World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush picks right-wing crony for Supreme Court

உச்ச நீதிமன்றத்திற்கு தனது வலதுசாரி நெருங்கிய நண்பரை புஷ் தேர்ந்தெடுக்கிறார்

By Patrick Martin
5 October 2005

Back to screen version

அமெரிக்க உச்சநீதிமன்றத்திலிருந்து நீதிபதி Sandra Day O'Connor ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட இடத்தை நிரப்புவதற்கு வெள்ளைமாளிகை வக்கீல் ஹாரியட் மியர்ஸ் நியமிக்கப்பட்டிருப்பது அதிகாரபூர்வமாக வாஷிங்டனில் நிலவுகின்ற உண்மையான அரசியல் உறவுகளை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஒரு பலவீனமான நெருக்கடிகள் நிறைந்த புஷ் நிர்வாக அரசாங்கம் தனது வலதுசாரி செயல் திட்டத்தை ஜனநாயகக் கட்சியின் ஆதரவை நம்பி மட்டுமே செயல்பட முடியும்.

திங்கள் காலை இந்த அறிவிப்பு தெரிவித்த சிலமணி நேரத்திற்குள், கிறிஸ்தவ அடிப்படைவாத குழுக்களும் வலதுசாரி வானொலி உரை தொகுப்பாளர்களும் புஷ்சின் தேர்வு குறித்து வருந்தினர். அதிவலதுசாரி ஒக்லஹோமாவின் டோம் கோபர்ன் மற்றும் கான்சாசை சேர்ந்த சாம் பிரெளன்பேக் போன்ற தீவிர வலதுசாரி செனட்டர்கள் இந்த நியமனம் தொடர்பாக தங்களது ''தீர்ப்பை பின்னர் அறிவிப்பதாக'' தெரிவித்தனர். இதற்கிடையில், செனட்டின் முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரரான சிறுபான்மை தலைவர் ஹாரி ரீட் பகிரங்கமாக திருமதி மியர்சை வரவேற்றார், அவரது நியமனம் ''கருத்தில்கொள்வதற்கு தகுந்த'' ஒன்று என்று குறிப்பிட்டார். சென்ற மாதம் புஷ்சுடன் நடத்திய ஒரு கலந்துரையாடலில் முதலில் திருமதி மியர்சின் பெயரை நீதிபதி நியமனத்திற்கு ஆற்றல் உள்ளவர்களில் ஒருவரென்று தான் முதலில் ஆலோசனை கூறியதாக ரீட் பெருமைப்பட்டார்.

இந்த அறிவிப்பு வந்து ஒரு நாள் கூட முடிவதற்கு முன்னர் அவசர அவசரமாக வெள்ளை மாளிகையில் நிருபர்கள் மாநாட்டை கூட்டிய புஷ் உச்சநீதிமன்றத்திற்கு தமது தேர்வு சரிதான் என்று வாதிட்டார் மற்றும் தனது வலதுசாரி விமர்சகர்களை சமாதானப்படுத்த முயன்றார். மியர்ஸ் கருச்சிதைவு ஒரு பாலினசேர்க்கையாளர்களின் உரிமைகள், தண்டுக்கலம் (Stem Cell) ஆராய்ச்சி மற்றும் அரசையும் மதத்தையும் பிரித்து வைப்பது போன்ற பிரச்சனைகளில் பெரிதும் ஒன்றும் அறியாதவர் என்று கூறினார்.

புஷ் நிர்வாகத்திற்கும் அதன் மதவெறி கொண்ட ஆதரவாளர்களுக்கும் இடையில் இந்த மோதலை தூண்டிவிட்டிருப்பது எது? அது நிச்சயமாக திருமதி மியர்சின் சொந்தக் கருத்துக்கள் அல்ல, அவர் அனைத்து தரப்பு விவகாரங்களையும் பார்த்தால் மிகவும் பழமைவாத எவான்ஞலிகல் கிறிஸ்தவரும் ஒரு பெருநிறுவன வக்கீல் என்ற முறையில் அவர் தனது அனுபவத்தில் பெருவர்த்தக நிறுவனங்களை காப்பாற்றுவதில் ஒரு நம்பகத் தன்மையுள்ளவரும் மற்றும் ஒரு நீண்டகால புஷ் விசுவாசியுமாவார்.

O'Connor இற்கு அடுத்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உச்சநீதிமன்றத்தின் அரசியல் கலவையை மேலும் வலதுசாரி பக்கம் திருப்புவதாக அமையும் அதற்கெல்லாம் மேலாக வர்த்தகத்தில் நெறிமுறைகள் தளர்வு, பாரபட்சத்திற்கு எதிரான சட்டங்களை பலவீனப்படுத்துவது சிவில் உரிமைகளை குறைப்பது, அரசின் போலீஸ் அதிகாரங்களை விரிவுபடுத்துவது மற்றும் அரசியலமைப்பு சவால்களுக்கு எதிராக ஜனாதிபதியின் அதிகாரங்களை தாங்கி நிற்பது போன்ற சிக்கலான பிரச்சனைகளில் ஆகும். (ஜனநாயகக் கட்சிக்காரர்களின் மிதமிஞ்சிய பாராட்டுதலுக்கு அப்பால் O'Connor ஒரு கடுமையான பிற்போக்குவாதி. 2000ல் புஷ்ஷிற்கு எதிரான அல் கோரின் வழக்கில் நீதிபதிகள் சரிசமமாக இரு தரப்பிலும் இருந்த நேரத்தில் அவர் தமது ஆதரவை புஷ்சிற்கு வழங்கி புளோரிடா வாக்குகள் மறு எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து புஷ்சை வெள்ளை மாளிகையில் நியமிப்பதற்கான உச்சநீதிமன்ற தீர்ப்பளிப்பதில் உதவினார்.)

வெள்ளை மாளிகை சட்ட ஆலோசகராக மியர்ஸ் சிறிது காலம் தான் பணியாற்றினார்--- அந்தப் பதவியில் 2004 நவம்பரில் நியமிக்கப்பட்டார், 2005 பிப்ரவரி வரை அவர் பதவி ஏற்றுக் கொள்ளவில்லை அவருக்கு முன்னர் அப்பதவியில் இருந்த ஆல்பேர்ட்டோ கோன்சாலே சட்டமா அதிபராக உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆனால் 2001 ஜனவரியிலிருந்து புஷ்சின் வெள்ளை மாளிகையில் அவர் முக்கிய நிர்வாக பொறுப்பு வகிக்கிறார் மற்றும் போர் செயல்திட்டம், சமூக பிற்போக்கு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் ஆகியவற்றில் தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக்கொண்டார்.

வெள்ளை மாளிகையின் ஒரு அதிகாரியாக சேர்வதற்கு முன்னர் மியர்ஸ் புஷ்சின் தனிப்பட்ட வக்கிலாக பணியாற்றி வந்தார், 1994ல் அவர் டெக்ஸாஸ் கவர்னராக வருவதற்கு உதவினார் மற்றும் டெக்ஸாஸ் சூதாட்ட ஆணைக்குழுவின் தலைவராக 1995 முதல் 1999 வரை புஷ்ஷினால் நியமிக்கப்பட்டார்.

பத்திரிகையில் வந்துள்ள செய்திகளின் படி, டலாசிலுள்ள ஏவான்ஞ்சலிக்கல் கிறிஸ்தவ திருச்சபை மதப்பிரிவை சார்ந்த மியர்ஸ் தன்னை மீண்டும் பிறந்த கிறிஸ்தவர் என்று அழைத்துக் கொள்பவர் மற்றும் கருக்கலைப்பு எதிர்ப்பு குழுக்களுக்கு நன்கொடைகள் கொடுத்திருக்கிறார். டெக்ஸாஸ் வக்கீல்கள் சங்கத் தலைவர் என்ற முறையில் Roe v. Wade வழக்கில் உச்சநீதிமன்றம் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக ஆக்கியதை தேசிய வக்கீல்கள் சங்கம் ஆதரித்து நிற்கும் நிலைப்பாட்டிலிருந்து புரட்டுவதற்கு அவர் முயன்றார். டலாசிலுள்ள ஒரு பாலினகுழுக்களது சிவில் உரிமைகளை தான் எதிர்க்கவில்லை என்று ஒருபாலினச்சேர்க்கை உரிமைகளுக்கான குழுக்களிடம் அவர் சொல்லி வந்தாலும் அவர் ஓரின சேர்க்கைக்கு-எதிரான சட்டத்தை ஆதரித்தார், பின்னர் அது அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

என்றாலும் மியர்ஸ் ஒரு குடியரசுக் கட்சியின் வலதுசாரியோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட ஒரு நீதித்துறை அல்லது அரசியல் பணியாளர் அல்ல. குடியரசுக்கட்சியின் வலதுசாரி அணி கருக்கலைப்பிற்கு எதிரான ஆவேச உணர்வுகளில் ஊறியது ஒரு பால்சேர்க்கை உள்ளவர்களை கண்டாலே வெறுப்பது மற்றும் இனவாதத்தை மெல்லியதாய் மறைத்து செயல்படுவதுமாகும். கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுக்கு உத்வேகத்தை கொடுக்கும் சமூக பிரச்சனைகளில் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரல்ல, எனவே அமெரிக்க மக்கள் மீது தங்களது மதவெறி உணர்வு கொண்ட கருத்துகளை திணிப்பதற்கு புஷ்சின் ஜனாதிபதி பதவிக்காலம் தான் ஒரு தலைசிறந்த கருவி என்று கருதுகின்ற சக்திகள் அவரை அவநம்பிக்கையோடு பார்க்கின்றன.

குடியரசுக் கட்சிக்கு தாங்கள் அளித்து வருகின்ற ஆதரவிற்கும் 2000 மற்றும் 2004 தேர்தல்களில் புஷ்சிற்கு பின்னால் ஒட்டு மொத்தமாக அணிதிரட்டியதற்கும் அரசியல் பரிசு Roe v. Wade வழக்கில் தரப்பட்ட தீர்ப்பை இரத்து செய்வதாக பகிரங்கமாக உறுதியளித்துள்ளவரை உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்படுவதாக கிறிஸ்தவ அடிப்படைவாதக் குழுக்கள் கருதுகின்றன. மாறாக, புஷ் முதலில் ஜோன் ரொபேர்ட்சை நியமித்தார், அவர் மதவாத வலதுசாரிகளின் செயல்திட்டத்தை ஆதரிக்கின்ற நீண்ட நிலைச்சான்று இல்லாத ஒரு பெருநிறுவன வக்கீலாகும். தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் ஹரியட் மியர்ஸ் எந்த வகையான அரசியல் நிலைச்சான்றும் இல்லாத மற்றொரு பெருநிறுவன வக்கீலாகும்.

செனட்டில் இருந்த பாதி ஜனநாயகக் கட்சிக்காரர்களின் ஆதரவோடு ராபர்ட்ஸ் தலைமை நீதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார். மியர்ஸ் அதைவிட பரவலான ஜனநாயகக் கட்சியின் ஆதரவை பெறுவார் என்று தெரிகிறது. நியூயோர்க்கை சேர்ந்த செனட்டர் சார்லஸ் ஸ்கூம்மர் ராபர்ட்ஸ்-க்கு எதிராக வாக்களித்த ஒரு தாராளவாதி அப்போது நிலவிய கருத்துக்களை சுருக்கமாக எடுத்துரைக்கும் போது ''அது மோசமாக இருந்திருக்கும்'' என்றார். ராபர்ட்ஸூக்கு எதிராக வாக்களித்த மற்றொருவரான கலிபோர்னியாவை சேர்ந்த செனட்டர் டியானா பீயன்ஸ்டெய்ன், இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை பாராட்டினார்.

மியர்ஸ் நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு எதையும் தெரிவிக்காதது தீவிர வலதுசாரிகளின் ஆத்திரத்தை தூண்டிவிட்டிருக்கிறது. புஷ் ஜனநாயகக் கட்சிக்காரர்களின் ஆதவை நாடியிருக்கக் கூடாது என்றும் அவர்களது எதிர்ப்பை கிளறிவிட்டிருக்க வேண்டும் என்றும் கிறிஸ்தவ அடிப்படைவாத கருச்சிதைவிற்கு எதிரான மற்றும் இதர வலதுசாரிக்குழுக்களின் பல்வேறு பேச்சாளர்கள் வலியுறுத்திக் கூறினர்.

வலதுசாரிகளின் வானொலி தயாரிப்பாளர் ரஷ் லிம்பாக் ''இந்த நியமனம் ஜனாதிபதி புஷ் பலவீனமாக இருப்பதை காட்டுவதாக நான் நினைக்கிறேன். மேலும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கும் நோக்கிலும், சமாதானப்படுத்தும் நோக்கிலும் இந்த நியமனம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். இது எந்த அளவிற்கு எனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை நான் உங்களுக்கு சொல்ல முடியாது'' என கூறினார். வெள்ளை மாளிகை உடனடியாக துணை ஜனாதிபதி டிக் செனியை லிம்பாக்கின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச்செய்து மியர்ஸ் ஒரு தகுதியான தேர்வு என்று தீவிர வலதுசாரிகளுக்கு உறுதியளித்தது.

நவீன-பழமைவாத Weekly Standard வெளியீட்டாளரான வில்லியம் கிரிஸ்டோல் அதன் வலைத் தளத்தில் ''அரசியலமைப்பு தத்துவவியல் மீதான ஒரு போரிலிருந்து ஜனாதிபதி புஷ் பின்வாங்கிவிட்டார் என்ற முடிவிற்கு வருவதைத் தடுப்பது மிகக்கடினமாகும். மியர்ஸ் ஒரு கண்ணியமான திறமையானவர் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி கீழ்ப்படிந்து விட்டார், அத்துடன் நெருங்கிய நண்பர்களுக்கு ஒத்துழைத்துவிட்டார் என்பதையும் இணைத்து தவிர்க்க முடியாத அளவிற்கு முடிவு செய்கின்ற நிலையை ஏற்படுத்தி விட்டது. நான் மனம் சோர்வடைந்துவிட்டேன்'' என எழுதினார்.

மற்றொரு தீவிரவலதுசாரியான Paul Weyrich சுதந்திர காங்கிரஸ் அறக்கட்டளை தலைவரிடமிருந்து மிக அம்பலப்படுத்தும் கருத்தும் வந்திருக்கிறது. அவர் Los Angeles Times இற்கு பேட்டியளித்த போது ''ஜனநாயகக் கட்சிக்காரர்கள் மிகப் பெரிய தீர்மானிக்கும் போர் நடக்கும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் நாம் அவர்களுக்கு விட்டுக் கொடுக்கப் போகிறோம். தற்போது நாம் பின்னுக்கு உட்கார்ந்து விசாரணைகள் நடப்பதை கவனிக்கப் போகிறோம்'' என குறிப்பிட்டார்.

புஷ்ஷூடைய வெள்ளை மாளிகையின் வெளிப்படையான நெருக்கடியை பத்திரிகை விமர்சனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. ''செனட்டில் ஒரு பெரிய தீர்மானிக்கும் போரை தவிர்ப்பதை பிரதான குறிக்கோளாக கொண்டு இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தோன்றுகிறது மற்றும் இடது மற்றும் வலதுசாரிகளை சேர்ந்த சந்தேகப் பிராணிகள் கூறுவது என்னவென்றால் இந்த நியமனம் ஒரு வலுவான நிலையில் இருந்து அல்ல மாறாக அரசியல் பலவீனத்திலிருந்து வந்திருக்கிறது'' என்று Washington Post குறிப்பிட்டது.

உச்சநீதிமன்றத்தில் காலியாகின்ற ஒரு பதவியை நிரப்புவதற்காக வெள்ளை மாளிகை செய்துள்ள முடிவு ஒரு போரிலிருந்து ஒதுங்கி கொள்கின்ற தன்மையைப் போன்று அமைந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஜோன் போல்டனை ஐக்கிய நாடுகள் சபையின் தூதராக ஜனநாயகக் கட்சியின் எதிப்பையும் மீறி நியமித்த அணுகுமுறையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தோல்வியை தவிர்க்கும் ஒரு நடவடிக்கையாக, அப்போது புஷ் தனது நியமனத்தை திரும்ப பெற்றுக் கொள்வதைவிட ஒரு தற்காலிக நியமனத்தை செய்தார் என New York Times எழுதியது.

மியர்ஸ் தேர்விற்கு அடிப்படையாக அமைந்திருப்பது நெருக்கடி மற்றும் பலவீனம் ஓர் அம்சம் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. பல்வேறு அரசியல் அதிர்ச்சிகளால் புஷ் நிர்வாகம் -----ஈராக் போருக்கு வளர்ந்து வரும் பொதுமக்களது எதிர்ப்பு, சூறாவளி கத்திரினா பேரழிவின் போது நிர்வாகம் வெளிப்படுத்திய திறமைக் குறைவும் அலட்சியப் போக்கு, எண்ணெய் விலைகள் உயர்ந்து கொண்டே வருவது, பொருளாதார நெருக்கடியின் இதர புள்ளி விவரங்கள், சென்றவாரம் நாடாளுமன்றத்தின் முக்கிய நண்பரான கீழ்சபை பெரும்பான்மை தலைவர் ரொம் டீலே மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆகியவையால் நிலை குலைந்து விட்டது.

ஈராக்போரை கண்டித்தவர்களை அவதூறு செய்வதற்காக அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை வெளியிட்டதாக நடைபெற்றுக் கொண்டுள்ள புலன் விசாரணையை துணை ஜனாதிபதி செனியின் தலைமை அலுவலர் ஐ லூயிஸ் லிப்பி மற்றும் வெள்ளைமாளிகை தலைமை உதவியாளர் கால் ரோவ் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்படுவதற்கான சாத்தியக் கூறும் உள்ளது. இந்த வழக்கில் அக்டோபர் 25 சிறப்பு வழக்கு தொடுனர் பட்ரிக் பிஷ்ஹெரால்டுக்கு இறுதிகெடுவாக விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் மிக அடிப்படையான பிரச்னைகள் இதில் சம்மந்தப்பட்டிருக்கின்றன. தாராளவாதிகள் கற்பனைக்கதைகளை உருவாக்கிக்கொண்டிருப்பதற்கு மாறாக அமெரிக்க அரசின் மத்திய கருவிகளில் ஒன்றான உச்சநீதிமன்றத்தின் முதன்மையான வரலாற்றுரீதியான பங்கு, ஆளும் செல்வந்தத்தட்டினரின் தனிச்சலுகைகளையும் செல்வத்தையும் பாதுகாப்பதாகும். அதன் மிகப் பெரும்பாலான வரலாற்றில், உச்ச நீதிமன்றம் மத்திய கூட்டாட்சி அரசாங்கத்தின் ஓர் அங்கமாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. பொது மக்களது செல்வாக்கிலிருந்து வெகுதூரம் தள்ளி நிற்கிறது மற்றும் பெரு நிறுவனங்களின் அதிகாரங்களை நிலைநாட்டுவதில் மிக அதிக நம்பகத் தன்மை கொண்டதாகும்.

இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து கடந்த மூன்று தசாப்தங்களில்தான் உச்சநீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட சீர்திருத்தவாத பங்கை வகித்திருக்கிறது. Brown v. Board of Education மற்றும் Roe v. Wade போன்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மூலம் ஜனநாயக உரிமைகள் விரிவுபடுத்தப்பட்டன. மற்றும் தனியார் நடவடிக்கை மீது அரசியல் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டது. ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகளை கணிசமாக விரிவுபடுத்துவதற்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதற்கு பின்னர் உச்சநீதிமன்றமும் அமெரிக்க ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்தையும் போல் தீவிரமாக வலதுசாரி பக்கம் நகர்ந்து விட்டது.

அப்படியிருந்தும் 1950 களிலும் 1960 களிலும் கொண்டுவரப்பட்ட வரையறுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் பொதுமக்களிடையே உச்சநீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை உயர்த்தியது அதன் மூலம் உச்சநீதிமன்றம் ஜனநாயக உரிமைகளையும் உழைக்கும் மக்களது நலன்களையும் தற்காத்து நிற்பதற்கு பயன்படும் என்ற மாயைகள் உருவாயின.

அமெரிக்க ஆளும் தட்டின் அரசியல் கணிப்புக்களில் அத்தகைய மாயைகள் முக்கிய பங்களிப்பு செய்கின்றன. அந்த மாயைகள் இல்லாதிருக்குமானால் உச்சநீதிமன்றம் மிக அப்பட்டமாக 2000 டிசம்பரில் தலையிட்டு, நாணயமற்ற ஒருசார்பு நடவடிக்கையான, புஷ்சிற்கு ஜனாதிபதி பதவியை தந்திருக்க முடியாது, அத்தகைய ஒரு முடிவை உச்ச நீதிமன்றம் செய்திருக்க முடியாது. அல்கோரும் ஜனநாயகக் கட்சி தலைவர்களும் அத்தகைய முடிவை ஏற்றுக் கொள்வார்கள், ஆனால் ஒட்டு மொத்தமக்கள் அந்த முடிவை ஆராயமல் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் எதிர்கால நோக்கங்களை முன்னெடுக்க வலதுசாரி கருத்தியலாளர்கள் உச்சநீதிமன்றத்துடன் சேர்ந்து இயங்குவதால் வெகுஜனங்களின் கண்களில் நிரந்தரமாக இந்த அமைப்பை மதிப்பிழப்பதற்கும் எதிர்கால அரசியல் மோதல்களில் அதன் அதிகாரம் இல்லாதுபோவதையும் ஒட்டி ஆளும் தட்டின் மிக வலுவான பிரிவுகளை சார்ந்தவர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட அவரது அரசியல் நெருங்கிய நண்பரான ஒரு தனிமனிதரை மிக உயர்ந்த நீதித்துறை பதவிக்கு உயர்த்துவதால் மியர்ஸின் நியமனம் உச்சநீதிமன்றத்தை ஒரு வேறுபட்ட வழியில் கீழிறக்க செய்கின்றது. (வெள்ளை மாளிகை முன்னாள் உரை எழுத்தாளரும் மியர்சின் நியமனத்தை கண்டிக்கும் குடியரசுக் கட்சியினருமான David Frum தந்துள்ள தகவலின்படி மியர்ஸ் அவரிடம் ஒரு முறை பேசும் போது ''ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் இது வரை அவர் சந்திக்காத மிக சிறப்பான மனிதர்'' என்று கூறியிருக்கிறார்). தனிப்பட்ட முறையில் தனக்கு உதவியாளராக பணியாற்றிய ஒருவரை அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வாழ்நாள் முழுவதும் பணியாற்றுகின்ற ஒரு பதவியில் நியமித்திருப்பது இதுவரை நடைபெற்றிராத ஒரு செயலாகும்.

இந்த வகையில், மியர்ஸ் நியமனம் புஷ் நிர்வாகம் எந்தளவிற்கு தனிமைப்படுத்தப்பட்ட பெருமளவில் குறுகலாகிக் கொண்டு கூண்டுள்குள் மூடப்பட்டுவிட்ட நிலைக்கு வந்து விட்டது என்பதை காட்டுகிறது, அது ஒரு அரசாங்கம் என்பதைவிட அதிகமாக ஒரு நீதிமன்ற சூழ்ச்சி குழுவைப்போல் தோன்றுகிறது. வெள்ளை மாளிகை முன்னாள் உதவியாளர்கள் தற்போது வெளியுறவுத்துறையை (கொண்டலிசா ரைஸ்) நீதித்துறையை (ஆல்பேர்ட்டோ கோன்சாலே) மற்றும் கல்வித்துறையை (மார்கரேட் ஸ்பெல்லிங்) போன்றவற்றை நடத்துகின்றனர். மற்றொரு பெரிய துறையான சுகாதாரம் மற்றும் மனித வளத்துறையின் செயலாளரான மார்க் மெக்கல்லன் வெள்ளை மாளிகை பேச்சாளரான ஸ்கொட் மெக்கல்லனின் சகோதரராவார்.

இப்படி தனக்கு நெருங்கிய நண்பர்களுக்கு பதவி கொடுப்பது தீவிர வலதுசாரி Wall Street Journal போன்ற அமைப்புக்களையே நின்று நிதானித்து செயல்பட வைத்திருக்கிறது. அது வெளியிட்டுள்ள ஒரு தலையங்க ஒரு கட்டுரையில் மியர்ஸ் நியமனத்தை பற்றிய உடன்பாடியின்மையை வெளிப்படுத்தியிருக்கிறது மற்றும் தலையங்க பக்கக் கட்டுரையாளர் தோலுரித்துக்காட்டியுள்ளார். அவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு நெருங்கிய நண்பரை நியமிப்பது ஒரு பதவிநீக்க விசாரணை தாக்குதலுக்கு அதிகாரமளிக்கிறது என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் ''உச்சநீதிமன்றத்தில் கிளிண்டன் மீது பதவிநீக்க விசாரணைகள் நடைபெற்ற நேரத்தில் மிக திறமையாக வாதாடிய வெள்ளை மாளிகை துணை சட்ட ஆலோசகர் செரில் மில்ஸ்ஸை உச்ச நீதிமன்றத்திற்கு கிளிண்டன் நியமித்திருப்பாரானால் அப்போது குடியரசுக் கட்சிக்காரர்களின் கருத்து எதுவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்'' என கூறியிருக்கிறார்.

பதவி நீக்க விசாரணை பற்றி குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் இல்லாதது அல்ல. புஷ் நிர்வாகம் எண்ணிறைந்த குற்றங்களை புரிந்திருக்கிறது -ஆப்கனிஸ்தானிலும் ஈராக்கிலும் அதன் சட்ட விரோதமான போர்களில் மட்டுமல்லாமல் 2001 செப்டம்பர் ''பயங்கரவாத தாக்குதல்களுக்கு'' முன்னர் நடைபெற்ற சம்பவங்களில் அரசாங்கம் உடந்தையாக இருந்திருக்கக் கூடும் என்பதை மூடி மறைப்பதிலும். ஆக வெள்ளை மாளிகை விசுவாசி ஒருவரை உச்ச நீதிமன்றத்தில் நியமிப்பது ஒரு நடைமுறை மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக இருக்கக்கூடும். அமெரிக்காவில் அம்பலமாகிக் கொண்டு வரும் அரசியல் நெருக்கடி முற்றி அது ஒரு இறுதிக் கட்டத்திற்கு வருகின்றபோது அப்படி நடப்பதற்கு சாத்தியக்கூறு உண்டு. அப்போது நடப்பு அல்லது முன்னாள் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் மீது சட்டபூர்வமான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றங்களில் வரும்போது அமெரிக்காவின் மிக உயர்ந்த நீதிமன்றத்தில் தனது பையில் ஒரு வாக்கு இருக்கிறது என்பது புஷ்ஷிற்கு தெரியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved