WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Australia: 500,000 workers demonstrate
against Howard's industrial legislation
ஆஸ்திரேலியா: ஹோவார்டின் தொழிற்துறை சட்டத்திற்கு எதிராக 500,000 தொழிலாளர்கள்
ஆர்பாட்டம்
By Rick Kelly
16 November 2005
Back to screen
version
தற்போது நாடாளுமன்றத்தில் மிகவேகமாக நிறைவேற்றப்பட்டுவரும் ஆஸ்திரேலியாவில்
ஹோவேர்ட் அரசாங்கத்தின் தொழிற்துறை உறவுகள் சட்டத்திற்கு எதிராக நேற்று 500,000 மக்கள் கண்டனப் பேரணி
நடத்தியதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த எதிர்ப்பு ஈராக் போருக்கு எதிராக 2003ல் நடைபெற்ற பேரணிகள்
நீங்கலாக ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய அரசியல் ஆர்பாட்டமாகும்.
ஆஸ்திரேலியாவின் தொழிற்துறை உறவுகள் (Australia's
industrial relations-IR) முறையில் தீவிர திருத்தங்களை
அரசாங்கம் செய்து வருவதற்கு தொழிலாள வர்க்கத்திற்குள் நிலவுகின்ற தீவிர எதிர்ப்பை எதிரொலிக்கின்ற வகையில் இந்த
பாரிய கலந்துகொள்ளல் அமைந்திருந்தது. புதிய சட்டங்கள் தொழிலாளர்களின் ஊதியங்களை கீழறுப்பதாகவும் கூட்டுப்பணி
ஒப்பந்தங்களுக்கு பதிலாக தனிப்பட்டவர்களது ஒப்பந்தங்களுக்கு வழிசெய்வதாகவும், நியாயமற்ற தொழிற்துறை பணி நீக்க
சட்டங்களை இல்லாது செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
''பணித்தேர்வுகள்'' என்றழைக்கப்படும் தொழிற்துறை உறவுகள் சட்டங்களுக்கு எதிரான
வெகுஜன எதிர்ப்பை மட்டுமே இந்த கண்டனங்கள் எடுத்துக்காட்டுவதோடு நின்றுவிடாமல், ஹோவார்ட் அரசாங்கத்தின்
ஒட்டு மொத்த செயல்திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்திருக்கிறது. ஹோவார்ட் அரசாங்கத்தின் மேலெழுந்தவாரியாக
சமுதாய ஸ்திரத்தன்மைக்கும் அரசியல் மேலாதிக்கத்திற்கும் கீழ், ஆழமாக வேர்விட்டிருக்கும் வர்க்க பிளவுகளும் வெடித்துச்
சிதறும் கொண்ட அதிருப்தியும் அமைந்துள்ளது.
ஏறத்தாழ 240,000 தொழிலாளர்களும் இளைஞர்களும் கலந்து கொண்ட மிகப்பெரும் கண்டனப்
பேரணி மெல்போர்னில் நடைபெற்றது. பிராந்திய விக்டோரியா மையங்களில் மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்
பேரணியில் கலந்து கொண்டனர். நியூ செளத்வேல்ஸ் முழுவதிலும் 227 தனித்தனி வேலைநிறுத்த கூட்டங்கள் நடைபெற்றன.
