ஐரோப்பா
:
பிரான்ஸ்
Paris: 48 African immigrants die in
apartment block fires
பாரிஸ்: மாடிக்குடியிருப்பு தீ விபத்துக்களில் 48 ஆபிரிக்க புலம்பெயர்ந்தோர் இறந்தனர்
By Antoine Lerougetel
1 September 2005
Back to screen version
பாரிசிலுள்ள 9 -வது
வட்டத்தை சேர்ந்த பாரிஸ்-ஒப்ரா ஓட்டலில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் ஏப்ரல் 15 அன்று 24 ஆபிரிக்கர்கள் இறந்தனர்.
ஆகஸ்ட் 25 நள்ளிரவில், 13-வது
வட்டத்தைச் சேர்ந்த வன்சன்ட்-ஒரியோல் பெரு வீதியில் 20ம் இலக்க ஒரு மாடிக்குடியிருப்பில் ஏற்பட்ட மற்றொரு தீ
விபத்தில் 17 ஆபிரிக்கர்கள் கொல்லப்பட்டார்கள். நான்கு நாட்களுக்கு பின்னர், 3-வது வட்டத்திலுள்ள மரே பகுதியில்
ஒரு மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 ஆபிரிக்கர்கள் மடிந்தார்கள். நான்கு மாதங்களில் மொத்தம் 48
மரணம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து இன்னமும் புலன் விசாரணை நடைபெற்றுக்
கொண்டிருந்தாலும், அந்தக் கட்டிடங்கள் சேதமுற்ற நிலையில் இருப்பதாலும் குடியிருப்புக்களில் நெரிசல் அதிகமாக இருப்பதாலும்
அவை இனவாத தாக்குதல்களுக்கு எளிதான இலக்குகளாகும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இடைவிடாது அரசாங்கம்
''சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தோர்" மீது தாக்குதல் நடத்தி வருவதும் பள்ளிகளில் முஸ்லீம்கள் முக்காடு அணிந்து
செல்லக் கூடாது என்ற சட்டமும் இனவாதிகளுக்கு போதுமான ஊக்குவிப்பாக அமைந்திருக்கிறது.
மரே வன்சன்-ஒரியோல் ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட தீ விபத்துக்கள் அந்தக் கட்டிடங்களின்
மாடிப்படி அறைகளில் நடந்திருக்கின்றன மற்றும் அந்தத் தீ விபத்துக்கள் வெளியிலிருந்து உள்ளே வந்தவர்களால் நடந்திருக்கக்கூடும்.
ஹைட்ரோகார்பன் (பெட்ரோல், முதலியன) அல்லது வெடி மருந்துகளோ பாதிக்கப்பட்ட
கட்டிடங்களில் இருந்ததற்கான தடயம் ஏதும் இல்லையென்று போலீஸ் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர், ஆனால் இதில்
முறைகேடான நடவடிக்கைகள் நடந்திருக்கக்கூடும் என்ற சாத்தியக் கூறை அவர்கள் தள்ளிவிடவில்லை.
விபத்து நடந்த வன்சன்ட்-ஒரியோல் பெரு வீதி 20ம் இலக்கத்து பக்கத்து வீட்டுக்காரரான
16 வயது ஜூலி அப்பகுதி குழந்தைகள் பற்றி தனது வியப்பை வெளியிட்டார். ``அவர்கள் அனைவரும் ஒன்றாகத்தான்
பள்ளிக்கு செல்கிறார்கள். பிரான்சு உருச்சிதைத்துவிட்டது, அது ஒரு குற்றம். கறுப்பர்கள் குடியிருக்கும் மாடிக் கட்டிடங்கள்
மட்டுமே எப்போதும் ஏன் தீ பிடிக்கின்றன?`` என்று அந்த தீ விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் எழுப்புகின்ற கேள்வியை
எதிரொலித்தார்`` ஆபிரிக்க மக்கள் குடியிருக்கின்ற பகுதிகளில் மட்டுமே ஏன் இவ்வாறு நடக்கிறது?``
ஐவரிகோஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்த பன்னிரண்டு குடும்பங்கள் அடங்கிய 40 பேர், மரே
மாவட்ட ஐந்தாவது மாடிக்குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர், பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர்
குழந்தைகள். மாடி அறைப்பகுதியில் அந்த தீ விபத்து தொடங்கியது.
