World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காBush says US troops to remain in Iraq indefinitely அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கில் காலவரையின்றி நீடிக்கும் என்கிறார் புஷ் By Jerry White ஈராக் ஆக்கிரமிப்பை தசாப்தங்களுக்கு என்றில்லாவிட்டாலும் வரும் ஆண்டுகளுக்கு அமெரிக்கா நீடித்துக் கொண்டே போகும் என்று செவ்வாயன்று காலை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் கருத்து தெரிவித்தார். அந்த நாட்டில் அமெரிக்க படைகள் எதுவுமில்லை என்ற நாள் எப்போது வரும் என்ற கேள்விக்கு புஷ், "அது எதிர்கால ஜனாதிபதிகள் மற்றும் எதிர்கால ஈராக் அரசாங்கங்களால் முடிவு செய்யப்படும்" என்று பதில் அளித்தார். தமது நிர்வாகம் முடிவடையும் 2009 ஜனவரிக்கு பின்னரும், நீண்ட காலத்திற்கு அமெரிக்க துருப்புக்கள் அங்கு இருக்கும் என்று புஷ் குறிப்பிட்டார் அந்த நாடு ஒரு அரை-காலனித்துவ காபந்து நாட்டு அந்தஸ்த்திற்கு குறைக்கப்படும் என்பதை தெளிவுப்படுத்தினார். முற்றிலும் விலக்கி கொள்வதற்கான ஒரு ''கால அட்டவணையை'' வழங்குவதற்கு மறுத்துவிட்ட ஜனாதிபதி, அவர் அடிக்கடி வெளியிடுகின்ற அறிக்கையில் அமெரிக்க இராணுவ தளபதிகள் எப்போது துருப்புக்களின் அளவை குறைப்பது என்பதை முடிவு செய்வார்கள் என்று திரும்பவும் குறிப்பிட்டார். ஈராக் மீது குற்றமிக்க படையெடுப்பிற்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற பொதுமக்களது கோரிக்கைகள் வளர்ந்து வருவதற்கு தான் பணிந்துவிடப்போவதில்லை என்று, திங்களன்று கிளிவ்லாந்திலும், அதற்கு முந்திய செவ்வாயன்றும் பொது நிகழ்ச்சிகளில் அவர் கூறிய கருத்துக்களை ஒட்டியே ஜனாதிபதியின் அறிக்கை அமைந்திருந்தது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்தாலோ அல்லது இஸ்ரேலை அச்சுறுத்தினாலோ அவற்றிற்கு எதிராக போருக்கு செல்வதில் தமது உறுதிப்பாட்டை அவரது உரையில் அவர் தெளிவுப்படுத்தினார். ஜனநாயகக் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் எதையும் அவரது நிர்வாகம் எதிர்கொள்ளவில்லை என்ற உண்மைதான் புஷ்ஷின் அசட்டுத்தனமான துணிச்சலுக்கு சான்றாக உள்ளது. ஜனநாயகக்கட்சி பொதுவான கோழைத்தனத்துடன், மத்தியக் கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் எண்ணெய் வளம்மிக்க பிராந்தியங்களில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் பூகோள-அரசியல் நோக்கத்தை ஆதரிக்கிறது. அரசியல் ஸ்தாபனங்களிலோ அல்லது ஊடகங்களிலோ கேட்பதற்கு ஆளில்லை என்பதால் புஷ் அமெரிக்கப்படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறாது என்று அறிவித்தார் மற்றும் அந்த நாடு பயங்கரவாதத்தின் மீதான போர் என்று அழைக்கப்படும் பெயரில் எதிர்கால துணிகரச்செயலை தொடக்குவதற்கு ஒரு நிரந்தர இராணுவத்தளமாக மாற்றப்படும் என்பதையும் குறிப்பிட்டார். ஈராக்கில் உள்நாட்டுப் போர் தொடங்கிவிட்டதை குறிக்கும் "கொலைகள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையின்'' பற்றிய அறிக்கைகளால் தவறான வழிநடத்தப்படுவதன் விளைவாக அமெரிக்க துருப்புகள் விலக்கிக்கொள்வதற்கான அதிகரித்தளவில் ஆதரவுள்ள நிலைமையில் புஷ் பொதுமக்களது கருத்திற்கான அவரது ஏளனத்தை வெளிப்படுத்துகிறார். அது நிகழ்வது அமெரிக்க மக்கள் ஒவ்வொரு இரவும், தங்களது, தொலைக்காட்சி திரைகளில் பார்க்கின்ற இரத்தக்களரி காட்சிகளால் தேவையற்ற வகையில் ஈர்க்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு அறியாமலே உடந்தையாக, செயல்பட்டுக் கொண்டிருப்பதாக, அவர் குற்றம் சாட்டினார், அவர்கள் அமெரிக்கா தனது "வலிமையிலிருந்து தளரும்" மற்றும், தனது துருப்புக்களை விலக்கிக் கொள்ளும் என்பதற்காகத் தான் காத்துக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். போருக்கு பொதுமக்களது எதிர்ப்பு பெருகிக்கொண்டு வருவதை சுட்டிக்காட்டும் அண்மைக்கால கருத்துக் கணிப்புக்களை புறக்கணித்த புஷ் அவரது பணி அவர் சரி என்று கருதுவதை மக்களுக்கு சொல்வதுதான் என்றும் "பயங்கரவாதத்தின் மீதான போரில் வெற்றி பெறுவதில்" உறுதி கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். கிளிவ்லாந்தில் உரையாற்றிய போது புஷ் ஈராக்கை பாதுகாப்பதில் தனது மூலோபாயத்தை விளக்கினார், எண்ணெய் வளம்மிக்க, 200,000 மக்களைக்கொண்ட சிரியாவின் எல்லை அருகிலுள்ள, டால் அபார் நகரத்தில் அமெரிக்க மற்றும் ஈராக் படைகள் "கிளர்ச்சிக்காரர்களையும்" மற்றும் "வெளிநாட்டு பயங்கரவாதிகளையும்" நீக்கிவிடுவதற்கு மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார். 2005 செப்டம்பரில் 3,000 அமெரிக்கத் துருப்புக்களும் 5,000 ஈராக் துருப்புக்களும் டால் அபாரை முற்றுகையிட்டு, அந்த நகரத்தை சுற்றி எட்டு அடி உயர 12 மைல் நீள மண் சுவரை எழுப்பி, நகருக்கு வெளியில் தற்காலிக குடியிருப்புக்களுக்கு பல்லாயிரக்கணக்கான குடியிருப்பவர்களை வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிப்பு எதிர்ப்பு படைகளுக்கு எந்தவித ஆதரவும் கிடைக்காத வகையில் சுற்றியுள்ள கிராமங்களில் திடீர் தாக்குதல்களை நடத்தி தொடர்புகளை துண்டித்தது. "உரிமைகள் மீட்பு நடவடிக்கையால்" ("Operation Restoring Rights,") குடியிருப்பு-வாரியாக தாக்குதலுக்குட்படுத்தப்பட்டும் பல நாட்கள் குண்டுகளும் வீசப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் டல் அபர் மின்சாரத்திலிருந்து துண்டிக்கப்பட்டது மற்றும் தண்ணீரும் குறைக்கப்பட்டது அது ஒரு "பேய் உலாவும் நகரம்" போல் ஆக்கப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கைகளின்போது, குறுங்குழு மோதல்களை எதிர்ப்பதற்கு மாறாக, அமெரிக்க இராணுவத்தலைமை சுன்னி மற்றும் துருக்கி குடியிருப்பாளர்கள் மீது இரத்தக்களரி ஒடுக்குமுறையை மேற்கொள்வதற்காக ஷியைட் மற்றும் குர்திஸ் படைகளை நம்பியிருந்தததாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவும் அதன் நேச நாட்டுப் படைகளும் ஈராக்கில் அத்தகைய அட்டூழியங்களை மேற்கொள்வது, சர்வ சாதாரணமான நிகழ்ச்சிகளாக ஆகிவிட்டது. பாக்தாத்திலிருந்து வடக்கே சுமார் 60 மைல்களுக்கு அப்பாலுள்ள இஸ்ஹாக்கியிலுள்ள ஒரு வீட்டில் மார்ச் 15 அன்று நடத்தப்பட்ட ஒரு அதிரடி சோதனையில் அமெரிக்க துருப்புக்கள் பல குழந்தைகள் உட்பட "11 குடிமக்களை கொன்றதாக சலாஹதின் மாகாண போலீஸ் புலனாய்வு அதிகாரிகள் குற்றம் சாட்டியதாக, திங்களன்று உள்துறை அமைச்சக, அதிகாரி ஒருவர் தெரிவித்ததை நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்கத் துருப்புக்கள், சிவிலியன்களை, வரிசையாக நிறுத்தி வைத்து சுட்டதாகவும், பின்னர், ஆடு மாடுகளை கொன்றுவிட்டு அந்த வீட்டை நாசப்படுத்தியதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். இஸ்ஹாக்தி உள்ளூர் போலீஸ் கமாண்டர், நைட் ரிட்டர் செய்திப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தபோது, கொல்லப்பட்ட அனைவரது தலைகளிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் காணப்பட்டதாக மரணவிசாரணை