World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: Protests lodged with Gaullist government over police provocations பிரான்ஸ்: கோலிச அரசாங்கத்திடம் போலீஸ் ஆத்திரமூட்டல்கள் தொடர்பாக எதிர்ப்புக்கள் பதிவு செய்யப்படுகின்றன By Rick Kelly and Antoine Lerougetel கடந்த செவ்வாயன்று கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த (CPE) சட்டத்திற்கு எதிராக நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களின்போது போலீசாரின் ஆத்திரமூட்டல்கள் தொடர்பாக புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (LCR) உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசிக்கும், பாரிஸ் போலீஸ் தலைமை அதிகாரிக்கும் ஒரு முறையான எதிர்ப்பு மனுவை கொடுத்துள்ளது. இரகசியமாய் வேலை செய்யும் போலீசார் இளம் கலகக்காரர்கள் போல் காட்டிக்கொண்டு LCR இன்னும் பிற மாணவர், தொழிற்சங்க, இடதுசாரி அமைப்புக்களின் ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பாரிசில் 383 பேர் உட்பட 600க்கும் மேற்பட்டவர்கள் ஏப்ரல் 4ம் தேதி ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டனர்; ஊர்வலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக 2ல் இருந்து 3 மில்லியனுக்கும் மேலானவர்கள் கலந்துகொண்டனர். "சாதாரண உடை போலீஸ்காரர்கள் LCR ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தமை; வெகுஜன ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அவர்களைக் கரைத்துக் கொள்ளுவதற்குக் கூடுதல் வசதியாயிற்று." என்று Le Monde ஏப்ரல் 4ம் தேதி தகவல் கொடுத்துள்ளது. "ஆர்ப்பாட்ட ஆரம்பத்தில் இருந்து LCR எப்பொழுதும் கலந்துகொள்ளும் தளமான Saint-Marcel மெட்ரோ நிலையம் வரை சாதாரண உடையணிந்த போலீசார்களும் ஊர்வலத்தில் கலந்திருந்த வினோத நிலை காணப்பட்டது. அவர்களில் இருபது பேர் எங்களுடைய உறுப்பினர்களுக்கு நடுவில் இருந்தனர். ஊர்வலத்தைவிட்டு வெளியேறுமாறு நாங்கள் அழுத்தம் கொடுத்தோம்; அதன் பின்னர் அவர்களுடைய ஸ்டிக்கர்களை கிழித்தெறிந்தோம்" என்று முக்கியமான அமைப்பாளரான Pierre X குறிப்பிட்டார். சில மணி நேரங்களுக்கு பின்னர் அதே கோட்டுக்களை LCR ஸ்டிக்கர்கர்கள் அலங்கரித்தன. Lutte Ouvrier, CNT மற்றும் தொழிற்சங்கங்களின் ஸ்டிக்கர்களும், Place de la Republique TM CRS (கலவர போலிஸ்) உடன் கைகலப்பில் ஈடுபட்டிருந்த இளம் ஆர்ப்பாட்டர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களுடன் இணைந்து முன்னணியில் இருந்திருந்தவர்களால் அணியப்பட்டிருந்தன." ஏப்ரல் 4ம் தேதி பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த உலக சோசலிச வலைத் தள நிருபர்களும், இரகசிய போலீசார் அல்லது தூண்டிவிடுவோர் தொழிற்சங்க அல்லது மாணவர் சங்க ஸ்டிக்கர்களை அணிந்து வத்திருப்போரை கண்ணுற்றனர். எதிர்ப்பு அணி தொடங்கும் இடத்திற்கு ஒரு தெரு தள்ளி கிட்டத்தட்ட 10 கலவர தடுப்புப் போலீசார், முகத்தை மறைக்கும் தொப்பியணிந்த கறுப்பு மற்றும் அரேபிய இளைஞர்களுடன் ("காலிகள்", சொற்பொருளின்படி "உடைப்பவர்கள்" என்ற குழுவுடன்) சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். "இத்தகைய கறைபடிந்த வழிவகைகள் ஆத்திரமூட்டலை எளிதாக்குகின்றன" என்று LCR இன் Olivier Besancenot கூறினார். LCR இன் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நேற்று உலக சோசலிச வலைத் தளத்திடம் அவர்கள் சார்க்கோசியிடம் இருந்தோ, பாரிஸ் போலீசாரிடம் இருந்தோ கொடுத்த புகாருக்கு பதில் எதையும் இன்னும் பெறவில்லை என்று கூறினார். "போலீசார் இந்த ஸ்டிக்கர்கள், அடையாள பாட்ஜ்கள் ஆகியவற்றை அணிந்தது பற்றி நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்; இது குழப்பத்திற்கு வழி வகுத்திருக்க முடியும்." என்று Solidaires தொழிற்சங்கக் குழுவின் Jean-Michel Nathanson, உலக சோசலிச வலைத்தளத்திடம் கூறினார். "நாங்கள் எப்படிப்பட்ட சட்டபூர்வ நடவடிக்கையை இவர்கள்மீது எடுக்கலாம் என்றும் விவாதித்திக் கொண்டிருக்கிறோம்" என்றார். Lutt Ouvriere செய்தித் தொடர்பாளர் தற்பொழுது அவருடைய அமைப்பு சட்ட பூர்வ நடவடிக்கை எதையும் கொள்ளவில்லை என்றும் ஆனால் கட்சி LCR இன் புகாருக்கு ஆதரவு கொடுப்பதாகவும் தெரிவித்தார்: "எங்களுடைய ஸ்டிக்கர்களை அணிந்துள்ள போலீசாரின் நடவடிக்கைகளினால் இளைஞர்கள் எங்களை குறைகூறக் கூடும்" என்றும் அவர் தெரிவித்தார்.CPE எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பாரிசில் நடந்தபோது, வேலையின்மையில் உள்ள கறுப்பு, அரேபிய இளைஞர்கள் என்று செய்தி ஊடகத்தால் விவரிக்கப்பட்டவர்கள், மாணவ எதிர்ப்பாளர்களை தாக்கியதோடு, மக்கள், கடைகளை கொள்ளையும் அடித்து, கலகப் பிரிவுப் போலீசார் மீது கற்கள் போன்றவற்றையும் வீசினர். பிரான்ஸ் மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்களுடன் சேர்ந்துகொண்டு அரசாங்கம் இத்தகைய ஒதுக்குப்புற வன்முறை நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொண்டு வெகுஜன எதிர்ப்புக்களை இழிவிற்கு உட்படுத்த முயன்றுள்ளது.CPE சட்டத்திற்கு தான் முறையான ஒப்புதலை தர இருப்பதாக ஜனாதிபதி ஜாக் சிராக் கடந்த வாரம் அறிவித்தபோதே வன்முறையை கண்டிக்கும் வகையிலும் குறிப்பைக் காட்டினார். "இங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத வன்முறை, அழிவுச் சம்பவங்களுக்கு போலிக் காரணமாக உள்ளன" என்றார்.இந்த வன்முறையை பயன்படுத்தி பிரெஞ்சு இளைஞர்களை, பிரான்சில் பிறந்தவர்களுக்கு எதிராக புலம்பெயர்ந்தவர்கள் என்ற முறையிலும் பிரிவினையை அரசாங்கம் கையாள முற்பட்டுள்ளது; அத்தகைய பிரிவின் மூலம் வேலையில்லாத மாணவர்களிடையே பிளவு தூண்டிவிடப்படுகிறது. இத்தகைய பிரிவினை, ஆத்திரமூட்டும் உத்திக்கு சார்க்கோசிதான் தலைமை தாங்குகிறார். ஆறு வாரங்களுக்கு முன்பு CPE க்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பிரான்ஸ் நெடுகிலும் நெடுஞ்சாலைகள், வீதிகள் ஆகியவற்றை தடுப்புக்களுக்கு உட்படுத்திய வகையில், நேற்று இன்னும் கூடுதலான கைதுகள் நிகழ்த்தப்பட்டன. ஓர்லி விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட விமானப் பயணிகளை பள்ளி மாணவர்கள் முற்றுகையிட்டு தடுத்தனர். இரயில்வே பாதைகளும் Paris, Lille, Caen, Toulouse ஆகிய நகரங்களில் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாயின. Nouvel