ஐரோப்பா
:
பிரான்ஸ்
French Socialist Party congress backs government
repression
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி பேராயம் அரசாங்க அடக்குமுறைக்கு ஆதரவு
By Stephane Hugues and Antoine Lerougetel
28 November 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
நவம்பர் 18-20 தேதிகளில்
Le Mans ல்
நடைபெற்ற பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் அவசர பேராயத்தில், பிரான்ஸ் நாட்டைக் காக்க கட்சியில் பல பிரிவுகளும்
ஒற்றுமையுடன் செயல்ப்பட வேண்டும் என்று உறுதிபூண்டன.
பிரான்சின் வறிய புறநகர்ப்பகுதிகளில் இளைஞர்கள் போலீசிற்கு எதிராக நடாத்திய
எதிர்ப்புகளை அடக்குவதற்கு, ஜனாதிபதி ஜாக் சிராக்கின் கோலிச அரசாங்கம் மேற்கொண்டிருந்த முயற்சிகளுக்கு
கட்சி முன்னர் ஆதரவை வளங்கியிருந்தது. பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனும், உள்துறை மந்திரி நிக்கோலா
சார்க்கோசியும் அவசரகால நிலையை பெப்ரவரி 21 வரை நீடித்தபின்னர்தான், சோசலிஸ்ட் கட்சி எதிர்ப்பு
பாசாங்கைக் காட்டியது.
ஜனநாயக உரிமைகளைப் பெரிதும் குறைப்பதற்கான அசாதாரண அதிகாரங்களை
அவசரகால நிலைமை போலீசிற்கும், அரசாங்கத்திற்கும் அளித்துள்ளது. இந்த அதிகாரங்கள் இளைஞர் கொடுக்கும்
தொந்திரவுகளை மட்டும் இலக்கு கொள்ளாமல், அரசாங்கத்தின் வலதுசாரி "சுதந்திர சந்தை" கொள்கைகளை
பரந்தளவில் எதிர்க்கும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பகுதிகளின் மீதும் மிகவும் அடிப்படையில் எதிராக உள்ளது.
பெரும்பாலும் புலம்பெயர்ந்திருந்த இளைஞர்களால் ஏற்பட்டிருந்த அமைதியின்மை, தீவைப்பு போன்ற தாக்குதல்கள்
ஏற்கனவே குறைந்துவிட்ட போதிலும் கூட, நவம்பர் 15 அன்று அவசரகால நிலைமை மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.
Le Mans மாநாட்டில், அவசரகால
நிலைமை நீடிக்கப்படுவது பற்றி சோசலிஸ்ட் கட்சி சம்பிரதாயபூர்வமாக அறிவித்தாலும், போலீஸ் அடக்குமுறைகளுக்கு
ஆதரவு தருவதை அடிக்கோடிட்டு காட்டியது. மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவர்
Francois Hollande
தன்னுடைய முடிவுரையில் அறிவித்தார்: "வலதை விட இடது பொது ஒழுங்கையும் அமைதியையும் பராமரிப்பதில்
நம்பகத்தன்மை உடையது என்பதை நாம் காட்ட வேண்டும்."
கட்சியின் முதல் செயலாளர்
Francois Hollande
தலைமையில் பெரும்பான்மை பிரிவு, Arnaud
Montebourg, Vincent Peillon, Henri Emmanuelli
ஆகியோரின் தலைமையில் உள்ள புதிய சோசலிஸ்ட் கட்சி பிரிவு, முன்னாள் பிரதம மந்திரி
Laurent Fabius
இன் தலைமையில் ஒரு பிரிவு என்று பேராயத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் இருந்தன; ஆனால் இவை தேர்தலில்
வாக்காளர்களுக்கு ஒரு இடது முகத்தை காட்டும் வகையில் பொதுத்திட்டம் ஒன்றில் இணைந்தவை ஆகும். அனைத்து
அக்கறைகளின் நோக்கமும், சட்டம் ஒழுங்கு, இவற்றுடன் குறைந்தபட்ச சமூக சீர்திருத்தங்களுக்கு அர்ப்பணித்துக்கொண்ட
கட்சி என்ற வடிவில், பெருகிவரும் சமூக மற்றும் அரசியல் அமைதியின்மையை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர
பிரெஞ்சு ஆளும் உயர்தட்டக்கு ஒரு வாகனத்தை வழங்குவதாகும்.