அறிக்கைகளை சுட்டிக்காட்டினார். இந்தப் போரின் மூன்றாவது ஆண்டு நிறைவை குறிப்பிடுகின்ற வகையில் புஷ் வெட்கக்கேடாக 2003 மார்ச்சில் படையெடுப்பை நியாயப்படுத்துவதற்கு கூறிய அதே பொய்களை திரும்பவும் குறிப்பிட்டார். செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அனுபவமுள்ள நிருபரான ஹெலன் தோமஸ் பேரழிவுகரமான ஆயுதங்கள் மற்றும் ஈராக்கிற்கு பயங்கரவாதிகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகளின் "உண்மையில்லை '' என்று தெரிந்த பின்னர், "நீங்கள் ஏன் போருக்கு உண்மையிலேயே, போனீர்கள்?" என்று ஜனாதிபதியை நோக்கி கேட்டார். செப்டம்பர் 11-க்கு நீண்ட காலத்திற்கு முன்னரே அவரும் இதர நிர்வாக அதிகாரிகளும், ஈராக் மீது தங்களது கவனத்தை திருப்பியிருந்தனர். எண்ணெய் வளத்தை தேடுவதற்கும்'' படையெடுப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பின்னர் மறுத்தனர். புஷ் பயபக்தியோடு பதிலளித்தார் "நான் ஒரு போரை விரும்பினேன் என்று அனுமானிப்பது அப்பட்டமான தவறு ... எந்த ஜனாதிபதியும் போரை விரும்பமாட்டார். நீங்கள் கேள்விபட்டது அனைத்துமே உண்மையல்ல" என்று கூறிய புஷ் செப்டம்பர் 11 "நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தமது அணுகுமுறையை மாற்றிவிட்டதாகவும்" மற்றும் "நமது வெளியுறவுக் கொள்கை அன்றைய தினம் மாறிவிட்டதாகவும்" கூறினார் - இந்த இரண்டு கூற்றுக்களுமே பொய்கள் என்று நீண்டகாலமாகவே அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன. பத்திரிகையாளர் பட்டாளத்திடமிருந்து மேலும் எந்தவித அறைகூவலை சந்திக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையில் புஷ் அமெரிக்காவிற்கு எதிரான எதிர்கால பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறுவதற்கு ஒரு பாதுகாப்பான இடமாக இருப்பதிலிருந்து தடுப்பதற்காகவும் ஈராக்கை நிராயுதபாணியாக்குவதற்காகவும் போரில் ஈடுபட்டதாக பொய் மூட்டைகளை மீண்டும் அவிழ்த்துவிட்டார். ஒரு சமாதான தீர்வு காண்பதற்கான தமது முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், "[சதாம் ஹூசேனை] நீக்குவதற்கு, ஒரு சங்கடமான முடிவை நான் எடுத்தேன். மற்றும் நாங்கள் அதைச் செய்தோம். அதனால் உலகம் பாதுகாப்பான பகுதியாக மாறிவிட்டது" என்று புஷ் அறிவித்தார். திங்களன்று கிளிவ்லாந்து, சிட்டி கிளப்பில் கேட்போருக்கான கூட்டத்தில்---இராணுவ கூட்டம் அல்ல-- ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு அரிதாய் வெளிப்படையாக தோன்றிய புஷ் போரை தொடக்குவதற்கு பயன்படுத்திய கூற்றுகளையும் மற்றும் போருக்கு ஒரு பாரியளவு செலவிடப்பட்டதாக கூறியதையும் மறுத்தார். 251 பில்லியன் டாலர்கள் அல்லது அமெரிக்காவில் ஒரு வீட்டிற்கு 2,200 டாலர்கள், அளவிற்கானதை செலவிட்டதையும்-----அவரது நிர்வாகம், அமெரிக்க குடிமக்கள் மீது சட்டவிரோதமாக வேவு பார்ப்பதையும் மறுத்தார். ஜனாதிபதி பதட்டத்தோடு பதிலளித்தார், பல சந்தர்ப்பங்களில் போருக்கு பெருகி வரும் மக்களது எதிர்ப்புக் குறித்து கேள்விகளுக்கு, முற்றிலும் பொருத்தமில்லாத முறையில் பதிலளித்தார். என்றாலும், ஜனநாயகக் கட்சிக்காரர்களிடமிருந்து எந்தவித கடுமையான எதிர்ப்பையும் சந்திக்கப் போவதில்லை என்ற உறுதியில் "வெற்றி'' கிடைக்கும் வரை ஈராக்கில் அமெரிக்கா இருக்கும் என்று அறிவித்ததுடன், ''பயங்கரவாதத்தின் மீதான போரின்" பெயரால் இதர நாடுகளுக்கும், ஈரானுக்கும் எதிராக எதிர்காலத்தில் போர்களை தொடக்கப்போவதாகவும் அச்சுறுத்தினார். |