:
இலங்கை
Sri Lankan Socialist Equality Party to
hold May Day meeting in Colombo
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பில் மே தின கூட்டத்தை நடத்தவுள்ளது
24 April 2006
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஒரு
பகிரங்க கூட்டத்தை நடத்தவுள்ளது. அனைத்துலக தொழிலாளர் ஐக்கியமானது ஒரு உடனடியான நடைமுறை அவசியம்
பற்றியதாகும். சொற்பொழிவாளர்கள் அச்சுறுத்தும் யுத்த ஆபத்து மற்றும் ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மைக்கும்
ஒரு சோசலிசத் தீர்வு காணவேண்டியதன் தேவையை தெளிவுபடுத்துவர்.
இம்முறை மே தினமானது அமெரிக்க நிர்வாகம் ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும்
ஆக்கிரமித்ததை தொடர்ந்து ஈரானுக்கு எதிரான இன்னுமொரு குற்றவியல் இராணுவ நடவடிக்கைக்கு தயாராகிக்கொண்டிருக்கின்ற
வேளையிலேயே நடைபெறுகின்றது. சாத்தியமேற்படின் அணுவாயுதங்களை பயன்படுத்துவது உட்பட ஈரான் மீது முழு
நிறைவான தாக்குதலை மேற்கொள்வதற்காக பென்டகனிலும் வெள்ளை மாளிகையிலும் ஏற்கனவே திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
தெற்காசியா பூராவும் உள்ள தொழிலாள வர்க்கம் ஜனநாயக உரிமைகள் மற்றும்
வாழ்க்கைத் தரங்கள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் தொழிலாள
வர்க்கம் குறிப்பாக இரத்தக்களரி மிக்க உள்நாட்டு யுத்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருவதை எதிர்கொண்டுள்ள
நிலையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியும் மிகவும் கூர்மையடைந்துள்ளன. தீவின் யுத்த வலயங்களான
வடக்கு மற்றும் கிழக்கில் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் ஜெனீவா சமாதானப் பேச்சுக்கள்
முறிவின் விளிம்புக்கு வந்துள்ளன.
மிலேச்சத்தனத்தை தடுக்கும் இயலுமையுள்ள ஒரே சமூக சக்தி சர்வதேச
தொழிலாளர் வர்க்கமே ஆகும். அதன் போராட்டங்களை ஒன்றிணைத்து வழிநடத்துவதற்கான ஒரு சோசலிச
முன்நோக்கையும் வேலைத் திட்டத்தையும் அபிவருத்தி செய்வது தீர்க்கமான பிரச்சினையாகும். இந்த இன்றியமையாத
பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்காக எமது கூட்டத்திற்கு வருகை தருமாறு நாம் உலக சோசலிச
வலைத் தள வாசகர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.
திகதியும் நேரமும்: மே 1, மாலை 3.00 மணி
இடம்: கொழும்பு புதிய நகர மண்டபம்.
பிரதான பேச்சாளர்: சோ.ச.க பொதுச் செயலாளர் விஜே டயஸ்.
Top of
page |