World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Report from final days of "Camp Casey"

Soldier returned from Iraq: "The rich don't fight wars in America"

"கேசி முகாமின்" இறுதிநாட்களில் இருந்து ஒரு அறிக்கை

ஈராக்கிலிருந்து திரும்பிய போர்வீரர்: ``அமெரிக்காவில் பணக்காரர்கள் போர்புரிவதில்லை``

By Mark de Socio
5 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத்தள செய்தியாளர் மார்க் டு சோசியோ ஆகஸ்ட் இறுதியில் சின்டி சீகன் நடத்துகின்ற போர் எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்து கண்டனங்களை நடத்தியவர்களை பேட்டி காண்பதற்காக டெக்ஸாசில் உள்ள கிராபோட்டிற்கு பயணம் செய்தார். சின்டி சீகனின் மகன் கேசி 2004-ல் ஈராக்கில் கொல்லப்பட்டார். சென்ற மாதம் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஓய்வு எடுத்துக் கொண்ட முகாம் அருகில் போருக்கு பொது மக்களது எதிர்ப்பை காட்டுவதற்காக சீகன் முகாமிட்டிருந்தார். தன்னை ஜனாதிபதி சந்தித்து பொய்களை அடிப்படையாக கொண்ட ஒரு போரில் தனது மகன் கொல்லப்படுவதற்கு அவரது நிர்வாகம் ஏன் அனுப்பியது என்று ஜனாதிபதி விளக்கம் தர வேண்டுமெனக் கோரினார். புஷ், அவ் அம்மையாரை சந்திக்க மறுத்துவிட்டார்.

சின்டி சீகன் ஆகஸ்ட் 24-ல் தனது போர் எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கத்தை புஷ்சின் முகாமிற்கு வெளியில் நடத்துவதற்கு டெக்ஸாஸ், கிராபோர்டுக்கு திரும்பி வந்தார் 19ல் அவர் தனது நோய் வாய்ப்பட்ட தாயை கவனிப்தற்காக சென்றிருந்தார். போருக்கு பொதுமக்களது எதிர்ப்பை வளர்க்கவும் அதில் கவனம் செலுத்தவும் சீகனும் அவரது ஆதரவாளர்களும் அதற்குப் பின்னர் ஒரு நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தனர். தன்னை ஜனாதிபதி சந்திக்கின்ற வரை வாஷிங்டனில் தனது விழிப்புணர்வு போராட்டத்தை நீட்டிக்க திட்டமிட்டிருப்பதாக சீகன் தெரிவித்தார்.

"நமது நாடு நாளுக்கு நாள் கீழே சென்று கொண்டிருக்கிறது என்று நான் நினைத்தேன்" சீகன் அசோசியேட்ட் பிரஸ்ஸிடம் கூறிய அதேவேளை, அவரது ஆதரவாளர்களும் கண்டனப் பேரணியில் கலந்து கொள்பவர்களும் இறுதியில் வாஷிங்டன் DC யில் வெள்ளை மாளிகைக்கு வெளியில் முடிவடையும் தங்களின் சுற்றுப் பயணத்தில் கலந்துகொள்ள கட்டிக் கொண்டு தயாராகிக் கொண்டிருந்தார்கள். "நமது குழந்தைகள் போரில் கொல்லப்படுவது குறித்து எவரும் கவலைப்படவில்லை என்று நான் நினைத்தேன், ஆனால் மில்லியன் கணக்கானோர் கவலைப்படுகிறார்கள் மற்றும் மில்லியன் கணக்கானோர் நமது நாட்டைப்பற்றி நமது நாட்டை சிறப்பாக ஆக்கவேண்டுமென்று கவலைப்படுகின்றனர்`` என்று அவர் சொன்னார்.