Observateur இன் தகவலின்படி போலீசார் வன்முறையை பயன்படுத்தி Toulouse இல் எதிர்ப்பை கலைத்த வகையில், ஐந்து மாணவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசாரின் மிருகத்தனமான தாக்குதல்கள் பற்றி கணக்கிலடங்காத நிகழ்வுகளின் தகவல்கள் வந்துள்ளன. போலீசாரின் கலவரத் தடுப்புபடைப் பிரிவினர் கண்ணீர்ப்புகை குண்டு மற்றும் நீர் பீய்ச்சுதல், வர்ணக் கலவை தோட்டாக்கள் ஆகியவற்றை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தி, அவற்றின்மூலம் இளைஞர்களை கைதும் செய்துள்ளனர். வன்முறையிலேயே பெரிய அளவில் குறிப்பிடத்தக்கது, மார்ச் 18 அன்று போலீசாரின் தடியடிப் பிரயோகத்தினால் தலைக்காயமுற்ற சிரில் பெரெஸ் என்னும் 39 வயது தொலைத் தொடர்பு ஊழியரின் நிலை ஆகும். அடித்தபின் அவரை மிதித்து துவைத்தனர் என்று சாட்சிகள் குறிப்பிட்டுள்ளனர்; 20 நிமிஷத்திற்கு அவரை மருத்துவ உதவிக்கு அழைத்துச் செல்லுவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. இப்பொழுதும் பெரெஸ் கோமா கட்டத்தில்தான் உள்ளார். அவருடைய நரம்பு மண்டலச் செயற்பாடுகள் படிப்படியே முன்னேற்றம் அடைந்துவருவதாக கூறப்பட்டாலும், இவ்வார ஆரம்பத்தில் இதயத்தை சுற்றிய தொற்றுநோய் ஒன்றினால் துளைபோட்டு அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. தொழிலாளரின் குடும்பமும் அவருடைய சங்கமான SUD (Solidarity, Unity, Democracy --- ஒருங்கிணைந்த உணர்வு, ஒற்றுமை, ஜனநாயகம்) உம் தீவிரமான தாக்குதல் என்ற காரணத்திற்காக போலீசார்மீது சட்டபூர்வ நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இரகசிய போலீசாரின் கடந்த செவ்வாயன்று மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் நடவடிக்கைகள் அரசாங்கத்தினதும் அரசுஎந்திரத்தினதும் தூண்டுதல் பங்கை கோடிட்டுக்காட்டுகின்றன. போலீஸ் முகவர்களும், ஆத்திரமூட்டுவோரும் உடைப்பாளர்களை (Casseurs) இயக்கத் தூண்டுவதில் நேரடி பங்கை கொண்டுள்ளனர். பாரிஸ் மற்றும் ஏனைய நகரங்களின் வறிய புறநகர்ப்பகுதிகளில் செயல்படும் போலீசார் நீண்டகாலமாகவே தகவல் கொடுப்பவர்கள், முகவர்கள் ஆகியோரின் ஆகியோரின் வலைப்பின்னலை நிறுவி மற்றும் தங்களுடைய இலக்குகளுக்காக குற்றம்புரிபவர்களை சூழ்ச்சியாக கையாண்டு வருகின்றனர். LCR உடன், உலக சோசலிச வலைத் தளத்திற்கு அரசியல் வேறுபாடுகள் இருந்த போதிலும்கூட, அவ்வமைப்பு, அதன் உறுப்பினர்களையும், ஏனைய மாணவர், தொழிற்சங்க, இடது அரசியல் குழுக்ககளை போலீஸ் வன்முறை, ஆத்திரமூட்டல் இவற்றிற்கு எதிராக நிபந்தனையின்றி காக்கின்றோம், LCR இன் போலீசாருக்கு எதிராக சார்க்கோசியிடம் கொடுக்கப்பட்டுள்ள புகாரை ஆதரிக்கின்றோம்.சார்க்கோசி, சிராக், பிரதம மந்திரி டு வில்ப்பன் மற்றும் பாரிஸ் போலீசார்தான் இத்தகைய ஜனநாயக உரிமைகளின் மீதான நேரடித் தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்க வேண்டும். போலீஸ் முகவர்கள், ஆத்திரமூட்டுவோர் ஆகியோர் வன்முறையை ஏற்படுத்தி அடக்கு முறைக்கு ஒரு போலிக் காரணம் நாடும் முயற்சிகளில் ஆற்றிய பங்கை அம்பலப்படுத்தும் வகையில் அரசாங்கம், போலீஸ் இவற்றில் இருந்து சுயாதீனமான விசாரணை ஒன்று, நடத்தப்பட வேண்டும். |