World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Hurricanes' destruction deepens US farm crisis

சூறாவளிகளின் நாசம் அமெரிக்க பண்ணை நெருக்கடியை ஆழமாக்கியுள்ளது

By Jerry Isaacs
30 September 2005

Back to screen version

உயர்ந்து கொண்டு வரும் எரிபொருள் விலைகளால் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டு விட்ட தாக்கத்துடன் சேர்ந்து கொண்டு கத்தரினா மற்றும் ரீட்டா சூறாவளிகள் கடந்த மூன்று தசாப்தங்கள் கண்டிராத படுமோசமான வறட்சியினால் ஏற்கனவே மத்திய மேற்கு மாகாணங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க விவசாயத்திற்கு ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன.

பயிர்கள், கால்நடைகள் மற்றும் பண்ணை சாதனங்கள் அழிக்கப்பட்டதுடன் உலகச் சந்தைக்கு அமெரிக்க விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்கின்ற முக்கிய துறைமுகமும் மற்றும் உரவகைகள் வேதியல் பொருள்கள் மற்றும் தொழிற்துறை பண்டங்களை இறக்குமதி செய்கின்ற முக்கியமான துறைமுகமான நியூ ஓர்லியேன்சில் ஏற்பட்டுள்ள பேரழிவு, புயல் பாதித்த பகுதிகளில் மட்டுமல்லாமல் அமெரிக்க முழுவதுமாக மேலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை திவாலாக்கிவிட அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

பல கிராமப்புற விவசாய மற்றும் மீன்பிடி நகரங்களை துடைத்துக்கட்டிய 120 மைல் வேகத்தில் வீசிய காற்றும் சூறாவளி சீற்றமும், அதைத் தொடர்ந்து வந்த சூறாவளி ரீட்டா மேற்கு லூயிசியானா கிழக்கு டெக்ஸாஸ் பகுதிகளை செப்டம்பர் 24ல் தாக்குவதற்கு முன்னரே கத்தரினா சூறாவளியினால் ஏற்பட்ட விவசாய இழப்புக்கள் 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவித்தன. முதல் சூறாவளியில் பால்பண்ணை மற்றும் கோழிப்பண்ணைகளை வைத்திருப்பவர்கள் தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர், மின்சாரம் தடைப்பட்டுவிட்டதால் பாலை சேகரிப்பதும் குளிரூட்டுவதும் நடக்க முடியாத காரியமாகி விட்டது. பல விவசாயிகள் தங்களது பால் பொருள்களை அழித்துவிட்டனர். கோழிப்பண்ணை விவசாயிகள் மில்லியன் கணக்கான கோழிகளை இழந்து விட்டனர் மற்றும் கால்நடைகளில் அவை 70 சதவீதமான 100,000 வரை கால் நடைகளை இழந்துவிட்டனர். அவை தென்கிழக்கு லூயிசியானாவில் மட்டுமே அதிகமாக மடிந்துவிட்டன.

இதுதவிர, பருத்திச்செடிகளிலிருந்து சூறாவளியிால் பருத்தி பறந்துவிட்டது, நெல்வயல்கள் அழிக்கப்பட்டுவிட்டன மற்றும் லூசியானாவில் 20 சதவீத கரும்பு பயிர்கள் அழிந்துவிட்டன என்று அமெரிக்க விவசாயக் குழுவின் கூட்டமைப்பு தெரிவித்தது. லூயிசியானாவிலுள்ள நியூ ஐபிரியாவில் உப்புத் தண்ணீர் கரும்பு வயல்களில் புகுந்து விட்டது. கரும்பு செடிகளின் வேர்கள் பட்டுப் போயின, திரும்பவும் விவசாயிகள் தலைநிமிர்ந்து நிற்பதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த பிராந்தியத்தின் மீன்வளர்ப்பு தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இறால்களை பிடிக்கும் படகுகளும் உணவுக்கான சிப்பிகளை திரட்டும் படகுகளும் கடலில் இருந்து கரைக்கு தூக்கி வீசப்பட்டன, பக்குவப்படுத்தும் தொழிற்சாலைகள் சிதைந்துவிட்டன அல்லது மின்சார விநியோகம் இல்லாமல்போனதுடன் மாசுபட்ட தண்ணீர் கடலுக்குள் பம்புகள் மூலம் விடப்படுகிறது, அதன் மூலம் எதிர்காலத்தின் மீன் வளர்ப்பது அச்சுறுத்தப்படுகிறது. இந்த சூறாவளியாடல் ஒரு காலத்தில் முன்னணியிலிருந்த வளைகுடா கடற்கரைப்பகுதி இறால் தொழிற்துறைகளில் மூடப்பட்டுவிடும் என்று சில ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர் அது ஏற்கனவே ஈடுபட்டிருந்த படகுகளில் பாதி கடந்த தசாப்தத்தில் எரிபொருள் விலை உயர்வினாலும் குறைந்த விலை இறக்குமதிகளாலும் கைவிடப்பட்டுவிட்டன.

''படகுகள் தண்ணீருக்கு அடியில் மூழ்கிவிட்டன, அவற்றிற்கு உள்ளிருந்த மக்கள் மடிந்து விட்டனர்'' என்று மிசிசிப்பி பிலோக்சி பகுதியில் இறால் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல வியட்நாமை சேர்ந்த புலம் பெயர்ந்தோரில் ஒருவரான டங்கியன் சொன்னார். தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற பயனற்ற முயற்சியில் தங்களது படகுகளிலேயே தங்கியிருந்த தனது சக இறால் வளர்க்கும் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக அவர் கூறினார்.

மத்திய-மேற்கு இல்லிநோய், மிசூரி மற்றும் வின்கோசினில் ஏற்பட்ட வறட்சிகளை தொடர்ந்து வளைகுடா மாகாணங்களில் சூறாவளி பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. வறட்சி பாதித்த மாகாணங்களில் கிணறுகள் வற்றிவிட்டதால் பூச்சிகள் பற்றிக் கொண்டன. அவை தானிய மணிகளையும் சோயாபீன் வயல்களையும் சேதப்படுத்திவிட்டன. சென்ற மாதம் வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கை ஐயோவாவிற்கு அடுத்து இரண்டாவது பெரிய தானிய உற்பத்தி மாநிலமான இல்லிநோயில் தானியங்கள் பேரழிவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகும் மற்றும் உற்பத்தி சென்ற ஆண்டு காணப்பட்ட சாதனை அளவிற்கான மகசூலில் இருந்து 12 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. வறண்டு கொண்டிருக்கும் பயிர்களால் களைகளையும், பூச்சிகளையும் எதிர்த்து நிற்க முடியவில்லை. பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தி காப்பாற்றிக்கொள்வதற்கு போதுமான தண்ணீர் இல்லை.

இது தவிர, மத்திய மேற்கில் ஏற்பட்ட வறட்சி---1998-ற்கு பின் நடைபெற்றிறாத கடுமையான வறட்சி பாதிப்பு மிசிசிப்பி ஆற்றின் சில பகுதிகளையும் அதன் கிளை நதிகளான மிசூரி மற்றும் ஓஹியோ ஆறுகளையும் - ஏறத்தாழ மணல்மேடுகளாக ஆக்கிவிட்டது. அதனால் இழுவைப்படகுகளும் சிறிய படகுகளும் தரைதட்டி நின்றுவிட்டன. மற்றும் அந்த ஆற்றுக்கு மேலேயும் கீழேயும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை முற்றச்செய்யும் வகையில் கத்தரினா சூறாவளி தாக்கிய போது நியூ ஓர்லியேன்ஸ் துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டது மற்றும் அதன்மூலம் மிசிசிப்பி ஆற்றில் நூற்றுக்கணக்கான இழுவைப்படகுகள் தங்கிவிட்டன, அப்போதுதான் மத்திய மேற்கு விவசாயிகள் தங்களது இந்த ஆண்டு அறுவடையை படகுகளில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

மிசிசிப்பி ஆற்றின் முகத்துவாரத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய கப்பல் ஏற்றுமதி வசதியான உலகிலேயே மூன்றாவது பரபரப்பான நியூ ஓர்லியேன்சில் துறைமுகம் உட்பட தெற்கு லூயிசியானா துறைமுகம் அமைந்திருக்கிறது. நியூ ஓர்லியேன்ஸ் துறைமுகம் அதிகாரபூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டாலும் மற்றும் ஓரளவிற்கு ஆற்றுப்போக்குவரத்து மீண்டும் தொடங்கினாலும் அந்தத் துறைகத்தில் ஒரு சில பயிற்சிபெற்ற துறைமுக தொழிலாளர்கள்தான் வேலைக்கு திரும்பினர். அதனால் துறைமுகசாதனங்களும் சரக்குகள் ஏற்றுமதி வசதிகளும் கடல்வழித்தட கலங்கரை விளக்கம் போன்ற வசதிகளும் சிதைந்துவிட்டன.

செப்டம்பர் முதல் நவம்பர் வரை விவசாயப் பொருட்கள் கப்பல்கள் மற்றும் இழுவைப்படகுகளில் ஏற்றுகின்ற பணிகள் நடைபெறுவதன் பின்னர், சாதாரணமாக நியூ ஓர்லியேன்ஸ் துறைமுகம் 2006 மார்ச் அளவில் 80 முதல் 100 சதவீத அளவிற்கு தனது பணித்திறனை பயன்படுத்துவது வாடிக்கை என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்போது துறைமுகப்பணிகள் சீர்குலைந்திருப்பதால் விவசாயத்தில் மட்டுமல்ல ஒட்டு மொத்த அமெரிக்க பொருளாதாரமும் உலகளாவிய தாக்கங்களோடு முடக்கப்பட்டுவிட்டது. மிசிசிப்பி ஆறுதான் மிகப்பெரும்பாலான அமெரிக்க பகுதிகளுக்கு 15,000 மைல்கள் வரை ஆற்றுவழி போக்குவரத்தின் மத்திய உயிர் நாடியான தொடர்பாக உள்ளது. சீனா, ஜப்பான், மற்றும் இதர உலக சந்தைகளுக்கு சோயா, கோதுமை மற்றும் இதர தானியங்களையும், ஏறத்தாழ 65 சதவீத அனைத்து அமெரிக்க தானியங்களையும் ஏற்றுமதி செய்கின்ற உள்நாட்டில் விற்பனைக்கு அனுப்புகின்ற துறைமுகநகரமாக நியூ ஓர்லியேன்ஸ் உள்ளது. இறக்குமதி செய்யப்படுகின்ற கச்சா எண்ணெய்க்கு குறிப்பாக சவுதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து பெரிய கொள்கலன்கள் உள்ள கப்பல்களில் கச்சா எண்ணெய்யையும் மற்றும் அமெரிக்க விவசாயம் மற்றும் தொழிற்துறைகளுக்கு தேவையான வேதியல் பொருள்கள், எஃகு, நிலக்கரி மற்றும் கான்கிரீட் பொருள்களை இறக்குமதி செய்கின்ற நுழைவு வாயிலாகும்.

மத்திய மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலிருந்து விவசாயிகள் தங்களது விளைபொருள்களை பெரிய இழுவைப்படகுகளில் மிசிசிப்பி ஆற்று வழியாக நியூ ஓர்லியன்சிற்கு அனுப்புகிறார்கள் அங்கிருந்து அவை கடலில் செல்லும் பெரிய கப்பல்களில் ஏற்றப்படுகின்றன. ஆற்றுவழிப் போக்குவரத்துதான் பொருள்களை கொண்டு செல்வதற்கு மிக மலிவான போக்குவரத்து வசதியாக நீண்டகாலமாக பயன்பட்டு வருவதுடன் மற்றும் அங்கு மாற்றீடான கப்பல் போக்குவரத்து இல்லாததுடன் மிகப்பெரும் அளவில் பொருள்களை நீண்டதூரத்திற்கு ஏற்றிச் செல்வதற்கு போதுமான பார ஊர்திகளோ சரக்கு ரயில்களோ அமெரிக்காவில் இல்லை.

மத்திய மேற்கில் தானிய சாகுபடி குறைந்திருப்பதால் விலை அதிகரிப்பு ஏற்படக்கூடியதாக இருந்தபோதிலும் மிசிசிப்பி ஆற்றில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஒரு எதிர்பாராத தானியத் தேக்கம் ஏற்பட்டுள்ளமை விலைகளை குறைத்து வைத்துள்ளது. அத்துடன் பெரிய விவசாய வர்த்தக நிறுவனங்கள் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பக்குவப்படுத்தும் நிறுவனங்கள் இந்த ஆண்டு சென்ற ஆண்டைவிட குறைவாகத்தான் தானியங்களுக்கு கொள்முதல் விலை தருவார்கள். ஏனெனில் உயர்ந்து வருகின்ற பெட்ரோல் விலை ஏற்றத்திற்கும் கப்பல்போக்குவரத்து தாமதங்களால் ஏற்பட்டுள்ள தாமதக் கட்டணக்ளுக்கும் அவர்கள் ஈடுகட்ட வேண்டும். அமெரிக்க விவசாயிகள் ஏற்கனவே நுகர்வோர் உணவிற்கு செலவிடுகின்ற ஒவ்வொரு டாலரிலும் 20 சென்ட் தான் சம்பாதிக்கின்றனர். இப்போது விவசாயிகள் மூன்று வகையான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர். பண்டங்களின் விலை சரிந்து கொண்டிருக்கிறது, அறுவடை குறைந்துவிட்டதால் விவசாயிகளின் வருமானம் குறைந்து கொண்டு வருகிறது, மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விலை ஏற்றத்தாலும், பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்டு வேதியல் பொருள்கள் விலை ஏற்றத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அளவிற்கு அதிகமான விவசாய உற்பத்தியினாலும் கடந்த தசாப்தங்களில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியாலும் அத்துடன் 1988 இலும் 1997இலும் ஏற்பட்ட வறட்சிகளாலும், பரவலாக விவசாய பண்ணைகள் மூடப்பட்டுவிட்டன. மற்றும் கிராமப்புற மக்கள் நகர் பகுதிகளுக்கு குடியேறிவிட்டனர். கடந்த 200 ஆண்டுகளில் முதல் தடவையாக, 1990களின் இறுதியில் அமெரிக்காவின் குடும்பப் பண்ணை விவசாயிகளின் எண்ணிக்கை 1 மில்லியனுக்கும் குறைந்துவிட்டது. இதன் மூலம் Cargill and Archer Daniels Midland போன்ற மிக பிரமாண்டமான பூகோள நிறுவனங்களின் பிடிகளில் உலக விவசாய சந்தையின் கட்டுப்பாடு மேலும் அதிகரித்துவிட்டது.

அமெரிக்க விவசாயிகள் தற்போது சந்தித்து வருகிற நெருக்கடியை ஆழமாக்குகின்ற வகையில் புஷ் நிர்வாகம் தற்போது கடைசியாக அதிர்ச்சிகளை தந்திருக்கிறது. அது விவசாய துறையின் திட்டங்களின் விலை மானியங்கள் உட்பட 3 பில்லியன் டாலர் அளவிற்கு வெட்டுக்களை செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறது.

நியூ ஓர்லியன்ஸ் அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தில் உயிர்நாடியான பங்களிப்பை செய்துகொண்டு வருவதால் அந்தப் பகுதியின் வெள்ளத் தடுப்பு மற்றும் நகர உள்கட்டமைப்பு வசதிகள் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது மிகப்பெரிய கிரிமினல் குற்றமாகும். இதனுடைய இறுதி விளைவு என்னவென்றால் கடந்த 25 ஆண்டுகளாக இரண்டு அரசியல் கட்சிகளுமே மேற்கொண்ட வரவுசெலவு திட்ட வெட்டுக்கள் சுதந்திர சந்தை மோகம் ஆகிய கொள்கைகள் அமெரிக்க மக்களது வாழ்வின் பாதுகாப்பை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டது மட்டுமல்லாமல் பொருளாதார வாழ்வையே கடுமையாக சீர்குலைத்துவிட்டது.

நியூ ஓர்லியன்ஸ் துறைமுக மதிப்பீடுகளின்படி, 60,000 மக்கள் நேரடியாக லூயிசியானாவில் ஆற்று வழி, கடல் போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர் மற்றும் 107,000 பேர் தொழிற்துறையில் மூலம் தங்களது பணிகளை பெற்றனர். என்றாலும் நியூ ஓர்லியன்ஸ் மக்கள் முழுவதும் வெளியேற்றப்பட்டிருப்பதால் இவர்களும், மற்றைய தொழிலாளர்களும் பணிக்கு கிடைக்கமாட்டார்கள்.

சூறாவளி கத்திரினா செய்தி ஊடகங்களில் சில பிரிவினருக்கு திடீரென்று, பொருளாதாரத்திற்கு அடிப்படை தொழிலாளர்களே தவிர துணிச்சலான முதலாளிகள் அல்ல என்பதை உணரச்செய்துள்ளது. அவர்கள் தான் கப்பல்களில் சரக்குகளை ஏற்றுகிறார்கள் மற்றும் இறக்குகிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் வீட்டு வசதி, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற வசதிகள் தேவை, அவை இருந்தால்தான் அவர்கள் உயிர்நாடியான பொருளாதாரப் பணியை மேற்கொள்ள முடியும். ஆரம்பத்தில் நியூ ஓர்லியன்சின் பெரும்பகுதியை புல்டோசர்கள் மூலம் தலைமட்டமாக்கி மற்றும் தொழிலாள வர்க்க மக்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துவிட வேண்டும் என்று வாதிட்ட பல்வேறு அரசாங்க அதிகாரிகள் மீது இப்போது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

பூகோள அரசியல் சிந்தனையாளர் குழுவான Stratfor நிறுவனர் ஜோர்ஜ் பிரீட்மேன் சென்ற வாரம் New York Review of Books பகுதியில் எழுதியிருப்பபதைப் போல்: ''அமெரிக்காவிற்கு உயிர்நாடியாக தேவைப்படும் வசதிகளை இயக்குவதற்கு நமக்கு ஒரு தொழிலாளர் அணி தேவை மற்றும் அந்த அணி போய்விட்டது. மற்ற இயற்கை பேரழிவுகளை போன்று இல்லாமல், தொழிலாளர் சக்தி அந்த பிராந்தியத்திற்கு திரும்ப முடியாது, ஏனெனில் அங்கு அவர்களுக்கு வாழ இடமில்லை. நியூ ஓர்லியன்ஸ் போய்விட்டது மற்றும் நியூ ஓர்லியன்ஸ் பெருநகர பகுதியை சுற்றியுள்ளவை அழிந்துவிட்டது அல்லது மிகக் கடுமையாக சேதமடைந்துவிட்டது, எனவே அவற்றில் பெரும்பகுதி ஒரு நீண்டகாலத்திற்கு குடியிருக்க முடியாததாக ஆகிவிட்டது.

''பேரழிவினால், நோயினால் மாசுபட்டிருப்பதால் பொதுமக்கள் வெளியேறிவிட்ட நெருக்கடியை நியூ ஓர்லியன்ஸ் சந்திக்கிறது. இது ஒரு தேசிய நெருக்கடியும்கூட, ஏனெனில் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய துறைமுகம், அதைச் சுற்றி ஒரு நகரம் இல்லாமல் செயல்பட முடியாது. துறைமுகப் பணிகளும், வர்த்தகப் பணிகளும், தற்போதுள்ள பேய்கள் நடமாடும் நகரத்தில் நடைபெற முடியாத மற்றும் தற்போது மிகுதியாக உள்ள அகதிகள்தான் நியூ ஓர்லியன்ஸ் நகரம் என்று அழைக்கப்படுகிறார்கள். இது வசதிகள் அழிந்தை பற்றியதல்ல, இது எண்ணெய் கிடைக்கவில்லை என்பதைப் பற்றியதல்ல. இப்போது நகரத்தின் மக்களை இழந்துவிட்டோம் மற்றும் அமெரிக்காவின் மிகப்பெரிய துறைமுகம் முடங்கிவிட்டது.''

இந்த உணர்வுகளை எதிரொலிக்கின்ற வகையில், லூயிசியானா பொருளாதார வளர்ச்சி செயலாளர் மைக்கல் ஒலிவர் New york Times இடம் ''எங்களது மிகப்பெரிய கவலை என்னவென்றால் நாங்கள் மீண்டும் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் மற்றும் அது எழுந்து நடமாட வேண்டும் மற்றும் தொழிலாளர் சக்தி பணியாற்றுவதற்கு மீண்டும் கிடைக்க வேண்டும் மற்றும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது கிடைத்தாக வேண்டும், வர்த்தக பணிகள் மட்டுமல்ல அந்தப் பணிகளை செய்வதற்கு வேலைக்கார படைகளும் தேவை'' என குறிப்பிட்டார்.

என்றாலும், வெள்ளை மாளிகை இந்தப் பேரழிவின் நீண்டகால பொருளாதார பாதிப்பை ஏறத்தாழ உணர்ந்துகொள்ளவில்லை. தங்களது வீடுகளை, பணிகளை, வாழ்வை இழந்துவிட்ட பல உழைக்கும் மக்களது துயரத்தின் அளவை பொருட்படுத்தவில்லை. இப்படி உணர்வே இல்லாமல் செயல்படுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகின்ற வகையில் இந்த வாரம் வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் தலைவர் வாஷிங்டன் வங்கியாளர்கள் மாநாட்டில் பேசுகின்றபோது சூறாவளிகள் ரீட்டாவும், கத்தரினாவும் அமெரிக்க பொருளாதாரத்தை ஒப்புநோக்கும்போது ''மிதமாகத்தான் பாதிக்கும்'' என்று கூறியிருக்கிறார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved