WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பிரித்தானியா
What is in Blair's anti-terror bill?
பிளேயரின் பயங்கரவாத-எதிர்ப்பு மசோதாவில் அடங்கியிருப்பது என்ன?
15 October 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
தனிநபர்களுக்கும், பெருநிறுவனங்களுக்கும், அவற்றின் நிர்வாகிகளுக்கும் பொருந்தும்,
பயங்கரவாதத்திற்கு எதிரான அண்மைய மசோதாவின் சட்டப்பிரிவுகள் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டுள்ள 200
வகையான சட்டங்களோடு சேர்ந்து பரவலான அதிகார வரம்பை கொண்டிருக்கின்றன.
அரசாங்கம் (அரசாங்கத்தின் சர்வதேச நிறுவனங்கள் உட்பட) அல்லது
பொதுமக்களை ஒரு கருத்தியல், அரசியல் அல்லது மத நோக்கத்துடன்
மிரட்டும் அல்லது செல்வாக்கை பயன்படுத்தும் நோக்கத்துடன்
சொத்துக்களுக்கு அல்லது மனிதர்களுக்கு விளைவிக்கும் கடுமையான சேதம் உள்ளடங்கலான வரையில் பயங்கரவாதம்
வரையறை செய்யப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம், சந்தேகத்திற்கு உரிய ஒருவர் குற்றம்
சாட்டப்படாமல் 14 நாட்கள் வரை காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்பது மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதாகும்.
ஆனால் இந்த சட்ட முன்வரையில் முன்மொழியப்பட்டுள்ள சரிசமமான முக்கியத்துவம் நிறைந்த ஒரு பகுதி
என்னவென்றால், ஒரு அறிக்கையை வெளியிடுவது அல்லது மற்றொருவர் அந்த அறிக்கையை பிரசுரிக்கச் செய்வது,
அப்படிச் செய்வதன் மூலம் தானே அறிந்து நம்பி அல்லது "நம்புவதற்கு நியாயமான அடிப்படை காரணங்கள்"
இருந்து, அந்த அறிக்கையை பொதுமக்கள் "ஒரு பயங்கரவாத செயலை அல்லது செயல்களை செய்வதற்கு நேரடியாகவோ
அல்லது மறைமுகமாகவோ மற்றொருவரை ஊக்குவிப்பது அல்லது செயல்பட வைப்பது, அந்த செயலை செய்வதற்கான
முன்னேற்பாடுகளை அல்லது பயங்கரவாத செயல்களை தூண்டுவது." என ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வரை
தண்டனைக்குரிய குற்றமாக அதனைச் செய்வதற்கான முன்மொழிவாகும். "பயங்கரவாதத்தை புகழ்கின்ற வகையில்
ஒரு அறிக்கையை" வெளியிடுவது அதே போன்ற குற்றத்தைக் கொண்டிருக்கும்.
"புகழ்தல்" என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படவில்லை மற்றும் நோக்கத்தை
நிரூபிப்பதற்கு அவசியம் இல்லை. அந்த அறிக்கை பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அதற்கு தயாரிப்பு
செய்வதற்கு அல்லது தூண்டிவிடுவதற்கு சம்மந்தப்பட்டதா அல்லது உண்மையிலேயே ஏதாவது பயங்கரவாத செயல்
நடைபெற்றதா என்பதை பார்ப்பது "பொறுத்தமற்றது."
"பொதுமக்களில்" எந்தத் தரப்பினர் அதை "அவ்வாறு புரிந்துகொள்ள முடியும்``
என்பதை உறுதிப்படுத்துவது என்பது விளக்கப்படவில்லை.
மூல சட்ட முன்வரைவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்தை
புகழ்வதற்கு, உள்துறை செயலர் ஒரு கட்டளையில் பிரத்தியேகமாய் பட்டியலிட்டிருந்தால் அல்லாமல்
விலக்களிக்கப்படுவதற்கு முன்மொழிவு செய்யப்பட்டிருந்தது ---- இந்த சட்டப்பிரிவை லிபேர்ட்டி
சிவில் உரிமை அமைப்பு "வரலாற்றையே அரசு முன்தணிக்கை
செய்வது" என்று கண்டித்திருந்தது.
இது கைவிடப்பட்டிருக்கிறது. என்றாலும், ஒரு குறிப்பிட்ட தேதி வரையறையில்லாமல்
கடந்தகால நிகழ்ச்சிகளை ''புகழ்வது'', பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பது என்ற விதி இன்னும் செயல்பட்டு
வருகிறது. மற்றும் இன்றைய தினம் பயங்கரவாத நடவடிக்கையை ஊக்குவிப்பதாக சொல்லப்படும் ஒரு சரித்திர
சம்பவம் சம்பந்தமான வாக்கியம் எது என்பது பற்றி உள்துறை செயலர்தான் இன்னும் முடிவு செய்கிறார்.
ஈராக்கை பிரிட்டன் ஆக்கிரமித்ததை எதிர்க்கின்றவர் எவர் மீதும் வெளிநாட்டு
துருப்புக்களின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான ஈராக் மக்களின் உரிமையை ஆதரிப்பவர்கள் மீதும் குற்றம் சாட்டப்படக்
கூடிய வகையில் இந்த மசோதாவின் பிரிவுகள் மிகத்தெளிவில்லாமல் தளர்வோடு விளக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதம்
பற்றி எதுவும் குறிப்பிடப்படாவிட்டால்கூட தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்து மற்றொருவர் ஒரு பயங்கரவாத செயலில்
ஈடுபடுவதற்கு அல்லது பங்கெடுத்துகொள்வதற்கு தாக்கத்தை ஏற்படுத்துமானால் அத்தகைய கருத்தை தெரிவித்தவர்
மீது வழக்கு தாக்கல் செய்வது சாத்தியமானாதாக இருக்கும்.
எந்த ஊடகத்தின் மூலமாவது பயங்கரவாத வெளியீடுகள் பரப்பப்பட்டால் அந்த நடவடிக்கைக்கு
ஒரு உயர்ந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அந்த நடவடிக்கை உண்மையிலேயே செயல்படுத்தப்பட்டிருக்கிறதா?
இல்லையா? என்பதை கருதிப்பாராமல் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு அல்லது முன்னேற்பாடு செய்யப்படுவதற்கு
"தகவல் தருவதில் உதவி" செய்தாலோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சாத்தியம் என்று கருதப்படக்கூடிய
"நேரடியான அல்லது மறைமுகமான ஊக்குவிப்பு அல்லது இதர வகை தூண்டுதலை" தரும் என்று கருதப்படுகின்ற
எல்லா விவரங்களையும் உள்ளடக்குவது பயங்கரவாத பிரசுரம் ஆகும். அத்தகைய வெளியீடுகளில் "மத அல்லது அரை
மத சூழ்நிலையில் வெளியிடப்படுகின்ற தெளிவான அதிகாரபூர்வமான துண்டுப்பிரசுரங்கள்" உள்ளடங்கும்.
இணைய நடவடிக்கையை பொறுத்தவரை ஒரு போலீஸ் அதிகாரி ஒரு முன்னறிவிப்பு
கொடுக்கலாம், அதில் ஒரு அறிக்கை அல்லது கட்டுரை அல்லது ஒரு பதிவேடு "சட்ட விரோதமாக பயங்கரவாதம்
தொடர்பானது" என்று குறிப்பிட்டிருக்கலாம். இந்த முன் அறிவிப்பு கிடைத்து இரண்டு நாட்களுக்குள் தொடர்புடைய
விவரம் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை அல்லது பயங்கரவாதத்திற்கு சம்மந்தம் என இனி கருத முடியாத அளவிற்கு
மாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்று உறுதியளிக்க வேண்டும். அப்படிச் செய்யாதவர்கள் மீது வழக்கு
தொடுக்கப்படலாம்.
பயங்கரவாத செயல்களுக்கான தயாரிப்புகளை செய்யும் குற்றத்திற்கான சட்ட
விளக்கம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது, அதில் பயங்கரவாதத்தை புரிவதற்கான நோக்கம் அல்லது மற்றவர்களுக்கு
அப்படி செய்வதற்கு உதவுவது ஆகிய ''எந்த நடவடிக்கைக்கும் முன்னேற்பாடு செய்வதும் அடங்கும். இதன் பொருள்
என்னவென்றால், பயங்கரவாத செயல்களில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கருதப்படும் எவருக்கும் நிதி
கொடுப்பவரோ அல்லது தங்குவதற்கு இடம் கொடுப்பவரோ ஆயுள் சிறை தண்டனைக்கு உள்ளாக முடியும்.
பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்ற மசோதாவின் முன்வரைவின் விளக்கம்
பிரிட்டனோடு எந்த வகையிலும் தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபிப்பதை சார்ந்திருக்கவில்லை. எந்த பெரிய
வல்லரசு அல்லது ஒடுக்குமுறை ஆட்சிக்கும் எதிராக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்படுகின்ற ஆட்சி அல்லது
வல்லரசிற்கு எதிராக நடைபெறும் எந்த போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிப்பது சட்ட விரோதமான நடவடிக்கை
என்று அறிவிக்கப்படலாம். தங்களது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கின்ற பிரிட்டனில் வாழ்கின்ற
ஈராக்கியர்கள் மட்டுமல்ல, சவூதி அரேபிய அதிருப்தியாளர்களும் செச்சென்யா தேசியவாதிகளும் மற்றும் இதர
பலரும் வழக்கை சந்திக்க வேண்டிவரும்.
பயங்கரவாதத்தோடு தொடர்புடைய எந்த ஆற்றல்களை அல்லது பயங்கரவாத
நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடைய எந்த ''பயிற்சியையும் அல்லது
கட்டளையையும்'' தருகின்ற எவருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இந்த நடவடிக்கையில்
ஒரு "தீங்கைவிளைவிக்கும் பொருளை பயன்படுத்துவது அல்லது தயாரிப்பது, கையாளுவது", ஆகிய நடவடிக்கைகள்
மட்டுமல்லாது, பயங்கரவாத நடவடிக்கையோடு தொடர்புடைய செயல்களில் பயன்படுத்துவதற்கு "ஏற்ற
தொழில்நுட்பம் அல்லது எந்த முறையையும் பயன்படுத்துவதும்" இந்த விதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
உலகில் எந்த இடத்தில் பயங்கரவாத நடவடிக்கை பற்றிய பயிற்சி அல்லது
கட்டளைகள் நடைபெற்றாலும் அந்த இடத்தில் கலந்துகொள்கின்ற தனிநபர்கள் அவர்கள் கட்டளைகளை
பெற்றிருந்தாலும், அல்லது ஒரு பயங்கரவாதக் குற்றம் நடந்திருந்தாலும் அல்லது நடக்காவிட்டாலும், அந்த
இடத்தில் இருந்தார்கள் என்ற காரணத்தினாலேயே அவர்கள் குற்றம் செய்தவர்களாக ஆகிறார்கள்.
ஒரு அணுக்கதிர் வீச்சு அல்லது வெடிக்கின்ற கருவிகள் மற்றும்/அல்லது பொருட்களை
வைத்திருப்பது அல்லது தயாரிப்பது ஒரு குற்றமாகும். அணுக்கரு வசதிக்கு அல்லது அணுக்கரு பொருட்களை ஏற்றிச்
செல்லும் வாகனத்திற்கு சேதம் விளைவிப்பது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாகும். ஒரு அணு நிலையத்திற்கு சேதம்
விளைவிப்பதாக அச்சுறுத்துவது அல்லது ``பாதுகாக்கப்பட்ட`` ஒரு இடத்தில் அத்துமீறி நுழைவது ஒரு கிரிமினல்
குற்றமாகும்.
பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அல்லது ஊட்டி வளர்க்கும் என்று கருதப்படுமானால்
அத்தகைய அமைப்புக்களுக்கு தடை விதிப்பதற்கு இந்த மசோதா உள்துறை அரசு செயலாளரின் அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது.
ஒரு அமைப்பு பயங்கரவாத நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறதா இல்லையா என்பதை கருதிப் பாராமல்
கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ இத்தகைய நடவடிக்கைகளை ''புகழ்கின்ற'' செயலை செய்திருந்தாலும்
அல்லது அதற்கான தயாரிப்புகளை செய்துகொண்டிருந்தாலும் அத்தகைய புகழ்கின்ற நடவடிக்கை வாய்மொழியாக
இருந்தாலும் அல்லது எழுதப்பட்டிருந்தாலும் அத்தகைய அமைப்புகளுக்கு தடை விதிக்க முடியும்.
ஒரு தடை செய்யப்பட்ட குழுவை ஆதரிப்பதாகவோ அல்லது அந்தக் குழுவில்
உறுப்பினராக இருப்பதாகவோ நியாயமான சந்தேகத்திற்கு இடம் தருகின்ற எந்தப் பொருளையும் காட்சிக்கு வைப்பது
அல்லது தனது உடையில் அதை அணிந்துகொள்வது ஒரு குற்றமாகும்.
உள்துறை செயலர் சார்லஸ் கிளார்க் அரசாங்கம் மேலும் 15 குழுக்களுக்கு தடை
விதித்திருப்பதாக அறிவித்தார். ஏற்கனவே 25 வெளிநாட்டு மற்றும் 14 அயர்லாந்து குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஈராக், உஸ்பெகிஸ்தான், லிபியா, பாக்கிஸ்தான், சோமாலியா பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும்
மொரோக்கோவோடு தொடர்புகளை கொண்டிருக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு கிளார்க்கின் அறிவிப்பு
பொருந்தும். ஈராக்கிலிருந்து அமெரிக்க மற்றும் வெளிநாட்டுப் படைகளை விரட்ட வேண்டும் என்ற நோக்கம்
கொண்டு செயல்பட்டுவரும் அன்சார்-அல்-இஸ்லாம் மற்றும் ஜெய்ஸ் அன்சார் அல்-ஷன்னா ஆகிய அமைப்புக்களும் இதில்
அடங்கும்.
"பொது நன்மைக்கு உகந்தது அல்ல" என்று கருதுகின்ற இரட்டை குடியுரிமை பெற்ற
எந்த நபருக்கும் உரிய பிரிட்டிஷ் குடியுரிமையை இரத்து செய்வதற்கு இந்த சட்ட முன்வரைவு உள்துறை அரசு செயலருக்கு
அதிகாரம் அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற அடிப்படையில் நாடு கடத்தலை எதிர்பார்த்துக்கொண்டுள்ள
எவரும் பிரிட்டனிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்தான் தங்கள் வெளியேற்றப்பட்டதற்கான ஆட்சேபனை வழக்குகளை
தாக்கல் செய்ய முடியும்.
Top of
page |