:
ஐரோப்பா
:
ஜேர்மனி
The "depacification" of the German left
Right-wing praise for Green leader Fischer's
foreign policy
ஜேர்மன் இடதுகளின் "அமைதிவாதம் துறப்பு'
பசுமை கட்சித் தலைவர் பிஷ்ஷரின் வெளியுறவுக் கொள்கைக்கு வலதுசாரிகள் பாராட்டு
By Peter Schwarz
1 October 2005
Back to screen
version
சில நேரங்களில், மிகக் கடுமையான விமர்சனங்களைவிட பாராட்டுரைகள் மிகவும் பேரழிவை
ஏற்படுத்துபவை.
பேர்லின் தினசரி செய்தி பத்திரிகையான
Tagesspiegel
ஜேர்மனியில் பதவி விலகும் சமுக ஜனநாயக - பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்தையும் அதன் தலைவர்களான ஹெகார்ட்
ஷ்ரோடர் (SPD)
மற்றும் ஜோஸ்கா பிஷ்ஷர் (பசுமைக்கட்சி) ஆகியோரின் வெளியுறவுக் கொள்கையை பாராட்டி முதல் பக்கத்தில் ஒரு விமர்சனத்தை
வெளியிட்டிருப்பதை பாருங்கள். SPD
மற்றும் பசுமைக் கட்சிக்காரர்களின் கொள்கைகள் மூலம் ஜேர்மனி மீண்டும் ஒரு
முறை ``ஒரு சுதந்திர பூகோள அரசியல் காரணியாக ஆகிவிட்டது`` என்று அந்த செய்தித்தாள் முடிவு கூறியிருக்கிறது.
இந்த வாரம் ஜேர்மன் நாடாளுமன்றம் ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் இராணுவப்பணிகளை விரிவுபடுத்தவும்
நீடிக்கவும் முடிவு செய்திருப்பது பற்றி அந்த விமர்சனம் விளக்குகிறது.
செப்டம்பர் 18-ல் மத்திய தேர்தல்கள் முடிந்து ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு பின்னர்,
ஜேர்மனியின் முன்னணி அரசியல் கட்சிகள் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இன்னும் கருத்து மோதல்களில்
ஈடுபட்டிருக்கின்றன. ஆனால் புதன் கிழமையன்று, நாடாளுமன்றம் இராணுவம் அனுப்பப்படுவது பற்றிய வாக்கெடுப்பை வெளிப்படையாக
நடத்துவதற்கான நோக்கத்துடன் தேர்தலுக்கு முந்திய உறுப்பினர்களோடு கூடியது. அந்தத் தீர்மானம் ஏறத்தாழ ஒரு
மனதாக (535-க்கு 18 என்ற வாக்குகளில்) நிறைவேற்றப்பட்டது. அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி கட்சியை
தவிர மற்ற எல்லா கட்சிகளுமே அந்தக் கட்டளையை நீடிப்பது தவிர வேறு மாற்று இல்லை என்று வாதிட்டன.
இந்த தீர்மானம் மிகவும் வெடிக்கும் தன்மையதாகும். ஆப்கனிஸ்தானில் ஜேர்மன்
படைப்பிரிவின் பலம் 2,250-லிருந்து 3,000 துருப்புக்களாக உயர்த்தப்படும். தலைநகரான காபூலுக்கும் மற்றும்
இரண்டு மாகாணங்களான குந்தூஸ் மற்றும் பைசாபாத்திற்கு பொறுப்பாக இருப்பதற்கு பதிலாக, எதிர்காலத்தில் ஜேர்மன்
இராணுவம் அந்த நாட்டின் ஒட்டு மொத்த வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பு ஏற்கும். தேவைப்பட்டால் வேறு எந்த
பிராந்தியத்திற்கும் அது அனுப்பப்படும்.
ஜேர்மனியின் பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஸ்ட்ருக்
(SPD) இந்தப் பணி சமாதான நோக்கம் கொண்டது மற்றும்
போருக்காக அனுப்பப்படவில்லை என்று வலியுறுத்திக் கூறினார். ஆனால் ஸ்திரமற்ற நிலையில் உள்ள நாட்டில் ஜேர்மன்
இராணுவம் மோதலில் ஈடுபடக்கூடும் என்ற ஆபத்து அதிகரித்து வருவது இப்படி கட்டளையிட்டதிலிருந்து தெரிகிறது. டிசம்பர்
2001-ல் ஆப்கானிஸ்தானுக்கு ஜேர்மன்படைகள் அனுப்பப்பட்டதிலிருந்து இதுவரை ஏற்கனவே 17 ஜேர்மன் துருப்புக்கள்
மடிந்திருக்கின்றனர்.
