:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
American Enterprise Institute conference
Demoralization grips Iraq war's
ideological architects
அமெரிக்க நிறுவன அமைப்பு மாநாடு
ஈராக் போரின் கருத்தியல் சிற்பிகள் மனச்சோர்வின் பிடியில்
By Bill Van Auken
11 October 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் முன்னணி அரங்கு ஈராக் போர்
என சென்ற வாரம் ஜனாதிபதி புஷ் சித்தரித்ததற்கு முதல் நாள், வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு மாநாடு
நிர்வாகத்தின் முந்திய விருப்பத்தேர்வான மத்திய கிழக்கு நாட்டில் ''ஜனநாயகத்திற்கான'' போராட்டம் என்ற
சாக்குப்போக்கு உடைந்து நொருங்கிவிட்டமை தெளிவானது குறித்து புலம்பியது.
அக்டோபர் 5-ல் நடைபெற்ற அந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில்
அந்த மாநாட்டை ஏற்பாடு செய்தது அமெரிக்க நிறுவன அமைப்பு (AEI)
ஆகும். இந்த வலதுசாரி சிந்தனையாளர் குழுமம் அமெரிக்க போருக்கான பிரதான வேலைக்கு முன்னேற்பாடான
கருத்தியல் ரீதியான அடித்தள வேலையை செய்து முடித்தது மற்றும் அதை ஆரம்பித்தவர்களில் பெரும்பாலானோரை
கொடுத்து உதவியது.
AEI -ல் முன்பு பணியாற்றிய இரண்டு
டசினுக்கு மேற்பட்டவர்களில், நிர்வாகத்தில் சேர்ந்துள்ளோர் துணை ஜனாதிபதி செனி, அவரது மனைவி லின், ஐ.நாவிற்கான
அமெரிக்க தூதர் ஜோன் போல்டன், செனியின் மத்திய கிழக்கு ஆலோசகராக பணியாற்றி வரும் டேவிட் வூர்ம்சர்
மற்றும் பாதுகாப்பு கொள்கை வாரியத்தின் முன்னாள் தலைவர் ரிச்சார்ட் பேர்ல் ஆகியோர் ஆவர்.
2002 அக்டோபரில் ஆரம்பித்து,
AEI ``அதற்கு
அடுத்த நாள்: சதாம் ஹூசேனுக்கு பிந்திய ஈராக்கிற்கான ஒரு திட்டம்`` என்ற தலைப்பில் தொடர்ந்து
வரிசைக்கிரமமாக மாநாடுகளை நடத்தியது. அமெரிக்க படையெடுப்பு தள்ளிவைக்க முடியாதது என்று வாதிடும்
கட்டுரைகளையும் அறிக்கைகளையும் அது வெளியிட்டது மற்றும் ''பாத்திஸ்டுக்களை ஒழித்துக்கட்டுவதன்'' மூலம் அந்த
நாட்டை மீண்டும் நிறுவ வேண்டுமென்றும், அதன் பரந்தகன்ற எண்ணெய் வளங்களை குறிப்பாக, ஈராக்
பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்க வேண்டுமென்றும் வாதிட்டது.
2003 பெப்ரவரியில், படையெடுப்பு நடைபெற்ற நேரத்தில் அந்த அமைப்பின் முன்
புஷ் பேசினார். ''விடுவிக்கப்பட்ட'' ஈராக் மத்திய கிழக்கு முழுவதிலும் ''ஜனநாயகப் புரட்சி'' பரவுவதற்கு
ஊக்கியாக சேவைசெய்யும் என்ற நிகழ்தற்கரிய ''காட்சியை'' எடுத்து வைத்தார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், 100,000-திற்கு மேற்பட்ட ஈராக் மக்களையும்,
ஏறத்தாழ 2,000 அமெரிக்க போர் வீரர்களையும் கொன்றுவிட்ட பின்னர்
AEI-ல் படையெடுப்பிற்கு முன்னரும் அது நடந்த பின்னர்
உடனடியாகவும் நிலவிய மயக்க உணர்வு தற்போது ஆழமான மனச்சோர்வுக்கு இடங்கொடுத்திருக்கிறது.
போரினால் ஏற்பட்ட சாவுகள் மற்றும் மனித துயரம் நவீன பழமைவாதிகளை
தளர்வடையச் செய்யவில்லை, மாறாக வாஷிங்டன் போரை தாங்கிக் கொள்ள இயலாமை மற்றும் அமெரிக்காவின்
முயற்சி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற வளர்ந்து வரும் நம்பிக்கையே அவர்களை தளர்வடைய
செய்துள்ளது.
அவர்களது இந்த நம்பிக்கை அக்டோபர் 15-ல் திட்டமிடப்பட்டுள்ள கருத்தெடுப்பில்
புதியதொரு ஈராக்கிய அரசியலமைப்பை கொண்டு செல்வதற்கான அமெரிக்காவின் உந்துதலை கெட்டியாக்குகின்றது.
இந்த அரசியலமைப்பு ஆக்கிரமிப்பின் விளைபொருள், இறுதி ஆய்வுகளில் அமெரிக்க
துப்பாக்கி முனையில் திணிக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியலமைப்பு நாட்டின் 20 சதவீதத்தினராக வாழும் சுன்னி
சிறுபான்மையினர் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுவிட்ட நிலையில், தங்களின் சொந்த குறுகிய நலன்களில்
செயல்படும் ஷியா மற்றும் குர்திஷ் அரசியல் சக்திகளினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அரசாங்கத்தினால்
வரையப்பட்டிருக்கிறது.
ஆவணத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏதாவது ஏற்படுமானால் அது வெள்ளை
மாளிகைக்கு ஒரு அரசியல் பின்னடைவாக இருக்குமென்று அஞ்சிய புஷ் நிர்வாகம், ஈராக் ஆட்சி விரைவாக அந்த
ஆவணத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அழுத்தங்கள் கொடுத்தது------ஆலோசனைகள் நடத்துவதற்கு ஆறு
மாதங்கள் வரை காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்ற அழைப்பை புறக்கணித்துவிட்டது. தற்போது அமெரிக்க
மற்றும் ஈராக் அதிகாரிகள் ஆகிய இரண்டு தரப்பினருமே நகல் ஆவணம் புறக்கணிக்கப்பட்டுவிடும் என்று
எச்சரிக்கின்றனர். அதற்கு பெரும்பாலும் சுன்னிக்கள் வாழ்கின்ற மூன்று மாகாணங்களான அன்பார், சாலா அல்-தின்
மற்றும் நினேவா ஆகியவற்றில் மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் ''இல்லை'' என்று வாக்களிக்க வேண்டும்
--- அப்படி நடைபெறுமானால் அது குழப்பத்தை உருவாக்கிவிடும்.
என்றாலும், அதை சட்டமாக்குதல் எந்த வகையிலும் குறைவான பேரழிவாக இருக்கும்
என்பது தெளிவாக இல்லை. நகல் ஈராக் அரசை தீவிரமான முறையில் அதிகார பரவலாக்குவதற்கு கோருகிறது.
வடக்கே ஒரு தன்னாட்சி குர்திஸ் பிராந்தியத்திற்கும் தெற்கே ஒரு ஷியாக்கள் பிராந்தியத்திற்குமான அடிப்படைகளை
அமைக்கிறது, நாட்டின் பெரும்பகுதி எண்ணெய் வளத்தை இவர்கள் தங்களுக்கிடையில் கட்டுப்பாட்டில்
வைத்திருப்பார்கள். மத்தியிலுள்ள நிலத்தால் சூழப்பட்ட சுன்னிக்கள், கணிசமான வளங்கள் இல்லாமல் விடப்படுவர்.
எதிர்கால சட்டம் இயற்றுதல் மூலம் அனைத்துவித அடிப்படைப் பிரச்சனைகளான
அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளும், அரசியல் உரிமைகளும் உறுதிசெய்யப்படும் என்று விடப்பட்டிருக்கிறது, அதே
நேரத்தில் இஸ்லாமிய மதச்சட்டம் குறைந்தபட்சம் ஷியாக்களின் தெற்கு மாகாணங்களில் மேலாதிக்கம்
செலுத்துவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
சுன்னி மக்களால் நிராகரிக்கப்படுவது மற்றும் புறக்கணிக்கப்படுவது என்ற இருவகை
நடவடிக்கைகளும் இணைந்த அந்த நடவடிக்கைகளை தடுப்பதற்கு திருத்தங்களை கொண்டு வருவதற்கான தரகராக
அமெரிக்கத் தூதர் ஜல்மே கலீல்ஷாத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நகல்
அரசியலமைப்பு வெளிநாட்டில் அச்சிடப்பட்டு ஈராக்கிற்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும், வாக்களிப்பதற்கு இன்னும்
ஒரு வாரத்திற்கும் குறைவாக இருக்கையில் மக்களில் பெரும்பாலோர் இன்னும் அதைப் பார்க்கவில்லை. அமெரிக்கத்
தூதர் வெற்றி பெறுவாரானால், ஈராக் மக்கள் வாக்களிக்கின்ற ஆவணம் திணிக்கப்பபடும் ஒன்றாக இருக்காது.
அரசியல் சட்டம் ஏற்கப்பட்டுவிடுமானால் அது சுன்னிக்களிடையே கிளர்ச்சியை
தூண்டிவிடும், அதே நேரத்தில் அது புறக்கணிக்கப்படுமானால் குர்துகள் மற்றும் ஷியா பெரும்பான்மையினர் ஆகிய
இரண்டு தரப்பினரிடமுமே பிரிவினைவாதத்தை தூண்டிவிடும். அது எப்படி நடந்தாலும் ஆவணத்தின் எதிர்காலம்
உள்நாட்டுப் போரை தீவிரப்படுத்துகின்ற வகையில் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
சென்ற வாரம் நடைபெற்ற
AEI மாநாட்டில்
முதன்மை பேச்சாளர்களில் இடம்பெற்றவர் கனன் மாக்கியா. இவர் ஈராக்கின் அரசாங்கப் பதவிக்கு காத்திருந்த,
பென்டகன் சிவிலியன் தலைமையினால் வளர்க்கப்பட்ட ஈராக் தேசிய காங்கிரஸ் புலம்பெயர்ந்தோர் குழுவின்
தலைவரான அஹமது சலாபியின் முக்கிய முன்னாள் நண்பர், ஈராக்கில் அமெரிக்கா ''ஆட்சி மாற்றம்''
கொண்டுவரவேண்டும் என்பதை மிக உற்சாகமாக முன்மொழிந்தவர்களின் மாக்கியாவும் ஒருவராவர்.
அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் 2003-ல் பாக்தாத்திலிருந்த சதாம் ஹூசைன்
சிலையை சிதைத்த நேரத்தில் அந்த பிரச்சார காட்சியை காண்பதற்காக தனது ஓவல் அலுவலகத்திற்கு புஷ்ஷால்
அழைக்கப்பட்டிருந்தவர் மாக்கியா.
``தத்தித்தவழும் ஜனநாயகம் சாத்தியம் அதை ஆதரிக்க வேண்டும் என்று நாம்
சொன்னதற்கு பதிலாக, அந்த கனவிற்கு பதிலாக, இப்போது ஒரு தீவிரமான கிளர்ச்சி என்கின்ற யதார்த்தத்தை
நாம் பார்க்கிறோம், அது பயன்படுத்துகின்ற காட்டுமிராண்டிதனமான தந்திரோபாயங்களால் மட்டுமே அதன்
செயல்திறன் போட்டியிடக்கூடியதாக இருக்கிறது. இந்த ஆயுதப் போராட்டம் "ஈராக் என்கின்ற ஒரு நாட்டையே
அப்படி ஒரு நாடு சாத்தியம் என்கிற கருத்தையே சிதைத்துக் கொண்டிருக்கிறது`` என்று அவர் கூறினார்.
நகல் அரசியலமைப்பு குறுங்குழுவாதம், இனவாத சுயநலம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட
"அடிப்படையிலேயே ஸ்திரமற்றதாக்கும் 'ஆவணம்'' என்று அவர் வர்ணித்தார். அவர் மேலும் கூறினார், ``நம்
முன்னால் உள்ள பேரம், அடிப்படையிலேயே செயல்பட முடியாத பேரமாகும். அது சகோதர சண்டையை நோக்கி
வேலைசெய்யும் அளவிற்கு வேலைசெய்வதற்கு அது தயாரிக்கப்பட்டிருக்கிறது."
அந்த மாநாட்டில் பேசியவர்களில் அமெரிக்க குடிமகனும் ஈராக்கின் ஆளும் சபை
என்று தவறாக பெயர் சூட்டப்பட்ட மற்றும் குறைந்த காலம் இருந்த ஈராக்கிய நிர்வாக சபையில் 2003-ம்
ஆண்டு வாஷிங்டனில் ஈராக் தூதராக பணியாற்றிய ரெண்ட் ரஹீமும் ஒருவராவர். மாக்கியாவை போன்று, ரஹீமும்,
பென்டகனின் வலதுசாரி சிவிலியன் தலைமையோடு நெருக்கமாக இருந்து ஈராக்கின் ஆட்சி மாற்றத்திற்கு வலியுறுத்தி
வந்தார்.
புதிய அரசியலமைப்பு ''அரசை கட்டுப்பாடின்றி சுழற்றிவிடக்" கூடிய பலவீனமான
மத்திய அரசாங்கத்தை விட்டுள்ளது என்று அவ்வம்மையார் எச்சரித்தார்.
அமெரிக்க ஆக்கிரமிப்பை தொடர்ந்து நியமிக்கப்படுகின்ற ஒரு அமெரிக்க-சார்பு
அரசாங்கத்தில் தாங்கள் நியமிக்கப்படப்போகிறோம் என்று நம்பி, சலாபியை சுற்றியிருந்த சக்திகள்
காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்ட உணர்வு கொண்டிருப்பதை மாக்கியா மற்றும் ரஹீம் ஆகிய இருவரது கருத்துக்களும்
பிரதிபலிக்கின்றன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. என்றாலும், இறுதியில் வெளிநாடுகளில் இருந்த அமெரிக்க
ஆதரவுக் குழுவிற்கு மக்களிடையே எந்த ஆதரவும் இல்லை என்பதையும் மற்றும் வாஷிங்டன் இதர சக்திகள் மூலம்
பணியாற்ற வேண்டிய கட்டாயத்தையும் உணர்ந்தது.
ஆனால் இந்த உணர்வுகள் ஈராக்கின் ஐந்தாம்படையினருக்கு மட்டும்
மட்டுப்படுத்தப்பட்டதல்ல. AEI-ன்
அதிகாரபூர்வமான கருத்தை அந்த மாநாட்டில் அந்த அமைப்பின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை
ஆய்வுகளுக்கான துணைத்தலைவர் டானியல் பிளெட்கா வெளியிட்டார். அவ்வம்மையார் ஈராக் போர்
தொடங்கப்படுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்ற காலத்தில் அமெரிக்கா ''போரை தேர்வு
செய்வதற்கான'' அரை அதிகாரபூர்வ பேச்சாளராக செயல்பட்டவர்.
பிளெட்கா தனது கருத்துக்களை --மற்றும்
AEI-ன்
கருத்துக்கள் என்று கூறப்படுபவற்றை-- சுருக்கமாக மாநாடு முடிந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் அந்த அமைப்பின்
வலைத் தளத்தில் ஒரு கட்டுரையாக வெளியிட்டிருக்கிறார்.
``வன்முறைகள் நடந்துகொண்டிருக்கின்ற காரணத்தினால் மற்றும் ஈராக்கிலிருந்து
வெளியேறிவிட வேண்டும் என்ற தெளிவானதொரு விருப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், புஷ் நிர்வாக
அதிகாரிகள் குழப்பம் மற்றும் ஒழுங்கீனத்திற்கு நடுவில் ஈராக்கியர்கள் தமது அரசியல் நிகழ்ச்சிபோக்கை
முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்" என்றார் அவர். "மத்திய கிழக்கின் எதிர்காலத்திற்கு
மிக முக்கிய ஆவணமாக ஈராக்கின் அரசியலமைப்பு அவசரகோலத்தில் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக
வாதிடப்படுகிறது. ஆலோசனைகளை தாமதப்படுத்தவும் பிரச்சினைகளூடாக சச்சரவிடவும் அந்த நகலை
உருவாக்கியவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், அமெரிக்க தூதரக அதிகாரிகள் தலையிடலால் தடுத்து
நிறுத்தப்பட்டிருக்கிறது`` என்று அவர் கூறியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு சம்மந்தமான முக்கிய பிரச்னைகளை தீர்த்து வைக்காமல் விட்ட
அந்த ஆவணம் ''தவறுகள் நிறைந்தது'' என பிளெட்கா வர்ணித்தார். "பழைய அரசியலமைப்பிலிருந்து புதிய
அரசியலமைப்பு எப்படி வேறுபடுகின்றது என்ற குறிப்பு" இல்லாமலேயே மிகப்பெரும்பாலான ஈராக்கியர்கள்
வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
அவரது முடிவு புஷ் நிர்வாகத்தின் கொள்கை மீது வலதுசாரி அணியினர் தெரிவிக்கின்ற
தெளிவான கண்டனமான, விட்டுக்கொடுத்தல் மற்றும் பின்வாங்குதலின் ஒன்றாக உள்ளது. ``ஈராக்கிலிருந்து
கிடைத்திருக்கின்ற படிப்பினை தெளிவானது:
அமெரிக்காவின் தாக்குப்பிடிக்கும் வலிமை குறைந்துகொண்டு வருகிறது.``
``புஷ்ஷின் புரட்சி உண்மையிலேயே அதன் ஆற்றலை இழந்துவிட்டது" என்று அவர்
குறிப்பிட்டார். "அமெரிக்க ஜனாதிபதி சோர்ந்து இருக்கலாம்..... ஆனால் அச்சோர்வு புஷ் கொள்கைவழி
என்று இப்பொழுது அறியப்படுவதன் மையக் கருத்துக்கள் நீர்த்துப்போவதில் விளைவை தருமானால் அப்போது புஷ்
2004-ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஏன் விரும்பினார் என்ற கேள்வியை ஒருவர் கட்டாயம்
கேட்பார்`` என்றும் அவ் அம்மையார் குறிப்பிட்டார்.
அமெரிக்க நிறுவன அமைப்பு நிகழ்ச்சிகளானது, புஷ் சென்ற வாரம் பேசிய
வழக்கத்திற்குமாறான உரையிலிருந்து சற்று வேறுபட்டதாக அமைந்திருக்கிறது. அவர் பயங்கரவாத பூச்சாண்டிக்கு
புத்துயிர் கொடுக்க முயன்றிருக்கிறார் மற்றும் ``ஸ்பெயினிலிருந்து இந்தோனேஷியா வரை`` பரந்து விரிந்த
இஸ்லாமிய அடிப்படைவாத சாம்ராஜியம் பற்றி எச்சரித்திருக்கிறார்.``
ஈராக்கின் அமெரிக்க ஆக்கிரமிப்பு பற்றி சென்ற வியாழனன்று புஷ் ஆற்றிய உரையை
குறிப்பிட்டு, "சில ஆய்வாளர்கள் நம்முன் உள்ள பணியை ஆராய்ந்து பார்த்து, தனக்கு தானே தோல்வியை
நாடுகின்ற நம்பிக்கையின்மையை ஏற்கிகிறார்கள். அது நியாயமல்ல" என்று கூறினார். ``ஈராக்கின்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் வலுவானவர்கள் மற்றும் உறுதியானவர்கள் என்று
நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.``
``ஈராக்கில் ஜனநாயகம் நீடித்து நிலைத்திருக்குமா என்பது குறித்து சில
ஆய்வாளர்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அவர்கள் சுதந்திரத்தின் வலிமையையும் ஈர்ப்பையும் குறைத்து
மதிப்பிட்டு வருகிறார்கள்`` என்று அவர் மேலும் தொடர்ந்தார்.
