World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP presidential candidate to address Colombo election meeting

இலங்கை சோ.ச.க ஜனாதிபதி வேட்பாளர் கொழும்பு தேர்தல் கூட்டத்தில் உரையாற்றுவார்

29 September 2005

Back to screen version

நவம்பர் 17 நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) வேட்பாளர் விஜே டயஸ், அடுத்த வாரம் கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். விஜே டயஸ் சோ.ச.க யின் பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு உறுப்பினரும் ஆவார்.

சோ.ச.க உழைக்கும் மக்களுக்கு ஒரு சோசலிசப் பதிலீட்டை வழங்குவதற்காக இந்தத் தேர்தலில் பங்குபற்றுகிறது. தற்போதைய வாழ்க்கைத் தர வீழ்ச்சி, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கான ஆபத்து போன்ற சமூக சீரழிவுகளுக்கும் பொருளாதார சீரழிவுகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே பொறுப்பாளிகளாவர். அனைத்து முதலாளித்துவ கட்சிகளுக்கும் எதிராக, சுயாதீனமாக ஒரு சக்திவாய்ந்த அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் வர்க்க நலன்களுக்காகப் போராட முடியும் என சோ.ச.க வலியுறுத்துகிறது.

சோ.ச.க யின் பிரச்சாரம் இந்த சிறிய தீவில் மட்டுமன்றி, தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள உழைக்கும் மக்களை சென்றடையும். அதன் வேலைத் திட்டம், இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களை பிராந்தியத்தில் உள்ள அவர்களது வர்க்க சகோதரர்களுடன் ஐக்கியப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டதாகும். தெற்காசிய ஐக்கிய சோசலிச குடியரசின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா--ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை கட்டியெழுப்புவதற்காக சோ.ச.க போராடுகிறது.

சோ.ச.க தீவு பூராவும் அதே போல் இந்தியாவிலும் பல கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. பெரும் குறிக்கோள்களைக் கொண்ட இந்த பிரச்சாரத்திற்கு நிதி வழங்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ரூபா 500,000 ஆகும். நிதிக்கு தாராளமாக பங்களிப்பு செய்யுமாறு நாம் உலக சோலிச வலைத் தள வாசகர்களையும் எமது ஆதரவாளர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

நிதி உதவிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பிவைக்க முடியும்

கணக்கு இலக்கம்: 1472834301

வரையறுக்கப்பட்ட இலங்கை கொமர்ஷல் வங்கி

கிருலப்பனை கிளை

94A, பாமன்கட வீதி

கிருலப்பனை

இலங்கை

பகிரங்கக் கூட்டங்கள்:

கொழும்பு

பொது நூலக கேட்போர் கூடம்

அக்டோபர் 4

மாலை 4 மணி

சிலாபம்

ஷேர்லி கொரேயா ஞாபகார்த்த மண்டபம்

அக்டோபர் 14

பி.ப 3 மணி

குருணாகலை

பொது நூலக கேட்போர் கூடம்

அக்டோபர் 29

பி.ப 3 மணி


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved