:
ஆசியா
:
சீனா
A closer Russia-China "strategic partnership" cemented
with oil and gas
ஒரு நெருக்கமான ரஷ்ய-சீன "மூலோபாய பங்காண்மை" எண்ணெய் மற்றும் எரிவாயுவினால்
உறுதியாக்கப்படுகின்றது
By John Chan
4 April 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மார்ச் 21-22 இல் சீனாவிற்கு விஜயம் செய்தது,
இந்த இரண்டு நாடுகள் மீதும் வாஷிங்டனின் அதிகரித்து வரும் விரோத நிலைப்பாட்டிற்கு மற்றொரு பதில் நடவடிக்கையாக
மாஸ்கோவும் பெய்ஜிங்கும் மேலும் நெருங்கி வருவதற்கான சமிக்கையாகும்.
இது ஓராண்டிற்குள் சீனா ஜனாதிபதி ஹு ஜின்டாவோவுடனான புட்டினின் ஐந்தாவது
சந்திப்பீகும். 1000 அதிகாரிகள் மற்றும் வணிகர்களின் ஒரு முன்னோருபோதுமில்லாதளவிலான பிரநிதிகளுடன் அவர்
சென்றிருந்தார். புட்டின் ரஷ்ய பத்திரிகையாளர்களிடம் "ஒரு ஆயிரம் பேர். அவர்களுக்கெல்லாம்---- நான்
இதை வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்----ஏதோ ஒரு திட்டவட்டமான செயலில் ஈடுபட்டிருக்கிறார். முதலில், எங்களது
ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்துவதற்கு இட்டுச் செல்லும் வகையில் ரஷ்யாவும் சீனாவும் மிக உயர்ந்த அளவிற்கு,
ஒன்றுடன் ஒன்று தாக்கத்தை கொடுக்கும் வகையில் வெற்றியடைந்திருக்கிறது என்பதற்கு இது சான்று உடையதாக உள்ளது."
என குறிப்பிட்டார்.
பெய்ஜிங்கில் சீனாவின் "ரஷ்ய ஆண்டு" தொடக்க விழாவில் புட்டின் கலந்துகொண்டார்-----அது
பல்வேறு கலாச்சார மற்றும் வணிக சம்பவங்கள் இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்காக நடத்தப்படுவதாகும்.
அடுத்த ஆண்டு ரஷ்ய அரசாங்கம் தனது சொந்த "சீனா ஆண்டை" நடத்த திட்டமிட்டிருக்கிறது. ரஷ்ய எண்ணெய்,
மூலப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுக்கான சீனாவின் விரிவடைந்து வரும் தேவை பெருமளவு சென்ற ஆண்டு 37.1
சதவீதத்தால் உயர்ந்தது. இந்த இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்காக பெய்ஜிங்கில் ஒரு சீனோ-ரஷ்ய
பொருளாதார சந்திப்பு நடைபெற்றது.
புட்டினின் பயணத்தின் ஒரு முக்கிய கவனம் எண்ணெய் மற்றும் எரிவாயுவாகும். இயற்கை
எரிவாயு வழங்கீட்டாளர் Gazprom,
குழாய் இணைப்பு ஏகபோக நிறுவனமான
Transneft
மற்றும் மிகப்பெரிய எண்ணெய் நிறுவன Rosneft
இன் தலைமை நிர்வாகிகள் ரஷ்ய தூதுக்குழுவில் இடம்பெற்றனர்.
கையெழுத்திடப்பட்ட 29 உடன்படிக்கைகளில், மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த ஒரு பேரமாக கிழக்கு மற்றும் மேற்கு
சைபீரியாவிலிருந்து சீனாவிற்கு 2011 அளவில் 10 பில்லியன் டாலர்கள் மொத்த செலவில் இரண்டு குழாய்
இணைப்புக்களை உருவாக்குவது அடங்குகின்றது.
சீனாவிற்கு ஆண்டிற்கு 60 முதல் 80 பில்லியன் கனமீட்டர்கள், எரிவாயுவை
வழங்குவதற்கு ரஷ்யா சம்மதித்தது இது 2004 இல் சீனா மொத்தமாக நுகர்ந்ததை விட இரண்டு மடங்காகும்.
சீன உடன்படிக்கையின் இந்த பெரிய அளவு ஏற்கனவே ஐரோப்பாவில் கவலைகளை தூண்டிவிட்டிருக்கிறது. அவற்றின்
எரிவாயுவின் 70 சதவீதத்தை ரஷ்யாவில் சார்ந்திருப்பதால் ஐரோப்பிய சந்தைகளுக்கான விநியோகம் மீதான
தாக்கத்தைப்பற்றி கவலை கொண்டுள்ளன.
ஐரோப்பாவில் வெளியிடப்பட்ட கருத்துகளுக்கு பதில் அளித்த
Gazprom
பேச்சாளரான செர்கி குப்ரியானோவ், நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படும் என்று
உறுதியளித்தார். "என்றாலும், அவற்றின் பெருகிவரும் தேவைகளுக்கான பிரதிபலிப்பாக ஐரோப்பாவிற்கு எரிவாயு
விநியோகத்தை எதிர்காலத்தில் அதிகரிப்பது என்பது சீனாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான
சமரசப்படுத்தப்படும் விடயமாக அமையும்" என்று அவர் எச்சரித்தார்.
ரஷ்யா உலகில் இயற்கை எரிவாயுவின் மிகப்பெரும் இருப்பைக்கொண்டுள்ளது மற்றும்
இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகும். என்றாலும் தற்போது, ரஷ்யா எரிவாயுவை வழங்கவில்லை
மற்றும் எண்ணெயின் சீன இறக்குமதிகளில் 5 சதவீதத்தை மட்டுமே வழங்குகிறது. 2010 வாக்கில், தனது மொத்த
ஆற்றல் நுகர்வில் எரிவாயுவின் அளவை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்கை சீனா வென்றெடுப்பதற்கு உதவியாக
இந்த குழாய் இணைப்பு பேரம் அமையும்.
சீனாவின் வடகிழக்கு நகரமான டாக்கிங்கிற்கு எண்ணெய் குழாய் இணைப்பை
கட்டுவதற்கான ஒரு உடன்படிக்கையை 2003இல் மாஸ்கோ இரத்து செய்த பின்னர் இந்த எரிவாயு பேரம்
தெளிவாக பெய்ஜிங்கிற்கு உற்சாகம் அளிப்பதாகும். மாறாக குறிப்பாக ஜப்பானுக்கு எண்ணெய் ஏற்றுமதிகளுக்கு
உதவுவதற்காக, பசிபிக் துறைமுகமான நக்கோட்காவிற்கு ஒரு கிழக்கு சைபீரிய - பசிபிக் மகா சமுத்திர
(ESPO)
குழாய் இணைப்பை கட்டுவதற்கான ஒரு ஜப்பானிய முன்மொழிவை
ஏற்றுக்கொள்ள ரஷ்யா முடிவு செய்தது.
உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் நுகரும் நாடாக உள்ள சீனா, ரஷ்யாவின்
விநியோகங்களை பெறுவதில் ஆர்வமாக உள்ளது. ESPO
இணைப்பிலிருந்து டாங்கிற்கு ஒரு துணை குழாய் இணைப்பு
அமைக்கப்படும் என்பதில் "சந்தேகத்திற்கு இடமில்லை" என்று
புட்டின் அறிவித்தார். ஆனால் அதற்கு காலக்கெடு எதுவும் தரப்படவில்லை. தற்பொழுது சீனாவிற்கு ரஷ்யாவின்
எண்ணெய் ஏற்கெனவே சுமை அதிகமாக உள்ள ரயில்பாதை வழியாக அனுப்பப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு அளவை
விட ஏறத்தாழ இரண்டு மடங்காக, இந்த ஆண்டு சீனாவிற்கு எண்ணெய்யின் ஏறத்தாழ 15 மில்லியன் டன்கள்
அனுப்பப்படும் என்று ரஷ்யா எதிர்பார்க்கின்றன.
விலை தொடர்பான சிக்கலான பிரச்சினை உட்பட எரிவாயு குழாய் இணைப்பு பற்றிய
விவரங்கள் எதையும், மாஸ்கோவும் பெய்ஜிங்கும் இன்னும் உறுதியாக்கவில்லை என்றாலும், சீனாவின் எரிசக்தி
விநியோகத்தில் ஒரு மையப்பங்கு வகிப்பதற்கு ரஷ்யா வெளிப்படையாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
எரிசக்தி இராஜதந்திரம்
சர்வதேச ஆற்றல் அமைப்பின்படி எரிவாயு தற்போது பூகோள எரிசக்தியில் 21
சதவீதத்தை வழங்கி வருகிறது மற்றும் 2030 அளவில் உலகின் இரண்டாவது பெரிய எரிசக்தி வளமான நிலக்கரியை
கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் எரிவாயு இருப்புக்கள் பெரும்பாலும் மூன்று நாடுகளில்
குவிந்துள்ளன:
ரஷ்யா, ஈரான் மற்றும் கட்டார்.
ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதும் மற்றும் ஈரானை அச்சுறுத்தி
வருவதும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள அமெரிக்காவின் போட்டியாளர்களுக்கு மத்தியகிழக்கின் எண்ணெய் மற்றும்
எரிவாயுவை வாஷிங்டன் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயலுகிறது என்பதை தெளிவாக்குகிறது. ஆக ஐரோப்பிய
நாடுகளுக்கும், சீனா, ஜப்பான், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கும் பாதுகாப்பான மாற்று விநியோகங்களை
பெறுவது ஒரு உயிர்நாடியான பிரச்சினையாக ஆகிவிட்டது. இதில் தெளிவான தேர்வாக ரஷ்யா உள்ளது.
மாஸ்கோவிலுள்ள
Carnegie நிலையத்தின் துணை இயக்குனர் டிமிட்ரி டிரினின் அண்மையில்,
ரஷ்ய ஆளும் வட்டாரங்களின் உணர்வை சுருக்கமாக எடுத்துரைத்தபோது, தனது வலுவான பேரம்பேசும் நிலையை
பெருமளவில் மாஸ்கோ உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சார் மன்னர்
மூன்றாவது அலெக்ஸாண்டர் பிரபல்யமான பிரகடனத்தில் ரஷ்யாவிற்கு இரண்டு கூட்டணியினர்கள் உண்டு:
அவை இராணுவம் மற்றும் கடற்படை என்றார். அந்த வாசகத்தை மாற்றி டிரினின் வெளியிட்ட கருத்தில் "ரஷ்யாவிற்கு
தற்போது இரண்டு கூட்டணியினர்கள் உள்ளனர்:
எண்ணெய் மற்றும் எரிவாயு".
சீனாவை ஒரு சந்தையாக வலுப்படுத்துவதன் மூலம் ரஷ்யா, எரிபொருள்
வழங்கீடுகளை அதிக பயனுள்ள ஒரு மூலோபாய கருவியாக கையாளப்பட முடியும். உக்ரைன், ஜோர்ஜியா மற்றும்
ஆர்மீனியா போன்ற மேற்கு-சார்பு ஆட்சிகளை அச்சுறுத்துவதற்கு மாஸ்கோ ஏற்கெனவே எரிவாயு வழங்கீட்டாளர்
என்ற தனது நிலையை பயன்படுத்திக்கொண்டதுடன் மற்றும் ரஷ்யா மீது அதிக அரசியல் அழுத்தங்களை செலுத்துவதற்கு
எதிராக ஜேர்மனியையும் பிரான்சையும் மறைமுகமாக எச்சரித்துள்ளது.
ஆசியாவிற்கான ஒரு எண்ணெய் விநியோகஸ்தர் என்ற வளர்ந்து வரும் முக்கியத்துவம்
காரணமாக பெரும்பாலும் சென்ற நவம்பரில் நடைபெற்ற முதலாவது கிழக்கு ஆசியன் உச்சி மாநாட்டிற்கு புட்டின்
அழைக்கப்பட்டார். அவர் சியோலுக்கும் விஜயம் செய்து அங்கு தென்கொரியாவிற்கு 2008ல் 6 மில்லியன் கியூபிக்
மீட்டர்கள் எரிவாயு வழங்குவதற்கு, முன்மொழிவு செய்தார் மற்றும் டோக்கியோவிற்கும் விஜயம் செய்தார். அங்கு
கிழக்கு சைபீரியாவில் ஷக்காலின்-I
திட்டத்திலிருந்து, கறந்தெடுக்கப்படும் எரிவாயுவில் 30 சதவீதத்தை
விற்பதற்கு ஜப்பானுக்கு அவர் உறுதியளித்தார்.
டிசம்பரில் பால்டிக் கடல் வழியாக இதர ஐரோப்பிய நாடுகளுக்கும்,
ஜேர்மனிக்கும், எரிவாயுவை வழங்குவதற்கு வடக்கு ஐரோப்பிய குழாய் இணைப்பை 5 பில்லியன் டாலர்களில் ரஷ்யா
கட்ட தொடங்கியபோது Gazprom
உக்ரேனிலிருந்து எரிவாயுவிற்கு அதிக விலை கோரத்துவங்கியது. இந்த
மோதல் உக்ரேனை மட்டுமே அச்சுறுத்தவில்லை ஆனால், ஐரோப்பாவிற்கே எரிவாயு வழங்கீட்டை வெட்டி விடுகின்ற
கொடூரமான காட்சியையும் எழுப்பியது.
சீனாவுடன் புட்டின் செய்துகொண்ட எரிவாயு பேரத்தை ரஷ்ய செய்தி பத்திரிகைகள்
ஒரு பெரிய சதி என்று பாராட்டின.
Nezavisimaya Gazeta கருத்து தெரிவித்திருந்தது:
"இந்த புதிய திட்டம் சீனாவுடன் மட்டுமல்லாமல் இதர தெற்கு
மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பாதை அமைத்துத் தந்திருக்கிறது மற்றும் அது ஐரோப்பாவிற்கு எரிவாயு
வழங்கீட்டை சார்ந்திருக்கும் நிலையை குறைத்தது," "ஐயுறவாதிகளே கூட சீனாவுடனான இந்த உடன்படிக்கையை
ஒரு ''புரட்சி'' என்றும் ஒரு பெரும் முன்னேற்றம்'' என்றும் கூறுகின்றனர். இதில் குறிப்பிட வேண்டிய அம்சம்
என்னவென்றால், 2011இல் ஐரோப்பா மட்டுமல்ல ஆனால் ஆசியாவும் ரஷ்யாவின் எரிவாயுவை
சார்ந்திருக்கவேண்டிய நிலை ஏற்படும்" என்று
Vedomosti அறிவித்திருந்தது.
தற்போது, ரஷ்யா மற்றும் சீனாவின் வெளியுறவுக் கொள்கைகள் பரந்தரீதியாக
ஒன்றிணைந்துள்ளன. இரண்டு நாடுகளுமே வாஷிங்டனின் ஆக்கிரமிப்புக் கொள்கைகள் - குறிப்பாக, ஈராக் மற்றும்
ஆப்கனிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புக்கள் மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவம்
நிலைகொண்டிருப்பது தொடர்பாக கவலைகளை பகிர்ந்து கொள்கின்றன. முன்னாள் சோவியத் குடியரசுகளில்
அமெரிக்க ஆதரவு "வண்ணப்புரட்சிகளின்'' விரோதப்போக்கை மாஸ்கோ எதிர்கொண்டுள்ளது. ஜப்பான்,
தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உட்பட கூட்டணிகளின் ஒரு வலைப்பின்னல் மூலம் அமெரிக்க
மூலோபாய கட்டுப்படுத்துதலின் மறைத்துவைக்கமுடியாத கொள்கையை பெய்ஜிங் எதிர்கொண்டுள்ளது.
இதன் ஒரு விளைவாக, இந்த இரண்டு நாடுகளுமே ஒரு நெருக்கமான பொருளாதார
உறவுகளை மட்டுமின்றி ஒரு மூலோபாய உறவையும் நன்றாக உருவாக்கிவருகின்றன. 1989இல் தீயானன்மேன் சதுக்க
படுகொலைகளுக்கு பின்னர் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கொண்டு வந்த ஆயுதங்கள் விற்பனைத்தடை
நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில், சீனா ஏற்கெனவே ரஷ்யாவை ஒருபெரும் ஆயுதங்கள் மற்றும் இராணுவ
தொழில்நுட்ப ஆதாரமாக கருதியிருப்பதுடன் அதற்கு கைமாறாக ரஷ்யாவின் சிதைந்து கொண்டுள்ள
ஆயுததொழில்துறைக்கும் முண்டுகொடுத்து வருகிறது.
புட்டினும் சீன ஜனாதிபதி ஹீவும் தங்களது, "பொதுவான நலன்களை'' ஒரு
கூட்டறிக்கையில் விளக்கினார். அது, சுதந்திர நாடுகளின் இறையாண்மைக்கு மறு உறுதியளித்தது----அதாவது, சீனா
மற்றும் ரஷ்யாவின் நலன்களுக்கு உயிர்நாடியாக உள்ள பிராந்தியங்களில் அமெரிக்க தலையீட்டிற்கு எதிர்ப்பு
தெரிவிப்பதாகும். தெஹ்ரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மற்றும் பொருளாதார தடைகளை அமெரிக்கா
வற்புறுத்துவதற்கு எதிராக, ஈரானின் அணு மோதலில் ஒரு ''அரசியல் மற்றும் இராஜதந்திர'' தீர்விற்க்காக அது
கேட்டுக்கொண்டது.
குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அந்தக் கூட்டறிக்கையில் இந்தியாவுடன், "ஒரு
முக்கோண ஒத்துழைப்பு அமைப்பிற்காக" கேட்டுக்கொண்டதாகும். சீனாவை சுற்றி வளைப்பது உட்பட தனது
பூகோள-அரசியல் திட்டங்களில் ஒரு அங்கமாக இந்தியாவை, ஒரு பெரிய மூலோபாய நேச நாடாக உருவாக்க
புஷ் நிர்வாகம் முயன்று வருகிறது. இதற்கு பதிலாக, அமெரிக்காவிலிருந்து விலகுவதற்கு இந்தியாவை பரிந்து கேட்பதற்கு
சீனாவும் ரஷ்யாவும் முயற்சி செய்கிறது. சென்ற ஆண்டு மத்திய ஆசிய அரசுகளின் ஷங்காய் கூட்டுறவு அமைப்பில்
(SCO)
புது தில்லிக்கு பார்வையாளர் அந்தஸ்த்தை அவை வழங்கின. அந்த கூட்டம் நடைப்பெற்ற கசகாஸ்தானில் மத்திய
ஆசியாவில் தனது இராணுவ தளங்களை மூடிவிடுவதற்கு அமெரிக்கா காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று அந்த
கூட்டம் நடைப்பெற்ற கசகாஸ்தானில் ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டது.
பெய்ஜிங் கூட்டறிக்கை தைவானுக்கு எதிராக சீனாவிற்கு ஆதரவாகவும் அமைந்தது.
சென்ற ஆண்டு பெய்ஜிங் இயற்றிய பிரிவினைவாத-எதிர்ப்புச்சட்டத்தையும் ஆதரித்தது, அது சம்பிரதாய சுதந்திர
பிரகடனத்தை வெளியிடுமானால் தைவானுக்கு எதிராக, இராணுவ படையை பயன்படுத்த அதிகாரம் வழங்கியது. தைவான்
சீனாவின் "உள்விவகாரங்களின்" ஒரு அங்கமாகும் என்றும் இதர நாடுகள் தலையிடக்கூடாது என்றும் அந்தக் கூட்டறிக்கை
அறிவித்தது.
புட்டின் தனது சீனப்பயணத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வ சின்ஹீவா செய்தி நிறுவனத்திற்கு
பேட்டியளித்தபோது முன்னாள் சோவியத் குடியரசுகளான பேலாரஸ், உக்ரைன், ஜோர்ஜியா மற்றும் கிர்கிஸ்தான்
போன்றவற்றில் அமெரிக்க-சார்பு ஆட்சிகளை குறிப்பாக விமர்சித்தார். "ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்ய நிர்பந்திப்பதற்கும்,
கலாச்சார தரங்களையும், மதிப்புகளையும் திணிப்பதற்கும்" அமெரிக்கா முயன்று வருவதாக அவர் கூறினார்.
ரஷ்யாவும் சீனாவும் கூட்டு இராணுவப் பயிற்சிகளையும் நடத்தி வருகின்றன. சென்ற
ஆண்டு, இரண்டு நாடுகளும் முதலாவது போர் பயிற்சிகளில் ஒருங்கிணைந்து----"2005 சமாதான பணித்திட்டத்தை
----சீனக் கடற்பகுதியில் நடத்தின. வெளிப்படையாக குறிப்பிடப்படாவிட்டாலும், அவர்களது கற்பனை "பணித்திட்டத்தின்"
தெளிவான இலக்கு தைய்வானாகும். 2007 இளவேனிற் காலத்தில் ரஷ்யாவின் கொந்தளிப்பான தெற்கு கூட்டாட்சி
மாவட்டம் அல்லது வடக்கு காக்கசஸ் அதன் அருகாமையிலுள்ள ஜோர்ஜியா அஜர்பைஜான், உக்ரைன் மற்றும்
செச்சென்யா உட்பட்ட நாடுகளில் இரண்டாவது கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை ரஷ்யா அறிவித்தது.
இப்படி ரஷ்யாவும் சீனாவும் வளர்த்துக்கொண்டுள்ள உறவுகளுக்கு எதிர்ச்செயலாக வாஷிங்டன்
பின்வாங்குவதற்கு பதிலாக, மேலும் மூர்க்கத்தனமான முறையில் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரிகிறது.
Top of page |