World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Unions appeal to President Chirac to resolve "First Job Contract" crisis

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" நெருக்கடியைத் தீர்க்க ஜனாதிபதி சிராக்கிற்கு தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்

By Rick Kelly and Antoine Lerougetel
30 March 2006

Back to screen version

பிரான்சில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னர், தொழிற்சங்கங்கள் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" (CPE) எதிரான வெகுஜன இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் பிரதமர் டொமினிக் டு வில்ப்பன் நிர்வாகத்தை ஸ்திரப்படுத்தவும் தங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கின. ஒரு இரண்டுவருட காலத்தில் எந்தக் காரணமுமின்றி இளந்தொழிலாளர்களை வெளியேற்ற அனுமதிக்கும் CPE மசோதாவானது அரசாங்கத்தின் வலதுசாரி வேலைத்திட்டத்திற்கு பிரெஞ்சுத் தொழிலாளர் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பிற்கான குவிமையமாக ஆகியுள்ளது.

பன்னிரண்டு முன்னணி தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புக்கள் ஏப்பிரல் 4, அடுத்த செவ்வாய் கிழமை CPE க்கு எதிரான இன்னொரு நாள் வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துதற்கு நேற்று உடன்பட்டன. நடவடிக்கையின் தேசியநாள் பாரியளவு ஆதரவை ஈர்ப்பது பெரும்பாலும் நிகழலாம், கடந்த செவ்வாய்க்கிழமை CPE எதிர்ப்பு பேரணி இரண்டு மில்லியனுக்கும் மேலான வேலைநிறுத்தம் செய்துவரும் மாணவர்களையும் தொழிலாளர்களையும் ஈர்க்கிறது. ஆயினும், தங்களது கூட்டறிக்கையில், நடவடிக்கையின் ஒரே நோக்கம் தங்களுடன் ஒரு பேரத்தை செய்ய சிராக்கையும் வில்ப்பனையும் பேச்சுவார்த்தைக்கு நிர்பந்திப்பது என்று வலியுறுத்தின.

"அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் நிலைமையைக் கணக்கில் எடுத்து பலபொருள் கொள்வதற்கு இடம்தராமல் (CPE ஐ திரும்பப்பெறுவதுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்) இந்தக் கோரிக்கைக்கு விடை அளிக்க வேண்டும் என்பது அவசரமானதாகும்", தொழிற்சங்கங்களின் அறிக்கை அறிவித்தது. "நாடு ஆழமான நெருக்கடிக்குள் நழுவிச்செல்வதை தடுப்பதற்கு, அவ்வாறு செய்வதற்கு அரசாங்கம் கட்டாயம் உளத்துணிவு கொள்ள வேண்டும். CPE திரும்பப்பெறப்படும் வகையில் அவரது அரசியலைமைப்பு சிறப்புரிமையை பயன்படுத்துமாறு குடியரசு ஜனாதிபதியை கூட்டுக்குழு கேட்கிறது.

ஐந்து தொழிறசங்கங்களின் தலைவர்கள் - CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு), CFDT (பிரெஞ்சு தொழிலாளர் ஜனநாயக கூட்டமைப்பு), FO (தொழிலாளர் சக்தி) மற்றும் இரு நிர்வாகத்தின் தொழிற்சங்கங்களான CFTC மற்றும் CFE-CGC சிராக்கிற்கு இதே மாதிரி வேண்டுகோளை விடுத்த மறுநாள் இந்த கூட்டறிக்கையானது வெளியிடப்பட்டது. இந்த ஐந்து தொழிற்சங்கங்கள் கடந்தவாரம் வில்ப்பனுடன் கலந்துரையடல்களை நடத்தின ஆனால் ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை.

"திரு. ஜனாதிபதி நாட்டில் நிலைமை மோசமடைந்ததற்கும் பதட்டங்களுக்கும் ஆதாரமாக தற்போதைய நெருக்கடி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்யுமாறு நாம் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்" என அவர்கள் அறிவித்தனர். "குடியரசு மற்றும் ஜனநாயக மதிப்புகளுடன் இணைந்ததாய், அரசியலமைப்பின் 10 வது விதியைப் பின்தொடர்ந்து, குறிப்பாக முதலாவது வேலை ஒப்பந்தம் சம்பந்தமான விதி 8 ஐத் தவிர்த்து, பாராளுமன்றத்தை சம வாய்ப்புக்கள் வழங்கும் சட்டம் பற்றி இன்னொரு ஆழ்ந்தாராய்வு செய்யுமாறு உங்களை வணங்கி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். ஐந்து தொழிற்சங்க கூட்டமைப்புக்களை பொறுத்தவரை இதுதான் நாம் பங்கேற்க விரும்பும், தற்பொழுது முற்றிலும் தேக்கமடைந்து இருக்கும் சமூகப் பேச்சுவார்த்தையை விரைந்து திறப்பதற்கு தேவையான மற்றும் இன்றியமையாத நிபந்தனையாகும்."

ஜனாதிபதிக்கான இந்த வேண்டுகோள் CPE எதிர்ப்புப் போராட்டத்தில் தொழிற்சங்கங்களால் வகிக்கப்படும் துரோகப் பங்கினை மீண்டும் விளக்கிக் காட்டுகிறது. ஆரம்பம் முதல் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை கீழே இறக்குவதைக் கொண்டுவரும் மற்றும் புதிய தேர்தல்களை நிர்பந்திக்கும் இலக்கைக் கொண்ட ஒரு சுயாதீனமான பண்பை இவ்வியக்கம் எடுப்பதிலிருந்து அதைத் தடுப்பதற்கு முயற்சி செய்திருந்தன. அரசாங்கத்திற்கு முழுமையான எதிர்ப்பு இருப்பினும் இது இருக்கிறது. Le Parisien ஆல் வெளியிடப்பட்ட அண்மைய கருத்துக் கணிப்பின்படி, வில்ப்பன் 29 சதவீத அங்கீகார தரத்தைப் பெற்றிருக்கிறார்.

தொழிற்சங்கங்களானது இப்போராட்டத்தில் சிராக் சுயாதீனமான நடுவராக இருக்க முடியும் என்றும் தொழிலாளர்களின் நிலைமைகளை பாதுகாக்க செயல்பட முடியும் என்றும் பிரமைகளை விதைக்க தற்பொழுது முயலுகின்றன. உண்மையில் சிராக், வில்ப்பனுக்கும் CPE க்கும் அவரது முழு ஆதரவை சுட்டிக்காட்டும் பல பகிரங்க அறிக்கைகளை வழங்கி இருக்கிறார்.

நேற்று 12 தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புக்களால் நடத்தப்பட்ட ஒரு செய்தியாளர் மாநாட்டில் உலக சோசலிச வலைத் தளமானது அப்பேராளர்களை அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்குவதை நோக்கமாக கொண்ட ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்க அவர்கள் மறுப்பது ஏன் என்று கேட்டது. பிரெஞ்சு தொழிற்சங்கங்களிலேயே மிகவும் போர்க்குணம் படைத்ததாக பரவலாக கருதப்படும் Solidaires சங்கத்தின் Annick Coupé பதிலளித்தார்: "Intersyndicale (12 சங்கங்களின் குழு) -ன் கோரிக்கை தொடக்கத்திலிருந்தே CPE ஐ திரும்பப் பெறுவதாக இருந்து வருகிறது, CPE ஐ திரும்பப் பெறுவதை சாதித்துவிட்டால், பின்னர் புதிய சமூக உள்ளடக்கத்தை திறக்க முடியும், தொழிலாளர்களை ஏற்கனவே ஆக்கிரமித்திருக்கும் அனைத்து பிரச்சினைகளின் அணிதிரளலின் புதிய இயக்குசக்தியை திறக்க முடியும். தொழிற்சங்கங்கள் என்ற வகையில் இதுதான் எமது பொறுப்பாகும்." ஏனைய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அல்லது மாணவ தலைவர்கள் ஒருவரும் WSWS கேள்வி பற்றி பேசவில்லை.

Coupé ன் பதிலும் ஏனைய தொழிறசங்கங்களின் மெளனமும் தொழிலாளர்களின் நிலைமைகளின் மீதான அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் ஆபத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கும் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை இருட்டடிப்பதற்கான அவர்களின் முயற்சியை கோடிட்டுக்காட்டுகிறது. பிரான்சிலும் மற்றைய முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தின் சமூக அந்தஸ்தின் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல் இறுதியில் பூகோள முதிலாளித்துவத்தின் நெருக்கடியால் இயக்கப்படுகிறது. வேலைகள் உத்திரவாதத்திற்கான பிரெஞ்சு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கை மனிதகுலத் தேவைகளை தனிநபர் செல்வக்குவிப்பு மற்றும் இலாபக் குவிப்புக்கு கீழ்ப்படுத்துவதை அடிப்படையாக கொண்ட ஒரு சமூக முறையுடன் பொருந்திச்செல்ல முடியாது.

CPEன் சில அம்சங்களை வில்ப்பனும் சிராக்கும் ஒரு வேளை மாற்றி அமைத்தாலும் கூட, அல்லது அனைத்தையும் ஒன்றாக திரும்பப்பெறும்படி நிர்ப்ந்திக்கப்பட்டாலும், அரசாங்கமானது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளை விரைந்து சட்டமியற்றும். இதனால்தான் CPE எதிர்ப்பு இயக்கமானது சிராக் வில்ப்பன் நிர்வாகத்தை கீழிறக்கி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களை உண்மையாய் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சோசலிச அரசாங்கத்தால் பதிலீடு செய்யப்படும் போராட்டத்திலிருந்து விலகி முன்னெடுக்கப்பட முடியாது. இது முறையே திலவாலாகி போய்விட்ட தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தின் புதிய கட்சி மற்றும் புதிய முன்னோக்கை வளர்த்தெடுப்பதில் சார்ந்திருக்கிறது. (See: "Fight vs. ‘First Job Contract' raises need for new working class leadership")

இந்த இயக்கங்கள் CPE எதிர்ப்பு இயக்கம் தங்களது கட்டுப்பாட்டிலிருந்து நழுவிப் போவதிலிருந்தும் சுயாதீனமான பண்பை எடுப்பதிலிருந்தும் தடுப்பதற்கு தம் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கின்றன. செவ்வாய் தேசிய வேலை நிறுத்தங்களுக்கு முன்னர், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் CGT தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு விடுத்த உள்சுற்று அறிக்கை விளக்குவதாவது: "CPE மீதாக ஒருமுகப்படுத்தப்பட்ட முழக்கங்கள், ஆர்ப்பாட்டங்கள், வேலைப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, சம்பளங்கள் பற்றிய பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகளுக்கு அளவுக்கு அதிகமாகாத வண்ணம் நாம் கட்டாயம் விழிப்போடு இருக்க வேண்டும்.

அரசியல் அமைப்புமுறையின் "இடது" முகம் CPE-ன் சட்ட ரீதியான தன்மை பற்றி விசாரித்து தீர்ப்பளிக்கும் பிரான்சின் அரசியற் சட்ட நீதிமன்றம் இச்சட்டத்தை அடித்து வீழ்த்தும், அதன் மூலம் அரசாங்கத்தை அதன் தொழிலாளர் "சீர்திருத்தங்களை" மறுபடியும் இயற்ற வைக்கும் என நம்பிக்கை வைக்கிறது. பிரதான பல்கலைக்கழக மாணவர் அமைப்பான UNEF-ன் (l'Union Nationale des étudiants de France) தலைவரும் சோசலிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக கூட்டு வைத்திருப்பவருமான Bruno Julliard அசோசியேடட் செய்தி நிறுவனத்திடம், அத்தகைய தீர்ப்பு CPE எதிர்ப்பு இயக்கத்தை பாதிப்புற அனுமதிக்கக்கூடும் என்றார். "அது அரசாங்கத்தை புறக்கணிப்பதாகவும் இருக்கும் என்று எல்லோரும் அறிவர், ஆகையால் நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான வழியாகவும் அது இருக்க முடியும்" என்றார் அவர்.

