World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush White House crisis deepens: The contradictions of the Miers nomination

புஷ் வெள்ளை மாளிகை நெருக்கடி ஆழமாகிறது: மியர்ஸ் நியமனத்தின் முரண்பாடுகள்

By Patrick Martin
10 October 2005

Use this version to print | Send this link by email | Email the author

உச்ச நீதிமன்றத்திற்கு ஹாரியட் மியர்ஸை நியமிப்பது தொடர்பாக குடியரசுக் கட்சிக்குள் மோதல்கள் தீவிரமடைவதுடன் புஷ் நிர்வாகத்தின் குழப்பத்தையும் பலவீனத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுவதுடன் தற்போது அதிகாரபூர்வமான வாஷிங்டனில் மேலாதிக்கம் செலுத்துகின்ற வலதுசாரி சக்திகளின் ஆதரவை இழந்து விட்ட தன்மையையும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட நிலையையும் எடுத்துக்காட்டுகின்றன. இது ஒரு போத்திலுக்குள் நடக்கின்ற தேள்களின் சண்டைக்கு சற்று அதிகமான தோற்றத்தை கொண்டதாக அமைந்திருக்கிறது-----இந்த மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குறுகலான வட்டத்தையும் அதை முன்னெடுப்பவர்களின் அறிவுஜீவித மற்றும் நன்னடத்தையினதும் அளவு ஆகிய இரண்டையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

வலதுசாரி ஊடக பண்டிதர்கள் ஏறத்தாழ ஒட்டு மொத்தமாக மியர்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், ஜோர்ஜ் வில், சார்லஸ் கருத்தாமர், வில்லியம் கிரிஸ்டல் மற்றும் இதர வழக்கமான புஷ்சின் கூட்டணியினர்கள் மியர்ஸ் நியமனத்தை கண்டித்து கட்டுரைகளை எழுதியுள்ளனர். இந்த நியமனம் ஒரு கெட்ட நையாண்டி என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறது, புஷ்சின் மிகத்தீவிரமான உறுதியான ஆதரவாளர்களுக்கு ஒரு இழிவு ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிவது, காட்டிக் கொடுப்பதும் கூட என்று கூறப்பட்டிருக்கிறது. William F. Buckley இன் National Review, 50வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதற்காக புதன்கிழமையன்று நடைபெற்ற வலதுசாரி செயலூக்கர்களின் ஒரு மாநாட்டில் மியர்ஸ் நியமனம் தொடர்பாக அதிருப்தி கொப்பளித்தது.

சமூக பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளாக வரும்போது நிச்சமயாக தங்களது நிலைப்பாடுகளை ஆதரிக்கின்ற மியர்சின் ஒரு வாக்கு தங்களுக்கு உண்டு என்று வெள்ளை மாளிகையிலிருந்து நேரடியாக தங்களுக்கு உறுதிமொழிகள் கிடைத்ததாக குறிப்பிட்ட ஒரு சில முன்னணி கிறிஸ்தவ அடிப்படைவாத மத போதகர்களை தவிர, கருக்கலைப்பு, வரிவிதிப்பு மற்றும் ஓரினபால் சேர்க்கையாளர்களுக்கு எதிரான வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்நியமனத்தை எதிர்க்கின்றனர்.

ஜேம்ஸ் டோப்சன், Focus on the Family அமைப்பின் தலைவர் மிகுந்த செல்வாக்கு படைத்த அடிப்படைவாத அமைச்சர் என்று கருதப்படுபவர், புஷ்சின் தலைமை அரசியல் ஆலோசகர் கால் ரோவுடன் மியர்ஸ் நியமனம் தொடர்பாக ஒரு விவாதம் நடத்திய பின்னர் தான் திருப்தியடைந்ததாக தெரிவித்தார். என்றாலும் ரோவ் தன்னிடம் என்ன கூறினார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார். ''இந்த பிரச்சனையில் என்னை நீங்கள் நம்பியாக வேண்டும்'' என்று கூறினார்.

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்த தேர்ந்தெடுக்கப்படாத தொலைக்காட்சி மதபோதகர் அடுத்த மாதம் மியர்ஸ் நியமனம் தொடர்பாக விசாரணைகளை நடத்துகின்ற செனட் சபையின் நீதித்துறை குழுவிற்கு அதன் உரிமையை மறுக்க புஷ் நிர்வாகம் கருதியிருக்கிறது என்ற தகவலை தருகின்றவராக ஆகிவிட்டார். ஐந்து ஆண்டுகளாக அலுவலக செயலாளர் துணைத்தலைமை அலுவலக அதிகாரி மற்றும் ஜனாதிபதியின் வக்கீல் ஆகிய பணிகளில் மியர்ஸ் பணியாற்றியது தொடர்பாக எந்த ஆவணத்தையும் வெளியிட முடியாது என்பதை ஏற்கனவே வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. மற்றும் மியர்ஸ் ஜோன் ரொபர்ட்சின் முன் மாதிரியை பின்பற்றி நேரடிக்கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பார். அது கருக்கலைப்பை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் Roe v. Wade வழக்கின் தீர்ப்பை இரத்து செய்வது மற்றும் அதுபோன்ற கருத்து வேறுபாடுகளுக்கு இடம் தரும் பிரச்சனைகள் குறித்து நேரடியாக தமது கருத்தை மியர்ஸ் சொல்ல மாட்டார்.

மியர்ஸ் தொடர்பான மோதலில் வேடிக்கைகள் நிறைந்திருக்கின்றன. ரொபர்ட்சிடம் கருக்கலைப்பு ஓரினபால் சேர்க்கையாளர்களின் உரிமை பற்றிய கேள்விகளை எழுப்புவது நடைமுறை விதிகளை மீறுவதாக அமையும் என்று கூறிய, குடியரசுக்கட்சி அரசியல்வாதிகளும் பண்டிதர்களும் இப்போது வலியுறுத்திக் கூறுவது என்னவென்றால் நடைபெறவிருக்கின்ற பதவியை உறுதிப்படுத்தும் விசாரணைகளில் அத்தகைய கேள்விகளை எழுப்பலாம். ரொபர்ட்ஸ் விசாணைகளின் போது, அவர் தீவிர பழமைவாத கத்தோலிக்க மதத்தை தழுவியவரா என்ற கேள்வியை வெள்ளை மாளிகை கண்டித்ததற்கு காரணம் அது ஒரு அரசியல் சட்டத்திற்க முரணான மதம் பற்றிய சோதனை என்று முத்திரை குத்தியது. ஆனால் தற்போது அதே பேச்சாளர்கள் கருக்கலைப்பிற்கு எதிரான உறுப்பினர் மற்றும் ஓரினபால் சேர்க்கையாளர்களுக்கு எதிரான வெறியர்கள் ஆகியோருக்கு உறுதி மொழி தருகின்ற எவான்கெலிகல் கிறிஸ்தவ தேவாலயத்தோடு இணைந்திருப்பவர் மியர்ஸ் என்பதை எடுத்துரைத்து வருகின்றனர்.

போட்டி வலதுசாரி பிரிவுகளுக்கு இடையே நிலவுகின்ற இந்த மோதலில் இரண்டு தரப்பிலுமே ஒரு உண்மை அம்சம் உள்ளது. அகந்தை கொண்ட வெள்ளை மாளிகை கருத்துக்களுக்கு பதவி தருகின்ற போக்கின் விளைவுதான் இது என்று இந்த நியமனத்தை எதிர்க்கின்றவர்கள் கூறுகின்றனர். மியர்ஸ் அறிவுபூர்வமாக சுமாரான ஆற்றல் உள்ளவர் அரசியலமைப்பு சட்ட அனுபவம் இல்லாதவர் என்று அவர்கள் வர்ணிக்கின்றனர். கேபிட்டல் ஹில்லிற்கு மியர்ஸ் விஜயம் செய்த போது நடைபெற்ற ஒரு சம்பவம் அந்த வர்ணனையை உறுதிப்படுத்தவதாக அமைந்திருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் யாரை அவர் அதிகம் வியந்து பாராட்டுகிறார் என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தபோது ''வாரன்'' என்று பொதுப்படையாக பதிலளித்தார்-----தாராளவாத தலைமை நீதிபதி ஏரல் வாரனுக்கும் அருக்கு பின்னால் பதவிக்கு வந்த வாரன் பேர்கருக்கும் இடையில் வேறுபடுத்தி அவர் பதிலளிக்கவில்லை. தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டதையொட்டி அவர் பேர்கர் என்று பதிலளித்தார். அவர் Roe v. Wade வழக்கில் கருக்கலைப்பு உரிமைகளை நிலைநாட்டிய ஏழு நீதிபதிகளில் ஒருவர் பேர்கர்.

மற்றொரு பக்கம் பார்த்தால், வெள்ளை மாளிகை பேச்சாளரான ஸ்கோட் மெக்கல்லன் மியர்ஸை விமர்சிப்பவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க சிறுபிரிவினர் என்று தள்ளுபடி செய்தார். ''ஒன்று அல்லது இரண்டு தனிமனிதர்கள் என்ன சொல்லக்கூடும் என்பதை ஊன்றி கவனிக்கும் போக்கு சிறிது காலமாக நிலவுவதை நான் அறிவேன். ஆனால் அவரை நன்றாக தெரிந்த அனைத்து தனிமனிதர்களும் அவரைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையும் கொண்டு பார்க்க வேண்டும்'' என அவர் குறிப்பிட்டார். மியர்ஸ் நியமனம் தொடர்பான கூக்குரல் ஒரு குறுகலான சிறுபான்மையினர் எழுப்பியதுதான் என்பதே உண்மை. ஆனால் இந்த சிறுபான்மை கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும் இதர வலதுசாரி வெறியர்களும் தான், அது புஷ் நிர்வாகத்திற்கான பிரதான முக்கிய ஆதரவு அடித்தளமாகும்.

உச்சநீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை நியமிக்கின்ற ஒட்டுமொத்த நடைமுறையையும் அவர்களை தேர்ந்தெடுப்பது மற்றும் உறுதிப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஜனநாயக விரோத முறைகள் அதிகரித்து வருகின்றன. உச்சநீதிமன்றத்தை நிரப்புகின்ற பழமைவாதிகளின் அரசியல் மற்றும் சட்டக்கருத்துக்கள் தொடர்பாக அமெரிக்க மக்கள் அனைவரையும் இருட்டறையில் தள்ளுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. செனட் சபையின் நீதி விசாரணைக் குழுவின் விசாரணைகள் வெறும் நாடகமாகிவிட்டன, நியமிக்கபடுபவர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முற்றிலும் போலியான அடிப்படையில் வாதங்களை எழுப்புகின்றனர், அது என்னவென்றால் எதிர்கால வழக்குகளைப்பற்றி ''முன்கூட்டியே தீர்ப்பளிப்பதற்கு'' சமமாக தங்கள் கருத்துக்கள் அமையும் என்று கூறுகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியாற்றிக் கொண்டுள்ள நீதிபதிகள் எவருக்கும் அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை, அவர்கள் முறையாக தங்களது கருத்துக்களை சட்டபூர்வமான தீர்ப்புக்களிலும் உரையாற்றும் போதும் இதர கட்டுரைகளை பிரசுரிக்கும் போது முறையாக வெளியிட்டு வருகின்றனர். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், முன்கூட்டியே தீர்ப்பளிப்பதற்கு எதிரான தடை தங்களது நியமனத்தை உறுதிபடுத்தும் வாக்களிப்பை எதிர்நோக்கியுள்ள நீதிபதிகளுக்குத்தான் பொருந்தும்------அவர்கள் தங்களது கருத்துக்களை கூற மறுப்பது பொது மக்களிடையே கலவர உணர்வை ஏற்படுத்திவிடாது தவிர்ப்பதற்குத்தான். உச்சநீதிமன்றத்தில் தங்கள் ஆயுள் முழுவதும் பணியாற்றும் வகையில் உறுதி செய்யப்பட்டுவிட்ட பின்னர் அவர்கள் தங்கள விருப்பப்படி கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

சென்ற வாரம் புஷ் நிருபர்கள் மாநாட்டில் தெரிவித்த கருத்து ஒட்டு மொத்த அரசியல் தட்டிக்கழிப்பு நிகழ்ச்சிபோக்கும் ஒரு நாடகம் போன்ற புள்ளிக்கு வந்து விட்டதைக் காட்டியது. அவர் ஒரே நேரத்தில் கூறியது என்னவென்றால் மியர்ஸை விமர்சிக்கின்ற வலதுசாரி அணியினர் கூறுவது தவறு என்பதை நிரூபித்து விட முடியும். ஏனென்றால் அவர் ''அவரது உள்ளத்தை'' அறிந்திருக்கிறார் மற்றும் கருக்கலைப்பு பற்றிய அவரது கருத்துக்களை எப்போதுமே அவருடன் விவாதித்ததில்லை மற்றும் Roe v. Wade வழக்கில் அவரது கருத்து தனக்குத் தெரியாது. 5 ஆண்டுகள் அவருடன் நிரந்தமாக பணியாற்றிய பின்னரும் தசாப்தங்களுக்கு மேலாக அவரை தெரிந்திருந்தும் அவரது கருத்துக்கள் புஷ்சிற்கு தெரியாது.

அந்த நியமன சூழ்நிலையில் கூட புஷ் தனது சொந்த அனைவரும் அறிந்த கருக்கலைப்பு உரிமை எதிர்ப்பை வலியுறுத்திக் கூறவில்லை. அவர் தன்னை ''ஒரு வாழ்வு-சார்பு ஜனாதிபதி'' என்று மட்டுமே வர்ணித்துக் கொண்டார் Roe v. Wade வழக்கின் தீர்ப்பை இரத்துச் செய்ய வேண்டுமா என்று கூற மறுத்துவிட்டார். ''இது போன்ற விசாரணைகளின் இடையில் அந்த மாதிரியான பிரச்சனைகளை இடை மறித்து எழுப்புவதற்கு நான் தயாராக இல்லை'' என்று அவர் குறிப்பிட்டார். அது அமெரிக்காவின் சட்ட அமைப்பின் நிலைமையை தீவிரமாக வலதுசாரி பக்கம் சாய்வதற்கான முயற்சிக்கப்படும் முக்கிய பிரச்சனைகள் அல்ல என்பதைப் போல் அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சனிக்கிழமையன்று வானொலியில் உரையாற்றிய, புஷ் ''நீதித்துறை கட்டுப்பாட்டின்'' சின்னமாக மியர்ஸ் விளங்குவார் மற்றும் நீதிமன்றத்தில் அமர்ந்து கொண்டு சட்டம் இயற்றும் நீதிபதியாக செயல்படமாட்டார் என்று புஷ் கூறினார். இந்த வார்த்தைகள் வலதுசாரி குழுக்களுக்கு உறுதியளிக்கின்ற இரகசிய சொற்களாகும். அது என்னவென்றால் நியமனம் பெறுகின்ற நீதிபதி அவரது நிதித்துறை பதவியின் மூலம் தங்களுக்கு சாதகமான அரசியல் செப்படிவித்தைகளை திணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்: கருக்கலைப்பு சட்டவிரோதமானது, ஓரின சேர்கையாளர்களின் உரிமை அடக்குதல், பெருவர்த்தக நிறுவனங்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் ஒடுக்குதல், போலீசார், வழக்குத்தொடர்பவர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் அதிகாரங்களை ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக விரிவுபடுத்துவார். அத்தகைய கொள்கைகள் அமெரிக்க மக்களால் ஆழமாக வெறுத்து ஒதுக்கப்படுகின்றன, எனவே அவை நீதிமன்ற கட்டளை மூலம் திணிக்கப்பட வேண்டும்.

பிரதான தொலைக்காட்சி வலைபின்னல்கள் ஞாயிறு காலை பேட்டி நிகழ்ச்சிகளில் இந்த நியமனம் முக்கிய இடம் பெற்றது அதில் மியர்ஸை எதிர்க்கின்ற அதிதீவிர வலதுசாரிகள் அணிவகுத்து நின்றனர் - அவர்களில் இணை-பாசிசவாதியான முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் பட்ரிக் புக்கனனும் இடம் பெற்றிருந்தார். இந்த பண்டிதர்களோடு குடியரசுக் கட்சி செனட்டர்களும் சேர்ந்து கொண்டனர் அவர்கள் இந்த நியமனத்திற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர் அல்லது தங்களது முடிவை ஒத்திவைத்து விட்டனர்.

கான்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒரு குடியரசுக் கட்சி செனட்டரான சாம் பிரெளன்பேக் ஒரு வெறி பிடித்த கருக்கலைப்பிற்கு எதிரான பழமைவாதி மியர்ஸ் நியமனத்தில் தீவிர வலதுசாரிகளின் துயரத்திற்கான உண்மையான காரணத்தை வாய்தவறி உளறிவிட்டார். Face the Nation என்ற CBS நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த அவர் செனட்டில் இடம் பெற்றுள்ள ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அனுமதிக்காத முறையில் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்க போவதாக அச்சுறுத்தியுள்ள ஒட்டு மொத்த போரை தூண்டிவிடுகின்ற ஒரு பகிரங்கமான கருக்கலைப்பிற்கு எதிரான நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று தான் நம்பிக் கொண்டிருந்தாக அவர் கூறினார். இதன் மூலம் குடியரசுக் கட்சிக்காரர்களுக்கு செனட்டில் ஒரு வாய்ப்பு கிடைக்கும், குடியரசுக் கட்சிக்கு உள்ள 55-45 பெரும்பான்மையை பயன்படுத்தி எல்லா நியமனங்களுக்குமே தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அனுமதிக்காத முறையில் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கும் நடைமுறைக்கு தடைவிதிப்பதற்கு ஒரு வாய்ப்பளிக்கும் இந்த நடைமுறை சுருக்கமாக ''மைய வாய்ப்பு`` என்று முன்னாள் செனட் பெரும்பான்மை தலைவர் டிரன்ட் லாட் குறிப்பிட்டார்.

''தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அனுமதிக்காத முறையில் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்க நாம் சமாளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் அப்படிச் செய்வதற்கு விதிகளை மாற்றுவதற்கு புண்படுத்துதல் ஏற்படும் அளவிற்கு போரிட வேண்டி வராலாம். ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் நாம் விவாதங்களை கலந்துரையாடலை நடத்துகின்ற தருணத்தில் இருக்கிறோம்'' என்று பிரெளன் பேக் கூறினார். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், கடைசியாக இப்போது உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியை நியமிப்பதற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடுமையான பிற்போக்குவாதிகளில் மற்றொருவரை உச்சநீதிமன்றத்தில் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் குடியரசுக் கட்சி பயன்படுத்துகின்ற கடைசி நடைமுறைவிதி கட்டுப்பாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தற்போது குடியரசுக் கட்சி வெள்ளை மாளிகை நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் பெரும்பான்மை ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

தீவிர வலதுசாரிகளிடையே இந்தக் கருத்து பரவலாக நிலவுகிறது. ஒரு கிறிஸ்தவ அடிப்படைவாதியும் புஷ்சின் முன்னாள் ஆலோசகருமான மார்வின் ஒலாஸ்கி New York Time ற்கு ''எவான்கெலிகல் பழமைவாதிகள் ஒட்டு மொத்தமாக இந்த போரில் கலந்து கொண்டு ராட்சதர்களை எதிர்த்து உண்மையிலேயே போரிடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்'' என கூறியிருந்தார்.

ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பின் கடைசி வடுக்களை கூட துடைத்தெறிவதற்கு வாய்ப்பை புஷ் பறித்துக் கொண்டு விட்டார் என்று தீவிர வலதுசாரிபிரிவுகள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாலும் வெள்ளை மாளிகை பகிரங்க கருத்தியல் போரை தவிர்ப்பதற்கு நீதிமன்ற பதவியை பயன்படுத்தி கொண்டது வஞ்சகத்திற்கும் சற்று அப்பாற்பட்டது என்ற கருதுகின்றனர்.

புஷ்சின் ஜனாதிபதி பதவி முழுவதுமே பெரும்பாலான அமெரிக்க மக்கள் தீவிர வலதுசாரி செயல்திட்டத்தை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்ததல்ல ஆனால் அந்த செயல்திட்டத்தின் உண்மையான விளைபயன்களை மூடிமறைத்துவிட்டு திருட்டுதனமாக செயல்படுத்துவதுதான். 2000 தேர்தலில் புஷ் ''கருணையுள்ள பழமைவாதி'' என்ற ஒரு முழக்கத்தை பயன்படுத்தி தனது நிர்வாகத்தின் கொடூரமான சமூக கொள்கைகளை மூடி மறைத்தார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டபோது செப்டம்பர் பயங்கரவாத தாக்குதல்களை சமூக பிற்போக்குத்தனத்தை மூடிமறைக்கின்ற பன்னோக்கு முகமூடியாக பயன்படுத்திக் கொண்டு ஒரு ''போர் ஜனாதிபதி`` என்று போட்டியிட்டார்.

இந்த மோசடிகள் அனைத்திலும், புஷ் அவற்றிற்கெல்லாம் மேலாக ஜனநாயகக்கட்சியின் ஒத்துழைப்பை நம்யிருந்தார், அக்கட்சி ஒரு நியாயமான அரசியல் எதிர்க்கட்சி அல்ல, ஆனால் நிர்வாகத்தை தற்காத்து நிற்கும், இரண்டாவது நிலை, அந்த நிர்வாகம் போர்க்கொள்கையை செயல்படுத்தியது, சமூக நலத்திட்டங்களை சிதைக்கிறது மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்களை தொடுக்கிறது.

Top of page