:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: After Dresden by-election,
chancellor question remains open
ஜேர்மனி: டிரஸ்டன் இடைத்தேர்தலுக்கு பின்னரும் அதிபர் பிரச்சனை இன்னமும் தொடர்கிறது
By Peter Schwarz
4 October 2005
Back to screen
version
டிரஸ்டன் 1-வது வாக்காளர் தொகுதியில் ஞாயிறன்று நடைபெற்ற இடைத் தேர்தல்
செப்டம்பர் 18ல் நடைபெற்ற ஜேர்மன் நாடாளுமன்ற தேர்தல் முடிவை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது. பிரதான
ஜேர்மன் தேர்தல் நடந்து இரண்டு வாரங்களுக்கு பின்னர் கிழக்கு ஜேர்மன் நகரான டிரஸ்டனில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவானது,
செப்டம்பர் வாக்குப்பதிவிற்கு முன் டிரஸ்டன் வேட்பாளர்களில் ஒருவர் திடீரென்று இறந்துவிட்டதால் நடத்த வேண்டிய
அவசியத்திற்குள்ளானது.
ஜேர்மன் தேர்தல் சட்டப்படி, மத்திய தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு
வாக்குகளை பதிவு செய்கின்றனர்:
முதல்வாக்கு ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கும், இரண்டாவது வாக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் பதிவு செய்யப்படுவதாகும்.
டிரஸ்டனில், கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU)
நேரடி கட்டளையான (முதலாவது வாக்கை) வென்றெடுத்தது மற்றும் அதன் மூலம் நாடாளுமன்றத்தில் கூடுதலாக ஒரு இடத்தைப்
பெற்றது. என்றாலும், CDU-வும்
"சுதந்திரச் சந்தை" சுதந்திர ஜனநாயகக் கட்சியும் (FDP)
சேர்ந்து முதலாவது இரண்டாவது வாக்குப்பதிவுகளில் மொத்தம் 41 சதவீத வாக்குகளை வென்றெடுக்க முடிந்தும் பழமைவாதக்
கட்சிகள் ஒரு அறுதிப்பெரும்பான்மையை பெற முடியாமல் விட்டுள்ளது.
CDU வேட்பாளர்
Andreas Lämmel 37 சதவீத முதல்வாக்குகளை பெற்றார். அதன்
மூலம் சமூக ஜனநாயகக் கட்சி (SPD)
வேட்பாளர் பெற்ற 32.1 சதவீத மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட இடதுசாரி கட்சி பெற்ற 19.2 சதவீதம் ஆகியவற்றை
விட அதிக வாக்குகளை பெற்றார். FDP
4.7 சதவீத வாக்கையும் பசுமைக்கட்சி 3.9 சதவீத வாக்கையும் பெற்றன. காலம் சென்ற தீவிர வலதுசாரி
NPD
(ஜேர்மன் தேசியக் கட்சி) வேட்பாளர் நீண்ட காலம் வலதுசாரி குடியரசுக் கட்சிக்காரர்களின் தலைவராக இருந்த
Franz Schönhuber
2.4 சதவீத வாக்கை மட்டுமே பெற்று, ஒட்டு மொத்த தேர்தல் முடிவில் எந்த
பங்களிப்பையும் செய்யவில்லை.
டிரஸ்டன் வாக்குப்பதிவின் முடிவில்,
CDU கூடுதலாக ஒரு இடத்தை பெற்றது மற்றும்
SPDயை விட
நாடாளுமன்றத்தில் மூன்று முதல் நான்கு இடங்களை பெற்றது.
SPD இரண்டாவது வாக்குகளில் 27.9
சதவீத வாக்குகளைப் பெற்று, (24.4 சதவீத) வாக்குகளை பெற்ற
CDU-வை முந்தியது
மற்றும் இடது சாரிக்கட்சியின் 19.7 சதவீத வாக்குகளை விடவும் அதிகம் வென்றது. பசுமைக்கட்சி 7.1 சதவீத
வாக்குகளையும் FDP
16.6 சதவீத வாக்குகளையும் பெற்றது. இப்படி FDP
இரண்டாவது சுற்றுவாக்குகளை அதிகம் பெற்றதற்கு, பல CDU
ஆதரவாளர்கள் தந்திரோபாய முறையில் முதல் சுற்றில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் இரண்டாவது சுற்றில்
FDP வேட்பாளர்களுக்கும்
வாக்களித்ததுதான் காரணமாகும். ஜேர்மன் தேர்தல் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முரண்பாட்டின் காரணமாக,
CDU
இரண்டாவது சுற்றில் டிரஸ்டனில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்குமானால் அக்கட்சி தனது இடத்தை இழந்திருக்கும்.
சோசலிச சமத்துவக் கட்சி (PSG)
டிரஸ்டனில் 196 வாக்குகளைப் பெற்றது. இது பதிவான வாக்குகளில் 0.1 சதவீதமாகும் மற்றும் அதன் மூலம் நாடு
முழுவதிலும் மொத்தம் 15,620 வாக்ககளை பெற்றிருக்கிறது. சாக்சோனி உட்பட ஜேர்மனியின் 16 மாநிலங்களில் 4-ல்
PSG தனது
வேட்பாளர்களை நிறுத்தியது, சாக்சோனி மாகாணத்திலுள்ள டிரஸ்டனில் கடைசியாக இடைத் தேர்தல் நடைபெற்றது.
டிரஸ்டன் வாக்கு எண்ணிக்கை முடிந்தும்
CDU மற்றும்
SPD ஆகிய இரண்டு கட்சிகளுமே அதிபரை யார் தேர்ந்தெடுக்கப்படுவது
என்பதை முடிவு செய்தவற்கு தங்களுக்குத்தான் உரிமையுண்டு என்று கூறின.
CDU பொதுச் செயலாளர்
Volker Kauder,
வாக்காளர்கள் CDU
தலைவர் ஏஞ்சலா மெர்க்கல் அதிபர் பதவிக்கு வர வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். ``SPD
யிலுள்ள நியாயமான சக்திகள் தற்போது இதை உணரும் என நம்புகிறோம்`` என அவர் கூறினார்.
SPD தலைவர் பிரான்ஸ்
முன்டபெர்ரிங்கைப் பொறுத்தவரை, தனது கட்சியின் நிலைப்பாடு தேர்தல் முடிவினால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக
தெரிவித்தார் ``நாங்கள் மிகவும் வலுவான சக்தி என்பது தெளிவாக இருக்கிறது`` என்று குறிப்பிட்டார். அடுத்த
அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கும் தனது கோரிக்கையை திங்களன்று நடப்பு அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD)
கைவிடக்கூடும் என்ற சாத்தியக்கூறை அவர் பகிரங்கமாக மறுத்தார். அத்தகையதொரு அறிவிப்பை அவர் வெளியிடக் கூடும்
என்ற ஊடகங்களின் ஊகங்களை முன்டபெர்ரிங் மறுத்துரைத்தார். திங்கள் மாலையில் நடைபெற்ற கட்சித் தலைமை
கூட்டத்தை தொடர்ந்து முன்டர்பெர்ரிங், புதியதொரு அரசாங்கத்தில் அதிபர் பதவிக்கான ஷ்ரோடரின் கோரிக்கையை
SPD
ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.
அதிபராக யார் பதவிக்கு வருவது என்பது இன்னும் போட்டியில்தான் உள்ளது என்றாலும்,
ஒரு மகத்தான SPD
மற்றும் CDU
கூட்டணி உருவாவது இன்னும் அதிக சாத்தியமானதாக தோன்றுகிறது. இயலுமான அளவில் விரைவில் ஒரு ''ஸ்திரமான
அரசாங்கம்'' அமைக்கப்படுவதற்கு வர்த்தக சங்கங்களும் ஊடகங்களும் மகத்தான அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.
சென்ற வாரம் ஒரு மாபெரும் கூட்டணிக்கு ஆதரவாக அதிபர் ஷ்ரோடர் அறிக்கைகளை
வெளியிட்டதை தொடர்ந்து, பவேரியாவை அடித்தளமாகக்கொண்ட கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தின் தலைவர் (CSU-அதன்
சகோதரக் கட்சி CDU)
எட்முண்ட் ஸ்ரொய்பர் தெளிவாக ஒரு மகத்தான கூட்டணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
CDU-வும்
SPD-யும் ஒரு கூட்டணி
அமைப்பதை தவிர வேறு மாற்று வழியில்லை என்று ஞாயிறன்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்தார்.
``இதர கூட்டணிகளுக்கு சாத்தியக் கூறு எதுவும் இல்லை`` என அவர் குறிப்பிட்டார். அத்தகையதொரு கூட்டணியில்
நிதியமைச்சர் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதில் அவரது சொந்த ஆர்வத்தை அவர் தெளிவுபடுத்தினார்.
FDP மற்றும் பசுமைக்கட்சி
தைைலவர்களும் கூட விரைவாக ஒரு மகத்தான கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினர்.
CDU/CSU மற்றும்
SPD இந்த
தேக்க நிலையை முடிவிற்கு கொண்டு வர வேண்டும்`` என்று
FDP தலைவர் கெய்டோ வெஸ்டர்வெலே அறிவித்தார். டிரஸ்டன்
தேர்தல் "கட்சித்தலைவர்களுக்கு ஒரு சமிக்கையாகும்: ஒரு முடிவிற்கு வருவதற்கு இப்போதுதான் சரியான நேரம்" என்று
பசுமைக் கட்சி தலைவர் குளோடியா ரொத் கேட்டுக்கொண்டார்.
Welt am Sonntag
பத்திரிகையில் வெளிவந்திருக்கிற ஒரு செய்தியின்படி, சென்ற வாரம்
CDU-விற்கும்
SPD-க்கும் இடையில் நடைபெற்ற நன்கு ஆய்ந்த கலந்துரையாடல்கள்
``அரசியல் பொருளடக்கத்தில் வியப்பூட்டும் வகையில் கருத்து ஒற்றுமை நிலவியது`` என்று ஏற்கனவே தெரிவித்தது.
குறிப்பாக, SPD
தலைவர் பிரான்ஸ் முன்டபெர்ரிங்கின் மற்றும் பவேரியா பிரதமர் எட்முண்ட்
ஸ்ரொய்பர் ஆகியோர் ஒற்றுமையை எடுத்துக் காட்ட முயன்றனர்.
அப்படியிருந்தாலும், இரண்டு கட்சிகளுமே தாங்கள்தான் அதிபர் பதவி பிரச்சனையை முடிவு
செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வாதிட்டு வருகின்ற உண்மை - அடுத்த அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் என்று
CDU வலியுறுத்துகிறது
மற்றும் அதே நேரத்தில் ஷ்ரோடர் அந்த பதவியை தானே வைத்திருக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை சமூக
ஜனநாயகக் கட்சி ஆதரிக்க தயாரில்லா நிலை - இந்த உண்மை ஒரு மகத்தான கூட்டணியில் செல்வாக்கையும்
பதவிகளையும் போராடுவதற்கு தந்திரமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை பிரதிபலிக்கிறது. இது ஆளும் செல்வந்த
தட்டிற்குள் நிலவுகின்ற வன்முறை மோதல்கள் மற்றும் கொந்தளிப்புக்களின் வெளிப்பாடாகும், அவை கூட்டணி
பேச்சுவார்த்தைகளை நிலைமுறிவுக்கு இட்டுச்செல்லக்கூடிய புதிய நெருக்கடிகளும் எதிர்பாராத வளர்ச்சிகளுக்கும் இட்டுச்
செல்லக்கூடும்.
அண்மையில் நடைபெற்ற தேசிய தேர்தலில் மிகப்பெரும்பாலான வாக்காளர்கள் ஏற்றுக்
கொள்ள மறுத்து தள்ளுபடி செய்து விட்ட கொள்கைகளை அந்த மகத்தான கூட்டணி செயல்படுத்தும். ஷ்ரோடர்
அரசாங்கத்தால் தொடக்கி வைக்கப்பட்ட வாழ்க்கை தரங்கள், சமூக வெற்றிகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது
தாக்குதல்கள் நடத்துவதை அந்தக் கூட்டணி தொடர்ந்து நடத்துவதுடன் தீவிரமாகவும் தொடர்ந்தும் செயல்படுத்தும். இது
தொடர்பாக அனைத்து பெரிய கட்சிகளிடமும் விரிவானதொரு உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் இந்தக் கொள்கை வழியை மிகத் தெளிவாக உருவாக்கித்தந்த ஏஞ்சலா மெர்க்கல்
இந்த தேர்தல் முடிவு மூலம் ஒரு திட்டவட்டமான மறுப்பை பெற்றிருக்கிறார்.
SPD-பசுமைக்கட்சி
கூட்டணிக்கு எதிராக நிலவும் பரவலான ஆத்திரமும் அரசியல் குழப்பமும் வலதுசாரிக் கட்சிகளுக்கும் எளிதானதொரு
வெற்றியாக மாற்றப்பட்டு விடும் என்ற நம்பிக்கைகள் - அண்மையில் போலந்திலும் அதற்கு முந்திய ஒரு புள்ளியில்
இத்தாலியிலும் பிரான்சிலும் நடைபெற்றது போன்று இங்கும் தேர்தல் முடிவு அமையும் என்ற நம்பிக்கைகள் சீர்குலைந்து
விட்டன. அனைத்து ஊகங்களுக்கும் எதிராக CSU/CDU
மற்றும் FDP
மொத்தமாக பதிவான வாக்குகளில் 45 சதவீதத்தையும் டிரஸ்டனில் 41 சதவீதத்தையும் பெற்றிருக்கின்றன. அதுதான்
அதிபர் பதவிக்கு காரசாரமாக நடைபெறுகின்ற மோதலுக்கு காரணமாகும்.
மெர்க்கல் அதிபர் பதவிக்கு வருவாரானால் அரசாங்கத்திற்கும் ஒட்டு மொத்தமாக பொது
மக்களுக்கும் இடையில் மிக வேகமாக மோதலை தூண்டிவிட்டுவிடுவார் என பல செல்வாக்கு மிக்க நபர்கள் அஞ்சுகின்றனர்.
இந்த எதிர்ப்பு நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வடிவங்களில் உருவாகி தீவிரப்போக்குக் கட்சிகள் தங்களது
செல்வாக்கை பெருக்கிக் கொள்ளும். எனவேதான் மெர்க்கலுக்கு அவரது சொந்தக் கட்சியிலிருந்து வருவது உட்பட
விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
அண்மையில் Der Spiegel
வெளியிட்டுள்ள செய்தியின்படி, ``துயரம் மிக்க தேர்தல் முடிவினால் அதிர்ச்சியடைந்த ஏஞ்சலா மெர்க்கலின் கட்சி
நண்பர்கள் கூட அதிக அளவில் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.`` அந்தப்பத்திரிகை
சுட்டிக்காட்டியுள்ள ஒரு CDU
அரசியல்வாதி கூற்றின்படி, ``எளிய முறையில் வாக்காளர்களிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்த்தோம்`` மற்றும்
மற்றொரு அரசியல்வாதி கூறியது ``நமது வேலைதிட்டங்களிலிருந்து நட்புணர்வு தவறிவிட்டன``
CDU நிர்வாகக் குழுவின்
ஊழியர் பிரிவு (CDA)
ஒரு நான்கு மணி நேர விவாதத்திற்கு பின்னர் செய்திருக்கின்ற முடிவு என்னவென்றால் சீர்திருத்தங்கள் தொடர்பாக
மெர்க்கல், அளவிற்கு அதிகமான எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மெர்க்கலின் வெளியுறவுக் கொள்கை நோக்கங்கள் தொடர்பாகவும் கணிசமான சந்தேகங்கள்
நிலவுகின்றன, சர்வதேச பதட்டங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற ஒரு காலகட்டத்தில் ஜேர்மனியின் நலன்களை கீழறுக்கின்ற
வகையில் அமெரிக்காவுடன் நெருக்கமாக நகரும் வகையில் துருக்கி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராவதை எதிர்ப்பதாக
உள்ளது.
இந்தப் பிரச்சனைகள் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் அல்ல, இவைதான் அதிபர் பதவிக்கான
தகராறின் பின்னணியாக உள்ளது. சமூகரீதியாக அதிக ''நியாயமுள்ள'' அல்லது ''இடது சாரி'' கொள்கைகளோடு
இதற்கு எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. அடிப்படைப் பிரச்சனைகளில் - வரவுசெலவு திட்ட முன்னுரிமைகள் சமூக நலத்திட்டங்களில்
''சீர்திருத்தம்'' வேலைவாய்ப்பு சந்தையில் மேலும் நெகிழ்வுத்தன்மை ஜேர்மனியை ஒரு இராணுவ பெரிய வல்லரசாக
வளர்த்து முன்னெடுத்துச் செல்வது - ஆகியவற்றில் எல்லாக் கட்சிகளும் அவற்றின் பல்வேறு குழுக்களும் ஐக்கியப்பட்டு நிற்கின்றன.
பக்குவப்படுவதற்கு முன்னரே ஒரு மோதலை உருவாக்குவதற்கு தூண்டுகின்ற வகையில் செயல்படாமல்
இந்த பரவலான மக்கள் எதிர்ப்பிற்கு இலக்கான கொள்கைகளை எப்படி அழுத்தம் கொடுத்து முன்னெடுத்துச் செல்வது
என்பது தான் உண்மையான பிரச்சனை. இந்த வகையில், SPD-ன்
பங்கு அதன் நெருக்கமான தொழிற்சங்க உறவுகளைக் கொண்டு பார்க்கும்போது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அத்தகையதொரு கூட்டணி தங்களது செல்வாக்கின் அடிப்படையான - கூட்டு ஊதியம் மற்றும் வேலை உடன்படிக்கைகளை
தொடாமல் விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தொழிற்சங்கங்கள் ஒரு மகத்தான கூட்டணியை தீவிரமாக
ஆதரித்து வருகின்றன.
டிரஸ்டன் தேர்தல் நடைபெற்ற அன்று மாலை - சபின் கிறிஸ்டியன்சன் என்ற -
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இது தெளிவுபடுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட தொழிற்சங்கப்
பிரதிநிதி, I.G.மெட்டால்
மாவட்டத்தலைவர், லோவர் சாக்சோனி மற்றும் சாக்சோனியா அன்ஹால்ட், ஹார்மட் மேயனே ஆகியவற்றில் பணியாற்றி
வருபவர் தொழிலாளர்கள் அதிக நெகிழ்வுப்போக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒவ்வொரு கோரிக்கைக்கும் எதிர்வாதம்
எழுப்பினார். அத்தகைய நெகிழ்வுப்போக்கிற்கு ஏற்கனவே சாத்தியக்கூறு நிலவுவதாகவும், உண்மையிலேயே இப்போதுள்ள
ஒப்பந்தங்களின்படியே கூட தொழிற்சங்கங்களோடு உடன்படிக்கை செய்துகொண்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகிறதென்றும்
குறிப்பிட்டார். Baden-Württemberg
மாகாண முன்னாள் பிரமர் லோதார் ஸ்பாத் அந்த உரையாடலில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர்
பின்னர் ஜெனாவிலுள்ள ஜீயஸ் நிறுவனத்தின் தலைவரானார், தற்போது ஒரு முதலீட்டு வங்கியாளராக பணியாற்றி வருகிறார்,
அவரது கருத்துக்களோடு Meine
முழு உடன்பாடு தெரிவித்தார்.
இந்த தருணத்தில், அதிபர் பதவி தொடர்பான தகராறின் விளைவு என்ன என்பதை ஊகிக்கத்தான்
முடியும் மற்றும் அந்த முயற்சிகள் ஒரு மகத்தான கூட்டணி தொடர்பான பிரச்சனையில் தோல்வியடையுமா என்பதையும் இப்போது
ஊகிக்கத்தான் முடியும். என்றாலும் ஒன்று தெளிவாக உள்ளது: எதிர்கால அரசாங்கத்திற்கு மெர்க்கல், ஷ்ரோடர் அல்லது
வேறு எவராவது ஒருவர் தலைமை வகிக்கின்ற நிலை ஏற்பட்டாலும் தொழிலாள வர்க்கம் வன்முறை தாக்குதல்களையும்
மோதலையும் சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். |