ஆதரவைக் காட்டுகின்ற வகையில் ஆகஸ்ட் 27 அன்று 2000த்திற்கு மேற்பட்ட போர் எதிர்ப்பு கண்டனப் பேரணியினர் திரண்டனர் மற்றும் ``கேசி முகாமில்`` ஆகஸ்ட் 28-ல் குறைந்த பட்சம் ஆயிரம் பேர் திரண்டனர்.

வாரக் கடைசிவாக்கில், ஈராக் போரில் பணிபுரிந்த 33-வது வயது முன்னாள் இராணுவ சார்ஜண்ட் Scott Service of Montana உள்பட பல போர் எதிர்ப்பு கண்டனக்காரர்களை உலக சோசலிச வலைத் தளம் பேட்டி கண்டது. ``இங்கே வருவது எனக்கு தனிப்பட்ட முறையில் அமைந்த ஒரு பயணமாகும். ஈராக்கில் நான் ஏராளமாக அனுபவப்பட்டிருக்கிறேன். நான் இங்கு வந்திருப்பதன் மிக முக்கியமான காரணம் உணர்வு பூர்வமாகவும் உளவியல் அடிப்படையிலும் எனக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்`` என்று ஸ்காட் கூறினார்.

ஸ்காட் 2000-ல் இராணுவ தேசிய காவலர் பிரிவில் சேர்ந்தார், ஏனெனில் அவர், "எனது நாட்டிற்கு பணியாற்றுவதில் ஒருவகை கண்ணியமும் ஏதோ ஒரு வகையில் வாழ்வு பயனுள்ளதாகவும் ஓரளவிற்கு நிறைவுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்`` என்றார்

``நான் ஈராக்கில் இருந்தபோது போருக்கு எதிரான எனது உணர்வுகள் மிகவும் வலுவாக உருவாயிற்று`` என்று ஸ்காட் சொன்னார். அவரும் அவரது பிரிவும் பிப்ரவரி 2004-ல் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டனர் மற்றும் அடுத்த 15 மாதங்கள் அங்கு பணியாற்றினார்கள்.

ஈராக் நிலவரம் பற்றி கருத்து தெரிவித்த ஸ்காட் தனது தளம் 800 பீரங்கி குண்டுகளின் தாக்குதல்களுக்கு தாக்குப் பிடித்ததாகவும், அதில் ஒன்றில் தான் மயிரிழையில் தப்பியதாகவும் ஸ்காட் சொன்னார். தினசரி ஆயுதங்களின் தாக்குதல்களுக்கு இலக்கானதாகவும் தனது முகாமின் முன் வாயிலில் பல்வேறு கார் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் நடந்ததாகவும் கூறினார். தனது யூனிட்டிடம் anti-ballistic உடுப்புகள் உள்பட போதிய ஆயுதங்கள் இல்லாதது குறித்து அதிர்ச்சியை தெரிவித்தார், முதலில் வழங்கப்படவில்லை என்றும் பின்னர்தான் அவை வந்து சேர்ந்தன என்றும் குறிப்பிட்டார்.

தனது பிரிவின் மனத் தைரியம் பற்றி கருத்துத் தெரிவித்த ஸ்காட், ``எனது யூனிட்டிலுள்ள 60 சதவீதம் பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தாங்கள் அங்கு இருந்தது பற்றி ஆத்திரத்துடன் இருந்தனர், நிலவரம் பற்றி மிகவும் விரக்தியடைந்திருந்தனர், ஏன் செய்து கொண்டிருக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், அதுவும் ஏன் முதல் இடத்தில் இருக்கிறோம் என்பது குறித்து மிகவும் குழப்பமடைந்திருந்தனர்" என்று ஸ்காட் கூறினார். இராணுவத்திற்கு அனுப்பப்படும் முன்னர் அவரும் அவரது நண்பர்களும் எவ்வகையான பணிகளை செய்து கொண்டிருந்தனர் என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்காட், ``அமெரிக்காவில் பணக்காரர்கள் போர்புரிவது இல்லை`` என்று விமர்சித்தார்.

