World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq's constitutional referendum makes a mockery of democracy

ஜனநாயகத்தை ஒரு எள்ளி நகையாடும் ஈராக் அரசியலமைப்பின் கருத்தெடுப்பு

By Peter Symonds
6 October 2005

Use this version to print | Send this link by email | Email the author

அக்டோபர் 15-ல் நடைபெறவிருக்கும் ஈராக்கின் நகல் அரசியலமைப்பின் மீதான கருத்தெடுப்பு ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது. சென்ற ஞாயிறன்று, அமெரிக்க ஆதரவு ஆளும் கூட்டணியை சார்ந்த குர்திஸ் மற்றும் ஷியைட் அடிப்படைவாதக் கட்சிகள் தங்களுக்கு சாதகமான ஒரு முடிவை உத்திரவாதம் செய்யும் வகையில் நாட்டின் தேர்தல் சட்டங்களை திருத்தம் செய்துள்ளார்கள்.

ஆரம்பத்தில் குர்து கட்சிகளின் ஆதரவை உறுதி செய்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட, 2003-ல் அமெரிக்க அதிகாரிகள் வகுத்த இமைருவு சட்டத்தின்படி, அதன் மூன்று மாகாணங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அந்த கருத்தெடுப்பில் மக்கள் இல்லை என்று வாக்களிப்பார்களானால் அந்த கருத்தெடுப்பு தோல்வியடைந்து விடும். சுன்னி அமைப்புக்களும் கட்சிகளும் தங்களது ஆதரவாளர்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டு நகல் அரசியல் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு உற்சாக மூட்டி வருகின்றனர், அதன் மூலம் அந்த ஆவணத்தை புறக்கணிக்கின்ற சாத்தியத்தை உருவாக்குவதற்கு முயன்று வருகிறார்கள்.

அத்தகையதொரு முடிவு பாக்தாத்தில் இருக்கின்ற ஆட்சிக்கு மட்டுமே ஒரு பேரழிவல்ல, கருத்தெடுப்பு மூலமும் டிசம்பர் நடுவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள தேசிய தேர்தல்கள் மூலமும் தனது ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக ஆக்குவதற்கு முயன்று வருகின்ற புஷ் நிர்வாகத்திற்கும் ஒரு பேரழிவாகும். ஒரு தோல்வியின் சம்பவத்தில், இடைமருவு சட்டத்தை பின்பற்ற வேண்டுமென்றால், அது திரும்பவும் தொடங்கிய இடத்திற்கே வருவதாக அமைந்துவிடும். புதிய தேர்தல்கள், ஒரு புதிய அரசாங்கம், திரும்பவும் எழுதப்பட்ட ஒரு அரசியலமைப்பு மற்றும் மற்றொரு கருத்தெடுப்பு அதில் இது ஏற்கப்படுமா என்பது நிச்சயமற்றதாக இருக்கும்.

லண்டன் கிங் கல்லூரி பாதுகாப்புத்துறை ஆய்வாளரான மார்டின் நவையாஸ் ராய்ட்டர்சுக்கு தந்திருக்கின்ற கருத்துக்கள் வருமாறு: ``இந்த கருத்தெடுப்பு புறக்கணிக்கப்படும் என்ற உண்மையின் விளைவுகள் பெரியளவானவை, நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவிற்கு படு பயங்கரமானவை. இந்த கருத்தெடுப்பு புறக்கணிக்கப்படுமானால் ஒட்டு மொத்த அரசியல் நிகழ்ச்சி போக்கையும் வெளிப்படையாக புறக்கணிப்பதாகும். அது தோல்வியடைவதற்கு அனுமதிக்க முடியாது`.

ஈராக் தேசிய சபை மிக அப்பட்டமாக கருத்தெடுப்பை மோசடி செய்து, வேண்டும் வாக்கை ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. திருத்தப்பட்ட விதிகளின் கீழ், மூன்று மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வாக்களித்தால்தான் கருத்தெடுப்பில் புறக்கணிப்பு செய்ய முடியும். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், வாக்குப்பதிவு 67 சதவீதம் அல்லது மூன்றில் இரண்டு பகுதியினர் என்ற அளவிற்கு இல்லாவிட்டால் நகல் அரசியலமைப்பை தோற்கடித்துவிட முடியாது. இதில் வேடிக்கை என்னவென்றால், அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதற்கு அதே சட்டவிளக்கம் பொருந்தாது, வாக்களிப்பவர்களில் சாதாரண பெரும்பான்மையினர் மட்டும் வாக்களித்தால் போதும்.

