WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Bush administration presses for speedy adoption of
Indo-US nuclear accord
இந்திய-அமெரிக்க அணுக்கருஆற்றல் உடன்பாட்டை விரைவாக ஏற்றுக்கொள்வதற்கு புஷ்
நிர்வாகம் அழுத்தம் கொடுக்கிறது
By our reporter
1 April 2006
Use this
version to print | Send this link by
email | Email the author|
Featured Articles
மார்ச் 2-ல் அமெரிக்க ஜனாதிபதியும், மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும்
அறிவித்த அணுக்கரு ஆற்றல் உடன்படிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்கு மிகவும் வேகத்துடன்
புஷ் நிர்வாகம் முயன்று வருகிறது.
உலக அணுக்கருஆற்றல் நெறிமுறை ஆட்சிக்குள்ளே இந்தியாவிற்கு சிறப்பு அந்தஸ்த்தை
வழங்குவதற்கும் மற்றும் ஒரு அணுக்கரு ஆற்றல் ஆயுத அரசு என்ற உண்மையான அங்கீகாரத்தை வழங்குவதற்கும்
வகைசெய்யும் இந்த உடன்பாடு, ஆசியாவிலும் இந்து மகாசமுத்திர பிராந்தியத்திலும், சீனாவிற்கு ஒரு புவிசார்
அரசியல் எதிர் எடையாக இந்தியா சேவை செய்ய வேண்டும் என்ற கருத்துடனும் அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமாக
இந்தியாவை கட்டுபடுத்துவதற்கான வழியாகவும் புஷ் நிர்வாகத்தினால் கருதப்படுகிறது
அமெரிக்க அணுசக்தி சட்டத்தின் பிரிவுகளில் இருந்து, இந்தியாவிற்கு விதிவிலக்கு
அளிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் தரும் வெள்ளை மாளிகை உருவாக்கியுள்ள சட்டம், இந்திய அமெரிக்க உடன்படிக்கைக்கு
இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு பின்னர், மார்ச்சின் நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தின் இரு
சபைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. வெளியுறவுத்துறைறையில் இரண்டாவது உயர்ந்த பதவியிலிருக்கும் நிக்கோலஸ்
பேர்ன்ஸ் புதன் கிழமையன்று வெளியுறவுகள் தொடர்பாக செனட் குழுவிற்கு உடன்படிக்கை குறித்து இரகசிய குறிப்பை
வழங்கினார். இந்தியா அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டு அவற்றை மீறி
(NPT) அணுஆயுதங்களை
தயாரித்தாலும் அமெரிக்கா மற்றும் சர்வதேச பொதுத்தேவைகளுக்கான அணுக்கரு ஆற்றல் தொழில்நுட்பத்தை இந்தியா
பெறுவதில் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு புஷ் நிர்வாகம் முழுமையான அழுத்தத்தை உறுதிப்படுத்த, அடுத்த
வாரம், பேர்ன்சின் தலைவரான கொண்டலிசா ரைஸ் பகிரங்கமாக அதே குழுவின் முன்பாக சாட்சியமளிக்கவுள்ளார்.
இந்திய-அமெரிக்க உடன்பாட்டின் சிறப்புக்கள் குறித்து அமெரிக்க அரசியல் செல்வந்த தட்டினரிடையே பிளவு ஏற்பட்டிருக்கிறது
ஜனநாயக கட்சியின் சில பகுதியினர், ஆயுதங்கள் கட்டுப்பாட்டு நிபுணர்கள் மற்றும் நியூயார்க் டைம்ஸ்
எச்சரித்திருப்பது என்னவென்றால், அணுஆயுதங்கள் தொடர்பாக ஒரு பாரம்பரிய பெரு-வல்லரசு ஏகபோகத்தை
நிலைநாட்ட அமெரிக்காவிற்கு உதவிய, சர்வதேச அணுநெறிமுறை ஆட்சியை அது மரணம் விளைவிக்கும் கீழறுத்தலை செய்வதற்கு
அச்சுறுத்துகிறது.
அவர்களது கவலைகளில் பிரதானமாக இடம்பெற்றிருப்பது, இந்தியா தன்னைத்தானே
அணுஆயுத அரசு என்று அறிவித்துக் கொண்டிருந்தாலும், அதற்கு உயர் இராணுவமல்லாத தொழில்நுட்பத்தை முழுமையாக
பெறுவதற்கு வகைசெய்ய வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்தி வருவதற்கும், அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்
NPT
கையெழுத்திட்டுள்ள ஒரு நாடு என்ற முறையில் ஒரு சிவிலியன் அணுத்திட்டத்தின் எல்லாக் கட்டங்களையும் மேம்படுத்துவதற்கு
தரப்பட்டுள்ள உரிமையை பயன்படுத்துமானால், இராணுவ நடவடிக்கை என்று ஈரானை அமெரிக்கா அச்சுறுத்திக்
கொண்டிருப்பதற்கும், இடையிலான அப்பட்டமான முரண்பாடுகள்தான்.
சீனாவை எதிர்ப்பதற்கு அதன் மூலோபாயத்திற்காக இந்தியாவுடன் ஒரு மூலோபாய
பங்காண்மையை அது பின்தொடர்வதற்கும் புஷ் நிர்வாகம் அணு ஒப்பந்தத்தை அடையளப்படுத்துவதற்கும் அப்பட்டமான
முறையில் கவலைகள் நிலவுகின்றன.
ஹென்றி கிசிங்கர், இந்திய-அமெரிக்க அணுக்கருஆற்றல் ஒப்பந்தத்தை ஒப்புதல்
அளித்திருந்தாலும் ஒரு வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் அதை சீனாவிற்கு எதிரானது என்று உரத்து கூறியிருப்பதற்கு
எதிராக எச்சரித்துள்ளார் மற்றும் அமெரிக்காவின் ஒரு பிரதிநிதியாக இந்தியாவை உருவாக்கிவிட முடியும் என்று
அளவிற்கு அதிகமாக புஷ் நிர்வாகம் நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். "அமெரிக்காவின் இந்திய கொள்கை
அடிக்கடி சீனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழி என்று நியாயப்படுத்தி வருகிறது" என்று எழுதினார்.
"அமெரிக்காவின் பூகோள மூலோபாயம், புதிய ஒரு உலக ஒழுங்கை கட்டுவதில் இந்தியா
பங்கெடுத்துக்கொள்வதிலிருந்து அமெரிக்காவின் பூகோள மூலோபாயம் பயன்தரும். ஆனால் சீனாவுடன்
அமெரிக்காவின் வாளாக இந்தியா செயல்படாது மற்றும் அதன் பங்கை பயன்படுத்தும் எந்த முயற்சியையும்
குற்றமாகக் கொண்டு சினம்கொள்ள வைக்கும்."
இந்தியாவின் அணுத்திட்டத்தில் பெரும் பகுதி தற்போது சர்வதேச அணுசக்தி அமைப்பின்
கண்காணிப்பின்கீழ் வருவதால், அணுஆயுத பரவல் தடைக்கு கணிசமான பங்களிப்பை இந்த உடன்படிக்கை வழங்குமென
கூறி பேர்ன்ஸ், ரைஸ் மற்றும் ஜனாதிபதி புஷ் ஆகியோர் இந்த விமர்சனங்களை எதிர்ப்பதற்கு முயன்று வருகின்றனர்.
ஆனால் இது ஒரு முன்மாதிரி அணு பரவல் தடை உடன்படிக்கையை இந்தியா கொண்டிருக்கிறது என்ற அவர்களது
மற்றொரு பிரதானமான கூற்றோடு சரியாக பொருந்திவரவில்லை.
இந்தியா அதன் இராணுவமல்லாத அணுக்கரு ஆற்றல் திட்டத்தை விரிவுபடுத்துகின்ற காரணத்தினால்
அமெரிக்க தேசிய நலனுக்கானது என்று அந்த உடன்படிக்கையை அவர்கள் ஊட்டி வளர்த்து வருகின்றனர் உலக சந்தையில்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவிற்காக அமெரிக்காவுடன் அது போட்டி போடாது. வெளிநாட்டு ஆற்றல் இறக்குமதிகளை,
மிக அதிகமான அளவிற்கு சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்வதற்கு ஒரு வழியை கண்டுபிடிப்பதில், இந்தியா
ஆர்வத்துடன் உள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை, ஆனால் இரண்டாவது பிரதான நோக்க பின்னணியாக
அமைந்திருப்பது என்னவென்றால், வெளிநாட்டு இராணுவமல்லாத அணுக்கரு ஆற்றல் தொழில்நுட்பத்தையும் யுரேனியத்தையும்
பெறுகின்ற அதன் அபிலாஷைக்கு உள்நாட்டிற்குள் அதன் அணுத்திட்ட வளங்களை அணுஆயுதங்கள் தயாரிப்பதற்கு திறந்து
விட வேண்டும் என்பதாகும்.
இந்த உடன்படிக்கை ஒரு சிறந்த வணிக முன்மொழிவு என்று, புஷ் நிர்வாக
பேச்சாளர்கள், அறிவித்துள்ளனர், அமெரிக்க நிறுவனங்கள், 2012 வாக்கில் இந்தியா எட்டு புதிய அணு- மின்சார
உற்பத்தி நிலையங்களை கட்டுவதற்கு, திட்டமிட்டிருப்பதில் இரண்டு ஒப்பந்தங்களை வென்றெடுக்க முடியும் என்று
கூறுகின்றனர். அமெரிக்க ஆயுதங்கள், தயாரிப்பாளர்களும் கூட, தாராளமாக பயன்களை பெறவிருக்கின்றனர்
அல்லது அணுசக்தி பேரத்தோடும், மற்றும் அதன்மூலம் மூலோபாய பங்காண்மைகளாலும் இந்தியாவின் இராணுவத்திற்கு
முன்னேறிய அமெரிக்க, ஆயுத முறைகளை விற்பதற்கான வழியை இறுக்கமாக்கும் என்று சிந்தித்துக்
கொண்டிருக்கின்றனர், அது தற்போது ஒரு பாரியளவு விரிவாக்க திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ரஷ்யா - இவை அனைத்துமே அணுக்கரு
ஆற்றல் அளிப்பவர்கள் குழுவில் முன்னணி உறுப்பினர்கள் மற்றும் இந்தியாவின் சிவிலியன் தொழில்நுட்பத்திற்கு தாங்களே
சொந்த முறையில் விற்பனைகளை செய்ய முடியும் என்ற அபிலாஷைகளை கொண்டிருக்கின்றன---- எனவே அவை
உலக அணு நெறிமுறை ஆட்சிக்குள் இந்தியாவிற்கு ஒரு தனித்தன்மை கொண்ட அந்தஸ்த்தை வழங்குவதற்கான
அமெரிக்கத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உண்மையிலேயே, வாஷிங்டனுக்கு எரிச்சலூட்டுகின்ற வகையில், ரஷ்யா
இந்திய-அமெரிக்க உடன்படிக்கை பற்றிய அறிவிப்பு வந்தவுடன், மகாராஷ்டிரா, தாராப்பூரில் உள்ள இரண்டு
அமெரிக்க அணுஉலைக்கு யுரேனியத்தை மீண்டும் வழங்குவதற்கு உறுதி அளித்துள்ளது. அணு எரிபொருள் பற்றாக்குறை
பாதுகாப்பு தொடர்பான ஒரு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் யுரேனியம், அனுப்பப்பட்டதாக ரஷ்யா தனது
நடவடிக்கையை நியாயப்படுத்திய அதே நேரத்தில், வாஷிங்டன் இந்தியாவிற்கு, அணு எரிபொருள் மற்றும்
தொழில்நுட்பம் மாற்றப்படுவது தொடர்பான தடையை அணு சப்ளையர்கள் குழு சம்பிரதாயமாக நீக்குகின்ற
வரையிலும், அமெரிக்காவை எதிர்பார்த்து அத்தகைய, ஏற்றுமதிகளை செய்திருக்க வேண்டும் என்று வாஷிங்டன்
கண்டித்தது.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை கீழறுக்கின்ற வகையில் நடைபெறுகின்ற எந்த
பேரம் குறித்தும் சீனா தனது கவலைகளை தெரிவித்தது --அவற்றை இந்திய-அமெரிக்க உடன்படிக்கை தெளிவாக
மீறுகிறது-- ஆனால் சீனா மிகவும் எச்சரிக்கையோடு செயல்படுகிறது அது இந்தியாவை பகைத்துக்கொள்ள
விரும்பவில்லை மற்றும் அதனால் வாஷிங்டனை அரவணைத்துக் கொள்வதற்காக அதனை விரட்டிவிடவும் விரும்பவில்லை.
ஈராக் மீது அமெரிக்கா சட்டவிரோதமாக, படையெடுத்ததற்கு பதில் அளிக்கின்ற வகையில், புதுடெல்லி,
பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளை கடைப்பிடித்து வருகிறது. தசாப்தகால பழைய எல்லைத்தகராறை தீர்த்து
வைக்கும் வழியாக தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன, மற்றும் இந்திய சீன வர்த்தகம்
வெடித்துச் சிதறும் அளவில் உள்ளது, இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின்
இரண்டாவது மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக சீனா வளர்ந்து வருகிறது.
இந்தியாவின் நீண்டகால போட்டி நாடான பாகிஸ்தான், இந்திய-அமெரிக்க அணு
உடன்பாட்டிற்கு விடை அளிப்பதில் அத்தகைய விவேகத்தை காட்டவில்லை. அந்த உடன்பாட்டால் மூன்று வகையில்
அச்சுறுத்தப்பட்டிருப்பதாக இஸ்லாமாபா கருதுகிறது:
முதலாவதாக, அந்த உடன்படிக்கையுடன் வாஷிங்டன் இந்தியாவுடன்
ஒரு பங்காளராக செயல்படுவதில் எவ்வளவு ஆர்வத்துடன் உள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது;
இரண்டாவது இந்தியாவின் அணு-ஆயுத திட்டத்தை பெருக்கும் மற்றும்
மூன்றாவதாக, ஏற்கனவே பாகிஸ்தானுக்கு மேலாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இரு நாடுகளுக்கும்
இடையில் நிலவுகின்ற பிளவை அதிகரிக்க செய்யும் என்பதனாலாகும்.
பாகிஸ்தானுக்கு இதுபோன்றதொரு விதிவிலக்கை வழங்கும் அமெரிக்க
பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக வாஷிங்டன் அறிவித்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.
மாறாக, அது, பாகிஸ்தானுக்கு தர முன்வந்தது, பாகிஸ்தானும் இந்தியாவை போன்று வெளிநாட்டு ஆற்றல்
இறக்குமதியை சார்ந்துள்ள காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தித்திட்டங்களை வளர்ப்பதற்கு உதவ முன்வந்திருக்கிறது.
தெற்கு ஆசியாவில் இந்த உடன்படிக்கை "அதிகார சமநிலையை" சீர்குலைத்துவிடும்
என்று பாகிஸ்தானின் இராணுவ பலம்பொருந்திய மனிதர் பர்வேஸ் முஷாரஃப் எச்சரித்துள்ளார். இராணுவமல்லாத
அணுக்கரு ஆற்றல் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு மாற்றித் தருவதற்கான தடையை நீக்குவது என்ற அமெரிக்காவின்
முடிவு, புதுதில்லியின், வழிகாட்டுதலை, பின்பற்றி இதர நாடுகளும், அணுஆயுதங்களை, தயாரிப்பதை ஊக்குவிக்கும்
என்று இதற்கிடையில், அவரது வெளியுறவு அமைச்சர் குர்ஷித் முஹம்மது கசூரி எச்சரித்துள்ளார்:
"ஒட்டுமொத்த அணுஆயுத பரவல் தடையின் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுவிட்டன.
....இதே வழியில் பிறநாடுகளும், செல்வதற்கு அதிக காலம் ஆகாது" என்று ஃபினான்சியல் டைம்ஸிற்கு
அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
"அணுஆயுதங்கள் அதிகாரத்திற்கான நாணயமாகும் மற்றும் பல நாடுகள்
[அந்த நாணயத்தை]
பயன்படுத்த விரும்பும். இந்த நிலை ஏற்பட்டவுடன் NPT-ன்
வரலாறும் முடிந்துவிடும். ஈரான் மட்டுமல்ல, ஆனால் வடகொரியா, பிரேசில், அர்ஜன்டினா மற்றும் பாகிஸ்தான்
வேறுபட்ட முறையில் சிந்திக்கும்" என்று கசூரி தொடர்ந்து கூறினார்.
அமெரிக்காவின் கொள்கையினால், பாகிஸ்தான் சீனாவிற்கு நெருக்கமாக வருவதற்கு,
உந்தப்படும் என்று கசூரி சமிக்கை காட்டினார். உண்மையிலேயே, இஸ்லாபாத்திற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையில் நீண்டகால
மற்றும் வளர்ந்துவரும் உறவுகள் உள்ளன. இஸ்லாமாபாத்தின் இராணுவமல்லாத அணுத்திட்டத்திற்கு உதவ அமெரிக்கா
தயக்கம் காட்டி வந்த நேரத்திலேயே, ஏற்கனவே சீனா, பாகிஸ்தான் மாகாணமான பஞ்சாப்பில் ஒரு அணு
உலையை கட்டியுள்ளது, மற்றும் தெற்கு ஆசியாவிற்கு புஷ் சுற்றுப் பயணம், மேற்கொள்வதற்கு முந்திய வாரத்தில்
முஷாரஃப் பெய்ஜிங் விஜயம் மேற்கொண்ட நேரத்தில், சீனா மேலும் இரண்டு அணு மின்சார தொழிற் கூடங்களை
பாகிஸ்தானுக்கு விற்பதற்கு முன்வந்தது.
பாகிஸ்தானின் அரசியல் மற்றும், புவிசார்அரசியல் செல்வந்தத்தட்டினரிடையே வாஷிங்டன்
இந்தியாவை அரவணைத்துக் கொண்டிருப்பது தொடர்பாக பெறும் கசப்புணர்வு நிலவுகிறது மற்றும் தங்களது, விருப்பத்
தேர்வுகள் தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக விவாதம் நடைபெற்று வருகிறது. இது
அண்மையில் இஸ்லாமாபாத் மூலோபாய ஆய்வு அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் எதிரொலித்தது,
Dawn
தகவலின்படி, அந்த அரங்கில் கலந்து கொண்ட இரண்டு முதன்மை பேச்சாளர்கள், ஒரு ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி
மற்றும் பாதுகாப்பு ஆய்வாளரான, டாக்டர் சிரின் மசாரி இருவரும் பயங்கரவாதத்தின் மீதான போரில் அமெரிக்காவுடன்
முழு ஒத்துழைப்பு தந்து வருவதில், "ஒரு தற்காலிகமாக இடைநிறுத்தத்தின்" மூலம் பாகிஸ்தான் பதிலடிகொடுக்க
வேண்டும் என்று வலியுறுத்தினர்.
See Also:
இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை புஷ் உறுதிசெய்கிறார்
இந்தியாவில் புஷ்ஷிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்: ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு ஒரு சர்வதேச சோசலிச
மூலோபாயம்
Top of page |