WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: University and high school students demand general strike
பிரான்ஸ்: பல்கலைக்கழக, உயர்நிலை பள்ளி மாணவர்கள் பொது வேலை நிறுத்தத்தை
கோருகின்றனர்
By Rick Kelly and Kumaran Rahul
4 April 2006
Use this
version to print | Send this link by
email | Email the author |
Featured Articles
பிரான்சில் 114 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்களின்
பிரதிநிதிகள் ஏப்ரல் 1-2 தேதிகளில் University
of Lille இல், ஜனாதிபதி ஜாக் சிராக்
இளந்தொழிலாளர்களை இரண்டு ஆண்டுகால "பரீட்சார்த்த காலத்தின்போது" எக்காரணமும் இன்றி பணிநீக்கம் செய்ய
அனுமதிக்கும் "முதல் வேலை ஒப்பந்த சட்டத்திற்கு"
(CPE) பிரகடனம் அளித்ததற்கு தங்களின் பதில் பற்றி விவாதிக்க
கூடினர். தேசிய ஒருங்கிணைப்பு குழு ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு
தொழிலாளர்களையும், மாணவர்களையும் கோரியுள்ளது.
சிராக்கின் தேசிய தொலைக்காட்சி உரையில்
CPE சட்டத்தில்
பரீட்சார்த்த காலத்தை ஓராண்டாக குறைப்பதாகவும், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு விளக்கம்
அளிக்கும் வகையிலும் திருத்தம் கொண்டுவர இருப்பதாகவும் கூறப்பட்டிருந்ததற்கு விடையிறுக்கும் வகையில் மாணவர்கள்
ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: "எங்களுடைய எதிர்பார்ப்புக்களை கேட்டதாக சிராக்
கூறுகிறார். இது ஒரு பொய். பரீட்சார்த்த காலத்தை ஓராண்டாக குறைத்தல் என்பது ஏற்கத்தக்கது அல்ல; ஏனெனில்
இதே வகையில் அது மற்றொரு அடிவைத்தலுக்குத்தான் ஒப்பாகும். பணிநீக்கம் செய்வதை பொறுத்தவரையில் ...
நியாயப்படுத்த முடிந்தாலும், முடியாவிட்டாலும் எங்களுக்கு ஒப்பந்தம் முறிக்கப்படுவதற்கான 'காரணம்' கேட்டு
கொள்ள மட்டும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த நன்றி, எஜமானரே! என்று அகல வேண்டும்."
அறிக்கை தொடர்ந்து கூறுவதாவது: "தொழிலாளர்கள் இயக்கத்திற்கு ஆதரவு தருவதாக
நாங்கள் உறுதி கூறுகிறோம். வேலைநிறுத்த முயற்சியை கட்டியமைப்பதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு உள்ளூர் கூட்ட
நடவடிக்கையிலும் பங்கு பெறுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.... தொழிலாளர்களுக்கு அவர்களுடைய ஊதிய
உயர்வுகள், அனைத்து பாதுகாப்பற்ற வேலைகளும் நிரந்தரமாக்கப்படுவதற்கான கோரிக்கைகள், போராட்டங்கள்
அனைத்திற்கும் ஆதரவு தருவதற்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம்."
ஏப்ரல் 3ம் தேதியன்று நடவடிக்கை தினம் என்று ஒருங்கிணைப்புக் குழு அறிவித்து,
"அது ஆலைகளுடன் தொடர்பு கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய உள்ளூர் தொழிற்சங்கங்களுடன்
இணைந்து நடத்தப்படும்: துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்தல், சாலை மறியல்கள், ஆலைகள், அலுவலகங்கள்
ஆக்கிரமிப்பு ஆகியவை நடைபெறும்."
ஏனைய திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளில் கீழ்கண்டவை அடங்கும்: நெடுஞ்சாலைகள்
தடுக்கப்படுதல், வெள்ளியன்று நீதிமன்றங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் உட்பட போலீசாரின் அடக்கு முறைக்கு
எதிர்ப்புக்கள், தொழிலாளர்கள், வேலையற்றோர்கள், மாணவர்களின் கூட்டு ஆர்ப்பாட்டங்கள் சனிக்கிழமை
நடத்தப்படுதல், இன்னொரு தேசிய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏப்ரல் 11 அன்று நடத்துதல்.
மாணவர்கள் ஈஸ்டர் விடுமுறை முழுவதும் பல்கலைக்கழகம், உயர்நிலைப் பள்ளிகள் முற்றுகையிடப்படுதலை
தொடர்வதாகவும் உறுதி கொண்டுள்ளனர்.
குழுவின் அறிக்கை பிரகடனப்படுத்துவதாவது: "அரசாங்கமும் சிராக்கும் சிறிதேனும்
எங்கள் கோரிக்கைகளை மதிக்காத நிலை, இயக்கத்திற்கு எதிராக அவர்கள் கையாளும் அடக்குமுறையின் பரப்பு,
பல நேரங்களிலும் தங்கள் விதியை CPE
உடன் இணைத்து அவர்கள் எடுக்கும் முடிவு ... ஆகியவை தங்கள் தாக்குதல்களை அவர்கள் நீக்கிக் கொள்ளும்
நேரத்தில் பதவியைவிட்டு விலகுமாறும் அவர்களைக் கட்டாயப்படுத்தி விடும்."
ஆயினும், மாணவர்களுடைய அறிவிப்பு ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கான அழைப்பை
சிராக் மற்றும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய கோலிச அரசாங்கத்தை பதவியிலிருந்து
அகற்றுவதற்கான போராட்டத்துடன் நேரடியாக தொடர்புபடுத்தவில்லை. மாறாக அரசாங்கம் தன்னுடைய
தொழிலாளர் பிரிவு "சீர்திருத்தங்களை" கைவிடும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றுதான் கூறியுள்ளது.
சிராக்கும் வில்ப்பனும் தாங்கள் பின்வாங்குவதாக இல்லை என்ற உறுதியை தெளிவாக்கியுள்ளனர்.
தொழிலாளர்கள்மீதான அவர்களுடைய தாக்குதல் தோல்விக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றால்,
CPE எதிர்ப்பு இயக்கம்
வெளிப்படையாக முழு நிர்வாகமும் அகற்றப்பட வேண்டும் என கோரவேண்டும். அதன்பின்னர் பாதுகாப்பு நிறைந்த
கெளரவமான வேலை அனைத்து இளைஞர்களுக்கும் என்ற போராட்டம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களை
பிரதிபலிக்கும் உண்மைத் தன்மையுடைய அரசாங்கத்திற்கான போராட்டம் என்ற அடிப்படையில் முன்னேற்றுவிக்கப்படலாம்;
அத்தகைய இயக்கம் பொருளாதார வாழ்வு ஒரு சோசலிச அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை
உணர்த்தும்.
ஆயினும்கூட, தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் நிலைப்பாடு மாணவர் சங்கத்
தலைவர்களின் சூழ்ச்சித்திட்டங்களுடன் தீவிரமான முறையில் மாறுபட்டுக் காணப்படுகிறது. அத்தலைவர்களில்
பெரும்பாலானவர்கள் அரசியல் நடைமுறையின் இடதுசாரி கட்சிகளுடன் நெருக்கமான பிணைப்புக்களை
கொண்டுள்ளனர். தொழிற் சங்கங்களை போலவே மாணவர் சங்க தலைவர்களும்
CPE எதிர்ப்பு
இயக்கத்தின் சீற்றப் போக்கை தணித்து அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளுக்கு முயன்றுள்ளனர்.
முக்கிய பல்கலைக்கழக மாணவர் சங்க (UNEF)
தலைவரான Bruno Julliard
தொலைபேசியில் உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசியுடன் வார இறுதியில் பேசினார். "ஒரு உரையாடல்
தொடங்குவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு" என்று அவர் பின்னர் கூறினார். சோசலிஸ்ட் கட்சியுடன் அவர்
நெருக்கமான தொடர்பை கொண்டுள்ளார்.
மாணவர் அமைப்புக்களுடனும், தொழிற்சங்கங்களுடனும் சார்க்கோசி விவாதங்களுக்காக
ஏற்பாடு செய்து கொண்டிருக்கையில், அவர் இளம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்படும் போலீஸ்
தாங்குதல் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து கொண்டிருந்தார். நேற்று காலை 30 போலீசார் தற்காலிகமாக
வடமேற்கு பிரான்சில் Anelcon-
ல் உள்ள Marguerite de Navarre High
School ஐ கட்டாயமாக திறக்க முயன்றனர். இப்பள்ளி மூன்று
வாரங்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களால் மூடப்பட்டது. முற்றுகையை எதிர்த்த 40 பெற்றோர்கள்
தங்கள் குழந்தைகளுடன் பக்கவாட்டு நுழைவாயில் வழியாக வந்தபோது அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு
கொடுத்து, உள்ள நுழைய முற்பட்டபோது, எதிர்ப்பாளர்களுக்கும் போலீசாருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. காயங்களோ,
கைதுகளோ அறிவிக்கப்பட வில்லை என்றாலும், கைகலப்பு பள்ளி மாணவர்களின் எதிர்ப்பை உடைக்க வேண்டும் என்ற
அரசாங்கத்தின் உறுதியை வெளிப்படுத்தியுள்ளது. உயர் பள்ளி முதல்வர்கள், தேவையானால் போலீசாருடைய உதவியுடன்
பள்ளிகளை திறக்குமாறு உத்திரவிடப்பட்டு உள்ளனர்.
***
உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் மாணவர்
பிரதிநிதிகளுடன் ஞாயிறன்று, அக்குழு அறிக்கையை வெளியிடுமுன் பேசியிருந்தனர்.
கிழக்கு
பிரான்சில் உள்ள Besançon
பகுதியில்
Franche-Compté University யில் விஞ்ஞானத்துறை மாணவராக
Davy Cottet
உள்ளார். அவர் WSWS
இடம் கூறியதாவது: "நேற்றைய விவாதம் இரவு முழுவதும் நடந்தது. நாங்கள் பிரான்சில் பல பல்கலைக்
கழகங்களிலும் நடந்துள்ள அனைத்தையும் பற்றிய சரியான கணக்கெடுப்பை தயாரிக்க முற்பட்டோம்; பின்னர் எங்களுடைய
உறவுகள் எப்படி பல தொழிற்சங்கங்களுடன் இருந்தன என்பது பற்றியும் அனைத்து இடங்களிலும் இருக்கும்
தொழிலாளர்களுடன் எத்தகைய உறவு என்பது பற்றியும் பேசினோம். இதன் பின்னர் எங்கள் கோரிக்கைகள் பற்றி
விவாதத்தை கொண்டோம்; எப்படி இயக்கத்தை தொடரலாம் என்றும் அரசாங்கம் கீழ்ப்படிவதற்காக அழுத்தம்
கொடுக்கும் வகையில் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றியும் விவாதித்தோம்.
"இது ஒன்றும் CPE
உடன் நின்றுவிடும் விஷயம் அல்ல; கோரிக்கைகள் இன்னும் பரந்த
அளவில், கடந்த சில ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ள முழுத் திட்டங்கள் பற்றியும் வேலை பாதுகாப்பு பற்றியும்
இருந்தன. தடையற்ற சந்தை கொள்கைகள் பற்றி மக்கள் பெரும் வெறுப்புணர்வை கொண்டுள்ளனர்; அவைதான் சில
காலமாக சுமத்தப்பட்டுள்ளன. எனவே இது ஒன்றும் CPE
மீதான கோரிக்கையுடன் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல; இன்னும் கூடுதலான, பல்வகைப்பட்ட பிரச்சினைகளுடனும்
இணைந்த பரப்பைக் கொண்டுள்ளது.
"எங்களுடைய கோரிக்கைகள் என்ன என்பது பற்றி அவர்களிடம் விளக்குவதற்கு
அனைத்து ஆலைகளுக்கும் சென்று தொழிலாளர்களை சந்திக்க உள்ளோம்; எங்களுடைய போராட்டத்தில் அவர்களையும்
கொண்டுவர விரும்புகிறோம்; தேசிய வேலைநிறுத்த நாட்களில் நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் அவர்களும் சேரவேண்டும்
என்று விரும்புகிறோம்."
அரசாங்கத்தை பதவி இறக்க வைக்கும் இலக்குடன் ஒரு காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்திற்கான
அழைப்பு கொடுக்கப்படுமா என்று Davy
ä WSWS
கேட்டது. "அதுதான் எமது இயக்கத்தின் இலக்கு. இளைஞர்கள் ஊதியம் பெறுபவர்களை பெருமளவில் போதுமான
அளவுக்கு அணி திரட்ட முடியும் என்று நான் நினைக்கிறேன். இவ்வியக்கம் அரசாங்கம் அதன் சீர்திருத்தங்கள்
அனைத்தையும் திரும்ப பெறும் வரை தொடரும் எனக் கருதுகிறேன்" என்று அவர் கூறினார்.
"அரசாங்கம் இராஜிநாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கையின் மீதும் நாங்கள்
வாக்களித்துள்ளோம். எங்களுடைய ஒப்புதல் இல்லாத அரசியலை தொடக்கியிருக்கிறார்கள் என்பதை மக்கள் அறியவேண்டும்;
அவர்கள் முன்னரே கட்டாயப்படுத்தி அதை செய்ய முற்பட்டுள்ளனர். எனவே மக்கள் இக்கொள்கைகளை நிராகரித்துள்ளதால்
அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் என்று நாங்கள் நினைப்பது நெறியானதுதான்.
"இயக்கத்தின் நோக்கமே மக்களுடைய கோரிக்கைகளை வெளியே
கொண்டுவருதல்தான் என்று நான் நினைக்கிறேன்; அதன் பின்னர் அடுத்த தேர்தல்களில் எக்கட்சியாவது அரசியல்
அளவில் இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு தரக்கூடிய திறனை கொண்டுள்ளதா என்பதை பார்க்கலாம்."
University
of Lille ல் ஆங்கில இலக்கிய மாணவராக உள்ள
Baptiste Bourel,
மற்றும் அதே பல்கலைக்கழகத்தில் வரலாறு பயிலும்
Thomas Boggio ஆகியோரும்
WSWS உடன்
பேசினர். Baptiste,
இயக்கம் வெறும் CPE
பற்றியது மட்டும் இல்லை என்பதை வலியுறுத்தினார். அவர் கூறியதாவது: "அடிப்படையில் இது அரசியல்,
முதலாளித்துவ அரசியல், அனைத்து மேலை நாடுகளிலும் சமூகத்தை மிக வறிய நிலையில் வைத்துள்ள உண்மை
பற்றியது; இதன் விளைவாக மக்கள் பாதுகாப்பற்ற வேலைகளை ஒப்புக் கொள்ளுகின்றனர்; ஏனென்றால்
ஒன்றுமில்லாமல் இருப்பதைவிட அது நல்லது; வேலை இல்லாவிட்டால், வருமானமும் இல்லை.
"பள்ளிகளில் மாணவர்கள் எங்கு பணியாளர்கள் இல்லையோ அங்கு உடற்பணி செய்யுமாறு
இன்று வற்புறுத்தப்படுகின்றனர் என்பது ஓர் உண்மை. அரசுப் பள்ளி முறையானது அவர்கள் விரும்பும் வாழ்க்கைக்கு
உகந்த பணிக்கு, அல்லது வாழ்க்கை தொழிலுக்கு வேலை இவற்றிற்கு தயாரிக்கவில்லை; எனவே அவர்கள் வேறு எவரும்
விரும்பாத வேலையை ஏற்றுக்கொள்ள நேர்ந்துள்ளது.
"அரசாங்கத்தின் தொழிலாளர் சீர்திருத்தத்தில் ஒரு முக்கியமான கருத்து இளைஞர்
இப்பொழுது இரவு நேரத்தில் 15 வயதாக இருக்கும்போதே வேலை செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்டிருப்பதாகும்.
1874ம் ஆண்டு இரவு வேலைக்கு வயது வரம்பு 16 என்று நிர்ணயிக்கப்பட்டது; அது இப்பொழுது 15 என்று ஆக்கப்பட்டுள்ளது;
இது உண்மையான பின்னடைவு ஆகும்."
"இயக்கம் ஒன்றும் பழமைபாதுகாக்கும் தன்மை கொண்டதல்ல; அது
முற்போக்கானது." என்று தோமஸ் கூறினார். "Courier
Internationale மற்றும் சர்வதேச செய்தி ஊடகத்தை
நான் படிக்கிறேன். நாங்கள் பழமைபாதுகாப்பாளர்கள், பிரெஞ்சுக்காரர்கள் முன்னேற்றத்தை விரும்பவில்லை ஆதனாலேயே
நாங்கள் எங்கள் சமூக வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறோம், ஆகவே எதிர்க்கிறோம் என்று அவை
கூறுகின்றன. எங்களுக்கு இப்பொழுது கொடுக்கப்படுவதை மறுக்கும் இயக்கம்தான் இது என்பது உண்மை; ஆனால் நாங்கள்
ஒன்றும் காலத்தில் பின் செல்ல விரும்புவர்கள் அல்லர். பலரும் பாடுபட்டு இந்த உரிமைகளை அடைந்துள்ளனர். நாங்கள்
ஏன் இப்பொழுது பின்னோக்கி செல்ல வேண்டும்?
"தெருக்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டங்கள் வந்துள்ளன என்ற உண்மையில்
அரசாங்கம் எங்களை பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை என்பது தெளிவாகிறது. நான் ஒன்றும் வன்முறை நபர்
இல்லாவிடினும், இயக்கத்தில் இருக்கும் சில கூறுபாடுகள் வன்முறையில் ஈடுபடுவது வியப்பை தரவில்லை என்று நான்
நினைக்கிறேன். சிலர் அரசாங்கத்தை உணரவைப்பதற்கு அது ஒன்றுதான் வழி என்று நினைக்கின்றனர்."
தோமஸ் சேர்த்துக் கொண்டதாவது: "இயக்கம் எப்பொழுதும் தன்னையும் வினாவிற்கு
உட்படுத்திக் கொள்ளவேண்டும்; ஏனெனில், உதாரணமாக 1968-ன்பொழுது நடந்த நிகழ்வுகளை நாம் கட்டாயம்
மறக்கக் கூடாது; அப்பொழுது நம்முடைய ஜனாதிபதி சிராக் சமூக விவகாரங்களுக்கு மந்திரியாக இருந்தார்;
அனைத்து நிகழ்வுகளின் மையத்திலும் இருந்தார். இத்தகைய இயக்கம் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். தான்
என்ன முடிவெடுப்பார் என்பது பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என சிலர் கருதுகின்றனர்; ஆனால் என்னை பொறுத்தவரையில்
அவர் ஒரு தந்திரமான குள்ள நரியாவார்; தான் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை நன்கு அறிந்தவர் ஆவார்."
See Also:
பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த" சட்டம் பற்றிய நெருக்கடி தீவிரமடைகிறது
பிரான்ஸ்: ஜனாதிபதி
சிராக் "முதல் வேலை ஒப்பந்தத்தை" சட்டமாக்குகிறார்
பிரான்ஸ்: புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பெசன்ஸெனோ தொழிலாளர் அதிகாரத்துவத்தின் துரோகத்திற்கு இடது
மறைப்பை கொடுக்கிறார்
பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தச் சட்டம்" அரசியலமைப்புக் குழுவால் ஒப்புதல் பெற்றது
பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" நெருக்கடியைத் தீர்க்க ஜனாதிபதி சிராக்கிற்கு தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்
பிரான்ஸ்: கோலிச அரசாங்கத்திற்கு எதிராக மில்லியன் கணக்கில் தொழிலாளர்களும் மாணவர்களும் வேலைநிறுத்தம்
பிரான்ஸ்: மாணவர்களும் தொழிலாளர்களும் அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிராக திரள்வதற்கு
தயாராகின்றனர்
பிரான்ஸ்:
"முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான மக்கள் இயக்கம் ஆபத்திற்குட்பட்டுள்ளது.
பிரான்சில் மாபெரும்
மாணவர் ஆர்ப்பாட்டங்கள்: தொழிற்சங்கங்கள் வில்ப்பனை காப்பற்ற வருகின்றன
1936ம் ஆண்டு
பிரெஞ்சு மக்கள் முன்னணி: "முதல் வேலை ஒப்பந்த" போராட்டத்தில் வரலாற்று படிப்பினைகள்
பிரான்ஸ்
: மே-ஜூன் 1968ம் இன்றும்
பிரான்ஸ்: பல்கலைக் கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை
தொடர்கின்றனர்
பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" பற்றிய பூசல் தீவிரமடைகிறது
பிரான்ஸ்:
இளந் தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்து ஒரு மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டம்
பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்
பிரான்ஸ்:
இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாங்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள்
ஆர்ப்பாட்டம்
பிரான்ஸ்: கலவரத் தடுப்புப்
போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது
CPEக்கு
எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை
பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்
Top of page |