WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
கிழக்கு ஐரோப்பா
Bulgaria: grand coalition to form after
weeks of wrangling
பல்கேரியா: வாரக்கணக்கான தகராறுகளுக்கு பின் ஒரு பாரிய கூட்டணி அமைகிறது
By Markus Salzmann
1 October 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
வாரக்கணக்கில் தகராறுகளுக்கு பின்னர் பல்கேரியாவில் அடுத்த அரசாங்கம் ஒரு பாரிய
கூட்டணியை அமைக்கவிருக்கிறது. இந்த கூட்டணி பல்கேரியா சோசலிஸ்ட் கட்சி
(BSP), துருக்கிய
சிறுபான்மைக் கட்சி (DPS)
மற்றும் முன்னாள் மன்னர் இரண்டாவது சிமியோனின் தாராளவாத கட்சி
(NDSW)
ஆகியவை சோபியாவில் (Sofia)
ஆட்சி அதிகாரத்திற்கு வர முயன்று வருகின்றன. அரசாங்க தலைவரான
Sergej Stanischew
பல்கேரியா சோசலிஸ்ட் கட்சியினராவார்.
ஜூன் தேர்தலுக்கு பின்னர் இந்த பால்கன் அரசு பல்கேரிய சோசலிஸ்ட் கட்சி
பலமுறை ஒரு நிர்வாகத்தை அமைக்க மேற்கொண்ட முயற்சி பல்கேரியாவில்
நாடாளுமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து பல வாரங்கள் ஒரு அரசாங்கம் இல்லாமல் இருந்து வருகிறது.
பல்கேரியா சோசலிஸ்ட் கட்சி ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து உருவானதாகும்.
இது ஏழு சிறிய கட்சிகளோடு ஒரு தேர்தல் கூட்டணி அமைத்துள்ளதுடன் 31 சதவீத வாக்குகளை பெற்று அதன் மூலம்
நாடாளுமன்ற பிரிவில் மிக சக்திவாய்ந்த நிலைக்கு வந்திருக்கிறது. இதில் மூன்றாவது சக்திவாய்ந்த கட்சியாக
வந்திருக்கும் துருக்கிய சிறுபான்மை கட்சியுடன் ஒரு கூட்டணி சேர்வதற்கு தொடக்கத்திலிருந்தே அது முயன்று வந்தது
மற்றும் தாராளவாத கட்சியையும் அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளவும் விரும்பியது.
தாராளவாத கட்சியின் முன்னாள் அரசாங்கத் தலைவரும் இன்னும் ''ஜார் -
சிமியோன்II''
என்ற பட்டத்தையே விரும்பும் சிமியோன் சாக்சே-கோபர்க் கோத்தா நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற
தேர்தல்களோடு ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 20 சதவீத வாக்குகளை இழந்து விட்டார். இந்த இழப்புக்களை
கருத்தில் கொண்டு, சிமியோன் புதிய அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொள்ள முதலில் தயங்கினார்,
பல்கேரியா சோசலிஸ்ட் கட்சி
தலைமையிலான ஒரு அமைச்சரவையில் தான் சேரப்போவதில்லை
என்று கூறினார். தன்னை பிரதமாராக்க ஒப்புக் கொண்டால்தான் ஒரு மகத்தான கூட்டணி அமைக்கப்படுவதற்கு
தான் சம்மதிக்க முடியும் என்று இறுதியாக அவர் குறிப்பிட்டார். ஆனால் பல்கேரியா சோசலிஸ்ட் கட்சி தனது
சொந்தக் கட்சிக்காரர் செர்கேய் ஸ்டானிசூவை அரசாங்க தலைவராக நியமிக்க வலியுறுத்தியது.
வலதுசாரி அணியை சார்ந்த கட்சிகளுக்கு பல சலுகைகளை தந்த பின்னரும், ஜூலை
மாத இறுதியில் துருக்கிய சிறுபான்மைக்கட்சியும்
பல்கேரியா சோசலிஸ்ட் கட்சியும் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை
அமைக்கும் முயற்சியில் தோல்வியடைந்தன.
இறுதியாக, ஜனாதிபதி பர்வானோ ஒரு அரசாங்கத்தை அமைக்கும் பணியை நாடாளுமன்ற
குழுவில் இரண்டாவது சக்திவாய்ந்த தாராளவாத கட்சியிடம் ஒப்படைத்தார், நாடாளுமன்றத்தில் 240 உறுப்பினர்களில்
53 பேர் மட்டுமே அதில் இடம் பெற்றிருந்தனர். ஆனால் பழமைவாத மற்றும் வலதுசாரி கட்சிகளை சேர்ந்த ஒரு
கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் வெற்றிபெறவில்லை. வலுவான பல்கேரியாவிற்கான ஜனநாயகக் கட்சி (FCB)
முன்னாள் அரசாங்க தலைவர் ஐவன் கோஸ்டோவின் தலைமையில் இயங்கி வருகிறது, அத்துடன் பல்கேரியாவின் மக்கள்
ஒன்றியமும் ஜனநாயக சக்திகளுக்கான ஒன்றியமும் தாராளவாத கட்சியின் மீது சந்தேகங்களை கொண்டிருப்பதுடன்
மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
பாரியளவு அழுத்தங்களின் கீழ், ஸ்டானிசூவும் சாக்சே - கோபர்க் கோதாவும் ஒரு
உடன்படிக்கைக்கு வந்தனர். இவர்களது பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்குமானால், இதன் விளைவாக புதிய
நாடாளுமன்ற தேர்தல்களை நடத்த வேண்டி வந்திருக்கும். அந்தத் தேர்தல் இரண்டு கட்சிகளுக்குமே எதிர்மாறான
விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். அப்போது அரசாங்கம் அமைப்பது இதை விட கடினமானதாகயிருந்திருக்கும்.
2007ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கு நாடு திட்டமிட்டிருப்பதால் அதற்கு ஆபத்து ஏற்படாத வகையில் ஒரு
உடன்படிக்கைக்கு வருமாறு சோபியாவிலுள்ள கட்சிகளுக்கு பிரஸ்ஸல்ஸ் அழுத்தங்களை கொடுத்தது. பல்கேரிய
சோசலிஸ்ட் கட்சி
புதிய அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களையும், ஜாரின் கட்சி ஐந்து
அமைச்சர்களையும்
துருக்கிய சிறுபான்மை கட்சி
மூன்று அமைச்சர்களையும் பெற்றிருக்கிறது. புதிய அரசாங்கத்தில்
கட்சி சார்பில்லாமல் இடம் பெற்றுள்ள பிளாமென் ஓரஸ்சார்ஸ்கி அவர் நாட்டிலேயே மிக வெறுப்பாக கருதப்படும்
பிரமுகர்களில் ஒருவர், அவர் நிதியமைச்சக பொறுப்பை ஏற்கிறார். 1990களின் தொடக்கத்தில், கோஸ்டோ
அரசாங்கத்தில் வலதுசாரி அணியை சார்ந்த அவர் பல்கேரியாவின் அரசாங்கத்திற்கு சொந்தமான தொழில்துறையை
சிதைப்பதிலும் தனியார் மயமாக்குவதற்கும் பொறுப்பானவராக இருந்ததால், இது மக்களில் பரவலான பிரிவினரை
வறியவர்களாகும் நிலைக்கு இட்டுச்சென்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவிற்கான முன்நிபந்தனைகள்
புதிய அரசாங்கத்தில் சம்மந்தப்பட்ட அனைவரும் ''தொடர்ந்து நீடிக்கும் அரசு''
என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டேயிருக்கின்றனர். இதற்கெல்லாம் மேலாக, இதன் பொருள் என்னவென்றால்
2007ல் நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் நாடு சேர்வதற்கு உறுதிசெய்து தருகின்ற வகையில் கடுமையான நிதிக்
கொள்கைகளை நீடிக்க வேண்டும் என்பதாகும். கோடைக்காலத்தில் பல்கேரியாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அதன் அணுகுமுறை பதவியேற்றவுடன் உடனடியாக பிற்போக்குத்தன்மை அதன்
கூட்டணி அரசாங்கத்தால் எடுத்துக்காட்டப்பட்டது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பேரழிவு வெள்ளத்தினால் மக்கள் தொகையில் கால்
பகுதிக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். குறைந்த மதிப்பீடுகளின்படி, 630 மில்லியன் டாலர்களுக்கு மேல்
சேதம் என்று மதிப்பிட்டுள்ள அந்த வெள்ளத்தில் குறைந்தபட்சம் 20 பேர் கொல்லப்பட்டனர். நாட்டின் பல
பிராந்தியங்களில் விவசாய உற்பத்தி முற்றிலுமாக அழிந்து விட்டது. பத்தாயிரக்கணக்கானவர்கள் போதுமான உணவு,
மருந்துகள் இல்லாமல் முழுமையான பேரழிவை சந்தித்தனர். அரசு வழங்கிய சுமார் 500 யூரோக்களில் சிலர்தான்
பயன்பெற்றனர்.
பிற இடங்களில் செலவினங்களை வெட்டியதாலும் தேர்தல் உறுதி மொழிகளை கைவிட்டதாலும்
தான் இப்படி சிறிய உதவிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியது என்று அரசாங்க வட்டாரங்கள்
அறிவித்தன.
மேலும் கடுமையான வரவு செலவுத்திட்ட கொள்கையை அறிவிப்பதற்கு இந்தப்
பேரழிவை ஒரு வாய்ப்பாக நிதியமைச்சர் ஓரசார்ஸ்கி பயன்படுத்திக் கொண்டார். சமூக விவகாரங்கள்
தொடர்பான அமைச்சகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு
தர வேண்டும் என்ற ஒரு முன்மொழிவை அவர் ஒட்டு மொத்தமாக எதிர்த்தார். ஓய்வூதிய உயர்வு பற்றியும் 20
சதவீத ஊதிய உயர்வு பற்றி பொது சேவை ஊழியர்களுக்கு உறுதிமொழிகளும் செயல்படுத்தப்படாது.
ஐரோப்பிய ஒன்றிய
உறுப்பினராக சேர்வதற்கு அது விதித்துள்ள நிபந்தனைகளை
நிலைநாட்டுவதற்கு நாடு விரும்புமானால் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள வரவு செலவுத்திட்ட கட்டுப்பாடு
தொடர்பான நிபந்தனைகளை புதிய அரசாங்கம் தளர்த்தி விட முடியாது என்று ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற்ற
விவாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினர். அரசாங்க பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை பின்பற்ற
தயாராக உள்ளதாக அறிவித்தனர். அதன்படி தற்போது வரவு செலவு திட்டத்தில் உபரியாக உள்ள அண்ணளவாக
600 மில்லியன் யூரோக்களில் கைவைக்ககூடாது.
பதவியில் முன்னிருந்தவர்களை போன்று, ஸ்டானிச்சூ வெளியுறவு அமைச்சர் கால்பின்
மற்றும் ஏற்கனவே சிமியோன் அமைச்சரவையில் ஐரோப்பிய விவகார அமைச்சராக பணியாற்றி வந்த மெகல்னா
குனேவாவும் பிரஸ்ஸசல்சிற்கு விஜயம் செய்தனர்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுத்தலைவர் ஜோஸே பரோசோ
மற்றும் ஜேர்மன் தொழில்துறை ஆணையளர் குந்தர் வெர்கூகன் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்
மிச்சமுள்ள 16 மாதங்களில் தமது அரசாங்கம் பின்தங்கியுள்ள துறைகளில் எட்டிப்பிடிப்பதற்கு தேவையான
நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும் என்று ஸ்டானிச்சூ உறுதியளித்தார்.
அக்டோபரில் ஐரோப்பிய ஒன்றிய வெளியிடவிருக்கும் முன்னேற்றம் பற்றிய அறிக்கை
2007ல் அல்லது ஓராண்டிற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைய முடியுமா என்பதை இறுதியாக முடிவு
செய்யும்.
பிரஸ்ஸல்சிலுள்ள அதிகாரிகள் சட்டவாக்க அமைப்பு அடிப்படை சீர்திருத்தத்தை செய்ய
வேண்டும் என்றும் விவசாயத்திலும் இதர துறைகளிலும் ஆழமான மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்
வற்புறுத்தி வருகின்றனர், இதற்கெல்லாம் மேலாக, பல்கேரியா பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றிய
அணைக்குழுவின் கருத்துப்படி இன்னும் போதுமான அளவிற்கு தாராளமயமாக்கப்படவில்லை. வரும் மாதங்களில்,
அண்ணளவாக 30 சட்டங்களை நாடாளுமன்றம் திருத்துமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
பல்வேறு அரசாங்கங்களும் 15 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகின்ற வெகுஜனங்களுக்கு
எதிரான இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு தொழிற்சங்கங்களும் கூட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
அரசாங்கம் ஏற்கனவே பல்கேரியாவின் இரண்டு மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்புகளோடு பொருளாதார,
தொழிலாளர் மற்றும் சமூகக் கொள்கைகள் தொடர்பாக ஏற்கனவே உடன்படிக்கை செய்து கொண்டிருக்கிறது. அதன்படி
பல்கேரியாவை வலுப்படுத்துவதன் பெயரால் மேலும் நலன்புரி சலுகைகள் வெட்டுக்களுக்கு தொழிற்சங்கங்கள் தங்களது
ஆசிகளை வழங்கியுள்ளன. தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் எமிலிஜா மஸ்லரோவா
(BSP)
தொழிற்சங்கங்களுடன் அரசாங்கம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒத்துழைப்பதற்கு
ஒரு வலுவான அடிப்படையை அமைத்திருப்பதாக கூறினார்.
அரசியல் ஸ்திரமற்றதன்மை
ஆரம்பத்திலிருந்தே, முதலாளித்துவக் கட்சிகளின் பரவலான கூட்டணி அரசியல்
ஸ்திரமற்ற தன்மையை கொண்டதாகும். மோதல்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவை அரசாங்க
கூட்டணியை சிதைப்பதற்கும் இட்டுச் சென்று விடும்.
28 பிராந்திய பிரதிநிதிகள் நியமனத்தின்போது ஏற்கனவே முதலாவது பதட்டங்கள்
தோன்றிவிட்டன. பல்கேரியா சோசலிஸ்ட் கட்சி
மற்றும் துருக்கியர் சிறுபான்மைக்கட்சி கூட்டணியை சேர்ந்த
பிரதிநிதிகள் பெரிய மற்றும் பணக்கார மாவட்டங்களில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் அந்த இரண்டு
கட்சிகளுக்கும் கூடுதலாக அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கிற்கு உறுதிசெய்து தந்திருப்பதாகவும்
தாராளவாதக் கட்சி (NDSW)
குற்றம்சாட்டியது.
சிமியோன் தாராளவாத கட்சிக்கும் துருக்கிய சிறுபான்மைக்கட்சிக்கும் இடையில்
உறவுகளில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான தகராறுகள் நிலவுகின்றன,
அப்போது இரண்டு கட்சிகளுமே அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்தன.
துருக்கிய சிறுபான்மைக்கட்சி 1989 முதல் ஒவ்வொரு
அரசாங்கத்திலும் சம்மந்தப்பட்டிருந்ததால் துருக்கியர்களின் பெருவர்த்தக நிறுவனங்களோடு வலுவான தொடர்புகளை
கொண்டிருக்கிறது மற்றும் அவர்களது நலன்களை முன்னிறுத்தி பாடுபடுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஓரஸ்சார்ஸ்கியின் தீவிர சிக்கன நடவடிக்கைகளும் பல்கேரியா சோசலிஸ்ட் கட்சிப்
பிரிவுகளிடையே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. அச்சுறுத்தப்பட்டுள்ள கண்டனப் பேரணிகளை திசை திருப்புவதற்காக
தொழிற்சங்கங்களும் பல்கேரியா சோசலிஸ்ட் கட்சியும் முன்மொழிவு செய்துள்ள பொதுச்சேவை ஊழியர்களுக்கு பாதி
மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விவாதிப்பதற்கு நிதியமைச்சர் ஒட்டு மொத்தமாக
மறுத்துவிட்டார்.
இந்தச் சூழ்நிலையில் சிமியோனின்
தாராளவாத கட்சி, அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்க்கட்சி
பங்களிப்பை செய்ய முடியும் என்றும் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் சிமியோனின் வெற்றிவாய்ப்புக்களை
பெருக்குவதற்காக கூட்டணியின் சில திட்டங்களுக்கு வேட்டு வைக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள்
கருதுகின்றனர்.
பல்கேரியாவை பிடித்துக் கொண்டுள்ள பெருகிவரும் அரசியல் நெருக்கடி அதற்கு
மட்டும் உரிய நிகழ்ச்சியல்ல. இதே போன்ற சூழ்நிலைகள் பக்கத்து ருமேனியாவிலும் நிலவுகின்றன, அதுவும்
இதேபோன்று 2007ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கு முயன்று வருகிறது.
புக்காரெஸ்டில், வலதுசாரி காலின் போப்பஸ்கு டரிசியானு தலைமையிலான அரசாங்கம்
பிரஸ்ஸல்ஸ் கோரிய சட்டமுறையின் சீர்திருத்தங்களை செய்ய முடியாத காரணத்தினால், இதன்விளைவாக ஆறு மாதங்களே
பதவியில் இருந்த அரசாங்கம் மறுதேர்தல்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடிக்கு பின்னர்தான் டாரிசியானுவின் முன்கூட்டியே
தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி போப்பஸ்கு திரும்பப் பெற்றார். அதற்குப் பின்னர், அவரது
அரசாங்கம் ஒரு நெருக்கடிக்கு பின் இன்னொன்று என்று சந்தித்து வருகிறது. இதற்கு மேலாக டாரிசனுவிற்கும் போப்பகுவிற்கும்
இடையில் மோதல்கள் நீடிப்பதுடன், பெரும்பாலும் நாட்டின் மிகக் குறுகலான மற்றும் மிகத்தீவிரமான சலுகை பெற்ற
மேல்தட்டு பிரதிநிதிகள் அடங்கிய மந்திரி சபையும் பலமுறை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
புக்காரெஸ்டிலுள்ள அரசாங்கமும் பொது மக்களிடையே வளர்ந்து வருகின்ற எதிர்ப்பை
சந்தித்து வருகிறது. மதிப்புக் கூடுதல் வரியை (VAT)
19 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக 2006ம் ஆண்டில் உயர்த்துவதற்கு
திட்டமிடப்பட்டிருப்பது ஏற்கனவே வன்முறை ஆர்ப்பாட்டப்பேரணிகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. பெருவர்த்தக
நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் தரப்பட்டுள்ள வரி வெட்டுக்களை ஓளவிற்கு ஈடுகட்டுவதற்காக
VAT அதிகரிக்கப்பட்டிருப்பதாக
கருதப்படுகிறது. இவர்கள் ஒரே அளவிலான வரியை (flat
tax) அறிமுகப்படுத்தியதால் இலாபம் அடைந்தவர்கள். ஐரோப்பாவிலேயே
மிகவும் ஏழ்மையான நாடுகளான பல்கேரியாவிலும் ருமேனியாவிலும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகள் தெளிவாக
அதிகரித்து வருகின்றன.
Top of page |