:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
The Israeli state and the right-wing settler movement
இஸ்ரேலிய அரசும் வலதுசாரி குடியேறியவர் இயக்கமும்
பகுதி 3
By Jean Shaoul
17 August 2005
Back to screen
version
தொழிற்கட்சி அரசாங்கம் அதன் ஜனநாயக பாசாங்குகளுக்கு அப்பாலும், 1967 போர்
காலத்தில் கையகப்படுத்திக்கொண்ட பிராந்தியங்களை தனது காலனித்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்கும், பாலஸ்தீனிய
மக்களை அடிமைப்படுத்துவதற்கும் ஒரு இராணுவ ஆக்கிரமிப்பாக நிர்வகிக்கவேண்டி இருந்தது. பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்
ஆக்கிரமிப்பில் கொடூரம் அதிகரித்தது. இதில் Kach
முரடர்கள் ஒரு முக்கிய பங்களிப்புச் செய்தனர்.
இஸ்ரேலுக்கு உள்ளேயேகூட, போருக்கு பிந்தைய நீண்ட பொருளாதார செழுமைக்கு முற்றுபுள்ளி
வைக்கப்பட்டது, பண வீக்கம் உயர்ந்தன, பாரியளவு இராணுவ செலவினங்கள் அதிகரித்தன---- ஏறத்தாழ உள்நாட்டு
உற்பத்தியில் பாதி இராணுவத்திற்கு செலவாயிற்று--- மற்றும் மத்திய கிழக்கிலிருந்தும், வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் இஸ்ரேலுக்கு
புலம்பெயர்ந்தவர்களின் வறுமை நிலை சமூக பதட்டங்கள் உயர்வதற்கு வழிவகுத்தது.
நிலம் மற்றும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக யூதர்களுக்கும், அரபு இஸ்ரேலியர்களுக்கும்
இடையில் பதட்டங்கள் உக்கிரமடைந்தன. முதலில், அரசாங்கம் 1976 பிப்ரவரியில் மேற்கு கரையிலுள்ள ஆயிரக்கணக்கான
ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்து ''கலீலி பகுதியை யூதர்கள் மற்றும் அரபு குடியிருப்பவர்களை மேம்படுத்துவதாக அறிவித்தமை
அரபு இஸ்ரேலியர்களிடையே ஒரு பொது வேலை நிறுத்தத்தை தூண்டிவிட்டது மட்டுமல்லாது இராணுவத்துடனான பலாத்கார
மோதல்களால் ஆறு அரபு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு மற்றும் பலர் காயமடைந்தனர் மற்றும் பல டசின் போலீஸ்காரர்களும்
காயமடைந்தனர். வலதுசாரி மாணவ செயலூக்கர்களும் எதிர்கால நாடாளுமன்ற லிக்குட் கட்சி உறுப்பினர்களும் இந்த
சம்பவங்களை பயன்படுத்தி ஆத்திரமூட்டும் மோதல்களை தூண்டிவிட்டு தங்களது சொந்த அரசியல் வாழ்விற்கு அத்திவாரமிட்டனர்.
இரண்டாவதாக, குறைந்த ஊதியப் பணிகளுக்கு போட்டி வளர்ந்தது ஏனென்றால் அரபு
இஸ்ரேலியர்களும் அதேபோல் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளிலிருந்து பாலஸ்தீனிய மக்களும் கனரக தொழிற்சங்கங்களில்
இடம்பெற்றிருந்த யூத தொழிலாளர்களைவிட ஒரு மலிவான மாற்றாக கிடைப்பதை யூத முதலாளிகள் உணர்ந்தனர்.
1967 போரை தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அதிதீவிர வலதுசாரி திரித்தல்வாத
இயக்கத்தின் அரசியல் வாரிசு அமைப்பான ஹெரூட் (Herut)
கிழக்கு ஐரோப்பியாவிலிருந்து வந்த யூதர்களுக்கு அழைப்புவிட்டு தலைமை வகித்து நடத்தப்பட்டது, அதே மக்களிடம்
ஆதரவு திரட்டியது தன்னையே பல்வேறு இணைப்புக்கள் மற்றும் பெயர் மாற்றங்கள் மூலம் லிக்குட் கட்சியாக உருமாறி அது
அராபியர்களுடன் எந்த எல்லை தொடர்பான சமரசத்தையும் எதிர்த்தது. அவர்கள் ஆரம்பத்திலிருந்துவந்த பூர்வீக மத்திய
கிழக்கு, வடக்கு ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவிவந்த பிளவுகளோடு தொடர்புபடுத்தி ஏழை மற்றும் அதிக
செழிப்புள்ள இஸ்ரேலியர்களுக்கிடையே நிலவிவந்த பிளவுகளை திட்டமிட்டு தூண்டிவிட்டு அதை பயன்படுத்திக்கொள்ள அது
நனவாக முயன்றது.
