WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Shiite factions clash as opposition mounts to the
draft Iraqi constitution
ஈராக் அரசியலமைப்பு நகலிற்கு எதிர்ப்பு அதிகரிக்கையில் ஷியைட் பிரிவுகள் மோதுகின்றன
By James Cogan
26 August 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஈராக்கில் ஸ்திரத்தன்மையையும் ஜனநாயகத்தையும் நோக்கிச் செல்வதற்கு அரசியலமைப்பை
நிறைவேற்றுவது ஒரு முன்னோடி என்ற பொய்யை புஷ் நிர்வாகம் தொடர்ந்து நிலை நாட்டிவருகிறது. அமெரிக்கத்
தூதர் சல்மே காலீல்சாத் மிரட்டல் மற்றும் நகல் அரசியலமைப்பு தொடர்பான இரகசிய பேரங்கள் ஆகிய
அனைத்தும் ஈராக் மக்களது முதுகுக்கு பின்னால் நடத்தப்பட்டது என்ற முதலாவது பொய் அம்பலமாகியுள்ளது. இரண்டாவது
பொய்யை கீழறுக்கின்ற வகையில், நகல் அரசியலமைப்பினால் பெரிய நடவடிக்கை தூண்டுவிட்டு, கடந்த இரண்டு
நாட்களில் தெற்கு ஈராக் முழுவதிலும் போட்டி ஷியைட் பிரிவினர்களுக்கிடையே பரவலான மோதல்கள் நடந்திருக்கின்றன.
2004 ஏப்ரலிலும் ஆகஸ்டிலும் அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக பெரிய
போர்களை நடத்திய 3,000 குடிப்படைகளை கொண்ட மக்தி இராணுவம்
(Mahdi Army)
நேற்று நஜாப் நகரில் தங்களது தலைவர் மொக்தாதா அல் சதர் வீட்டைச் சுற்றி தற்காப்பு நிலைகளில் நின்றனர்.
பாக்தாத்தில் சதர் நகர புறநகர் பகுதியில் தொழிலாள வர்க்கத்திடையே மேலும் ஆயிரக்க கணக்கானோர்
அணிதிரண்டனர், அங்கு நகர்புற ஷியைட் ஏழைகளிடம் மற்றும் தெற்கு ஈராக் முழுவதிலும் நகர மற்றும் மாநகரங்களில்
அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.
ஈராக் அரசாங்கத்தில் ஆக்கிரமிப்பு-சார்பு பிரதான ஷியைட் பிரிவுகளில் ஒன்றான
ஈராக் இஸ்லாமிய புரட்சியின் சுப்ரீம் சபைக்கு (SCIRI)
விசுவாசமுள்ள கும்பல் ஒன்றால் புதன் கிழமை நஜாபிலுள்ள சதரின் அலுவலகங்களை தீ வைத்து கொளுத்தியதை
தொடர்ந்து ஆயுதம் ஏந்துகின்ற ஆயத்த நிலை தோன்றியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து, சதரின் குடிப்படையினர்
SCIRI
விசுவாசிகளுடனும் உள்ளூர் போலிசாருடன் தொடர்ந்து துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர், அவர்களில் பலர் ஈரானில்
பயிற்சி பெற்ற பதர் குடிப்படையைச் சேர்ந்த ஷிசிமிஸிமி உறுப்பினர்கள்.