அவற்றில் 100,000 மக்கள் கலந்து கொண்டதாக மதிப்பிடப்படுகிறது. அதில் சிட்னி பேரணியில் கலந்து கொண்ட
30,000 தொழிலாளர்களும் அடங்குவர். இதர நகரங்களிலும் கண்டனங்கள் நடைபெற்றன பேர்த்தில் 15,000 மக்களும்
அடிலெய்ட்டில் 10,000 பேர் மற்றும் பிரிஸ்பேனில் 15,000 பேர் பேரணிகளில் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணிகளில் கலந்து கொண்ட பல்வேறு பிரிவுகளை சார்ந்த மக்களிடம் எந்த
அளவிற்கு பரந்த எதிர்ப்பு நிலவுகிறது என்பதை காட்டும் வகையில் நடைபெற்றது. தொழிற்துறை தொழிலாளர்களுடன்
ஆசிரியர்கள், பொது சேவகர்கள், செவிலியர்கள், மற்றும் உயர்மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய
தொழிலாளர்களோடு இணைந்து நின்று பேரணிகளில் பங்கெடுத்துக் கொண்டனர். சுய தொழில் செய்யும் மக்கள், ஓய்வு
பெற்றவர்கள், பல்கலைக்கழக மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோரும் ஏராளமாக பங்கெடுத்துக் கொண்டனர். பல
தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளில் வந்திருந்து தங்களது தொழிற்சங்கங்களின்
பதாகைகளுடன் பேரணியில் கலந்து கொண்டனர், ஆனால் ஏராளமான மக்கள் சுயாதீனமாக பேரணிகளில் கலந்து
கொண்டனர்.
இது குறிப்பாக மெல்போர்ன் பேரணியில் தெளிவாகத் தெரிந்தது, இதற்கு முன்னர்
IRதொழிற்துறை
உறவுகள் சீர்திருத்தங்களுக்கு எதிரான முந்தைய கண்டனப் பேரணி ஜூன் 30இல் நடைபெற்றது. அதை விட அதிகமாக
தற்போது பேரணியில் மக்கள் கலந்து கொண்டனர் அப்போது 1,00,000 பேர் பங்கெடுத்துக் கொண்டனர். நேற்று
நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை விக்டோரியா வர்த்தக மண்டப சபை எதிர்பார்ப்பை விட
அதிகமாக இருந்தது. எடுத்துக்காட்டாக விக்டோரியாவில் தனியார் மற்றும் அரசாங்கப் பள்ளிகளைச் சார்ந்த 20,000
ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்ம் செய்துவிட்டு அந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
மத்திய அரசாங்கம் 50 மில்லியன் டாலர்களை செலவு செய்து திட்டப்படி
தொழிலாளர்களது ஊதியமும் சலுகைகளும் நீடிக்கும் என்று உறுதி தரும் விளம்பர பிரச்சார இயக்கத்தை நடத்தி வந்த
பின்னரும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பேரணியில் திரண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்களில்
மிகப்பெரும்பாலோர் அரசாங்கமும் தங்களது தொழிலதிபர்களும் விடுத்த அச்சுறுத்தல்களையும் புறக்கணித்து கலந்து
கொண்டனர். முதலாளியின் அனுமதியில்லாமல் கண்டனங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்ற சட்ட விதிகளை புறக்கணித்து
மெல்போர்னில் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். மற்றும் 80 சதவீத
வர்த்தக கட்டுமான பணிகள் நிறுத்ப்பட்டன. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 22,000 டாலர்களும்
தொழிற்சங்கங்களுக்கு 110,000 டாலர்களும் அபராதம் விதிக்க முடியும். கியூன்ஸ்லாந்தைச் சேர்ந்த மூன்று கடற்பகுதி
தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் மற்றும் அவர்கள் கப்பலில் பணியாற்ற மறுத்து பேரணிகளில்
பங்குபெற்றதற்காக தொழிலதிபர்களால் வேலையிலிருந்து நீக்கப்படலாம்.
அரசாங்கத்தின் ஒட்டு மொத்த செயல் திட்டத்தின் மீது எந்தளவிற்கு ஆத்திரம் நிலவுகிறது
என்ற ஆழத்தை வெளிப்படுத்துகிற வகையில் வீடுகளில் தயாரிக்கப்பட்ட பல பதாகைகள் எடுத்துக்காட்டின.
