World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: removal of foreign minister points to struggle over extent of US ties

இந்தியா: வெளியுறவு மந்திரியை நீக்கியது அமெரிக்க உறவுகளை நீட்டித்தல் மீதான போராட்டத்தைக் குறிக்கிறது

By Arun Kumar and Keith Jones
22 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

வெளியுறவு மந்திரி பதவியில் இருந்து நட்வர் சிங்கை "தற்காலிகமாக" நீக்கியமை, இந்திய மேல்தட்டினருக்குள்ளே இந்தியா அமெரிக்காவுடன் கொள்ளவேண்டிய உறவின் அளவு மற்றும் தன்மை பற்றி இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் கடும் போராட்டத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவை உலக வல்லரசாக்க புஷ் அரசாங்கம் அளிக்கும் ஆதரவை இருகரம் கொண்டு இறுகப்பற்ற வேண்டும் என்று மேலாதிக்கம் செய்வோரின் ஒரு பிரிவு விரும்புகின்றது.

முழு இந்திய அரசியல் ஸ்தாபனமும் வியப்படையும் வகையில், நட்வர் சிங்கின் பெயரும், இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் மேலாதிக்கம் செய்யும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் பெயரும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவினால் நிர்வகிக்கப்படும் ஈராக்கின் உணவிற்காக - எண்ணெய் திட்டதை சூழ்ந்துள்ள நிதி முறைகேடுகள் பற்றி விசாரிக்கும் குழுவின் இறுதி அறிக்கையின் பின்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கித் தலைவர் போல் வோல்க்கர் தலைமையில் உணவிற்காக - எண்ணெய் திட்டத்தின் மீது நடந்த விசாரணையானது அதன் மூலத்தை, ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்து பின்னர் ஆக்கிரமிப்பு செய்ததற்கு ஐ.நா. போதிய ஆதரவு கொடுக்காததால் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னன் உட்பட ஐ.நா. அதிகாரத்துவத்தை தாக்கி மிரட்டும் முயற்சியை அமெரிக்க குடியரசுக் கட்சி வலதுகள் மேற்கொண்டதில் கொண்டிருக்கிறது.

உணவிற்காக - எண்ணெய் "ஊழல்", வாஷிங்டனின் தூண்டுதலினால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பல நூறாயிரக்கணக்கான ஈராக்கிய உயிர்களை பலி கொண்ட பொருளாதாரத் தடைகளை ஈராக்கின் மீது சுமத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த, உலகம் முழுவதும் உள்ள பல அரசியல் தலைவர்களையும், அமெரிக்க மேல்தட்டினர் தன்னுடைய நலன்களுக்கு எதிராக இருப்பவர்கள் என்று கருதுபவர்களையும் இலக்குவைக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் வோல்கர் அறிக்கை ஏன் இந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியது என்பதற்கு விளக்கம் வேண்டும். பிரான்ஸ், ரஷ்யா, சீனா உட்பட பிற அரசாங்கங்கள் இந்த அறிக்கையை ஒன்றில் அலட்சியம் செய்துள்ளன அல்லது இவை போலி ஆவணங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை என்று கண்டித்துள்ளன.

சாட்சியத்தின் நம்பகத்தன்மையை ஐயுறுவதற்கு நல்ல காரணங்கள் நிச்சயம் உள்ளன. பல ஆவணங்கள், பாக்தாத் கைப்பற்றபட்டபோது அமெரிக்க படைகள் கைப்பற்றி தமக்குரியதாக்கிக் கொண்ட ஒரு அமைச்சகமான ஈராக்கிய எண்ணெய் அமைச்சகத்திலிருந்து வந்தவை ஆகும். மேலும் எண்ணெய் வழங்க ஒப்பந்தம் பெறுவதற்கு, சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் இலஞ்சப் பணம் கொடுத்திருந்தன என்னும் கூற்றுகள் பற்றிய தொடக்க விசாரணைகள், அமெரிக்க குடியரசு வலதிற்கு ஒரு சமயத்தில் ஆதரவாக இருந்தவரும், ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் பற்றி அமெரிக்க அரசாங்கத்திற்கு தொலைபேசி மூலம் உளவுத்துறை தகவல்கள் கொடுத்து புஷ் நிர்வாகம் ஈராக்கின்மீது படையெடுப்பதற்கு ஒரு போலிக் காரணத்தை பொய்யாக புனைந்தியற்ற உதவியாக இருந்தவருமான இழிபுகழ்பெற்ற, அகமத் சலாபியின் மேற்பார்வையில் நடந்தன.