இந்த மாற்றங்களை அமைதியாக முன்னெடுத்துச் சென்று விட அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் இருப்பினும், சுன்னித் தலைவர்கள் ஆத்திரத்துடன் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றும் இந்த திருத்தங்கள் பினவாங்கப்படும் வரை ஒரு புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். சுன்னி வாக்குப்பதிவு ஒரு குறைந்த அளவிற்கு இருக்குமானால் அது மேலும் இந்த வாக்குப்பதிவின் சட்டபூர்வமான தன்மையை சீர்குலைத்துவிடும் என்று பயந்து ஐ.நா. மற்றும் அமெரிக்க அதிகாரிகள் புதிய விதிகளை விமர்சித்தனர். இதன் விளைவாக, தேசிய சபை நேற்று இந்த திருத்தங்களை இரத்துச் செய்வதற்கு வாக்களித்தது.

சுன்னி வாக்கை பிளவுபடுத்துவதற்கு ஒரு பேரத்தை முன்னின்று முடுக்கிவிட்ட அமெரிக்க தூதர் ஜல்மே கலீல்ஷாத்தால் மேற்கொள்ளப்பட்ட திரைமறைவு காட்சிகளுக்கான முயற்சிகளை தடம்புரள செய்ய இந்த ஆரவாரம் அச்சுறுத்தியது. நகல் அரசியலமைப்பில் கண்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை சுன்னி அமைப்புக்கள் எதிர்த்து வருகின்றன, அவை எண்ணெய் வளம்மிக்க வடக்கு குர்து பகுதியிலும் மற்றும் ஷியாக்கள் நிறைந்த தெற்குப் பகுதியிலும் எண்ணெய் வருவாய்கள் மற்றும் பாதுகாப்புப்படைகள் உட்பட விரிவான அதிகாரங்களை கொண்ட பிராந்திய அரசாங்கங்களை ஏற்படுத்த வகை செய்திருக்கிறது. பெரும்பாலும் சுன்னிகள் வாழ்கின்ற மத்திய மற்றும் மேற்கு மாகாணங்களில் வளங்களும் செல்வாக்கும் இருக்காது.

வாஷிங்டன் போஸ்டின் ஒரு கட்டுரையின்படி, சுன்னிகளின் கோரிக்கைகளை ஏற்று அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு சம்மதிக்குமாறு குர்திஸ் மற்றும் ஷியைட் தலைவர்களை இணங்க வைப்பதற்கு கலீல்ஷாத் முயன்று வருகிறார். ஆளுகின்ற கூட்டணி திட்டமிட்ட கூட்டாட்சி கட்டமைப்பில் எந்த மாற்றங்களையும் செய்வது குறித்து விவாதிக்க மறுத்துவிட்ட பின்னர் இன்றுவரை இது சம்மந்தமான பேச்சு வார்த்தைகள் முடங்கிக் கிடக்கின்றன. ``பரஸ்பர கருத்து ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு உதவுகின்ற மாற்றங்களை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளை மாற்றுவதற்கு நாங்கள் உடன்படுவதற்கு எந்தவிதமான வழியும் இல்லை`` என்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுகின்ற ஷியைட் தலைவர் அலி டேபாக் அறிவித்தார்.

ஈராக்கில் ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கு மற்றொரு அடியை எடுத்து வைப்பதுதான் கருத்தெடுப்பு என்ற புஷ் நிர்வாகத்தின் கூற்றை எள்ளி நகையாடுகின்ற வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 1,40,000-திற்கு மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் அங்கிருப்பதும் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களுக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் எத்தகைய ஜனநாயக வாக்குப்பதிவும் நடைபெற இயலாத ஒன்றாக ஆக்கிவிட்டது.

மேற்கு அன்பார் மாகாணத்தில் அமெரிக்க இராணுவம் பெரிய தாக்குதல்களை நடத்தி வருகிறது, அங்கு மக்களில் மிகப் பெரும்பாலோர் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்பவர்கள். சுமார் 2,500 அமெரிக்கத் துருப்புக்கள், ஈராக் படைகளுடன் சேர்ந்து, ஹதீத்தா, ஹக்லானியா மற்றும் பர்வானா நகரங்களில் ஆப்ரேஷன் ரிவர் கேட் என்ற நடவடிக்கையின் ஓர் அங்கமாக திடீர் என்று புகுந்தன.

அதிகாலையில் அமெரிக்க பேர் விமானங்களும் ஹெலிகாப்டர் குண்டு வீச்சு விமானங்களும் அந்த நகரங்களின் யுப்ரடீஸ் நதி மீதான பாலங்களை தகர்த்தன மற்றும் மின்சாரத்தை துண்டித்தன. அமெரிக்காவின் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் மாடிகளின் உச்சிகளில் சுடுவதற்கு தயாராக நின்றனர், அந்த நகரங்களின் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே தங்கியிருக்குமாறு ஒலி பெருக்கிகளில் அறிவிப்புக்கள் செய்யப்பட்டன, அப்போது இராணுவ வீரர் குழுக்கள் கதவுகளை உடைத்துக் கொண்டு தன்னிச்சையாக ''பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை'' கைது செய்தன.

சனிக்கிழமையன்று ''இரும்புக்கரம்'' என்று பெயரிடப்பட்ட அதேபோன்ற தாக்குதல் சிரியா எல்லையருகிலுள்ள ருமனா, காரபில்லா மற்றும் சாதா நகரங்களில் தொடங்கியது. சான் பிரான்சிஸ்கோ குரோனிக்கல் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை கரபில்லாவில் கடுமையான சண்டை நடைபெற்றதாக வர்ணித்திருக்கிறது, அதில் 11 வயது சிறுவர்கள் கூட எதிர்ப்பு போராளிகளுக்கு உதவுகின்ற வகையில் அமெரிக்க துருப்புக்கள் இருக்கின்ற இடங்களை சுட்டிக்காட்டினர். கிளர்ச்சிக்காரர்கள் தங்கியிருப்பதாக கூறப்படும் ஒரு கட்டிடத்தின் மீது அமெரிக்க டாங்கி சுட்ட போது குறைந்த பட்சம் 5 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.

திங்களன்று வெளியிடப்பட்ட நியூ யோர்க் டைம்ஸ் செய்தி ஒன்று, ராவா நகரை கட்டுப்படுத்த அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் முயற்சிகளை விவரித்திருக்கிறது, அமெரிக்க ஆக்கிரமிற்கு பரவலாக நிலவும் விரோத போக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 20,000 மக்களை கொண்ட அந்த நகரம் ''பாத்திஸ்ட்டுகளின் ஒரு கோட்டை'', என்று வர்ணித்துள்ளது, அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாக அந்த மக்களிடமிருந்து ''ஒத்துழைப்பு எதுவும் கிடைக்கவில்லை'' என்று ஒப்புக் கொண்டனர். ஜூலை கடைசியிலிருந்து, அமெரிக்கப் படைகள் இரண்டு டசின் சாலையோரத்து குண்டு வீச்சுகளாலும் எட்டு தற்கொலை கார் குண்டு வெடிப்புக்களாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன மற்றும் அவற்றிற்கு பதிலடியாக விமானப்படை தாக்குதல்கள் மேலோட்டமாக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் மற்றும் வீடுவீடாக சோதனைகளை நடத்தினர்.

கடைசியாக அந்த நகரில் திடீர் சோதனைகள் நடத்திய பின்னர், அமெரிக்க கேர்னல் ஸ்டீபன் டேவிஸ்சும் ஈராக் சரிநிகர் கேர்ணல் யாஸரும் 300 பேர் அடங்கிய ஒரு கூட்டத்தில் பேசினர், அவர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனைகள் மற்றும் முறைகேடான கைதுகள் குறித்தும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். கருத்தெடுப்பில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு யாஸர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். அமெரிக்க துருப்புக்கள் மீது தாக்குதல்கள் நீடிக்குமானால் அந்த நகரத்து மக்கள் மேலும் பதிலடி தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்று டேவிஸ் கடுமையாக எச்சரித்தார். ``உங்களில் சிலர் ஹெலிகாப்டர்கள் தாக்குதல்கள் நடத்துவதை பற்றியும் அமெரிக்க தளத்திலிருந்து பீரங்கிகள் சுடுவதைப்பற்றியும் கவலைப்படுகிறீர்கள். நான் இதை உங்களுக்கு சொல்கிறேன்: அவை சமாதானத்தின் ஒலிகள்`` என்று அவர் அறிவித்தார்.

அரசியல் நிச்சயமற்ற நிலை

''வெளிநாட்டு பயங்கரவாதிகளிடமிருந்து'' உள்ளூர் மக்களை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதற்கு பதிலாக இந்த அமெரிக்க நடவடிக்கைகளின் குறிக்கோள் அமெரிக்க துருப்புக்கள் அங்கிருப்பதை எதிர்க்கின்ற மக்களை மிரட்டி பயங்கரத்தை கண்டு அஞ்சுகின்ற நிலையை உருவாக்கத்தான்.

ஆக்கிரமிப்பின் கீழ் தங்களது சொந்த செல்வாக்கை பெருக்கிக்கொள்ள பொது மக்களது உணர்வுகளை சுரண்டிக்கொள்ள முயலுகின்ற சுன்னித் தலைவர்கள் அமெரிக்க தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டால் ஒரு புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர். ``அமெரிக்கப் படைகள் தொடர்ந்து சுன்னி நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டு இருக்குமானால், இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் நாங்கள் கருத்தெடுப்பை புறக்கணிக்கின்ற ஒரு அறிவிப்பை வெளியிடுவோம்`` என்று சுன்னி தேசிய பேச்சுவார்த்தைகள் குழுவைச் சேர்ந்த ஷாலே அல்-முத்தலக் நேற்று குறிப்பிட்டார்.

அரசியல் நகல் சட்டத்தை வேண்டும் என்று வாக்குப் பதிவை நடத்துவதற்கு அமெரிக்கா ராஜதந்திர மற்றும் இராணுவ முயற்சிகளை மேற்கொண்டிருப்பினும் கருத்தெடுப்பின் முடிவு நிச்சயமற்றதாக இருக்கிறது. ஜனவரியில் தேசிய தேர்தல்களை புறக்கணித்த பின்னர், சுன்னி அமைப்புக்கள் தனது ஆதரவாளர்களிடையே விரிவான முறையில் பிரசாரம் செய்து தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டு அரசியல் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். நியூயோர்க் டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி, அமெரிக்க அதிகாரிகளும் தனியார் அமைப்புக்களும் கூறுவது சில சுன்னி பகுதிகளில் வாக்காளர் பதிவு 80 சதவீதத்தையும் தற்போது தாண்டிவிட்டது. ``அன்பாரை இழந்துவிடுவதில் எவருக்கும் வியப்பு இருக்க முடியாது மற்றும் மற்றொரு மாகாணமும் அவ்வாறு இழக்கப்படுகின்ற நிலை ஏற்படலாம்`` என்று ஒரு பென்டகன் அதிகாரி அந்த செய்தி பத்திரிகையிடம் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டார்: ``ஆனால் நாங்கள் மூன்று மாகாணங்களை இழக்கப் போவதில்லை``.

அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது சம்மந்தமான ஒட்டு மொத்த நடைமுறையும் சட்ட விரோதமானது என்று கருதப்படும். ஈராக்கில் அமெரிக்காவின் மூத்த தளபதியாக பணியாற்றி வருகின்ற ஜெனரல் ஜோர்ஜ் கேசி அமெரிக்க நாடாளுமன்றத்தில் சென்ற வாரம் கருத்தெடுப்பு நிறைவேறிவிடும் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டார். என்றாலும், வாக்குப்பதிவிற்கு பின் அரசியல் நிலவரம் மோசமடையுமா என்று கேட்கப்பட்டதற்கு அவர் கூறினார்: ``அதற்கும் முழுமையான சாத்தியக் கூறு உள்ளது என்று நினைக்கிறேன். இதன் மூலம், நான் என்ன பொருள் கொள்கிறேன் என்றால் இதை நாம் பார்க்கிற நேரத்தில் அரசியலமைப்பை ஒரு தேசிய ஒப்பந்தம் என்று பார்க்கிறோம் அந்த கண்ணோட்டம் குறிப்பாக சுன்னிகளிடையே இல்லை``.

அமெரிக்க மத்திய தலைமையின் தலைவரான ஜெனரல் ஜோன் அபிஜயித் நாடாளுமன்ற விசாரணையில் கலந்து கொண்டு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தார்: ``அரசியல் சட்டத்திற்கு ஆதரவாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது என்றால் அதன் பொருள் நாம் அமைதியையும் செழிப்பையும் நோக்கிச் செல்கிறோம் என்பதல்ல. சிறிது காலத்திற்கு ஈராக் ஒரு சங்கடமான பாதுகாப்பு சூழ்நிலை கொண்டதாக இருக்கும்.``

இரண்டு தளபதிகளுமே கோடிட்டுக் காட்டியது என்னவென்றால் இராணுவம் 22 வயது இளைஞர்கள் எதிர்கொள்ளும் இருதலைக்கொள்ளி எறும்பு போன்ற நிலையை எதிர்கொண்டிருக்கிறது என்ற நிலையை சுற்றி வளைத்து சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் சாட்சியம் அளிக்கும்போது ஜெனரல் கேசி சொன்னது என்னவென்றால் ``கிளர்ச்சிக்கு தூபம் போடுகிற அம்சங்களில் ஒன்றை நீக்கிவிடுவதற்கு அமெரிக்க துருப்புக்களை குறைக்க வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் கூட்டணிப்படைகள் ஒரு ஆக்கிரமிப்புப் படை என்பது கிளர்ச்சியை உசுப்பி விடுகின்ற ஓர் அம்சமாகும்.`` ஆனால் இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் அவர் துருப்புக்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அடுத்த ஆண்டு நடுவில் குறைக்கப்படும் என்று ஊகங்களை வெளியிட்டதை குறைத்தே மதிப்பிட்டார் ''நிச்சயமற்ற நிலை'' பெருகிக் கொண்டு வருகிற ஒரு கால கட்டத்தில் அதை அவ்வளவு ''விரைவாக சொல்லிவிட முடியாது'' என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க போர்வீரர்களுக்கு பதிலாக ஈராக் துருப்புக்களையும் போலீசையும் பயிற்றுவிப்பதற்கான முயற்சிகள் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருப்பதாக கேசி ஒப்புக்கொண்டார். ஈராக் பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கை கணிசமானது - சுமார் 192,000------ஆனால் வெகுசிலருக்குத்தான் கேசி குறிப்பிட்டதைப் போல் ``சுதந்திரமாக செயல்படுகின்ற திறமை'' உள்ளது. அமெரிக்கா பயிற்றுவித்த 120 ஈராக் இராணுவ மற்றும் போலீஸ் படை பிரிவுகள் தான் அமெரிக்கப்படைகள் உதவிக்கு வராமல் பணியாற்றும் திறன் கொண்டது. இத்தகைய படைப்பிரிவுகளின் எண்ணிக்கை ஜூலை மாதம் மூன்றாகத் தான் இருந்தது.

இதற்கான காரணத்தை ஆராய்வது கடினமல்ல. மிகப் பெரும்பாலானோர் பாதுகாப்புப்படைகளில் சேர்ந்திருப்பது, அதுவும் கிடைக்கின்ற வெகுசில வேலை வாய்ப்புக்களில் ஒன்று என்பதால்தான். உண்மையிலேயே உறுப்பினர்காளாக இல்லாவிட்டாலும் ஈராக் இராணுவத்தில் சேர்ந்துள்ள பலர் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சி அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடந்து வருவதில் அனுதாபம் கொண்டவர்கள் மற்றும் இதர ஈராக்கியர்களோடு போர் புரிய விரும்பவில்லை. அதே நேரத்தில், அவர்கள் பரவலாக அமெரிக்காவின் கைக்கூலிகள் என்று கருதப்பட்டு வருவதுடன் கிளர்ச்சிக்காரர்கள் நடத்துகின்ற தாக்குதல்களில் குறி வைத்து அவர்கள் தாக்கப்படுகிறார்கள். தங்களது அமெரிக்க இராணுவ ''ஆலோசகர்கள்'' தங்களை போரில் உந்தித் தள்ளி விடுகின்ற வரை ஈராக் போர் வீரர்களில் பெரும் பாலானவர்கள் போர் புரிய விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை.

அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பு ஈராக் மக்களுக்கு ஒரு தீக்கனவையும் அமெரிக்க துருப்புக்களுக்கு ஒரு புதை சேற்றையும் உருவாக்கிவிட்டது. அதன் நோக்கம் ஈராக் மக்களுக்கு அமைதியையும், ஜனநாயகத்தையும் ஒருபோதும் கொண்டு வருவதாக இருந்ததில்லை, ஆனால் நாட்டை அடிமைப்படுத்தி அதன் பரந்த எண்ணெய் இருப்புக்களை மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய அபிலாசைகளின் ஓர் அங்கமாக மாற்றுவதுதான். தனது குறிக்கோளை கொண்டு செலுத்துவதற்காக வாஷிங்டன் மிகக் கொடூரமான ஒடுக்குமுறைகளை பயன்படுத்தி வருகிறது என்ற உண்மையை அக்டோபர் 15-ல் நடக்கவிருக்கும் மோசடி கருத்தெடுப்பு மூடி மறைத்துவிட முடியாது.

Top of page