World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Canada bans LTTE under draconian anti-terrorist legislation

கனடா மூர்க்கமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் புலிகளை தடை செய்தது

By Keith Jones
14 April 2006

Use this version to print | Send this link by email | Email the author

கனடாவின் பழமைவாத அரசாங்கம், நாட்டின் மூர்க்கமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்துள்ளதாக திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

இதுமுதற்கொண்டு, யாராவது தெரிந்தே புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கினால் அவர் 10 வருடங்களுக்கு சிறைவைக்கப்படக் கூடும். அதே வேளை, புலிகளுக்கு நிதி சேகரிப்பவர் அல்லது ஏதாவதொரு வழியில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு "அனுசரணை" வழங்குபவர் 14 வருட சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரும்.

அரசாங்கம் புலி விரோத "தகவல் தொடர்பு" ஒன்றை ஸ்தாபித்துள்ளது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஸ்டொக்வெல் டே அறிவித்தமையானது, அரசாங்கம் புலி ஆதரவாளர்களை சிறைவைக்கவும் நாடுகடத்தவும் இந்த சட்டப்பிரிவுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது. விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள தொலைபேசி தொடர்பின் ஊடாக புலி செயற்பாட்டாளர்களை அம்பலப்படுத்துமாறு கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் மிகப் பெருந்தொகையான தமிழர்களுக்கு/ நாடுகடந்து வாழும் சமுதாயத்திற்கு ஸ்டொக்வெல் டே வேண்டுகோள் விடுக்கின்றார்.

ஸ்டொக்வெல் டே இந்த தடையை நியாயப்படுத்தும் வகையில், புலி செயற்பாட்டாளர்கள் நிதி பங்களிப்பு செய்யுமாறு கனேடியத் தமிழர்களை கட்டாயப்படுத்துவதற்காக வன்முறை அச்சுறுத்தல்களை பயன்படுத்துகின்றனர் என குற்றஞ்சாட்டினார். ஆயினும் அத்தகைய அச்சுறுத்தல்கள் கனேடிய குற்றவியல் சட்டத்தின் படி ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும் பகுதியை ஆளும் புலிகள் அமைப்பை தடைசெய்த கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கையை தொழிலாள வர்க்கமும் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் அக்கறைகொண்டுள்ளவர்களும் எதிர்க்க வேண்டும்.

கனடாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் ஜனநாயக உரிமைகள் மீதும் மனித விடுதலைக்கு எதிராகவும் ஒரு வெளிப்படையான தாக்குதலை உள்ளடக்கிக்கொண்டுள்ளன. அரசு இந்த சட்டங்களின் கீழ், சாதாரண குற்றவியல் சட்டங்களையும் விட இரக்கமற்ற தண்டனைகளை கொண்ட, மற்றும் சாட்சிகளை முழுமையாகப் பகிரங்கப்படுத்தல், பகிரங்கமாக விசாரணை செய்தல் போன்ற அடிப்படை நீதித்துறை கோட்பாடுகள் பற்றி கவனம்செலுத்தப்படாத ஒரு புதிய குற்றவியல் விதிகளை உருவாக்கிவிட்டுள்ளது.

அரசானது இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் ஊடாக, கனேடிய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானவையாக கருதப்படும் அரசியல் இயக்கங்களையும், கனடா நெருங்கிய உறவுகொண்டுள்ள அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பல சந்தர்ப்பங்களிலும் எழுச்சிபெற்ற இயக்கங்களையும் குற்றவாளியாக்க முயற்சிக்கின்றது. இந்தச் சட்டங்கள் பொதுமக்கள் மற்றும் ஒடுக்குமுறை அரசாங்கங்களின் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மீதான தாக்குதல்களில் இருந்து வேறுபடுத்திக் காட்ட தவறுவதோடு, எந்தவொரு வன்முறை நடவடிக்கையிலும் பங்கேற்காத அல்லது திட்டமிடுவதில் சம்பந்தப்படாத எவரும் இந்தச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக குற்றம்சாட்டப்படலாம். பயங்கரவாதிகள் என முத்திரையிடப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பினதும் நிதி சேகரித்தல் அல்லது அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்தல் அல்லது நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுசரணை வழங்குவதானது ஒரு தசாப்தத்திற்கு அல்லது அதற்கும் மேலான சிறைத்தண்டனை காலத்திற்கு உத்தரவாதமாக அமையும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தச் சட்டங்களின் எதிர்பார்ப்புகள், வட அமெரிக்க மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கங்களை ஸ்தாபிப்பது அல்லது ஆதரிப்பதை இலக்காகக் கொண்ட யுத்தங்கள் மற்றும் இராணுவ தலையீட்டில், கனேடிய ஆயுதப் படைகளதும் மற்றும் கனடாவினதும் பங்களிப்பை விரிவுபடுத்துவதையும் தூக்கிநிறுத்துவதையும் நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும், பயங்கரவாதத்தின் மீதான உலக யுத்தம் என வெளிப்படையாய் கூறிக்கொள்ளும் யுத்தத்திற்கு கனடாவின் ஆதரவை காட்டுவது மற்றும் அதில் பங்குபற்றுவது வரை கைகோர்த்துச் செல்கின்றன.

ஸ்டொக்வெல் டே, திங்கட்கிழமை நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், பயங்கரவாதம் சம்பந்தமாக "மென்மையாக" நடந்து கொள்வதோடு புஷ் நிர்வாகத்திற்கு பூரணமான ஆதரவு கொடுக்கவில்லை என பழமைவாதிகளால் நீண்டகாலமாக கண்டனம் செய்யப்பட்டு வந்த முன்னைய லிபரல் அரசாங்கத்தை தாக்கினார். "புலிகளைப் பட்டியலிடும் (பயங்கரவாத இயக்கமாக) தீர்மானம், மிகவும் காலதாமதமாகியிருப்பதோடு இது பற்றி நடவடிக்கை எடுக்க முன்னைய அரசாங்கம் கடுமையாக அக்கறைகொண்டிருக்கவில்லை. எங்களது அரசாங்கம், பயங்கரவாதத்திற்கு எதிராக கனேடியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க தெளிவாக உறுதிகொண்டுள்ளது," எனக் குறிப்பிட்டார்.

இனவாத பாதையில் ஒரு புதிய முதலாளித்துவ அரசாங்கத்தை செதுக்கிக்கொள்ளும் புலிகளின் முன்நோக்கு மற்றும் சிங்களத் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரான பாகுபாடற்ற வன்முறைகள் உட்பட, குறிக்கோளை அடைவதற்கான புலிகளின் வழிமுறைகள் சம்பந்தமாகவும் உலக சோசலிச வலைத் தளம் தனது எதிர்ப்பை எண்ணற்ற சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளது.

எவ்வாறெனினும், கடந்த 23 வருடங்களாக இலங்கையை அதிரவைத்த உள்நாட்டு யுத்தத்திற்கு பொறுப்பாளிகள் இலங்கை முதலாளித்துவமும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுமே என்பது வெளிப்படையானதாகும். 1948ல் சுதந்திர இலங்கை பிறந்த உடனேயே, இலங்கையில் இருந்த முதலாளித்துவக் கட்சிகள் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் (இந்தியத் தமிழர் என அழைக்கப்படுபவர்கள்) பிரஜா உரிமையை பறித்தன. 1950களில் சிங்களம் நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட்டது. பதினைந்து வருடங்களின் பின்னர், பெரும்பான்மையான சிங்களவர்களின் மதமான பெளத்தத்தை அரச மதமாக்கும் அரசியல் யாப்பை சட்டமாக்கியதோடு உயர் கல்விக்கான வாய்ப்புகளில் தமிழர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்காக விகிதாசார முறையை சட்டமாக்கியதுடன் தமிழ் சிறுபான்மையினரை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கும் அடுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 1983ல் அரசால் திட்டமிடப்பட்ட தமிழர் விரோத படுகொலைகளை அடுத்து இறுதியாக உள்நாட்டு யுத்தம் வெடித்தது.

திங்கள் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில், ஸ்டொக்வெல் டே மற்றும் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் மெக்கேயும், கனேடிய தமிழர்களின் விமர்சனத்தை நிராகரித்தனர். புலிகளைத் தடைசெய்வது இலங்கை அரசியல் ஸ்தாபனத்திற்கும் புலிகளுக்கும் இடையில் ஒரு நிரந்தர சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் என கனேடியத் தமிழர்கள் விமர்சித்திருந்தனர்.

ஆயினும், இலங்கை ஆளும் தட்டும் மற்றும் சிங்களப் பேரினவாதிகளும் கனேடிய அரசாங்கத்தின் முடிவை உற்சாகத்துடன் வரவேற்றிருப்பார்கள் என்பதில் கேள்வி கிடையாது. இந்த முடிவானது புலிகள் ஒரு பொருத்தமான சமாதானப் பங்காளிகள் அல்ல என்ற தமது கூற்றுக்கு ஒரு நம்பகத் தன்மையை பெற்றுக்கொள்வதன் மூலமும் மற்றும் தெற்காசியாவிற்கு வெளியில் இலங்கைத் தமிழர்கள் பெருந்தொகையாக வாழும் நாடான கனடாவில் நிதி சேகரிக்க புலிகளுக்கு உள்ள இயலுமையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதன் மூலமும் புலிகளுக்கு எதிராக தமது கைகளை பலப்படுத்தும் என அவர்கள் நம்புகின்றனர்.

அரச கட்டுப்பாட்டிலான டெயிலி நியூஸ் பத்திரிகை, கனேடியத் தடையானது எதிர்வரும் சமாதானப் பேச்சுவார்த்தையில் "அரசாங்கப் பிரதிநிதிகளை ஒரு ஸ்திரமான நிலையில் இருத்தும்" எனவும் "இறுதியாக உலக சமூகம் புலிகளுக்கு நேர் எதிராக சிறிது சிறிதாக அரசாங்கத்திற்கு உதவ வருகின்றது" எனவும் செருக்குடன் குறிப்பிட்டுள்ளது.

வலதுசாரி மற்றும் காத்திரமான இனவாதப் பத்திரிகையான ஐலண்ட், கனடாவின் பழமைவாத அரசாங்கத்தின் தலைமையை பின்பற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை தூண்டியது. "ஒரு பயங்கரவாத குழுவுக்கு சுதந்திரம் கொடுப்பதன் ஆபத்தை கனடா புரிந்துகொண்டுள்ளதோடு அது வெளியேற்றப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியம் மேலும் பித்தலாட்டங்களின்றி பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்."

சிங்களப் பேரினவாதத்தின் மிகப் போர்க்குணம் மிக்க பெளத்த பிக்குகளின் தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி, புலிகளுக்கு எதிராக மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்காமைக்காக இலங்கை அரசாங்கத்தை விமர்சித்ததுடன் கனேடிய அரசாங்கத்தின் முடிவை மிகவும் பாராட்டியது.

நோர்வே தலைமையிலான இலங்கைக் கண்காணிப்புக் குழு, 2002ல் இருந்து அமுலில் உள்ள யுத்த நிறுத்தம் முறிவின் விளிம்பில் இருப்பதாகவும் நாடு ஒட்டுமொத்த உள்நாட்டு யுத்ததிற்குள் மீண்டும் மூழ்கக் கூடும் எனவும் மீண்டும் மீண்டும் எச்சரித்தது.

புலிகள் மீதான கனேடிய தடையானது, இலங்கையில் உள்ள அத்தகைய சக்திகளையும் மற்றும் அவர்களின் சிங்கள பேரினவாத குட்டி முதலாளித்துவ பங்காளிகளையும் உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த சக்திகள் புலிகளுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்படுவதையும் மற்றும் சமஷ்டி அல்லது சமஷ்டி அற்ற அரசில் புலிகளுக்கு குறிப்பிடத்தக்க அதிகாரம் வழங்குவதற்கு எதிராக நாடு புதிய உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளப்படுவதையும் விரும்புகின்றன. இது இலங்கை மக்களை புதிய வன்முறை மற்றும் பயங்கரவாத படுகுழிக்குள் தள்ள வழிவகுப்பவர்களுக்கே துணைபுரியும்.

புலிகள் மீதான பழமைவாத அரசாங்கத்தின் தடையானது, கனடாவின் வெளிநாட்டு கொள்கையையும் மற்றும் பூகோள அரசியல் பங்கையும் தெளிவாக வலதுபக்கம் திருப்பும் புதிய அரசாங்கத்தின் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கைகளில் புதியதாகும். அரசாங்கத்தின் அதிகாரங்களை ஹமாஸ் பெற்றுக்கொண்டதை அடுத்து பாலஸ்தீன அதிகாரத்திற்கான நிதிகளை வெட்டித்தள்ளுவதாக உலகில் முதலாவதாக அறிவித்தது கனேடிய அரசாங்கமேயாகும். கடந்த மாதம் பிரதமர் ஸ்டெபென் ஹார்பர், ஆப்கானிஸ்தானில் கனேடிய ஆயுதப் படைகளின் நீண்ட கால தலையீட்டை முன்னெடுப்பதற்கான தமது அரசாங்கத்தின் விருப்பத்தை சுட்டிக்காட்டவும் மற்றும் அவரது சொந்த வார்த்தைகளில் கூறினால், உலகின் பெரும் வல்லரசுகளின் கண்களுக்கு தெரியும் வகையில் மிகவும் "ஆரோக்கியமான" ஒரு வெளிநாட்டு மற்றும் இராணுவ கொள்கையை பின்பற்றும் தமது எண்ணத்தை வெளிக்காட்டவும் ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தார்.

Top of page