொண்டுள்ளதாக வெளிப்படையாகவே கூறியுள்ளது: "அமெரிக்க வல்லரசிற்கு இணையாகவோ அல்லது அதனை விஞ்சும் நம்பிக்கையில் ஒரு இராணுவம் கட்டியெழுப்புவதை பின்தொடர்வதிலிருந்து ஆற்றல்மிக்க எதிரியை தடைசெய்வதற்கு போதுமான வலிமையுடன் நம்முடைய சக்தி அமைக்கப்பட்டிருக்கும். இந்த முடிவிலிருந்து அமெரிக்கா வெளிப்படையாவே நவீன இராணுவ தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு பரிமாணத்திலும், மரபார்ந்த ஆயுதக்குவிப்பு மற்றும் அணுவாயுத திறன் இரண்டிலும், மேலாதிக்கத்தை கொள்ள முற்பட்டிருக்கின்றது."

வேறுவிதமாக கூறினால், அமெரிக்க வெளியுறவு கொள்கை ஸ்தாபனத்தின் முக்கிய பதிப்பில் வந்துள்ள இக்கட்டுரை இருக்கும் உண்மைகள் பற்றி நிதான ஆய்வின் அடிப்படையில் அமெரிக்கா ஓர் ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கைகளை பின்பற்றும் என்றும் அந்த நோக்கங்களை அடைவதற்காக அணுவாயுத தாக்கும் திறனை பயன்படுத்தவும் தயாராக உள்ளது என்ற இந்தக் கட்டுரை கூறுகிறது.

இத்தகைய எச்சரிக்கைகள்தாம் இவ்வாரம் New Yorker இதழில் Seymour Hersh எழுதியுள்ள கட்டுரையிலும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஹெர்ஷின் கருத்துப்படி, ஈரான் மீது விமானத்தாக்குதல் நடத்துவது பற்றிய விரிவான விவாதம் புஷ் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்து என்றும் ஒருலேளை இதில் அணுக்கரு ஆயுதங்களை பயன்படுத்தி ஈரானிய நிலவறைக் கிடங்குகள் அழிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

ஈரானிய அணுக்கரு ஆயுத நிலையங்களை இல்லாதொழிக்க அணுவாயுதங்கள் பயன்படுத்துதல் தேவையாகும் என்று முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கருத்தை ஹெர்ஷ் மேற்கொளிட்டுள்ளார். "அணு ஆயுதவாதிகளின் பார்வையில் இதர தேர்வுகள் அனைத்தும் ஒரு இடைவெளியைத்தான் கொடுக்கும். விமானப்படை திட்டமிடுதலின் முக்கிய பதங்கள் "தீர்க்கமானது" ஆகும். இது ஒரு கடினமான முடிவுதான். ஆனால் ஜப்பானில் அதை மேற்கொண்டோம்." என்று அவர் கூறியுள்ளார்.

வேறுவிதமாகக் கூறினால், பனிப்போர் முடிந்து 15 ஆண்டுகளுக்கு பின்னரும், அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படுதல் என்னும் ஆபத்து, ஹிரோஷிமா, நாகசாகி கொடுமைகள் நிகழ்ந்து 61 ஆண்டுகளுக்கு பின்னரும் எக்காலத்தைக்காட்டிலும் பெரும் அதிகரித்த நிலையில்தான் உள்ளது.

கொழுந்துவிட்டு எரியும் இரண்டு பிரச்சினைகள்

நாம் எப்படி இந்நிலைக்கு வந்துள்ளோம் மற்றும் இதைப்பற்றி என்ன செய்யலாம்? இவை இரண்டும்தான் இன்றைய கொழுந்து விட்டு எரியும் பிரச்சினைகள் ஆகும்.