3ம்
வட்டத்தை சேர்ந்த சோசலிஸ்ட் கட்சி மேயர் பியர் ஏய்டன்பாம்
கருத்துத் தெரிவிக்கும் போது ``நாங்கள் பல ஆண்டுகளாக அவர்கள் வாழ்கின்ற சூழ்நிலைகள் ஏற்றுக் கொள்ள
முடியாதவை என்று அறிக்கைகளை தந்திருக்கிறோம்.... செப்டம்பரில் குடியிருப்பை மேம்படுத்தி அவர்கள் மீண்டும்
குடியமர்த்தப்படுவர்`` என்று குறிப்பிட்டார்.
அந்த கட்டிடத்திற்கு சொந்தக்காரரான கூட்டுநிறுவனமான
SIEMP தலைவர்,
ரெனே டுட்ரே, பாரிசில் ''423 பிளாக்குகளைக் கொண்ட மாடிக்குடியிருப்புக்கள் மனிதர்கள் வாழ்வதற்கு எந்த
வகையிலும் தகுதியில்லாதவை'' என்று குறிப்பிட்டார். தேவையான அளவிற்கு வீட்டு வசதிகளை செய்து தர முடியாத
வரை, மாடி குடியிருப்பில் நாங்கள் எரிந்த சடலங்களைத்தான் மீட்க வேண்டியிருக்கும்`` என்று அவர் கூறினார்.
பாரிசின் துணை மேயரான பசுமைக் கட்சியைச் சேர்ந்த
Yves Contassot,
சீரமைப்புப்பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதற்கு காரணம் என்ன என்பதை விளக்கினார். எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல்
குடியிருப்பவர்களுக்கு மாற்று தங்கும் விடுதிகளை ஏற்பாடு செய்யமுடியவில்லை என்று கூறினார். ``இந்த நிலவரத்திலிருந்து
நாம் மீண்டாக வேண்டும், இது பதினெட்டாம் நூற்றாண்டு என்று நினைத்துக் கொண்டு பொதுமக்களை நடத்துவதைக் கைவிட
வேண்டும்`` என்று அவர் வியப்பை வெளியிட்டார்.
15 ஏப்பிரலில்
9-வது வட்டத்திலுள்ள
ஆடம்பர பொருட்கள் விற்பனை "பண்டகசாலையின்" (''grands
magasins") பகுதியில் பாரிஸ்-ஓப்ரா ஓட்டல் தீப்பற்றி
எரிந்ததானது, மனித துயரத்தின் உயிர்ப்பலியை இன்னும் வற்புறுத்திக்கூறுகிறது. உயிர்தப்பிய ஒருவர் காயத்தின் காரணமாக
இறந்து விட்டார், மற்றும் இருவர் மருத்துவமனையில் உள்ளனர். அரசியல்வாதிகள் அப்போது தந்த உறுதிமொழிகள் இன்னும்
அமுல்படுத்தவில்லை.
வன்சன்-ஒரியோல் பெரு வீதி பகுதியில் தீ விபத்தில் 14 குழந்தைகளும் 3 வயது
வந்தவர்களும் இறந்தனர், சிலர் தீப்பிழம்புகளிலிருந்து தப்பிப்பதற்கு ஆறு மாடிக்கட்டிடத்திலிருந்து தாவிக் குதித்ததால்
மடிந்தனர். காயமடைந்த 30 பேரில், ஒரு குழந்தையும் ஒருவயது வந்தவரும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இப்படி பல்வேறு ஆபத்தான தீ விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது,
பாரிஸ் பிராந்தியத்திலும் பிரான்சு முழுவதிலும் தேசிய மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களும் மற்றும் அவர்களது
அமைப்புக்களும் கிரிமினல் புறக்கணிப்பு மனப்பான்மையால் உருவாகிவிட்ட வீட்டுவசதி நெருக்கடியை எடுத்துக்காட்டும் துயர
சம்பவமாகும்.
