World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Iraq's "National Security Council": a move toward open dictatorship

ஈராக்கின் "தேசிய பாதுகாப்பு சபை": பகிரங்க சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு நகர்வு

By James Cogan
24 March 2006

Use this version to print | Send this link by email | Email the author

மார்ச் 19 அன்று அறிவிக்கப்பட்டதில் ஒரு நாடாளுமன்றத்திற்கு புறம்பான "தேசிய பாதுகாப்பு சபையை" (NSC) உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது, ஈராக்கில் ஒரு பகிரங்கமான சர்வாதிகார ஆட்சியை நோக்கி புஷ் நிர்வாகம் நகர்வதற்கான ஒரு எச்சரிக்கையாகும்.

ஈராக் "ஜனநாயகத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்ற ஒரு நாடு என்று வெள்ளை மாளிகை சித்தரிப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகள் அதிகரித்தளவில் அம்பலமாகிக்கொண்டு வருகின்றன. 2005 டிசம்பரில் தேர்தல்கள் நடைபெற்று மூன்று மாதங்களுக்கு மேல் ஆன பின்னும், புதிய அரசாங்கம் எதுவும் அமையவில்லை மற்றும் விரைவில் எந்த காலத்திலும் உருவாவதற்கான அறிகுறியும் எதுவுமில்லை. பிரதமர் பெயர்களை, தலைவர் குழு தேர்ந்தெடுப்பதற்கு அரசியலமைப்பில் தேவைப்படுகின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என்பதுடன் எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாதுள்ளது.

இந்த தீர்வு காண இயலாத தேக்கநிலை நீடித்துக் கொண்டிருக்கின்ற வரை, ஈராக் படையெடுப்பிற்கு பிந்திய மேலாதிக்கத்திற்கான அதிகளவு போராட்டம் தெருக்களில் நடைபெற்றுக் கொண்டுள்ளன. பாக்தாத்திலும், அதை சுற்றியுள்ள பிராந்தியங்களிலும் போட்டி ஷியைட் குடிப்படைகளுக்கும் சுன்னிகளுக்கும் இடையில் குறைந்த அளவிற்கான உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெப்ரவரி 22ல் சமாராவிலுள்ள ஷியைட் அல்-அஸ்காரியா மசூதி பேரழிவிற்குட்பட்டதிலிருந்து, குண்டு வீச்சுக்களும், பீரங்கி தாக்குதல்களும், இனச்சுத்திகரிப்பும், குறி வைக்கப்பட்டவர்களை கொலைவெறிக் குழுக்கள் கொல்வதன் மூலமாக இருமதப்பிரிவுகளிலும் நூற்றுக்கணக்கானோர் மடிந்திருக்கின்றனர் என்று குறிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்க துருப்புக்கள் மீது முன்னணி சுன்னி கெரில்லாக்கள் நடத்தி வருகின்ற தாக்குதல்கள் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு புஷ் நிர்வாகத்தின் தீர்வே தேசிய பாதுகாப்பு சபை ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதர் சல்மே கலீல்ஷாத் மற்றும் குர்திஸ் தேசியவாத தலைவரும், வடக்கு ஈராக் குர்திஸ் பிராந்திய தன்னாட்சி அரசாங்கத்தின் (KRG) தலைவருமான மசூத் பர்சானி ஆகியோரது சிந்தனையிலிருந்து உருவானதாகும். கடுமையாக பிளவுபட்டு நிற்கும் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தாலும் அதைப்பற்றி பொருட்படுத்தாமல் ஈராக் அரசை 19 உறுப்பினர் கொண்ட அந்த சபை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் நோக்கமாகும்.