முதல் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். புஷ் நிர்வாகக் கொள்கையின் விளைவு என்று மட்டும் எடுத்துக் கொண்டால் தற்போதைய நிலைமையை புரிந்து கொள்ள முடியாது; அதாவது நிர்வாகத்தில் மாற்றம் என்பது போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. அதேபோல் இது ஒன்றும் புதிய பழமைவாதிகள் (Neo-Conservatives) என அழைக்கப்படுவோரின் அதிகச் செல்வாக்கின் விளைவு என்றும் கூறமுடியாது. அப்படி இருக்குமேயாயின், புஷ் நிர்வாகத்திற்கு ஜனநாயகக் கட்சியினர் ஏன் எதிர்புத் தெரிவிக்காமல் வலதில் இருந்து மட்டுமே விமர்சித்து வருகின்றனர்.

மேலும் சர்வதேச அரங்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு பங்கிற்கான முன்னணி கருத்தியல் ஆதரவாளர் பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் தலைவர் டோனி பிளேயர் என்பதை எப்படி விளக்க முடியும். இது வெறும் புஷ் ஆட்சி விவகாரம் என்று வைத்துக் கொண்டால், கடந்த வாரம் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பிளேயர் பேசியபோது, முழு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனத்தால் இந்தப் பொய்யுரைக்கும் போர்க்குற்றவாளி பாராட்டப்பட்டது ஏன்?

இன்று உலக அரசியலில் நாம் கடந்து கொண்டிருக்கும் ஆழ்ந்த திருப்பம் தனிப்பட்டவர்களின் அல்லது தற்செயலான காரணிகள் தொடர்பானவை என கூறுவதற்கில்லை; மாறாக அவை ஆழ்ந்த வரலாற்று வேர்களை கொண்டிருக்க வேண்டும். அவற்றை ஆராய முயல்வோம்.

கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் உலகப்போருக்கு பின் ஐரோப்பிய போட்டியாளர்களை மீறி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சி பற்றி முக்கியத்துவத்தை ஆராய்ந்தபோது, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்கையில் அமெரிக்க மேலாதிக்கம் எப்படியோ பலவீனமாகிவிடும் என்று நம்புவது பெரும் தவறாகிவிடும் என்று ட்ரொட்ஸ்கி கூறினார். முற்றிலும் மாறான விதத்தில்தான் இடம் பெறும் என்றும் கூறினார்.

"நெருக்கடிக் காலத்தில் அமெரிக்க மேலாதிக்கம் மிகவும் முழுமையாகவும் மிகவும் வெளிப்படையாகவும் மிகவும் கொடூரமாகத்தான் செயல்படும். முதன்மையாக ஐரோப்பாவின் இழப்பில் தன்னுடைய கடினநிலையிலிருந்து விடுவித்துக்கொண்டு மற்றும் தீர்த்துக்கொள்ள செல்வதற்கு அமெரிக்கா முற்படும்; இது ஆசியா, கனடா, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று எங்கு நடந்தாலும், அமைதியான முறையிலோ அல்லது போர் மூலமோ, எவ்விதத்திலும் நடைபெறும்." (Trotsky, The Third International After Lenin, p.8).

நாம் பார்த்தபடி, இன்றைய காலம் முதல் உலகப்போருக்கு முன் இருந்த நிலைமையுடன் பல ஒற்றுமைகளை கொண்டுள்ளது. ஜேர்மனியின் எழுச்சியை ஒட்டி, ஐரோப்பாவில் பழைய சமபல நிலை நிலைமுறிவுற்றது, முதலாளித்துவ பெரிய வல்லரசுகளின் எதிரெதிரான நலன்கள் சமாதானமுறையில் சமரசத்தை காணமுடியாமற் போயின. மேலும் இந்த எதிரெதிரான நலன்கள் ஐரோப்பாவிற்கு அப்பாலும் விரிவடைந்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியும், பூகோள பொருளாதார ஒன்றிணைப்பு வளர்ச்சியின் இணைப்பும் உலகப் பொருளாதாரம் பழைய தேசிய-அரசு முறையுடன் மோதலுக்கு வந்துவிட்டதை காட்டின. தங்களது சொந்த இலாபத்திற்கான போராட்டங்களுடன் மூலவளங்கள், செல்வாக்கு மண்டலங்கள் பற்றியே அக்கறை காட்டிய ஒவ்வொரு பெரும் முதலாளித்துவ வல்லரசுகளும், ஒத்திசைவான வகையில் முரண்பாடுகளை தீர்ப்பது இயலாமல் போயிற்று. போர் தவிர்க்க முடியாத விளைவாக ஆயிற்று.

போரின் விளைவு அமெரிக்காவிடம் பொருளாதார மேலாதிக்கத்தை கொடுத்தது எனலாம். ஆனால் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமெரிக்கா உலகை மாற்றியமைக்க முடியவில்லை. ஒரு புறம் தொடர்ந்த பொருளாதார, இராணுவ அதிகாரம் கொண்டிருந்த ஐரோப்பிய போட்டியாளர்கள், மறுபுறம் இன்னும் ஆபத்தான எதிரியாக இருந்த சோசலிச புரட்சியை அது எதிர்கொண்டது, அவை 1917ல் ரஷ்ய புரட்சியின் வடிவத்தில் வெடித்தது.

ஒரு புதிய சமநிலை நிறுவப்படமுடியவில்லை; எனவே முதல் உலகப் போர் முடிந்து இரு தசாப்தங்களுக்குள்ளேயே, இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. அப்போரில் அமெரிக்கா உலக முதலாளித்துவத்தின் சவாலற்ற மேலாதிக்கத்திற்கான எழுச்சியை அடைந்தது. ஐரோப்பாவில் சோசலிசம் அல்ல முதலாளித்துவ ஜனநாயம்தான் நிறுவப்படவேண்டும் என்று வலியுறுத்திய ஸ்ராலினிச, சமூக ஜனநாயகத் தலைமைகள் தொழிலாள வர்க்கத்தினை காட்டிக் கொடுப்பதன் மீது தங்கியிருந்ததன் காரணமாக அமெரிக்கா, தன்னுடைய பரந்த பொருளாதார பலத்தின் அடிப்படையில் ஒரு புதிய முதலாளித்துவ சம நிலையை நிறுவ முடிந்தது.

ஆனால் அந்தப் போருக்குப் பிந்தைய பொருளாதார விரிவாக்க உடன்பாடே தான் நிலைத்திருப்பதற்கு காரணமான மைய தூண்களில் ஒன்றை----அதாவது போட்டியாளர்கள்மீது முற்றிலும் பொருளாதார மேலாதிக்கம் கொண்டிருந்த அமெரிக்காவை கீழறுப்பிற்குட்படுத்தியது.

மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதார பூகோளமயமாக்கலின் பரந்த நிகழ்ச்சிப்போக்கினால் உலகப்பொருளாதாரத்திற்கும், முதலாளித்துவ தேசிய-அரசிற்கும் இடையே இருக்கும் முரண்பாட்டின் தீவிரத்தை ஒரு புதிய உச்சக்கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. மீண்டும் இந்த முரண்பாடுகள் சந்தை, மூலவளங்கள் மற்றும் செல்வாக்கு மண்டலங்களுக்காக பெரும் முதலாளித்துவ வல்லரசுகளுக்கிடையேயான தீவிர போட்டியில் வெளிப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில், அமெரிக்காவின் ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பும், இப்பொழுது ஈரான் மீதும்---- இவ்விருநாடுகளும் உலகின் எடுக்கப்படாத எண்ணெய் இருப்புக்களில் மூன்றாம், இரண்டாம் இடத்தில் முறையே உள்ளவை--- பிரெஞ்சு, சீன, ரஷ்யா அல்லது இந்திய நிறுவனங்களுக்கு மாறாக அமெரிக்காவினால் இந்த இருப்புக்களும் வளங்களும் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான உந்துதலின் நோக்கங்களினால் வந்ததாகும். எண்ணெய் வளங்களை பெறுதல் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிராமல், அந்த வளர்ச்சியில் வெளிவரும் பரந்த இலாபத்தை நோக்கமாகக் கொண்டது. இதுகாறும் இதர பெரிய வல்லரசுகள் அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு இசைந்து போக முயற்சித்தன. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், அமெரிக்காவின் போட்டியாளர்களையே நீக்கி வைப்பது அதிகரித்தபோது, அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் நாம் புதிய கூட்டணிகள் மற்றும் நாடுகளின் கூட்டுக்கள் தோன்ற ஆரம்பித்தைக்காண்போம்.