வோல்க்கர் அறிக்கையின் பொருளுரையில்கூட நட்வர்சிங் இன் பெயர் வரவில்லை. சுவிசை அடிப்படையாகக் கொண்ட ஆற்றல் வணிக நிறுவனமான Masefield AG நிறுவனம் ஈராக்கில் இருந்து பல மில்லியன் எண்ணெய் பீப்பாய்கள் ஏற்றுமதி செய்ததில் "ஒப்பந்தமுறையற்ற வகையில் ஆதாயம் அடைந்தவர்கள்" என்ற பின்இணைப்புப் பட்டியல் ஒன்றில் எந்த விதமான கூடுதல் விளக்கமும் இன்றி நட்வர்சிங் இன் பெயரும் காங்கிரசின் பெயரும் பட்டியலிடப்பட்டுள்ளது. வோல்க்கர் அறிக்கை சதாம் ஹுசைன் ஆட்சிக்கு பல்வேறு ஒப்பந்தங்களை பெறுவதற்காக 22.7 மில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ள முக்கிய நிறுவனங்களான Tata International, Reliance Petroleum, பல அரசு உடைமை நிறுவனங்கள் ஆகியவை உட்பட 125 இந்திய நிறுவனங்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.

தன்னுடைய குழு அக்டோபர் மாதம் கடைசியில் இறுதி அறிக்கையை வெளியிட்டபோது, நட்வர் சிங் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்பது தனக்குத் தெரியாது என்று வோல்க்கர் கூறியுள்ளார். இது உண்மையானால், எந்த அளவிற்கு ஒரு தீவிர விசாரணையை அவருடைய குழு மேற்கொண்டுள்ளது என்பதைப் பற்றி நிறையவே தெரியவருகிறது; இது பொய்யெனில், எந்த அளவிற்கு அமெரிக்க அதிகார-மேல்தட்டினர் உணவிற்கு - எண்ணெய் திட்ட ஊழலை தனது செல்வாக்கை பயன்படுத்தி பொய்யாகப் புனைந்து தங்களுடைய குற்றம் சார்ந்த வெளிநாட்டுக் கொள்கைகளின் நலன்களுக்காக சூழ்ச்சியாய் கையாண்டுள்ளது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

தொடக்கத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வோல்க்கர் அறிக்கையை புறக்கணிக்கத்தான் செய்தது. "சில ஆதாரமற்ற கூற்றுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன" என்று UPA-இன் பிரதம மந்திரி மன்மோகன்சிங் சீறினார். "இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எவரும் எந்தப் பெயரை வேண்டுமானாலும் குறிப்பிடலாம்" என்றார். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஆனந்த் சர்மா தன்னுடைய கட்சிக்கு உணவிற்கு- எண்ணெய் திட்டத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு இல்லை என்று கூறிவிட்டார்.

"ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுக்கள்" மீதான தன்னுடைய அதிர்ச்சியையும், பெரும் சீற்றத்தையும் பற்றி கூறியபின் நட்வர் சிங், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் தன்னுடைய குழு முன்கூட்டியே தகவல் கொடுத்துள்ளதாக வோல்க்கர் அறிக்கையில் கூறியிருந்தாலும், "காங்கிரசோ, நானோ அத்தகைய தகவல் எதையும் பெறவில்லை". ஒவ்வொருவரும் தொடர்புகொள்ளப்பட்டனர் என்று வோல்க்கர் கூறுகிறார்; ஆனால் இப்பொழுதுதான் நான் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்று கண்டறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். நான் யாரென்று கூட அவருக்குத் தெரியவில்லை என்றால், யாருக்கு அவர் நோட்டீஸ் அனுப்பி வைத்தார்? எப்படி அதை அவர் அனுப்பி வைத்தார், எங்கே அனுப்பி வைத்தார்? இந்தியாவின் அன்டார்க்டிக் ஆராய்ச்சிக் குழுவிற்கு அது அனுப்பிவைக்கப்பட்டதா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

வோல்க்கர் அறிக்கை போலி ஆவணங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்று அதிகாரபூர்வமான ரஷ்ய அரசாங்கம் கொண்டுள்ள நிலையை நட்வர் சிங் சுட்டிக்காட்டினார். மேலும் Hindu பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், வோல்க்கர் தலைமையிலான குழு அமெரிக்காவின் ஆக்கிரோஷமான, ஒருதலைப்பட்ச வெளியுறவுக் கொள்கைகளை எதிர்ப்பவர்களை இலக்காக கொண்டிருக்கிறது என்ற கருத்தையும் தெரிவித்தார். "நான் பொருளாதார தடைகளை எதிர்த்தேன்; போரை எதிர்த்தேன்; இந்தியப் படைகளை ஈராக்கிற்கு அனுப்புவதையும் எதிர்த்தேன்" என்று நட்வர் சிங் கூறினார்.

தன்னுடைய பெயருடன் இணைக்கப்பட்டுள்ள நிறுவனமான Masefield AG என்னும் ஒப்பந்த நிறுவனத்துடன் வோல்க்கர் குழு தொடர்பு கொண்டதா? என்று சிங் வினவினார். "அவர்களுடன் எவராவது பேசியுள்ளனரா? அவர்களை ஏன் கேட்கவில்லை? நானோ என்னுடைய மகனோ இந்த நிறுவனம் அல்லது இத்துடன் தொடர்புடைய எந்த நிறுவனத்துடனும் எப்பொழுதாவது தொடர்பு கொண்டுள்ளோமா? இந்த நிறுவனத்தை பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன் என்பதற்கு ஏதேனும் சான்று உண்டா? இதில் எனக்கு எப்படி தொடர்பு உண்டு?"

ஆனால் இந்தியாவின் பெருவணிக செய்தி ஊடகம் சிங்கிற்கோ, அரசாங்கத்திற்கோ ஆதரவு கொடுக்கவில்லை. ஏராளமான செய்தி ஏடுகளின் ஆசிரியத் தலையங்கங்கள் நட்வர் சிங், காங்கிரஸ் ஆகியோரின் முறைகேடுகள் பற்றிய கூற்றுக்களை வாதிட்டன (இவை அனைத்தும் பிற்போக்குத்தனமான பொருளாதாரத் தடைகள் திட்டத்தை ஏற்றதன் அடிப்படையில் விளைந்தவையாகும்); இவ்விஷயம் முழுமையாக கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின. மிகக்குறிப்பிடத்தக்க வகையில், வோல்க்கர் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள 125 இந்திய நிறுவனங்கள் பற்றி செய்தி ஊடக வர்ணனைகள் அனைத்தும் அதிகம் கூறவில்லை.

18 மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்த, காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தின் மீது பெருவணிகத்தினர் கொண்டுள்ள பெருகிவரும் அதிருப்தி, செய்தி ஊடகங்கள் மேற்கொண்டுள்ள நிலையின் பின்னே இருக்கிறது. UPA புதிய தாராள பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களை செயல்படுத்திவந்தபோதிலும், இந்திய இராணுவத்தை விரிவாக்கம் செய்துவந்தபோதிலும், இந்திய வெளிநாட்டு மூலதனங்கள், அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனக்கு ஆதரவைக் கொடுத்து நிலைநிறுத்தி வரும் இடதுசாரி முன்னணியில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு கூடுதலாக மதிப்புத்தந்து உடனடியாக செயலாற்றுவதால் பெரும் ஆபத்திற்குள்ளாகியுள்ளன என்ற குறையும், பெருநிறுவனங்களை பொறுத்த வரையில் அரசாங்கம் இன்னும் பெரிய வகையில் முதலீட்டுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற கருத்தும், ஆலைகள் மூடுதல், பணிநீக்கம் செய்தல், ஒப்பந்த வேலைக்கு ஆதரவு இவற்றின் மீதான கட்டுப்பாடுகளை அகற்றத் தவறிவிட்டது என்று குறையும் உள்ளது.

"மேலும், மூலதனத்தின் மிக சக்தி வாய்ந்த பிரிவுகள், வாஷிங்டனுடன் மூலோபாய பங்காண்மை பின்வாங்கப்படவேண்டும் என்னும் இடதின் அழுத்தத்திற்கு அரசாங்கம் இணங்கக் கூடாது என்ற வலுவான செய்தியையும் அரசாங்கத்திற்கு அனுப்ப முற்படுகிறது. இதில், நட்வர் சிங் இந்திய மேல்தட்டினரின் சுதந்திரத்திற்கு பிந்தைய "அணி சாரா நிலையில்" கூடுதலான ஆர்வத்தை கொண்டுள்ளார் என்று கருதும் காங்கிரஸ் தலைமையினுள்ளே உள்ள சில கூறுகளும் இணைந்து குரல் கொடுத்துள்ளன.

நேருவிச "அணி சாராக் கொள்கைக்கு" ஆதரவாளர் என்றும் சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான இராணுவ, வெளிநாட்டு கொள்கையில் கூட்டை கொண்டு, அதேவேளை இந்திய பொருளாதாரத்தின் மீதுள்ள ஏகாதிபத்திய அழுத்தத்தை குறைப்பதை நோக்கமாக கொண்ட, இறக்குமதி பதிலீட்டுக்கொள்கை மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் சக்திவாய்ந்த உள்நாட்டு முதலாளித்துவத்தை கட்டியமைப்பதை இலக்காகக் கொண்ட தேசியப் பொருளாதார மூலோபாயம் ஒன்றை பின்பற்ற முயற்சி செய்துவந்த, இந்திய பிரதம மந்திரிகளான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் சீடர் என்றும் நட்வர் சிங் பலமுறையும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளார்.

இப்பொழுது சோவியத் ஒன்றியம் இல்லை என்றாலும், முழு இந்திய அரசியல், பொருளாதார நடைமுறை இந்தியாவை உலக மூலதனத்திற்கு குறைவூதிய தொழிலாளர்களை வழங்கும் மூலோபாயத்தை கடைபிடிக்க செய்கிறது. ஸ்ராலினிச இடது முன்னணி உட்பட, நட்வர் சிங், இந்தியாவின் எரிபொருள் ஆற்றல் மந்திரி மணி சங்கர அய்யர், இந்தியாவின் வணிக மற்றும் அரசியல் செல்வந்தத் தட்டில் உள்ள சில கூறுகள் ஆகியோர், இந்தியா அமெரிக்காவின் பிடிக்குள் சென்றுவிடக்கூடாது என்று நம்புகின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சார்ந்து இருக்கவேண்டிய பொறிக்குள் சிக்கிவிட்டால் இந்தியா சீனாவிற்கு எதிராக வாஷிங்டனின் பகடைக்காயாக பயன்படுத்தப்படும் என்று இவர்கள் அஞ்சுகின்றனர். இந்தியாவின் மரபார்ந்த "சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை" கடைபிடிப்பது மேலானது என்றும் அமெரிக்க மூலதனத்தை ஆக்கிரோஷத்துடன் தொடர்வதில் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் "சுதந்திரமான" வெளியுறவுக் கொள்கை நலன்களை பாதுகாப்பது உகந்தது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

வோல்க்கர் அறிக்கை பற்றி பரபரப்பு வளர்ச்சியுற்ற நிலையில், அரசாங்கம் பெருமளவு தற்காப்பு முயற்சிகளை மேற்கொண்டு, பல உட்பிளவுகளை கண்டது. தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி ஐ.நா.விற்கு, எந்த அடிப்படையில் குற்றச்சாட்டை அது கூறியுள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் இல்லாவிடில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி தான் ஒரு கடிதம் எழுதப்போவதாக அறிவித்தது. அதன் பின் அரசாங்கம் ஒரு முன்னாள் ராஜீயவல்லுநரை ஐ.நா.வுடன் தொடர்பு கொள்ளச்செய்து, உணவிற்கு - எண்ணெய் திட்டத்தில் இந்தியா தொடர்பான ஆவணங்களை திரட்ட முடிவு செய்தது. இதற்கிடையில் காங்கிரஸ் தலைமையிடத்தில் ஒரு பிளவு இருப்பதாக நட்வர் சிங் குற்றம் சாட்டினார்; அதாவது பாதுகாப்பு மந்திரி பிரணாப் முக்கர்ஜி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் தன்னுடைய பதவி நீக்கத்தை வலியுறுத்துகின்றனர் என்று அவர் கூறினார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் நவம்பர் 6ம் தேதி பேசிய நட்வர் சிங் அமெரிக்காவுடனான புவிசார்-அரசியல், இராணுவத் தொடர்புகள் வளர்ந்து வருவதைப் பற்றி பகிரங்கமாக கவலை தெரிவித்தார். ஈரானுடைய அணுசக்தித்திட்டம் அடுத்த International Atomic Energy Agency (IAEA) சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் கூட்டத்தில் அளிக்கப்பட்டால், செப்டம்பர் கூட்டத்தில் இருந்ததைவிட அது கடுமையாக இருந்தால், இந்தியா அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று தான் பரிந்துரை செய்யப்போவதாக அவர் தெரிவித்தார். ஈராக்கில் இருக்கும் அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்திற்கு எதிராகவும் அவர் பேசினார்; இப்பொழுதைய ஈராக்கிய அரசாங்கத்திற்கு உலகில் எங்குமே நம்பகத்தன்மை இல்லை என்றும் அவர் கூறினார். முஸ்லிம்களிடம் அமெரிக்கா காட்டும் அணுகுமுறையையும் அவர் குறைகூறினார்; 9/11க்கு பிறகுதான் அமெரிக்கா இஸ்லாமைக் கண்டுபிடித்துள்ளது என்றும் இந்தியா அத்துடன் 1,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது என்றும் குறிப்பிட்ட அவர் அணி சாரா இயக்கம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதற்கு மறுநாளே காங்கிரஸ் தலைமை நட்வர் சிங்கிற்கு எதிராக முடிவடுத்தது. நவம்பர் 7 ம்தேதி அவருடைய இலாகா அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதோடு, ஒரு முன்னாள் தலைமை நீதிபதி R.S. பாதக், வோல்க்கர் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்துவார் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. திங்கள் காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது; இதுபற்றி மாலையில் நட்வர் சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டது. வெளியுறவுத் துறையில் இருந்து நட்வர் சிங் நீக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்தபோது, அரசாங்க செய்தித் தொடர்பாளர், வோல்க்கர் அறிக்கை விசாரணை குழுவினால் குற்றமற்றவர் என்று கொள்ளப்பட்டால் நட்வர் சிங் மீண்டும் பதவியில் இருத்தப்படுவார் என்று கூறினார்; ஆனால் இந்த விசாரணை முடிவதற்கு குறைந்தது பல மாதங்களாவது ஆகும்.