ஒரு கணிசமான கால அளவில் தனது புவிசார்-மூலோபாய நலன்களை ஜேர்மனி கடைபிடித்து
வந்த ஒரு பிராந்தியத்திற்கு இராணுவப் படைகள் அனுப்பப்படுகின்றன. முதலாம் உலகப் போரில், மன்னர் இரண்டாவது
கெய்சர் வில்லியம் இரகசியமாக ஒரு தூதுக் குழுவை காபூலுக்கு அனுப்பி அங்கு பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராக
நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற சாத்தியக் கூறை ஆராயுமாறு கேட்டுக் கொண்டார். போருக்குப் பின்னர், அந்த
நாடு சுதந்திரம் பெற்றதும் ஜேர்மன் பொறியாளர்கள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டனர். ஜேர்மன் பள்ளிக் கூடங்கள்
அபிவிருத்தி அடைந்தன மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு நண்பனாக ஜேர்மனி தன்னை காட்டிக் கொண்டது.
இந்த பாரம்பரியமும் தொடர்புகளும் இப்போது புத்துயிர் ஊட்டப்பட்டு வருகின்றன
``வர்த்தக நிறுவனங்கள் மிக கவனமாக சந்தையை ஆராய்ந்து வருகின்றன, கோயித்தே-ஆய்வுக் கழகமும் மற்றும்
அரசியல் அறக்கட்டளைகளும் 25 ஆண்டுகளாக போரினால் கொடூரமயமாக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தை நாகரீகத்திற்கு
இட்டுவர முயன்று வருகின்றன. அதன் மக்களுக்கும் இடையில் பரஸ்பர நட்புறவை ஏற்படுத்துவதற்கு ஏதாவது செய்யப்பட்டு
வருகிறது" என்று Süddeutsche Zeitung
எழுதுகின்றது.
அமெரிக்கா தலைமையிலான
ISAF படையின் கட்டமைப்பிற்குள் ஜேர்மன் இராணுவம் பணியாற்றுகிறது,
அமெரிக்கா அந்த நாட்டை வென்றெடுத்ததை தொடர்ந்து பதவியில் அமர்த்தப்பட்டுள்ள ஹமீத் கர்சாயின் பொம்மை
ஆட்சியை ஆதரிக்கவும் பாதுகாத்து நிற்கவும் பணியாற்றி வருகிறது. ஈராக் ஆக்கிரமிப்பினால் முழு அளவிற்கு ஏற்கனவே
பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க இராணுவப் படைகளுக்கு ஒரளவிற்கு நிவாரணம் தருகின்ற வகையில் வாஷிங்டனுக்கு
ISAF
துருப்புக்கள் பயன்பட்டு வருகின்றன. வெளிநாட்டு துருப்புக்களின் ஆதரவு இல்லாமல் ஒரு நாள் கூட கர்சாய் ஆட்சி
அதிகாரத்தில் நீடித்திருக்க இயலாது.
எல்லாக் கூற்றுக்களுக்கும் மாறாக ஆப்கனிஸ்தானுக்கு ஜேர்மன் படைகள் அனுப்பப்பட்டிருப்பது
சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டதல்ல. எண்ணெய் வளம்மிக்க காஸ்பியன்
கடல்பகுதி மற்றும் பாரசீக வளைகுடா மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு சந்திப்பில் உள்ள முன்னணி மூலோபாய
முக்கியத்துவம் நிறைந்த ஒரு பிராந்தியத்தில் பூகோள - அரசியல் அக்கறைகளை நிலைநாட்டுவதற்கு அது பயன்படுகிறது.
என்றாலும் இராணுவம் அனுப்பப்படுவதற்கான இந்த முடிவு ஏறத்தாழ ஒருமனதாக
நாடாளுமன்றத்தினால் ஆதரிக்கப்பட்டிருப்பது
Tagesspiegel ஆல் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை
என்று கருதப்படுகிறது - ``அது ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் ஜோஸ்கா பிஷ்ஷர் விட்டுச் சென்ற நீடித்த மரபுவழி
சொத்தாகும். `` ஜேர்மன் மக்களின் போருக்கு எதிரான மனநிலை ஈராக் போருக்கு எதிரான வெகுஜனப் பேரணிகளில்
எதிரொலித்தது, அதை நாடாளுமன்றம் முற்றிலுமாக புறக்கணித்து விட்டது.
``நேட்டோவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மீண்டும் ஆயுதங்கள் குவிப்பதை எதிர்த்தும்
எல்லாப்போர்களை எதிர்த்தும் வளர்ந்து வந்த இடதுகளில் பெரும்பாலோர் அமைதிவாதத்தை துறந்து விட்டிருக்கின்றனர்``
என்று Tagesspiegel
மகிழ்ச்சியடைகிறது. ``பொண் குடியரசுக் காலங்களில், அதுபோன்ற கடமைகளை கைவிடுவது சகித்துக் கொள்ளப்பட்டது,
இறுதியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் - (ஜேர்மனி மறு ஐக்கியத்திற்கு முன்னர்), ஜேர்மனி
சுவிட்சர்லாந்து நாட்டைப் போல் அதிகமாய் (நடுநிலையாக) நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது. ஷ்ரோடர்
மற்றும் பிஷ்ஷரின் நடவடிக்கைகளால் இப்போது இந்த கண்டனம் அடிப்படை இல்லாததாக ஆகிவிட்டது. அவர்கள் இந்த
நாட்டை வளரச் செய்திருக்கிறார்கள்``.
Tagesspiegel பிஷ்ஷரையும்
ஷ்ரோடரையும் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக பல தவறுகளை செய்திருப்பதாக விமர்சித்திருக்கிறது. ஆனால்
இவை அந்த செய்தி பத்திரிகையை பொறுத்தவரை தலைவலிப் பிரச்சனைகள். பிரதானமாக அவர்கள் தங்களை
``கொள்கைகளின் மீது ஆக்கபூர்வமான நடைமுறைகளின் மீது மற்றும் தொலை நோக்கின் மீது'' விசுவாசம் உள்ளவர்களாகக்
காட்டிக் கொண்டனர்.
என்றாலும், மிகப் பெரும்பாராட்டு பிஷ்ஷருக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவர்
பல்லைக்கடித்துக் கொண்டு எழுப்பிய கேள்வி: ``அவுஸ்விட்ஸ்'' நமக்கு போதிப்பது என்ன? போர்வீரர்கள் சரியான நேரத்தில்
பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தான் கற்றுத் தருகிறது. நடுநிலை வகிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்
தவறு செய்பவர்களாக இருக்க முடியாது என்ற நம்மை ஏமாற்றுகின்ற எளிய தார்மீக நெறியை அது அழித்துவிட்டது, மற்றும்
பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் ஜேர்மனி இன்றைய தினம் ஒரு முன்னணி பங்களிப்பை செய்கிறது. இதை
அமெரிக்க அரசாங்கமும் கூட பாராட்டுகிறது``.
அத்தகைய பாராட்டு ஒரு நிரந்தரமான முதலாளித்துவ செய்திப் பத்திரிகையிலிருந்து
கிடைத்த பின்னர் பசுமைக் கட்சிக்காரர்களின் பூர்வீகம் பெரும்பாலும் போர் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்தாலும், அது
ஜேர்மனியின் இதர முதலாளித்துவ கட்சிகளுக்கு எந்த வகையிலும் ஒரு இடது மாற்றீடை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியல்ல
என்பதை காட்டுவதற்கு மேலும் சான்று தேவையா?
வழக்கமாக பயிற்சி பெற்ற தூதர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு
வழங்கப்பட்டு வந்த கெளரவம் மிக்க வெளிவிவகார அமைச்சர் பதவியை ஏற்பதற்கு ஏன் முன்னாள் தெருச்
சண்டைக்காரரான மற்றும் தானே ஆசிரியராகிவிட்ட பிஷ்ஷரை ஜேர்மனியின் ஆளும் செல்வந்த தட்டினர் அனுமதித்தார்கள்
என்பதை - Tagesspiegel
விமர்சனம் மேலும் கூட தெளிவுபடுத்துகின்றது.
பிஷ்ஷரின் வெளியுறவுக் கொள்கை----- அவரது சொந்த வார்த்தைகளிலேயே
சொல்வதென்றால் ``பசுமைக் கட்சி கொள்கையல்ல'' ஆனால் ''ஜேர்மனியின் கொள்கை`` - அதை வேறு பலரும்
செயல்படுத்தியிருக்க முடியும். என்றாலும் இடதுகள் ''அமைதிவாதத்தை துறத்தல்", 1960களில் கண்டனக்காரர்களாக
இருந்த தலைமுறையின் விசுவாசம் மாற்றப்பட்டுவிட்டது, அவர்கள் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் தேசிய கொடிக்கு
செல்வாக்குமிக்கவர்களாகவும் பணக்காரர்கள் ஆகவும் ஆகியிருந்தனர் - அது பிஷ்ஷரினால் மட்டுமே நிறைவேற்றப்பட
முடியும். |