World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ஜேர்மனிInternational press pours scorn on German voters ஜேர்மன் வாக்காளர்கள் மீது வெறுப்பை பொழியும் சர்வதேச பத்திரிகைகள் By Peter Schwarz ஞாயிறன்று நடைபெற்ற ஜேர்மன் நாடாளுமன்ற தேர்தல்களை (Bundestag) சர்வதேச பத்திரிகைகள் வெறுப்புணர்வும் பயங்கரவுணர்வும் கலந்த நிலையில் விமர்சித்திருக்கின்றன. வாக்காளர்கள் அளித்துள்ள தீர்ப்பை தெளிவாக புரிந்துகொள்ளலாம். நலன்புரி அரசு சலுகைகள் வெட்டு மற்றும் ''சுதந்திரச் சந்தை'' சீர்திருத்தங்களை தற்போது எல்லா ஐரோப்பிய ஒன்றிய அரசுகளும் மேற்கொண்டிருப்பதை வாக்காளர்கள் தள்ளுபடி செய்திருக்கின்றனர். பழைமைவாத எதிர்க்கட்சி CDU மற்றும் CSU மற்றும் FDP அடங்கிய அணி இன்றைய ஆளும் SPD மற்றும் பசுமைக்கட்சி கூட்டணியைவிட தெளிவானதொரு வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது, நடைபெறவில்லை. மாறாக எந்த அணிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகாரர்களும் CDU வும் முந்திய தேசிய தேர்தலைவிட குறைவான வாக்குகளையே பெற்றிருக்கின்றன. இதற்கெல்லாம் மேலாக CDU மற்றும் அதன் அதிபர் பதவிக்கான வேட்பாளர் ஏஞ்சலா மெர்க்கல் கடுமையாக தோல்வியடைந்திருக்கிறார். அவர் அண்மைக்காலம் வரை பதவியிலிருக்கும் அதிபர் SPD கட்சியின் ஹெகார்ட் ஷ்ரோடரைவிட தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புக்களில் இரட்டிப்பான எண்களில் முன்னணியில் இருந்தார். தேர்தல் முடிந்ததும் மெர்க்கல் மற்றும் ஷ்ரோடர் இருவருமே தாங்கள் புதிய அரசாங்கத்திற்கு தலைமை ஏற்கப் போவதாக வலியுறுத்தி கூறி வருகின்றனர். ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய வரலாற்றில் முதல் தடவையாக ஞாயிறன்று நடைபெற்ற தேசிய தேர்தல் வாக்குப்பதிவில் ஒரு தெளிவான வெற்றி பெற்றவர் உருவாகவில்லை. அதன் மூலம் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை பேரம் பேசுகின்ற ஒரு காலகட்டம் உருவாகியிருக்கிறது. மற்றும் அரசியலில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளின் மிகப்பெரும் கருத்தை எதிரொலிக்கின்ற வகையில் மிலானிலிருந்து வெளிவரும் கூரியர் டெல்லாசேரா (Corriere della Sera) சுட்டிக்காட்டியுள்ள விமர்சனத்தில் ``பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்ற அச்சத்தாலும், தான் வென்றெடுத்த நலன்புரி அரசு போய்விடும் என்ற பயத்தினாலும்`` ஜேர்மனியில் இவ்வாறு வாக்களித்திருக்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்திருக்கிறது. ஸ்பெயின் செய்தி பத்திரிகையான எல்பாய் (ணிறீ றிணீணs) விமர்சித்திருந்தது: ``எப்படிப் பார்த்தாலும் ஜேர்மனி இடதுசாரிப் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறது. செயல் திட்டம் 2010 வடிவத்தில் மிதவாத சீர்திருத்தத்தை அவர்கள் விரும்புகின்றனர். வலதுசாரி அணியினர் கருதுவதைப் போல் சமூகக் கட்டுகோப்பில் ஒரு தீவிர மாற்றத்தைவிட ஜேர்மன் வாக்காளர்கள் மிதவாத சீர்திருத்தத்தையே விரும்புகின்றனர்.`` ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சட்டம் பொதுமக்களது அங்கீகார வாக்குப்பதிவிற்கு விடப்பட்டபோது பிரான்சில் வாக்காளர்கள் EU அரசியல் சட்டத்தை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து ஜேர்மனியில் நடைபெற்ற தேர்தல் ஒரு பெரிய ஐரோப்பிய ஒன்றிய நாடு இரண்டாவது முறையாக ஐரோப்பாவை கண்டிப்பான ''சுதந்திரச் சந்தை'' அடிப்படையில் சீரமைப்பு செய்வதற்கான ஆளும் செல்வந்தத்தட்டினரின் திட்டங்களுக்கு ஜேர்மன் வாக்காளர்கள் ஒரு திட்டவட்டமான மரண அடி கொடுத்திருக்கின்றனர். ``ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சட்டத்தை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து ஏற்கனவே முடங்கிக்கிடக்கும் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் தற்போது மேலும் அதிகமாக முடங்கிவிடும் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது`` என்று பாரிசிலிருந்து வெளிவரும் Figaro கூறியிருக்கிறது. கூரியர் டெல்டா சேராவும் அதே முடிவிற்கு வந்திருக்கிறது, ``அதற்கு ஜேர்மனியும் ஐரோப்பா முழுவதுமே விலை கொடுத்தாக வேண்டும்.`` பிரிட்டிஷ் Daily Telegraph கூறியிருப்பது: ``அதற்கு அப்பால் ஒரு கறுப்பு - மஞ்சள் பங்காளித்துவ ஏற்பாடு இல்லா நிலையில் ஜேர்மனியின் பழைமைவாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசாங்கம் அதன் பொருள் ஷ்ரோடர் இரண்டாவது தவணை பதவி காலத்தில் அறிமுகப்படுத்திய வரையறுக்கப்பட்ட மாற்றங்களில் சொற்ப முன்னேற்றம்தான் ஏற்பட முடியும். மற்றும் அதன் விளைவாக பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் சீர்திருத்தம் மந்த கதியில் செல்லும். இந்த பெரும் அதிருப்தி தருகின்ற தேர்தல் முடிவினால் ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.`` டென்மார்க் Jyllands Posten வருந்திருயிருப்பது, ``ஐரோப்பாவின் மிகப்பெரிய, மிக முக்கியமான நாடான ஜேர்மனியிலிருந்து கடைசியாக ஐரோப்பா எதிர்பார்க்கக் கூடியதை ஜேர்மன் தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன.`` ஸ்டாக்ஹோமிலிருந்து வெளிவரும் Dagens Nyheter தெரிவித்துள்ள குறைபாடு: ``ஐரோப்பாவிலுள்ள சீர்திருத்தங்களை கொண்டு வரவிரும்புகின்ற நண்பர்களுக்கு காட்டப்பட்டுள்ள சமிக்கை தவறானது. துணிந்து பொறுப்பேற்று தகுந்த நடவடிக்கைகளை எடுப்பவர்கள் தண்டிக்கப்படும் ஆபத்தில் உள்ளார்கள்.`` சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிடிவாதமான பழைமைவாத செய்தி பத்திரிகையான Neue Zürcher Zeitung ஜேர்மன் வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தியிருப்பது, ``எதிர்காலத்தில் வாய்ப்பு எதுவும் இல்லாத அளவிற்கு தற்போது நிலவரம் தோன்றியிருக்கின்ற உண்மை எடுத்துக்காட்டுவது என்னவென்றால், ஒரு பேரழிவு நிலைதான் தோன்றியுள்ளது. இந்த உண்மை பொது உள்ளுணர்வுகளில் தற்போது ஆழமாக ஊடுருவி உள்ளது. பொதுமக்கள் நிலைக்கண்ணாடியில் தங்களை பார்த்துக்கொண்டு உண்மையிலேயே அவர்கள் விரும்புவது என்ன என்பதை தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.`` இதர செய்தி பத்திரிகைகளும் சேர்ந்துகொண்டு ஜேர்மன் வாக்காளர்கள் மீது அவதூறுகளை பொழிந்துள்ளன. இதற்கு மிகத் தீவிரமான எடுத்துக்காட்டு, பாரிசிலிருந்து வெளிவரும் லிபரேஷன் பத்திரிகையாகும். அது, ஜேர்மனியின் பசுமைக் கட்சிக்காரர்களையும், அவர்களது கட்சிப் பத்திரிகையான Taz சையும்போல் 1968 கண்டன இயக்கத்தில் வேர்விட்டவை. ஆனால் அண்மை ஆண்டுகளில் முதலாளித்துவ கட்டுக்கோப்பிற்கு ஒரு நம்பகத்தன்மையுள்ள சாட்டையாக மாறிவிட்டன. ``ஜேர்மனியில் நடைபெற்ற இந்த வியப்பூட்டும் தேர்தலிருந்து உருவாகும் ஐரோப்பா தன்னைப் பற்றியே அதிக நிச்சயமில்லாத ஒன்றாகத் தோன்றும் கண்டனப் பேரணிகளை நடத்துபவர்களும் தீவிரவாதிகளும் எந்த சாதாரண அரசியல் மாற்றத்தையும் தடுத்துவிட முடியும் என்றும் நீண்டகால கொள்கையை முடக்கிவிட முடியும் என்றும் கருதப்படுகின்ற நாடுகள் அணியில் தற்போது ஜேர்மனியும் சேர்ந்து கொண்டிருக்கிறது`` என்று லிபரேஷன் வருத்தம் தெரிவித்துள்ளது. சீர்திருத்தங்களின் அவசியத்தை புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு ஜேர்மனியின் வாக்காளர்கள் அடிமுட்டாள்களாக இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டி, அதே தொனியில் ஏறத்தாழ ஒருமனதாக பிரிட்டிஷ் பத்திரிகைகள் அனைத்தும் எழுதியுள்ளன. Guardian, டோனி பிளேயரின் தொழிற்கட்சியுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பது, அது எழுதியது ``மார்கரட் தாட்சரோடு ஆங்கியை - ஏஞ்சலா மெர்கலை என்னதான் ஒப்புநோக்கி ஆராய்ந்தாலும், ...அவை பிரிட்டனின் இரும்பு பெண்ணின் கவர்ச்சியையோ, அல்லது கடந்த 7 ஆண்டுகளாக சிதைந்துகிடக்கும் ஜேர்மனியை தூக்கி நிறுத்துவதற்கு தேவையான தீவிரக் ாெகள்கைகளையோ கொண்டவராக மெர்கல் இல்லை. இந்தத் தேர்தல் ஆழ்ந்த அவநம்பிக்கையை பெரிய கட்சிகளின் மகத்தான விரக்தியை மற்றும் மாற்றத்தின் தேவையை உணர்ந்துக்கொண்ட வாக்காளர்களின் குழப்பத்தை ஆனால், அந்த மாற்றத்தால் ஏற்படுகின்ற விளைவுகளைக் கண்டு அஞ்சுகின்ற நிலையை எடுத்துக்காட்டுகிறது. இந்த அசாதாரணமான தேர்தல் முடிவுகள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்னர் பேரம் பேசுவது நடைபெறவிருக்கிறது. ஜேர்மன் மக்கள் சீர்திருத்தங்களை விரும்பலாம் ஆனால், தற்போது அவர்களது உணர்வுகள் தவறிவிட்ட காரணத்தினால் முடக்க நிலை தோன்றியிருக்கிறது.`` பழமைவாத Daily Telegraph கூறியது: ``CDU, ஏஞ்சலா மெர்கல் தலைமையில் எடுத்து வைத்த சீர்திருத்தத்தை உறுதியாக பிடித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஜேர்மனியின் வாக்காளர்கள் நேற்று தவற விட்டுவிட்டனர்.`` ஜேர்மன் தேர்தல்கள் நடப்பதற்கு முன்னர் பிரிட்டிஷ் அரசாங்கத் தலைவர் டோனி பிளேயரும் பிரிட்டனின் பழமைவாத எதிர்க்கட்சியும் தங்களது அனுதாபம் மெர்க்கல் பக்கம் உள்ளது என்பதை மறைக்கவில்லை. இந்த ஜூன் மாதம் பேர்லினுக்கு கடைசியாக விஜயம் செய்த டோனி பிளேயர் ஜேர்மனியின் அதிபர் ஷ்ரோடரை சந்திக்கும் முன்னர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்ததன் மூலம் திட்டவட்டமானதொரு ராஜியத்துறை மோதலையும் உருவாக்கினார். தற்போது இந்தத் தேர்தலில் மெர்க்கல் தோல்வி கண்டிருப்பதால் ஏமாற்றம் அதிகரித்திருக்கிறது. SPD மற்றும் பழமைவாதக் கட்சிகளின் ஒரு மகத்தான கூட்டணிக்கு எதிராக ஏறத்தாழ அனைத்து சர்வதேச பத்திரிகைகளும் எச்சரிக்கை செய்திருக்கின்றன. அத்தகையதொரு கூட்டணி பொருளாதார முடக்கத்திற்கும் தேக்க நிலைக்கும் இட்டுச் சென்றுவிடும் என எச்சரித்துள்ளன.லண்டன் Financial Times பொருளாதார நிபுணர்கள் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதியிருக்கிறது. அந்த பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருப்பது என்னவென்றால்: ``பொருளாதார தேக்க நிலை மற்றும் சாதனை அளவை எட்டியுள்ள வேலையில்லாத நிலவரம் ஆகியவற்றை சமாளிப்பதற்கு தேவைப்படும் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் அத்தகையதொரு கூட்டணியில் சங்கடத்திற்கு உள்ளாகும்.