''தொழிற்துறை சீர்திருத்தம் --ஹோவேர்டின் பேரழிவுகரமான ஆயுதங்கள்'', ''ஹோவார்ட் ஒரு பணியிட
பயங்கரவாதி'', ''ஹோவேர்டின் பெரிய மோசடி வேலை'', ''ACTU
ஹோவேர்டை தடுத்து நிறுத்த 24 மணி நேர பொது வேலை நிறுத்த அழைப்பை விடுத்தாக வேண்டும்.'',
"பணித்தேர்வு-- வெகுஜன மோசடி ஆயுதம்'' என்பது போன்ற பல பதாகைகள் பேரணியில் எடுத்து வரப்பட்டன.
உலக சோசலிச வலைதள நிருபர்கள் பேரணியில் கலந்து கொண்ட பலரை பேட்டி
கண்டனர். அவர்கள் அரசாங்கத்தின் மீது தங்களது மகத்தான விரோதப்போக்கை வெளியிட்டனர் ஜனநாயக உரிமைக்கான
பரந்த விளைபயன்கள் மற்றும் பெருகி வரும் சமூக சமத்துவமின்மைகள் தொடர்பாக கவலையை வெளியிட்டனர்.
தொழிற்கட்சி பல்வேறு பிரச்சனைகளில் குறிப்பாக ''பயங்கரவாத- எதிர்ப்பு'' மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க
தவறியது குறித்து பொதுவான வெறுப்பு மற்றும் மாயையிலிருந்து மீண்ட மனப்பான்மை நிலவுகிறது. அது தொழிற்துறை
உறவுகள்
சட்டத்துடன் சம்மந்தப்பட்டிருப்பதாக மக்களில் பலர் கருதுகின்றனர்.
(See "Australian workers denounce new
industrial laws")
இந்த உணர்வுகள் எதுவும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் உருவாக்கப்பட்ட பேரணிகளில்
ஆற்றிய உரைகள் மற்றும் ஒளிபரப்புக்களில் இடம் பெறவில்லை. நாடு முழுவதிலும் நடைபெற்ற நூற்றுக்கணக்கான பேரணிகள்
செயற்கை கோள் வீடியோ தொடர்பு மூலம் இணைக்கப்பட்டது அதில் பல்வேறு தொழிற்கட்சி, பசுமைக்கட்சி, ஜனநாயக
அரசியல்வாதிகள் பேராசிரியர்கள் மற்றும் மதத்தலைவர்களின் பதிவு செய்யப்பட்ட உரைகள் ஒளிபரப்பப்பட்டன.
ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்க சபையில் (ACTU)
தலைவர் ஷரன் பரோ மற்றும் செயலாளர் கிரக் கோம்பட் ஆகியோரது உரைகளும் ஒளிபரப்பப்பட்டன.
பதிவுசெய்ப்பட்ட எந்த செய்திகளிலும் உரைகளிலும் ஒரு முறை கூட அரசாங்கத்தின்
பயங்கரவாத சட்டம், ஈராக்கில் போர் அல்லது தொழிற்துறை உறவுகள் சட்டங்களோடு நேரடியாக தொடர்பில்லாத
எந்த பிரச்சனை பற்றியும் குறிப்பிடப்படவில்லை. ஒளிபரப்பப்பட்டதில் பெரும் பகுதி தேசிய கீதத்தை பாடுவதுடன்
துவங்கி, ஆஸ்திரேலியா தேசியவாதம் ஊக்குவிக்கப்பட்டது. '' ஆஸ்திரேலிய வாழ்கை முறை'' மற்றும் ''ஆஸ்திரேலிய
நியாயமான வழிகளை'' அரசாங்கம் இல்லாதொழிப்பதாக திரும்பத் திரும்ப குற்றம்சாட்டப்பட்டது.
ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்க சபை மற்றும் மாநிலங்களில் அதனுடன் இணைந்துள்ள
சங்கங்களை பொறுத்தவரை இந்தப் பேரணிகள் தொழிலாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக மட்டுமே
எடுத்துக்கொண்டன. அதே நேரத்தில் அடுத்த தேசிய தேர்தலில் தொழிற்கட்சிக்கு வாக்குகளை திரட்டுவதற்கு மேல்
தொழிற்சங்கங்கள் எந்த உறுதிமொழியையும் தரவில்லை. எவ்வாறிருந்துபோதிலும், அதிகாரத்துவ தலைமையின் காரணமாக
அல்லாது அதற்கு அப்பால் பாரியளவு தொழிலாளர்கள் திரண்டனர்.
தொழிற்சங்கங்கள் புதிய தொழிற்துறை உறவுகள் சீர்திருத்தங்களை எதிர்ப்பது தங்களது
ஒரே அச்சத்தினால்தான் அது என்னவென்றால் புதிய முறை தங்களது இலாபம் தரும் நடவடிக்கைகளுக்கும் நீண்டகாலமாக
நிறுவனங்கள் நிலமைக்கு ஒத்துழைப்பவர்களாக தொழிலாளர்களது ஊதியங்களையும் சலுகைகளையும் வெட்டுவதற்கு
பாடுபட்டுவருவதற்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்பதால்தான்.
ACTUஇன் பிரச்சாரம்
அடிப்படையிலேயே 1983 மற்றும் 1996 இடையில் ஹாக்-கீட்டிங் காலத்தில் தொழிற்கட்சி அரசாங்கங்களுக்கு
தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளே போலீஸ் அமைப்பைப் போன்று இயங்கிய தனது முக்கியமான பங்களிப்பை ஆளும்
வர்க்கத்திற்கு நினைவுபடுத்தும் நோக்கில் அது செயற்பட்டது. அந்த அதிகாரத்துவம் இன்னும் கொண்டிருக்கிற நம்பிக்கை
பெருவர்த்தகங்களும், ஊடகங்களும் இன்னும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் வலதுசாரி நடவடிக்கைளுக்கு எதிராக
தொழிலாளர்களின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு பயன்பட முடியம் என்று ஏற்றுக்கொள்ளவைப்பதற்குதான்.
தொழிற்துறை உறவுகள் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அதிகாரப்பூர்வமான
பிரச்சாரம் தொழிலாளர் வர்க்கம் எந்த சுதந்திரமான செயல்பாட்டையும் மேற்கொள்ளாது தடுக்கும் முயற்சியை
நனவுபூர்வமாக மேற்கொள்வதாகும் மற்றும் அனைத்து எதிர்ப்பையும் நாடாளுமன்றம் மற்றும் ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகளின்
பாதுகாப்பு எல்லைக்குள் கட்டுப்படுத்துவதற்காகத்தான். பிரசாரத்தின் துவக்க கட்டங்களில் அரசியல்வாதிகளுக்கு
போதுமான நெருக்கடியைக் கொடுத்து செனட்டில் சட்டத்தை புறக்கணித்துவிடலாம் என்று நம்பினர் மற்றும்
தொழிலாளர்கள் வலதுசாரி செனட்டர்களுக்கு முதலில் குடும்பம் ஸ்டீவ் பீல்டிங் மற்றும் பார்நபி ஜோய்சின் தேசியக் கட்சி
போன்ற தலைவர்களுக்கு அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடவேண்டும் என்று கேட்டுக்
கொண்டனர். நேற்று பிரிஸ்பேனில் 15,000 ஆர்பாட்டக்காரர்கள் இந்த நோக்கத்திற்காக தேசியக்கட்சி தலைமை
அலுவலகத்திற்கு அணிவகுத்துச் சென்றனர்.
தொழிற்சங்கங்கள் இடைவிடாது பாரிய வேலைநிறுத்தங்களுக்கான அனைத்துவித
கோரிக்கைகளையும் புறக்கணித்து வருகின்றன. அவர்கள் வலியுறுத்துவது ''சமுதாயத்திற்கு சீர்குலைவு'' எதையும் தாங்கள்
விரும்பவில்லை என்பதுதான். நேற்று சிட்னியில் 3,000 பார வண்டி ஓட்டுநர்கள் மேற்கொண்ட எதிர்ப்பிலிருந்து
தொழிற்சங்கங்கள் விரைவாக தங்களை விலக்கிக் கொண்டனர், அவர்கள்
M-4 துரித
போக்குவரத்து சாலையை முற்றுகையிட்டனர். நீண்ட நேரம் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது என்றாலும் காரை
ஓட்டிச் சென்ற பலர் ஓட்டுனர்களுக்கு ஆதரவாக தங்களது ஹாரன்களில் ஒலியெழுப்பினர்.
சாதாரண தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் இருந்து இந்த கண்டனப் பேரணியில் கலந்து
கொண்டவர்கள் மிக தீவிரமாக அரசாங்கத்தை எதிர்த்து போரிடுவதற்கு ஒரு வழியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
என்றாலும் தொழிற்சங்கங்கள் தோல்விதான் கிடைக்கும் என்று ஏற்கனவே முடிவுசெய்துவிட்டன.
தேசிய அளவில் உரையாற்றும் போது கொம்பட் அறிவித்தார்: ''இந்த சட்டங்களை
விரைந்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் அடுத்த தேர்தலை நோக்கி நாம் பணியாற்றி அவர்கள்
செய்ததற்காக அவர்களை பொறுப்பாக்குவோம்.....இந்த பிரச்சனையை தங்களது உள்ளூர் சமுதாயத்திற்குள்ளும்
பொதுதொடர்பு அரசியல்வாதிகளிடமும் கொண்டு செல்ல வேண்டும். பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மை அற்ற
அரசாங்கத்திற்காக தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். தொழிலாளர்களது உரிமைகளை ஆதரிக்காத
அரசியல்வாதிகளது பணிக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்க வேண்டும்.''
தொழிற்கட்சி ''தொழிலாளர்களது உரிமையை'' ஆதரிக்கிறது என்ற கருத்தே
வேடிக்கையானது. ஹோவார்ட் அரசாங்கத்தின் தொழிற்துறை உறவுகள் சீர்திருத்தங்களுக்கு அடிப்படையாக
அமைந்திருக்கின்ற வலதுசாரி பொருளாதார செயல்திட்டங்களை தொழிற்கட்சி முழுமையாக ஒப்புதல் அளிக்கிறது மற்றும்
முந்தைய தொழிற்கட்சி அரசாங்கத்தின் போதுதான் தனிப்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கான நகர்வு
அறிமுகப்படுத்தப்பட்டது. பூகோள முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஆஸ்திரேலியாவை ''சர்வதேசரீதியான
போட்டியை'' உருவாக்குவதற்கான போர்வையில் ஹாக்-கீட்டிங் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் நேரடி உதவியோடு
தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை தொழிலாளர் வர்க்கத்தின் மீது துவக்கியது. முந்தைய தொழிற்கட்சி
அரசாங்கத்தால் முன்னேற்பாடான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் ஹோவேர்டு அரசாங்கம்
தொழிற்துறை உறவுகள் சட்ட சீர்திருத்தங்களை எப்போதுமே மேற்கொண்டிருக்க முடியாது.
ஒரு காலத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் நெருக்கமான விசுவாசத்தை பெற்றிருந்ததை
நிரந்தரமாக சிதைத்தது தொழிற்கட்சி ஆட்சியில் இருந்த போது நிகழ்த்தப்பட்ட நிலைசான்றாகும். தொழிற்கட்சியிலிருந்து
திட்டவட்டமாக தொழிலாளவர்க்கம் பிரிந்து சென்று விடாது தடுக்கின்ற தங்களது முயற்சிகளை இரட்டிப்பாக்கிக் கொள்ளும்
வகையில் இந்த மாற்றத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் செயல்பட்டன. இந்த நோக்கத்தோடு நாடு முழுவதிலும் மத்திய
தொழிற்கட்சி பிரதமர்களுக்கு தொழிற்சங்கங்கள் உரையாற்றுவதற்கான அரங்குளை ஏற்பாடு செய்தன, அதே நேரத்தில்
மத்திய தொழிற்சங்க தலைவர் கிம் பீஸ்லே பிரிஸ்பேனில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றினார்.
பிரதமர் ஜோன் ஹோவார்ட் உடனடியாக நேற்றைய பேரணிகளை நிராகரித்தார் மற்றும்
தனது அரசாங்கம் தொழிற்துறை சட்டத்தை விரைந்து செயல்படுத்தும் என்று வலியுறுத்திக் கூறினார். அதே நேரத்தில்
ஆஸ்திலேலியாவின் மிகப் பெரிய தொலைபேசி தகவல் தொடர்பு நிறுவனமான டெல்ஸ்ட்ரா 12,000 தொழிலாளர்களை
ஆட்குறைப்பு செய்யப் போவதாக அறிவித்தது.
ஹோவார்ட் அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் மீது நடத்தி வருகின்ற தாக்குதல்களுக்கு
எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தொழிற்சங்கங்களிலிருந்தும் தொழிற்கட்சியிலிருந்தும் திட்டவட்டமாக
பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இரண்டுமே அதிகாரத்துவ வெறுங்கூடுகளே தவிர வேறு ஒன்றுமில்லை. அடுத்த
தேசிய தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெறுமானால் புதிய தொழிற்துறை உறவுகள்
சட்டங்களை "கிழித்தெறிந்து விடுவதாக" பீஸ்லே உறுதிமொழி அளித்திருப்பது
பயனற்ற சொல். எதிர்கால தொழிற்கட்சி அரசாங்கம் ஹோவார்ட் அரசாங்கத்திலிருந்து ஒரே ஒரு அம்சத்தில்தான் வேறுபட்டதாக
செயல்பட முடியும் அது என்னவென்றால் தொழிற்சங்கங்களை முற்றிலுமாக ஒரங்கட்டிவிட அது முயலாது. மற்றும் அதனது
வலதுசாரி நிலைப்பாட்டில் நீடித்து மற்றும் தொழிலாளர்களது ஊதியங்கள் சலுகைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டே
வரும்.
உற்பத்தியின் பூகோளமயமாக்கல் பழைய தேசிய-அரசை அடித்தளமாக கொண்ட
தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் சீர்திருத்தவாத முன்னோக்கை முற்றிலும் இல்லாதொழித்துவிட்டது. தொழிலாளர்களது
நிலைமைகளில் ஒரு அற்பசொற்ப மேம்பாடுகளைக் கூட தற்போது ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையில் செயல்பட்டுக்
கொண்டுள்ள இந்த அமைப்புக்கள் தாராளவாதக் கட்சியோடு போட்டி போட்டுக் கொண்டு ஆஸ்திரேலிய பெருநிறுவன
செல்வந்தத் தட்டினருக்கு யார் சிறந்த சேவைகளை தர முடியும் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அனைவருக்கும் வாழ்க்கைத் தரம் கண்ணியமான பணியாற்றும் நிலைகளை பெற்றுத்
தருவதற்கான போராட்டத்திலும் கடந்த காலத்தில் தொழிலாள வர்க்கம் பெற்ற சலுகைகளை வெற்றிகரமாக
காப்பாற்றும் போராட்டத்திலும் ஈடுபடுவது தற்போதுள்ள இலாப நோக்கு கட்டமைப்பு முழுவதிற்கும் அறை கூவல்களை
விடுக்கின்ற ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கிற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
அத்கையதொரு இயக்கம் தவிர்க்கமுடியாத அளவிற்கு ஹோவார்ட் அரசாங்கத்தின் தொழிற்துறை உறவுகள் சட்டங்களுக்கு
எதிராக மட்டுமின்றி தொழிற்துறை சட்டங்கள் ஓர் அங்கமாக இடம் பெற்றுள்ள அரசியல் ஸ்தாபனத்தின் ஒட்டுமொத்த
வேலைதிட்டத்திற்கும் எதிராக அமையும். |