1977 அளவில் 1967 போரால் இயக்கப்பட்ட சமூக சக்திகள் ஏறத்தாழ 30 ஆண்டுகள்
இஸ்ரேலை ஆண்டு வந்த தொழிற்கட்சி சியோனிஸ்ட்டுகளை வீழ்ச்சியடையச் செய்வதற்கு இணைந்து செயல்பட்டுடன் மற்றும்
இஸ்ரேல் மேலும் வலதுசாரி பக்கம் சாய்வதற்கும், அரசியல் ஸ்திரமற்றதன்மையை பெருக்குவதற்கும் வழியமைத்துத்
தந்தது. இஸ்ரேல் ஆட்சியை இராணுவ வெற்றி மூலம் விரிவுபடுத்துவதற்கு ஒரு வேறுபட்ட பாணியில் அமைந்த அரசாங்கம்
தேவைப்பட்டது.
ஒரு சிறிய குடியேறியோர் இயக்கமாக தொடங்கிய, லிக்குட் அரசாங்கத்தின் தேர்தல்
வெற்றி மூலம் அவர்களது கனவு நனவாயிற்று. திரித்தல்வாத இயக்கத்தின் அரசியல் வாரிசுகளான அவர்கள் அதிகாரத்திற்கு
வந்தனர். 1948ல் பாலஸ்தீனியர்கள் 250 பேர் டெர் யாசினில் படுகொலைக்கு காரணமாகயிருந்த இழிபுகழ்பெற்ற
தலைவர் மெனாச்சம் பெகின் தலைமையில் நடைபெற்றது, அவரோடு லிக்குட் கட்சி ஒரு அரசியல் வழியை சூழ்ச்சியை
உருவாக்கியது. அது சலுகைபெற்ற தொழிற்கட்சி செல்வந்த தட்டினர் மீது ஏற்பட்ட சமூக வெறுப்பை பொருளாதார
தாராளவாதத்தோடும் ''சுதந்திரச் சந்தை'' சீர்திருத்தங்களோடும் தீவிர தேசியவாத மற்றும் அரபு எதிர்ப்பு
பேரினவாதத்தோடும் இணைத்தது.
இந்த கருத்தியலின் முக்கிய பகுதி பெரிய இஸ்ரேலின் ஓர் அங்கமாக ஆக்கிரமிக்கப்பட்ட
எல்லைகளை நிலைநாட்டுவதற்கான உறுதிமொழியாகும். குடியேறுவோர் இயக்கத்தை மேலும் வளர்ப்பதற்கான ஒரு
கருவியாக லிக்குட் அரசாங்கம் செயல்படும்.
தொழிற்கட்சியின் கொள்கை பெரும்பாலும் மேற்குக் கரையிலும், கிழக்கு ஜெரூசலத்திலும்,
பாலஸ்தீனியர்களால் சூழப்பட்டிருக்கும் குடியிருப்புக்களை கட்டுவதில் சம்மந்தப்பட்டிருந்தது என்றாலும், பதவிக்கு வந்த
லிக்குட் அரசாங்கம் குடியிருப்புக்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், சாத்தியமானளவில் அரபு மக்கள்
இறுதியாக அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறுகின்ற அளவிற்கு வாழ்வில் துன்பத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக்
கொண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேச முழுவதிலும் குடியிருப்புக்களை கட்ட மேலும் முயன்றது.