வன்சன்-ஒரியோல் மாடிக் குடியிருப்புக்களில் இருபத்தி ஏழு வயது வந்தவர்களும் 100
குழந்தைகளும் வாழ்ந்தனர்.
சோசலிஸ்ட் கட்சியில் லோரன்ட் பாபியுஸ் பிரிவை ஆதரிக்கும்
XIII-வது வட்ட
சோசலிஸ்ட் கட்சி மேயரான Serge Blisko,
நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அழிவுற்ற கட்டிடம் அப்பழுக்கற்ற நிலையில் பராமரிக்கப்பட்டது என்று கூற
முடியாவிட்டாலும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பது அல்ல என்று கூறினார். அந்த கட்டிடத்திற்கு பராமரிப்பு
பொறுப்புவகிக்கும் இமாயஸ் அறக்கட்டளைத் தலைவரான மார்ட்டின் ஹிர்ச் கருத்துத் தெரிவிக்கும் போது, ``அது
சுத்தமானது என்று நான் சொல்லவில்லை, ஆனால் அது முறையாகவும் பொறுப்போடும் பராமரிக்கப்பட்டு வந்தது"
என்றார்.
இத்கைய மெத்தனமான மதிப்பீடுகளை மறுக்கின்ற வகையில் பல உண்மைகள் உள்ளன.
எட்மொண்ட்-பிளெமாண்ட் தெரு 2-ஐ எதிர்நோக்கியுள்ள இந்தக் கட்டிடத்தின் மாடிப் பகுதி பழைமையான கட்டிடம்
என்பதால் வெடிப்பு காணப்படுகிறது. அந்தத் தீ விபத்தில் பல உறவினர்களை இழந்துவிட்ட 17 வயது ஜீலி நிருபர்களுக்கு
பேட்டியளித்த போது ``நடந்தது அனைத்தையும் தவிர்த்திருக்க முடியும். மாடிகள் ஓட்டை உடைசல்களாக உள்ளன, அவை
அனைத்தும் பழைமையானவை சிதைந்து கொண்டிருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் எவரும் எதுவும்
செய்யவில்லை!
இது ஒரு கொலைதான், ஒரு விபத்து அல்ல`` என்று கூறினார். அந்தக்
குடியிருப்புக்களை நன்றாக அறிந்த உள்ளூரில் குடியிருக்கும் ஒருவர் கூறினார், ``இந்த ஏழைமக்கள் மீண்டும் குடியமர்த்தப்
படுவோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை-----அவர்கள் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்".
உண்மையில், கட்டிடத்தில் இருப்பவர்களை வெளியேற்றக்கூடிய ஒரே வழியான மாடிப்படிகள்
மரத்தால் ஆனவை. தீ விபத்து ஏற்படும் போது மக்கள் தப்பிப்பதற்கு வேறு வழியில்லை - பாரிசில் பழைய கட்டிட
பிளாக்குகளை சேர்ந்த மாடிக்குடியிருப்புக்களின் நிலை இதுதான் என்பதை அதிகாரிகள் உணர்ந்திருக்கின்றனர். அந்த
மாடிபடிக்கட்டுக்களில் ஈயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணங்கள் பூசப்படுவதால் அவை உரியும் போது
குழந்தைகளுக்கு ஈயத்தினால் விஷத்தன்மை ஏற்படுகிறது எனக் கருதி மரத்தால் ஆன வண்ணக்கலவைகளை பூசுகிறார்கள் அது
அந்தக் கட்டிடத்தை மேலும் தீயில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.