`` அந்த பத்திரிகை பின்னர் BMW கார் நிறுவனத்தின் ஒரு நிர்வாகியின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளது: ``அதுதான் நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று. நீண்ட காலத்திற்கு நிச்சயமற்ற நிலை இருக்கும் மற்றும் உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டேயிருக்கும். நாங்கள்தான் கடைசியில் அனைத்தையும் இழந்து விடுவோம்.`` அமெரிக்காவின் Wall Street Journal அதே கருத்தை எடுத்துக்கொண்டு எழுதியிருப்பது; ``இந்த குழப்பமான முடிவுகளால் எந்த பெரிய கட்சியும் ஒரு நிலையான நாடாளுமன்ற பெரும்பான்மை கொண்ட ஆட்சியை நிறுவ முடியவில்லை. இதன் பொருள் நிர்வகிக்க முடியாத அளவிற்கு பரந்துவிரிந்து கிடக்கும் நலன்புரி அரசை சீர்திருத்துவதற்கு விரைவில் எந்த திட்டவட்டமான நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த நலன்புரி அரசினால் 11% பேர் வேலையில்லாத நிலையில் இருக்கின்றனர், பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியத்தில் உள்ளது. இது உலகிற்கு நல்லது அல்ல.`` Newyork Times இதே முடிவிற்கு வந்திருக்கிறது: ``ஒரு மகத்தான கூட்டணி ஏற்படும்போது அதில் ஜேர்மனியின் பொருளாதாரத்தில் சீர்திருத்தம் எதுவும் கொண்டுவரப்படுவது, நீக்கப்பட்டுவிடுகிறது. அத்துடன் மெர்க்கல் கோடிட்டுக் காட்டியிருப்பதை போல் அமெரிக்காவுடன் எந்த சமரசமும் செய்துகொள்வதற்கு வழியில்லை என்று விளக்கப்பட்டிருக்கிறது.``ஒட்டுமொத்த சர்வதேச பத்திரிகைகளும் மிக ஆவேசமாக தேர்தல் முடிவை கண்டித்து எழுதியிருப்பது ஒரு எச்சரிக்கை என்று புரிந்து கொள்ள வேண்டும். தங்களது சொந்த பெருவர்த்தக மற்றும் அரசியல் நலன்களுக்கு தடைக்கல்லாக நிற்கின்ற எந்த ஜனநாயக நடைமுறைகளையும் ஏற்றுக்கொள்ள ஆளும் செல்வந்தத்தட்டினருக்கு விருப்பம் குறைந்துகொண்டே வருகிறது. இது சர்வதேச பத்திரிகைகளுக்கு மட்டுமல்ல. ஆனால், ஜேர்மன் ஊடகங்களுக்கும் பொருந்தும். அவையும் இதே முடிவுகளுக்கு வந்திருக்கின்றன. ``ஒரு படுதோல்வி என்ற தலைப்பில் Frankfurter Allgemeine Zeitung உள்வாங்கி எழுதியிருப்பது; ``சிலர் நிலைநாட்டி வந்த கொள்கை மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதையும் அடிப்படை மாற்றம் தேவை என்பதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.`` ஒரு நீண்ட கட்டுரையின் முடிவில், அந்தக் கட்டுரையில் எல்லாக் கட்சிகளுமே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. அந்தக் கட்டுரை முடிவில் ஜேர்மன் வார இதழான Der Spiegal தேர்தல் முடிவு ஒரு ''பெரிய வாய்ப்பை'' தந்திருக்கிறது என்று கூறியிருக்கிறது. இறுதியாக கட்டுப்படுத்தவியலாத அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்ப எல்லாக் கொள்கைகளையும் தேர்தல் உறுதிமொழிகளையும் தூக்கி எறிந்துவிட வேண்டும். Der Spiegal எழுதியது, ``இந்தத் தேர்தல் பிரசாரத்திற்கு வெளியில் அரசியல் அரங்கில் அனைவரும் ஒருவரையொருவர் தெரிந்தேயுள்ளனர். இன்றைய தினம் கட்சிகளிடையே காணப்படுகின்ற வேறுபாடுகள் எல்லாமே கலாச்சாரம் தொடர்பான வேறுபாடுகளும் வரலாற்று காரணிகளும்தான். இந்தத் தேர்தலுக்கு பின்னால் SPD பசுமைக்கட்சியின் திட்டங்களும் புத்திஜீவிதமான ஆன்மீக முயற்சிகளும் இறுதியாக நடைமுறையில் சாத்தியமான காரியங்களுக்கான வரலாற்று குப்பைத் தொட்டிகளில் தூக்கி எறிந்து விடவேண்டும்.`` |