அரசாங்கத்தின் ஆத்திரமூட்டல்

அரசாங்கமானது அதற்கு அதன் "இடது" எதிராளிகளால் வழங்கப்படும் மூச்செடுக்கும் நேரத்தை பயன்படுத்தி, இளைஞர்கள் மத்தியில் இன வேறுபாடுகளை வளர்த்தெடுக்கும் மற்றும் மேலும் போலீஸ் ஒடுக்குமுறைக்கு தயாரிக்கும். இது சம்பந்தமானதில் உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்க்கோசி முக்கிய பங்கை ஆற்றி இருக்கிறார். திங்களன்று வெளியிட்ட பேச்சில், தொழிற்சங்க ஆதரவுடன் CPE- ஐ வில்ப்பன் நிறைவேற்ற தவறியது மீதாக மெல்லிய திரையிட்ட பல்வேறு விமர்சனங்களை வழங்கினார். சார்க்கோசியும் வில்ப்பனும் அடுத்த ஆண்டு தேர்தலில் ஆளும் UMP இன் ஜனாதிபதி வேட்பு மனுவிற்கான போட்டியாளர்கள் ஆவர். பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டவாறு, ஆயினும் (சார்கோசி) "முறிவின்" முன்னணி ஆதரவாளராக இருப்பதால் அல்லது பிரான்சின் கூடுதல் பாதுகாப்புடைய சமூக மாதிரியுடன் ஒரு முறிவை செய்வதால் அளவுக்கதிகமான வலியத்தாக்குபவராக இருக்க முடியாது."

நேற்று வெளியான Le Parisen -உடனான பேட்டியில் உள்துறை அமைச்சர் நவ பாசிச ஜோன் மரி லூபென்னின் ஆதரவாளர்களுக்கு நேரடியாய் வேண்டுகோள் விடுத்தார். "தேசிய முன்னணி என்ற முட்டுச் சந்தை நோக்கிச்செல்வதை நிறுத்துங்கள், குடியரசுக் கட்சிகளுக்கு திரும்பி வாருங்கள். நாங்கள் விழித்திருக்கிறோம் மற்றும் உங்கள் தொடர்புடைய விஷயங்களை பற்றிப் பேசுவதை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்" என்று அறிவித்தார். புலம்பெயர்ந்தோர் மீதான அதிகரித்த அளவிலான கட்டுப்பாடுகள் மற்றும் போதை மருந்து பயன்படுத்துபவர்களை ஒடுக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

புலம்பெயர்ந்தோர் மீதான சார்க்கோசியின் தாக்குதல் CPE எதிர்ப்பு இயக்கத்திற்கு நேரடியாக தொடர்புடையது. அரசாங்கமானது "சலுகைமிக்க" பல்கலைக் கழக மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களை நாட்டின் மிகவும் ஏழ்மை பீடித்த பிராந்தியங்களில் இருந்து வரும் வேலையற்ற கறுப்பின மற்றும் அரபு இளைஞர்களுக்கு எதிராக குழிபறிக்குமாறு செய்வதற்கு முயற்சித்துள்ளது. ஆயினும், எண்ணிறைந்த ஊடக செய்தியறிக்கைகள் புலம்பெயர்ந்தோர் மற்றும் வேலையற்ற இளைஞர்கள் மத்தியில் மாணவர்களுக்கு அமோக ஆதரவு கிடைத்ததாக குறிப்பிடுகின்றன. கடந்த ஆண்டு கலவரங்களால் பாதிக்கப்பட்ட பாரிஸ் புறநகர்ப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களும் இளைஞர்களும் CPE எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஏனையோருடன் சேர்ந்து அணி வகுத்தனர்.

பிரெஞ்சு மற்றும் சர்வதேச ஊடகத்துடன் சேர்ந்து அரசாங்கம், CPE எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காணப்பட்ட தனித்த வன்முறை சம்பவங்களை பற்றி எடுத்துக்கொண்டனர். மிகப் பெரும்பான்மை ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியாக எதிர்ப்பு தெரிவித்த அதேவேளை, குழப்பம் விளைவிப்போர் என்று அழைக்கப்படும் சிறு குழுக்கள் (துல்லியமாகச்சொன்னால் "விதிகளை மீறுவோர்") மாணவர்களை தாக்கினர், சிலரது பைகளையும், கைத் தொலைபேசிகளையும் திருடினர், கலவரத்தடுப்பு போலீசாருடனும் மோதினர். இந்த சம்பவங்கள் மீதாக அளவுக்கு ஒவ்வாத முறையில் குவிமையப்படுத்துவது இந்த பேரணிகளை இழிவுபடுத்தவும் பிரெஞ்சு இளைஞர்களை பிளவுபடுத்துதற்குமான முயற்சியினால் உந்தப்படுகிறது.

பாரிசில் செவ்வாய் அன்று நடைபெற்ற பரந்த ஆர்ப்பாட்டங்களின் முடிவில், சார்க்கோசி Place de la République-ல் கலவரத் தடுப்புப் போலீசை சந்தித்து, டசின் கணக்கான குழப்பம் விளைவிப்போர்களுடனும் ஆர்ப்பாட்டக்காரர்களுடனும் மோதியவர்களை பாராட்டினார். சுமார் 200 அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்துக்கு குடித்துக் களிக்க வரவேற்கப்பட்டனர். "உங்களை பற்றி நான் பெருமைப்படுகிறேன், உண்மையில் பெருமைப்படுகிறேன்" என்று சார்க்கோசி அறிவித்தார். "பணி முடிக்கப்பட்டது." அவர் தொடக்கத்தில் போலீசுக்கு "உங்களால் முடிந்த அளவு, இளங்குற்றவாளிகளை, பெருமளவில் குண்டர்களை கைது செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார். போலீஸ் பாரிசில் 488 பேர் உள்பட, 787 பேரை கைது செய்தது, 46 பேர் காயமுற்றனர் என்று கூறப்படுகிறது.

போலீஸ் ஆத்திரமூட்டலும், குழப்பம் விளைவிப்போர் ஊடுருவலும் வன்முறையில் குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தன என்பதில் ஐயமிருக்க முடியாது. பாரிஸ் புறநகர்ப் பகுதி மற்றும் ஏனைய ஒதுக்குப்புற பகுதியில் உள்ள போலீசார் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் மிக நெருக்கமாக வேலை செய்கின்றனர், மற்றும் தகவல் கொடுப்பவர்கள், முகவர்கள் மற்றும் ஆத்திரமூட்டல் செய்பவர்களின் வலைப்பின்னல்களை கொண்டுள்ளனர். இருந்தும் ஆர்ப்பாட்டத்தில் கண்ட மிக மோசமான வன்முறைச் சம்பவம் கலவரத்தடுப்பு போலீசாரால் நடத்தப்பட்டது என்பதும் கூட கட்டாயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மார்ச் 18 அன்று, 39 வயது தொலைத் தொடர்பு ஊழியர் சிறில் பெரஸ் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டதுடன், அவர் குண்டாந்தடிகளால் தலையில் தாக்கப்பட்டதாகவும் மிதிக்கப்பட்டதாகவும் நேரில் பார்த்தோர் கூறினர்.

CPE- க்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும் உயர்நிலைப் பள்ளிகளின் முற்றுகையை முறியடிக்க போலீஸ் அனுப்பப்படும் என்று அரசாங்கம் நேற்று கூறியது. ஒரு உயர்நிலைப்பள்ளி சங்கத்தின்படி, அனைத்து உயர்நிலை பள்ளிகளிலும் கால் பகுதி மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களால் மூடப்பட்டன. நேற்று கல்வி அமைச்சர் பள்ளி முதல்வர்களுக்கு, அவசியமானால் போலீசை பயன்படுத்தி முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved