World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

நிமீக்ஷீனீணீஸீ: மிஸீtமீக்ஷீவீஷீக்ஷீ விவீஸீவீstமீக்ஷீ ஷிநீலீவீறீஹ்s ஜீணீக்ஷீtவீஸீரீ sலீஷீtணீ தீறீணீtணீஸீt ணீttணீநீளீ ஷீஸீ யீக்ஷீமீமீபீஷீனீ ஷீயீ tலீமீ ஜீக்ஷீமீss

ஜேர்மனி: உள்துறை மந்திரி விடைபெறும்போது கொடுத்த தாக்குதல்-- செய்தி ஊடகத்தின் சுதந்திரத்தின் மீது வெளிப்படையான தாக்குதல்

By Justus Leicht
20 October 2005

Use this version to print | Send this link by email | Email the author

தன்னுடைய பதவிக்காலம் முடிவதற்கு சற்று முன்னர், ஜேர்மனியின் உள்துறை மந்திரியான ஓட்டோ ஷிலி (சமூக ஜனநாயக கட்சி- SPD), அடிப்படை ஜனநாயக உரிமை ஒன்றின் மீது மற்றொரு தாக்குதலை நடத்தினார்; இம்முறை அது சுதந்திரமான செய்தி ஊடகத்தின் உரிமையை அறைகூவலுக்கு உட்படுத்திய தாக்குதலாகும். ஷிலி விருப்பப்படி நிகழ்வுகள் நடைபெறுமேயாயின், அரசாங்க அமைப்பினுள் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு செய்தித்தாளும் அதன் பதிப்பு அலுவலகம் போலீஸ் நடவடிக்கைக்கு உட்பட்டு அதன் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்படும் என்பதோடு, எந்த அரசியல் ஊழலையும் வெளிப்படுத்தும் ஒரு செய்தியாளரும் சிறைச்சாலையை சந்திக்கவும் நேரிடும்.

குறிப்பிடத்தக்க வகையில் விமர்சனத்திற்குரிய செய்தி வெளியிடுதலுக்காக பெயர் பெற்றிருக்கவில்லை என்றாலும் சிசிரோ (Cicero) என்ற இதழின் ஏப்ரல் பதிப்பில் பொது நலன்களை பற்றிய விடயம் சம்பந்தமான ஒரு கட்டுரையை வெளியிட்டமை ஒரு பெரும் பிரச்சினையை கிளப்பியுள்ளது. "உலகில் மிக ஆபத்தான மனிதன்" என்ற தலைப்பில் Bruno Schirra என்ற செய்தியாளர், அபு முசாப் அல் ஷர்க்காவியை (Abu Mussab al Zarqawi) பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

ஜோர்டானிய, மேலை நாடுகளின் இரகசிய உளவுத்துறையில் கிடைத்த தகவல்களை ஒட்டி அவர் தன்னுடைய கட்டுரையை எழுதியிருந்தார்; ஜேர்மனிய குற்றவியல் ஆய்வு அலுவலகம் (German Criminal Invistigation Office-BKA) தயாரித்திருந்த 125 பக்க கோப்பும் அவருடைய ஆதாரங்களில் ஒன்றாகும். இந்தக் கோப்பின்படி ஷர்க்காவி ஈரானுடைய ஆதரவிற்கு உட்பட்டவர் என்றும் ஐரோப்பாவில் இராசயன ஆயுதங்களை கொண்டு பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கோப்பு "இரகசிய ஆவணம்- அரசாங்க உபயோகத்திற்கு மட்டும்" என்று முத்திரையிடப்பட்டதாக ஷிரா எழுதியுள்ளார். இரகசிய ஆவணங்களின் வகையில் இதற்கு மிகக்குறைவான தரம்தான் கொடுக்கப்பட்டிருந்தது; அதன் பொருள் ஆவணத்தின் பொருளுரைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தா என்பதாகும்.

இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு, செய்தியாளர் ஜேர்மனிய குற்றவியல் ஆய்வு அலுவலகத்திடம் தன்னுடைய திட்டத்தைக் கூறி நிறுவனத்துடன் ஒரு விவாதத்தையும் கோரியதாக கூறப்படுகிறது. எப்படியும் இருபுறத்தாருக்கும் இடையே விவாதம் கட்டுரை வெளிவந்த பின்னர்தான் நிகழ்ந்தது. ஜூன் மாதம் ஜேர்மனிய குற்றவியல் ஆய்வு அலுவலகம் ஷிராவிற்கு எதிராக, ஜேர்மனிய குற்றவியல் சட்டத்தின் (StGB) 353b பிரிவின்படி ஆணையை பிறப்பித்து, தன்னுடைய அலுவலர்களில் அவருக்குத் தகவல் கூறியது யார் என்பது பற்றியும் (தோல்வியை கண்ட வகையில்) ஆராய்ந்தது.

இறுதியில், செப்டம்பர் மாத நடுவில், போலீஸார் போஸ்ட்டாமில் இருக்கும் சிசிரோ பத்திரிக்கை அலுவலகத்தின் ஆசிரியர் பிரிவை சோதனை இட்டதுடன், அதேநேரத்தில் பேர்லினில் இருந்த ஷிராவுடைய வீட்டையும் சோதனைக்கு உட்படுத்தியது. இந்தச் சோதனைகளுக்கான சட்ட அடிப்படை ஆணை போஸ்ட்டாம் மாவட்ட நீதிமன்றத்தால் அரசாங்க வக்கீலின் வேண்டுகோளின்படி வழங்கப்பட்டது; இதில் "அரசாங்க இரகசியங்களைக் காட்டிக் கொடுத்ததற்கு துணை நின்றதாக" சிசிரோ மற்றும் ஷிரா மீது குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பிட்ட ஜேர்மனிய குற்றவியல் ஆய்வு அலுவலக கோப்புத் தொகுப்பு கிடைக்கவில்லை; ஆனால் ஷிராவின் கணினியில் இருந்த குறுந்தகடுகள் அனைத்தும் நகல் செய்யப்பட்டதுடன் ஆசிரியர் அலுவலகத்தில் இருந்த குறுந்தகடுகளும், 15 பெட்டிகளில் இருந்த கோப்புக்கள், ஆவண ஏடுகள் அனைத்தும் நகல் எடுத்துக் கொள்ளப்பட்டன; இதில் ஷிராவுடைய சொந்த காப்பு ஆவணங்கள் அனைத்தும் அடங்கும். அவை அனைத்தும் இறுதியில் பறிமுதல் செய்யப்பட்டன. அவருடைய சொந்த ஆவணங்கள் செய்தியாளரின் அறையில் "தற்செயலாக" எடுக்கப்பட்டன என்றும் கூறப்பட்டது.

353b StGB பிரிவின்படி இத்தகைய குற்றவியல் விசாரணை உள்துறை மந்திரி அலுவலகத்தின் அனுமதியுடன் நடைபெற்றிருக்க வேண்டும்; ஓட்டோ ஷிலியின் கீழ் இயங்கிவந்த இந்த அலுவலகம்தான் இதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

இரண்டு வாரங்கள் கழித்து, ஜேர்மனிய செய்தித்தாள் வெளியிடுவோர் சங்கத்தின் ஆண்டு மாநாட்டில், ஷிலி தன்னுடைய அமைச்சரகத்தின் நடவடிக்கையை நியாப்படுத்தியது மட்டும் இல்லாமல், இதை பெரிய அரசாங்க விவகார தரத்திற்கு உயர்த்திவிட்டார். எதிர்காலத்தில் அரசாங்கம் இரகசிய ஆவணங்களில் இருந்து மேற்கோளிடும் அனைத்து செய்தியாளர்களையும் கண்காணிக்கும் என்றும் சட்டத்தின் துணையுடன் "அரசாங்கத்தின் நலன் கருதி தக்க முறையில் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று கூறினார்.

செய்தி ஊடக நடைமுறையில் இருந்து புறப்பட்ட குறைகூறல்களை ஷிலி ஆக்ரோஷத்துடன் நிராகரித்தார்; தன்னுடைய கட்சி, அதன் கூட்டணி தோழமை கட்சியான பசுமைக் கட்சி இவற்றின் பிரதிநிதிகள் வெளியிட்ட குறைகூறல்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. "வெறும் துன்புறுத்துவோர்", "மடத்தனமான புறங்கூறுவோர்" என்று அத்தகைய குறைகூறுபவர்களை வர்ணித்த ஷிலி அவர்களுடைய முட்டாள்தனத்தின் எல்லைகள் மிக அதிகமாகிவிட்டன என்றும் கூறினார். Der Spiegel சஞ்சிகைக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், அரசாங்க இரகசிய ஆவணங்களை வைத்திருக்கும் செய்தியாளர்கள் திருட்டுப் பொருட்களை வைத்திருப்பதற்கு ஒப்பானவர்கள் என்று மேலும் கூறினார். "தன்னுடைய நலன்களைக் காக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு" என்று ஷிலி கூறியதுடன், சிசிரோ, ஷிரா மீது நிகழ்ந்த சோதனைகளையும் நியாயப்படுத்திப் பேசினார். கடந்த வாரம் இந்தப் பிரச்சினையை விவாதித்த பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலும் தன்னுடைய நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்தார்.

சற்று கவனத்துடன் ஆராய்ந்தால் இந்த சோதனைகள் சட்டவிரோதமானவை என்பது புலனாகும். ஒரு புறத்தின் உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நடத்தப்படும் சோதனைகள் அரசாங்க அமைப்புகளில் இருந்து ஏற்படும் தகவல் கசிவைக் கண்டுபிடிக்கும் வகையில் பயன்படுத்தக்கூடாது என்று ஜேர்மனிய அரசியலமைப்பு நீதிமன்றம் 40 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியுள்ளது. செய்தியாளர் சுதந்திரத்தில், தகவல் கொடுத்தவர் பற்றிய பாதுகாப்பு என்பது தவிர்க்க முடியாத, உள்ளடங்கிய கூறுபாடு ஆகும். மறுபுறத்தில், ஜேர்மனிய குற்றவியல் சட்டத்தொகுப்போ, உடந்தையாக இருந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் நடத்தப்படும் சோதனைகள் ஒட்டி நிகழும் பறிமுதல்கள் செய்தி ஊடகத்தின் அடிப்படை உரிமையை மீறாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஒரு சட்ட பதிப்பில் அடிப்படை உரிமையை பற்றிய சிறப்புக் குறிப்பு அசாதாரணமானதாகும். "அரசாங்க நலன்களை மிகையாக வலியுறுத்தும் வக்காலத்து வாங்கபவர்கள் கொடுக்கும் ஆபத்தை திறமையுடன் சமாளிப்பதற்காக" சட்டம் இயற்றுபவர்களால் இது கூறப்பட்டுள்ளது.

"அரசாங்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் செயற்பாடுகள்" கொள்ளுதல் என்பதின் உண்மையான பொருளும் வெளியாகியுள்ளது. பேர்லினில் இருக்கும் அரசாங்க வக்கீலின் அலுவலகம் ஷிராவிற்கு எதிராக தானே குற்றவியல் நடவடிக்கைகளை, அவருடைய அறையில் "தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களின்" அடிப்படையில், எடுக்க இருக்கிறது. மீண்டும், "அரசாங்க இரகசியங்களை காட்டிக் கொடுப்பதற்கு உடந்தையாக இருப்பவர்" என்ற கூற்றச் சாட்டு முன்வைக்கப்படும். இம்முறை இக்குற்றச்சாட்டு ஜேர்மனிய குடியரசை கடந்த ஒரு தசாப்தத்தில் உலுக்கிய, கிழக்கு ஜேர்மனியில் Leuna விவகாரம், இராணுவத் தளவாடங்கள் வாங்கியவை, கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் வசூலித்த நன்கொடை போன்ற ஊழல்களை பற்றிய ஆவணங்களை பற்றியதாக இருக்கும். Die Zeit ஏட்டிற்கு செய்தியாளராக வேலைபார்க்கையில் ஷிரா இந்த ஊழல்கள் பற்றிய தகவல்களை முறையாக பத்திரிக்கைக்கு கொடுத்துள்ளார். இப்பொழுது அத்தகைய விவகாரங்களை பற்றிய உண்மையை கூறுதல் தண்டிக்கத்தக்க குற்றம் என்று ஆகியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஷிலியின் பங்கு இன்னும் முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை. குற்றவியல் நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுத்தற்கு பொறுப்பை ஏற்கும் வரம்பை மட்டும் அது கொண்டுள்ளதா? Die Welt கொடுக்கும் தகவலின்படி, சோதனைகள் நடத்துவதற்கு உத்தரவிட்ட அரசாங்க வழக்குதொடுனர், ஷிராவின் நிலவறையுள் முதலில் அதிகாரிகள் நுழைந்ததில் இருந்து, பல மணி நேரமும் தொலைபேசித் தொடர்பை, போஸ்ட்டாமில் இருக்கும் தன்னுடைய உயரதிகாரிகளுடனாக இருக்கலாம், கொண்டிருந்ததாக தெரிகிறது. பாராளுமன்ற குழு விசாரணையின்போது, அறையில் கண்டு எடுக்கப்பட்ட விவகாரத்திற்குரிய ஆவணங்களை பற்றிய கேள்விக்கு உள்துறை மந்திரி தெளிவாக விடை கொடுக்கவில்லை; அதுபோலவே அரசாங்க வக்கீலும் உள்துறை அமைச்சரக அலுவலகம், இவற்றுடன் ஜேர்மனிய குற்றவியல் ஆய்வு அலுவலகத்திற்கு உள்ள தொடர்பை பற்றி தெளிவாகக் குறிப்பிடவில்லை. எதையும் அவர் ஏற்கவும் இல்லை, மறுக்கவில்லை; வினாவை திருப்பி கேட்டுக் கொண்டிருந்தார்" என்று Die Welt குறிப்பிட்டுள்ளது.

செய்தி ஊடகத்துறை வல்லுனரான Johannes Ludwig ஷிலி அழுத்தம் கொடுக்கக்கூடிய அளவிற்கு சென்றார் என்று கருதுகிறார். Telepolis என்ற வலைத்தள இதழிற்குக் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் அவர் கூறுவதாவது: "செய்தி ஊடகப் பிரதிநிதிகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் கூடாது என்ற வழிகாட்டும் நெறிகளை அரசாங்க வழக்குதொடுனர் அலுவலகம் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்றிருந்தது. முதலில் உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகம் சரியான முறையில் உறுதிப்படுத்தப்பட முடியாதததாகும். இரண்டாவதாக, செய்தி ஊடகத்திற்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகள், எப்பொழுதுமே எதிர்விளைவுகளைத்தான் தூண்டிவிடும். நீண்டகால அடிப்படையில், அரசாங்க வக்கீல் அலுவலகத்தின் புகழுக்கு ஊறு விளைவித்துவிடும்.... அரசாங்க வக்கீலுக்கும் மேலாக மூத்த அரசாங்க வக்கீல் உள்ளார்; அவருக்கும் மேலாக பொது வக்கீல் உள்ளார்; அதற்கும் அடுத்த உயர்மட்டத்தில் அமைச்சரக அலுவலகம் உள்ளது. ஒரு மந்திரி உரக்கச் சிந்தித்தால்கூட, அது பல நேரமும் கீழ்ப்படிய வேண்டும் என்ற நிலையை கீழ் மட்டத்தில் ஏற்படுத்திவிடும்; ஏனென்றால் தங்களுடைய வேலைக்கு எவருமே ஆபத்தை தேடிக் கொள்ள மாட்டார்கள். இந்தப் பிரச்சினையில் ஓட்டோ ஷிலி அழுத்தம் கொடுத்தார் என்பது வெளிப்படை."

ஏதேனும் ஒரு நல்ல விளைவைக் காணவேண்டும் என்று மந்திரி கவலையுற்றிருந்தார் என்பது வெளிப்படை; பேர்லினில் உள்ள அரசாங்க வழக்குதொடுனர் அலுவலகம் எடுத்த நடவடிக்கை அவர் அம்முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றார் என்பதை காட்டுகிறது. பேர்லின் அரசாங்க வழக்குதொடுனர் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் Frank Thiel கூறுவது: "செய்தியாளர்களுக்கு இரகசிய ஆவணங்களில் இருந்து தகவல் எடுத்துக் கொள்ளுவது ஒருகால் "அன்றாட செயலாக" இருக்கலாம்; ஆனால் அது சட்டப்படி தண்டிக்கத் தகுந்ததாகும்." ஓர் ஒப்புமையை கூட இவர் முன்வைத்தார்: "கட்டிடத் தொழிலில் இலஞ்சம் கொடுப்பது வாடிக்கைதான் --- ஆனால் அதுவும் தண்டனைக்கு உரியதேயாகும்."

ஷிலி, அரசாங்க வக்கீல்கள் மற்றும் போலீஸ் பயன்படுத்தியுள்ள சட்டம் முற்றிலும் ஜனநாயக விரோதமானது ஆகும். இதனுடைய பொருள் உரையின்படி, அரசாங்க இரகசியங்கள் "வெளிப்படுத்தப்பட்டால்", "முக்கிய பொது நலன்கள் ஆபத்திற்கு உட்பட்டால்" அரசாங்க நடவடிக்கை தேவையாகிறது என்பதாகும். பொது நலன்களை பற்றிக் குறிப்பிடாமல், மாறுபட்ட வகையில் சட்டங்களின்படி, "பொது நிர்வாகத்தின் நடுநிலைமை, ஊழலற்ற தன்மை, திறமை இவற்றை பாதிக்கக் கூடிய வகையில், எது ஏற்பட்டாலும் அது தவிர்க்கப்படவேண்டும்."

குறிப்பிட்ட விதிகள் (353b) 1936ம் ஆண்டு நாஜிக்களால் இயற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தவிர்க்கமுடியாமல் பாசிசத்தை ஜேர்மனி தற்போது எதிர்கொள்ளவில்லை என்றாலும், அதிகாரப் பிழைகளை வெளிப்படுத்துவது என்பது அரசாங்க அமைப்புகளின் சக்திவாய்ந்தவர்களால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்று கருதப்படுகிறது.

See Also:

ஜேர்மனியின் பாரிய கூட்டணியில் இருந்து என்ன எதிர்பார்க்கப்படலாம்?

ஜேர்மனி: அதிபர் மெர்க்கெலின் தலைமையில் பெரும் கூட்டணி
வாக்களர்களின் விருப்பத்திற்கு எதிராக ஓர் அரசாங்கம்

Top of page