மந்திரி சபையில் இலாக்கா இல்லாத மந்திரியாக நட்வர் சிங் தொடர்கிறார். ஆனால் இது அவரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் வழிவகையை அன்றி வேறு ஏதும் இல்லை. சமீப காலமாக அவர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு தான் எதிர்ப்புக் காட்டுவதால், வோல்க்கர் குழு தன்னை இலக்காக கொண்டுள்ளது என்ற குற்றச் சாட்டுகளில் இருந்து பின்வாங்கினார்.

இந்திய ஆளும் செல்வந்தத்தட்டினருக்குள் மாறும் முன்னுரிமைகள்

நட்வர் சிங் விவகாரம் அமெரிக்காவுடனான இந்திய உறவுகளில் மூன்று பெரும் மாற்றங்களின் பின்னணியில் கவனிக்கப்பட வேண்டும்.

ஜூன் மாதம் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு இராணுவ ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன; இதன்படி ஐ.நா.வின் தடையின்றி இந்திய, அமெரிக்கப் படைகள் கடல்கடந்து வெளிநாடுகளில் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும். குறிப்பாக இந்த உடன்பாடு அமெரிக்க ஆயுத முறைகளை இந்தியா முக்கியத்துவமான வகையில் வாங்குவதற்கு வழிவகுத்தது.

ஜூலை மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அமெரிக்கா இந்தியாவிற்கு உலக அணுவாயுதக் கட்டுப்பாட்டு நெறிக்குள் ஒரு சிறப்பிடத்தை கொடுக்கத் தயார் என்றும், இதையொட்டி நடைமுறையில் இந்தியா ஒரு அணுவாயுத நாடு என்ற அங்கீகாரத்தை பெறும் என்றும், இந்தியா உலக சக்தியாக வருவதற்கு அமெரிக்காவின் ஆதரவில் ஒரு பகுதியாக இது இருக்கும் என்றும் அறிவித்தார்.

இந்த உடன்பாட்டை எதிர்த்த இந்திய எதிர்ப்பாளர்கள் அமெரிக்காவின் சாதாரண அணுசக்தி தொழில்நுட்பத்தினை இந்தியா நம்பி சார்ந்திருக்கவேண்டிய நிலையை இது இலக்காகக் கொண்டது என்றும், அதையும்விட முக்கியமாக இந்தியா ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் ஆணைகளை செய்ய அழுத்தம் கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிற்கு ஆதரவாகவும் ஈரானுக்கு எதிராகவும் கடந்த செப்டம்பரில் நடந்த ஈரான் பிரச்சினையுடன் தொடர்புடைய மிகிணிகி-யின் கூட்டத்தில் தான் வாக்களித்ததை ஹிறிகி அரசாங்கம் மறுத்தாலும், பல அமெரிக்க அரசியல்வாதிகள், அரசாங்கத் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் இதன் தொடர்பினை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளன.

அனேகமாய் மறைக்காமலும், குறைந்தது பகிரங்கமாகவும், மிகக் கடுமையான கருத்துக்களை டொம் லான்டோஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மிகுந்த அமெரிக்க சட்ட மன்ற உறுப்பினரும் வோல்க்கரின் உணவிற்காக எண்ணெய் விசாரணையை ஆதரிப்பவருமான லான்டோஸ் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் நட்வர் சிங் ஈரான் வந்தபோது கூறிய கருத்துக்களை வெளிப்படையாக கடுமையாக கண்டித்தார்.

"இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில், அமெரிக்கா ஈரானின் அணுவாயுதங்கள் குறித்த கடும் முயற்சியினை ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்தச் செல்லும் உந்ததுலை ஆதரிக்காது என்று கருத்து தெரிவித்தது பற்றி நான் குறிப்பாக கவலைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு அரசாங்கம் [உலக அணுவாயுத ஆட்சியில் இந்தியாவின் பங்கு மீதான] ஒப்பந்தத்தைப் பிணைப்பதில் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு நேர்மாறான ஒன்றாகும்" என்று செப்டம்பர் மாதத்தின் நடுவில் லான்டோஸ் கூறினார்.

இதன்பின் வெளிப்படையான எச்சரிக்கை ஒன்றையும் அவர் விடுத்தார்: "ஈரானின் அணுவாயுத அச்சுறுத்தலுக்கு எதிரான அமெரிக்க முயற்சிகளுக்கு தங்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை புது டெல்லி அறியவேண்டும். 18 ஆண்டுகளாக அணுவாயுதப் பெருக்கம் கூடாது என்ற ஒப்பந்தத்தை (NPT -அணு ஆயுத பரவல் தடை உடன்பாடு) ஈரான் மீறியுள்ளது பற்றி ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்தச் செல்ல நாங்கள் கொண்ட முயற்சியை ஆதரிப்பதும் அதில் அடங்கியுள்ளது. முழு ஆதரவைவிடக்குறைவாக எது இருந்தாலும், அது அமெரிக்க அணுவாயுதம், பாதுகாப்பு ஆகியவற்றை புது டெல்லியுடன் ஒத்துழைத்து விரிவாக்கம் செய்வதை ஆபத்திற்குள்ளாக்கிவிடும்."

சில நாட்களுக்கு முன்னர் New York Times-ன் நிருபரான Steven R. Wiesman நட்வர்சிங் டெஹரானுக்கு பயணித்ததை அடுத்து, புஷ் நிர்வாக அதிகாரிகள், "இந்தியா தன்னுடைய மிகுந்து வரும் ஆற்றல் தேவைகளை ஈடுசெய்வதற்கு எது சிறந்த நட்பு நாடு ஈரானா, மேலைநாடுகளா,..... என்பதை தேர்தெடுக்க வேண்டும் என்றும் ஈரான் விஷயத்தில் ஒத்துழைக்காவிட்டால், சிவிலிய அணுக்கரு ஆற்றல் ஒப்பந்தம் அமெரிக்க சட்ட மன்றத்தால் நிராகரிக்கப்படக்கூடும் என்று நிர்வாக அதிகாரிகள் இந்தியாவை எச்சரித்துள்ளனர்" என்று கூறியதாக அறிக்கை விடுத்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் ஈரானுடன் நெருக்கமான தொடர்பை வளர்ப்பதில் கணிசமான அரசியல் மூலதனத்தை செலவிட்டுள்ள இந்திய அரசாங்கம் அப்போக்கை தொடர்வதன் மூலம் வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையே உள்ள அழுத்தத்தை குறைக்க விரும்பலாம். ஆனால் புஷ் நிர்வாகம் இதற்கு இணக்கமான அக்கறையை காட்டவில்லை. வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் இவ்வாரம் மிகிணிகி கூட்டத்தில் மேலும் ஒரு வாக்கெடுப்பு நடத்தி ஈரான்மீது இன்னும் கூடுதலான வகையில் அழுத்தம் கொடுக்கும் ஒரே மனநிலையில் உள்ளன. இந்த பிரச்சினை வாதத்திற்காக கற்பித்துக்கொள்ளப்பட்ட ஒன்று என்று பிரதம மந்திரி மன்மோகன் சிங் உதறித் தள்ளினாலும், IAEA கூட்டத்தில் வாக்கெடுப்பு நிகழ்ந்தால் தனது பாராளுமன்ற நட்புக் கட்சிகளான இடது முன்னணியை மீறி, மீண்டும் அமெரிக்காவுடன் சேர்ந்து வாக்களிக்க UPA அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்று Times of India கூறியுள்ளது.

See Also :

ஒரு "உலக வல்லரசாக'' ஆவதில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு தந்து ஊடாடுகிறது

Top of page