சிராக் மற்றும் அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த ஜோன்-பியர் ரஃப்ரன் ஆகியோர்
இணைந்து, ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பிற்கான ஆதரவிற்கு நடத்திய கூட்டுப் பிரச்சாரம் பேரழிவுத் தோல்வி
அடைந்ததை அடுத்து, இந்த 614 பேராளர்களை கொண்டிருந்த, 4,500 பேர் கலந்து கொண்ட பேராயம் கூட்டப்பட்டிருந்தது.
பிரான்சில் மே மாதம் நடந்த வாக்கெடுப்பில் உறுதியாக "வேண்டாம்" வாக்கு வந்தபின்னர், நெதர்லாந்திலும்,
நலன்புரி சேவைகளை அகற்றுவதை இலக்காக கொண்டிருந்த, அரசியல் அமைப்பின் புதிய தாராளவாத கொள்கைகளுக்கு
மக்கள் தங்கள் எதிர்ப்பை இதேபோன்று வெளிப்படுத்தியிருந்தனர்.
இதற்கு இடைப்பட்ட மாதங்களில், சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரான்சின் முழு ஆளும்
உயரடுக்குகளின் நிலைமை இன்னும் மோசமாகத்தான் போயிற்று; வேலையிழப்புக்கள், அரசுப் பணிகள் திட்டமிட்டு
தனியார் மயமாக்கல் இவற்றிற்கு எதிராக தொடர்ச்சியான போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் ஏற்பட்டன; இதன்
பின்னர் சமூக இழப்பு ஏற்படல், பாரபட்ச நிலை, பாரிஸ் புற நகரில் போலீஸ் தவறாக அதிகாரத்தை
படுத்தியமை ஆகியவற்றிற்கு எதிராக பெரும் சீற்றம் வெடித்து எழுந்தது.
Le Mans பேராயம் முடிவடைந்த
மறுவாரம் காலவரையற்ற ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து பாரிஸ் பேருந்து மற்றும் சுரங்க
ரயில் தொழிலாளர்கள் மற்றும் தேசிய ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் என்பவற்றைக் கண்டது.
அல்ஜீரியாவில் காலனித்துவ ஆட்சிக்கு ஏற்பட்டிருந்த எதிர்ப்பை அடக்குவதற்கு தயாரிக்கப்பட்டிருந்த
1955ம் சட்டத்தின் சிறப்பு விதிகளை பயன்படுத்தி அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை வெட்டிக் குறைந்திருந்த
நிலைமையில் பேராளர்கள் கூடினர்.
துணைப்பாதுகாப்பு CRS,
மற்றும் போலீஸார் புலம்பெயர்ந்தோர் வசிக்கும் புறநகர்
பகுதிகளில் இருந்து திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க சோசலிஸ்ட் கட்சி
மறுத்துவிட்டது. பன்னிரண்டு நாட்களுக்காக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆரம்ப அவசரகால நிலைமைக்கு அது
முதலில் ஆதரவு கொடுத்திருந்தது. கட்சிக்குள் தன்னை "இடது" என்று முன்னிலைப்படுத்திக் கொள்ளும்
Vincent Peilon
அப்பொழுது கூறியிருந்தார்: "குடியரசின் அரசு மதிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்பினால், நிக்கோலா
சார்க்கோசியை பற்றி நான் என்ன கருத்துக் கொண்டு இருந்தாலும்... உள்துறை மந்திரி இராஜிநாமா செய்ய
வேண்டியதில்லை, ஏனெனில் கார்களை எரித்துக் கொண்டிருக்கும் மக்களே அவர் அப்படிச்செய்யவேண்டும் என
கோருகிறார்கள்."
கம்யூனிஸ்ட் கட்சியும், மற்றும்
Ligue Communiste Revollutionnaire, Lutte
Ouvriere போன்ற குட்டி முதலாளித்துவ தீவிரப் போக்கினரும்
கலகப்படை பிரிவு போலீசார் புலம்பெயர்ந்தோர் குடியிருப்பு சேரிகளில் இருந்து அகற்றப்படவேண்டும் என்ற
கோரிக்கைக்கு அழைப்பு விட மறுத்துவிட்டன.
"குடியரசை" பாதுகாத்தலில் அணிகள் நெருங்கிவரல் என்பது
Le Mans ல்
சோசலிஸ்ட் கட்சி நிலைநாட்டிய ஐக்கியம் பற்றி புரிதலுக்கு திறவு கோல் ஆகும். "சமூக மற்றும் நகர்ப்புற
நெருக்கடிக்கு விடையிறுக்கவும்" என்ற தலைப்பில் அனைத்து பிரிவினராலும் ஆதரவு கொடுக்கப்பட்ட ஒரு சிறப்பு
தீர்மானத்தில் சோசலிஸ்ட் கட்சி ஒரு முதலாளித்துவ கட்சி என்பதற்கான அடிப்படை காணப்பட இருக்கிறது.
அவசரகால நிலைமை அகற்றப்படவேண்டும் என்று கோருவதற்கு பதிலாக இது பிரகடனப்படுத்தியதாவது: "இந்த
வன்முறை [கலகப் பிரிவுப் போலீசாரால் அல்ல, இளைஞர்களால் ஏற்பட்ட] ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதும் அல்ல,
மன்னிக்கத்தக்கதும் அல்ல."
தீர்மானம் மேலும் கூறுவதாவது: "உள்ளூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை
ஊழியர்கள், மேயர்கள், போலீஸ் அதிகாரிகள், தீயணைப்பு படையினர், மக்களை காத்த சமூகப் பணியாளர்கள்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி நின்றவர்கள், அமைதியை காத்த அனைவருக்கும் சோசலிஸ்ட் கட்சி தன்னுடைய
பாராட்டை தெரிவித்துக் கொள்ளுகிறது."
எப்படியிருந்தபோதும், போலீஸ் அடக்குமுறை அதன் தன்மையில் ஒழுங்கை
காக்கமுடியாது என்றும் சமூக எதிர்ப்பை எரியூட்டத்தான் பயன்படும் என்பதை சோசலிஸ்ட் கட்சி அறிந்துள்ளது.
தொழிலாள வர்க்கத்திடையே ஆதரவை திரட்டும் வகையில் அழைப்பு விடுவதற்கு, "சமூக நெருக்கடி மற்றும்
தடையற்ற சந்தைக் கொள்கையினால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கும்" தொழிலாளர் வர்க்க குடியிருப்புப் பகுதிகள்,
சமூகப் பணிகள், சங்கங்கள் ஆகியவற்றிற்கு நிதிகளைக் குறைக்கும் அரசாங்க நடவடிக்கைகளுக்கும் அறிக்கை எதிர்ப்பு
தெரிவிக்கிறது என்றும் கூறியுள்ளது. வறிய நிலையில் உள்ள குடியிருப்புவாழ் மக்கள் மேன்மையுறும் திட்டத்திற்குத் தான்
பாடுபடும் என்றும்.... தொழிலாள வர்க்க புறநகர் பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள் அவர்களுடைய மாறுபட்ட
பூர்விகத்தினால் இழிவாக முத்திரை பெறப்பட்டுள்ளவர்களுக்கும் ஏனைய குடிமக்கள் போலவே உரிமைகளும்
கடமைகளும் உண்டு" என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
இந்த நான்கு பக்க ஆவணத்தில் அவசரகால நிலைமை பற்றி இரண்டு வரிகளே
வந்துள்ளன ("தோல்வியுற்ற ஒரு கொள்கையை தொடர வேண்டும் என்பதை நியாயப்படுத்துவதற்காக அரசியல்
அளவில் வன்முறையை வலது பயன்படுத்துகிறது. நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதிவிலக்குகளுக்கும், அவசரகால
நிலைமைக்கும் அது இணக்கமாக உள்ளது). பிரிட்டனின் பிரதம மந்திரி டோனி பிளேயரை பற்றி கூறும் அதன்
சொல்லாட்சியில் கட்சி தன்னுடைய உண்மையான நடவடிக்கையை தெளிவாக்கியுள்ளது. தீர்மானம் கூறுவதாவது:
"வன்முறையை கடுமையாக சந்திக்க வேண்டும்; வன்முறைக்கான காரணங்களையும் கடுமையாக எதிர்கொள்ள
வேண்டும்."
குடியிருப்புப் பகுதிகளுக்கான சீர்திருத்தங்களின் வேலைத்திட்டம் பற்றிய சிறப்புத்
தீர்மானத்தின் முதலாவது கூற்று, "குற்றத்தை எதிர்த்து, சிறப்பாகக் கறுப்புப் பொருளாதாரத்தை எதிர்த்துப்
போராடும் ஒருங்கிணைந்த மூலோபாயத்தை நிறுத்தும் வகையில் அனுபவமிக்க அதிகாரிகளாலான பணியாளர்கள், முறையான
போலீஸ் நிலையங்களுடன் கண்காணிக்கும் புதிய சமூகத்தை அமைத்தல் ஆகும்."
குறைந்தபட்ச சீர்திருந்த நடவடிக்கைகள் வேண்டும் என்று மாநாடு
கூறியுள்ளபோதிலும்கூட, சமூகச் சீர்திருத்தங்களுக்கான எந்த அர்ப்பணிப்பையும் சோசலிஸ்ட் கட்சி எப்பொழுதோ
கைவிட்டுவிட்டது. 1981ம் ஆண்டு பிராஸ்சுவா மித்திரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது,
தேசியமயமாக்கல் உட்பட பல திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்; ஆனால் 18 மாதங்களுக்குள்ளாகவே
சர்வதேச நிதியச் சந்தைகளினால் அவர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டார். அதன் பின் அவர் கடும் சிக்கன
நடவடிக்கையை மேற்கொண்டார்; அதுதான் அப்பொழுதில் இருந்து சோசலிச கட்சிகளின் தரக்குறியீடாக உள்ளது.
Hollande
இன் தலைமை, இந்த மரபுரிமைப்பண்பை ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிய கருத்துவாக்கெடுப்பில் "வேண்டும்"
வாக்கிற்காகப் பிரச்சாரம் செய்தபொழுது காத்துநின்றது.
"வேண்டாம்" வாக்குக் கோரி,
Laurent Fabius
தலைமையில் ஒரு சிறுபான்மை ஏற்பட்டு, கட்சி பிளவடைந்தது; அது அரசுத்துறை தனியார்மயமாக்கப்படுவது,
மற்றும் பொதுநலத் திட்டங்கள் தகர்ப்பு இவற்றை எதிர்க்கும் திட்டங்களை கொண்டதாகவும் கூறிக்கொண்டது.
ஆனால் மித்திரோனின் நிதியமைச்சரும் பின்னால் பிரதம மந்திரியுமாக இருந்த
Fabius மில்லியன்
கணக்கில் வேலையிழப்புக்கள் மற்றும் ஊதிய முடக்கம் ஆகியவற்றை செயல்படுத்தினார்.
மிக சமீப காலத்தில், நிதிமந்திரியாக
Fabius உம்
சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக Hollande
உம் இருவரும் பிரதம மந்திரி Lionel Jospin
உடன் ஒருங்கிணைந்து சோசலிஸ்ட் கட்சித் தலைமையிலான பன்முக
இடது அரசாங்கம் இருந்தபோது, ஜனாதிபதி சிராக்குடன் முற்றிலும் இணைந்து, சிராக்கின் முந்தைய
Alain Juppe
தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து சிறிதும் வேறுபட்டிராத "தடையற்ற சந்தை" கொள்கைகளை சுமத்தினர்.
அவருடைய ஐந்தாண்டுகாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய தாராளவாத கொள்கைக்கு எதிராக
வாக்காளர்கள் 2002 ஜனாதிபதி தேர்தலின்போது அவரை மூன்றாம் இடத்திற்கு தள்ளினர். ஜாக் சிராக்கைவிட
குறைந்து வாக்குகளை பெற்றதோடு மட்டுமல்லாமல் புதிய பாசிச தேசிய முன்னணி வேட்பாளர்
Jean-Marie Le Pen
ஐ விடக் குறைவான வாக்குகளைத்தான் அவர் பெற்றார்.
இதற்கு விடையிறுக்கும் வகையில்
Hollande ன்
தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி, சிராக்கிற்கு ஆதரவைக் கொடுத்தது; சிராக், தேசிய முன்னணியால்
"குடியரசுக்கு" அச்சுறுத்தல் என்ற நிலையை எதிர்க்கும் ஜனநாயகவாதி என்றும் கூறியது. சோசலிஸ்ட் கட்சி,
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் லீக் அனைத்தும் சிராக்கிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற
பிரச்சாரத்தை மேற்கொண்டன; அதன் விளைவாக அவர் 82 சதவிகித வித்தியாசத்தில் லூ பென்னை
தோற்கடித்தார். இந்தப் பிரிவுகள் அனைத்தும் சிராக்/ டு வில்ப்பன் ஆட்சிக்கும் அதன் தொழிலாள வர்க்கத்தின்
மீதான தாக்குதலுக்கும் அரசியல் பொறுப்பை ஏற்கவேண்டும்.
Le Mans ல் தங்கள் பிளவுகள்
பலவற்றையும் மறைத்து, சோசலிஸ்ட் கட்சியின் இந்த பழைய சான்றுகளை மறைக்கும் வகையிலும்,
Hollande இன்
தலமையின் சிறப்பை மறுபடியும் வெளிக்கொண்டு வருவதற்காக ஒன்று சேர்ந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய
அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு "வேண்டாம்" வாக்கு கிடைத்த பின்னர் கட்சியின் தலைமை குழுக்களில் இருந்து
பெரும்பான்மை பிரிவு Fabius
ஐ வெளியேற்றியது.
மாநாட்டிற்கு முன்பு, மூன்று பிரிவுகளும், வாக்களிக்க வேண்டிய தீர்மானங்களை கட்சி
உறுப்பினர்கள் முன் வைத்தன. Hollande
தலைமையில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் 53 சதவிகிதம் என்ற குறுகிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றன; புதிய
சோசலிஸ்ட் பிரிவு மற்றும் Fabius
பிரிவுகள் எஞ்சியிருந்த வாக்குகளை கிட்டத்தட்ட சமமாக பெற்றன.
Hollande தலைமை
பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவை, இதன் திட்டத்தை வாக்காளர்கள் வெளிப்படையாக நிராகரித்திருந்த
பின்னும் கூட தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பது கட்சியின் வலதுசாரி தன்மையின் அளவை காட்டுகிறது. ஆனால்
கட்சிக்குள் பெரும்பான்மை என்பது நாட்டின் வாக்களார்களுடைய ஆதரவு என்று மாறிவிடாது.
கட்சியின் நலன்களை மீண்டும் பெறும் வகையில், தலைமை போட்டி சவால்கள்
அனைத்தும் ஒதுக்கிவைக்கப்பட்டு, தலைமை செயலர் வேட்பாளராக
Hollande
மட்டுமே நிறுத்திவைக்கப்பட்டார். இதற்கு பதிலீடாக
Fabius கட்சியின் முக்கிய குழுக்களுள் மீண்டும் சேர்க்கப்பட்டார்;
Arnaud Montebourg ஐ சுற்றியிருந்த மற்றய எதிர்ப்புத்
தலைவர்களும் அதேபோல் பதவிகளை பெற்றனர்.
உழைக்கும் மக்களுக்கு ஒரு வேண்டுதல் விடுக்கும் இடது முழக்க திட்டத்துடன் பெயரளவு
எதிர்ப்பை வழங்கியதன் மூலம் அது கட்சித் தலைமைக்கு மற்றொரு சாதகத்தையும் கொடுத்தது. இறுதியில்
தொகுத்துக் கூறப்பட்ட தீர்மானத்தில் உள்ள குறைந்தபட்ச சீர்திருத்தங்கள்
Fabius ஆல்
முன்மொழியப்பட்டவைகளிடமிருந்து பெரும்பாலும் கடன்வாங்கப்பட்டவை ஆகும்: குறைந்த பட்ச ஊதியம் 1,500
யூரோக்கள், ஒய்வூதியங்கள் மீதான அரசாங்கத்தின் மிகவும் சமூகரீதியில் அழிவை தரும் மசோதாவை
திரும்பப்பெறல், 35 மணி நேர வார வேலைக்கு ஆதரவு, கூடுதலான இலாபம் பெறுவதற்காக தொழிலாளர்களை
நீக்கும் நிறுவனங்களுக்கு அபராதங்கள், EDF
என்னும் மின்சார பயன்பாட்டு நிறுவனம் பொது நிறுவனமாக பராமரிக்கப்படல். இது ஐரோப்பிய தொழிலை காப்பதற்கு
வெளிக் காப்பு வரி, புதிய உறுதித்தன்மை ஒப்பந்தத்துடன் யூரோ மண்டலத்தை மீண்டும் ஏற்படுத்தல், மற்றும் வேலைகள்
மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க ஐரோப்பிய மத்திய வங்கியை, "அரசியல், ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள்"
கொண்டுவருதல் போன்ற தேசியவாத மற்றும் பாதுகாப்பு பொருளாதார நடவடிக்கைகளை ஆதரிப்பதுடன் இணைந்து
இருக்கிறது.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2007 பாராளுமன்ற தேர்தல்களில் கோலிஸ்டுகளுக்கு
மாற்று என்று தன்னை சோசலிஸ்ட் கட்சி காட்டிக் கொள்ள வேண்டும் என்றால், இத்தகைய நடவடிக்கைகள் தேவை
எனக் கருதப்படுகின்றன. ஆயினும், பிரான்சை பூகோளரீதியாய் போட்டிமிக்கதாக செய்வதற்கு அவசியம் என்று
பெரு நிறுவனங்கள் அறிவிக்கும் மேலும் சமூகவிரோத நடவடிக்கைகளுக்கான அவற்றின் கோரிக்கைகளுடன் முரண்படும்
வண்ணம் எதுவும் செய்வதற்கு சோசலிஸ்ட் கட்சியிடம் விருப்பம் இல்லை. அது அதிகாரத்திற்கு வருமேயாயின், கோலிஸ்டுகளின்
அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு சோசலிஸ்ட் கட்சியின் நடப்பு ஆதரவு உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக
உரிமைகள் மீதான புதிய தாக்குதல்களால் இணைந்து கொள்ளப்படும்.
See Also :
பிரான்ஸ்:
அவசரகாலநிலை மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது
பிரான்ஸ்: அவசரகால
நிலைமையை நியாயப்படுத்துவதற்கு கோலிச அதிகாரிகள் இனவெறியை தூண்டிவிடுகின்றனர்
பிரான்ஸ்: "அதி இடது" எல் சி
ஆர் போலீஸ் ஒடுக்குமுறை மீது ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுக்கிறது
பிரான்சில் அறிவிக்கப்பட்டுள்ள
அவசரகால நிலைமையை எதிர்!
Top of page |