2005 மேயில் அமைக்கப்பட்ட "இடைக்கால'' அரசாங்கத்தின் ஐக்கிய ஈராக் ஷியா கூட்டணி (UIA) மேலாதிக்கம் செலுத்தியுள்ளதையும், நாடாளுமன்றத்தில் அந்தக் கூட்டணி 275 உறுப்பினர்களில் 130 பேரை தனது பக்கம் வைத்திருப்பதையும் குறிப்பாக கீழறுக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு சபை அமைக்க ஆராயப்பட்டு வருகிறது. ஐக்கிய ஈராக் ஷியா கூட்டணியில் இன்றைய பிரதமர் இப்ரஹிம் அல்-ஜாபரியின் தாவா இயக்கமும்; ஈரானோடு தொடர்பு கொண்டுள்ள ஈராக் இஸ்லாமிய புரட்சி சுப்ரீம் கவுன்சிலும் (SCIRI) மதகுருமார் மொக்தாதா அல்-சாதர் தலைமையிலான அடிப்படைவாத இயக்கமும் அடங்கியுள்ளன. அது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், அத்துடன் சமூக சேவைகளை வழங்குகின்ற முக்கியமான அமைச்சக பொறுப்புக்களையும் தன்வசம் வைத்துக் கொள்ள வலியுறுத்தியது.

ஐக்கிய ஈராக் ஷியா கூட்டணியின் கோரிக்கைகளை, குர்து தேசியவாத கூட்டணி, சுன்னி அராபியர்களை கொண்ட கட்சிகள் மற்றும் வெளிநாட்டில் குடியேறி அமெரிக்க படையெடுப்போடு ஒத்துழைத்து புஷ் நிர்வாகம் 2004ல் ஈராக்கின் இடைக்கால பிரதமராக நியமித்த அயாத் அல்லாவி தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆகியவை எதிர்த்தன. குர்து சுன்னி மற்றும் மதச்சார்பற்ற பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக 133 உறுப்பினர்கள் உள்ளதால், அது ஷியாக்கள் கூட்டணி ஒரு அரசாங்கத்தை அமைப்பதை மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்துவதற்கு போதுமான எண்ணிக்கையைவிட அதிகமானதாகும்.

குர்து தேசியவாதிகள், ஜாபரிக்கும், சாதர் குழுவிற்கும், எதிரானவர்கள், அவர்கள், குர்திஸ் பிராந்திய தன்னாட்சி அரசாங்கத்திற்குள் எண்ணெய் வளம்மிக்க நகரமான கிர்குக்கை, சேர்த்துக் கொள்கின்ற குர்துக்களின் முன்னோக்கை, எதிர்த்து வருகின்றன. SCIRI உள்துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, தனது ஆதரவாளர்களை பாதுகாப்பு படைகளுக்குள் ஊடுருவச் செய்து பொதுவாக சுன்னி மக்களுக்கும் குறிப்பாக பாத்திஸ்ட் ஆட்சியின் முன்னாள் சுன்னி ஆதரவாளர்களுக்கு எதிராகவும் ஒரு பயங்கர தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுன்னி கட்சிகளும் அல்லாவியும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஐக்கிய ஈராக் ஷியா கூட்டணியில் ஜாபரி தவிர வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்று குர்துகள் வலியுறுத்தி வருகின்றனர், அதே நேரத்தில் சுன்னி தலைவர்கள், "எந்த இனப்பிரிவுகளையும் சேராதவர்கள்" என்றழைக்கப்படும் தரப்பினரிடம், ஐக்கிய ஈராக் ஷியா கூட்டணி பாதுகாப்பு அமைச்சக பொறுப்பை ஒப்படைத்துவிட வேண்டும் என்று குர்துகள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வார்த்தைகள் சதாம் ஹுசேனின் சுன்னி ஆதிக்க ஆயுதப்படைகளின் முன்னாள் ஜெரனல்களை குறிப்பவை என்று ஷியாக்கள் கருதுகின்றனர்.

ஐக்கிய ஈராக் ஷியா கூட்டணிக்கு எழுந்துள்ள எதிர்ப்பின் பின்னணியாக இருப்பது புஷ் நிர்வாகமாகும். வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் கொந்தளிப்பு பெருகிவருகின்ற சூழ்நிலைகளில், ஈராக்கின் பாதுகாப்புப் படைகளை ஈரான் ஆட்சியோடு அதிக நெருக்கமாக உள்ள ஷியாக்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்று வெள்ளை மாளிகை கருதுகிறது. முன்னாள் பாத்திஸ்ட் நிர்வாக அமைப்போடு சம்மந்தப்பட்ட கட்சிகளை ஈராக் அரசாங்கத்தோடு இணைத்துக் கொள்வது ஆக்கிரமிப்பிற்கு எதிரான கொரில்லா போரை கைவிட கிளர்ச்சி சக்திகளை ஏற்றுக் கொள்ளச் செய்யும் என்று பென்டகன் கருதுகிறது.

இடைவிடாது பல வாரங்கள் அமெரிக்கா நெருக்குதல்களை கொடுத்த பின்னர் இதர குழுக்களோடு சேர்ந்து "ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை" அமைப்பதற்கு ஐக்கிய ஈராக் ஷியா கூட்டணி சம்மதித்திருப்பது, தேசிய பாதுகாப்பு சபை பற்றிய அறிவிப்பிலிருந்து தெளிவானதொரு சமரசமாக தெரிகிறது. பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரிகளின் கருத்துப்படி, அந்த சபை ஜாபரி தலைமையிலான காபந்து அரசாங்கத்திற்கு "ஒரு இணையான ஆணையமாக" செயல்படும். அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நீடித்துக் கொண்டிருக்கும். தேசிய பாதுகாப்பு சபை இராணுவம் மற்றும் போலீசுக்கான கொள்கையை உருவாக்குவதுடன் மற்றும் எண்ணெய் வருவாய்களை பகிர்ந்தளிக்கும். அது ஷியா குடிப்படைகளின் ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்கும், ஆக்கிரமிப்பிற்கு எதிரான கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் மூலோபாயங்களை முன்னெடுத்து வைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பிற்கு எதிரான கிளர்ச்சி மேற்கு மற்றும் மத்திய ஈராக்கிலுள்ள சுன்னி அரபு மாகாணங்களில்தான் பெரும்பாலும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

அத்தகைய தீவிரமான அதிகாரங்களை செயல்படுத்துவதற்கு அரசாங்கத்தை தவிர வேறு எந்த அமைப்பிற்கும் ஈராக் அரசியல் சட்டப்படி எந்த அடிப்படையும் இல்லையென்றாலும், தேசிய பாதுகாப்பு சபை முடிவுகளுக்கு சட்டம் இயற்றுவது தேவைப்பட்டால் மட்டுமே அது நாடாளுமன்றத்திற்கு விடப்படும்.

பாதுகாப்பு சபையில் ஷியா கூட்டணிகளை சேர்ந்த 9 உறுப்பினர்களும், குர்து கட்சிகளை சேர்ந்த 4 உறுப்பினர்களும், சுன்னி கட்சிகளை சார்ந்த 4 உறுப்பினர்களும் மற்றும் இரண்டு "மதச்சார்பற்ற" அரசியல்வாதிகளும் இடம் பெறுவர். இதில் ஷியாக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே சலுகை, எந்த முடிவையும் எடுப்பதற்கு ஷியா கட்சிகளுக்கு ஒரு இரத்து அதிகாரம் (வீட்டோ) வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் அத்தகையதொரு சிறிய குழுவின் கரங்களில் அதிகாரங்கள் குவியலாக வழங்கப்பட்டிருப்பது கலீல்ஷாத் மற்றும் இதர அமெரிக்க அதிகாரிகள், அந்த சபையின் முடிவுகளை தங்களுக்கு சாதகமாக திருப்பிக் கொள்வதற்கு மிக எளிதாக இருக்கும்.

சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தற்போது நடைபெற்று வருகின்ற இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கட்டளையிட்டு வந்தாலும், சாதரிஸ இயக்கத்தின் சக்திகள் போன்ற ஷியாக் குடிப்படைகளில் மிகத் தீவிரமானவர்களுக்கு எதிராக மற்றொரு இரத்தக்களரி ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதுபற்றி கோடிட்டுக் காட்டியுள்ளது. ஈராக்கின் எந்த பகுதியிலும், சாதரிஸ்ட்டுக்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டிக் கொள்வதற்கு அமெரிக்க இராணுவம் அனுமதிக்காது என்று சென்ற மாதம் ஜெனரல் ரிக் லிஞ்ச் அச்சுறுத்தினார். பாக்தாத்தின் மிகப்பெரும்பாலான ஷியா புறநகர் பகுதிகளை சாதரின் மகதி இராணுவம் பகிரங்கமாக தனது கட்டுப்பாடுகளில் வைத்திருப்பதாக எல்லாவிதமான செய்திகளும் தெரிவிக்கின்றன.

ஷியா அடிப்படைவாதிகள் கூட்டணியின் அதிகாரத்தை குறைத்து அதை அமெரிக்காவின் அதிக நம்பிக்கைக்குரிய ஒத்துழைப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அதன் நோக்கத்தை வலியுறுத்துகின்ற வகையில் தேசிய பாதுகாப்பு சபை உள்ளது. 19 உறுப்பினர்களை கொண்ட தேசிய பாதுகாப்பு சபையில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதிகள், பிரதமர் மற்றும் துணை பிரதமர்கள் இடம் பெற்றிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பதவிகள் எதையும் புதிய நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கவில்லை. இடைக்கால காபந்து அரசாங்கத்தில் பதவி வகிக்கின்ற தனிநபர்களால் அவை நிரப்பப்படும்.

ஆக, நீண்டகால CIA இன் நம்பிக்கைக்குரிய சொத்தாக விளங்கிய அஹமது சலாபி அவரது கட்சி அண்மைத் தேர்தல்களில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாத நிலையிலும் இடைக்கால நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள 3 துணைப் பிரதமர்களில் ஒருவர் என்ற முறையில் தேசிய பாதுகாப்பு சபையில் இடம் பெறுகிறார். ஏனைய இரண்டு துணைப் பிரதமர்களான அபீத் முத்தலிப்-அல்-ஜிபுரி, சதாம் ஹுசேனின் கீழ் ஒரு முன்னாள் தளபதியாக இருந்தவர், மற்றும் ரவ்ஸ் சவே ஒரு குர்து தேசியவாதி. அமெரிக்காவிற்கு ஆதரவான குர்து தலைவர் ஜலால் தலபாணி இப்போது குடியரசுத் தலைவராக, பணியாற்றி வருகிறார். ஒரு SCIRI தலைவர், குடியரசுத் துணைத் தலைவர்களில் ஒருவராக பணியாற்றி வந்தாலும் மற்றொரு துணைத் தலைவர் படையெடுப்பிற்கு பிந்திய காலத்திலிருந்து அமெரிக்கப் படைகளோடு பணியாற்றி வரும் சுன்னித் தலைவர் காசி அல்-யாவர் ஆவார்.

குர்திஸ் பிராந்திய தன்னாட்சி அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில் பர்சானி தேசிய பாதுகாப்பு சபையில் இடம் பெறுகிறார். ஏனென்றால் சென்ற வாரம் அவர் புதிய நாடாளுமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இதில் மிக குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், "மதச்சார்பற்ற" அணியின் தலைவரான ஆயாத் அல்லாவியின் அணி டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் 25 உறுப்பினர்களையே வென்றெடுத்திருக்கிறது. 2004ல், அல்லாவி இடைக்கால பிரதமர் என்ற முறையில் கர்பலாவிலும், நஜப்பிலும் குறுகிய காலத்திற்கு நடைபெற்ற சாதரிஸ்ட் எழுச்சியை ஒடுக்குவதற்கு கொடூரமான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு பச்சைக்கொடி காட்டினார். மற்றும் சுன்னி நகரமான பலூஜாவிலும் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதித்தார். அதற்கு முன்னர் ஜூன் 2004 இல், ஒரு பாக்தாத் சிறையில் சுன்னி கிளர்ச்சிக்காரர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட 6 கைதிகளை நேரடியாக தனிப்பட்ட முறையில் அவரே சுட்டுக் கொன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அவர் சாமானிய ஈராக் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு வந்தாலும் இராணுவ அதிகார வர்க்கத்திலும், ஹுசேனின் ஆட்சிக்காலத்தில் அதிகாரம் செலுத்தியவர்கள் மத்தியிலும், ஆளும் செல்வந்தத் தட்டிலும் உறவுகளை கொண்டிருக்கிறார். மற்றும், ஆக்கிரமிப்பு நடைபெற்ற முதல் ஆண்டில் அவரது பங்களிப்பு காரணமாக வாஷிங்டனுக்கு நம்பகத்தன்மை உள்ளவராக கருதப்பட்டு வருகிறார்.