இந்த உரையை படிக்கின்ற எவரும் அமெரிக்க ஜனாதிபதி போரை எதிர்க்கின்ற
மற்றும் அமெரிக்க துருப்புக்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற பெரும்பாலான அமெரிக்க மக்களை
நோக்கி பேசுகிறார் என்று நினைப்பார்க்களானால் அவர்களை மன்னித்துவிடலாம். என்றாலும் உண்மையிலேயே,
அவர் அமெரிக்காவின் நவீன காலனித்துவ திட்டம் ஈராக்கில் வீழ்ச்சியடைந்து கொண்டு வருவதை பார்க்கின்ற மற்றும்
சென்ற ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏன் ஆதரித்தோம் என்று ஆட்சேபனையையும் எழுப்பிக்கொண்டிருக்கின்ற
மிகக்குறுகலான தமது ஆதரவாளர் சபையோரிடம் பேசுகிறார்--- அவரை தேர்ந்தெடுத்த ஏமாற்றமடைந்த
வலதுசாரி ''நவீன பழமைவாத'' ஆதரவாளர்களிடம் பேசுகிறார்.
அவரது கருத்துக்கள் இன்னொரு இலக்கையும் நோக்கிச் செல்கிறது என்பதில் சந்தேகத்திற்கு
இடமில்லை. அது சீருடை அணிந்த பென்டகனின் தலைமை அதிகாரிகள் அவர்கள் இப்போது ஈராக்கில் நடைபெற்று
வருகின்ற ஆக்கிரமிப்பு நீடித்து நிற்க முடியாது என்பதை மிகத் தெளிவாக பெருமளவில் உணர்த்தி வருகின்றனர் மற்றும்
ஈராக்கில் ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' கொன்று குவிக்கின்ற கிளர்ச்சிக்காரர்களைவிட அதிகமான
கிளர்ச்சிக்காரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற தன்னைத்தானே நீடிக்கச் செய்கின்ற ஒரு துணிகர செயல் என
அவர்கள் கருதுகின்றனர்.
குடியரசுக் கட்சியின் வலதுசாரிகளுக்கு உள்ளேயும், இராணுவத்திற்கு உள்ளேயும்,
நிர்வாகம் ஈராக்கில் உருவாகியுள்ள புதைசேற்றில் இருந்து சமாளிக்க தவறிவிட்டது என்ற அதிர்ச்சி புஷ்
நிர்வாகத்தை பிடித்து ஆட்டிக்கொண்டுள்ள ஆழமாகிக் கொண்டுவரும் நெருக்கடியின் ஓர் அங்கமாகும். குடியரசுக்கட்சி
முகாமிற்கு உள்ளேயே, வெள்ளை மாளிகைக்கும் மத வலதுசாரி பிரிவுகளுக்கும், புஷ் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு
ஹரியாட் மியர்ஸை நியமிக்க முன்மொழிவு செய்திருப்பது தொடர்பாக காரசாரமான உட்கட்சி சண்டைகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன.
இதற்கிடையில் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இரண்டு சபைகளான செனட் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்
சபை ஆகியவற்றின் முக்கிய குடியரசுக் கட்சி தலைவர்களையும், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகரையும், பிடித்து
ஆட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த தீவிரமாகிக்கொண்டுவரும் அரசியல் நிலைமுறிவின் அடிப்படையாக அமைந்திருப்பது
ஈராக் போர் தொடர்பாக பொதுமக்களிடையே வளர்ந்துவரும் பெரும் எதிர்ப்பு, சூறாவளி கத்தரினாவுக்கு அழிவுகரமான
பதில்நடவடிக்கைக்கும் மிகப்பெரும்பாலான மக்களது சமூக அந்தஸ்தை பாதிக்கின்ற நெருக்கடியை வளர்க்கின்ற சமூக
மற்றும் வரி விதிப்புக் கொள்கைகளை மேற்கொள்வதற்குமான எதிர்ப்பு ஆகும்.
அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டினருக்குள்ளேயே தன்னம்பிக்கையின் அரசியல்
நெருக்கடியின் ஆழம் பெரும்பாலும் பொதுமக்களது கவனத்திலிருந்து மூடிமறைக்கப்பட்டிருப்பதற்கு காரணம், வாஷிங்டனிலிருந்து
வருகின்ற அதிகாரபூர்வமான அறிவிப்புக்களை எதிரொலிப்பதோடு பெரும்பகுதி மனநிறைவு அடைந்துவிடுகின்ற
நிர்வாகம் மற்றும் வெகுஜன ஊடகங்கள் போல அதே சமூக நலன்களை பேணும் ஜனநாயகக் கட்சியுமாகும்.
Top of page |