ஷியைட்டு மதநம்பிக்கைகளின் மிகப்புனித ஸ்தலமான அலி மசூதி நஜபிலுள்ளது, 2003
மார்ச்சில் படையெடுப்பை தொடர்ந்து சதாரின் ஆதரவாளர்களுக்கும் ஆக்கிரமிப்பு-சார்பு ஷியைட் பிரிவுகளுக்கும்
இடையில் அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவதற்கான ஆதிக்கப் போராட்டம் நடைபெற்ற பல்வேறு பகுதிகளில்
இதுவும் ஒன்று. நடப்பு சண்டை மிக வேகமாக பாஸ்ரா, அமரா, நஸீரியா, ஹில்லா சமவா, திவானியா,
பக்குபா மற்றும் பாக்தாத்தில் பரவின. அங்கு மக்தி இராணுவம் மூன்று ஷிசிமிஸிமி அலுவலகங்களை தாக்கியது மற்றும்
அரசாங்கத்திலுள்ள மற்றொரு ஷியைட் அடிப்படைவாதக் கட்சியான பிரதமர் இப்ராஹிம் அல்-ஜப்பாரி தலைமையில்
இயங்கி வரும் தாவா இயக்கத்தின் அலுவலகத்தையும் தாக்கியது.
நாடாளுமன்றத்தில், போக்குவரத்து அமைச்சர் உட்பட சதருடன் தொடர்பு
வைத்துள்ள 21 உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். பாக்தாத்தில் சதர் இயக்கத்தை
சேர்ந்த ஒரு தலைவர் வெளியிட்ட அறிவிப்பில்: ''நஜாபிலுள்ள எங்களது அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட
வெட்ககேடான தாக்குதலை கண்டிக்கிறோம் மற்றும் அமெரிக்க டாங்கிகள் மேலிருந்து ஈராக்கிற்குள் திரும்ப
வந்திருக்கும் பதர் அமைப்பின்(Badr
organisation) செயல்தான் இது என்பதை அறிவோம்''
SCIRI
மன்னிப்பு கேட்காவிட்டால் ''ஆயுதம் ஏந்துமாறு ஒரு பொது அழைப்பு'' விடுக்கப்படும் என்று மற்றொரு தலைவர்
அறிவித்தார்.
SCIRI மூத்த உறுப்பினர்களில்
ஒருவரும், உள்துறை அமைச்சருமான பயான் பக்கர் சோலாக் நஜாப்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் மற்றும்
சதரிசவாதிகளுக்கும், SCIRI
விசுவாசிகளுக்குமிடையில் நின்று கலவரத்தை தடுக்குமாறு பாக்தாத்திலிருந்து நூற்றுக்கணக்கான போலீஸ்
அதிரடிப்படையினரை அனுப்பினர். ஜாப்பரி அரசியலமைப்பு தொடர்பான கூட்டங்களை கைவிட்டு தொலைக்காட்சியில்
சாதரின் அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தார் மற்றும் அமைதி காக்க வேண்டுகோள்
விடுத்தார். பதர் அமைப்பின் தலைவரான, ஹாதி அல்-அம்ரி வெளியிட்ட ஒரு அறிக்கையில் தாக்குதலை கண்டித்தும்,
தமது அமைப்பு அதற்கு பொறுப்பல்ல என்றும் கூறினார்.
கோபம் வெடித்து கிளம்பியதன் மீது தனக்கு எந்தவித நேரடி கட்டுப்பாடும்
இல்லையென்று தோற்றமளிக்கும் சதர், நேற்று அமைதியை நிலைநாட்டுமாறு தனது அழைப்பை விடுத்தார், தனது
ஆதரவாளர்கள் ''தங்களது வீடுகளுக்கு திரும்ப வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். அப்படியிருந்தும்,
பக்குபாவில் மீண்டும் பலத்த சண்டை ஏற்பட்டது. சென்ற ஆகஸ்டில் நஜாப்பில் சதரிசவாதிகளுடன் ஒரு போர்நிறுத்த
பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பின்னர் முதல் தடவையாக, மக்தி இராணுவத்திற்கு எதிராக அமெரிக்க
ஹெலிகாப்டர்களும் துருப்புக்களும் அனுப்பப்பட்டன.
அரசாங்க பிரதிநிதிகளுக்கும், சதருக்குமிடையில் பதட்டங்களை முற்றவிடாது
தடுப்பதற்கு முயலுகின்ற வகையில் அவசர கூட்டங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. என்றாலும், எந்த
நேரத்திலும் மற்றொரு வன்முறை ஏற்படக்கூடும் என்ற கொந்தளிப்பான நிலை உள்ளது. அமெரிக்கா தலைமையிலான
ஈராக் ஆக்கிரமிப்பு மற்றும் வாஷிங்டன் ஒரு அமெரிக்க பொம்மை அரசை நிறுவ நவீன காலனித்துவ முறையில்
மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை புஷ் நிர்வாகம் புரிந்து கொள்ளாத மற்றும் கட்டுப்படுத்த முடியாத சமூக
சக்திகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.
ஈராக் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு சட்டவிரோதமான ஒன்று மற்றும் சூறையாடும்
போர். அந்த பிராந்தியம் முழுவதையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும்
வகையில் மத்திய கிழக்கில் நிரந்தர இராணுவத்தளங்களை அமைப்பதற்கும் உலகின் இரண்டவாது மிகப்பெரிய எண்ணெய்
இருப்புக்களை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டினர் நீண்ட
நெடுங்காலமாக வைத்திருந்த அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக அது நடத்தப்பட்டது. ஈராக்கிடம்
பேரழிவுகரமான ஆயுதங்கள் உள்ளன என்ற பொய்களை கூறி அந்த நாட்டை பிடித்துக் கொண்டதை
நியாயப்படுத்தினர் மற்றும் சர்வதேச சட்டத்தை பகிரங்கமாக மீறுகின்ற வகையில் படையெடுப்பு நடத்தப்பட்டது.
சதாம் ஹூசைனின் பாத்திஸ்ட் ஆட்சியின் கீழ் பிரதான செல்வாக்கு அதிகாரங்களையும்
சலுகைகளையும் தங்களது கைகளில் வைத்திருந்த சுன்னி செல்வந்தத்தட்டினரின் கசப்புணர்வை மட்டுமே
எதிரொலிக்கின்ற வகையில் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு உருவாகியிருப்பதாக சித்தரிக்க அதற்குப் பின்னர்
வெள்ளைமாளிகை முயன்றது. அது உண்மையல்ல. பாதிஸ்ட்டுகள் மீது அவர்கள் எவ்வளவு ஆழமான வெறுப்பைக்
கொண்டிருந்தாலும், மிகப் பெரும்பாலான ஈராக் மக்கள் அமெரிக்க படையெடுப்பை ''விடுதலை
செய்யவந்தவர்கள்'' என்று வரவேற்கவில்லை.
SCIRI மற்றும் தாவா போன்ற
அமைப்புக்களும் முன்னணி ஷியைட் மதகுருமார் அலி-அல்-சிஸ்தானியும் வற்புறுத்தி அது பாக்தாத்திலுள்ள அரசாங்கம்
ஷியைட்டுகளின் கட்டுப்பாட்டில் வந்து விடுமானால் எல்லா வெளிநாட்டுத் துருப்புக்களும் வெளியேறும் நிலை ஏற்படும்
மற்றும் வெகுஜனங்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறும் என்ற மாயையை வளர்ப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இந்த ஜனவரியில் நடைபெற்ற தேர்தலை மிகப்பெரும்பாலான சுன்னிக்கள் புறக்கணித்து
விட்ட நிலையில், ஷியாக்களின் ஐக்கிய ஈராக் கூட்டணியின் அரங்கைத்தான் பிரதான உறுதிமொழிகளாக தந்தது,
அதன் மூலம் நாடாளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மை இடங்களை பெற்றது. வாக்குப்பதிவு நடந்து ஆறு மாதங்களுக்கு
பின்னர், ஜாப்பரி அரசாங்கம் அமெரிக்கப்படைகள் வெளியேறுவதற்கு எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்க
வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்தார், அதே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்களை
எதிர்நோக்கியுள்ள சமூக நிலைமை கூர்மையாக மோசமடைந்துவிட்டன.
அரசியலமைப்பு தொடர்பான மோதல்கள்
ஜனநாயக உரிமைகளுக்கான புதியதொரு சகாப்தத்தை கொண்டு வருவதற்கு
பதிலாக, SCIRI
உம் தாவாவும் தாங்கள் நிலைநாட்டியுள்ள கட்டுப்பாட்டை தாங்கள் ஆதிக்கத்திலுள்ள உள்துறை அமைச்சகத்தையும்
பல்வேறு மாகாண போலீஸ் படைகளையும் பயன்படுத்தி தங்களது அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஒரு பயங்கர
தாக்குதல் நிலையை உருவாக்கியுள்ளது. அரசாங்கத்தில் மற்றொரு அணியாக செயல்பட்டுக் கொண்டுள்ள குர்திஸ்
தேசியவாதக் கட்சி ஈராக்கின் வடக்கு பகுதியில் இதே போன்றதொரு செயற்திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
வாஷிங்டன் போஸ்ட் ஆகஸ்ட் 21ல் விரிவானதொரு விவரத்தை வெளியிட்டிருக்கிறது, அமெரிக்கா தலைமையிலான
ஆக்கிரமிப்பு படைகளின் ஒத்துழைப்போடு பரவலான மிரட்டல், தான்தோன்றித்தனமான கைதுகள், படுகொலைகள்
அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக விவரம் தந்திருக்கிறது.
வடக்கு ஈராக்கிலுள்ள ஒரு மனித உரிமைகள் தொடர்பான ஒரு அதிகாரி மிகவும்
அப்பட்டமாக ''சதாம் ஹூசைனுக்கும் குர்திஸ்கள் இங்கு செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கும் நான் எந்தவிதமான
வேறுபாட்டையும் பார்க்கவில்லை'' என்று கூறினார்.
இதன் விளைவாக, ஆக்கிரமிப்பின் மீதான வெறுப்புணர்வு அரசாங்கத்தில் பங்கெடுத்துக்
கொண்டுள்ள பிரிவுகளின் மீதான எதிர்ப்பும் வளர்ந்துள்ளது. ஜூலையில், சதர் இயக்கம் உடனடியாக அனைத்து வெளிநாட்டுத்
துருப்புக்களும் வெளியேற வேண்டும் என்று கோரும் ஒரு மனுவில் மூன்றே வாரங்களில் ஒரு மில்லியன்
கையெழுத்துக்களை பெற்றது. இந்த மாதம், சதரின் ஆதரவாளர்கள் சமாவாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள்
கலந்து கொண்ட ஒரு பேரணியை நடத்தினர். அவர்கள் மாகாண ஆளுனர் இராஜினாமா செய்ய வேண்டுமென்றும்
உடனடியாக தண்ணீர் மின்சாரம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
SCIRI கட்டுப்பாட்டிலுள்ள
உள்ளூர் போலீசார் இரண்டு ஆர்பாட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தியது, அதன் மூலம் அந்தப்பகுதி மக்தி இராணுவத்தை
குடிப்படையினருடன் ஒரு சண்டையை கிளறிவிட்டது.
ஈராக்கிலும் அமெரிக்காவிற்குள்ளேயும் அமெரிக்க தலைமையிலான படையெடுப்பிற்கு
வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கும் புஷ் நிர்வாகம் பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் பழைய கொள்கையான
பிரித்தாளும் ஆட்சியை நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, தூதர் கலீல்ஷாத் ஷியைட்
அடிப்படைவாதிகள் மற்றும் குர்திஸ் கட்சிகளின் கோரிக்கையான ஒரு குழுவிற்கு சார்பான அடிப்படையில் அமைந்த
அரசியல் சட்டத்தை ஆதரித்து வருகிறார். அது அவர்களது எதிரிகள் மற்றும் ஒட்டு மொத்த ஈராக் மக்களுக்கு
எதிராக அவர்களின் அதிகாரத்தை பாதுகாக்கின்றது.
அக்டோபர் 15ல் நடைபெறவிருக்கும் ஒரு பொதுஜனவாக்கெடுப்பில் அரசியல் சட்டம்
அங்கீகரிக்கப்படுமானால் - அது பெரும்பாலும் நடக்காது என்று தோன்றுகிறது - அதன் மூலம் எண்ணெய் வளம்
மிக்க வடக்கு மற்றும் ஈராக்கின் தெற்குப் பகுதி குர்திஸ் மற்றும் ஷியைட்டுக்கள் ஆதிக்கம் செலுத்தும் கூட்டாட்சி
பிராந்தியங்கள் உருவாக்கப்படும். அவை நடப்பு மற்றும் எதிர்கால எண்ணெய் வருவாயை பகிர்ந்து கொள்வதில்
கணிசமான அதிகாரங்களை பெறும்.
இந்த கூட்டாட்சி முறை தருவதற்கு பரிமாற்றமாக, குர்திஸ் மற்றும்
ஷியைட்டுக்கட்சிகள் ஆயுதந்தாங்கிய எதிர்ப்பை அமெரிக்க இராணுவம் ஒடுக்குவதிலும் ஈராக்கில் அமைக்கப்பட்டுவரும்
அமெரிக்க இராணுவத்தளங்களை சட்டபூர்வமாக அங்கீகரிக்கவும் அவை நிரந்தரமாக ''நீடித்திருப்பதற்கு''
உதவுவதாகவும் உறுதியளித்துள்ளன. இந்த வாரம் ஜெனரல் பீட்டர் ஹீமேக்கர் பென்டகன் ஒவ்வொரு ஆண்டும் 2009
வரை 100,000 போர் வீரர்களைக் கொண்ட ஒரு படையை சுழற்சி முறையில் அனுப்பப்படுவதற்கு பென்டகன்
திட்டம் தீட்டியிருப்பதாக உறுதிபடுத்தினர். மேலும், நகல் அரசியலமைப்பு வெளிப்படையாக ஈராக்கில் மற்றொரு
அமெரிக்காவின் நோக்கத்தை அனுமதிப்பதாக உள்ளது----எண்ணெய் தொழிற்துறையை அமெரிக்காவின் பெரிய
நிறுவனங்களுக்கு விற்று விடுவதும் பொருளாதாரத்தை சுதந்திரச் சந்தை முறையில் மறுசீரமைப்பதும் ஆகும்.
கூட்டாட்சி அரசியலமைப்பு பெரும்பாலான சுன்னி முஸ்லீம்களும் அவர்களுடன் மில்லியன்
கணக்கான இதர இன மற்றும் மத குழுக்களை சார்ந்த ஈராக்கியர்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈராக்கின்
வளங்கள் குறைந்த மாகாணங்களுக்கு ஒரு நேரடி அச்சுறுத்தலாகும். இந்த அரசியல் சட்டம் நாடு
உடைந்துகொண்டுபோகும் ஒரு தெளிவான ஆபத்தை உருவாக்குகிறது மற்றும் மத்திய மற்றும் மேற்கு பிராந்தியங்கள்
வறுமையில் தள்ளப்பட்ட ஒரு சிறிய அரசுகளாக உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தென் பகுதியில், பாஸ்ரா மற்றும் தென்பகுதி எண்ணெய் கிணறுகளை மையமாகக்
கொண்டிருக்கும் ஒன்பது மாகாணங்களை கொண்ட ஒரு பிராந்தியத்தை அமைக்க விரும்புவதாக
SCIRI
அறிவித்துள்ளது. அத்தகையதொரு தன்னாட்சி அரசு ஈராக் எல்லையில் பாதியையும் ஈராக் மக்களில்
பாதிப்பேரையும் கொண்டதாக அமைவதுடன், நாட்டில் உறுதியாகக் கிடைக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு
இருப்புக்களில் 50 சதவீதத்திற்கு மேல் ஈராக் மத்திய அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து பறிப்பதாக அமையும்.
வடபகுதியில், கூட்டாட்சி முறை நேரடியாக ஏராளமான அரபு மற்றும் துர்க்மேனிய
இன மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. அவர்கள் குர்திஸ் கட்சிகள் ஆட்சி செய்யும் ஒரு பிராந்தியத்தில்
இணைக்கப்டுகின்ற ஒரு சாத்தியக் கூறு உண்டு, ஏற்கனவே அவர்கள் கிர்குக் நகரைச் சுற்றிலும் வேறு இனங்களை
சேர்ந்த மக்களை குர்திஸ் கட்சியினர் வெளியேற்றி கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே மூன்று வடக்கு மகாகணங்களும் அடங்கிய குர்திஸ் சிறிய அரசு ஒன்று செயல்பட்டு
வருகிறது. இப்போது உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு குர்திஸ் இன முதலாளித்துவம் எண்ணெய் வளம்மிக்க அல்-தமீம்
மாகாணத்தையும் எடுத்துக் கொள்ள வகை செய்கிறது. முந்திய ஆட்சியின் போது கிர்குக் நகரில் குடியேற்றப்பட்ட
பல்லாயிரக்கணக்கான அராபியர்கள் 2007 வாக்கில் வெளியேற்றப்பட வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது
மற்றும் சதாம் ஹூசைன் ஆட்சிகாலத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட குர்திஸ்கள் மீண்டும் குடியேறுவர். அந்த
மாகாணத்தில் குர்திஸ் மக்கள் பெரும்பான்மையினராக ஆகின்ற நேரத்தில் குர்திஸ் பிராந்தியத்தோடு ''இணைவதற்கான''
பொதுஜனவாக்கடுப்பு நடத்தப்படும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
ஆக்கிரமிப்பிற்கும் நகல் அரசியல் சட்டத்திற்கும் காரணமாக இருக்கிறவர்கள் மீது எதிர்ப்பின்
வேகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நேற்றைய தினம், சுன்னி மற்றும் ஷியா அமைப்புக்கள், துருக்கி இன
அரசியல் கட்சிகள் மற்றும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற மதச்சார்பற்ற அமைப்புக்கள் மகளிர் அமைப்புக்கள்
நகல் அரசியலமைப்பின் பல்வேறு அம்சங்களை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.
இந்த ஆவணத்தை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று சதர் அறிவித்துள்ளார்.
பாக்தாத்திலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் மற்றொரு ஷியைட் இயக்கத்தின் தலைவரான ஹாதி அல்-காலிஸி
நாட்டில் பிரிவினையை ஆதரிக்கின்ற ஷியைட்டு ஈராக்கிய கருத்தை செய்தி அறிக்கையை கண்டித்தார். அவர் அல் ஜெசிராவிற்கு
வியாழனன்று வழங்கிய பேட்டியில்: ''இந்தவகையில் முன்வைப்பது நாட்டை பிளவுப்படுத்தும் ஒரு வெளிநாட்டு சதியாகும்.
இந்த அரசியல் சட்டத்தை வேறு வார்த்தைகளில் இப்படி நாம் கூறலாம். ஆக்கிரமிப்பையும் ஆக்கிரமிப்பு அரசாங்கத்தையும்
ஆதரிப்பவர்கள் அந்த அரசியலமைப்பை விரும்புகிறார்கள் மற்றும் ஈராக் தேசியவாதிகள் ஷியாக்கள் மற்றும் சுன்னிகள்
உட்பட அவற்றை விரும்பவில்லை``.
இந்த பின்னணியில், ஒரு மூன்றாவது காலக் கெடுவிற்குள் அரசியலமைப்பை நாடாளுமன்றம்
அங்கீகரிக்க தவறிவிட்டது. நேற்றிரவு நாடாளுமன்றத்தில் சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பில் நாடாளுமன்றத்தில்
நகல் அரசியலமைப்பின் மீது வாக்கெடுப்பு நடக்காது ஆனால் அக்டோபர் 15ல் நடைபெறும் ஒரு பொதுஜனவாக்கெடுப்பிற்கு
விடப்படும் என கூறியுள்ளது.
Top of page
|