இந்தக் காரணத்தினால், ஈராக்கின் புதிய வல்லமை படைத்த தலைவர் பங்களிப்பை செய்வதற்கு வெள்ளை மாளிகையினால் அவர் ஊட்டி வளர்க்கப்பட்டு வருகிறார். தேசிய பாதுகாப்பு சபையின் தலைவராக அவர் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக பத்திரிகை செய்திகள் இடைவிடாது குறிப்பிட்டு வருகின்றன. "அந்தப் பணி அவருக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த, குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாக, அதைப்பற்றி நாங்கள் விவாதித்து கொண்டிருக்கிறோம்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத "ஒரு மூத்த அரசியல் வட்டாரம்" ராய்ட்டரிடம் தெரிவித்தது.

மார்ச் 21ல் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில், "ஈராக்கின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதில், நாட்டின் பிரதான அரசியல் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் அதிகாரம் தருகின்ற ஒரு கவுன்சிலை அமைப்பதற்கு முன்னேறிக் கொண்டிருப்பது" தனக்கு "உற்சாகம்" ஊட்டி வருவதாக புஷ் அறிவித்தார்.

இதில் உண்மை என்னவென்றால் வாஷிங்டனிலும் மற்றும் வெள்ளை மாளிகைக்கு மிக நெருக்கமாக உள்ள ஈராக் தலைவர்களிடையிலும் நடைபெற்றுக் கொண்டுள்ள விவாதம் என்னவென்றால், அந்த பாதுகாப்புக் கவுன்சில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் முட்டுக்கட்டை நிலையை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள ஒரு குறுக்கு வழியாகும். மார்ச் 21ல் ராய்ட்டருக்கு அளித்த பேட்டியில், அல்லாவி தேசிய பாதுகாப்பு சபையை நியாயப்படுத்துவற்கு உள்நாட்டுப் போர் ஆபத்தை பயன்படுத்த முயன்றார். மற்றும் தானே உடனடியாக சர்வாதிகார நிர்வாக அதிகாரங்களை பெறவும் முயன்றார்.

"துரதிருஷ்டவசமாக, நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ள பேச்சுவார்த்தைகள் இன்னும் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைப்பது பற்றிய கருத்தாகவே உள்ளது. நாட்டு நிலைமை அதிக ஸ்திரத்தன்மைக்கு வருகின்ற வரை ஒரு அரசாங்கத்தை (ஒரு பாதுகாப்புக் கவுன்சிலை) அமைப்போம் என்றுதான் நாங்கள் சொல்லிவருகிறோம். அதற்குப்பின்னர், நாம் அரசாங்கத்தை மாற்ற முடியும். ஆனால், பயங்கரவாதம் மற்றும் கொலைவெறி துயரம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். தேசிய பாதுகாப்பு சபையின் பிரதான பணி பாதுகாப்பு அமைப்பை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதாக இருக்கும், அது இராணுவம், போலீஸ், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு சேவைகளை வலுப்படுத்துவதாக அமையும்" என்று அவர் அறிவித்தார்.

தேசிய பாதுகாப்பு சபை ஒரு நிரந்தர அமைப்பாக ஆகிவிடக்கூடும் என்று ஆக்கிரமிப்பு வட்டாரங்களில் நடைபெற்றுக்கொண்டுள்ள விவாதங்களை கோடிட்டுக்காட்டி ராய்ட்டர் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: "சட்டநுட்ப அடிப்படையில் பார்த்தால், ஈராக்கை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு உதவுகின்ற ஒரு தற்காலிக அமைப்பாக அந்த கவுன்சில் இருக்கும் என்று ஆக்கிரமிப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அது ஒரு நீண்டகாலத்திற்கு தேவைப்படக்கூடும் "இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒரு தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் அரசியல் சட்டத்திற்கு புறம்பான ஒரு கும்பல் திரை மறைவில் அமெரிக்க அதிகாரிகளுடன் இயங்கி, இராணுவம், வரவுசெலவுத்திட்டம் மற்றும் எண்ணெய்த்துறையை காலவரையறையற்று கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொள்ள தயாரிப்பு நடத்துகின்றது. அமெரிக்க படையெடுப்பு நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், இதுதான் ஈராக்கிய "ஜனநாயகம்"!

Top of page