அந்த துயர சம்பவம் நடைபெற்ற இடத்தில் பேட்டி காணப்பட்ட ஒரு போலீஸ்காரர் முன்
கதவை மூடிவிட்டு மாடிப்படிகளில் எளிதாக செல்வதை தடுக்க வழியில்லை என்று கூறினார். ``பற்ற வைத்த ஒரு சிகரெட்
துண்டை விட்டெறிந்தாலே அது குப்பையில் பற்றி கொள்ளும்`` அண்மை ஆண்டுகளில் அந்தக் கட்டிடத்தில் ஐந்து சிறிய தீ
விபத்துக்கள் ஏற்பட்டன, அவற்றில் ஒன்றை அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர்.
காம்பியனைச் சேர்ந்த ஒரு 60 வயது ஜாம்மே நிருபர்களிடம் கூறினார். ``நான் கடந்த
14 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன், அதிகாரிகளிடம் வீட்டு வசதிகளை மறுஒழுங்குசெய்யுமாறு கோரி
வருகிறேன். நான் 500 யுரோக்கள் வாடகை கொடுக்கிறேன் மற்றும் ஆறு அறைகளுக்கு ஒரு மாதத்திற்கு
CAF என்கிற வீட்டு
சேவை அமைப்பு 500 யுரோக்களை ஒரு மாதத்திற்கு செலுத்துகிறது. அறையில் ஓட்டைகள் மற்றும் எலிகள் உள்ளன,
ஐவரிகோஸ்டை சேர்ந்த ஒரு பெண்ணின் குழந்தையை கடித்து விட்டன``.
அந்தக் கட்டிடத்தை நிர்வகித்து வருகின்ற
France Euro Habitat
(FREHA)
அமைப்பின் தலைவரான கிறிஸ்டியான் ஓடோட் கூறினார், அது எம்மாஸ் அமைப்பின் கிளையாகும். ``கடந்த 3
ஆண்டுகளாக இந்த ஆபிரிக்க குடும்பங்களை வேறு இடத்தில் குடியேற்ற வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம்.
ஏனெனில் அப்போது தான் பல மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களை சீரமைக்க முடியும், ஆனால் எவரும்
அதைப் பொருட்படுத்தவில்லை`` எனக் கூறினார். குடியிருப்பு பகுதிகளில் (பலதரங்களைக் கொண்ட 10 அல்லது அதற்கு
மேற்பட்ட குழந்தைகள்) வாழ்கின்ற பெரிய மாடிக் குடியிருப்புக்கள் உள்ளன, ஆனால் இப்போது அவை "இருக்கவில்லை"
என்று அவர் கூறினார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்னர்தான், புதிதாக
நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் எர்வே கேய்மார்ட் மத்திய பாரிசில் ஒரு 600 ச.மீட்டர் மாடிக் குடியிருப்பை
கொண்டிருக்கிறார், வரி பணத்தில் அதற்கு 14,000 யூரோக்கள் மாத செலவாகும் என்ற தகவல் வெளியானதும் அவர்
ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ''பிரான்சின் போட்டி திறனை அதிகரிக்க" அரசாங்கத்தின்
செலவினங்களை கடுமையாக வெட்டும் பொறுப்பை ஜனாதிபதி சிராக்கிடமிருந்து ஏற்ற ''அமைச்சர் பாரிஸ் நகரத்தில்
ஒரு வசதியான மாடிக் குடியிருப்பை சொந்தத்தில் வைத்திருக்கிறார், அதை அவர் வாடகைக்கு விட்டிருக்கிறார்,
பேர்சியிலுள்ள நிதியமைச்சக வீட்டில் குடியிருக்க மறுத்துவிட்டார்.
உள்துறை அமைச்சரும் பிரதமர் டொமினிக் டு-வில்பனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில்
உள்ளவருமான நிக்கோல சர்கோசி அந்த துயரத்திற்கு சட்ட விரோதமாக புலம் பெயர்ந்தோர் மீது பழி போட்டார்.
காலத்தால் புகழ்பெற்ற பிற்போக்கு முறையை பயன்படுத்தி அரசாங்கத்தின் புறக்கணிப்பினால் பாதிக்கப்பட்டோரை
அவர்களின் துரதிருஷ்டம் என, ஆகஸ்ட் 27-ல் லு மொன்டுக்கு அவர் பேட்டியளித்தபோது ``இதில் சங்கடம்
என்னவென்றால் ஒட்டு மொத்தமாக மக்கள் கூட்டமும் ஆகும், அவர்களில் சிலர் எந்தவிதமான ஆவணமும் இல்லாமல்
பாரிசில் குவிந்து கொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு வீட்டு வசதி செய்து தருகின்ற சூழ்நிலைகள் இல்லை`` என்று
குறிப்பிட்டார்.
சர்கோசியின் அவதூறுகளுக்கு மாறாக, 20 வன்சன்-ஒரியோல் மாடிக் குடியிருப்பு பகுதியில்
குடியிருக்கின்ற குடும்பங்கள் அனைத்தும் பிரான்சில் சட்டபூர்வமாக குடியிருப்பவர்கள். சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு
செய்திருப்பதாக கூறப்படுவதை அவர்கள் ஆத்திரத்துடன் மறுத்தனர். அவர்கள் தொழிலாளர்கள் மற்றும் தங்களது
வாடகையை செலுத்துகிறார்கள். பல பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அந்த
பாதிப்பிற்கு காரணமல்ல, பாரிசிலும், நாடு முழுவதிலும் நிரந்தரமாக நிலவுகின்ற சமூக வீட்டு வசதித்திட்டத்தின் பற்றாக்
குறையினால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் .
சமூக வீட்டு வசதிகள் கோரி 105,000 மனுக்கள் பாரிஸ் நகரப்பகுதியில் நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கின்றன. பாரிஸ் பிராந்தியத்தில், 1990 களின் நடுப்பகுதி முதல் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்
கொண்டே வருகிறது. 1996-ல் 264,000 2002-ல் 315,000. சில குடும்பங்கள் 5 ஆண்டுகள் 10 ஆண்டுகள்
அதற்கு முன்னரே கூட மனுச் செய்திருக்கின்றனர். அதேபோது 20 வன்சன்-ஒரியோல் போன்ற மாடிக் குடியிருப்புக்களில்
அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு தனியார் வாடகைக்கு விடுகின்ற கட்டிடங்களுக்கு
அரசாங்கம் தருகின்ற நிதி ஊக்குவிப்புக்கள் தீர்வு காண்பதற்கு தவறிவிட்டன. தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் பாரிஸ்
நகரசபை நிர்வாகங்களும் நிலைமை மோசமடைவதற்கு அனுமதித்து விட்டன. உதவி மற்றும் சமூக மறு ஒருங்கிணைப்பிற்கான
தேசிய கூட்டமைப்பு தந்துள்ள தகவலின்படி, பிரான்சு நாட்டில் 15,000 மக்கள் தற்காலிக மையங்களில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர் மற்றும் சமூக வீட்டு வசதி யூனிட்டுக்களில் 500,000 அளவிற்கு பற்றாக்குறை நிலவுகிறது. 3.5
மில்லியன் மக்கள் தரக்குறைவான வீடுகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு communue-லும்
குறைந்தபட்ச 20 சதவீத வீடுகள் சமூக தொகுப்பு வீடுகளாக இருக்க வேண்டும் என்ற சட்டபூர்வமான நிபந்தனையை
வெகுசில அமைப்புக்கள் தான் பின்பற்றுகின்றன. எடுத்ததுக்காட்டாக பாரிசில் இந்த விகிதம் 14 சதவீதமாகும்.
பாரபட்சத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஆய்வுக்குழு
(GELD) மனுச்
செய்கின்ற ஆபிரிக்க குடும்பங்களில் 58 சதவீதம் பேருக்குத்தான் சமூக வீடு கிடைக்கின்ற வாய்ப்பு 6 மாதங்களுக்குள்
உருவாகும் அதே நேரத்தில் இதர சமூகங்களை சேர்ந்த மனுதாரர்களில் 75 சதவீதம் பேருக்கு இந்த வாய்ப்புக்கள்
உண்டு.
இதற்கிடையில் அரசாங்கம் சமூக வீட்டு வசதித்திட்டங்களை தனியாருக்கு விற்பது பற்றி
பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. சொத்து விற்பனை நிறுவனக்காரர்களும் ஊக பேரக்காரர்களும்
வாடகையாக ஏராளமாக பணம் வசூலித்துக் கொண்டிருப்பதால் தலைநகரில் வீடுகள் விலை உச்சாணிக் கொம்பிற்கு சென்று
விட்டது.
20,வன்சன்-ஒரியோல் மாடிக் குடியிருப்பு பகுதியில் 1992 முதல் பலர் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு மாற்று வீடு தராமல் சிதைந்து விட்ட வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆப்பிரிக்க
தொழிலாளர்கள் குழு ஒன்று அதற்கு எதிராக ஆர்ப்பாட்டமும், 1991-ல்
Quai du Gare
மற்றும் Esplanade de Vincennes
பகுதியில் ஆக்கிரமிப்பும் செய்தது. இந்த 101 குடும்பங்களை சேர்ந்தவர்களைப் பற்றி 1991 ஆரம்பத்தில்
பலமாதங்களாக தலைப்புச் செய்திகளாக அவர்களது போராட்டம் நடைபெற்றது. நிதியமைச்சகத்திற்கு நடுவில் 26
தற்காலிக கொட்டகைகளில் அவர்கள் முகாமிட்டு அவை வீட்டுவசதி குறைந்தவர்களுக்கான அடையாளச் சின்னமாக
விளங்கின.
அதற்குப் பின்னர் 20,வன்சன்-ஒரியோல் மாடிக் குடியிருப்பு கையகப்படுத்தப்பட்டது மற்றும்
அரசு அப்பகுதியை வாங்கி 101 குடும்பங்களை குடியேற்றுவதற்கு முயன்றது.
அந்த வீடுகளில் குடியேறிய பலருக்கு அன்றைய பட்ஜட் துறை அரசு செயலர் கிரிஸ்டியான்
சாட்டர் கைப்பட ``அரசாங்கத்தின் பெயரால் நான் அளிக்கும் உறுதிமொழி என்ன வென்றால் 3 ஆண்டுகளுக்கு மேற்படாத
காலத்திற்குள் நீங்கள் நிச்சயமாக மறுவீட்டுவசதி செய்யப்படுவீர்கள் என்று உறுதியளிக்கிறேன்`` என உறுதிமொழி எழுதியிருந்தார்.
இந்த உறுதிமொழி அடிப்படையில்தான் அவர்கள் அந்த மாடிக் குடியிருப்புக்களுக்கு நகர சம்மதித்தனர். அதற்குப் பின்னர்
கண்ணியமான வீடுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்தக் குடும்பங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த துயரத்தின் காரணமாக
பாரிஸ் நகரசபை நிர்வாகம் தனது சிறப்புத்திட்டத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக
எதிர்காலத்தில் முறையான வீடுகளை கட்டித்தருவதற்கு முடியும் என்றும் அதற்கு தேவையான வீடுகள் உள்ளன என்றும் இந்த
துயர நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளுக்கிடையே பாரிஸ் நகரசபை அறிவித்தது.
அருகாமையில், வன்சன்-ஒரியோல் துயர நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை விட
படுமோசமான சூழ்நிலைகளில் இரண்டு கட்டிடங்களும் உள்ளன. 150 வன்சன்-ஒரியோல் பகுதியில் 250 ஐவரிகோஸ்டைச்
சேர்ந்தவர்கள் 77 மாடி குடியிருப்புக்களில் 7 மாடிகள் அடங்கிய பன்னிரண்டு சதுர அடி வீடுகளில் எலிகள் கரப்பான்
பூச்சிகள் நிறைந்த கட்டிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல தீ விபத்துக்கள் அங்கு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள்
வந்திருக்கின்றன.
டுநுவா தெருவிற்கு சில நூறு மீட்டர்களுக்கு அப்பால் கைவிடப்பட்ட மாடி குடியிருப்புக்களை
கொண்ட பிளாக்கில் 20 குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. வெப்பமூட்டும் வசதி அல்லது மின்சாரம் அதில்
இல்லை. ஸ்டவ்களில் சமைக்கிறார்கள். மெழுகு ஹீட்டர்கள் மூலம் வெப்ப மூட்டிக் கொள்கிறார்கள். மெழுகுவர்த்திகளையும்
விளக்குகளையும் பயன்படுத்துகிறார்கள். நகர சபை ஒவ்வொரு குடும்பத்திற்கு எரிவாயு பாட்டில்களை தருகிறது. சில
மாதங்களுக்கு முன்னர் கட்டிடத்தின் அடிப்பகுதியில் தலையணை தீ பிடித்தது பற்றி திருமதி
Ngitukulu கூறினார்.
அது பெரிய விபத்தாக மாறிவிடாமல் தவிர்க்கப்பட்டது. தனது ஐந்து வயது மகன் 20 வன்சன்-ஒரியோல் இல் தனது
நண்பர்களுடன் இருந்தார், அதற்காக அவர் கவலைப்பட்டார். ஒரு வெடிகுண்டின் மேல் உட்கார்ந்திருப்பதைப் போல்
அப்போது தனக்கு உணர்வு ஏற்பட்டதாக அவர் லிபரேஷன் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
பலர் ஓட்டல்களில் குடியேறுவதற்கு மறுப்பதற்கு காரணம் ''அங்கு சமைக்க அனுமதிக்க
மாட்டார்கள்'' என்று அவர் கூறினார், அவரது கணவர் மறுவீட்டு வசதி பற்றி முடிவற்ற உறுதிமொழிகள் வழங்கபட்டது
குறித்து வருந்தினார்.
இந்த திகைப்பூட்டும் நிலைமைகளை தெளிவாக அறிந்த அதிகாரிகள், போதுமான சமூக
வீட்டு வசதிகளை செய்து தருவதற்கு அரசு செய்துவிட்ட சொந்த தவறுகளை சரிகட்டுவதற்காக அரசு சார்பற்ற
நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளிடம் வீட்டு வசதி நெருக்கடி அதிகமுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடுகளை
கட்டித்தரும் பொறுப்பை ஒப்படைத்தனர்.
அபி பியர் மற்றும் அன்னை தெரஸா போன்ற அறக்கட்டளைகளை மிகவும் பிற்போக்கு
அரசியல்வாதிகளும் செல்வந்தர்களும் ஆதரிக்கின்றனர், ஏனென்றால் அதுபோன்ற அமைப்புக்கள் முதலாளித்துவ சமுதாயத்தின்
அடிப்படைகளை விமர்சிப்பதில்லை வாயை மூடிக் கொண்டு அவர்கள் தருவதை ஏற்றுக் கொண்டு அடங்கிப்போய்
ஊக்குவிக்கின்றனர், அதன் மூலம் சமூக கொந்தளிப்புகளை தடுப்பதற்கு உதவுகிறார்கள்.
தனது commune-ல்
பல டசின் வீடுகளை FREHA
அறக்கட்டளை நடத்துவதாக சேன் சென்ட் டுனிஸ் இல் உள்ள மொன்றோய் சு புவா
கம்யூனிஸ்ட் கட்சி மேயர் பியர் பிரார்ட் ஒப்புக் கொண்டார். ``அது தவிர்க்க முடியாது என்ற நிலவரங்களை தீர்த்து
வைக்கிறது, துயரத்தில் இருக்கும் மக்களோடு கூர்மையான உணர்வுகளோடு கலந்துரையாடல்களை நடத்துகின்றன``.
2004-TM René Baillain-ன்
La Documentation française-ல்
காணப்படுகின்ற வாசகங்களை ஆகஸ்ட் 28-ல் லு மொன்ட் இல் வெளியிட்டிருக்கிறது. ``அரசு சார்பில்லாத தொண்டு
நிறுவனங்கள் தலையீடு பலவீனங்களை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது..... குறிப்பாக வீட்டு வசதிகளை செய்து
தருவதில் மற்றும் நிதியளிப்பதில் தொழில் முறையிலான திறமைக் குறைவை ஈடுகட்டுவதை அது எடுத்துக் காட்டுகிறது``.
இதற்கெல்லாம் மேலாக அந்த நூலை எழுதியவர் ஆச்சரியப்படுவது என்னவென்றால், சட்டபூர்வமான நெறிமுறைகளை பின்பற்றாத
வகையில் வீட்டுவசதிகளை செய்வதற்கு அறக்கட்டடை மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறதோ என்று ஆச்சரியப்பட்டார்.
``அதிகாரிகள் அறக்கட்டடைகளை பெரும்பாலும் நம்பியிருப்பது ஏழைகளுக்கு வீட்டு வசதிகளை
செய்து கொடுப்பதற்காகத்தான். இது அமைப்பு ரீதியில் நடைபெறுகின்ற துணை ஒப்பந்தம் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு
மேலோகவே இந்த நிகழ்ச்சிபோக்கு படுவேகமாக நடந்து கொண்டிருக்கிறது மற்றும் அரசாங்கம் வீட்டுவசதிகள் செய்வதை
சந்தைக்கு திறந்து விட்டுவிட்டது. அது சிதைக்கப்பட்டடு விட்டது. அது விற்கப்பட்டு விட்டது, வாடகை நெறிமுறை தளர்த்தப்பட்டிருக்கிறது``
என்று DAL
(வீட்டுவசதி உரிமைகோரும்) அமைப்பின் தலைவரான
Baptiste Eyraud பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று பாரிஸ் நகரில் வீடற்றவர்களுக்கு ஆதரவாக ஒரு கண்டனப் பேரணி நடத்தப்படும்
என்று DAL
ஐச் சேர்ந்த Jean Eynaud
அறிவித்தார். தீ விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு தேசிய துக்க தினம் நடத்தப்பட வேண்டுமென்ற
கோரிக்கைகளும் எழுந்துள்ளன. ஒரு அவசர கால நடவடிக்கையாக காலியாகக் கிடைக்கும் கட்டிடங்களை அரசாங்கம் கையகப்படுத்த
வேண்டும் என்று DAL
கேட்டுக் கொண்டிருக்கிறது மற்றும் சமூக வீட்டு வசதி திட்டங்களை பெருமளவில் விரிவுபடுத்த வேண்டும் என்றும்
கோரியுள்ளது.
வீடற்றவர்களுக்கு கூடுதலாக ஓட்டல்களை கட்ட வேண்டும் என்று மட்டுமே வீட்டுவசதி, சமூக
இசைவு, வேலைவாய்ப்பு அமைச்சர் ஜோன் லூயி போர்லோ முன்மொழிவு செய்திருக்கிறார்`` வீட்டு வசதி என்பது,
வாழ்க்கைத் தரத்தை, கண்ணியத்தை, பாதுகாப்பை, கல்வித்தரத்தை உயர்த்துவதாகும்..... நமது முறை கண்ணியமான
வீட்டுவசதி தருவதற்கு இயலாத நிலையில் உள்ளது.`` என்று முன்னாள் சோசலிஸ்ட் கட்சி பிரதமர் லோரன்ட் பாபியுஸ்
குறிப்பிட்டார்.
``நமது நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையான வீட்டு வசதி நெருக்கடியை எந்த
அரசாங்கமும் இடது அல்லது வலது ஆகிய எந்த அரசாங்கமும் உண்மையிலேயே தீர்த்து வைக்கவில்லை`` என்று பிரான்சின்
இன்டர் ரேடியோ பேட்டியில் சோசலிஸ்ட் கட்சி மார்ட்டின் ஆப்ரி
லீல் மேயர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அவர் லியோனல்
ஜோஸ்பனின் பன்மை இடது அரசாங்கத்தின் ஒரு முன்னணி உறுப்பினராவர். |