தமது ஈராக் அனுபவத்திலிருந்து ஏதாவது அரசியல் படிப்பினைகளை பெற்றாரா என்பது பற்றியும் காம்ப் கேசி பற்றியும் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த ஸ்காட், ``நான் புறப்படும் முன்னர் நான் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு ஜனநாயகக் கட்சிக்காரன். இப்போது நான் ஒரு சுயேட்சை`` என்று பதிலளித்தார்.

இராணுவத் தலைமை வாரண்ட் அதிகாரியான டக்ளஸ் கிளாப் போருக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் பயிற்சியின் போது ஒரு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் நொருங்கி விழுந்ததில் டெக்ஸாசிலுள்ள ரெட்ரிவர் ஆர்சனால் பகுதியில் மடிந்தார். அவரது மனைவியான செலன் கிளாப், சின்டி சீகனை ஆதரிப்பதற்காக கேசி முகாமிற்கு வந்தார். ``நான் எப்போதுமே இந்தப் போரை ஆதரித்ததில்லை. அப்போதும் நான் ஆதரிக்கவில்லை மற்றும் இப்போதும் நான் ஆதரிக்கமாட்டேன்`` என்று அவர் சொன்னார்.

தமது 22 வயது மகன் இராணுவ சார்ஜண்ட் ஜெர்மி ஸ்மித்தை ஈராக்கிற்கு அவர் அனுப்பப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர், Ft. Hood பகுதியில் கார் விபத்தில் இழந்து விட்ட, 43 வயதான ஆமிபிரஹாம் கூறினார். தமது மகன் காரை ஓட்டிக் கொண்டு செல்லும் போது மற்றொரு கார் மீது மோதி மற்றவர்களை காயப்படுத்திவிடாது தவிர்ப்பதற்காக தனது காரை நிறுத்தும்பொழுது நொருங்கி மாண்டார் என்று கூறினார். ``அவர் வீரமரணம் அடைந்தார்". அவர் ஜனாதிபதி புஷ்ஷை விட அதிக கண்ணியத்தோடு நடந்து கொண்டார். நமது போர் வீரர்கள் கண்ணியம் மிக்கவர்கள், நல்லவர்கள். ஆனால் புஷ் ஒரு பொய்யர்`` என்று அவரது தாயார் சொன்னார்.

இராணுவத்தில் சேருகின்ற வயதுடைய பல குழந்தைகளின் தாய்மார்கள் அந்த முகாமில் கலந்து கொண்டனர். இராணுவத்திற்கு ஆள் சோர்ப்பவர்கள் தங்களது வீடுகளின் கதவுகளை இடைவிடாது தட்டிக் கொண்டிருப்பதால் சேசி முகாமிற்கு வருமாறு தாங்கள் செயற்தூண்டல் அளிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். ஒரு பள்ளி ஆசிரியரான மூன்று பையன்களின் தாயாரான அவர்களில் ஒருவருக்கு 18 வயதாகிறது. அந்த தாய் அலிசன் வில்லியம்ஸ், தனது வீடு "இராணுவ ஆள் சேர்க்கும் அதிகாரிகளால் தொடர்ந்து வருகைக்கு ஆளாகி இருப்பதாக" தெரிவித்தார். ``அந்தப் போர் நியாயமற்றது, தனியார் தொழிலுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது" என்று சொன்னார். கட்டாய இராணுவ சேவை வரக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார். ``எனது மகன்களுக்காக நான் கவலைப்படுகிறேன்`` என்று கூறினார்.

ஒரு கிரேட் பள்ளி முதல்வரும் ஒரு 17 வயது பையனின் தாயாருமான ரோமானா திரிவினோ ``நான் ஒரு தாய் என்கிற முறையில் இந்த முகாமிற்கு வந்திருக்கிறேன்`` என்று கூறினார்.

உலக சோசலிச வலைத் தளம் சகோதரிகள் ஜியானி அன்னி மற்றும் மேரி பேர்ன்ஸ் ஆகிய இத்தக்காவை சேர்ந்த நியூயோர்க் சகோதரிகளோடு பேசியது. அவர்கள் பேர்ன்ஸ் சகோதரிகள் நாடோடி இசைக் குழுவோடு சேர்ந்தவர்கள். நீங்கள் ஏன் இந்த முகாமிற்கு வந்தீர்கள் என்று கேட்ட போது ஜீனி சொன்னார்: ``இந்த இயக்கத்தை நாங்கள் ஆதரிக்க விரும்பினோம். இந்த போர் தொடங்குவதற்கு முன்னரே நாங்கள் அதை எதிர்த்து வந்தோம். ஆனால் இப்போது சின்டி சீகன் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால் நாங்களும் இங்கே வந்து பிறரது கவனத்தை கவர்வதற்காக கலந்து கொள்கிறோம்`` என்று கூறினார். மேரி அவர்களுடன் சேர்ந்து கொண்டு கூறினார்: "நாங்கள் தாய்மார்கள்! எனக்கு 17 வயதிலும் 20 வயதிலும் குழந்தைகள் இருக்கிறார்கள். இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அதிகாரிகள் ஒவ்வொரு வாரமும் எனது வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அது என்னை பைத்தியம் பிடித்தது போன்ற ஒரு நிலைக்கு இட்டுச்செல்கிறது !``.

தங்களது அரசியல் சார்பு நிலைகள் பற்றி ஜென்னி கூறினார்: ``நாங்கள் ஜனநாயகக் கட்சிக்காரர்களாக வளர்க்கப்பட்டோம்.`` ``நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது நியூயோர்க்கில் எங்களது தந்தை ஜனநாயகக் கட்சியின் மாகாணத் தலைவராக பணியாற்றி வந்தார்." ஆனால் இன்றைய தினம் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் குடியரசுக் கட்சிக்காரர்களாக மாறிக் கொண்டு வருகிறார்கள் என்று நான் உணர்கிறேன்" என்றார். ``நாங்கள் ஜனநாயகக் கட்சியின் இடதுசாரி அணியைச் சேர்ந்தவர்கள்`` என்று மேலும் ஜென்னி கூறினார்.

மேரி சொன்னார்: ``இதை நான் சொல்லியாக வேண்டும். நான் குடியரசுக் கட்சிக்காரர் என்றோ அல்லது ஜனநாயகக் கட்சிக்காரர் என்றோ உணர்வு கொள்ளவில்லை. இது குடும்பங்கள் என்ற உணர்வோடு நடைபெறுகிறது. கட்சி சார்பற்ற மக்கள் குரலுக்கும் மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். ஹில்லாரி கிளிண்டன் போரை ஆதரிக்கிறார். அது எனக்கு பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. அவர்கள் எல்லாரும் தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக செயல்படவில்லை."

கேசி முகாம் பற்றி கருத்துத் தெரிவித்த அன்னி, ``புஷ்சின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது. போருக்கான ஆதரவு குறைந்து கொண்டு வருகிறது. சின்டி சீகன் இங்கு வந்தார். மற்றும் இந்த வியப்பூட்டும் திருப்புமுனை நடந்து கொண்டிருக்கிறது`` என்று கூறினார்.

மேரி அவருடன் சேர்ந்து கூறினார், ``இந்தக் குடும்பங்கள் அனைத்துமே இந்த உணர்வு கொண்டிருக்கின்றன. அவர்கள் பேசுவதற்கு எந்த இடமும் இல்லை. அவர்கள் எந்த அமைப்போடும் அல்லது அரசியல் பிரமுகரோடும் இணைந்து கொள்ளப் போவதில்லை``. ``சின்டி சொல்கின்ற முறையை நான் நேசிக்கிறேன். அவர் நெருப்பின் பொறியாக இருப்பதாக கூறுகிறார். ஆனால் இப்போது தீச்சுவாலை பற்றிக் கொண்டு விட்டது`` என்று ஜென்னி கூறினார்.

Top of page