இன்னமும் அமெரிக்காதான் மேலாதிக்கம் நிறைந்த இராணுவ சக்தியாக உள்ளது --அதன் இராணுவ செலவு மற்றைய அனைத்து முதலாளித்துவ நாடுகளின் மொத்தமான செலவுக்கு ஒப்பாகத்தான் உள்ளது. ஆனால் அவற்றின் பொருளாதார மேலாதிக்கம் கடுமையாக கீழறுக்கப்பட்டிருக்கிறது. 800 பில்லியன் டாலராக உள்ள செலுத்துமதி நிலுவையின் பற்றாக்குறை விரைவில் ஆண்டு ஒன்றுக்கு 1 டிரில்லியனை நோக்கி போகும் நிலையில், உலகின் வேறு பகுதிகளில் இருந்து, இதில் பெரும்பகுதி சீனா மற்றும் கிழக்கு ஆசிய மத்திய வங்கிகளில் இருந்து நாளாந்தம் உட்பாயும் 3 பில்லியன் டாலரில்தான் தங்கியுள்ளது. அதே நேரத்தில் ஒருகாலத்தில் உலகின் மிகப் பெரிய தொழில்துறை நிறுவனமாக இருந்த ஜெனரல் மோட்டர்ஸ் டோயோடாவினால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், அமெரிக்கா உலகத்தின் தொழில்துறை உற்பத்தியில் 50 சதவிகிதத்திற்கும் மேலான பொறுப்பைக்கொண்டிருந்தது. தற்போது உலகச் சந்தைகளுக்கான போராட்டத்தில் கூடுதலான வகையில் அது பின்தள்ளப்பட்டுள்ளதை தற்பொழுது கண்டுள்ளது. இங்குதான் இராணுவவாதத்தின் உந்துசக்திகளில் ஒன்று காணப்படுகிறது. தன்னுடைய இராணுவ சக்தியை பயன்படுத்துவதன் மூலம் தன்னுடைய பொருளாதார நிலையின் சரிவை கடப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. இயல்பாகவே அத்தகைய மூலோபாயம் உலக முதலாளித்துவத்தின் ஒரு புதிய சமநிலைக்கு வழிவகுக்காது; ஆனால் விரைவாகவோ, தாமதித்தோ, இது ஏகாதிபத்திய போருக்கான நிலைமைகளை உருவாக்கிவிடும். இதுதான் ஈராக்கிய படையெடுப்பு, மற்றும் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் பொருளுரை ஆகும்; மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மைய மூலோபாயம் உலக ஆதிக்கம் என்ற வெளிப்படையான அறிவிப்பின் பொருளும் ஆகும்.

ஓர் விஞ்ஞானபூர்வ முன்னோக்கு

முன்னர் கூறப்பட்ட இரு வினாக்களின், இரண்டாவது வினாவிற்கு இது நம்மை இட்டு வந்துள்ளது. இந்த ஆபத்துக்களை எதிர்கொள்ளுவது எங்ஙனம்?

அவ்வினாவிற்கான விடை நிதானமாகச் சிந்திக்கப்பட்ட, அதாவது விஞ்ஞானரீதியாக என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற மதிப்பீட்டை தளமாகக் கொண்டிருக்க வேண்டும்.