1977 செப்டம்பரில், ஏரியல் ஷரோன், தனது சொந்த சிறிய கட்சியை கலைத்துவிட்டு
லிக்குட் கட்சியுடன் சேர்ந்ததற்காக அவருக்கு வெகுமதி தருகின்ற வகையில் விவசாய அமைச்சர் பதவி தரப்பட்டது. அவர்
''நூற்றாண்டு முடிவில் இஸ்ரேலின் ஒரு பார்வை'' என்றழைக்கப்பபடும் ஒரு பெரிய திட்டத்தை வெளியிட்டார். இருபதாம்
நூற்றாண்டு இறுதிவாக்கில் ஆக்கிரமிக்கப்பபட்ட எல்லைகளில் இரண்டு மில்லியன் யூதர்களை குடியேற்ற வேண்டும் என்று அவர்
கேட்டுக்கொண்டார் மற்றும் குறிப்பாக சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவிலிருந்து புதிய அலையைப்போன்று
புலம்பெயர்ந்தோர் இஸ்ரேலுக்குள் குடியேறினர். மத்திய தரைக்கடல் கடற்கரைப் பகுதிகளில் 1920களிலும்,
1930களிலும், சியோனிச முன்னோடிகள் குடியேறியதை போன்று மேற்குக்கரையின் ஒரு யூத பெரும்பான்மை உருவாவதும்
எந்த வகையிலும் மதிப்பற்றது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
அத்தகைய குடியிருப்புக்களுக்கு, அவர் குறிப்பிட்ட காரணம், மேற்குக்கரையில் ஒரு யூத
பெரும்பான்மையை ஏற்படுத்திவிடும் மற்றும் பல்லாயிரக்கணக்கான யூதர்களை வெளியேற்றி அதன் மூலம் உள்நாட்டுப்
போருக்கு தூபம் போடாமல் இஸ்ரேல் அந்த இடங்களை திரும்பக் கொடுத்துவிட முடியாது என வாதிட்டார். இந்த
வழியில், அவர் சமாதானத்திற்காக நிலம் என்ற அடிப்படையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் முன் கூட்டி தடுக்க
முயன்றார்.
நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், 1 பில்லியன் டாலருக்கும் மேற்பபட்ட
செலவில் ஷரோன் 62 புதிய குடியிருப்புக்களை உருவாக்கினார், ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளின் முழுமையான
வரைபடத்தையே மாற்றிவிட்டார். குடியிருப்புத் திட்டத்தின் அரசியல் தந்தை என்று அவர் அழைக்கப்பட்டதற்கு காரணம்
எதுவும் இல்லாமல் இல்லை.
அவர் 1973ல் ஒரு செய்தி பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலும், ''காசா துண்டு பகுதியில்
யூத குடியிருப்புக்களை அமைக்க வேண்டும் என்ற கருத்தை துவக்கி வைத்தவர்'' தான் என்று குறிப்பிட்டார். ''[காசா
கரையோரத்தில் முதலாவது குடியிருப்பான]
கபார் தரோமை (Kfar Darom)
நான் நிறுவினேன் மற்றும் நெட்சாரிம் குடியிருப்பை நான் ஸ்தாபித்தேன், மற்றும் அவர்களது எல்லையை சுற்றி வளைத்து
வேலிகளை அமைத்தேன்'' என்று அவர் விளக்கினார்.
குடியேறியவர்களுடன் தனது கூட்டணி மூலம், லிக்குட் கட்சி எப்போதுமே எளிதில்
கட்டுப்படுத்த இயலாத ஒரு ராட்சதனை உருவாக்க உதவியது. 1978ல் கேம்ப் டேவிட்டில் எகிப்துடன் ஒரு பேரத்தை
உருவாக்க பெகின் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி ஷினாயையும், ஒரு ஷினாய் குடியிருப்பான யாமிட்டையும்
விட்டுக்கொடுக்கவும், மேற்குக் கரையிலும், காசா பகுதியிலும் இருந்த பாலஸ்தீனியர்களுக்கு தன்னாட்சி உரிமை
தருவதற்கும் வகை செய்தமை குடியேற்றக்காரர்கள் இயக்கத்திற்கு ஆத்திரமூட்டியது. சில வலதுசாரி அரசியல்வாதிகள்
வெறுப்படைந்து லிக்குட் கட்சியைவிட்டு வெளியேறினர் மற்றும் டெசியா கட்சியை அமைத்தனர். குஷ் எமுனிமிக்குள் இருந்த
தலைமறைவு ஒரு பிரிவு யூதர்கள் அமைப்பை உருவாக்கியது. அது விழிப்புணர்வு பயங்கரவாதத்தை ஆதரித்தது. அது
ரம்மல்லா மற்றும் நேபுலஸ் மாநகரத்தலைவர்களது கார்களை தகர்த்தது மற்றும் ஒரு மசூதிக்குள் ஒரு கைவெடிகுண்டை
வீசி டசின் கணக்கான, அராபியர்களை காயப்படுத்தியது. அது ஜெரூசலத்திலுள்ள அக்ஷா மசூதியையும் தகர்க்கக்கூட
திட்டமிட்டது.
இந்த அட்டூழியங்களும் எண்ணிறந்த பிற வன்முறைச் செயல்களும் தண்டிக்கப்பபடாமல்
விடப்பட்டன. ஹெப்ரான் அருகிலுள்ள கிரியத் ஆர்பா, ராபி மாநகரத்தலைவர் கஹனேயின் கோட்டையாக ஆயிற்று மற்றும்
பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான வன்முறைக்கு அது ஒரு மத்திய புள்ளியாக ஆயிற்று.
அவரது விரிவாக்க கொள்கையை செயல்படுத்திய குஷ் எமுனிம் அமைப்பிற்கு மிக
தாராளமாக நிதியுதவிகளை அள்ளித் தந்த பெகின், சியோனிச பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அல்லது
இரகசிய சேவைகள் அவர்களது திட்டங்களை அறிந்திருந்தாலும், அவர்களது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்த
நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டார். பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பின்னர் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள்
உட்பட குஷ் தலைவர்கள் இஸ்ரேல் நாடாளுமன்றத்திலிருந்த பெகினின் அறைகளில் வரவேற்கப்பட்டனர்.
மற்றொரு மிகப்பெரிய குஷ் எமுனிம் பிரிவு அதிதீவிர வலதுசாரிகளை தீவிரவாத தன்மை
கொண்டவர்களாக ஆக்குவதில் ஒரு முக்கிய பங்களிப்பு செய்தது. ஷினாயிலிருந்து வெளியேறுவதை தடுக்கும் இயக்கம்.
கேம்ப்டேவிட் உடன்பாடு எகிப்பதுடன் செய்துகொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஷினாய் வடக்குப்பகுதியிலிருந்து இஸ்ரேல்
வெளியேறுவதை எதிர்ப்பதற்காக தொடக்கப்பட்டது. யாமிட்டிலிருந்தும் ஒரு சில கூட்டுறவு குடியிருப்புக்களிலிருந்தும்
வெளியேற்றப்படுவதை தடுப்பதற்காக சுமார் 1000 செயலூக்கர்களை அது அணிதிரட்டியது. ஷினாய் தொடர்பாக விவிலிய
முக்கியத்துவம் எதுவும் இல்லையென்றாலும், அது ஒரு பரவலான எல்லை சமரசத்திற்கு ஒரு தொடக்க அறிகுறியாக
அவர்கள் அஞ்சினர். பல வன்முறை மோதல்கள் பின்னர் நிகழ்ந்தபோதிலும் எத்தகைய பயனும் கிடைக்கவில்லை.
வாபஸ்பெறுவது தொடர்பாக அவர்கள் நிர்பந்தம் கொடுத்தனர். ஆனால் அவர்கள் ஒரு எச்சரிக்கையையும் விடுத்தனர்,
அது என்னவென்றால், மேற்குக்கரையிலிருந்து வெளியேற்றப்படுவது எதுவும் நடக்கும் என்றால் அதற்கு எதிராக அதைவிட
அதிகமான உறுதியுடன் போராட்டம் நடக்கும் என்பதுதான்.
வலதுசாரி சக்திகள் வளர்ச்சி எதிர்ப்பு இல்லாமல் அமைந்துவிடவில்லை. 1977ல்
ஜெரூசலத்திற்கு எகிப்து ஜனாதிபதி அன்வர் சதாத் விஜயம் மேற்கொண்ட சில நாட்களில் இப்பொழுதே சமாதானம் (Peace
Now) என்ற இயக்கம் தொடக்கப்பட்டது. அந்த இயக்கம்
ஆரம்பிக்கப்பட்டதற்கான உந்துதல் லிக்விட் கட்சியின் பிரதமர் பெகினுக்கு இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த 350 ரிசர்வ்
அதிகாரிகள் கையெழுத்திட்ட ஒரு பகிரங்க கடிதத்தால் வந்தது, அவர்களில் பலர் உயர்ந்த விருதுகளை பெற்றவர்கள்.
1967 போருக்கு பின்னர், ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளில் சியோனிஸ்ட் குடியிருப்புக்களை ஏற்படுத்துவதை எதிர்த்தனர்.
அவர்களும், ஒரு சியோனிச நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டாலும், நிரந்தரமாக போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு
பெரிய இஸ்ரேலைவிட தனது பக்கத்து நாடுகளுடன் சமாதானமாக வாழ்கின்ற ஒரு சிறிய இஸ்ரேலை தாங்கள்
விரும்புவதாக கூறினர். வேறு எந்த கொள்கையையும், கடைபிடிப்பது ''நமது நோக்கத்தின் நியாயத்தின்மீது
சந்தேகங்களை உருவாக்கிவிடும்..... உண்மையான பாதுகாப்பு சமாதானத்தில் மட்டுமே சாத்தியமாகும். இஸ்ரேல்
இராணுவத்தின் உண்மையான பலம் அரசு கொள்கையுடன் அடையாளப்படுத்தப்பட்டு குடிமக்கள்----போர் வீரர்கள் என்று
வளர்வதில்தான் இருக்கிறது.'' என்றனர்.
அப்படியிருந்தாலும், வலதுசாரிகள் அதில் கையெழுத்திட்டவர்களை துரோகிகள் என்று கண்டித்தனர்.
இதற்கு பதிலளிக்கின்ற வகையில் அவர்களை பாதுகாத்து நிற்பதற்காக 40,000 மக்கள் தன்னியல்பாக தெருக்களில் அணிவகுத்து
வந்தனர். இப்போதே அமைதி இயக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளில் குடியிருப்புக்களை அமைப்பதுதான் சமாதானத்திற்கு
ஒரு பிரதான தடைக்கல் என்பதில் குவிமையப்படுத்தியிருந்தது. 1979 ஜூனில், நேபுலஸ் அருகிலிருந்த ஒரு குஷ் எமுனிம்
குடியிருப்பு பகுதியைச் சார்ந்த எலான் மொரே என்ற இடத்தில் 3,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொண்ட பேரணிக்கு
அது ஏற்பாடு செய்தது. நேபுலஸ் அருகிலிருந்த அந்தக் குடியிருப்பில் நடைபெற்ற பேரணிகள் பாலஸ்தீனிய நில உரிமையாளர்களை
ஒரு இஸ்ரேல் நீதிமன்றத்தில் தங்களது நிலம் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டது என்று வழக்கு தாக்கல் செய்வதற்கு
ஊக்குவிப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
உயர்நீதிமன்றம் எலான்மோரே குடியிருப்பை நீக்கிவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
ஆனால் இராணுவத் தளபதி ரபேல் ஈட்டனும், விவசாய அமைச்சர் ஏரியல் ஷரோனும் அந்த தீர்ப்பை சுற்றி வளைத்து மீறி
நடப்பதற்கு போராடினர். ஆறு மாதங்களுக்குள், இஸ்ரேல் அமைச்சரவை சர்வதேச ஒப்பந்தங்களை மீறி இதற்கு முன்னர்
ஜோர்டானுக்கு சொந்தமாக இருந்த அல்லது பதிவு செய்யப்படாத அல்லது விவசாயம் செய்யப்படாத நிலம்
குடியேறுவோருக்காக கையகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. மேற்கு கரையில் பாரிய நிலப்பறிப்பு நடவடிக்கைகள்
தொடக்கப்பட்டன.
1981 தேர்தல் பிரசாரத்தில், அதில் தொழிற்கட்சி வெற்றிபெறும் என்று
எதிர்பார்க்கப்பட்டது, பெகினும், லிக்குக் கட்சியும் தொழிற்கட்சி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டியது மற்றும்
மத்தியகிழக்கு, மத்திய ஆபிரிக்க பூர்வீகத்தை கொண்ட யூதர்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் தொழிற்கட்சி
நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியதுடன், நீண்டகாலமாக நிலவி வந்த மனக்குறைகளையும் கிளறிவிட்டது. தேர்தல்
பிரசாரம் வன்முறைக்கு சென்றது மற்றும் தொழிற்கட்சிக்கு எதிராக ஒரு குறுகிய பெரும்பான்மையுடன் லிக்குட் கட்சி
வெற்றிபெற்றது. அக்கட்சி Kach
உம் பின்னர் குஷ் எமுனிமும் முன்னோடியாக நின்று சேவை செய்த வன்முறையை
சட்டபூர்வமாக நியாயப்படுத்தியது.
லிக்குட் அரசியல் செயற்திட்டத்தை வகுத்த வலதுசாரிகள்
எகிப்துடன் ஒரு சமாதான உடன்படிக்கையை செய்துகொண்டதுடன், லிக்குட் அரசாங்கம்
ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளில் மேலும் குடியிருப்புக்களை விரிவுபடுத்துவதற்கு தற்போது வழி தெளிவாகக் கிடைத்தது.
லிக்குட் மேற்கு கரையில் பாலஸ்தீனிய நிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கைப்பற்றியது, 1967ல் யூதர்களுக்கு
சொந்தமாக இருந்த நிலத்தின் அளவு 0.5 சதவீதம் 1984ல் இது 40 சதவீதமாக உயர்ந்தது. இதில் பெரும்பகுதி
ஊழல், மோசடி அல்லது சட்டவிரோதமான வழிகளில் கையகப்படுத்தப்பட்டதாகும், அதனால் இஸ்ரேல் நில
விற்பனையாளர்களும், ஷரோனை சுற்றியிருந்த கட்டுமான அதிபர்களும் பணக்காரர்களாக ஆகினர். அமெரிக்காவிலிருந்த
பணக்கார யூதர்களுக்கு மேற்குக்கரை நிலத்தை விற்பதை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் அவற்றிற்கு நில
விற்பனையாளர்களை அனுப்பியது. 1984 ஆரம்பத்தில், அது 112 குடியிருப்புக்களை அமைத்தது.
1970 முதல் லெபானானிலிருந்து செயல்பட்டுவந்த, பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் மீது
நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு சுதந்திரம் கிடைத்தது, எகிப்து அதில் தலையிடாது என்பதை அரசாங்கம்
உறுதியாக அறிந்துகொண்டது. பெகின் முன்னாள் ஸ்டேர்ன் கேங் பயங்கரவாதி ஷமீரை முன்னுக்கு தள்ளினார் மற்றும் ஏரியல்
ஷரோனை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார். பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் மீதும் லெபனான் மீதும்
ஒட்டுமொத்த கொலை வெறி போர் நடத்துவதற்கு காலம் கனியுமென்று பார்த்து கொண்டிருந்தனர். 1982 ஜூனில்,
ஷரோன் லெபனான் மீது படையெடுத்தார், தெற்கு லெபனானிலிருந்து
பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தை விரட்டினார் மற்றும் பெய்ரூட்டை
முற்றுகையிட தயாரானார்.
போருக்கு எதிரான முதலாவது கண்டனப் பேரணிகள் அந்தப் போர் தொடங்கியவுடன்
வெடித்தன, அப்போது இப்போதே சமாதானம் இயக்க இராணுவ படையினர் ஒரு சில நாட்கள் அந்தக் கண்டனப்
போராட்டத்தை கைவிட்டனர். இஸ்ரேல் லெபனான் மீது படையெடுக்கப் போகிறது என்பதை பெகின் மறுத்ததால்தான்
போருக்கு எதிரான கண்டனப் பேரணிகள் அந்தப் போருக்கு முன்னர் தடுக்கப்பட்டன. தற்போது, அந்தப் போரை
எதிர்த்து 1,20,000 ஆர்பாட்டக்காரர்கள், டெல் அவிவ் தெருக்களில் கண்டனப் பேரணிகளை நடத்தினர். இதுதான்
முதல் தடவையாக இஸ்ரேல் இராணுவம் போர் தொடுத்ததற்கு எதிராக நடத்தப்பட்ட துணிச்சலாக இஸ்ரேல் இயக்கம்
நடத்திய கண்டனமாகும். பெகினையும், ஷரோனையும் தற்காத்து நிற்பதற்காக வலதுசாரி சக்திகள் களத்தில் குதித்தன.
இதர போர் எதிர்ப்பு இயக்கங்கள் இருந்து வந்தாலும், மதவாத வலதுசாரிகளும் அதிதீவிர
தேசியவாதிகளும், இன்றே சமாதான இயக்கத்தை தனிமைப்படுத்தி அவதூறுகளை கிளப்பினர் மற்றும் மிரட்டல்களை
விடுத்தனர், இதற்குக் காரணம் அது ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளில் குடியிருப்புக்கள் தொடர்பாக மேற்கொண்ட
நிலைப்பாடுதான். 1982 செப்டம்பரில் பெய்ரூட் சாப்ரா மற்றும் ஷாட்டில்லா அகதிகள் முகாம்களில் கிறிஸ்தவ
குடிப்படை பாலஸ்தீனிய மக்களை படுகொலை செய்ததை எதிர்த்து 4,00,000 இஸ்ரேலிய மக்கள் அடங்கிய
மகத்தானதொரு பேரணியை இப்போதே சமாதானம் இயக்கம் நடத்தியது, அப்போது அவர்கள் ஷரோன் தலைமையில்
இஸ்ரேல் படைகளின் பங்களிப்பு குறித்து ஒரு விசாரணை நடத்த கோரினர், அதனால் பதட்டங்கள் உச்சகட்டத்தை
அடைந்தன. லெபனான் மீது படையெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், பல மாதங்கள் வரை சமாதான இன்று செயலூக்கர்கள்
பெகினின் அதிகாரபூர்வமான வீட்டிற்கு வெளியில் ஒரு கண்விழிப்பு போராட்டத்தை நடத்தினர். லெபனானிலிருந்து
வெளியேறக் கோரினர் மற்றும் இஸ்ரேலியர் பாதிப்பு புள்ளி விவரங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கிளர்ச்சி
செய்தனர். 1983-ல் பெகின் திடீரென்று ராஜினாமா செய்ததில் அவர்களது நடவடிக்கை ஓர் அங்கம் வகித்தது என்று
பலர் நினைத்தார்கள். நிலை குலைந்துவிட்ட அந்த மனிதர், எந்தவிதமான விளக்கமும் தராமல், இஸ்ரேலிய பாதிப்பு
500 தொட்டதும் திடீரென்று இராஜினாமா செய்தார். பெகினைத் தொடர்ந்து ஷமீர் பிரதமராக பதவியேற்றார்.
அவர் அதைவிட மிகவும் வலதுசாரி அணியின் முன்னாள் பயங்கரவாதியாவார்.
சமாதானம் இன்று இயக்கத்தினால் வலதுசாரி தீவிரவாதிகள் ஆத்திரமூட்டப்பட்டனர்.
1983ல், சமாதானம் இன்று இயக்கத்தின் முன்னணி செயலூக்கர்
எமில் கிரீன்பிக்கை ஒரு பேரணியின்போது ஒரு வெறியர் படுகொலை
செய்தார் மற்றும் 20-க்கு மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்களை காயப்படுத்தினார். முன்னணி தாராளவாத
பேராசிரியர்கள், கலைஞர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் வலதுசாரி வன்முறைக்கு இலக்குகளாக ஆகினர்.
பெரும்பாலான இஸ்ரேலிய மக்கள் சமாதானத்திற்கு நிலம் என்ற பேரத்தை விரும்புவதாக ஒரு அரசியல்
கருத்துக்கணிப்பாளர் தகவல் தந்ததும் அவரது மாடிக் குடியிருப்பு தீ வைக்கப்பட்டது.
ஷரோன் போன்ற அரசியல்வாதிகள் அச்சத்தை கிளறிவிட்டு மிரட்டல் சூழ்நிலையை உருவாக்கினர்.
சமாதான இன்று இயக்கத்தை சார்ந்த உறுப்பினர்களை ஷரோன் ''தோல்வி மனப்பான்மை'' கொண்டவர்கள் என்றும்
''துரோகம் இழைப்பவர்கள்'' என்றும் முத்திரை குத்தினர். 1920களிலும், 1930 களிலும் பாசிஸ்ட்டுகள் மேற்கொண்ட
நடவடிக்கை பாணியை நினைவுபடுத்துகின்ற வகையில் இடதுசாரி அணியை சேர்ந்தவர்களது கூட்டங்கள் தாக்கப்பபட்டு கலைக்கப்பட்டன.
இந்த துர்நாற்றம் வீசும் சூழ்நிலையில் தான் ஒரு 10 ஆண்டு தடையை நீக்குவதற்கு ராபி கஹனே ஆதரவை திரட்ட
முடிந்தது மற்றும் 1984 தேர்தல்களில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் பதவியை வென்றெடுத்தார்.
முஸ்லீம் உலகத்தின் மூன்றாவது மிகப்புனிதமான இடம் என்று கருதப்பட்டு வருகின்ற
அல்-அக்ஷா மசூதியை தகர்ப்பதற்கு முயன்ற யூத தலைமறைவு இயக்கத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணை சம்பவம் இஸ்ரேலின்
அரசியல் செல்வந்தத்தட்டில் எந்தளவிற்கு இந்த தீவிரவாத சக்திகள் ஊடுருவி இருக்கின்றன என்பதை உண்மையிலேயே
அம்பலப்படுத்தியது. இரண்டாவது ஹீப்ரூ ஆலயம் இருந்த இடத்தில் அல்-அக்ஷா மசூதி கட்டப்பட்டிருக்கிறது மற்றும் இந்த
மதவாத வெறியர்கள் நம்புவது என்னவென்றால், அந்த மசூதி நீக்கப்படுவதைத் தொடர்ந்து உருவாகும் பேரழிவு கொந்தளிப்புக்களால்
இஸ்ரேலின் மீட்சிக்கும் மூன்று கோயில் கட்டுவதற்கும் வழி ஏற்படும் என்பது.
வலதுசாரிகளுக்கு அந்த விசாரணை ஒரு பிரபல வழக்காகும். குற்றம் சாட்டப்பட்டவர்கள்
சார்பில் பகிரங்கமாக லிக்குட் கட்சி உட்பட தேசியவாதக் கட்சிகள் மற்றும் வலதுசாரி கட்சிகளைச் சார்ந்த இருபது
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரசாரம் செய்தனர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலும் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஆதரவு இருப்பதாக கூறினர். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்தரப்பு சாட்சியாகக்கூட ஆஜராகினர். ராபிக்களும்
அவர்களை ஆதரித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, அதே
நேரத்தில் மற்ற 12 பேருக்கு நான்கு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனைகள்
மிகக் குறைவாக இருந்த காரணத்தினால் தலைமறைவு இயக்கத்தின் ஆதரவாளர்கள் ''நாங்கள் வென்றுவிட்டோம்,
நாங்கள் வென்றுவிட்டோம்'' என்று கூச்சலிட்டார்கள்.
ஆனால், இஸ்ரேலுக்குள் போதுமான ஆதரவை உருவாக்குவதற்கு அந்த குடியிருப்பு திட்டம்
தவறிவிட்டது. மதவாத குடியேற்றக்காரர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததும் குஷ் எமுனிம் திட்டமிடுவோர் லிக்குட்
அரசாங்கத்துடன் சேர்ந்து 1983ல் முடிவு செய்தபடி மேற்குக் கரையை யூதமயமாக்குவதற்கு ஒரே வழி 1967
எல்லைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற யூதர்களுக்கு கவர்ச்சிகரமான வீட்டு வசதிகளையும், மிகப்பெரும் பொது
மானியங்களையும் தருவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தனர். அடுத்த ஆண்டு வாக்கில், மேல் கலீலி யூத
குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவியைவிட நபர் வாரியாக 4 மடங்கு அதிகமாக குடியிருப்புக்களுக்கு
மானியங்கள் வழங்கப்பட்டன. இப்போது நிலவுகின்ற மிக அதிகமான பணவீக்கம் மற்றும் கடுமையான பொருளாதார
சீர்குலைவு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய குடும்பங்களுக்கு இது ஒரு பிரதான கவர்ச்சி
அம்சமாகும் மற்றும் வலதுசாரி அரசியல் கட்சிகளுக்கு மேற்குக்கரை தொடர்பாக பரந்த அரசியல் வாக்காளர் பிரிவு
கிடைத்திருக்கிறது.
தொடரும்......... |