உலக முதலாளித்துவ அதே கட்டமைப்பிற்குள் தீர்க்கப்படாத முரண்பாடுகளாலும் ஆழமடைந்து வரும் வெடிப்பினாலும் காட்டுமிராண்டிதனத்தின் புதிய வடிவத்திற்கு உலகம் மூழ்கிக்கொண்டுள்ளது. ஏகாதிபத்தியத்தின் அரசியல்-----பூமியிலுள்ள மக்களை மற்றும் வளங்களை இலாபத் தேவைகள் மற்றும் பரந்தளவில் தனியார் சொத்துடமைகளை கொண்ட பெரு நிறுவனங்களின் நலன்களுக்கு கீழ்ப்படுத்துதல் என்பது மனிதகுலத்தின் தேவைகளுக்கும் புறநிலை தேவைகளுடன் முற்றிலும் பொருந்தாத் தன்மை கொண்டது ஆகும்.

ஏகாதிபத்தியத்தின் அனைத்துவித சிக்கல்களுக்கும் அதன் வேலைதிட்டத்திற்கும் எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கம் தன்னுடைய சொந்த சுயாதீன முன்னோக்கை முன்வைக்க வேண்டும். பெரும் இக்கட்டான நிலையில் இருந்து வெளியே வருவதற்கு, சர்வதேச சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் உலகை மறுபடியும் மாற்றி அமைப்பதை தவிர வேறு வழி ஏதும் இல்லை-- அதாவது தனியார் இலாபம் மற்றும் தேசிய-அரசு முறை அகற்றப்பட்டு பூமியின் வளங்களும், மில்லியன் கணக்கான தொழிலாளர்களினால் தோற்றுவிக்கப்படும் பரந்த செல்வமும், மனித குலம் முழுவதற்குமான பயன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். இந்த முன்னோக்குத்தான் நனவுபூர்வமாக புதுப்பிக்கப்பட்டு, அபிவிருத்திசெய்ய போராட வேண்டும்.

சமூக சமத்துவமின்மையின் சுதந்திர சந்தை செயற்திட்டத்திற்கும் போருக்கும் எதிராக போராட்டங்களை வழிநடத்துவதை ஆரம்பிக்க எந்த அளவிற்கு இம்முன்னோக்கு முன்னெடுத்துக் கொள்ளப்படுகிறதோ, அந்த அளவிற்கு இப்பொழுதுள்ள சக்திகளின் சமநிலை மாற்றமடைய தொடங்கி, வியத்தகு அளவில் மாறுதல்கள் வெளிப்படும்.

தற்போதைய நிலைமை ஆழ்ந்த முரண்பாட்டினை குறிக்கிறது. அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் அமுல்படுத்தப்படும் வேலைதிட்டங்களுக்கும் போருக்கும் வெகுஜன எதிர்ப்பு உள்ளது. ஆயினும்கூட அவை தடையின்றி தொடரப்படுகின்றன.

ஈராக் படையெடுப்பின் அனுபவங்களை கருத்தில் கொள்ளுங்கள். தொடக்கத்தில் மில்லியன் கணக்கானோர் போரை எதிர்த்து, தங்கள் எதிர்ப்பு குரல் கொடுப்பதற்கு வரலாற்றில் காணாத மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அந்த எதிர்ப்பு இன்னும் சிதைந்துவிடவில்லை. ஆனால் வெறும் எதிர்ப்பு என்ற வரம்பிற்குள் அது இருக்கும் வரை, அதாவது ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சியின் வரம்பிற்குள் நிற்கும் வரை, அது செயலற்ற தன்மையில்தான் இருக்கும்.

உண்மைகள் நேரடியாக எதிர்கொள்ளப்பட வேண்டும்: முன்னோக்கு ஒன்றுதான் பிரச்சினை. எவ்வித அழுத்தமும் இராணுவ ஆக்கிரமிப்பு பாதையிலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திசை திருப்பிவிட முடியாது; ஏனெனில் அதன் முழு வருங்காலமும் ஆபத்திற்கு உட்பட்டுள்ளது. காட்சியில் இருந்து அது ஒன்றுமை மறைந்து விடப்போவதில்லை; நல்லிரவு கூறி அமைதியாக விடைபெறப் போவதும் இல்லை.

இதேபோல், அவற்றின் அரசாங்கங்கள் எத்தன்மையான அரசியல் நிறம் கொண்டிருந்தாலும், பெரிய முதலாளித்துவ வல்லரசுகள் தங்களுடைய சொந்த காலனித்துவ அபிலாசைகளை கைவிட இயலாது. சுதந்திர சந்தையின் செயற்பட்டியலில் இருந்து அவை பின்வாங்கவும் செய்யாது; அவையோ சமூக சேவைகள் மற்றும் வேலை நிலைமைகள் அழிக்கப்பட வேண்டியது தேவையாக உள்ளது அப்பொழுதுதான் பூகோளச் சந்தைகள், மூதலீட்டு நிதியங்களுக்காக போட்டியிட முடியும்.

இந்தப் பிரச்சினைதான் பிரான்சின் இயக்கத்தினால் போராடப்படுகிறது. சிராக்-வில்ப்பனுடைய அரசாங்கத்தின் புதிய தொழிலாளர் சட்ட நிலைமையின் கீழ் இளைஞர்களுக்கு எதிராக இருத்தல் என்பது அனைத்து தொழிலாள வர்க்கத்தின்மீதும் தொடுக்கப்பட்ட போரின் தீவிரப் பகுதி; அது பிரெஞ்சு முதலாளித்துவத்தை போட்டித் தன்மை உடையதாகச் செய்யும்; இது குறித்து எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அரசாங்கம் பின்வாங்காது. இவ் எதிர்ப்பு இயக்கம் ஒன்றில் நனவாக அரசாங்கத்தை வெளியேறச் செய்ய போராடுவதன் மூலம் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்கான பாதையை பிரான்சில் மட்டுமல்லாது, அதே பிரச்சனைகள் எழும் ஐரோப்பா முழுவதும் திறந்துவிடவேண்டும் அல்லது அது பிரெஞ்சு மூலதனத்தின் கட்டளைகளுக்கு அடிபணியச் செய்யப்படும்.

மோதல்களின் புறநிலை நிலைமைகளிலிருந்து எழும் இந்த முன்னோக்கு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமை கட்டியமைக்கப்பட வேண்டிய தேவையை நேரடியாக வெளிப்படுத்துகிறது. ஏனெனில் இருக்கும் அமைப்புக்களும் கட்சிகளும் -- சோசலிஸ்ட் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து "தீவிர இடது" என அழைக்கப்படும் கட்சிகள் வரை--- அரசாங்கத்திற்கு எதிராக ஒரு நேரடியான அரசியல் போராட்டத்தை எதிர்க்கின்றன. அவற்றின் முன்னோக்கு, அரசாங்கம்தான் நெருக்கடியை தீர்க்க வேண்டும் என்பதாகும். எமது முன்னோக்கு, இந்த நெருக்கடி அரசாங்கத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதாகும்.

இதேபோல், இந்த நாடுகளிலும் பிரச்சினைகள் கூர்மையாக வெளிவந்துள்ளன. ''சுதந்திர சந்தையின்'' கொள்ளைமுறையில் இருந்து விளைந்துள்ள ஆழ்ந்த சமூக சமத்துவமின்மை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிர்ப்பானது உத்தியோகபூர்வ அரசியல் கட்டமைப்பிற்குள் வழியை காணவியலாது. ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினால் நடத்தப்பட்ட வரலாற்றுரீதியான போராட்டத்தையும் சோசலிச சர்வதேசிய வேலைதிட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையை கட்டுவதற்கான அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணிக்குத்தான் சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. நீங்கள் இதை உடனடியாக கவனத்தில் கொண்டு எங்கள் கட்சியில் சேருமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Top of page